என் வசம் நானில்லை என் உயிரே……
வசம் -26
செல்ஃபி எடுத்தாளாம்……அப்போ ஆட்டோவில் இருந்து தெரியாம விழுந்திட்டு இருக்கா…… அவ சர்வீஸ் ரோட்டில போய் விழுந்திட்டதால அந்த ஆட்டோ காரனுக்கு இருட்டுல தெரியல….. போலீஸ் கேஸ் ஆகிடப்போகுதுன்னு பயந்து ஓடிட்டு இருக்கான்……
அந்த ஆட்டோக்காரன் எதுவும் தப்பா நடக்க முயற்சி பண்ணலையே?…. அதனால அவ ஆட்டோவில் இருந்து விழலையே?
இல்லப்பா….. அப்படி எல்லாம் இல்லைன்னு சொன்னா……
என்னவோ பா….. இதை சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க….. நானும் நம்பல….. யாரை காப்பாத்த இப்படி பண்றா ன்னு தெரியல….. என்றார் வருத்தமாக.
அவ ஓகே பா….. விடுங்க……அவ சரி ஆகி வீட்டுக்கு வந்தா ன்னா போதும்…..
ஹூம்….. ஓகே பா…. தன்ஷி கிட்ட சொல்லிடு….. பை…..
அப்பல்லோ ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தனர் தன்ஷிகா மற்றும் தினேஷ்.
அட்மிஷன் ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் செய்து கொண்டு இருந்தான் தினேஷ். அப்போது யோகேஷ் கால் செய்தான்.
மாமா….. தன்ஷி எப்படி இருக்கா…..
ஃபைன் மச்சான்…..
அவ ஃபோன் ஸ்விச்சிடு ஆஃப் ன்னு வருது…. அவ கிட்ட ஃபோனை கொடுக்கறீங்களா?….. ரொம்ப திட்டி விட்டு வந்திட்டேன்….. மனசு கேட்கல….. சாரி சொல்லனும்……
இருங்க மச்சான்….
என்று சொல்லி சிரித்து கொண்டே தன்ஷிகாவிடம் வந்து ஃபோனை கொடுத்து விட்டு ஆப்பிரேஷன் செய்ய ஃபார்ம், பில் பேமென்ட் எல்லாம் செய்து கொண்டு இருந்தான் தினேஷ்.
ஹலோ….. சாரி தன்ஷி…..
இட்ஸ் ஓகே யோகேஷ்….. ஐ கேன் அன்டர்ஸ்டாண்ட் யுவர் ஃபீலிங்ஸ்…..
சத்தியமா சொல்றேன் தன்ஷி….. உன்னை எனக்கு கொடுத்த கடவுளுக்கு தான் நான் டெய்லி தேங்க்ஸ் சொல்லணும்…… இந்த மாதிரி நிலைமை யாருக்கு வந்திருந்தாலும் அவங்க கண்டிப்பா கோபப் பட்டிருப்பாங்க…… உனக்கு மட்டும் தான் கோபம் வருமா?….. எனக்கு வரதா ன்னு சொல்லி பேசி இருக்க மாட்டாங்க….. ஆனா நீ….. எல்லா பிரச்சனையும் உன்னோட எதிராக இருங்கிறவங்க இடத்தில் இருந்து யோசிக்கிற….. அவங்க நிலைமையை புரிஞ்சிக்கிற….. ரியலி யூ ஆர் கிரேட் தன்ஷி….. ஐ ஆம் லக்கி டூ ஹேவ் யூ இன் மை லைஃப்…..
சிரித்தாள் தன்ஷிகா…..
ஏய்…. என்னடி….. நான் இவ்வளவு நேரமா இவ்வளவு கஷ்டப்பட்டு இவ்வளவு பெரிய டயலாக் பேசினா….. நீ பதிலுக்கு தேங்க்ஸ் கூட சொல்லாம சிரிக்கிற…..
மறுபடியும் சிரித்தாள்.
சரி….. நான் பேசுவதில் ஒண்ணு சொன்னேனே கவனிச்சியா?
என்ன?
நிச்சயமா கவனிக்கல?
தெரியும்…..
என்ன சொன்னேன்?
டி சொன்னீயே…..
உனக்கு பிடிச்சிருக்கா அப்படி நான் கூப்பிட…..
பிடிச்சிருக்கு…..
ஓகே….. நீயும் என்னை டா சொல்லி கூப்பிடுவியா?
தெரியல….. ரொம்ப ரொம்ப லவ் வந்தா கூப்பிடுவேன் ன்னு நினைக்கிறேன்……
அப்போ….. இப்போ லவ் வரலீயா?
இருக்கு….. ஆனா அந்த அளவுக்கு இல்லை…..
ஓகே…. ஓகே…. நான் அப்புறம் பேசறேன்…. நீ சீக்கிரமா உன் ஃபோனை சார்ஜ் போடு….. ஈவினிங் ஹாஸ்பிடலுக்கு வரேன்….
ஓகே யோகேஷ்…. பை….
பை தன்ஷி…..
அப்போது ஃபோனை வைத்து விட்டு தன் அண்ணனுக்காக காத்திருந்தாள் தன்ஷிகா.
என்ன அண்ணா எல்லா ஃபார்மாலிட்டீஸூம் முடிஞ்சிடிச்சா…..
முடிஞ்சிடிச்சு மா….. ரூம் நம்பர் 405 கொடுத்திருக்காங்க…..
ஓகே அண்ணா…..
அப்பா அம்மா கிட்ட சொல்லிடுங்க……
ஹூம்….. அப்பாவுக்கு மெஸேஜ் பண்ணிட்டேன்…..
அண்ணா உங்க கார் அந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கே…..
இப்போ டிரைவர் வந்ததும்….. அவரை போய் எடுத்து வரச் சொல்றேன்……
ஓகே அண்ணா……
நீ காஃபி குடிக்கிறீயா வாங்கிக் கொண்டு வரவா?
வேண்டாம் அண்ணா……
அண்ணா…..
சொல்லும்மா……
நான் நிஷா பத்தி சொன்னேனே…..
ஏய்…. ஆமாம் ஆமாம்…… மறந்திட்டேன்….. என்னவோ சொன்னீயே….. என்ன ?…. எனக்கு சரியா புரியல……
அதான் அண்ணா….. நான் நிஷா கிட்ட ஒரு கேள்வி கேட்டேன்……. ஆனா அதுக்கு பதில் உங்க கிட்ட கேட்க சொன்னாங்க…..
அப்படி என்ன கேள்வி கேட்ட?……
அவங்கள அண்ணின்னு கூப்பிடவான்னு……
வாட்….. என்றான் தினேஷ்.
ஆமாம் அண்ணா….. உன்னோட விருப்பம் என்ன?
தன்ஷி….. நீ ஏன் புரிஞ்சிக்க மாட்ற….. அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுக்காக அது லவ் ன்னு என்னால ஏத்துக்க முடியல……
சரி அண்ணா….. இதுக்கு மேல இது பத்தி நான் பேசமாட்டேன்…..
தன்ஷி…..
ஹூம்…..
அவ என்ன சொன்னா?
உங்க கிட்ட கேட்க சொன்னாங்க…..
அப்போ அவளுக்கு விருப்பமா?
தெரியல….. மே பீ உங்க விருப்பத்தை தெரிஞ்சிக்கிட்டு அவங்க டிசைடு பண்ணுவாங்களோ என்னவோ….. ஏன்னா அவங்க அப்படி தான் சொன்னாங்க…..
ஓ….. ஓகே…..
அப்போது சுவாமிநாதன் மற்றும் திலகவதி உள்ளே நுழைந்தார்கள்.
தன்ஷிகாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவள் கையை பிடித்து
எப்படிமா இருக்க….. என்றார் திலகவதி.
இப்போ பரவாயில்லை மா…..
உண்மையிலேயே நீ செல்ஃபி எடுத்தியா….. அப்போ தெரியாம விழுந்திட்டியா?
ஆமாம் என்று தலை அசைத்தாள்.
அம்மா….. அதைப் பத்தி பேச வேண்டாம் மா….. என்றான் தினேஷ்.
சரி டா….. பேசல…… என்றார் திலகவதி.
அப்போது டாக்டர் வந்தார்.
நாளைக்கு மார்னிங் ஒரு 9 மணிக்கு ஆப்பிரேஷன் பண்ணிடலாம்….. என்றார்.
ஓகே டாக்டர்….. என்றனர் சுவாமிநாதன் மற்றும் தினேஷ்.
டாக்டர் சென்றதும்……
அண்ணா, அப்பா – அம்மா ….. ஆப்பிரேஷன் நினைச்சா ரொம்ப ரொம்ப ரொம்ப பயமா இருக்கு….. என்றாள் தன்ஷிகா.
கவலைப்படாதே மா….. நான் ஈவினிங் கோவிலுக்கு போய் உன் பெயர்ல அர்ச்சனை செய்து விட்டு பிரசாதம் வாங்கிட்டு வரேன்….. உனக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் வரும்.
ஏய்….. கொஞ்சமாவது லாஜிக்கோட பேசு திலகா…..
அதெப்படி நீ சாமி கும்பிட்டா அவளுக்கு சரி ஆகும்….. என்றார் சுவாமிநாதன்.
உங்களுக்கு தப்பா பேரு வச்சிட்டாங்க உங்க அப்பா அம்மா….. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்க்கு சுவாமிநாதன் ன்னு….. என்றார் திலகவதி.
சிரித்தாள் தன்ஷிகா.
அவள் சிரிப்பதை பார்த்து மூவரும் சிரித்தனர்.
############
என்னடி சொன்ன?…… என்றான் பிரமோத் கோபமாக.
உண்மையை தான் போலீஸ் கிட்ட சொன்னேன்….. என்றாள் மோனிகா.
உளறாத….. என்றான் பிரமோத்.
அவன் பேசியதை போட்டு காண்பித்தாள் மோனிகா.
இதை சற்றும் எதிர்பார்க்காத பிரமோத்…..
அந்த செல்ஃபோனை அவள் கையில் இருந்து பிடுங்கி தூக்கி போட்டு உடைத்தான்.
சிரித்தாள் மோனிகா……
என்னடி சிரிக்கிற?
இத்தனை வருஷமா உன் கூட வாழ்ந்திருக்கேனே….. நீ இப்படி பண்ணுவ ன்னு எனக்கு தெரியாதா?….
அவளை உற்றுப் பார்த்தான் பிரமோத்.
ஆமாங்க….. ஏற்கனவே யாருக்கெல்லாம் ஷேர் பண்ணனுமோ அவங்க எல்லாருக்கும் ஷேர் பண்ணிட்டேன்….. இன்க்ளூடிங் போலீஸ்.
உன்னை….. என்று சொல்லி அவள் கழுத்தை நெறித்தான் பிரமோத்.
டேய்….. விடுடா….. பொறுக்கி….. பொறம்போக்கு நாயே….. பொண்ணுங்கன்னா உனக்கு அவ்வளவு எலக்காரமா போச்சா…… உனக்கு தண்டனை வாங்கி கொடுக்காம விடக்கூடாது ன்னு முடிவு பண்ணி தான் இந்த வேலையை செஞ்சேன்……
உன்னையும் கொன்னுட்டு அந்த தண்டனையும் சேர்த்து அனுவச்சிக்கிறேன்….. என்று சொல்லி இன்னும் அழுத்தமாக நெறித்தான் பிரமோத்.
அப்போது ஒரு போலீஸ்காரர் உள்ளே வந்தார்……
பிரமோத்தை பிடித்து இழுத்து கீழே தள்ளினார்…..
மோனிகாவை அமர வைத்து…..
ஆர் யூ ஓகே மேடம்….. என்றார்.
கீழே விழந்த பிரமோத்….. எழுந்து வந்து டி வி டேபிளின் மேலே இருந்த வினாயகர் சிலையால அந்த போலீஸ்காரரை தாக்கினான்.
சைடு மண்டையில் அடிப்பட்டு ரத்தம் வந்தது.
மோனிகாவை பார்த்து நீ ஓடிடு மா….. என்றார் போலீஸ்காரர்.
அவரை இன்னொரு அடி கொடுத்துவிட்டு…. மோனிகாவின் பின்னால் ஓடினான் பிரமோத்.
அந்த போலீஸ்காரர் வேறு ஒரு போலீஸூக்கு கால் செய்தார்….. அவர் எடுக்கவில்லை….. இன்னொருவருக்கு கால் செய்தார்….. அவரும் எடுக்கவில்லை….. போலீஸ் கன்ட்ரோல் ரூமிற்கு கால் செய்து….. யாரையாவது உடனடியாக அனுப்ப சொல்லி கேட்டார் அந்த போலீஸ்காரர்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் சுவாமிநாதனுக்கு கால் வந்தது.
ஹலோ சுவாமிநாதன் சாரா…..
ஆமாம்….. நீங்க?
போலீஸ் கன்ட்ரோல் ரூம்…..
ஓகே….. சொல்லுங்க….
இமிடியேட்டா நாங்க சொல்ற லொகேஷனுக்கு போங்க…..
சார்…. நான் ஹெட் கான்ஸ்டபிள்….. அதுவும் இல்லாம எனக்கு ஏஜ் 55….. நான் எப்படி அட்டாக் பண்ண முடியும்…..
இல்ல சார்….. நீங்க அட்டாக் பண்ண வேண்டாம்…..
பேக் அப் டீம் வர வரைக்கும் நீங்க அவனை சமாளிச்சா போதும்….. இப்போதைக்கு நீங்க தான் ரொம்ப பக்கத்துல இருக்கீங்க….. ஸோ பிளீஸ்…. சீக்கிரமா போங்க சார்…..
சார்…. என் பொண்ணு ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகி இருக்கா சார்……
சார்….. அங்கே ஒரு பொண்ணு உயிருக்கு ஆபத்து….. அந்த பொண்ணையும் உங்க பொண்ணு மாதிரி நினைச்சு பாருங்க சார்….. அப்புறம் உங்க இஷ்டம்….. உங்க கிட்ட சொல்றதுக்கு தான் எனக்கு ஆர்டர் வந்துச்சு….. போறதும் போகாதததும் உங்க இஷ்டம்…. நீங்களே டிபார்ட்மெண்ட்டிற்கு பதில் சொல்லிக்கோங்க…… என்றார் அந்த கன்ட்ரோல் ரூம் போலீஸ்காரர்.
ஓகே ஓகே….. நான் இப்பவே போறேன்….. என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்து விட்டு திலகவதி, தினேஷ் மற்றும் தன்ஷிகாவிடம் விஷயத்தை கூறினார் சுவாமிநாதன்.
#############
தொடரும்…..
அ. வைஷ்ணவி விஜயராகவன்.

என் வசம் நானில்லை என் உயிரே……
வசம் -27
அப்பா….. நானும் உங்க கூட வரேன்…..
இல்லப்பா வேண்டாம்…. நீ இங்கேயே இரு…..
நாளைக்கு தான அப்பா ஆப்பிரேஷன்….. இன்னைக்கு எதுவும் இல்லையே….. நீங்க தனியா போக வேண்டாம்…..
மெடிசின் எதாவது வாங்கனும்ன்னா…. அம்மா ஓடனேம் இல்ல…..
அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லீங்க….. நான் போய் மருந்து வாங்கி வரேன்….. ஏதோ பிரச்சனை ன்னு ஃபோன்ல பேசனீங்க…… தனியா போக வேண்டாம்….. நம்ம பையனை கூட கூட்டிக்கிட்டு போங்க….. என்றார் திலகவதி.
ஆமாம் அப்பா….. அண்ணாவையும் கூட கூட்டிக்கிட்டு போங்க……. என்றாள் தன்ஷிகா.
ஒருநிமிடம் யோசித்து விட்டு….
சரிப்பா வா போகலாம்…… என்றார் சுவாமிநாதன் தன் மகன் தினேஷிடம்.
இருவரும் அந்த லொகேஷனுக்கு சென்றனர்.
மோனிகா பாத்ரூமுக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டு கொண்டாள். பிரமோத் கதவை உடைத்து கொண்டு இருந்தான்.
எவ்வளவு தைரியம் இருந்தா என்னை நீ போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுத்திருப்ப…. இன்னைக்கு நீ உயிரோடவே இருக்கக் கூடாது. உன்னை கொன்னுடுவேன்.
சே….. உன் கூட இவ்வளவு நாளா குடும்பம் நடத்தி இருக்கேன் ன்னு நினைச்சா எனக்கே ரொம்ப வருத்தமா இருக்கு….. என் வயித்துல உன் குழந்தை வளருது ன்னு கூட உனக்கு கருணை இல்லாம என்னை கொல்ல நினைக்கிற…..
இத்தனை வருஷமா குழந்தை இல்லாம….. இப்போ எப்படி டி திடீர்னு வந்துச்சு….. நான் வீட்ல ஊர்ல இல்லாத போது எவன் கூட படுத்த?
சீ….. பொறுக்கி….. உன்னை மாதிரி ஊர் மேயிறவ ன்னு நினைச்சியா என்னை?
ஏய்….. ஒருநாள் கூட உன் கூட படுத்த போது எனக்கு சேடிஸ்ஃபேக்ஷனே இல்ல….. அதனால தான் உனக்கு இத்தனை வருஷமா தங்கல….. இப்போ மட்டும் எப்படி தங்கிச்சு?….. என்றான் பிரமோத்.
அன்றொரு நாள் அவன் குடி போதையில் அவளிடம் உறவு கொண்டான். அப்போது வேறு ஏதோ பெயரை சொன்னான். இவள் சரியாக கவனிக்கவில்லை….. வேறு யாரோ என்று நினைத்து தான் தன்னிடம்….. என்று நினைத்து அருவருப்பு கொண்டாள்.
பாத்ரூம் ஜன்னல் வழியாக வெளியே பார்த்து கூப்பிட்டாள் மோனிகா.
காப்பாத்துங்க காப்பாத்துங்க….. என்று.
அப்போது தான் சுவாமிநாதன் மற்றும் தினேஷ் அங்கே வந்தனர்.
கார் சப்தம் கேட்டு ஒளிந்து கொண்டான் பிரமோத்.
வாசல் கதவு திறந்திருந்தது. ஹாலில் ஒரு போலீஸ்காரர் மண்டையில் அடிப்பட்டு மயக்கமாக இருந்தார். சுவாமிநாதன் அவரிடம் சென்று அவர் முகத்திற்கு தண்ணீர் தெளித்தார்.
அவர் மயக்கத்தில் இருந்து கண் விழித்து தன் மண்டையை பிடித்துக் கொண்டு…..
மாடியை காண்பித்தார். அந்த பொண்ணை காப்பாத்துங்க சார்….. என்றார்.
தினேஷ் கிரௌண்டு ஃபிளோரில் எல்லா ரூமிலும் பார்த்துவிட்டு வந்தான்.
அப்பா…. இங்கே யாருமில்லை.
மாடியில் என்று கை காட்டினார் சுவாமிநாதன்.
மெதுவாக படி ஏறிச் சென்றான் தினேஷ்.
காப்பாத்துங்க….. என்ற சத்தம் ஒரு ரூமில் கேட்டது…..
அந்த ரூமிற்குள் நுழையும் போது கதவின் பின்னாலிருந்து ஃபிளவர் வேஸ் வைத்து தினேஷை தாக்கினான் பிரமோத்.
நீயா….. என்றான் தினேஷ்.
அடுத்த அடி அவன் அடிப்பதற்குள் அவன் கையை பிடித்து தடுத்து தினேஷ் அடித்தான்.
சுவாமிநாதன் மேலே ஏறி வந்தார்.
பாத்ரூம் கதவருகே சென்று…..
நான் போலீஸ் மா….. கதவை திறங்க….. என்றார்.
பயந்தவாறே கதவை திறந்தாள் மோனிகா.
அங்கே தினேஷூம் பிரமோத்தும் சண்டை போட்டு கொண்டு இருந்தனர்.
சுவாமிநாதன் மோனிகாவை கீழே அழைத்து வந்தார்.
அடிப்பட்ட போலீஸையும் மோனிகாவையும் காரில் அமரச் செய்தார்.
போலீஸ் பேக் அப் டீம் ஒரு ஜீப்பில் வந்தனர்.
சார்…. வாங்க….. என்று அழைத்துச் சென்றார் சுவாமிநாதன்.
உள்ளே கடுங்காயங்களுடன் இருந்தான் பிரமோத்.
சில காயங்களுடன் தினேஷ்.
டேய்…. நீ என்ன பெரிய ஹீரோவா….. அன்னைக்கு அந்த நிஷாவை காப்பாத்தின…. இன்னைக்கு என் பொண்டாட்டியை…… இன்னொரு நாள் தொக்கா மாட்டினா அந்த நிஷா….. அப்போ போலீஸ் காரங்க வந்து காப்பாத்திட்டானுங்க….. இல்லன்னா அவ தலையில் அடிப்பட்டு மயக்கத்தில் இருக்கும் போதே அவளை….. என்றான் பிரமோத்.
தன் முழு பலத்தையும் கொண்டு அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான் தினேஷ். அந்த அடியில் முகத்தில் ரத்தக் காயங்களுடன் தரையில் வீழ்ந்திருந்தான் பிரமோத்.
பிரமோத்தை அரஸ்ட் செய்தனர் போலீஸ் டீம்.
சுவாமிநாதன் தினேஷிடம் வந்து…..
சாரி பா….. என்னால உனக்கும் பிரச்சனை…. ரொம்ப வலிக்குதா?
அதெல்லாம் ஒண்ணும் இல்லை பா…… வாங்க போகலாம்.
சுவாமிநாதனும் தினேஷூம் ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
தினேஷூக்கு அடிப்பட்ட சிராய்ப்புகளுக்கு மருந்து போட்டு ஒரு ஆன்டிபயாட்டிக் ஊசி போட்டு விட்டனர்.
தலையில் தாக்கப்பட்ட இடத்திற்கு பேண்டேஜ் போட்டுவிட்டனர்.
தன்ஷிகா தினேஷிடம்.
ரொம்ப வலிக்குதா அண்ணா…..
இல்லம்மா….. லேசா தான் அடிப்பட்டு இருக்கு….. கட்டு பெரிசா போட்டிருக்காங்க…..
சாரி டா கண்ணா…. தேங்க்ஸ்….. என்றார் திலகவதி.
என்னம்மா?
நான் தான உன்னை கூட போகச் சொன்னேன்….. அதுக்கு தான்…..
தேங்க்ஸ் எதுக்கு…..
நீ வாங்கி இருக்க இந்த அடியை உங்க அப்பா வாங்கியிருந்தா தாங்கி இருக்க மாட்டார். நீயாக இருக்கவே அவனை திருப்பி அடிச்சிருக்க….. அவர் அடி வாங்கி தான் வந்திருப்பாரு….. உங்க கூட வந்த போலீஸ்காரர் மாதிரி உங்க அப்பாவையும் அட்மிட் பண்ணி இருக்கனும்…. இதெல்லாம் நடக்காததிற்கு தான் தேங்க்ஸ் சொன்னேன்.
என்னம்மா நீங்க….. அவரு எனக்கு அப்பா மா….. உங்களுக்கு அவர் மேல இருக்குற அக்கரை எனக்கும் இருக்காதா…. அதனால தான் நானே அவர் கூட வரேன் ன்னு முதல்ல சொன்னேன்.
அவனை கட்டி அணைத்து கொண்டார் திலகவதி.
நிஷாவிற்கு மெஸேஜ் செய்தான் தினேஷ்.
நாளைக்கு காலைல அப்பல்லோ வரேன் ன்னு சொன்னீங்களே வரீங்களா?….. என்று.
அவள் மெஸேஜ் ஓப்பன் செய்து பார்க்கவில்லை.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூப்பர் மார்க்கெட்டில் மிகவும் பிஸியாக இருந்தாள்.
மோனிகா சுவாமிநாதனிடம் தேங்க்ஸ் சொல்லிவிட்டு….
சார்….. உங்க பையனை கொஞ்சம் கூப்பிடுங்க தேங்க்ஸ் சொல்லிட்டு கிளம்பறேன்…… என்றாள் மோனிகா. அவளுக்கு ஏற்பட்டிருந்த சிறு காயங்களுக்கு மருந்து போட்டுக்கொண்டு. அவளுடைய பெற்றோர்கள் அங்கே வந்திருந்தனர்.
இரும்மா….. கூப்பிடறேன்….. என்றார் சுவாமிநாதன்.
தினேஷ் வந்தான்.
தம்பி….. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் தம்பி….. என்னையும் என் குழந்தையையும் காப்பாற்றியதற்கு…..
நீங்க பிரெக்னெண்டா இருக்கீங்களா அக்கா?
ஆமாம் பா…..
அது தெரியுமா அவனுக்கு….. சாரி உங்க ஹஸ்பண்டுக்கு…..
அவன்னே சொல்லுங்க தம்பி….. மரியாதை கொடுக்குற அளவுக்கு அவன் ஒண்ணும் நல்லவன் கிடையாது….. நிறைய பொண்ணுங்க வாழ்க்கையை அழிச்சிருக்கான்……
ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே…..
சொல்லுப்பா…..
அப்படி இருந்தும் அவனோட குழந்தையை நீங்க பெத்துக்க நினைக்கறீங்களா……
அவன் பண்ணின தப்புக்கு அவன் குழந்தை என்னப்பா பண்ணுச்சு….. எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே….. அது நல்லவன் ஆவதும் தீயவனாவதும் அன்னை வளர்பினிலே….. ன்னு நீ கேள்விப் பட்டதில்ல….. அந்த பாட்டுக்கு உதாரணமா நான் என் குழந்தையை நல்ல மனுஷனா வளர்க்கப்போறேன்….. என்றாள் மோனிகா.
உங்க தன்னம்பிக்கைக்கு ஹேட்ஸ் ஆஃப் அக்கா….. இது தான் என் கார்டு…. உங்களுக்கு எதாவது ஹெல்ப் வேணும்னா என்னை கான்டாக்ட் பண்ணுங்க….. என்று சொல்லி தன் விசிடிங் கார்டை கொடுத்தான்.
தேங்க்ஸ் பா…. சீக்கிரமா உனக்கு சரி ஆகனும் ன்னு நான் பிரே பண்ணிக்கிறேன்.
என் தங்கச்சிக்கு நாளைக்கு ஆப்பிரேஷன். அவளுக்கு நல்ல படியா ஆப்பிரேஷன் முடிஞ்சு சீக்கிரமா நடக்கனும் ன்னு வேண்டிக்கோங்க அக்கா அது போதும்…. உங்களை மாதிரி நல்லவங்க பிரே பண்ணினா கண்டிப்பா நடக்கும்.
கண்டிப்பா வேண்டிக்கிறேன் பா….. ஆனா என்னை நல்லவ ன்னு எதை வச்சு சொல்ற? …. கட்டின புருஷனையே ஜெயிலுக்கு அனுப்பிட்டேன்.
அக்கா…. அதனால தான் சொல்றேன்…. யாராவது எப்படி வேண்டுமானாலும் போகட்டும்….. நான் மட்டும் நல்லா இருந்தா போதும்னு நினைக்கிற இந்த உலகத்துல….. உங்க வாழ்க்கையே போனாலும் பரவாயில்லை இதுக்கு மேல எந்த பொண்ணும் உங்க புருஷனால பாதிக்க படக்கூடாது ன்னு முடிவு செஞ்சிருக்கீங்களே….. அப்போ நீங்க கண்டிப்பா நல்லவங்க தானே அக்கா.
சரிப்பா….. நான் உன்னோட தங்கச்சியை பார்க்கலாமா?
ஓ…. ஷியூர்…. வாங்க…. என்று அழைத்துச் சென்றான்.
தன்ஷி….. இவங்க மோனிகா அக்கா….. என்றான் தினேஷ்.
ஹாய் அக்கா….. என்றாள் தன்ஷி.
அவளுடைய தோளை தடவி…..
ஹாய் தன்ஷி…… நாளைக்கு உனக்கு நல்லபடியா ஆப்பிரேஷன் முடிஞ்சு சீக்கிரமா சரியாக என் பிரேயர்ஸ்.
தேங்க்ஸ் அக்கா…..
இவங்க என் அம்மா….. என்றான் தினேஷ்.
அம்மா…. இன்னைக்கு மட்டும் சாரும் உங்க பையனும் வரலைன்னா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்….. என்றாள்.
ஏன் மா அப்படி எல்லாம் பேசுற….. கவலைப்படாதே….
நான் வரேன் மா…..
ஜாக்கிரதையா இரு மா….. பை….
பை அக்கா…. பை அக்கா…. என்றனர் தினேஷ் மற்றும் தன்ஷிகா.
பை தன்ஷி…. பை தினேஷ்…. என்று சொல்லி விட்டு வெளியே வந்தாள் மோனிகா.
அவளது பெற்றோர்களுடன் அவளுடைய வீட்டிற்கு சென்றாள். பிரமோத்தை அரெஸ்ட் செய்து FIR போட்டனர் போலீஸ் ஸ்டேஷனில்.
############
தொடரும்…..
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.