என் வசம் நானில்லை என் உயிரே…….
வசம் -20
அப்புறம் ஏன் டி என் கிட்ட நீ சொல்லல….. என்றாள் புவனேஷ்வரி.
நீ ஹர்ட் ஆகக் கூடாதுன்னு தான் சொல்லல… உனக்கு யோகேஷ் மேல இன்ட்ரெஸ்ட் இருக்கு ன்னு தெரிஞ்சதுனால….. என்றாள் தன்ஷிகா.
சொல்லி இருந்தா நான் என் மனசுல ஆசையை வளர்த்துக் கொள்ளாம இருந்திருப்பேன் இல்ல….. என்று சொல்லி கண்கள் கலங்கினாள் புவனேஷ்வரி.
புவி…. பிளீஸ்….. எனக்கே இப்போது தான் அவனும் என்னை லவ் பண்றான்னு தெரியும்…..
சும்மா சப்பக் கட்டு கட்டாத டி…. இவ்வளவு நாளாச்சா இதை சொல்ல ன்னு கேட்டியே…. அப்போ யோகேஷ் லவ் பண்றான்னு உனக்கு தெரிஞ்சிருக்கு இல்ல…..
புவி….. நான் உனக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன்…..
யோகேஷ் பர்பில் கலர்ல தான் டிரெஸ் போடுவேன் கேக் வெட்டும் போது ன்னு….. சொல்லும் போதே நீங்க ரெண்டு பேரும் கண்ணாடியில் பார்த்து சிரிச்சிக்கிட்டதை பார்த்திட்டேன் டி…..
புவி….. அப்போ உனக்கு வயிறு வலி…. வாந்தி….. எல்லாம்…..
எதுவும் இல்லை…. நானா வரவழைச்ச வாந்தி….. என்று சொல்லி சிரித்தாள் புவி…..
ஏன் புவி ….. இப்படி பண்ற…. நான் உன்னை ஒரு நல்ல ஃபிரெண்டு ன்னு நினைச்சேனே….. அதனால தான் உன்னை இன்வைட் பண்ண சொல்லி யோகேஷ் கிட்ட சொன்னேன்.
அப்போ நீ சொல்லி தான் அவன் என்னை இன்வைட் பண்ணானா?….. அப்போ அவனுக்கு நான் ஃபிரெண்டு கூட இல்லையா….. என்று சொல்லி அழுதாள் புவனேஷ்வரி.
அவள் தோளை தொட்டு சமாதானம் செய்ய முயற்சி செய்ய வந்த தன்ஷிகாவை ஆட்டோவில் இருந்து வெளியே தள்ளிவிட்டாள் புவனேஷ்வரி.
ஆட்டோக்காரன் வண்டியை நிறுத்தினான்.
தன்ஷிகா ரோட்டில் விழுந்தாள்….கை கால்களில் பலமாக அடிப்பட்டிருந்தது…. வலியில் துடித்தாள்…..
புவி…. பிளீஸ்….. என்று கைகளை நீட்டி கூப்பிட்டாள்.
சாவு டி….. என்று சொல்லி விட்டு…..
தன் ஹேண்ட்பேகில் இருந்த பேனா கத்தியை ஆட்டோ காரனின் கழுத்தில் வைத்து…..
எடு வண்டியை என்றாள் புவி…..
ஆட்டோக்காரன் பயந்து ஆட்டோவை ஓட்டிச் சென்றான்.
வலியில் துடித்தாள் தன்ஷிகா.
சாலை நடுவிலே இருந்தவள் மெதுவாக உருண்டு சாலை ஓரத்தில் வந்தாள்….. கைகளால் அங்கே தடவினாள்…. அவளது ஃபோனும் பேகும் கிடைக்கவில்லை…..
அம்மா…. அப்பா….. அண்ணா….. என்று முணுமுணுத்தாள் தன்ஷிகா. கடைசியாக….. சாரி யோகேஷ்…… என்றாள் தன்ஷிகா……வலி அதிகமாக இருந்ததால் மயக்கம் அடைந்தாள்.
யோகேஷ் தன்ஷிகாவிற்கு கால் செய்தான்.
நாட் ரீச்சபிள்…. என்று வந்தது…… மெஸேஜ் செய்தான்…. அதுவும் போய் சேரவில்லை.
உடனே புவனேஷ்வரிக்கு கால் செய்தான்.
புவி…..
அவனிடம் இருந்து ஃபோனை எதிர்பார்க்காத புவி….
சொல்லு யோகேஷ்…..
வீட்டிற்கு போயிட்டீங்களா ரெண்டு பேரும்?
யாரு ரெண்டு பேரும்….. நானும் ஆட்டோகாரருமா?
என்ன விளையாடுற…. தன்ஷி எங்கே…..
அவ சொல்ல வேண்டாம் ன்னு தான் சொன்னா….. இருந்தாலும் சொல்றேன்…. நீ தான் பயப்படுறீயே….. அதனால.
என்ன புவி சொல்ற….. கொஞ்சம் புரியும் படி சொல்லு…..
என்னால அவளும் பர்த்டே பார்ட்டி அட்டெண்ட் பண்ண முடியலையே ன்னு எனக்கு கில்டி ஃபீலிங்….. அதனால நான் தான் அவளை அனுப்பி வச்சேன்…..
எங்கே…..
உன் பர்த் டே பார்ட்டிக்கு தான்…..
ஏன் என் கிட்ட சொல்லல
இல்ல அவ தான் உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க போறேன்னு சொன்னா…..
அவ எப்படி வரா?
தெரியல…. ஆட்டோவா இல்ல காரா ன்னு….. புக் பண்ணிட்டேன்…. நீ கிளம்பு வீட்ல போய் ரெஸ்ட் எடு ன்னு என் கிட்ட சொல்லிட்டு ஆட்டோவில் இருந்து இறங்கி போயிட்டா…..
என்ன சொல்ற புவி…. எனக்கு ஒண்ணும் புரியல…..
ஏன் டென்ஷன் ஆகுற யோகி….. வந்திடுவா…..
இல்ல அவ ஃபோன் நாட் ரீச்சபிள் ன்னு வருது…..
மே பீ ஆன் தி வே ல சிக்னல் இல்லையா இருக்கும். கொஞ்ச நேரம் கழித்து கால் பண்ணி பாரு….. எனக்கு வாமிட் வர மாதிரி இருக்கு…. நான் ஃபோனை வைக்கிறேன்…..
ஓகே ஓகே…. யூ டேக் கேர்…. என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு பிரஷாந்திற்கு கால் செய்தான் யோகேஷ்.
சொல்லு மச்சி…..
மச்சி….. தன்ஷிகாவுக்கு ஏதோ பிரச்சனை ன்னு நினைக்கிறேன்……
என்னடா சொல்ற…..
அவ திரும்ப வந்திருக்கா….. எனக்கு சர்ப்ரைஸ் பண்ண….. மிடில்ல அவளுக்கு ஏதோ பிரச்சனை ன்னு நினைக்கிறேன்…..
யாரு சொன்னது…. அவ திரும்பி வந்தா ன்னு…..
புவி தான்……
என்ன சொன்னா?
எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறதுக்கு தன்ஷி பாண்டிச்சேரி வரா ன்னு சொன்னா……
மச்சி…. எனக்கு என்னவோ இது கரெக்ட் ன்னு தோணல…..
என்னடா சொல்ற?
ஆமாம்….. தன்ஷிகா தனியா ஒரு வண்டி புக் பண்ணி வர நினைச்சிருப்பா ன்னு தோணல….. அதுவும் அவ அப்பவே கிளம்பி இருந்தாலும் பாண்டிச்சேரி ரீச் ஆகுறதுக்குள்ள இருட்டிடும் ன்னு அவளுக்கு நல்லாவே தெரியும்….. அந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்குற பொண்ணு இல்ல தன்ஷிகா. எனக்கு என்னவோ புவனேஸ்வரி மேல தான் டவுட்….. அவ தான் ஏதோ உன்னை பிராங்க் பண்றா ன்னு தோணுது……
ஒண்ணும் புரியாமல் விழித்தான் யோகேஷ்.
மச்சி….. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு….. நான் போய் பார்த்து விட்டு வரேன்….. நீ இவங்க ரெண்டு பேரையும் இன்னோவாவிலேயே கூட்டிக்கிட்டு போயிடு…..
உனக்கு சங்கடமா இருந்தா…. பார்ட்டியை இன்னொரு நாள் வச்சிக்கலாமே…..
இல்லடா….. லேட் ஆனாலும் நான் வந்திடறேன்….. மத்தவங்களை நான் டிஸ்அப்பாயின்ட் பண்ண விரும்பல…..
ஹூம்…. ஓகே….. அங்கேயே இரு…. நான் பின்னாடி தான் வரேன்….. என்றான் பிரஷாந்த்.
அவனுடைய நண்பர்கள் இரண்டு பேரையும் அந்த காரில் ஏற்றி விட்டு விட்டு யோகேஷ் சென்னையை நோக்கி திரும்பி சென்றான்.
ஆட்டோவில் இருந்து பஸ் ஸ்டாண்டில் இறங்கிக் கொண்டாள் புவனேஷ்வரி.
ஏய்….. நான் எம்.எல்.ஏ பொண்ணு….. நான் தள்ளிவிட்டது போலீஸ்காரன் பொண்ணு….. உண்மையை சொல்லனும் ன்னு நினைச்ச அவ்வளவு தான்….. எங்க ரெண்டு பேரையும் நீ தான் கடத்த முயன்ற ன்னு உன் மேலேயே கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவேன்…… ஜாக்கிரதை….. என்று மிரட்டி விட்டு வேறு ஆட்டோ புக் செய்து வீட்டிற்கு சென்றாள்.
பத்து நிமிடத்திற்கு பிறகு….. அந்த ஆட்டோக்காரனுக்கு மனசு கேட்கவில்லை…. என்ன பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை….. என்று நினைத்து ஆட்டோ எடுத்துக் கொண்டு புவனேஸ்வரி தன்ஷிகாவை தள்ளிவிட்ட இடத்திற்கு சென்றான்.
அங்கே அவன் செல்வதற்கு மணி 6.45 ஆகி விட்டது….. இருட்டாக இருந்ததால் தன் ஃபோனை ஆன் செய்து டார்ச் லைட் அடித்து பார்த்தான். ஹைவேஸ் என்பதால் சரியாக எந்த இடம் என்று தெரியவில்லை….. மறுபடியும் ஆட்டோ எடுத்துக் கொண்டு சற்று தூரம் சென்றான். ஒவ்வொரு முறையும் ஆட்டோவை எதிர் பக்கத்தில் நிறுத்திவிட்டு ரோட்டை கிராஸ் செய்து வந்து பார்த்தான். ஹை வேஸ் என்பதால் நிறைய கார்களுக்கு லாரிகளும் சென்றுகொண்டிருந்தது. அந்த இடத்தை கண்டுபிடிக்க அவனுக்கு மணி 7.15 ஆகிவிட்டது.
ஆட்டோக்காரன் ஆட்டோவை நிறுத்திவிட்டு ஃபோனில் டார்ச் அடித்து தேடுவதை கவனித்தான் யோகேஷ்.
காரை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி வந்தான்……
என்ன தேடறீங்க
ஒண்ணும் இல்ல சார்….. என்னோட வெள்ளி மோதிரம் கீழே விழுந்திடிச்சு…..
அந்த பக்கம் ஆட்டோவில் போகும் போது…. எப்படி இந்த பக்கம் விழும்…..
சார்…. நான் சென்னைக்கு போகும் போது விழுந்திடிச்சு….. அதான் திரும்பி வந்தேன் தேடிக்கிட்டு……
ஏய்….. நீ….. உன் ஆட்டோவில் தான புவியும் தன்ஷியும் வந்தாங்க…..
சார்….. நீங்க தான் யோகேஷா……
என் பெயர் உனக்கெப்படி தெரியும்……
சார்….. என்று ஆரம்பித்து ஆட்டோவில் நடந்தவற்றை கூறினான் அந்த ஆட்டோ டிரைவர்.
ஆத்திரம் அடைந்தான் யோகேஷ்….. அவளை….. என்று ஆத்திரப்பட்டவன்…. தன்ஷி எங்கே….. என்றான்.
அதான் தெரியல சார்….. அதான் பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை ன்னு தேடி வந்தேன்…..எனக்கும் அந்த வயசுல ஒரு தங்கச்சி இருக்கா சார்…..
எங்கே ன்னு கொஞ்சம் நல்லா யோசிச்சு பாருங்க…..
அந்த பொண்ணு என் கழுத்தில கத்தி வச்சதும் நான் மெர்சல் ஆயிட்டேன் சார்….. அதான் எனக்கு ஒண்ணுமே புரியல……
சார்….. அங்கே பாருங்க….. என்றான் ஆட்டோக்காரன்.
அங்கே பர்பில் நிற வளையல்கள் உடைந்து இருந்தது….. ஆனால் அந்த இடத்தில் அவள் இல்லை….. உருண்டு சென்ற தடம் தெரிந்தது….. அதற்கு நேராக சென்று செய்து பார்த்தனர்.
அங்கே மறுபக்க சர்வீஸ் ரோட்டின் ஓரமாக விழுந்துக் கிடந்தாள் தன்ஷிகா.
ஆட்டோக்காரன் உதவியுடன் யோகேஷ் தன் காரில் அவளை ஏற்றிக் கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு மருத்துவமனையில் சேர்த்தான். பின்னர் தினேஷிற்கு கால் செய்தான் யோகேஷ்.
ஹலோ தினேஷா…..
ஆமாம்…. நீங்க…..
என் பெயர் யோகேஷ்…..
சொல்லுங்க…..
உங்க தங்கச்சி தன்ஷிகாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடிச்சு….. ஏவி ஆஸ்பிட்டலில் சேர்த்திருக்கிறேன்…..
வாட்….. என்று அதிர்ச்சி அடைந்தான் தினேஷ்.
#############
தொடரும்……
அ. வைஷ்ணவி விஜயராகவன்.

என் வசம் நானில்லை என் உயிரே……
வசம் -21
ஏவி ஆஸ்பிட்டலா….. எங்க இருக்கு…..
ஹைவேஸ்ல….. நான் உங்க நம்பருக்கு லொகேஷன் ஷேர் பண்றேன்…..
ஓகே….. நீங்க யாரு…..
நான் அவ ஃபிரெண்டு…..
ஓகே….. கொஞ்சம் பார்த்துக்கோங்க மிஸ்டர்…?
யோகேஷ்…..
ஹாங் யோகேஷ்….. என்றான் சற்றே பதட்டமாக.
சார்….. நீங்க கவலைப்பட வேண்டாம்…… டாக்டர் அவ உயிருக்கு எந்த வித ஆபத்தும் இல்லை ன்னு சொல்லிட்டாரு……
ஓகே….. தேங்க்ஸ் யோகேஷ்….. நான் இப்பவே என்னோட அப்பா அம்மாவை கூட்டிக்கிட்டு வந்திடறேன்…… அது வரைக்கும் உங்களால அங்கு வெயிட் பண்ண முடியுமா?
கண்டிப்பா சார்…….. என்றான் யோகேஷ்.
பிரஷாந்த் மற்றும் அவனுடைய நண்பர்களும் ஹாஸ்பிடலுக்கு வந்தனர்.
சாரி கய்ஸ்….. பார்ட்டி வைக்க முடியல…… என்றான் யோகேஷ்.
ஏய்…… அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை யோகி….. அவ எப்படி இருக்கா?…… என்றாள் ஒரு ஃபிரெண்டு.
இப்போ பரவாயில்லை என்றான் யோகேஷ்.
பிரஷாந்த் ஒரு நிமிஷம் வா….. என்று சொல்லி அவனை தனியாக கூட்டிச் சென்று நடந்தவற்றை கூறினான் யோகேஷ்.
நான் தான் முதலிலேயே சொன்னேனே டா….. அந்த பொண்ணு பேச்சு நடை எல்லாம் சரி இல்லை ன்னு….. இப்போ பார்த்தியா அவ கிளோஸ் ஃபிரெண்டையே கிளோஸ் பண்ண பார்த்திருக்கா…..
என்னால கோபத்தை கட்டுப்படுத்த முடியல டா….. என்ன பண்ணலாம்?…… போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுத்திடலாமா?
அவ அப்பா எம் எல் ஏ……. ஸோ…… அதெல்லாம் அவ ஈஸியாக வெளியே வந்திடுவா……..
தன்ஷியோட அப்பாவே போலீஸ்காரர் தான் டா……
மச்சி…… எனக்கு தெரிஞ்சு வேலைக்கு ஆகாது….. இப்போதைக்கு இந்த ஆட்டோக்காரர் நம்பர் வாங்கிக் கொண்டு அனுப்பிடு….. தன்ஷி எழுந்து என்ன சொல்றா ன்னு பார்ப்போம்…… அதுக்கு அப்புறம் டிசைடு பண்ணிக்கலாம்…… அதுவரைக்கும் அவளோட ஃபேமிலிக்கும் தெரிய வேண்டாம்……. என்றான் பிரஷாந்த்.
ஓகே மச்சி….. என்றான் யோகேஷ்.
ஏய்….. அப்பா அம்மா அக்கா கிட்ட சொல்லிட்டியா பாண்டிச்சேரி போக வேண்டாம் ன்னு…..
ஓ…. இல்ல டா மறந்திட்டேன்….. என்று சொல்லி ஃபோனை எடுத்து கால் செய்தான்.
அப்பா……
இன்னும் அரைமணி நேரத்தில ரீச் ஆயிடுவோம் பா…..
இல்ல அப்பா ….. வரவேண்டாம்…… சாரி….. சொல்ல மறந்திட்டேன்.
ரிலாக்ஸ் ரிலாக்ஸ்….. ஏன் பதட்டப்படுற….. என்னாச்சு?….. ஈஸ் எவ்ரிதிங் ஓகே?
இல்ல பா….. என் ஃபிரெண்டு க்கு ஆக்ஸிடென்ட் ஆயிடிச்சு…..
வாட்….. இப்போ நீ எங்கே இருக்க?….. உனக்கு ஒண்ணும் இல்லையே…..
இல்ல பா….. அவ ஆட்டோவில் வரும்போது ஆக்ஸிடென்ட் ஆகிட்டு இருக்கு…..
ஓகே ஓகே….. நீ டென்ஷன் ஆகாத…. நாங்க வரோம்….. லொகேஷன் ஷேர் பண்ணு.
ஓகே பா….. என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு லொகேஷன் ஷேர் செய்தான் யோகேஷ்.
பதட்டமாக சுவாமிநாதன், திலகவதி மற்றும் தினேஷ் மூவரும் வந்தனர்.
நான் தான் தினேஷ்….. தன்ஷிகாவோட அண்ணன்…..யாரு எனக்கு கால் பண்ணது….. என்றான்.
யோகேஷ் முன்னால் வந்து நின்றான்.
நான் தான் சார்……
என் தங்கச்சி எங்கே?
உள்ளே ஐ சி யூ வில தான் இருக்கா….. ஆனா பயப்பட வேண்டாம் ன்னு டாக்டர் சொல்லி இருக்கார்.
சுவாமிநாதன் யோகேஷிடம் வந்து…..
தம்பி….. என்னாச்சு பா….. என்றார்.
அவன் அவளுக்கு பிரபோஸ் செய்ததை தவிர மற்ற அனைத்தையும் புவி சொன்னது போல சொன்னான் யோகேஷ்.
ஏன் இந்த பொண்ணு புவி இப்படி பண்ணினா….
என்று சொல்லி அழுதார் திலகவதி.
ஒரு நிமிடம் யோகேஷூம் பிரஷாந்த்தும் அவரை பார்த்தனர்.
ஹைவேஸ்ல போய் தனியா விடலாமா ஒரு பொண்ணை….. அவளுக்கு பிரச்சனை என்றதும் என் பொண்ணு அவளுக்காக நின்னா இல்ல….. சே….. அந்த பொண்ணு ஏன் இப்படி பண்ணினாளோ…..
அம்மா….. பிளீஸ்….. அழாதீங்க….. புவிக்கு தெரியுமா என்ன….. நம்ம தன்ஷிகாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆகும் ன்னு….. எதுக்கு அவளை திட்றீங்க….. என்றான் தினேஷ்.
யோகேஷூக்கு புவனேஷ்வரி மேல் கோபம் அதிகமாகிக் கொண்டே போனது. பிரஷாந்த் அவனுடைய தோளில் கைகளை வைத்து சமாதானம் செய்தான்.
அப்பா…. நான் டாக்டர் கிட்ட பேசிட்டு வரேன்….. என்றான் தினேஷ்.
நானும் வரலாமா சார்…. என்றான் யோகேஷ்.
ஒரு நிமிடம் அவனை பார்த்தான் தினேஷ். பிறகு….
ஓகே…. வாங்க….. என்றான்.
சுவாமிநாதன் மற்றும் திலகவதி இருவரும் கண்ணாடி வழியாக தன்ஷிகாவை பார்த்து கொண்டு நின்றிருந்தார்கள். தன் மகளுக்கு போடப்பட்டிருந்த கட்டுக்களை பார்த்து அழுதார் திலகவதி. சுவாமிநாதன் அவரை சமாதானம் செய்தார்.
ஆக்ஸிடென்ட் எப்படி ஆச்சு….ஐ மீன் ஆட்டோவா பைக்கா இல்ல கார்லையா?. என்றான் தினேஷ்.
இல்ல சார்….. தெரியல…..
புவிக்கு தெரியுமா?….. நான் கால் பண்ணி பார்க்கவா?….. என்றான் தினேஷ்.
இல்ல சார்….. அவளுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை….. என் கிட்ட பேசும்போது அவ எதுல போனா ன்னு தெரியல ன்னு சொன்னா…. அப்பவும் வாந்தி எடுக்குற மாதிரி பேசினா…. அதனால நான் அவளை திரும்ப கூப்பிடல…… என்றான் யோகேஷ்.
ஓகே….. சரி வாங்க டாக்டர் கிட்ட பேசிட்டு வரலாம்…. என்று சொல்லி விட்டு டாக்டர் ரூமிற்குள் நுழைந்தார்கள் தினேஷ் மற்றும் யோகேஷ்.
எக்ஸ்கியூஸ் அஸ் டாக்டர்….. என்றான் யோகேஷ்.
யெஸ் பிளீஸ் கம்….. ஹேவ் சீட்….. என்றார் டாக்டர்.
இரண்டு பேரும் சேரில் அமர்ந்தனர்.
நீங்க பேஷன்ட்டுக்கு என்ன ரிலேஷன்….. என்றார் டாக்டர் யோகேஷை பார்த்து.
டாக்டர்….. நான் அவங்க ஃபிரெண்டு….. இவர் அவங்க பிரதர்…..
ஓகே….. சார்….. உங்க சிஸ்டருக்கு கால்ல சிவியர் ஃபிரேக்ச்சர்…. ஆப்பிரேஷன் செய்து பிளேட் வைக்கனும்….. மத்த அடி எல்லாம் சின்னது தான்….. பிரச்சனை இல்லை….. அதெல்லாம் சீக்கிரமா ஹீல் ஆயிடும்….. என்றார்.
கண்கள் கலங்கினான் தினேஷ். புவனேஷ்வரி மேல் ஆத்திரம் கொண்டான் யோகேஷ்.
எப்போ கண்விழிப்பா….. என்றான் தினேஷ்.
மே பி இன்னும் ஒன் ஹவர்ல….. ஆனா அவங்களுக்கு பெயின் அதிகமா இருக்கும்…… பெயின் கில்லர் கொடுத்தா தான் அவங்களால வலியை பொறுத்துக் கொள்ள முடியும்….. பெயின் கில்லர் கொடுக்கிறதால அவங்க மயக்க நிலையிலேயே தான் இருப்பாங்க….. ஆப்பிரேஷன் பண்ண பிறகு டூ டேஸ்ல நார்மல் ஆயிடுவாங்க…..
டாக்டர் எப்போ நடப்பா?
ஆப்பிரேஷன் முடிஞ்ச நெக்ஸ்ட் டேவே நடக்க சொல்லிடுவோம்….. பெயின்னா தான் இருக்கும்…. இருந்தாலும் அவங்க உடனே நடந்தா தான் அந்த பிளேட் அவங்க உடம்புக்கு செட் ஆகும்……
இதனால வேற எதாவது பிரச்சனை இருக்கா……
அதெல்லாம் ஒண்ணும் இல்லை….. கவலைப்படத் தேவை இல்லை…..
சரி ஆப்பிரேஷன் எப்போ பண்ணலாம் ன்னு சொல்லுங்க…. எவ்வளவு சீக்கிரமா பண்றீங்களோ அவ்வளவு நல்லது.
இன்னைக்கேன்னாலும் ஓகே டாக்டர்….. ஆனா வேற ஹாஸ்பிடலுக்கு ஷிஃப்ட் பண்ணலாமா?….. என்றான் தினேஷ்.
இன்னைக்கு வேண்டாம்….. நாளைக்கு வேணும்னா சிட்டிக்கு ஷிஃப்ட் பண்ணிக்கோங்க….. மீனாட்சி இல்ல அப்பல்லோ ஹாஸ்பிடல் ஓகேவா உங்களுக்கு?
ஓகே டாக்டர்.
ஏன்னா நான் அங்கேயும் பார்ப்பேன்….. இல்ல உங்களுக்கு அந்த ஹாஸ்பிட்டல் செட் ஆகாதுன்னா நான் லெட்டர் எழுதி தரேன்…. அதை வச்சு நீங்க எங்கே பார்க்கறீங்களோ பார்த்துக்கோங்க…..
அப்பல்லோ ஹாஸ்பிடல் ஓகே டாக்டர்….. எங்க வீட்டுக்கு பக்கத்தில தான் இருக்கு….என்றான் தினேஷ்.
ஓகே….. நான் சில மருந்து ஊசி எழுதி தரேன் அதை கொடுத்துவிட்டு அப்புறம் நாளைக்கு ஈவினிங் ஆம்புலன்ஸ்ல ஷிஃப்ட் பண்ணிக்கோங்க….. நான் மன்டே அங்கே வந்து பார்க்கிறேன்…..
நாளைக்கு நீங்க இங்க வரமாட்டீங்களா டாக்டர்….. ஷிஃப்ட் பண்ணும் போது.
இல்ல சார்…. நாளைக்கு சன்டே இல்ல…. ஒருநாள் தான் பிரேக்….. அதுவும் ஃபேமிலிக்காக….. என்றார் டாக்டர்.
ஓகே டாக்டர். ஐ கேன் அன்டர்ஸ்டாண்ட்….. தேங்க்ஸ்…. என்றான் தினேஷ்.
தேங்க் யூ டாக்டர் என்று யோகேஷூம் சொல்லிவிட்டு வெளியே வந்து அனைவரிடமும் விஷயத்தை சொன்னான் தினேஷ்.
திலகவதி அழுதார்.
ஒரு சின்ன அடிப்பட்டாலே ஊரையே கூட்டிடுவா….. இப்போ இந்த வலியை எப்படி பொறுத்துக்கப் போறாளோ….. என்று புலம்பினார்.
யோகேஷ் ஃபிரெண்ட்ஸ்களிடம்…..
ஒன்ஸ் அகெயின் சாரி கய்ஸ்….. இன்னொரு நாள் கண்டிப்பா பார்ட்டி தரேன்……
ஏய்…. என்னடா….. பார்ட்டியா எங்களுக்கு முக்கியம்…..
விடுடா மச்சி…. இன்னைக்கு இல்லைன்னா இன்னொரு நாள்…..
உன் பர்த் டே அதுவும் நீ சங்கடப் படுறீயே ன்னு தான் கஷ்டமா இருக்கு….
என்று ஆளாளுக்கு ஒன்று சொன்னார்கள்.
பிரஷாந்த்…. இவங்க எல்லாரையும் அவங்க அவங்க வீட்ல இறக்கிவிட்டிரு டா…..
ஓகே மச்சி…. நான் பார்த்துக்கொள்கிறேன்…. நீ கவலைப்படாதே…..
கிளம்பும் போது அனைவரும் யோகேஷூக்கு கை கொடுத்து விட்டு ஹக் செய்து ஹேப்பி பர்த்டே யோகேஷ் என்று விஷ் செய்துவிட்டு சென்றனர்.
மச்சி பர்த் டே கிஃப்ட் கார்ல வைக்கிறோம்…. எடுத்துக்கோ…. என்றாள் ஒரு பெண்.
No comments yet.