வசம் 18,19

Vaishnavi Vijayaraghavan | 08 May 2026 | Share

என் வசம் நானில்லை என் உயிரே……

வசம் -18

தினேஷிடம் இருந்து நிஷாவிற்கு மெஸேஜ் வந்தது.

நாளைக்கு ஈவினிங் மீட் பண்ணலாமா?…… என்று.

நாளை மறுநாள் என் அக்கா பொண்ணு பர்த் டே….. அதுக்கு நான் லீவு கேட்டிருக்கேன்…… அதனால நாளைக்கு ஈவினிங் பர்மிஷன் கிடைக்காது…..

ஓ….. ஓகே….. உங்களுக்கு எப்போ முடியுமோ அப்போ மீட் பண்ணலாம்…… 

ஓகே தினேஷ்….. பை….. ஐ ஹேவ் டூ ஸ்லீப்….. ஷூட்டு கெட் அப் இயர்லி டுமாரோ…..‌என்றாள் மெஸேஜ் செய்தாள் நிஷா.

வாவ்…. யுவர் இங்கிலீஷ் ஈஸ் ஸோ பெர்ஃபெக்ட்….. என்றான் தினேஷ்.

தேங்க்ஸ்….. ஐ லைக் இங்கிலீஷ்….. ..

ஒ….. ஐ ஸீ…..

பை….. குட் நைட்டு…..

குட் நைட்டு நிஷா……

***************

வீட்டிற்கு வந்தான் பிரமோத்…..

என்னங்க…. சீக்கிரமா வரேன் ன்னு சொன்னீங்களே….என்று சொல்லி பக்கத்தில் அமர்ந்தாள் மோனிகா.

வேலை முடிய லேட்டா ஆயிடுச்சு…..

ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்…..

என்ன விஷயம் மா….. ரொம்ப டயர்டா இருக்கு….. தலை வலி வேற….. என்று சொல்லிக்கொண்டே பிரமோத் கட்டிலில் படுத்தான்.

அச்சச்சோ…. இருங்க தைலம் தடவறேன்…… என்றாள் மோனிகா.

தலையில் தடவி கொடுத்தாள்.

அவள் கையை பிடித்து முத்தம் கொடுத்தான் பிரமோத்.

தேங்க்ஸ்….. ரொம்ப நல்லா இருக்கு….. அப்படியே கொஞ்ச நேரம் மசாஜ் மாதிரி செய்…

சரிங்க…. என்று சொல்லி தடவினாள்.

அப்படியே பேச ஆரம்பித்தாள்.

ஏங்க….. 

ஹூம்……

டிரிங்க்ஸ் பண்ணி இருக்கீங்களா?

சாரிம்மா….. ஆஃபீஸ்ல ஒரு வெல்கம் பார்ட்டி….. புதுசா ஆளுங்க சேர்ந்திருக்காங்க….. அவங்களுக்காக கொடுத்தது….. அப்போ ரெண்டு பெக் தான் குடிச்சேன்…. சோஷியல் டிரிங்கிங் தான்…. யூ டோண்ட் ஒரி….. என்றான் பிரமோத்.

ஆனால் அவன் நிறையவே குடித்து இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள் மோனிகா.

ஏங்க…..நான் காலைல பிரெக்னன்சி டெஸ்ட் எடுத்தேன்….. பாசிடிவ் வந்துச்சு…..‌என்றாள் மோனிகா.

பதில் சொல்லவில்லை பிரமோத்.

என்னங்க….. என்றாள்.

ஹாங்….. இந்த பக்கம் மசாஜ் பண்ணுமா….. தூக்கத்தில் இருந்து கண்விழித்து சொன்னான்….. பிறகு அப்படியே கண்களை மூடி தூங்கினான்.

நான் சொன்னதை கேட்டீங்களா ?

இல்லம்மா….. எனக்கு எதுவுமே மண்டைல ஏறல…..

நாளைக்கு பேசிக்கலாம்….. குட் நைட்டு….. என்றான் பிரமோத்.

ஓகே….. குட் நைட்டுங்க…. என்று சொல்லி விட்டு அவன் பக்கத்தில் படுத்து கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். 

தன் ஃபோனை எடுத்து ரெக்கார்டு ஆன் செய்தாள்.

ஏங்க….. நம்ம இவ்வளவு நாளாக எதுக்காக காத்திருந்தோமோ அது நமக்கு கிடைச்சிருக்கு…..

நீங்க அப்பாவாக போறீங்க…. நான் அம்மா….. என்றாள் மோனிகா.

அப்போது தூக்கத்தில் பேசினான் பிரமோத்.

என்னங்க நான் சொன்னது புரிஞ்சதா….. என்று சொல்ல வந்தவள் அவன் பேசுவதை கேட்டு அமைதியாக இருந்தாள்.

யாமினி….. செம ஸ்டரக்சர் டி உனக்கு….. நான் கூப்பிட்ட போதே ஒழுங்கா வந்திருந்தா உனக்கு தேவையான பணத்தை கொடுத்து அனுப்பி இருப்பேன்….. தேவையில்லாம அந்த நிஷாவை இதுல இழுத்து…. அவ நான் பேசியதை ரெக்கார்டு பண்ணி என்னையே மிரட்டினா…..அதான் உன்னை விட்டு விட்டு அவளை அடையனும் ன்னு நினைச்சேன்….. முதல் முறை எவனோ வந்து காப்பாத்திட்டான்….. ரெண்டாவது தடவை போலீஸ்காரங்க காரியத்தை கெடுத்திட்டாங்க….. இல்லன்னா ரசிச்சு அனுபவிச்சு இருப்பேன்…..

அதுவரை அவனை அணைத்து கொண்டு படுத்திருந்தவளுக்கு அவனை தொடவே அருவறுப்பாக இருந்தது. சற்று தள்ளி படுத்தாள்….. ஆனால் ரெக்கார்டிங்கை ஆஃப் செய்யவில்லை.

இன்னைக்கு இந்த போலீஸூகாரங்க என்னையே கூப்பிட்டு மிரட்டுறாங்க….. ஆனா அந்த நிஷா ரொம்ப நல்ல பொண்ணு ன்னு அந்த கான்ஸ்டெபிள் சொல்றான்….. என் ஃபேமிலிக்கு தெரிஞ்சா எனக்கு தான் கஷ்டம் பிரச்சனை ன்னு சொன்னாளாம்…..அதானால கேஸ் கொடுக்காம என்னை வார்ன் மட்டும் பண்ண சொன்னாளாம்…. அதை அந்த ஆளு…. என் கிட்டேயே சொல்றான்…. ஹீ ஹீ….. இவ்வளவு நாளா நானும் என் பி.ஏ. ஸ்டெல்லாவும் லிவ்விங் டூகெதர்ல இருக்கோமே அது தெரிஞ்சுதா என் பொண்டாட்டிக்கு….. இல்ல போன வாரம் இன்டர்வியூவில் செலக்ட் ஆன பொண்ணை…. இன்னைக்கு நடந்த பார்ட்டில ஜூஸ்ல மயக்கம் மருந்து கலந்து அவளுக்கே தெரியாம அவளை அனுபவிச்சிட்டு…. வந்திருக்கேனே…. அது தெரியுமா….. நான் சொன்னா மட்டும் தான் தெரியும்…… நான் ஏன் சொல்லப் போறேன்….. நான் என்ன லூசா….. ஹீஹீ…. என்று சொல்லிக்கொண்டே பிரமோத் தூங்கிவிட்டான்.

அனைத்தும் ரெக்கார்டு செய்தவள் அதை பத்திரமாக லாக் ஃபோல்டரில் வைத்து தன் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைத்துக் கொண்டாள். அவ்வளவு நேரமாக அழுதவள் கண்களை துடைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தவளாய் எழுந்து சென்றாள்.

****************

காலேஜ் முடிந்து பார்ட்டிக்கு ரெடியாகினார்கள் தன்ஷிகா புவனேஷ்வரி மற்றும் யோகேஷின் நண்பர்கள்.

பர்பில் நிற பார்ட்டி ஃபிராக்கில் மிகவும் அழகாக இருந்தாள் தன்ஷிகா.

ஏய்…. சூப்பரா இருக்க டி…. என்றார் புவனேஷ்வரி.

புவி….. நீயும் தான் சூப்பரா இருக்க…..

ஆனா யோகேஷ் என்னை பார்ப்பானா ன்னே தெரியல…..

ஏன்…..

பின்ன உன்னை இந்த டிரெஸ்ல பார்த்தா வேற யாரையும் திரும்பி பார்க்க மனசு வராது…..

சீ போடி…. என்று வெட்கப் பட்டாள் தன்ஷிகா.

யோகேஷ் மற்றும் பிரஷாந்த் தான் கிளோஸ் ஃபிரெண்ட்ஸ்….. மற்ற மூன்று பேரும் ஃபிரெண்ட்ஸ் அவ்வளவுதான்.

காலேஜில் அவனுடைய அப்பாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினான் யோகேஷ்.

அப்பா சீக்கிரமா வந்திடுங்க…. நான் என் ஃபிரெண்ட்ஸோட கிளம்பறேன்….. 

ஓகே டா கண்ணா….. ஜாக்கிரதையா போ…. போயிட்டு ஃபோன் பண்ணு…. நானே உன்னோட அம்மா, பாட்டி, தாத்தா, அக்காவை எல்லாம் கூட்டிக்கிட்டு வரேன்….

ஓகே பா…. பை…..

பை யோகி…..

காரில் ஏற வந்தான் பிரஷாந்த்.

மச்சி…. நீ இன்னோவால வாடா…. நம்ம டிபார்ட்மெண்ட் பொண்ணுங்க கூட நம்ம மூணு பசங்க….. சும்மா இருக்க மாட்டானுங்க…. நீ பார்த்து பத்திரமா கூட்டிக்கிட்டு வா…..

சரிடா….. உன் கூட கார்ல யாரெல்லாம் வராங்க…..

நான் தன்ஷிகாவையும் புவனேஸ்வரியையும் கூட்டிக்கிட்டு போறேன்…..

ஏன்டா அவங்களை எல்லாம் கூப்பிட்ட…..

இல்ல மச்சி….. அவளை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்…. ஒண்ணா தான் ஸ்கூல் படிச்சோம்….

ஓகே ஓகே…. உன் பர்த் டே உன் இஷ்டம்…..

ஏய்…. என்னடா…..

இல்லடா அந்த புவனேஷ்வரியை பார்த்தாலே எனக்கு பிடிக்காது….. ஓவரா கொஞ்சி கொஞ்சி பேசுவா…..

விடு டா…. எல்லாரும் ஒரே மாதிரியாகவா இருப்பாங்க…..

சரி…. கிளம்பு….. 

நான் ஃபாலோ பண்ணி வரேன்…..

சரி டா….பை…. என்று சொல்லி விட்டு தன்ஷிகாவிடம் வந்தான்.

அவள் அழகில் சற்று மதி மயங்கினான். அவனுக்கு அவளிடம் அப்போதே தன் காதலை சொல்லவேண்டும் என்று தோன்றியது…..

யூ லுக் ஸோ கார்ஜியஸ்….. என்றான் யோகேஷ்.

தேங்க்ஸ்…. என்று சொல்லி வெட்கப் பட்டாள்.

ஆனால் அவன் பச்சை நிறத்தில் சர்ட் போட்டிருந்ததை பார்த்து சற்றே வருத்தம் கொண்டாள்.

என்னாச்சு…. என்றான் யோகேஷ்….

ஒண்ணும் இல்ல…. என்று சொல்லி சிரித்தாள் தன்ஷிகா.

சரி வாங்க போகலாம்…. என்றான் இருவரையும் பார்த்து.

அப்போது முன் பக்க கதவை திறந்தான்.

நான் உட்கார்ந்து கொள்ளவா யோகேஷ்….. என்றாள் புவனேஷ்வரி.

ஹாங்…. ஓகே புவனேஷ்வரி…..

யோகி….. ஜஸ்ட் கால் மீ புவி…..

ஓகே புவி….. என்றான் யோகேஷ்.

சிரித்துக்கொண்டே பின் சீட்டில் அமர்ந்தாள் தன்ஷிகா.

யோகி…..

ஹாங் சொல்லு புவனேஷ்வரி…..

யோகி…. நான் தான் புவி ன்னு கூப்பிட சொன்னேன் இல்ல…..

ஓகே ஓகே…. சாரி மறந்திட்டேன்…..

சொல்லு புவி…..

என் டிரெஸ் எப்படி இருக்கு ன்னு சொல்லையே…..

ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு…..

டிரெஸ் நல்லா இருக்கா இல்ல டிரெஸ் எனக்கு நல்லா இருக்கா…..

ரெண்டுமே தான்…..

யோகி….. நீ என்னை இன்வைட் பண்ணுவ ன்னு நினைச்சுக் கூட பார்க்கல…..

நீயும் என் ஃபிரெண்டு தான புவி…..

ஃபிரெண்டு மட்டும் தானா….. என்று முணுமுணுத்தாள் புவனேஷ்வரி.

என்ன புவி…..

ஒண்ணும் இல்ல யோகி……

ஓகே…. என்று சொல்லி விட்டு கண்ணாடியில் தன்ஷிகாவின் முகம் தெரிவது போல அட்ஜஸ்ட் செய்தான் யோகேஷ்.

யோகி…. ஒண்ணு கவனிச்சியா?

என்ன புவி…..

நீயும் நானும் மேட்ச்…. சேம் டூ சேம்…. கிரீன் கலர்…..

சாரி புவி…. நான் கேக் கட் பண்ணும் போது பர்பில் தான் போடுவேன்….. எங்க அம்மாவோட ஃபேவரைட் கலர்…. அதனால அங்கு போன உடனே பர்பில் கலர் ஷர்ட் போட்டுக்குவேன்…..

ஓ….. என்று சொல்லி சோகமானாள் புவனேஷ்வரி .

சந்தோஷமடைந்தாள் தன்ஷிகா.

இப்போது யோகேஷ் புரிந்து கொண்டான். எதற்காக அவனது டிரெஸ் பார்த்து அவள் சோகமானாள் என்று.

கண்ணாடியில் அவளை பார்த்து சிரித்தான்.

தன்ஷிகாவும் சிரித்தாள் ……

புவனேஷ்வரி சோகமாக வெளியே வேடிக்கை பார்த்தவாறு பயணித்தாள் .

#############

தொடரும் ……

அ. வைஷ்ணவி விஜயராகவன் .

என் வசம் நானில்லை என் உயிரே…….

வசம் -19

டிராவல் செய்து கொண்டு இருக்கும் போது…..

யோகி…. கொஞ்சம் வண்டியை நிறுத்தறீயா?

என்னாச்சு புவி…..

கொஞ்சம் ஸ்டாப் பண்ணு…..

ஓகே ஓகே….. என்று சொல்லி ஓரமாக நிறுத்தினான்.

புவனேஷ்வரி காரில் இருந்து இறங்கி வாந்தி எடுத்தாள்.

என்னாச்சு டி….. என்றாள் தன்ஷிகா பதட்டமாக.

மதியம் சாப்பிட்டது ஒத்துக்கல ன்னு நினைக்கிறேன். வயிறு வேற ரொம்ப வலிக்குது…..

என்னடி இப்படி சொல்ற….. சரி வா நாம வீட்டுக்கு போகலாம்….. நான் வண்டி புக் பண்றேன்…. அது வரைக்கும் நீ வண்டில படு என்று சொல்லி பின் சீட்டில் படுக்க வைத்தாள் தன்ஷிகா.

பிறகு வெளியே நின்று கொண்டு இருந்த யோகேஷிடம் வந்தாள்.

யோகேஷ் அவளை ஏக்கமாக பார்த்தான்.

ஸாரி யோகேஷ்….. இவளை இந்த நிலைமைல கூட்டிக்கிட்டு போகவும் முடியாது….. தனியா அனுப்பி வைக்கவும் முடியாது….. என்றாள் தன்ஷிகா.

புரியுது….. ஆனா….. என்றான் யோகேஷ்.

ஸ்மைல் செய்து அவனை ஹக் செய்து…..

ஹேப்பி பர்த்டே யோகேஷ்….. என்றாள் தன்ஷிகா.

இதை சற்றும் எதிர்பார்க்காத யோகேஷ்.

அவளை இறுக்கமாக அணைத்து கொண்டான்.

தேங்க்ஸ்…. தேங்க் யூ ஸோ மச்….. என்றான்.

தன் ஹேண்ட்பேகில் இருந்து கிஃப்ட்டை எடுத்து கொடுத்தாள்.

அதை வாங்கி கொண்டு….. செல்ஃபி எடுத்து கொள்ளலாமா?….. என்றான்.

ஷியூர்….. என்றாள்.

ஃபைவ் மினிட்ஸ்ல ஆட்டோ வருது…..

ஓகே….. பாத்து பத்திரமா வீட்டுக்கு போங்க….. வீட்டிற்கு சென்றதும் ஃபோன் பண்ணு…. ஓகே வா…..

ஓகே…. கண்டிப்பா…..

ஒன் மினிட் தன்ஷி…..

உனக்கு நான் ரிட்டன் கிஃப்ட் கொடுக்கலையே…..

அதெல்லாம் பரவாயில்லை யோகேஷ்…..

பை….. என்று சொல்லி திரும்பியவள் கை பிடித்தான்.

திரும்பி பார்த்தாள் தன்ஷிகா.

அந்த ரோட்டிலேயே முட்டி போட்டு அவளிடம் மோதிரத்தை காட்டி….. ஐ லவ் யூ….. என்றான் யோகேஷ்.

கண்கள் கலங்கினாள் தன்ஷிகா.

அவனை கட்டிப் பிடித்து கொண்டாள் தன்ஷிகா.

இதை சொல்ல உனக்கு இத்தனை வருஷம் ஆச்சா……

சாரி தன்ஷி….. என்றான் யோகேஷ்.

அவளுடைய விரலில் மோதிரம் போட்டுவிட்டான். பின்னர் அவளை ஹக் செய்து கொண்டு அவள் கையில் முத்தம் கொடுத்தான்.

நீ என்னை லவ் பண்ற ன்னு எனக்கு ஃபர்ஸ்ட் இயர்லையே தெரியும்….. என்றாள் தன்ஷிகா.

எனக்கும் தெரியும் நீயும் அப்போதிலிருந்தே என்னை லவ் பண்ற ன்னு….. என்றான் யோகேஷ்.

சிரித்தாள் தன்ஷிகா.

ஆட்டோ வந்தது.

காரில் படுத்துக் கொண்டு இருந்த புவனேஷ்வரியை எழுப்பினாள் தன்ஷிகா.

பை யோகேஷ்…. என்றாள் புவனேஷ்வரி.

பை புவி….. டேக் கேர்….. கால் பண்ணு….. டாக்டரிடம் போய் பாரு….. என்றான் யோகேஷ்.

சாரி….. என்னால உனக்கு லேட் ஆயிடுச்சு….. பாவம் தன்ஷிகாவும் வர முடியல…..

இட்ஸ் ஓகே டி….. நோ இஷ்யூஸ்…… என்றாள் தன்ஷிகா.

நீ வேணும்னா போயிக்கோ டி….. ஆட்டோவில் நான் போயிக்கிறேன்….. என்றாள் புவனேஷ்வரி.

உனக்கு ஓகே வா தனியா போக….. ஆல்மோஸ்ட் ஒன் ஹவர் ஆகும் நீ வீட்டுக்கு போக….. அதுவரைக்கும் சமாளிச்சிப்பியா?….. என்றான் யோகேஷ் தன்ஷிகாவை விட்டு போக மனமில்லாமல்.

ஓகே…. எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல….. இப்போ கொஞ்சம் பரவாயில்லை…. என்று சொல்லி மறுபடியும் வாந்தி எடுத்தாள்.

இல்ல யோகேஷ்….. அவளை தனியா நான் அனுப்ப மாட்டேன். ஒருவேளை எனக்கு இப்படி நடந்து இருந்தா புவி என்னை விட்டு விட்டு உன் கூட பார்ட்டிக்கு வந்திருப்பாளா….. நெக்ஸ்ட் பர்த் டே கண்டிப்பா எல்லாரும் ஒண்ணா செலபிரேட் பண்ணலாம்.

பை…. என்று சொல்லி விட்டு தன்ஷிகாவும் புவனேஷ்வரியும் ஆட்டோவில் ஏறிச் சென்றனர்.

மன வருத்தத்துடன் அந்த ஆட்டோவை பார்த்து கொண்டு இருந்தான் யோகேஷ்.

அப்போது பின்னால் இன்னோவாவில் வந்த பிரஷாந்த் மற்றும் அவன் நண்பர்கள் யோகேஷ் ரோட்டில் நிற்பதை பார்த்தனர்.

ஏய்…. அங்கே பாரு பிரஷாந்த்….. யோகி நிற்கிறான்….. என்றாள் ஒருத்தி.

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு யோகேஷிடம் வந்தான் பிரஷாந்த்.

என்னாச்சு டா….. ஏன் இங்கே நிக்குற….‌ என்றான்.

மச்சி…. என்று ஆரம்பித்து அங்கு நடந்ததை சொன்னான்.

கடவுளுக்கே அந்த புவனேஷ்வரி வருவது பிடிக்கல…..அதை அனுப்பிட்டாரு….. என்று சொல்லி சிரித்தான் பிரஷாந்த்.

மச்சி….. அப்படி எல்லாம் சொல்லாத டா…..

ஏய்….. என்னடா…… அவ மேல லவ் ன்னு மட்டும் சொல்லிடாத…..

சீ….. சீ…… 

அப்பாடா…..

அவ மேல இல்ல…..

என்னடா இழுக்குற?

லவ் இருக்கு …. ஆனா புவி மேல இல்ல….

பின்ன யாரு மேல?

தன்ஷிகா….. என்றான் சற்றே வெட்கமாக.

நினைச்சேன் டா….. நீ புவனேஷ்வரியை கூப்பிட்டது கூட பக்கத்து இலைக்கு பாயாசம் வைக்கிற மாதிரியா….. என்று சொல்லி சிரித்தான் பிரஷாந்த்.

ஏய்….. இல்லடா….. நான் தன்ஷிகாவை மட்டும் தான் கூப்பிட்டேன்….. அவ தான் புவனேஷ்வரி வந்தா தான் நான் வருவேன் ன்னு சொல்லிட்டா……

எனிவேஸ்….. அந்த பொண்ணு புவனேஷ்வரி இல்லல….. அதே போதும்….. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் தன்ஷிகா நல்ல பொண்ணு தான்….. ஆல் தி பெஸ்ட் மச்சி…..

தேங்க்ஸ் மச்சி…..

சொல்லிட்டியா டா தன்ஷிகா கிட்ட…..

இப்போ தான் டா…..

அவளுக்கும் ஓகே வா?……

யெஸ்…..

சூப்பர் சூப்பர்….. அப்புறம் என்ன ஃபீலிங்ஸ்?

பர்த் டே பார்ட்டில அவ இல்லையே ன்னு தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு….

விடு….. இப்போ தமிழ் நட்சத்திர பர்த் டேவுக்கு கோவிலுக்கு போவ இல்ல….. அன்னைக்கு வேணும்னா அவளுக்கு தனியா டிரீட் கோடுத்திடு…..

செம ஐடியா டா மச்சி….. தேங்க்ஸ்….. இதுக்கு தான் உன்னை மாதிரி ஒரு பெஸ்ட் பிரண்ட் இருக்கனும் என்றது….. என்றான் யோகேஷ்.

ஓகே ஓகே…. டைம் ஆகுது கிளம்பு….. 

சரி கார் காலியா தான் இருக்கு….. யாரையாவது ரெண்டு பேரை அனுப்பு….. என்றான் யோகேஷ்.

பொண்ணுங்க எதுவும் வராதுங்க….. எல்லாரும் ஒரே வண்டில தான் வருவோம் ன்னு ஆல்ரெடி சொல்லிடிச்சுங்க….. 

பசங்க?

கேட்கிறேன்….. என்று சொல்லி இருவரை யோகேஷின் காரில் ஏற்றி விட்டு அனைவரும் சென்றனர்.

*****************

ஆட்டோவில் செல்லும் போது……

என்ன புவி….. இப்போ பரவாயில்லையா?….. என்றாள் தன்ஷிகா 

ஹூம்….. ஓகே…..

டாக்டர் கிட்ட போகலாமா?

வேண்டாம்…. வீட்டிற்கு போய் அம்மா கையால கசாயம் வச்சு குடிச்சா சரி ஆகிடும்…..

ஓகே டி….. என்று சொல்லி விட்டு தன் ஃபோனை எடுத்து பார்த்தாள் தன்ஷிகா.

யோகேஷ் அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட செல்ஃபியை அனுப்பி இருந்தான்.

அதை பார்த்து சிரித்தாள் தன்ஷிகா….

என்னடி, சிரிக்கிற?

ஒண்ணும் இல்ல டி….. நீ தூங்கு….. என்று சொல்லி புவியை தன் மடியில் படுக்க வைத்து கொண்டாள் தன்ஷிகா.

என்ன யோகி…. ஃபோட்டோ அனுப்பி இருக்கானா?.

புவி????

எனக்கு ஒண்ணும் தெரியாது ன்னு நினைச்சியா…..

நான் உடம்பு சரியில்லாம பின் சீட்ல படுத்து கொண்டு இருக்கேன்….. அப்போ உங்க ரெண்டு பேருக்கும் ரொமேன்ஸ் கேட்குதா…..

இல்ல புவி…. யோகேஷ் பிரபோஸ் பண்ணான்….. நான் ஓகே சொன்னேன்….. மத்தபடி நாங்க ஒண்ணும் பண்ணல டி…..

போய் சொல்லாத ரெண்டு பேரும் கட்டிப் பிடித்து கொண்டதை நான் பார்க்கல ன்னு நினைச்சியா?

புவி…..

ஜஸ்ட் ஹக் தான்……

கையில் முத்தம் கொடுத்தானே ….. அது…..

அது வந்து….

சொல்லேன்….. அதுவும் கிஸ் மட்டும் தான் ன்னு…..

புவி…. பிளீஸ்…. டிரைவர் தப்பா நினைக்க போறாரு….. ஏன் இப்படி எல்லாம் பேசுற?

நான் மட்டும் இல்லைன்னா….. நீங்க ரெண்டு பேரும் காரிலேயே மேட்டர் கூட பண்ணிருப்பீங்க…. அதுக்கும் ஜஸ்ட் செக்ஸ் ன்னு சொல்லுவ…. இல்ல…..

ஷட் அப் புவி…… என்றாள் தன்ஷிகா சற்றே கோபமாக.

நான் யோகேஷை லவ் பண்றேன் ன்னு உனக்கு நல்லாவே தெரியும் இல்ல தன்ஷி….. அப்புறம் ஏன் இப்படி பண்ண…..

புவி….. அவன் உன்னை லவ் பண்ணலைன்னா நான் என்ன பண்றது டி…..

ஓகே…. ஒத்துக்கிறேன்…. அவன் லவ் பண்ணலைன்னா நீ ஒண்ணும் பண்ண முடியாது தான்…. ஆனா நீ அவனை லவ் பண்ணாம இருந்திருக்கலாம் இல்ல….. என்றாள் புவனேஷ்வரி.

புவி….. உனக்கு முன்னாடில இருந்தே எனக்கு யோகேஷை தெரியும்….. நான் சின்ன வயசுல இருந்தே அவனை லவ் பண்றேன்….. என்றாள் தன்ஷிகா.

############

தொடரும் …..

அ. வைஷ்ணவி விஜயராகவன் .

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.