வசம் 8,9

Vaishnavi Vijayaraghavan | 05 May 2026 | Share

என் வசம் நானில்லை என் உயிரே……..

வசம் -8


ரெக்கார்டிங் மெஸேஜ் கேட்டியா?….. என்றாள் நிஷா.


ஹூம்…. தேங்க்ஸ் டி….. என்றாள் யாமினி மறுபடியும்.


இட்ஸ் ஓகே….. நீயும் என் ஃபிரெண்டு தான யாமினி…. உனக்காக இது கூட செய்ய மாட்டேனா?


ஸ்மைல் செய்தாள்.


இன்னைக்கு கண்டிப்பா வருவான். அவனுக்கு இந்த ரெக்கார்டிங்கை போட்டு காட்டி இதுக்கு மேல உன் விஷயத்தில தலை இட்டா போலீஸ் கிட்ட போயிடுவேன் ன்னு தைரியமா சொல்லு…… அப்புறம் உன் பக்கம் வரவே மாட்டான்.


ஹூம்….. தேங்க்ஸ்…..எனக்கு தைரியம் கொடுத்ததிற்கு.


சரி….. போ….. நான் வரேன் என்றாள்.


யாமினி உள்ளே சென்றதும்…..

என்னடி நடக்குது இங்கே….. என்றாள் சுமதி.


முந்தைய நாள் நடந்த முழுவதையும் சொன்னாள் நிஷா.


அடிப்பாவி….. ஒரு நைட்ல இவ்வளோ விஷயமா?


சரி எங்கே உன்னோட தினேஷ்?


ஏய்….. தப்பா பேசாத….. அவருக்கு நான் தெரியாம ஒரு ஹெல்ப் பண்ணேன். அவர் எனக்கு தெரிஞ்சே ஒரு ஹெல்ப் பண்ணாரு…… அதான் காஃபில எங்க ஃபிரெண்டுஷிப்பை தொடங்க போறோம்……


நாங்க எல்லாம் எத்தனை பேரை பார்த்து இருக்கோம்….. முதல்ல ஃபிரெண்டு ன்னு சொல்லிட்டு அப்புறம் லவ் வந்துடிச்சு ன்னு சொல்லுவாங்க……


ஏய்…. அப்படி எல்லாம் இல்லை….. வாயை மூடு….. அவர் வந்திட போறாரு….. அவர் காதுல கேட்டா தப்பா நினைக்க போறாரு….. என்றாள் நிஷா.


சரி….. நான் இன்னைக்கு உன் கூட பக்கத்தில நிற்கவா….. இல்ல உள்ளே போகவா?


நீ உள்ள போ….. நானே பேசிக்கிறேன்.


அடிப்பாவி….. யாருன்னே தெரியாத ஒருத்தர்….. உங்க ஃபிரெண்டும் கூட வரலாம் காஃபி குடிக்க ன்னு சொன்னாரு…‌‌ ஆனா நீ….. என்றாள்.


சிரித்துக்கொண்டே….. நீ போடி உள்ளே….. நான் வரேன்….. என்றாள் நிஷா.


மணி 9.55….. அவன் வரவில்லை. சற்றே வருத்தத்துடன் சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றாள் நிஷா.


என்னாச்சு டி….. உன் ஆளு வரலையா?


ஏய்….. என்னை வெறுப்பேத்தாத டி….. என்றாள் நிஷா.


சாரி….. என்று சொல்லி சிரித்தாள் சுமதி.


சிரிக்காத டி….. என்றார் நிஷா.


ஓகே ஓகே…. என்று சொல்லி விட்டு தன் வேலையை பார்க்க தொடங்கினார்கள் இருவரும்.


அன்றைய வேலைகளில் தினேஷை பற்றி நினைக்க கூட அவளுக்கு நேரமில்லை. மதியம் சாப்பாடு கூட நின்று கொண்டே அவசரமாக சாப்பிட்டு விட்டு வந்தாள். 


இரவு மணி 9.45.


அந்த ஆள் வந்தான்.

நிஷாவை முறைத்தான். அவள் ஏளனமாகப் அவனை பார்த்தாள். ஆத்திரம் வந்தது அவளுக்கு. பிறகு நேராக உள்ளே சென்றான். அங்கே யாமினியை பார்த்தான்.


ஏய்….. அவ எத்தனை நாளைக்கு உனக்கு பாடி கார்டா வருவா ன்னு நினைக்கிற…..


சிரித்தாள் யாமினி.


ஏய்….. என்ன திமிரா….. நீயும் சிரிக்கிற?


தன் ஃபோனில் அவன் முந்தைய நாள் பேசிய ரெக்கார்டிங்கை போட்டு காட்டினாள்.


முதலில் பயந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்…..


ஏய்….‌என்ன மிரட்டுறீயா?


இல்ல….. நீங்க அப்படி நினைச்சிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பல்ல….. ஆனா நீங்க மறுபடியும் என்னை தொல்லை பண்ணினா நான் போலீஸ் கிட்ட போகவும் தயங்க மாட்டேன்.


ஏய்….. இது என் குரலே இல்லன்னு சொல்லிட்டு போயிடுவேன்……


யார் கிட்ட?


போலீஸ் கிட்ட……


அப்படியா….. அப்படின்னா உங்க ஒயிஃப் கிட்ட போட்டு காட்டுறேன்….. அவங்க இது உங்க குரல் இல்லன்னு சொல்றாங்களா பார்க்கலாம்….. என்றாள் யாமினி.


கோபம் கொண்டவன்…… வேகமாக நடந்து சென்றான்….. அங்கே இருந்த இரண்டு பொருட்களை எடுத்து கொண்டு நிஷா பில்லிங் கவுண்டருக்கு சென்றான்.


சுமதி அவரிடம்…..


சார்….. இங்கே வாங்க….. இங்கு பில்லிங் முடிஞ்சிடிச்சு….. என்றாள்.


இல்ல பரவாயில்லை….. நான் இங்கேயே நிற்கிறேன்….. என்றான்.


சார்…… அவங்க பிராடக்ட்ஸ் நிறைய இருக்கு….. இன்னும் டென் மினிட்ஸ் ஆகும் பில்லிங் முடிக்க……


இட்ஸ் ஓகே…… நோ இஷ்யூஸ்….. என்றான் சற்றே கோபமாக.


அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள் சுமதி.


நிஷா பில்லிங் செய்து கொண்டு இருந்தாள்.


அவளை முறைத்துக் கொண்டே நின்று கொண்டு இருந்தான் அவன்.


அந்த கஸ்டமருக்கு பில்லிங் முடிந்தது. பின்னர் அவள் அருகில் சென்று நின்றான். அவன் கையில் வைத்துக் கொண்டு இருந்த இரண்டு பொருட்களை அவளிடம் கொடுத்தான்.


அவள் பில் செய்தாள். 


ஒரு நிமிஷம்….. என்று சொல்லி விட்டு ஏதோ ஒரு பொருளை கொண்டு வந்தான். 

இந்தா….. என்று சொல்லி அந்த கான்டம் பேக்கட்டை நீட்டினான்.


அதை வாங்கி சலனமில்லாமல் பில் செய்தாள் நிஷா.


பில்லை அவனிடம் நீட்டினாள் நிஷா.


அவளிடம் மிக மெதுவாக…..


ஏய்….. அந்த யாமினியை கூட நான் மன்னிச்சிடுவேன்….. ஆனா உன்னை மன்னிக்கவே மாட்டேன்….. இந்த பொருள் நமக்கு தான்….. உன்னை அனுஅனுவா ரசிச்சு அனுப்பவிக்க போறேன்….. என்று அவள் காதில் மட்டும் கேட்கும் படி சொன்னான்.


சீ…..போடா பொறுக்கி நாயே….. என்று ஸ்மைல் செய்து கொண்டே மெதுவாக சொன்னாள் நிஷா.


கோபமாக அங்கிருந்து சென்றான் அவன்.


என்னடி….. என்றாள் சுமதி ஜாடையில்.


கண்களை சிமிட்டி…. ஒன்றுமில்லை என்றாள் நிஷா.


யாமினியிடம் நிஷா கேட்டாள்.


சைக்கிள் வேணுமா யாமினி?


இல்ல நிஷா…. வேண்டாம்….. வேலு என் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் ரூம்ல தான் தங்கி இருக்கான். அவனை தினமும் என்னோட துணைக்கு வரச் சொல்லி இருக்கேன்.


ஓ…. ஓகே….. டேக் கேர்….. பை…..


பை நிஷா….. தேங்க்ஸ்…..


எத்தனை முறை சொல்லுவ….. போதும்……பை…..


பை நிஷா….. என்றாள் யாமினி.


அவள் சென்றதும்.


என்ன நிஷா மேடம்….. இன்னைக்காவது என் கூட வருவீங்களா?….. இல்ல வேற யார் கூடவாவது போகப் போறீங்களா?


ஏய்….. ரொம்ப பண்ணாத…. வா….. உன் கூட போகத்தான் பின்னாடியே வழி இருந்தாலும் என் வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் சுத்தி போறேன்….. என்றாள் நிஷா.


சிரித்தாள் சுமதி…..


நீ என் நண்பி டி….. என்றாள் அவள் தோளை பிடித்து கொண்டு.


போதும் போதும் வா…. டைம் ஆகுது போகலாம்….. என்று சொல்லி விட்டு வெளியே வந்து சைக்கிளை எடுத்தாள். அப்போது அவளுக்கு தினேஷின் ஞாபகம் வந்தது. எதுக்கு வரேன் ன்னு சொல்லிட்டு வராமல் இருக்கனும்…… என்று நினைத்து கொண்டாள்.


என்னடி பதிலே சொல்ல மாட்டேங்குற?….. என்றாள் சுமதி.


சாரி சுமதி….. என் கிட்ட எதாவது கேட்டியா?


சரிதான்….. நான் பேசினதே உன் காதில கேட்கலீயா?….. அப்படி என்ன யோசிச்சு கிட்டு வர?


அது ஒண்ணும் இல்லை….. காலைல வரேன்னு சொல்லிட்டு வரலையே….. அதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கு.


நீ தான் லவ் இல்ல ஜஸ்ட் ஃபிரெண்ட்ஸ்ஷிப் தான் ன்னு சொன்ன…..


இப்பவும் அப்படி தான் சொல்றேன்…… ஃபிரெண்ட்ஸ் மீட் பண்ண முடியலைன்னா ஃபீல் பண்ண மாட்டாங்களா?


கண்டிப்பா மாட்டாங்க…..


என்னடி சொல்றே?


ஆமாம்….. ஃபிரெண்டா இருந்தா அவங்க நிலைமையை புரிஞ்சிப்பாங்க….. வராததிற்கு கண்டிப்பா முக்கியமான ஒரு காரணம் இருக்கும் ன்னு நினைப்பாங்க. ஆனா காதலியோ மனைவியோ அப்படி நினைக்க மாட்டாங்க. அவங்களுக்கு தான் முன் உரிமை கொடுக்கனும் ன்னு நினைப்பாங்க. அதனால கோபப் படுவாங்க….. இப்போ சொல்லு நீ யாரு?


என்னடி உளருற?


சொல்லு….. உனக்கு கோபம் வருதா….. இல்ல அவரோட நிலைமையை புரிஞ்சிக்க முடியுதா…..


அது வந்து அது….. என்று இழுத்தாள் நிஷா.


புரிஞ்சிடிச்சு….. நீ அவரை லவ் தான் பண்ற…..


இல்லடி….. வேண்டாம்….. அப்படி நான் நினைக்கக்கூட கூடாதுன்னு நினைக்கிறேன்……


என்னடி சொல்றே…..


ஆமாம் டி……. அவரோட ஸ்டேட்டஸ் வேற….. என் ஸ்டேட்டஸ் வேற….. தகுதிக்கு மீறி ஆசைப் படுவது தப்பு……


தப்பு சரி பார்த்து வருவது இல்ல டி லவ்……


வேண்டாம் சுமதி….. இதோட இந்த டாப்பிக்கை விட்டிடலாம்.


ஓகே டி….. என் வீடு வந்திடிச்சு….. நீ பார்த்து ஜாக்கிரதையா போ……


நாம தான் நடந்து உன் வீட்டுக்கு வந்தோம்….. வீடு வரல….. என்று சொல்லி சிரித்தாள் நிஷா.


அய்யே காமெடியா?….. சத்தியமா சிரிப்பே வரல….


வாயை திருப்பி ஒழுங்கு காட்டினாள் நிஷா.


போடி…. என்றாள் சுமதி.


பை….. என்று கோபமாக சொல்லிவிட்டு தன் சைக்கிளில் ஏறி அமர்ந்து மிதித்தாள்.


சற்று தூரம் சென்று பிறகு….. யாரோ அவளை பின் தொடர்வது போல இருந்தது. திரும்பி பார்த்தாள்….. யாரும் இல்லை….. கொஞ்சம் பதட்டமாக இருந்தது. சைக்கிளை வேகமாக மிதித்தாள்….. பின்னால் வந்த சப்தம் மிக அதிகமாக கேட்டது.


வேகமாக சைக்கிளை ஓட்டியவள்…… அங்கிருந்த கல்லை பார்க்காமல் அதன் மேல் சைக்கிளை ஏற்றினாள். நிலைத் தடுமாறி கீழே விழுந்தாள். அந்த சப்தம் அவள் அருகில் கேட்டது. தலையில் லேசாக அடிப்பட்டதால் மயங்கினாள் நிஷா.


##############


தொடரும்……

அ. வைஷ்ணவி விஜயராகவன்.



என் வசம் நானில்லை என் உயிரே…….


வசம் -9


நிஷா சாலையின் ஓரத்தில் விழுந்திருந்ததால் ரோட்டில் வேகமாக செல்லும் யாருக்கும் அவளை தெரியவில்லை. அந்த உருவம் அவளருகில் வந்தது.

அவளுடைய முகத்தை உற்று பார்த்த அந்த உருவம் வேறு யாரும் இல்லை சூப்பர் மார்க்கெட்டில் பிரச்சனை செய்த ரகுநாத் தான் அந்த ஆள் . 


ஏய்….. ஓவரா பேசினியே டி….. இப்போ பேசு….. கடவுள் கூட என் பக்கம் தான் டி….. பாரு….. நீ சத்தம் போடாம என் கூட வர அவரே வழி பண்ணிட்டாரு….. உன் கிட்ட சொன்னது போல உன்னை ரசிச்சு ரசிச்சு அனுப்பவிக்க போறேன்…… நீயே பில்லிங் பண்ணிக் கொடுத்த பொருள் பத்திரமா இருக்கு….. இங்கேயே எனக்கு ஓகே தான்….. ஆனா நான் யாராவது பப்ளிக் கிட்ட மாட்டிக்குவேனே…… எப்படி டி கரெக்டா இந்த புதர்ல வந்து விழுந்த?….. அன்னைக்கு ஒருத்தன் வந்தானே உன்னை காப்பாத்த….. இன்னைக்கு யாரு உன்னை காப்பாத்த வராங்க ன்னு பார்க்கலாம்…… இரு உன் சைக்கிளை அந்த மரத்திற்கு பின்னாடி போட்டுவிட்டு வந்திடறேன்….. என்று சொல்லி அவளுடைய முகத்தை தன் கையால் வருடி தன் கைகளுக்கே முத்தம் கொடுத்தான் ரகுநாத். 


அவன் சைக்கிளை ஓரமாக போட்டுவிட்டு திரும்பும் போது போலீஸ் பேட்ரோல் வண்டி வந்தது.

அதை பார்த்ததும் பயந்த பிரமோத் அந்த மரத்தின் பின்னாலேயே மறைந்து நின்று கொண்டான்.


நிஷா புதரின் மறைவில் இருந்ததால் அவர்களுக்கும் தெரியவில்லை. ஆனால் மெதுவாக சென்றது. அவளை தாண்டி சென்றதும். சந்தோஷமாக மெதுவாக வெளியே வந்தான் பிரமோத்.


வண்டி சென்றுவிட்டது என்று நினைத்து அவளருகில் வந்து அவளை இன்னும் புதர் அடர்த்தியில் இழுத்து தன் மடிமேல் வைத்து அவள் இதழருகில் சென்றான். அப்போது கண்களை பறிக்கும் அளவிற்கு வெளிச்சம் மேலே வந்தது. பயந்த அவன் அவளை கீழே தள்ளி விட்டு எழுந்து ஓடினான். 


கான்ஸ்டெபிள் அவனை பிடிங்க என்று சொன்னார் எஸ்.ஐ. 


கார் கண்ணாடி வழியாக ஏதோ உருவம் நகருவதை பார்த்த போலீஸூகார்கள் மெதுவாக ஜீப்பை திருப்பிக்கொண்டு லைட் ஆன் செய்யாமல் பத்து அடி அருகில் வந்து பின்னர் லைட்டை ஆன் செய்தனர். இருப்பினும் அவன் சுதாரித்து கொண்டு ஓடினான்.


வெகுதூரம் துரத்தியும் அவனை பிடிக்க முடியவில்லை என்று சொல்லி திரும்பி வந்தார் அந்த கான்ஸ்டபிள்.


தண்ணீர் தெளித்தும் கூட அவள் எழுந்தரிக்கவில்லை.


பின்னர் அவருடைய ஹேண்ட் பேகில் இருந்த நம்பருக்கு கால் செய்தார் எஸ்.ஐ.


ஹலோ….. உங்க பொண்ணு பேரு நிஷாந்தியா?


ஆமாம் சார்…. என்னாச்சு….. நீங்க யாரு…

என்றார் சாந்தி.


அவங்க ரோட்டுல விழுந்திருக்காங்க….. ஆக்ஸிடென்ட் மாதிரி தெரியல….. மயக்கமா தான் இருக்காங்க….


அச்சச்சோ….. உஷா….. இந்தா யாரோ பேசறாங்க….. எனக்கு பயமா இருக்கு……


அம்மா….. இருங்க பதறாதீங்க….. என்று சொல்லி ஃபோனை வாங்கி பேசினாள் உஷா.


சார்….. நான் அவ அக்கா தான்….. இதோ இப்போ வரேன்….. எந்த ரோடு?


………


ஓகே சார்….. இதோ வரேன் என்றவள்.

அம்மா….. நீ ஷாலினியை பார்த்துக்கோ…… நானும் மேத்யூவும் போய் பார்த்து அவளை கூட்டிக்கொண்டு வரோம். நீ பயப்படாத……


ஏய்….. நானும் வரேன் டி……


அம்மா….. சொல்றதை கேளு….. பாப்பா வேற தூங்குறா…… நீ பாத்துக்கோ….. நாங்க போயிட்டு வரோம்….. என்று சொல்லி விட்டு அம்மாவின் பதிலுக்கு காத்திராமல் தன் ஃபோனில் மேத்யூவகற்கு கால் செய்தாள் உஷா.


மேத்யூ….. என்று அவனிடம் விஷயத்தை சொல்லி வரச்சொன்னான். அடுத்த பத்தாவது நிமிடத்தில் இருவரும் ஒரு ஆட்டோவில் அங்கே இருந்தனர்.


நிஷா….. நிஷா….. என்று உளுக்கினாள் உஷா.


மயக்கம் தெளிவில்லை. 

சரி வாங்க ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கிட்டு போகலாம் என்று சொல்லி அவர்கள் வந்த ஆட்டோவில் அவளையும் உஷாவையும் ஏற்றி அனுப்பிவிட்டு….. போலீஸ் சொன்னதால் அவர்களுடன் ஜீப்பில் சென்றான் மேத்யூ.


மேத்யூவிடம் எஸ்.ஐ.


நீங்க யாரு அந்த பொண்ணுக்கு?


அவ அக்கா உஷாவோட ஹஸ்பண்ட்.


நீங்க என்ன பண்றீங்க?


கம்பியூட்டர் சென்டர் வச்சிருக்கேன் சார்.


அந்த பொண்ணுக்கு யாராவது எதிரிங்க இருக்காங்களா?


அப்படி யாரும் இல்லை சார்….. எல்லார் கிட்டேயும் ரொம்ப அன்பா பேசி பழகுவா….. ஏன் கேட்கறீங்க சார்.


நாங்க பார்க்கும் போது ஒருத்தன் இந்த பொண்ணு பக்கத்தில இருந்து ஓடினான்.


என்ன சார் சொல்றீங்க?


பயப்படாதீங்க மேத்யூ….. தப்பா எதுவும் நடந்த மாதிரி தெரியல….. நீங்க வேணும்னா இப்போ டாக்டர் கிட்ட செக் பண்ணிக்கோங்க….. நாங்க கேஸ் எழுதனும்.


சார்…. பிளீஸ் சார்….. கேஸ் எல்லாம் வேண்டாம் சார்….. சின்ன பொண்ணு சார்….. பிளீஸ்……


டாக்டர் சொல்றதை வச்சு தான் கேஸ் ஃபைல் பண்ணுவோம் சார்….. பப்ளிக் பிலேஸ்ல நடந்திருக்கு சார்….. நாங்க அப்படியே விட முடியாது.


சார்…. பிளீஸ்…..


மேத்யூ….. ரேப்பா இருந்தா தான்….. ஓகே வா…… கூல்….. எங்களுக்கும் ஃபேமிலி இருக்கு….. இது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் ன்னு தெரியும்.


அங்கே இருந்த பெரிய மருத்துவமனைக்கு சென்றான் ஆட்டோ காரன்.


என்ன அண்ணா….. இங்கே வந்திருக்கீங்க?…… இங்கு பே பண்ற அளவுக்கு எங்க கிட்ட ஏதுனா பணம்?


கவர்மென்ட் ஆஸ்பத்திரி ரொம்ப தூரம் மா….. இது 24 மணி நேர ஆஸ்பத்திரி….. இங்கே நல்லா பார்ப்பாங்க….. தேவையில்லாம பணம் வாங்க மாட்டாங்க…… என்றான்.


சரிங்க அண்ணா….. தேங்க்ஸ்….. என்று சொல்லி விட்டு அங்கே சேர்த்துவிட்டு மேத்யூவிற்கு கால் செய்தாள் உஷா.


உஷா….. இன்னும் பத்து நிமிஷத்துல வந்திடுவோம்…… கவர்மெண்ட் ஆஸ்பத்திரி சந்து திரும்ப போறோம்…… என்றான் மேத்யூ.


மேத்யூ….. ஆட்டோ அண்ணா விஜே ஆஸ்பத்திரியில் இறக்கிவிட்டுட்டாரு.


என்னது அந்த ஆஸ்பத்திரியிலா……


ஆமாம் டா….. நான் எவ்வளவோ சொன்னேன்…… அவர் கேட்கல….. ஃபிஸ் அதிகம் கிடையாது ன்னு சொல்லி எமர்ஜென்சில அட்மிட் பண்ணிட்டேன்.


சரி வை….. என்று அவளை திட்டிவிட்டு.


சார்…… விஜே ஆஸ்பத்திரியில் சேர்த்திட்டாங்க சார்.


என்ன மேத்யூ….. விளையாடறாங்களா உங்க மிஸ்ஸஸ்….. கவர்மெண்ட் ஆஸ்பத்திரில தான சேர்க்கனும்…….


சார்….. சாரி சார்….. அவளுக்கு தெரியாது…..‌


கான்ஸ்டெபிள் வண்டியை திருப்புங்க….. என்றார்

எஸ். ஐ.


பத்து நிமிடத்திற்கு பிறகு ஆஸ்பத்திரியின் வாசலில்.


வெளியே நின்று கொண்டு இருந்த உஷாவிடம்…..


என்னம்மா நீ….. உன் இஷ்டத்துக்கு ஆஸ்பத்திரியில் சேர்ப்பியா…..


இல்ல சார் அவ கண்ணு முழிக்கலையே….. அதான் பயந்து….. முதல்ல வர ஹாஸ்பிடலுக்கு போகலாம் ன்னு நினைச்சு வந்திட்டோம்…..சாரி சார்….. எனக்கு தெரியாது….. கவர்மெண்ட் ஆஸ்பத்திரில தான் பார்க்கனும்னு…… இதுல பார்த்து கொஞ்சம் சரியா ஆயிட்டா அப்பறம் நீங்க சொன்ன கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு போயிடலாம்.


மிச்….. கான்ஸ்டெபிள்….. நீங்க இங்கேயே இருந்து டாக்டர் கிட்ட, அந்த பொண்ணு கிட்ட அப்புறம் இவங்க ரெண்டு கிட்டேயும் ஸ்டேட்மெண்ட் வாங்கிட்டு வாங்க…

நான் பேட்ரோலுக்கு போறேன். அப்புறம் அவன்….. ஓடிப் போனானே அவன் எதாவது சிசிடிவில ரெக்கார்டு ஆகி இருக்கானா ன்னு செக் பண்ணி சொல்லுங்க….. என்று சொல்லி விட்டு சென்றார் எஸ்.ஐ.


எஸ். ஐ. வெளியே வரும்போது அங்கே வந்த ஒரு லேடி டாக்டரிடம்……


மேடம்….. இப்போ அட்மிட் ஆகி இருக்காங்களே…… 


எஸ் ஸார்….. நிஷாந்தி……


ஆம்….. அவங்க தான்…… அவங்களுக்கு கொஞ்சம் டெஸ்ட் எடுக்கனும்.


என்ன சார் சொல்றீங்க….. உங்களுக்கு எப்படி அவங்களுக்கு என்ன டெஸ்ட் எடுக்கனும் ன்னு தெரியும்?


மேடம்….. அவங்க ரோடுல மயங்கி விழுந்திருந்தாங்க….. அப்போது ஒருத்தன் அந்த பொண்ணு பக்கத்தில் இருந்து எழுந்து ஓடிப் போனான்.


நாங்க போய் பார்க்கும் போது இந்த பொண்ணு….. இப்போ எப்படி இருக்கோ அதே மாதிரி தான் இருந்தா….. அதனால ரேப் அட்டெம்ப்ட் நடந்துச்சா….. இல்ல வேற எங்கேயாவது ரேப் பண்ணிட்டு இங்க வந்து போட்டானா ன்னு தெரியனும்.


சார்….. நீங்க போலீஸ் தான….. போலீஸ் ரிப்போர்ட் இல்லாம எப்படி சார் நாங்க டெஸ்ட் எடுக்க முடியும்.


மேடம்….. அந்த பொண்ணை பார்த்து ரொம்ப ஏழ்மையான குடும்பம் மாதிரி தெரியுது….. அவங்களை எதுக்கு கேஸ் எல்லாம் போட்டு கஷ்டப் படுத்தனும்….. நீங்க கொஞ்சம் உங்களுக்கு தெரிஞ்சவங்களா நினைச்சு டெஸ்ட் பண்ணுங்களேன்….. 


ஒரு நிமிடம் யோசித்து விட்டு….. 

ஓகே சார்….. ஆனா அவங்க ஃபேமிலில இருந்து யாராவது கன்சன்ட் ஃபார்ம்ல சைன் பண்ணனும்….. இல்லன்னா நான் பண்ண மாட்டேன்….. நான் ரிஸ்க் எடுக்க மாட்டேன்.


ஓகே….. நான் அவங்க அக்காவை போடச் சொல்றேன்….. என்றார் எஸ்.ஐ.


##############


தொடரும்……

அ. வைஷ்ணவி விஜயராகவன். 


இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.