வசம் 6,7

Vaishnavi Vijayaraghavan | 05 May 2026 | Share

என் வசம் நானில்லை என் உயிரே……

வசம் -6


வீட்டிற்கு சென்ற பிறகும் அவளுடைய நினைவாகவே இருந்தது தினேஷிற்கு. பிறகு ஆஃபீஸ் கிளம்பி சென்றான்.


அன்று முழுவதும் அவன் மூட் அவுட்டாகவே இருந்தான்.


சூப்பர் மார்க்கெட்டில்……


நிஷா…… என்றாள் யாமினி பாவமாக.


டோன்ட் ஒரி யாமினி….. அந்த ஆள் கிட்ட நான் வந்து பேசறேன்.


தேங்க்ஸ் நிஷா…. தேங்க் யூ சோ மச்…… நேத்து ராத்திரி எல்லாம் இதை பத்தியே யோசிச்சுகிட்டே டென்ஷனா இருந்தேன்…… தூங்கவே இல்லை….. இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா ஆச்சு…..


ஸ்மைல் செய்தாள் நிஷா. ஆனால் உள்ளுக்குள் பயமாக இருந்தது.


அன்று நாள் முழுவதும் நிறைய வேலைகள் இருந்தது.


இரவு ஒன்பதே முக்கால் மணிக்கு அந்த ஆள் வந்தான்.

யாமினியை தேடினான். அவள் ஒளிந்து கொண்டாள்.


வேலுவிடம் அந்த ஆள்…..


தம்பி….. நேத்து ஒரு பொண்ணு இந்த செக்ஷனில் இருந்தாளே…… அவ இன்னைக்கு வரலையா?


யாரு யாமினி அக்காவா?


யாமினியா பேரு….. பெயரையே கிக்கா இருக்கு….. என்று மனதிற்குள் நினைத்து கொண்டே…..


ஆமாம் தம்பி…..


இருக்காங்க….. இருங்க வரச் சொல்றேன்….. என்று சொல்லி விட்டு பத்து அடி நடந்து சென்ற பிறகு தான்

நேத்து இந்த ஆளால தான யாமினி அக்கா அழுதாங்க….. என்ன பண்றது என்று யோசித்து கொண்டே நிஷாவிடம் போய் சொன்னான் வேலு.


சரிடா….. நான் பார்த்துக்கொள்கிறேன்….. நீ போ….. என்று சொல்லி விட்டு அந்த ஆளிடம் போய் நின்றாள் நிஷா.


சார்….. என்ன வேண்டும்?


இல்ல….. இங்க நேத்து ஒரு பொண்ணு இருந்தாங்க….. பேரு கூட யாமினி….. அவங்க கிட்ட நான் நேத்தே எனக்கு என்ன வேணும்னு சொல்லிட்டேன்…… அதான் அவங்க எங்கே?


அவளுக்கு இன்னைக்கு ஸ்டோர் கொடௌன் டியூட்டி….. உள்ளே பொருட்கள் அடுக்கி வச்சிக்கிட்டு இருக்கா……


ஓ….. அப்படியா…… சரி….. என்று சொல்லி விட்டு.

கடுப்பாகி மெதுவாக அங்கு இருந்த ஏதோ இரண்டு பொருட்களை எடுத்து கொண்டு பில் போட்டு விட்டு வெளியே சென்றான். ஆனால் அவள் எப்படியும் வெளியே வருவாள் என்று தெரிந்து காரிலேயே காத்துக் கொண்டு இருந்தான்.


டியூட்டி முடிந்தது. யாமினி கிளம்பினாள்.

ரொம்ப தேங்க்ஸ் நிஷா….. இன்னைக்கு காப்பாத்திட்ட….. நாளைக்கு என்ன பண்றது….. என்றாள் யாமினி பயந்தவாறே.


பார்த்துக்கொள்ளலாம் யாமினி….. பயப்படாத….. என்றாள் நிஷா.


ஓகே நிஷா…. பை…. தேங்க்ஸ் ஒன்ஸ் அகெயின்….. என்று சொல்லி விட்டு வெளியே வந்தவள் காரில் அந்த ஆள் காத்துக் கொண்டு இருப்பதை பார்த்து பயந்து….. பதட்டத்துடன் உள்ளே வந்தாள்.


நிஷாவிடம் வந்த யாமினி.


நிஷா….. அந்த ஆள் வெளியே வெயிட் பண்றான். எனக்கு ரொம்ப பயமா இருக்கு…… என்று சொல்லி கண்கள் கலங்கினாள்.


சுமதி ரெஸ்ட் ரூம் போயிருந்தாள்.

வேலு….. சுமதி வந்தா நான் இன்னைக்கு யாமினி வீட்டு வழியா போயிட்டேன் ன்னு சொல்லிடு…… என்று சொல்லி விட்டு…..


வா யாமினி….. என்று சொல்லி அவள் கையை பிடித்து கொண்டு வந்தாள்.


அவளுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு நடந்து சென்றனர். இதை பார்த்த அந்த ஆள்.

காரில் இருந்து இறங்கி வந்தான்.


அவர்களுக்கு முன்னால் போய் நின்றான்.


ஏய்….. இன்னைக்கு வர ன்னு சொன்ன இல்ல….. வா….. என்று சொல்லி அவள் கையை பிடித்து இழுத்தான்.


சார்….. சார்……… நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல சார் நான்…. பிளீஸ் என்னை விட்டிடுங்க….. என்றாள் யாமினி.


சார்….. அவளை விடுங்க…..


ஏய்….. நீ யாரு இதுல தலையிட?….. உனக்கு ஒண்ணும் தெரியாது……


எனக்கு தெரியும். யாமினி சாதாரணமா சிரிச்சு பேசினதை நீங்க அவளுக்கே தெரியாம ரெக்கார்டு பண்ணி….. அவளை மிரட்டுறீங்க……. அந்த மாதிரி ஒருத்தருக்கு தெரியாம வீடியோ எடுத்ததுக்கு உங்க மேலேயே கேஸ் போட முடியும் தெரியுமா?…… 


என்ன மிரட்டுரீயா?….. என்னவோ பண்ணிக்கோ….. ஆமாம்…… நான் அவளை அடைய நினைக்கிறேன்…… அதுக்காக நான் என்ன வேண்டுமானாலும் பண்ணுவேன்….. அவளை மிரட்டி 


இல்ல சார்….. அவ தான் அப்படி பட்ட பொண்ணு இல்ல ன்னு சொல்றா இல்ல….. எதுக்கு அவளை தொந்தரவு பண்றீங்க…..


அப்போ நீ அப்படி பட்ட பொண்ணா?….. நீ வரீயா?…… யாரு வந்தாலும் எனக்கு ஓகே…..


சீ….. இடியட்….. வா யாமினி போகலாம்….. என்றாள்.


ஏய்….. நில்லுடி….. என்று சொல்லி அவள் கையை பிடித்து இழுத்தான்.


இருவரும் சேர்ந்து அவனை கீழே தள்ளிவிட்டு….. ஓடினார்கள்.


அவனும் பின்னால் ஓடி வந்தான்.


யாமினி….. இந்தா என் சைக்கிள்….. இதை எடுத்துக்கிட்டு உங்க வீட்டுக்கு போ…… நாளைக்கு நான் வாங்கிக்கிறேன். நான் இந்த அப்பார்ட்மெண்ட் பின் பக்கமா ஒரு ஷார்ட் கட் இருக்கு….. அந்த பக்கமா எங்க வீட்டுக்கு போயிடுவேன்….. நீ போ….. என்று சொல்லி அவளிடம் சைக்கிளை கொடுத்தாள்.

இருவரும் இரண்டு பக்கமாக சென்றார்கள்.


யாமினி வேகமாக சைக்கிளை மிதித்துக் கொண்டு சென்றாள். ஆகவே அவள் பின்னால் ஓட முடியாமல் நிஷாவின் பின்னால் ஓடினான். அவள் அப்பார்ட்மெண்ட் பின் பக்கமாக சென்றாள். இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டதால் ஆள் நடமாட்டம் இல்லை.


மெதுவாக ஒரு சுவற்றின் பின்னால் ஒளிந்து கொண்டு இருந்தாள் நிஷா.


அப்போது அவளுடைய அம்மாவிடம் இருந்து ஃபோன் வந்தது.


சத்தம் கேட்டு அந்த பக்கமாக வந்தான் அந்த ஆள். பயந்து எழுந்து ஓடினாள்….. 


அப்போது அங்கே ஜாகிங் செய்து கொண்டு இருந்த நம் ஹீரோ தினேஷ் மேல் விழுந்தாள்.


காப்பாத்துங்க பிளீஸ்….. என்று கெஞ்சினாள். அப்படியே மயக்கம் போட்டு விழுந்தாள்.


ஏய்….. எழுந்திரு….. ஹலோ……


அங்கே வந்த அந்த ஆள்…..


தம்பி….. அவ என் அக்கா பொண்ணு தான்….. மயக்கம் போட்டுட்டாளா?….. இந்த பொண்ணுக்கு இதே வேலையா போச்சு….. டெய்லி நான் கூட்டிக்கிட்டு போக வரும்போது…..

மாமா….. என்னை பிடிங்கன்னு ஓடுவா…. சின்ன வயசுல விளையாடின மாதிரியே….. இப்பவும் விளையாட முடியுமா?. இந்த வயசுல என்னால ஓட முடியல….. நான் வருவதற்குள் ஓடி வந்து…அதோ அந்த மரத்தை தொடனும்னு ஓடி வந்து உங்க மேல இடிச்சதால விழுந்திட்டா….. திடீரென நீங்க வந்ததால் பயந்து மயங்கி விழுந்திட்டா……….


ஓ…. ஓகே….. இவங்க பேரு என்ன?


அது எதுக்கு கேட்கறீங்க?


சொல்லுங்க சார்…..


பேரு…. பேரு வந்து பரிமளா…..


பரிமளா வா…..


ஆமாம் சார்….. எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா?


என்ன?


கொஞ்சம் இவளை என்னோட கார் வரைக்கும் கைத்தாங்களா பிடிச்சுக்கிட்டு வரீங்களா?

ஒரு பக்கம் நான் பிடிச்சுக்கிறேன்.


மயக்கமா இருக்காங்களே….. இருங்க தண்ணீர் தெளித்து எழுப்பலாம். அப்புறம் அவங்களே வருவாங்க இல்ல…..


இல்ல சார் வேண்டாம்….. என்றான் சற்றே பதட்டமாக.


ஏன் சார்….. ஏன் பதட்டமா இருக்கீங்க?


இல்ல சார் அதெல்லாம் ஒண்ணும் இல்லை…… மறுபடியும் அந்த மரத்தை தொடனும்னு ஓடுவா….. அதான்.


அதை அவங்களே சொல்லட்டும்?


எதை?


நீங்க அவங்களோட மாமாவா இல்லையா ன்னு…..


நீங்க எனக்கு ஹெல்ப் பண்ண வேண்டாம்….. நானே பார்த்துக்கொள்கிறேன்….. என்று அவளை தொட்டு தூக்க முயன்றவனை தள்ளி விட்டான்.


ஏய்….. நான் யார் தெரியுமா?…..


இப்போ தெரிஞ்சிடும்….. என்று சொல்லி அவன் இடுப்பில் வைத்து இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த நீரை அவள் முகத்தில் தெளித்தான்.


கண்கள் விழித்தாள் நிஷா.


ஏய்….. வாடி….. என்றான் அந்த ஆள்.


மேடம்….. யாரு இது?…. என்றான் தினேஷ்.


எனக்கு தெரியாது….. என்றாள் நிஷா.


மிஸ்டர்….. மரியாதையா போயிடு….. என்றான் தினேஷ். 


நீ இதுல தலையிடாத….

 என்றான் அந்த ஆள்.


நிஷாவை வலுக்கட்டாயமாக இழுக்க பார்த்தவனின் முகத்தில் ஒரு குத்து விட்டான் தினேஷ்.


அவனும் தினேஷை இரண்டு அடி அடித்தான். தினேஷ் தன் முழு பலம் கொண்டு அவனை அடித்தான். அவன் கீழே விழுந்தான்.

சத்தம் கேட்டு இரண்டு செக்கியூரிட்டிகள் ஓடி வந்தனர்.


அவர்கள் வருவதை பார்த்த அவன் எழுந்து ஓடினான். செக்கியூரிட்டிகள் அவனை துரத்தி கொண்டு சென்றனர்.


உங்களுக்கு ஒண்ணும் இல்லல?….. என்றாள் நிஷா.


இல்ல…..


அச்சோ….. உங்க கன்னத்தில் ரத்தம் வருது.


இட்ஸ் ஓகே….. நோ இஷ்யூஸ்….. 

உங்களுக்கு ஒண்ணும் ஆகல இல்ல?…. என்றான் தினேஷ்.


இல்ல சார்….. தேங்க்ஸ்….. என்றாள் நிஷா.


உங்க வீடு எங்கே?….. என்றான் தினேஷ்.


இந்த அப்பார்ட்மெண்ட் பின் பக்கமா தான் இருக்கு….. என்றாள் நிஷா.


அப்போது அந்த இரண்டு செக்கியூரிட்டிகளும் வந்தனர்.


சார்….. அவன் ஓடிட்டான். 

காரை எடுத்துக் கொண்டு போயிட்டான்.


இட்ஸ்… ஓகே அண்ணா…. விடுங்க…..

தேங்க்ஸ் ….. என்றான் தினேஷ் .

############


தொடரும்….

அ. வைஷ்ணவி விஜயராகவன் .



என் வசம் நானில்லை என் உயிரே……


வசம் -7



ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸை எடுத்து வந்தார் இன்னொரு செக்கியூரிட்டி. ஒருவர் தினேஷின் கன்னத்தில் வழிந்த ரத்தத்தை துடைத்து பஞ்சு வைத்து பிலாஸ்த்திரி போட்டார்.


தேங்க்ஸ் அண்ணா…. என்று சொல்லி விட்டு தன் பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாய் நோட்டுகள் இரண்டினை இருவருக்கும் கொடுத்தான்.


வேண்டாம் சார்….. என்றனர்.


இல்ல அண்ணா வச்சிக்கோங்க….. ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸில் இருக்கிறதை எனக்கு போட்டுட்டீங்களே….. அதை திருப்பி வாங்கி வைக்க வச்சுக்கோங்க….. என்றான் தினேஷ்.


தேங்க்ஸ் சார்….. என்று சொல்லி விட்டு இருவரும் சென்று விட்டனர்.


இஃப் யூ டோண்ட் மைன்டு….. நான் வேணும்னா உங்க வீடு வரைக்கும் துணைக்கு வரவா….. என்றான் தினேஷ் நிஷாவிடம்.


இல்ல சார்….. வேண்டாம்….. உங்களுக்கே அடி பட்டிருக்கு….. நீ உங்க வீட்டுக்கு போங்க…..


இல்ல பரவாயில்லை….. அவன் மறுபடியும் வரப்போறான்…..


அவனை பற்றி சொல்லவே அவளுக்கும் பயமாக இருந்தது.


சரி சார்….. உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை ன்னா வாங்க….. என்றாள்.


கீழே விழந்து இருந்த தன் ஃபோனை எடுத்து கொண்டு அவனுடன் நடந்து சென்றாள் நிஷா.


இருவரும் அவளுடைய வீடு வரை எதுவும் பேசாமல் அமைதியாக நடந்து சென்றனர்.


அவள் வீட்டின் பத்து அடி முன்னால்.


தேங்க்ஸ் சார்…… என்றாள் மறுபடியும்.


எதுக்கு?


அவன் கிட்ட இருந்து என்னை காப்பாத்தியதுக்கு.


நான் மட்டும் உங்களை காப்பாத்தலையே….. அந்த இரண்டு செக்கியூரிட்டிகளும் கூடத்தான் உங்களை காப்பாத்தினாங்க…… அவங்களுக்கு நீங்க தேங்க்ஸ் சொல்லையே…..


அமைதியாக இருந்தாள் நிஷா.


நான் உங்களை குத்தி காட்டறேன் ன்னு நினைச்சுக்காதீங்க….. இது தான் எதார்த்தம். 

உங்களுக்கு காஃபி வாங்கி கொடுத்து தேங்க்ஸ் சொல்லனும் ன்னு மட்டும் தான் என்னோட நினைப்பு….. மத்தபடி எதுவுமில்லை……


சாரி சார்……


நீங்க உங்க பெயரை எனக்கு சொல்ல வேண்டாம்.

என் பெயர் தினேஷ்….. பெயர் சொல்லியே கூப்பிடுங்க.


என் பெயர் நிஷாந்தி….. என்று சொல்லி சிரித்துக் கொண்டே கையை நீட்டினாள்.


தினேஷூம் சிரித்துக் கொண்டே அவள் கையை குளிக்கினான்.


ஹாய் நிஷாந்தி…. நிஷா ன்னு கூப்பிடலாமா?


ஓகே….. என்பது போல தலை அசைத்தாள்.


ஓகே….. டேக் கேர்….. பை நிஷா…..


பை தினேஷ்….. குட் நைட்டு….. என்று சொல்லி சிரித்தாள் நிஷா.


ஸ்மைல் செய்தவன் குட் நைட்டு….. என்று சொல்லி விட்டு திரும்பி அவன் வீட்டுக்கு நடந்தான்.


நாளைக்கு காலைல ஒன்பது முப்பது மணிக்கு பார்க்கிங்கிற்கு வரேன்…… என்றாள்.


திரும்பி பார்த்தான் தினேஷ்.


காஃபி குடிக்க போகலாமா?….. நான் டிரீட் கொடுக்க போறேன்…… என்றாள் நிஷா.


சிரித்துக்கொண்டே ஓகே….. என்றான் தினேஷ்.


அவன் வீட்டிற்கு சென்ற பிறகும் அவளையே நினைத்து கொண்டே இருந்தான்.


அவள் அவனை இடித்தது. மயங்கி அவன் மேல் விழுந்தது. வீடு வரைக்கும் அவளுடன் நடந்து சென்றது….. என அனைத்தையும் நினைத்து பார்த்து சிரித்தான்.


நிஷாவும் அவனை பற்றிய தவறான எண்ணங்களை மாற்றிக் கொண்டு அவனை பற்றி சிந்தித்துக் கொண்டே சாப்பிட்டாள்.


இருவருமே அன்றைய நாளை மிகவும் சந்தோஷமான நாளாக தங்கள் மனதில் பதித்து கொண்டனர்.


***************


காலை எழுந்து உற்சாகமாக கிளம்பினாள் நிஷா.


என்னடி இவ்வளவு சீக்கிரமா போற?….. என்றாள் உஷா.


இல்லக்கா சும்மா தான்…..


சைக்கிள் எங்கம்மா என்றார் அம்மா சாந்தி.


தன் அம்மாவின் பின்பக்கமாக சென்று அவரை அணைத்து கொண்டே…..


அம்மா….. என் ஃபிரெண்டு யாமினி இல்ல….. அவ கிட்ட கொடுத்திருக்கேன்….. அவ எடுத்து கொண்டு வருவா…. இன்னைக்கு நான் எடுத்திட்டு வந்திடுவேன்.


எதுக்கு டி அவ கிட்ட கொடுத்த?….. என்றாள் உஷா.


சும்மா தான்….. கொடுக்கனும் ன்னு தோணுச்சு…. கொடுத்தேன்…..


எங்கன்னா ஒழுங்கா பதில் சொல்றாளா ன்னு பாருங்க மா….. என்றாள் உஷா.


நிஷா…… என்றார் அம்மா.


அம்மா….. இன்னைக்கு லேட் ஆயிடுச்சு….. அவ வீடு தூரம்….. அதனால அவ கிட்ட சைக்கிளை கொடுத்து விட்டு நான் அப்பார்ட்மெண்ட் பின் பக்கமா நடந்து வந்திட்டேன்.


ஓ….. சரிம்மா….. என்றார் அம்மா சாந்தி. பின்னர் அவர் கிட்சனுக்கு சென்று விட்டார்.


அந்த பதிலை என் கிட்ட சொல்ல மாட்டியா?….. என்றாள் உஷா.


இல்லை….. சொல்ல மாட்டேன்….. என்று வம்பு இழுத்தாள் நிஷா.


அம்மா பாருங்க மா….. என்று கிட்சனில் இருக்கும் அம்மாவின் காதில் கேட்கும் படி கத்தி சொன்னாள் உஷா.


நிஷா….. அவளை வெறுப்பேத்தாத மா….. என்றார் சாந்தி கிட்சனில் இருந்து.


ஓகே மா…… என்று சொல்லி விட்டு…..

சாரி அக்கா….. என்றாள் நிஷா.


அம்மா சொன்னா எல்லாமே செய்வியா டி?


ஆமாம்……


நான் சொன்னா…..


செய்யமாட்டேன்…..


தீர்த்து சொல்றீயே டி…….பேச்சுக்காகவாவது கேட்கிறேன் அக்கா ன்னு சொல்லலாம் இல்ல…..


நான் உண்மையை தான் பேசுவேன்.


பொய் சொல்லாத?


உண்மையிலேயே யாமினி வீடு தூரம் ன்னு சைக்கிளை கொடுத்தியா?


ஆமாம்…..


அதைத்தான் பொய் சொல்லாத ன்னு சொல்றேன்……

அவளை உனக்கு பிடிக்கவே பிடிக்காது ன்னு எனக்கு நல்லாவே தெரியும்.

அவ பிரச்சனைக்கு ஹெல்ப் பண்ண போய் சைக்கிளை தொலைச்சிட்ட அதான?


சைக்கிளை எல்லாம் தொலைக்கல….. அவ கிட்ட தான் கொடுத்திருக்கேன்…… என்று ஆரம்பித்து…..

நான் ஒண்ணு சொல்லுவேன்….. நீ அம்மா கிட்ட சொல்லக் கூடாது….. சரியா…..


ஓகே….. சொல்லமாட்டேன்….. என்ன விஷயம் சொல்லு…..


பிராமிஸ்?….‌ என்று சொல்லி கையை நீட்டினாள் நிஷா.


பிராமிஸ்….. என்று அவள் கை மேல் கையை வைத்து சத்தியம் செய்தாள் உஷா.


முந்தைய நாள் நடந்த முழுவதையும் சொன்னாள் நிஷா.


அன்னைக்கு காலைல ஒருத்தரோட கார்ல இடிச்சிட்ட ன்னு சொன்னீயே அவரா காப்பாத்தினாரு?


ஆமாம்…..


அவர் வரலைன்னா என்ன நடந்திருக்கும் நிஷா…..


நான் கடவுளை நம்புறேன்….. எனக்கு ஒரு பிரச்சனை ன்னா அதை தீர்க்க யாரையாவது அனுப்புவாரு இல்ல அதை சமாளிக்க எனக்கே தைரியமும் தெம்பும் தருவார்.


என்ன பண்ற நீன்னு யோசிச்சு தான் பண்றீயா?


ஆமாம் உஷா…… நான் யோசிச்சி தான் பண்ணேன்.


இப்போ அவன் சூப்பர் மார்க்கெட் வந்து பிரச்சனை பண்ணினான்னா என்ன பண்ணுவ?


அவனால பிரச்சனை பண்ண முடியாது…..


என்ன சொல்ற?


அவன் யாமினி கிட்ட பேசியதில் இருந்து அவனை நாங்க கீழே தள்ளி விட்டு ஓடும் வரை எல்லாத்தையும் ரெக்கார்டு பண்ணி இருக்கேன்….. இனிமே அவனால யாமினியை மிரட்ட முடியாது….. என்றாள் நிஷா.


ஃபோனில் இருந்த ரெக்கார்டிங்கை கேட்டனர் இருவரும். 


கேட்ட இல்ல….. இனிமே பயப்பட தேவையில்லை. இந்த ரெக்கார்டிங்கை யாமினிக்கும் அனுப்பிட்டேன்….. அவளும் இதுக்கு மேல பயப்பட வேண்டாம்….. என்றாள் நிஷா.


ஏன்டி இப்படி பண்ற….. எதுக்கு தேவையில்லாத விஷயத்தில தலை இடற….. இதனால உனக்கு பிரச்சனை வருது இல்ல……


நான் எப்படி எனக்கு பிரச்சனை ன்னா யாரையாவது கடவுள் எனக்காக அனுப்புவாரு ன்னு நினைக்கிறனோ….. அதே போல அவ பிரச்சனைக்கு என்னை அனுப்பிருக்காரு அவளுக்காக.


உன்னை திருத்தவே முடியாது போ…..


ஓகே பை….. தினேஷ் வருவார்….. காஃபி குடிக்க…..


அடிப்பாவி….. இரு அம்மா கிட்ட சொல்றேன்.


நானே சொல்லிக்கிறேன்….. உனக்கு அந்த சிரமம் வேண்டாம்…… பை…..

பை அம்மா….. என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.


மணி ஒன்பது முப்பது பார்க்கிங்கில் வெயிட் செய்து கொண்டு இருந்தாள் நிஷா.


தன் பர்ஸை எடுத்து பார்த்தாள். 750 ரூபாயும்….. மற்றும் சில காயின்ஸூம் இருந்தது. கேஃபே காஃபி டேவில் காஃபி குடிச்சா கூட இது போதும் ன்னு நினைக்கிறேன்….. என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்.


மணி ஒன்பது நாற்பத்தி ஐந்து…… அவன் வரவில்லை.


நான் அன்னைக்கு வரல ன்னு இன்னைக்கு அவர் வரலையோ….. என்று நினைத்து தன் வாட்சை பார்த்தாள்.


சுமதி வந்தாள்…..


என்னம்மா….. நேத்து எப்படி போச்சு ஸ்டன்ட் எல்லாம்?


உனக்கெப்படி தெரியும்?


அப்படின்னா உண்மையாகவே ஃபைட் பண்ணீயா?


ஓ….. நீ என்னை சொன்னீயா?


அப்போ யாரு ஃபைட் பண்ணது……


அது வந்து……என்று ஆரம்பித்தவள் யாமினி வருவதை பார்த்தாள்.


யாமினி நிஷாவின் சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்து சுமதியிடம் கொடுத்தாள்.


நிஷா தலையை அசைத்தாள். சுமதி சைக்கிளை வாங்கி கொண்டு சென்று பார்க்கிங்கில் விட்டு பூட்டிவிட்டு வந்தாள்.


யாமினி கண்கள் கலங்க….


தேங்க்ஸ்…… தேங்க் யூ ஸோ மச் நிஷா….. என்று சொல்லி கட்டிக் கொண்டாள்.


############


தொடரும்…….

அ. வைஷ்ணவி விஜயராகவன்.


இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.