தொடர்பியல்….. பாகம் -17
கேஸ் -2 ( நடேசன் தாத்தா – ரங்கசாமி)
மாதவனையே நினைத்து கொண்டு இருந்தாள் ராகினி. அவனுடன் பேசியதையும் அவனுடைய பெற்றோர்கள் அவர்களின் திருமணத்திற்கு சம்மதித்ததையும் நினைத்து சந்தோஷப்பட்டாள். பிறகு ஃபோனில் யூ டியூப்பில் ஈஸி லஞ்ச் பாக்ஸ் சமையல் சில வற்றை பார்த்து கொண்டே இருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள்.
கனவில்….
அம்மாடி…. நீ என் பேத்தி மாதிரி…. என்னை காப்பாத்து மா….
என்னையும் காப்பாத்து மா…. என் பெயர் ரங்கசாமி…. ஒரு குட்டி பொண்ணு பார்க்கை பார்த்து கொண்டே ரோட்டில் ஓடி வந்திட்டா…. அந்த பொண்ணை காப்பாற்ற நினைச்சேன்…. காரை திருப்பும் போது பாவம் இந்த முதியவர் மேல இடிச்சிட்டேன்…. இப்போ எனக்கும் இவருக்கும் அடி பட்டிருச்சு…. உயிரோடு இருப்போமா…. இல்லையா…. சொல்லுமா…. உன்னால எங்களை காப்பாற்ற முடியுமா?…..
சங்கவியை காப்பாற்றிய மாதிரி எங்க ரெண்டு பேரையும் காப்பாத்திடு மா…. என்றார் நடேசன் தாத்தா.
ராகினிக்கு ஒன்றும் புரியவில்லை….. இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தாள் (கனவில்).
பிளீஸ்…. என்னை விட்டிடுங்க…. என்னால ஒண்ணும் பண்ண முடியாது…. எல்லாம் விதி படி தான் நடக்கும்…. நான் சங்கவி விஷயத்திலேயே பார்த்திட்டேன்…. என்றாள் ராகினி.
இல்லமா…. அப்படி எல்லாம் சொல்லாத…. உன்னால முடியும்…. நீ நினைச்சா கண்டிப்பா பண்ண முடியும்….. என்றார் ரங்கசாமி.
என்ன ரங்கசாமி இவ கிட்ட கெஞ்சி கேட்கறீங்க…. நம்ம ரெண்டு பேரையும் காப்பாத்த வேண்டியது இவளோட பொறுப்பு…. வாங்க நம்ம போகலாம்…. என்றார் நடேசன் தாத்தா.
அவர்கள் இருவரும் திரும்பி நடந்து சென்றனர். பிறகு அப்பாடா என்று பெருமூச்சு விட்டாள் ராகினி.
ஏய் ராகினி…. எங்களை காப்பாத்தல உன்னை நிம்மதியா தூங்க விடமாட்டோம்…. என்று திரும்பி வந்து எச்சரித்து சென்று விட்டனர் இருவரும்.
அலறி அடித்து கொண்டு எழுந்தாள் ராகினி.
கடவுளே என்ன இது…. என்னை ஏன் இப்படி சோதிக்கிற….. என்று சொல்லி தலையில் கையை வைத்து கொண்டு அமர்ந்தாள். பின்னர் எழுந்து சென்று தண்ணீர் குடித்து விட்டு திருநீறு பூசி கொண்டு வந்தமர்ந்தாள். ஃபோனை பார்த்தாள் மணி 3.25….
மிச்…. ஏன் நமக்கு இப்படி எல்லாம் கனவு வருது…. நாளைக்கு முதல் வேலையா மம்தா சொன்ன டாக்டரை பார்க்கனும்…. என்று சொல்லிக் கொண்டாள்.
பிறகு சோஃபாவிலேயே படுத்து ஃபோனை பார்த்து கொண்டே தூங்கிவிட்டாள்.
************
காலை 9 மணிக்கு ஜங்ஷனில் காத்துக் கொண்டு இருந்தான் மாதவன்.
என்ன இவள இன்னும் காணும்?…. நேத்து ராத்திரி எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்லி இருக்கேன்…. அதுக்காகவே சீக்கிரமா வந்து வெயிட் பண்ணுவா ன்னு நினைச்சேன்….என்று சொல்லி கொண்டே ராகினிக்கு கால் செய்தான்.
ஃபுல் ரிங் போய் கால் கட் ஆகி விட்டது…. என்னாச்சு….. வண்டில வந்து கொண்டு இருக்காளோ…. என்று நினைத்து கொண்டான்.
அரைமணி நேரம் ஆகியும் ராகினி வரவில்லை….. ஒருவேளை நமக்கு முன்னாடியே வந்து காத்திருந்து போய் விட்டாளோ…. கோச்சிக்கிட்டு ஃபோன் எடுக்கலீயோ…. என்று யோசித்து மம்தாவிற்கு கால் செய்தான்.
ஹலோ மம்தா…..
சொல்லுங்க பிரோ….
ராகினி வந்திட்டாளா?
தெரியல பிரோ…. நான் இப்போ தான் உள்ளே நுழைய போகிறேன்…. இருங்க பார்த்து விட்டு சொல்றேன்…. என்று சொல்லி ஃபோனை கட் செய்து விட்டு…. உள்ளே சென்று ரெஜிஸ்டரில் சைன் செய்து விட்டு உள்ளே சென்று பார்த்தாள் மம்தா.
அங்கே ராகினி இல்லை…. பிரவீன் மற்றும் அன்பரசன் மட்டுமே இருந்தனர். சேகர் அப்போது தான் உள்ளே வந்தான்.
ஹலோ பிரோ….
ஹாங்…. சொல்லுங்க மம்தா….
ராகினி இன்னும் வரலையே பிரோ…. மே பீ இப்போ தான் வந்துக்கிட்டு இருப்பா…. டிரைவிங்ல ரிங் சவுண்ட் கேட்டிருக்காது…..
நானும் அப்படி நினைச்சு தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்…. அரைமணி நேரம் ஆயிடிச்சு….
ஓ….
நான் 10 மணிக்கு ஸ்டேஷன்ல சைன் போடனும்…. போட்டுவிட்டு அப்புறமா நான் போய் ராகினியோட ரூம்ல பார்க்கிறேன்…. ஏன் இவ இப்படி பண்றா ன்னு தெரியல…. ரொம்ப டென்ஷனா இருக்கு…. என்றான் மாதவன்.
பயப்படாதீங்க பிரோ…. நேத்து ராத்திரி லேட்டா தூங்கி இருப்பா…. அதான் லேட் ஆகியிருக்கும் கிளம்ப…. அதனால கால் எடுத்திருக்க மாட்டா….
ஹூம்…. ஓகே மம்தா…. பை….
பை பிரோ…. நீங்க அவ வீட்டுக்கு போய் பார்த்து விட்டு எனக்கு கால் பண்ணுங்க….
ஷியூர்…. பை….
மம்தா தன் வேலையை தொடங்கினாள்.
ஏனோ இப்போது அவளுடைய கண்கள் பிரவீனை பார்த்தது.
வழக்கமாக பத்து நிமிடத்தில் பத்து முறையாவது மம்தாவை பார்த்து விடுவான் பிரவீன்…. இன்று ஒருமுறை கூட அவளை ஏறெடுத்துப் பார்க்கவில்லை…. ஒரு குட் மார்னிங் கூட சொல்லவில்லை…..
சே…. என்னாச்சு நமக்கு…. ஏன் நாம இதை எல்லாம் எக்ஸ்பெக்ட் பண்றோம்…. என்று தனக்கு தானே சொல்லி கொண்டு தன் வேலையை தொடங்க நினைத்தவள்…
சரி ஒரு முறை ராகினிக்கு கால் செய்து பார்க்கலாம் என்று ஃபோனை எடுத்தாள்.
ஃபுல் ரிங் போய் கால் கட் ஆகி விட்டது.
பின்னர் தன் வேலையில் கவனம் செலுத்தினாள் மம்தா.
***********
மாதவன் ஸ்டேஷனுக்கு சென்று சைன் செய்து விட்டு கான்ஸ்டபிளிடம் நான் ஒரு மணி நேரத்தில் வந்திடுவேன் என்று சொல்லி விட்டு கிளம்பும் முன் மாதவனின் சுப்பீரியர் ஆஃபீஸர் எஸ்.பி.ராஜவேல் வந்தார்.
குட் மார்னிங் சார்…. என்று சொல்லி அந்த ஸ்டேஷனில் இருந்த அனைவரும் அவருக்கு சல்யூட் செய்தனர்.
எஸ்…. என்று அனைவருக்கும் ரிப்ளை செய்துவிட்டு….
மிஸ்டர் மாதவன்…. அந்த ஏஞ்சல் சூசைடு கேஸ் ஃபைலை எடுத்து கொண்டு வாங்க…. என்று சொல்லி விட்டு மாதவனின் கேபினுக்குள் சென்று அமர்ந்தார்.
அடக்கடவுளே…. ராகினியை போய் பார்க்க நினைத்தோமே…. இப்போ இவரு வந்திருக்காறே…. என்று நினைத்து கொண்டே மாதவன் வெளியே வந்து ஹெட் கான்ஸ்டபிளிடம்
பஷீர் சார்….
எஸ் ஸார்….
ஏஞ்சல் சூசைடு கேஸ் ஃபைலை எடுத்து கொண்டு வாங்க…. என்றான்.
எஸ் ஸார் என்று சொல்லி விட்டு அவர் ஃபைலை எடுத்து கொண்டு வந்து மாதவனிடம் தந்தார்.
அவர் எடுத்து கொண்டு வந்து தந்ததும் அதை எடுத்து கொண்டு அவனுடைய கேபினுக்குள் சென்று எஸ். பி.யிடம் கொடுத்தான்.
மாதவன் கிளோஸ் தி டோர்ஸ்…. என்றார் எஸ்.பி.
எஸ் ஸார் என்று சொல்லி கதவை சாத்திவிட்டு வந்து நின்றான்.
உட்காருங்க மாதவன்….
எஸ் ஸார் என்று சொல்லி அவர் எதிராக இருந்த சேரில் அமர்ந்தான் மாதவன்.
ஃபாரன்சிக் ரிப்போர்ட்ல இது சூசைடு இல்ல ன்னு வந்திருக்கு…. என்றார் எஸ்.பி.
ஏற்கனவே ராகினி சொல்லி இருந்தாலும் அது தெரியாதது போல….
ஓ…. ஈஸ் இட் சார்…. என்று முதல் முறையாக தெரிந்து கொண்டது போல கேட்டான் மாதவன்.
ஆமாம் மிஸ்டர் மாதவன்…. நீங்க தான் இந்த கேஸை எடுத்து சீக்கிரமா கல்பிரிட்டை கண்டுபிடிக்கணும்…. என்றார் எஸ்.பி.
எஸ் ஸார்…. என்றான் மாதவன்.
இந்தாங்க அந்த லேப் ரிப்போர்ட்…. என்று சொல்லி கொடுத்தார்.
ஓகே சார்…. என்று சொல்லி வாங்கி கொண்டு
சார்…. ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே….
சொல்லுங்க மாதவன்….
இந்த கேஸ்ல பெரிய லெவல்ல யாரையாவது சந்தேக படறீங்களா சார்…..
ஏன் கேட்கிறேன்னா….நீங்களே பர்சனால வந்து என் கிட்ட கொடுக்கறீங்களே…. அதனால தான் சார்.
எஸ் மாதவன்…. யூ ஆர் ரைட்…. இது கான்ஃபிடென்ஷியலா இருக்கனும்…. நீங்க இந்த கேஸை இன்வஸ்டிகேட் பண்றது இந்த ஸ்டேஷன்ல இருக்கும் யாருக்கும் கூட தெரிய வேண்டாம்…. நீங்களும் கேர்ஃபுல்லா இருங்க….
ஓகே சார்…. ஷியூர் சார்…. தேங்க்ஸ் ஃபார் அசைனிங் திஸ் கேஸ் சார்….. என்றான் மாதவன்.
ஓகே மிஸ்டர் மாதவன்…. நான் கிளம்பறேன் என்று சொல்லி விட்டு கிளம்பினார் எஸ்.பி.
சார்…. ஜஸ்ட் எ மினிட் டீ வந்திடும்…. குடிச்சிட்டு கிளம்புங்க சார்…. என்றான் மாதவன்.
நோ நோ டைம் இல்ல…. நான் கமிஷ்னர் ஆஃபீஸ் போகனும் மாதவன்….
ஓ… ஓகே சார்….
அவர் எழுந்ததும் மாதவன் சல்யூட் செய்தான். பின்னர் அவர் வெளியே வந்ததும் அந்த ஸ்டேஷனில் இருந்த மற்ற போலீஸ்காரர்களும் அவருக்கு சல்யூட் செய்தனர்.
அவர் கிளம்பி சென்றார்.
பின்னர் அவசரமாக தன் பைக் சாவியை எடுத்து கொண்டு வெளியே வந்தான்.
மறுபடியும் ஒருமுறை ராகினிக்கு கால் செய்தான் மாதவன்.
அப்போதும் அவள் எடுக்கவில்லை.
மிச்…. என்று சொல்லி விட்டு தன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான் மாதவன்.
ராகினியின் வீட்டு வாசலில் சென்று தன் பைக்கை நிறுத்தி விட்டு கதவை தட்டினான்.
திறக்கவில்லை….பெட் ரூம் ஜன்னலை தட்டினான். ராகினி ராகினி என்று குரல் கொடுத்தான்…..ஹாலில் உள்ள ஜன்னலை தட்டச் சென்றான்….கொசுவலை ஜன்னல் போட்டிருந்ததால் கண்ணாடி ஜன்னல் திறந்து இருந்தது….. ஜன்னலின் வழியே உள்ளே பார்த்தான்….. பெட் ரூம் தெரியவில்லை…. இன்னொரு ஜன்னல் வழியாக பெட்ரூமை பார்க்க நினைத்து நடந்து செல்லும் போது ஹாலில் உள்ள சோஃபாவில் அவள் படுத்திருந்தது தெரிந்தது. மணி பதினொன்று…. இது வரை தூங்க மாட்டாளே…. என்ன ஆயிற்று என்று ஜன்னல் வழியாக கத்தி கூப்பிட்டான்…. அப்படியும் அவளுடைய செவிகளுக்கு கேட்கவில்லை…..
வேறுவழியின்றி கேட்டின் பூட்டை உடைத்து…கதவின் மேல் பக்கத்தில் இருக்கும் கண்ணாடியை உடைத்து….கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.
ராகினி…. என்று அவளை உளுக்கி எழுப்பினான். உடம்பு நெருப்பாக கொதித்தது…. வாயோரமாக நுரை இருந்தது…. மாதவனுக்கு ஒன்றும் புரியவில்லை…. ஃபோனை எடுத்து ஆம்புலன்ஸிற்கு கால் செய்தான்… பின்னர் தண்ணீரை முகத்தில் தெளித்து பார்த்தான்…அவள் அசையவே இல்லை… மிகவும் பதட்டமாக ஆகினான் மாதவன்….. அடுத்த 15 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்தது….மம்தாவிற்கு கால் செய்தான்….. அவள் பர்மிஷன் கேட்டு ஹாஸ்பிட்டலுக்கு வருவதாக கூறி…. ஆஸ்பிட்டலின் பெயரை கேட்டாள்…..
ஆம்புலன்சில் இருப்பவரிடம் எந்த ஆஸ்பிட்டல் என்று கேட்டான் மாதவன்.
ஏவி ஹாஸ்பிடல்…. என்றனர்.
மம்தா…. ஏவி ஹாஸ்பிடல்….
பிரோ…. அங்க தான் என் ஃபிரெண்டு வேலை செய்யறான்…. நான் அவனிடம் சொல்லி உங்களை வந்து பார்க்க சொல்றேன்….. நானும் சீக்கிரமா வரேன்…. நீங்க டென்ஷன் ஆகாதீங்க….
ஓகே மம்தா…. தேங்க்ஸ்…. என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு ஆம்புலன்சை ஃபாலோ செய்து ஏவி ஹாஸ்பிடலுக்கு சென்றான் மாதவன்.
****************
தொடரும்…..
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.