பாகம் 4,5

Vaishnavi Vijayaraghavan | 04 May 2026 | Share

என் வசம் நானில்லை என் உயிரே…….

வசம் -4


தினேஷ் வீட்டிற்கு சென்றதும் தன் அம்மாவிடம் சென்று…..


அம்மா…… 


சொல்லுடா கண்ணா……


இன்னைக்கு ஒரு நல்ல டீல் முடிச்சேன்…… அதனால என்னோட கம்பனிக்கு நல்ல பிராஃபிட் கிடைக்கும்…..


ஓ….. சூப்பர் டா…. கங்கிராட்ஸ்…..


தேங்க்ஸ் மா….. ஆக்சுவலா.

இன்னைக்கு வேற ஒரு டீலை சைன் பண்றதா இருந்தேன்……. ஆனா நல்லவேளை பண்ணல….. அதை பண்ணியிருந்தேன்னா பெரிய பிரச்சனையாக ஆகி இருக்கும்.


ஓ….. நல்லவேளை கடவுள் தான் உன்னை காப்பாத்தி இருக்கார்.


கடவுள் ஒரு பொண்ணை அனுப்பி என்னை தடுத்து காப்பாத்திட்டார் மா.


என்னடா கண்ணா சொல்ற?


ஆமாம் அம்மா….. இன்னைக்கு காலைல நாம் ஃபிளாட்ஸூக்கு வெளியே போகும் போது ஒரு பொண்ணு சைக்கிளில் வந்து நம்ம காரில் மோதிட்டா..


அச்சச்சோ….. அப்புறம்.


ஒண்ணும் ஆகல மா….. நான் தான் அவளை நல்லா திட்டிட்டேன்…..


அப்புறம்….. அவ எதாவது சண்டை போட்டாளா?


இல்லம்மா….. அதான் எனக்கு ஒரே ஆச்சர்யம்….. நான் அப்படி திட்டினேன்…. சாரி சார்…. சாரி சார் ன்னு சொல்லிக்கிட்டு இருந்தா….. நான் டைம் ஆகுது ன்னு வேகமாக போயிட்டேன்…. ஆனா கார் டேமேஜ் காஸ்டை அவ தான் கொடுக்கனும் ன்னு சொல்லிட்டு போனேன்.


அப்புறம் என்னாச்சு?


காருக்கு பெரிசா எதுவும் டேமேஜ் இல்ல….. அதை விட முக்கியம் நான் அட்டென்டு பண்ண வேண்டிய முக்கியமான மீட்டிங் கேன்சல் ஆயிடிச்சு நான் லேட்டா ஆஃபீஸ் போனதால….. அந்த பிராஜெக்ட் டீல்  ஃபேக் ன்னு கொஞ்ச நேரத்தில் தெரிஞ்சது….. நல்லவேளை டைமுக்கு ஆஃபீஸ் போயிருந்தா நான் அதை தான் சைன் பண்ணி இருப்பேன். அதை விட சூப்பர் என்ன ன்னா நான் ரொம்ப நாளாக எதிர் பார்த்து கொண்டு இருந்த பிராஜெக்ட் டீல் கிடைச்சுது…..


அப்போ நீ அந்த பொண்ணுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்……


ஆமாம்….. இப்போ வீட்டுக்கு வருவதற்கு முன்னாலேயே போய் தேங்க்ஸ் அப்புறம்  சாரி சொல்லி விட்டு வந்திட்டேன்.


ஓ….. ஓகே…… அப்பா கிட்ட இந்த நல்ல விஷயத்தை சொல்லு……


ஓகே மா…. என்று சொல்லி தன் ஃபோனை எடுத்து கொண்டு தன் ரூமிற்கு சென்றான் தினேஷ்.


ஹலோ அப்பா…..


சொல்லுப்பா…..


அப்பா….. நான் ரொம்ப நாளாக எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் ன்னு சொன்னேனே அந்த ரோலில் கம்பனி டீல் கிடைச்சிருக்கு அப்பா…..


சூப்பர் டா….. கங்கிராட்ஸ்….. 


இன்னைக்கும் நைட்டு டியூட்டியா பா?


ஆமாம் டா கண்ணா……


சரி….. இந்த வீக் என்ட் என்னோட டிரீட்….. நம்ம நாலு பேரும் சேர்ந்து லஞ்ச் இல்ல டின்னருக்கு 5 ஸ்டார் ஹோட்டல் போகலாம்.


அங்க போனாலும் நீ அருகம்புல் ஜூஸ்…. வெஜிடபிள் சாலட்….. பிரௌன் ரைஸ் தான் சாப்பிட போற….. அதுக்கு எதுக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்?


அப்பா….. ஒரு நாளைக்கு சாப்பிடுவேன்…… அப்புறம் எக்ஸர்சைஸ் பண்ணிப்பேன்.


சரி டா…… சும்மா சொன்னேன் டா….. கோச்சிக்காத……


ஓகே அப்பா….. பை….


பை….. டா கண்ணா…..


தன்ஷிகா தன்ஷிகா…… என்று கூப்பிட்டுக் கொண்டே அவளுடைய ரூமிற்கு சென்றான் தினேஷ்.


அவள் தன் மொபைலில் அவளுடைய காதலன் யோகேஷை பார்த்து கொண்டு இருந்தாள். தினேஷின் குரல் கேட்டதும் அவசரமாக ஃபோட்டோவையும் கிளோஸ் செய்துவிட்டு ஃபோனை சார்ஜ் போட்டுவிட்டு வந்து ஒரு புக்கை எடுத்து கொண்டு வந்து தன் கட்டிலில் அமர்ந்தாள்.


ஹாய் டி…..


என்ன அண்ணா….. ஒரே ஹேப்பி மூடுல இருக்க போல?


ஆமாம் டி….. என்று ஆரம்பித்து அன்று நடந்த முழுவதையும் சொன்னான்.


அப்போ அண்ணியை பார்த்திட்ட ன்னு சொல்லு…..


சீ சீ…. நான் அப்படி எல்லாம் நினைக்கல…..நல்ல பொண்ணு….. அவளால எனக்கு ஒரு நல்லது ….. இல்ல இரண்டு நல்லது நடந்திருக்கு….. அதான் அவளுக்கு காஃபி வாங்கி கொடுத்து விட்டு தேங்க்ஸ் சொல்லணும் நினைச்சுக்கிட்டு இருக்கேன். 


எங்க வேலை செய்யுறா அந்த பொண்ணு……


நம்ம அப்பார்ட்மெண்ட் வெளியே இருக்கே அந்த சூப்பர் மார்க்கெட்ல தான்.


ஓ….. இங்கு தானா….. எனக்கு தெரிஞ்ச பொண்ணு ஒருத்தி அங்கே இருக்கா….. யாருன்னு சொல்லு…. அவ கிட்ட சொல்றேன்.


அதெல்லாம் ஒண்ணும் வேணாம்….. நான் பார்த்துக்கொள்கிறேன்.


அப்புறம் உன் இஷ்டம்…… சரி…. எனக்கு டிரீட்?


வீக் என்ட் லஞ்ச் இல்ல டின்னருக்கு போகலாம்.


தேங்க்ஸ் அண்ணா…. என்று சொல்லி அவனுடைய தோளில் ஹக் செய்தாள்.


ஏய்…… டிரீட் கேட்கறீயே…… கங்கிராட்ஸ் சொன்னியா டி?


சாரி டா அண்ணா….. கங்கிராட்ஸ்….. என்றாள் தன்ஷிகா.


சும்மா சொன்னேன் டி…… என்று சொல்லி சிரித்தான் தினேஷ்.


அண்ணா…..


சொல்லுடி…..


எனக்கு ரெண்டு செட் டிரெஸ் வாங்கி தாயேன்…..


போன மாசம் தான புது டிரெஸ் வாங்கின…..


அது அப்பா வாங்கி கொடுத்தாரு….. நீ வாங்கி கொடு…..


நீ எக்ஸாம் நல்லா எழுதி நல்ல மார்க் வாங்கிட்டு வா….. நான் உனக்கு டிரெஸ் வாங்கி தரேன்.


போ அண்ணா….


உண்மையிலேயே தான் டி சொல்றேன்….. ஒழுங்கா படி…. என்று சொல்லி விட்டு வெளியே வந்தான்.


அன்று முழுவதும் அவனுக்கு சந்தோஷமான நாளாக தோன்றியது.


********************


வீட்டிற்கு சென்ற பிறகு……


எப்படி அந்த யாமினியை காப்பாற்றுவது….. என்று யோசித்து கொண்டு இருந்தாள் நிஷா.


என்னடி யோசிச்சுகிட்டே இருக்க ?….. என்றாள் உஷா.


ஒண்ணும் இல்ல….. நீ வீட்டுக்கு போகல?


இல்ல இன்னைக்கு நைட்டு இங்க தான் ஸ்டே பண்ண போறேன். 


ஏன் மாமா வீட்ல இல்லையா? தனியா இருக்க பயமா?


சீ…. சீ….. அதெல்லாம் ஒண்ணும் இல்லை…..


பின்ன என்ன?


இல்ல மேத்யூவோட ஃபிரெண்ட்ஸ் வீட்டுக்கு வராங்களாம்…..


எதுக்கு?


ஐபிஎல் மேட்ச் நடக்குது இல்ல….. அதான் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து பார்க்க போறாங்களாம்…..


ஓ….. மாமா பார்ட்டி பண்ண போறாரு ன்னு சொல்லு…..


சீ சீ….. அதெல்லாம் ஒண்ணும் பண்ண கூடாதுன்னு ஸ்டிரிக்டா சொல்லிட்டு வந்திருக்கேன்.


நம்பிட்டேன் நம்பிட்டேன்….. என்று சொல்லி சிரித்தாள் நிஷா.


நிஷா….. உண்மையை தான் டி சொல்றேன்….

 அவர் என் பேச்சை மீற மாட்டாரு…..


சரி உஷா….. ஓகே….. நான் நம்பறேன்…. என்று சொல்லி விட்டு மறுபடியும் சிரித்தாள்.


ஏய்…..


விடுடி எப்போ பார்த்தாலும் அவளை வம்பு இழுக்கறதே உன் வேலை.


சரி….. சாப்பிட்டு விட்டு படு….. காலைல சீக்கிரமா எழுந்திரு….. 


சரிம்மா….. என்று சொல்லி விட்டு சாப்பிட்டார்கள் அனைவரும்.


என்னடி….. இன்னுமே எதோ யோசனையில இருக்க?

என்றாள் உஷா.


அக்கா….. எனக்கு ஒண்ணு மட்டும் சொல்லு…..


என்ன?


ஒரு ஆம்பளை கிட்ட இருந்து எப்படி ஒருத்தரை காப்பாத்திக்க முடியும்?


என்னடி சொல்றே….. என்னாச்சு….. என்று சற்று பதட்டமாக கேட்டாள் உஷா.


நீ பயப்படாத….எனக்கு கேட்கல…..


பின்ன யாரு….. சுமதியா?


அக்கா இரு….. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு….


சொல்லுடி….


 என் கூட வேலை செய்யுறா பேரு கூட யாமினி ன்னு சொல்லுவேனே….. 


ஆமாம்….. எல்லார் கிட்டேயும் வழிஞ்சு பேசுவா ன்னு சொன்னீயே…. அவளா?


ஆமாம்…..


என்னாச்சு அவளுக்கு?


அவ அப்படி பேசியதால பெரிய பிரச்சனையில மாட்டிக்கிட்டா…..


என்னடி சொல்றே…..


ஆமாம் அக்கா….. என்று ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி முடித்தாள்.


கண்கள் விரிய பார்த்தாள் உஷா…..


என்ன உஷா….. என்னாச்சு?


இல்ல இப்படி எல்லாம் கூட ஆம்பளைங்க இருக்காங்களா?


இதை விட மோசமானவங்களும் இருக்காங்க….. ரொம்ப ரொம்ப நல்லவங்களும் இருக்காங்க…..

யாரு எப்படி பட்டவங்க ன்னு தெரிஞ்சு பழகனும்.


ஹூம்….. நீ சொல்றது என்னவோ கரெக்ட் தான்.

சரி….. இப்ப என்ன பண்ணுவா அவ நாளைக்கு…..


அதான் என் கிட்ட ஹெல்ப் கேட்டிருக்கா…..


வாட்….. நீ என்ன லூசா….. எதுக்கு தேவையில்லாத வேலை உனக்கு?


இல்ல அக்கா….. அவ ஹெல்ப் ன்னு கேட்டா….. அழுதா….. அதை பார்த்து கஷ்டமா ஆயிடிச்சு…..


முதல்ல….. ஒழுங்கா அக்கா ன்னு சொல்லு….. இல்ல உஷா ன்னு சொல்லு….. 


என்ன பண்றது உஷா….. உன் கல்யாணத்துக்கு முன்னாடி உஷா நீ வா போ…. சில வாடி போடி ன்னு கூட கூப்பிட்டிருக்கேன்…. உனக்கு கல்யாணம் ஆன பிறகு நம்ம அம்மா உன்னை அக்கா ன்னு கூப்பிட சொல்லிட்டாங்களா….. அதான் டிரை பண்றேன் வரமாட்டேங்குது……


விடு….. உனக்கு எப்படி தோணுதோ அப்படி கூப்பிடு…. மாத்தாத…..


இல்ல அக்கா….. நம்ம அம்மா சொன்னா நான் மீற மாட்டேன் ன்னு உனக்கு தெரியும் இல்ல…..


தெரியும் டி….. அதுக்காக…..உன்னையே ஏன் நீ கஷ்டப்படுத்திக்கிற….. அதான் அக்கா ன்னு கூப்பிட வரல இல்ல…..


டிரை பண்றேன்…. தனியா இருக்கும் போது வாடி போடி உஷா கூட சொல்லுவேன்….. ஆனா அம்மா முன்னாடி உன்னை மரியாதையா தான் பேசுவேன்.


சரி மா…. நீ அம்மா பொண்ணு ன்னு நான் ஒத்துக்கிறேன்…..

சரி அந்த யாமினி விஷயத்தில் நீ தலை இடாத…. அவ்வளவு தான் நான் சொல்லுவேன். எனக்கு தூக்கம் வருது நீ தூங்கு…..


ஷாலினி எங்க?


அவ அம்மா கூட கதை கேட்டுக்கிட்டே தூங்கிட்டா…. குட் நைட்டு…. என்றாள் உஷா.


ஓ…. ஓகே…..குட் நைட்டு…. என்றாள் நிஷா.


###########


தொடரும்…..

அ. வைஷ்ணவி விஜயராகவன்.


என் வசம் நானில்லை என் உயிரே…..


வசம் -5


தினேஷ் எழுந்து ஜாகிங் சென்றான். போகும் போது பின் பக்கமாக பார்க்கிற்கு சென்றான். திரும்பி வரும்போது அப்பார்ட்மெண்ட் முன் பக்கமாக அந்த சூப்பர் மார்க்கெட் வழியாக வந்தான். ஏனோ தெரியவில்லை அவனுக்கு நிஷா நியாபகம் வந்தது. தன் தங்கை சொல்லியது போல தனக்கு அவள் மேல் ஈர்ப்பு வந்துவிட்டதோ என்று ஒரு முறை நினைத்து கொண்டான். பின்னர் அங்கிருந்த செக்கியூரிட்டி யிடம்…..


அண்ணா….. எத்தனை மணிக்கு சூப்பர் மார்க்கெட் ஓப்பன் பண்ணுவாங்க?


8.30 மணிக்கு தம்பி…..


வேலை செய்யுறவங்க எத்தனை மணிக்கு வருவாங்க?


ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஷிஃப்ட் மாறி மாறி வரும் தம்பி….. நீங்க யாருக்கு கேட்கறீங்க….. 


அது வந்து ஒரு பொண்ணு….. அவ பெயரை கேட்க மறந்திட்டேன். சைக்கிள் வருவா…..


ஓ….. அவளா….. அவ பேரு……. என்னமோ சொல்லுச்சு அந்த பொண்ணு….. மறந்திட்டேன் பா…..


பரவாயில்லை அண்ணா….. நானே கேட்டுக்கிறேன்…. எத்தனை மணிக்கு வருவா ன்னு தெரியுமா?


தெரியலையே தம்பி…..


எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா அண்ணா…..


சொல்லுப்பா……


அந்த பொண்ணு வந்ததும் எனக்கு கால் பண்ணி சொல்றீங்களா?


தம்பி….. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க….. அந்த பொண்ணை எனக்கு ரொம்ப நாளா தெரியும். ரொம்ப நல்ல பொண்ணு….. உங்களை நான் நிறைய முறை பார்த்து இருக்கேன்…… நீங்களும் நல்ல பையனா தான் இருக்கீங்க….. எதுக்காக அந்த பொண்ணை பத்தி…… என்றார் சற்றே தயங்கியவாறே……


அச்சோ அண்ணா….. நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை அண்ணா. அந்த பொண்ணு எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணினா….. அதான் தேங்க்ஸ் மட்டும் சொல்லாம ஒரு காஃபி குடிக்க கூப்பிடத்தான்.


ஓ….. அப்படின்னா சரிப்பா……. என்றார் செக்யூரிட்டி.


அவரிடம் இருந்து நம்பர் வாங்கி கொண்டு தன் நம்பரையும் அவருடைய ஃபோனில் ஸேவ் செய்து கொடுத்தான்.


சரிங்க தம்பி….. நான் சொல்றேன். 


ஓகே அண்ணா….. பை….. என்று சொல்லி விட்டு தன் வீட்டிற்கு சென்றான்.


மணி 9.30…….

அப்போது கால் வந்தது. 


ஹலோ….. சொல்லுங்க அண்ணா….. அந்த பொண்ணு வந்திட்டாளா?


வந்திட்டா பா…… ஆனா சூப்பர் மார்க்கெட்டுக்குள் போகல அவ கூட வேலை செய்யுற இன்னொரு பொண்ணுக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கா……

நான் போய் பேரு என்ன ன்னு கேட்கவா?


இல்ல அண்ணா….. வேண்டாம்….. நான் இப்பவே வரேன்….. என்று சொல்லி விட்டு சாப்பிட்டு கொண்டிருந்தவன் அந்த மீதமான பிரெட்டை அப்படியே தட்டில் வைத்து விட்டு கையை கழுவிட்டு வேகமாக சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்தான்.


அப்போது சுமதியும் நிஷாவும் பேசுவதை எதேச்சையாக கேட்டான். 


இது தேவையில்லாத வேலை உனக்கு….. நீ தலையிடாத…..


அவ அழறா டி…. சூசைடு பண்ணிக்கப் போறேன்னு சொன்னா…..


அப்படி தான் அவ தலைல எழுதி இருந்தா யாரால மாத்தமுடியும்?.


சுமதி….. கொஞ்சமாவது மனிதாபிமானத்தோட பேசு…..


தப்பு எல்லாம் அந்த யாமினி மேல….. அவளை யாரு எல்லா கஸ்டமர் கிட்டேயும் வழிஞ்சு பேச சொன்னது….. அப்படி பேசினா இப்படி தான் கூப்பிடுவான்.


அவ தான் சொன்னா இல்ல….. அவ குடும்பம் கஷ்டத்தில் இருக்கிறதால இந்த மாதிரி சிரிச்சு பேசினா இங்கு வரவங்க அவளை அவங்க கம்பனில இல்ல தெரிஞ்ச இடத்தில வேலைக்கு சேர்த்துப்பாங்க ன்னு……


ஏய்….. உண்மையை சொல்லு…… அவ லூசா இல்ல நீ லூசா….. என்றாள் சுமதி.


என்ன உளருற?


பின்ன என்ன….. நம்ம கூடத்தான் கஸ்டமர் கிட்ட சிரிச்ச முகத்தோட பேசுறோம்….. அதுக்காக நம்ம கிட்ட யாராவது இப்படி பேசி இருக்காங்களா….. நமக்கே ஒரு மாதிரி இருக்கும் அவ கஸ்டமர்ஸ் கிட்ட அப்படி பேசுறது….. நல்லாவே தெரியும் வழியிறா ன்னு….. அவ பண்ண தப்புக்கு அவ கஷ்டப் படறா….. நீ இதுல தலையிடாத….. இதை விஷயத்தை பேசுறதுக்கு தான் டியூட்டி ஆரம்பிக்கிறதுக்கு அறை மணி நேரம் முன்னாடி வரச் சொன்ன….. நிம்மதியா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருப்பேன்….. ஏதோ உன்னை காஃபி குடிக்க கூப்பிட்ட பையனை பத்தி பேசத் தான் கூப்பிட்ட ன்னு நினைச்சேன்…..


போடி….. லூசு……அவனை பத்தி நான் மறந்தே போயிட்டேன்…..


பொய் சொல்லாத டி….. நேத்து ராத்திரல இருந்து இப்ப வரைக்கும் ஒருமுறை கூட அவனை பத்தி நீ நினைக்கல…..


நினைச்சேன்…. சைக்கிளில் வீட்டுக்கு போகும் போது….. அப்புறம் வீட்டுக்கு போய் மறந்திட்டேன்….. இப்போ வரைக்கும்…..


சரி சரி நம்பிட்டேன்….. என்று சொல்லி சிரித்தாள் சுமதி.


ஏய் சிரிக்காத…. உண்மையை தான் சொல்றேன்…..


இதை கேட்ட தினேஷ் சிரித்தான் ( சத்தம் வராமல்).


சரி அதை விடு…. யாமினி விஷயத்துக்கு வா…..


அதை தான் வேண்டாம் விடு‌ன்னு சொல்றேன்…..


 என் அக்காவும் இதே தான் சொன்னா….


எதை?


இதுல தலையிடாத ன்னு…..


எங்களுக்கு மூளை இருக்கு….. அதான் அப்படி சொல்றோம்…..


பயந்தாங்கோலிங்க….. செல்ஃபிஷ்…..


அப்படியே வச்சிக்கோ….. ஆளை விடு…..


நான் அவளுக்கு ஹெல்ப் பண்ண தான் போறேன்….. நான் முடிவு பண்ணிட்டேன்……. 


நான் சொல்லி என்னைக்கு நீ கேட்டிருக்க…..


சரி வா உள்ளே போகலாம்….. என்று சொல்லி இருவரும் உள்ளே செல்வதற்கு முன்….


எக்ஸ்கியூஸ் மீ….. என்றான் தினேஷ்.


இருவரும் திரும்பி பார்த்தனர்.


ஹாய்…. என்றான் இருவரையும் பார்த்து.


தயக்கத்துடன் இருவரும் ஹலோ என்றனர்.


நிஷா….. நான் உள்ளே போறேன்….. என்றாள் சுமதி.


இல்ல இரு….. என்று சொல்லி அவள் கைகளை பிடித்து கொண்டாள் நிஷா.


கேர்ல்ஸ்….. ரிலாக்ஸ்….. நான் ஒண்ணும் பூதம் இல்ல……


என்ன விஷயம்….. சொல்லுங்க சார்….. எங்களுக்கு வேலை இருக்கு……


10 ஓ கிளாக் தான நீங்க உள்ளே போகனும்?


உங்களுக்கு எப்படி தெரியும்….. நாம் பேசுவதை கேட்டுவிட்டானா….. என்று பயந்தவாறே கேட்டாள் நிஷா.


நேத்து அதுக்கு தான் வேகமாக வந்து என் காரில் இடிச்சீங்க…..


ஓ….. அந்த டைமை வச்சு தான் சொல்றானா….. என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள் நிஷா.


சரி….. சொல்லுங்க….. என்ன வேண்டும் உங்களுக்கு.


எனக்கு எதுவும் வேண்டாம்….. உங்களுக்கு தான் காஃபி வாங்கி கொடுக்க நினைக்கிறேன்….. உங்க ஃபிரெண்டும் கூட வரலாம்…..


சாரி….. நான் காஃபி குடிக்க மாட்டேன்…..


ஏய்…. நான் குடிப்பேன் டி…. என்றாள் சுமதி நிஷாவின் காதில்.


நீ வேணும்னா போயிக்கோ….. என்று அவளும் திரும்ப அவளிடம் கிசுகிசுத்தாள்.


காஃபி வேண்டாம்னா…. டீ?


இவ டீ கூட குடிக்க மாட்டா….. என்று தினேஷிடம் சொல்லிவிட்டு…..போதுமா…. உனக்காக பேசிட்டேன்.


ஓகே…. ஜூஸ் இல்லன்னா ஐஸ்கிரீம்?


சார்….. எதுவும் வேண்டாம். 


சார் எல்லாம் வேண்டாம்…. தினேஷ் ன்னு சொல்லுங்க….


பேர் சொல்லி உரிமையோட கூப்பிடற அளவுக்கு உங்களை எனக்கு தெரியாது சார்…..


சரி…. ஓகே….. நீங்க அப்படி கூப்பிட வேண்டாம். உங்களால எனக்கு ஒரு பெரிய லாபம் கிடைச்சிருக்கு…. அதுக்காக தான் உங்களுக்கு டிரீட் கொடுக்க நினைக்கிறேன். ஜஸ்ட் டென் மினிட்ஸ்….. டீ டைம் போதும். எனக்கு ஒரு சேட்டிஸ்ஃபேக்ஷன் அவ்வளவுதான். 


சார்….. என்னால தான் உங்களுக்கு லாபம் கிடைச்சிருக்கு ன்னு எப்படி அவ்வளவு உறுதியாக சொல்றீங்க?


நீங்க வந்து இடிச்சதால தான் நான் லேட்டா ஆஃபீஸ் போனேன். 


அப்படியா?


ஆமாம்…..


எவ்வளவு நேரம் ஆச்சு…. நான் உங்க கார்ல இடிச்சு…. சாரி சொல்லி…. நீங்க என்னை திட்டி இங்கிருந்து கிளம்ப?


10 மினிட்ஸ் ஆகியிருக்கும்….


நீங்க ஆஃபீஸூக்கு எவ்வளவு லேட்டா போனீங்க?


ஹாஃப் ஆன் ஹார் லேட்……


10 நிமிஷம் தான் என்னால லேட் ஆச்சு….. மீதி 20 நிமிஷம்?


டிராஃபிக்ல லேட் ஆச்சு…..


அப்போ நீங்க அந்த டிராஃபிக் போலீஸூக்கும் டிரீட் கொடுக்க போரீங்களா?


அமைதியாக இருந்தான் தினேஷ்… 


சொல்லுங்க சார் ?


இல்ல….. அவங்க யாருன்னே எனக்கு தெரியாதே…..


அதான் சார்….. என்னால உங்களுக்கு அந்த லாபம் கிடைக்கல….. அந்த ரெண்டு டிராஃபிக் போலீஸூகார்களை உங்களுக்கு தெரியல….. என்னை உங்களுக்கு தெரிஞ்சிருக்கு….. அவ்வளவு தான்….. இவ்வளவுக்கும் காரணம் கடவுள் தான்….. அதனால கடவுளுக்கு வேணும்னா டிரீட் கொடுங்க….. என்று தினேஷிடம் சொல்லிவிட்டு……

வாடி…. டைம் ஆயிடிச்சு உள்ளே போகலாம்….. என்று சுமதியிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.


ஒன் மினிட்…..உங்க பேரு….. என்றான் தினேஷ்.


இல்ல வேண்டாம்….. அந்த டிராஃபிக் போலீஸூகார்களை நானும் உங்களுக்கு தெரியாத ஆளாகவே இருக்கிறேன்….. என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் நிஷா.


மிகவும் வருத்தத்துடன் வீட்டிற்கு சென்றான் தினேஷ்.


#############


தொடரும்….


அ. வைஷ்ணவி விஜயராகவன்.


இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.