பாகம் 5

Vaishnavi Vijayaraghavan | 03 May 2026 | Share


தொடர்பியல்….. பாகம் -5


கேஸ் – 1 ( சங்கவி- கிஷோர்)


ஹாய் மாதவா…. இன்னைக்கு நைட்டு டின்னருக்கு மீட் பண்ணலாமா?…. சாரி…. முக்கியமான விஷயங்கள் உன் கிட்ட பேசணும்…. பிளீஸ்…. என்று வாய்ஸ் மெஸேஜ் செய்தாள் ராகினி.


புளூ டிக் வந்தது.


சரி டி…. அப்பாலஜி அக்ஸெப்டட்…. நானே உன்னை லேப்ல இருந்து பிக்கப் பண்ணிக்கிறேன்…. உன் ரூமுக்கு போய் ரிஃபிரஷ் பண்ணிட்டு அப்புறமா டின்னருக்கு போகலாம் என்று அவனும் வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினான்.


லேபிற்கு சென்றபிறகு மம்தா மற்றும் ராகினி இருவரும் பேசிக் கொள்ளவில்லை. வேலையில் கவனமாக இருந்தார்கள். கிளம்பும்போது மட்டும் பை ராகினி, பை தேவி என்றாள் மம்தா.


பை…. என்றனர் இருவரும்.


மம்தா வெளியே வரும்போது சரியாக மாதவன் லேப் வாசலில் வந்து நின்றான்.


ராகினி வெளியே வந்தாள். மம்தா மாதவனை பார்த்து முறைத்துக் கொண்டே கிளம்பி சென்றாள். மாதவன் மம்தாவை பார்த்ததும்…. இது மம்தாவாச்சே என்று நினைத்து கொண்டான்.


பைக்கில் செல்லும் போது….. அமைதியாக வந்தான் மாதவன்.


என்னாச்சு மாதவா…. ஏன் அமைதியா வர….


அதெல்லாம் ஒண்ணும் இல்லை டி…..


மனீஷாவை நினைச்சா?


சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான் மாதவன்.


என்னாச்சு மாதவா?


மம்தா உன் கிட்ட என்ன சொன்னாங்க?


அவ ஒண்ணும் சொல்லலை….


அப்போ மனீஷாவோட நேம் உனக்கு எப்படி தெரியும்?


வீட்டிற்கு போ பேசிக்கலாம்….. என்றாள் ராகினி.


வீட்டிற்கு வந்ததும்.


உட்காரு டீ கொண்டு வரேன்…. என்றாள் ராகினி.


அவள் கையை பிடித்து சோஃபாவில் அமர வைத்து…. 


முதல்ல சொல்லு….. 


நீ சொல்லுடா…..யாரு மனீஷா?…. அவளுக்கு என்னாச்சு?


மம்தா சொல்லையா?


இல்ல…. மனீஷா பெயரை மட்டும் சொல்லி…. உன் கிட்ட கேளுன்னு சொல்லிட்டா…..


ஓ….


என்னடா சொல்லு….


மம்தாவோட சிஸ்டர் மனீஷா. அந்த பொண்ணு இப்போ உயிரோடு இல்லை.


வாட்?


ஆமாம்…. ரேப் அன்டு மர்டர்….


அச்சச்சோ….


ஆமாம் டி…. அந்த பொண்ணு ஜூனியர் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர். ஒரு பையனை சின்ஸியரா லவ் பண்ணியிருக்கா…. அவன் ஒரு எம்.எல்.ஏ வோட பையன். அவன் இவளை லவ் பண்ணல…. அவனோட பர்த்டே பார்ட்டில இவளுக்கு டிரக்ஸ் கொடுத்து அவனும் அவனோட ஃபிரெண்ட்ஸ் மூணு பேரும் சேர்ந்து இவளை ரேப் பண்ணி கொன்னுட்டானுங்க….. 


கண்கள் கலங்கியது ராகினிக்கு….


அப்புறம் என்னாச்சு?


 இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இது நடந்தது. சம்பவம் நடந்த ஒரே மாசத்துல நாலு பேரையும் அரெஸ்ட் பண்ணிட்டோம்…. எம்.எல்.ஏ பையனை மட்டும் அந்த கேஸ்ல இருந்து எடுத்திட்டாங்க…. மூணு பேர் மட்டும் தான் அவளை ரேப் பண்ணாங்க ன்னு ரிப்போர்ட் முதல் கொண்டு எல்லாத்தையும் மாத்திட்டாங்க…. அந்த கேஸை நான் தான் டீல் பண்ணேன்…. என்னால ஒண்ணும் பண்ண முடியல…. அதான் மம்தாவுக்கு என் மேல கோபம். என்னை ரொம்ப கெஞ்சி கெஞ்சி கேட்டாங்க…. எப்படியாவது அவங்க தங்கச்சியை கொன்னவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கனும்னு…. நானும் என்னால முடிஞ்ச வரைக்கும் டிரை பண்ணிட்டேன்….ஆனா என்னால எதுவுமே முடியல…. நானும் அந்த எம்.எல்.ஏ கிட்ட காசு வாங்கிக்கிட்டு தான் அவனை அந்த கேஸூல இருந்து விலக்கிட்டேன்னு மம்தா நினைக்கிறாங்க…. என்றான் மாதவன்.


அவங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் தான…. ஃபோட்டோ, வீடியோ…. எதுவும் கிடைக்கலீயா?


லவ்வர்ஸ் தான்…. ஆனா அவனோட ஃபிரண்ட்ஸ் அவனுக்கு தெரியாம அந்த பொண்ணை கிட்நேப் பண்ணி ரேப் பண்ணிட்டாங்கன்னு அவனே வாக்குமூலம் கொடுத்திட்டான்…. அவனோட சீமன் எதுவும் அவளோட பாடில இல்லைன்னு அவனை சஸ்பெக்ட் லிஸ்ட்ல இருந்து முதலிலேயே எடுத்திட்டாங்க…. எல்லாருக்கும் தெரியும் அவன் தான் பிரைம் குற்றவாளி ன்னு ஆனா யாராலயும் அவனை ஒண்ணும் பண்ண முடியல…. அந்த எம்.எல்.ஏ அந்த பையனுக்கு பிரச்சனை வரக்கூடாது ன்னு கேஸ் முடிஞ்சதும் அவனை வெளிநாட்டுக்கு அனுப்பிட்டான். பாவம் அந்த பொண்ணு மனீஷா….. அவளோட இறப்புக்கு நியாயம் கிடைக்கல….. என்றான் மாதவன்.


ஆமாம் டா…. அவன் மட்டும் இங்கே இருந்தான்னா….. அவனை என்கவுன்டர்ல இல்லன்னா தூக்குல போட்டிட சொல்லி இருப்பேன்…. என்றாள் ராகினி.


ஏய்…. லூசா டி நீ…. சினிமா டயலாக்கு எல்லாம் பேசாதே…நீ கமிஷ்னரா என்கவுண்டர் ஆர்டர் போட…. இல்ல ஜட்ஜா …. நீ சொன்னதும் தூக்குல போட…. கேட்ட உனக்கே இவ்வளவு கோபம் வருதுன்னா…. பாதிக்கப்பட்ட அந்த மம்தாவுக்கு எப்படி இருக்கும். அவங்க கோபம் நியாயமானது தான்…. அதான் நான் அமைதியா இருந்திட்டேன்.


தன் ஃபோனை எடுத்து காதில் வைத்து….


மம்தா கேட்டியா…. என்னோட மாதவன் நல்லவன்…. அதை நீ புரிஞ்சிக்க தான் கால் பண்ணி உன்னை லைன்லையே இருக்க சொன்னேன்.


புரிஞ்சிக்கிட்டேன் ராகினி. ஃபோனை மாதவன் கிட்ட கொடு….


ஒரு நிமிஷம்…. 

இந்தா டா மம்தா லைன்ல இருக்கா…..


என்னடி…. என்ன பண்ணிருக்க….. லைன்ல வச்சிக்கிட்டே என் கிட்ட பேசி இருக்க…. நான் எதாவது தப்பா பேசி இருந்தா என்ன பண்றது…. லூசா டி நீ…. என்று மெதுவாக அவளுடைய காதருகில் சொன்னான் மாதவன்.


நீ நல்லவன்னு நான் சொன்னா அது கரெக்டா இருக்காது…. நிச்சயமா உன் மேல தப்பு இருக்காது…. மம்தா தான் உன்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்காங்க ன்னு எனக்கு தெரியும்…. அந்த உண்மையை அவங்களே தெரிஞ்சிக்கட்டுனு தான்….. நான் கால் பண்ணி லைன்ல இருக்க சொன்னேன். இந்தா பேசு டா…. என்றாள் ராகினி.


ஹலோ….


சாரி மிஸ்டர் மாதவன்…. நான் உங்களை தப்பா நினைச்சிட்டேன்….. 


பரவாயில்லை மிஸ். மம்தா…. உங்க இடத்துல யாரு இருந்தாலும் அப்படி தான் நினைச்சு இருப்பாங்க…..


நீங்க என் ஃபிரெண்டோட லவ்வர்…. ஸோ நான் உங்களை இதுக்கு மேல பிரதர் இல்ல பிரோ ன்னு கூப்பிடுறேன்….. நீங்களும் என்னை வா போ ன்னு சொல்லுங்க…. 


ஓகே மம்தா…. என்னை புரிஞ்சிக்கிட்டதுக்கு தேங்க்ஸ்…..


இவ்வளவு நாளாக உங்களை தப்பா நினைச்சதுக்கு சாரி பிரதர்…..


ஓகே சிஸ்டர்…. சாரி அக்ஸெப்டட்…. என்று சொல்லி சிரித்தான் மாதவன்.


ராகினி கிட்ட ஃபோனை கொடுங்க பிரதர்…. என்றாள் மம்தா.


ஓகே…. பை சிஸ்டர்…. என்று சொல்லி விட்டு ஃபோனை ராகினியிடம் கொடுத்தான் மாதவன்.


பை பிரதர்…. என்றாள் மம்தா.


ஹலோ மம்தா…. 


சாரி ராகினி…..


எதுக்கு?


நான் மாதவன் பத்தி பேசி உன்னை ஹேர்ட் பண்ணிட்டேன்….


இல்ல மம்தா….. நீ மட்டும் சொல்லைன்னா லைஃப் லாங் நீ மாதவனை தப்பா நினைச்சிருப்ப…. இப்போ உண்மை தெரிஞ்சது இல்ல…. அதுவே போதும்….


ஓகே ராகினி…. பை…. 


பை மம்தா…. ஸீ யூ டூமாரோ…. என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு மாதவன் தோளில் சாய்ந்து கொண்டாள் ராகினி.


அவளுடைய கையை கோர்த்து முத்தம் கொடுத்தான் மாதவன். என் மேலே எவ்வளவு நம்பிக்கை டி உனக்கு….


நான் உன்னை லவ் பண்றேன் டா…. உன்னை பத்தி உன்னைவிட எனக்கு நல்லா தெரியும்….. மம்தா உன் ஃபோட்டோவை பார்த்து இவனா…. என்றதும் ஏதோ கசப்பான அனுபவம் அவளுக்கு உன்னிடம் இருக்கு ன்னு புரிஞ்சிக்கிட்டேன்….. எனக்கு உன்னை பத்தி தெரியும் என்றதால அவளுக்கு புரியவைக்க நினைச்சேன்…. சாரி டா…. உன்னை கேட்காம அவளை லைன்ல வச்சிக்கிட்டே உன் கிட்ட பேசினேன்…. 


இட்ஸ் ஓகே ராகினி…. நீ எந்த அளவுக்கு என்னை லவ் பண்ற ன்னு எனக்கு தெரியும்…. யாரும் என்னை பத்தி தப்பா நினைக்கவோ பேசவோ கூட நீ அனுமதிக்க மாட்ட…. உண்மையிலேயே நீ கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கனும்…..


நானும் தான் டா …. என்று சொல்லி அவனுடைய கன்னத்தில் முத்தமிட்டாள் ராகினி.


மாதவா…..


சொல்லு டி….


நான் சொல்றதை கொஞ்சம் முழுசா கேட்டு விட்டு அப்புறமா நீ உன் கருத்தை சொல்லு…. தயவு செய்து நான் பேசும் போது நடுவில எதுவும் சொல்லாதே….


என்னடி…. சரி….. சொல்லு…..


இன்னைக்கு ஏன் நான் காலைல ஜங்ஷன்ல மீட் பண்ண வரலைன்னு தெரியுமா?


ஏன் என்னாச்சு?….. லைசென்ஸ் இல்லாம ஸ்கூட்டர் ஓட்டினதுனால டிராஃபிக் போலீஸ் புடிச்சிட்டாங்களா?


ஏய்…. நான் தான் உன்னை நடுவில பேசாதே ன்னு சொன்னேன் இல்ல டா….


இது நல்ல கதையா இருக்கே….. நீ தான கேள்வி கேட்ட…. அதுக்கு பதில் தான சொல்றேன்…. என்று சொல்லி சிரித்தான் மாதவன்.


யப்பா…. தெரியாம கேள்வி கேட்டுட்டேன்…. நான் சொல்றதை மட்டும் கேளு…. என்றாள் ராகினி.


சரி சொல்லு…. நான் எதுவும் பேசல….


இன்னைக்கு மார்னிங் நான் ரம்யாவை ரயில்வே ஸ்டேஷன்ல டிராப் பண்ண போனேன்…. அப்போ அங்கே சங்கவியை பார்த்தேன்….. என்று ஆரம்பித்து அவளுடைய கார் நம்பரை நோட் செய்து ஆர் டி ஓ ஆஃபீஸூக்கு கால் செய்து கேட்டவரை அனைத்தையும் சொன்னாள் ராகினி.


அப்போ…. உனக்கு என் கிட்ட இருந்து அந்த கார் டீடெயில்ஸ் தெரிய லெட்டர் கொடுக்கனும்…. அப்படி தானே….


என்னடா நீ…. நான் சொல்றது உனக்கு புரியுதா இல்லையா?


ராகினி…. கொஞ்சம் படிச்ச பொண்ணு மாதிரி நடந்துக்கோ…. கனவுல வருவது எல்லாம் பலிக்காது….. அதுவும் இதுக்கு முன்னாடி எந்த கனவும் பலிச்சது இல்லன்னு நீயே சொல்ற…. அப்புறம் இது மட்டும் எப்படி நடக்கும் ன்னு நினைக்கிற….


மாதவா…. புரிஞ்சிக்கோ டா…. நேம்ஸ் எல்லாம் கரெக்டா இருக்கு…. எனக்கு கனவுல வந்த அதே டயலாக்குகளை பேசினாள் சங்கவி…. எனக்காக இந்த ஹெல்ப் பண்ணுடா…. பிளீஸ்….



தொடரும்…..

அ. வைஷ்ணவி விஜயராகவன்.


இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.