பாகம் -23,24

Vaishnavi Vijayaraghavan | 28 Apr 2026 | Share

பாகம் 23 


 என்ன மெசேஜ் பண்ணி இருக்கான் சீக்கிரம் ஓப்பன் பண்ணு என்றான் விஹான்.


 இரண்டு வாய்ஸ் மெசேஜ் இருந்தது.


 ஃபுல் சவுண்ட் வைத்து ஆன் செய்தாள் விருத்திகா.


என்னை மன்னிச்சிடு விரு, உன் கிட்ட பொய் சொல்லிட்டேன். நான் ஆஃபீஸ் விஷயமா பெங்களூர் போகல. நான் மும்பய்ல இருக்கேன். பிசினஸ் பண்ண வந்தேன். நீ ஒத்துக் கொள்ளாததால உன் கிட்ட சொல்லாம உன்னோட நகை அப்புறம் நம்ம எஃப்டில வச்சிருந்த பணம் எல்லாம் எடுத்து வந்துட்டேன். நான் உன்னை ஏமாத்துனேன். கடவுள் அதுக்கான தண்டனையை எனக்கு கொடுத்துட்டாரு. நான் எடுத்துட்டு வந்த பணம் நகை எல்லாத்தையும் தொலைச்சுட்டேன். என்னை ஏமாத்திட்டாங்க. 


அபிசியல்லா ரிஜிஸ்டர் ஆகாத ஒரு கம்பெனியில நான் இன்வெஸ்ட் பண்ணினேன். மொத்தமா எனக்கு ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சுச்சு. உன் முகத்துல முழிக்க எனக்கு அருகதை இல்லை. அந்த அளவுக்கு பணமும் நகையும் சம்பாதிக்கிற வரைக்கும் நான் உன் முகத்துல முழிக்க மாட்டேன். சென்னைக்கு வரவும் மாட்டேன். 


 சொல்றதுக்கு கஷ்டமா தான் இருக்கு, ஆனா எனக்கு வேற வழி தெரியல, தயவு செஞ்சு உன் வயித்துல வளருர நம்ம குழந்தையை அபார்ட் பண்ணிடு என்று அழுது கொண்டே கூறினான்.


 பிறகு அடுத்ததாக வந்த இன்னொரு மெசேஜ்,


 நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இரு. உன் வாழ்க்கையை நான் பாழாக்கிட்டேன். என்னை மன்னித்துவிடு. ஆனா எப்படியாவது நான் உன்னோட நகையும் பணமும் சம்பாதிச்சு திருப்பி கொடுத்துவிடுவேன். என்னை தேடாதே. நான் கிடைக்க மாட்டேன். இங்கிருந்து கிளம்பிடுவேன். எனக்கு இரண்டு வருஷம் ஆகும் உன்னோட பணம் நகையை திருப்பிக் கொடுக்க. அதுவரை நான் உன்னை சந்திக்கவும் மாட்டேன். உன்னிடம் பேசவும் மாட்டேன். என் நம்பரை இப்போதே டிஸ்கனெக்ட் செய்து விடுவேன். உன்னோட நம்பரை மட்டும் மாத்திடாதே. ஏன்னா இரண்டு வருஷம் கழிச்சு நான் உன்னை பார்க்க வருவேன். அப்போது நீ இருக்கும் இடம் எனக்கு தெரியனும் இல்ல அதுக்காக தான். குட் பை விரு. என்று அனுப்பி இருந்தான்.


 உடனே அந்த நம்பருக்கு கால் செய்தாள்.


 காலை கட் செய்து ஃபோனை ஆஃப் செய்தான் தீபக்.


 மறுபடியும் கால் செய்தாள். முதலில் ரிங் போனது இப்பொழுது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. மறுபடியும் கால் செய்தாள் இப்போது நாட் ரீச்சபிள் என்று வந்தது. 


 அண்ணா என்று சொல்லி விஹானின் தோளில் சாய்ந்து அழுதாள் விருத்திகா.


 விஹானுக்கு ஒன்றும் புரியவில்லை.


 நீ டென்ஷன் ஆகாத ஃபோனை கொடு நான் போலீஸ் ஸ்டேஷன் போறேன்.


அண்ணா நானும் வரேன் அண்ணா.


 இல்லம்மா வேண்டாம். 


 அண்ணா நான் வீட்ல இருந்தேன்னா எனக்கு பைத்தியம் பிடிச்சுரும் அண்ணா ப்ளீஸ் என்று அழுதாள்.   


 என்ன செய்வது என்றே புரியவில்லை அவனுக்கு. ரோஹித்துக்கு கால் செய்தான்.


 ஹலோ எங்கடா இருக்க?


 மச்சி இப்பதான் ஆபீஸ்க்கு வந்தேண்டா. நீ நல்லா தூங்கிட்டு இருந்த அதான் நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணல.


 உன்ன மறுபடியும் மறுபடியும் தொல்லை பண்றேன்னு நினைக்காத டா.


 என்னாச்சு மச்சி ஏன் ஒரு மாதிரி பேசுற.


 தீபக் கிட்ட இருந்து வாய்ஸ் மெசேஜ் வந்து இருக்குடா.


 அப்படியா எங்க இருக்காரு, நல்லா இருக்காரு இல்ல?


 ஃபோன்ல சொல்ல முடியாது டா நேரா வரியா?


 சரி மச்சி கவலைப்படாத நான் உடனே வரேன் என்று சொல்லிவிட்டு மேனேஜரிடம் சென்று,


 தனக்கு வயிறு வலி லூஸ் மோஷன் என்று சொல்லி டல்லாக இருப்பது போல் நடித்து பர்மிஷன் கேட்டு விஹானின் வீட்டிற்கு வேமாக வந்தான் ரோஹித்.


 ரோஹித் வந்ததும் அந்த வாய்ஸ் மெசேஜை போட்டு காண்பித்தான் விஹான்.


 என்னடா இது, இப்படி எல்லாம் ஆகும்னு நம்ம நினைக்கவே இல்லையே.


 அதாண்டா எனக்கு ஒன்னும் புரியல.


 இப்ப என்னடா பண்றது?


 இந்த ரெக்கார்டிங் எடுத்துக்கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷன்ல கொடுக்கலாமா?


 சரி மச்சி, நல்ல யோசனை வா உடனே போலாம்.


 விருத்திகாவும் வரேன்னு சொல்றா டா.


 அவ வேண்டாம்டா.


 நானும் அதே தான் சொன்னேன். ஆனா இப்ப அவ இருக்குற நிலைமையில் வீட்ல தனியா விட்டுட்டு போறதும் நல்லது இல்லை என்றும் எனக்கு தோணுது.


 ஓகே டா, சரி வரட்டும் நேத்து மாதிரி காரிலேயே உட்கார்ந்து இருக்கட்டும் என்று சொல்லி அவளையும் அழைத்துச் சென்றனர்.


 கம்ப்ளைன்ட் உடன், வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜ் காப்பியையும் போலீஸ் ஸ்டேஷனில் சப்மிட் செய்து விட்டு வீட்டிற்கு வந்தனர்.


 விருத்திகா மிகவும் டிப்ரஷனில் இருந்தாள்.


 விகான் அவள் அருகில் அமர்ந்து.


 அவன் கிடக்கிறான் லூசு பையன். நீ அவன் சொன்னதெல்லாம் நினைச்சுகிட்டு இருக்காத. என்னவோ பெருசா சொல்றான், ரெண்டு வருஷத்துல சம்பாதிச்சுருவேன்னு. இந்த அளவுக்கு அவன் சம்பாதிக்கிறதுக்கு அப்படி என்ன அவனுக்கு வேலை கிடைத்துவிடும். ஒரு வாரம் இல்ல பத்து நாள் அதுக்கு மேல அவனால தாக்குப் பிடிக்க முடியாது. உன்னை தேடி வந்திருவான் பாரு.


 அப்படி வரலைன்னா?


 கவலைப்படாதமா, எப்படியாவது அவன தேடி கண்டுபிடித்துவிடலாம்.


 கண்டுபிடிச்சு?


இது என்ன கேள்வி. கண்டுபிடிச்சு அவன உன்னோட சேர்ந்து வாழ வைக்கிறேன்.


 இல்ல அண்ணா, வேண்டாம். அப்படி ஒருத்தர கட்டாயப்படுத்தி என் கூட வாழ வைக்கணும்னு அவசியம் இல்ல . 


 கோவத்துல எடுக்குற எந்த முடிவும் சரியா இருக்காது விரு.


 இல்லனா நான் முடிவு பண்ணிட்டேன். இதுக்கு மேல அவனே வந்து என் காலில் விழுந்தாலும் அவன் கூட நான் வாழ மாட்டேன்.


 அவசரப்பட்டு பேசாதமா. உன் வயித்துல வளர குழந்தைக்காகவாவது நீ தீபக் கூட சேர்ந்து தான் வாழனும்.


 அவன் இருந்தாதான் என் குழந்தையை என்னால வளர்க்க முடியும் என்று அவசியம் கிடையாது அண்ணா.


 என்னம்மா சொல்ற?


ஆமாம் அண்ணா, நான் தனியாவே என் குழந்தையை வளர்த்துக்கிறேன்.


 அவள் கோபத்திலும் வெறுப்பிலும் அவ்வாறு பேசுகிறாள் என்று நினைத்து அமைதியாக இருந்து விட்டான் விஹான்.


 பிறகு அனைவரும் அமைதியாக இருந்தனர்.


 சரி மச்சி நீ ஆஃபீஸ் கிளம்பறதுன்னா கிளம்பு என்றான் விஹான் ரோஹித்திடம்.


 இல்லடா நான் எனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி லீவு போட்டு விட்டேன் என்றான் ரோஹித்.

தொடரும்…..

அ. வைஷ்ணவி விஜயராகவன்.


 


பாகம் 24


என்னடா சொல்ற? என்றான் விஹான்.


டேய் நீ வேற, வயிறு சரியில்லன்னு சொல்லி கிளம்பி வந்தேன்டா. நேத்தும் பர்மிஷன் போட்டு வந்துட்டேன் இல்ல இன்னைக்கு லீவு கேட்டா தர மாட்டாங்க. அதனாலதான் உடம்பு சரி இல்லைன்னு பொய் சொல்லிட்டு வந்துட்டேன் என்றான் ரோஹித்.


 உங்க மேல ஒருத்தர் நம்பிக்கை வைக்குறாங்கன்னா எதுக்கு அவங்க கிட்ட நீங்க பொய் சொல்றீங்க, நாளைக்கு உண்மையாவே உங்களுக்கு முடியலனாலும் உங்கள அவங்க நம்ப மாட்டாங்க. இதுக்கு மேல இப்படி பண்ணாதீங்க ரோஹித் என்றாள் விருத்திகா.


 என்ன விருத்திகா உனக்காக அவன் லீவு போட்டுட்டு வந்து இருக்கான் அவன் கிட்ட நீ இப்படி பேசுற? என்றான் விஹான்.


 இல்ல மச்சி, எதுவும் சொல்லாத. அவ ஆல்ரெடி டென்ஷனா இருக்கா. இப்ப எதுவா இருந்தாலும் நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணு. நான் கிளம்புறேன் நீ பாத்துக்கோ என்று மெதுவாக அவன் காதில் சொல்லிவிட்டு கிளம்பினான் ரோஹித்.


 சாரி விருத்திகா, நான் கிளம்புறேன் என்று அவளிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் ரோஹித்.


 வெகு நேரமாக அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தாள் விருத்திகா. பிறகு ரூமுக்கு சென்றாள். பெட்டில் அமர்ந்து ஃபோனில் தீபக்கின் ஃபோட்டோவை பார்த்து அழுதாள். பின்னர் அவளை அவளே சமாதானம் செய்து கொண்டு ரூமிலேயே அந்தப் பக்கமும் இந்த பக்கமும் நடந்தாள். ஸ்டிரெஸ்ஸின் எல்லைக்கே சென்று விட்டாள். அவளுக்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது.


 ஃபோனில் தீபக்கின் ஃபோட்டோவை வைத்து அதை பார்த்து பேசினாள்.


 ஏண்டா இப்படி பண்ண? என் மேல துளி கூட உனக்கு லவ் இல்லையா? என்னோட உயிர் நீ ன்னு சொல்லுவியேடா? இப்ப எப்படிடா என்னை விட்டுட்டு உன்னால இருக்க முடியுது. காசு பணம் எனக்கு எதுவும் வேணாம் டா. ஒரே ஒரு முறை நான் கால் பண்றேன் என் ஃபோனை எடு. நான் பேசுறத கொஞ்சம் கேளு. எனக்கு நீ தான் முக்கியம். காசு பணம் தேவையில்லை. தயவு செஞ்சு வந்துடுடா. எனக்காக இல்லனாலும், நம்ம குழந்தைக்காக வந்துடுடா. ப்ளீஸ் தீபு என்று கண்கள் கலங்க பேசினாள். பேசிய அனைத்தையும் ரெக்கார்ட் செய்து அவனுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினாள். அவன் சுவிட்ச் ஆஃப் செய்து சிம் கார்டை எடுத்து விட்டதால் மெசேஜ் டெலிவரி ஆகவில்லை.


 ஃபோனை தூக்கிப்போட்டு விட்டு ஹாலுக்கு சென்று டிவி ஆன் செய்தாள். பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றாலும் தன் மனநிலையை மாற்றுவதற்காக டிவி ஆன் செய்தாள். இருப்பினும் டிவியில் வந்த அனைத்தையும் கண்கள் பார்த்ததே தவிர அவை எதுவும் அவள் மூளைக்கு எட்டவில்லை. 


 தன் தங்கையின் நிலையை நன்றாக புரிந்து கொண்டான் விஹான். அவளுக்காக ஜூஸ் போட்டு கொண்டு வந்து கொடுத்தான்.


 எதுவும் சொல்லாமல் அதை வாங்கி குடித்தாள் விருத்திகா.


 விஹான் அடுத்த இரண்டு நாட்களுக்கு லீவு போட்டுவிட்டு விருத்திகாவின் பக்கத்திலேயே இருந்தான். அவன் கேட்பதற்கு பதில் சொன்னாலே தவிர அவளாக எதுவுமே அவனிடம் பேசவே இல்லை. விஹானுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. 


அண்ணா,


 சொல்லு விரு,


 இன்னைக்கு ஈவினிங் டாக்டர் கிட்ட அப்பாயின்மென்ட் இருக்கு. கூட்டிட்டு போறியா.


 கண்டிப்பா மா போலாம். ரோஹித்தை வர சொல்லவா?


 இல்ல நான் வேண்டாம் நம்ம கார் புக் பண்ணி போகலாம்.


 சரிம்மா.


 கார் புக் செய்து இருவரும் ஹாஸ்பிட்டலுக்கு சென்றனர்.


 டாக்டர் செக் செய்துவிட்டு, பின்னர் பேசினார்.


 இவர் என்ன வேணும் மா உனக்கு?


 என்னோட அண்ணா.


 ஓகே உங்க ஹஸ்பண்ட் வரலையாமா?


 இல்ல அவர் வெளியூர் போயிருக்காரு மேடம் என்று விஹான் பதில் சொன்னான்.


 ஓகே அப்போ இவங்க எங்க இருப்பாங்க?


எதுக்கு கேக்குறீங்க மேடம்.


 இல்லை இவங்க என்ன சாப்பிடணும் சாப்பிடக்கூடாது என்ன மாத்திரை எல்லாம் எடுத்துக்கணும்னு அவங்க கூட இருந்து பாத்துக்குறவங்க கிட்ட சொல்லணும் அதனாலதான் ஹஸ்பண்ட் கிட்ட சொல்லலாம்னு நினைச்சு கேட்டேன். லேடிஸ் யாரும் வரலையா உங்க அம்மா மாமியார் யாருமே? 


 எங்களுக்கு அம்மா கிடையாது மேடம். இவ லவ் மேரேஜ் அதனால இவளோட மாமனார் மாமியார் இவங்கள சேர்த்துக்கல.


 ஓ, ஓகே. சரி அப்போ நீங்க தான் இவங்கள பார்த்துப்பீங்களா?


 ஆமாம் டாக்டர்.


 ஓகே அப்போ உங்க கிட்டயே இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எல்லாம் சொல்லடறேன்.


ஓகே டாக்டர்.


 லாஸ்ட் டைம் வந்தத விட ரொம்ப வீக்கா இருக்காங்க. என்ன ஆச்சு சரியா சாப்பிடறது இல்லையா வாந்தி அதிகமா வருதா?


 அமைதியாக இருந்தாள் விருத்திக்கா.


 இல்ல மேடம், அது வந்து என்று இழுத்தான் விஹான்.


மேடம், நான் டிப்ரஷன்ல இருக்கேன். எனக்கு ஏதாவது கன்சிலிங் கொடுத்த ஏற்பாடு பண்றீங்களா. சத்தியமா என்னால முடியல.


 என்ன ஆச்சு மா ஏன் இவ்ளோ பதட்டமா இருக்க. இப்படி இருந்தா உனக்கும் நல்லது இல்ல உன் வயிற்றில் வளருர குழந்தைக்கும் நல்லது இல்லம்மா.


 அதனால தான் மேடம் சரி பண்ணனும்னு நினைக்கிறேன். என் குழந்தைக்காக தான் நான் நல்லா இருக்கனும்னு நினைக்கிறேன்.


 ஒரு நிமிஷம் வெளிய வெயிட் பண்ணுங்க மா.


 விஹானும் சேரல் இருந்து எழுந்தான்.


 ஒரு நிமிஷம் நீங்க உட்காருங்க, உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்றார் டாக்டர்.


 ஓகே விரு, நீ வெளியே உட்கார்ந்துகிட்டு இரு, நான் பேசிட்டு வரேன் என்றான் விஹான்.


 அவள் வெளியே சென்றதும்.


 சொல்லுங்க சார் என்ன ஆச்சு உங்க சிஸ்டருக்கு?


 தீபக்கை பற்றி மேலோட்டமாக சொன்னான். பிசினஸ் விஷயமா வெளியூர் போயிருக்கார். நாலு நாளா ஃபோன் நாட் ரீச்சபிள். போலீஸ்ல கூட கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கோம். அதனாலதான் அவ ரொம்ப டென்ஷனா இருக்கா.


 ஓகே இப்ப புரியுது, சரி என்னோட ஃப்ரெண்ட் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் இருக்காங்க. நான் லெட்டர் கொடுக்கிறேன் அதை எடுத்துட்டு போய் கொடுத்து நாளைக்கு அப்பாயின்மென்ட் வாங்கி பாருங்க. உங்க சிஸ்டரை பார்த்தா ஒரு வாரமாவே டென்ஷனா இருக்குற மாதிரி இருக்கு. அதனால எவ்வளவு சீக்கிரம் அவங்கள பார்த்து ட்ரீட்மென்ட் எடுக்க முடியுமோ எடுங்க. இல்லனா அபார்ஷன் ஆகுறதுக்கு கூட நிறைய சான்ஸ் இருக்கு என்றார் டாக்டர்.


 ஓகே டாக்டர், இம்மிடியேட்டா அவள கூட்டிட்டு போறேன் என்றாள் விஹான்.


தொடரும்….

அ. வைஷ்ணவி விஜயராகவன்.  


 

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.