பாகம் 21
தீபக் அவ்வாறு செய்ததை நினைத்து மிகவும் வருந்தினாள் விருத்திகா.
தன் ஃபோனில் இருந்து பேங்க் மேனேஜருக்கு கால் செய்தாள்.
ஹலோ சார், நான் விருத்திகா பேசுறேன்.
குட் மார்னிங், சொல்லுங்க மேடம்.
குட் மார்னிங் சார் என் அக்கவுண்ட் டீடைல்ஸ் சொல்றேன் எனக்கு எவ்ளோ பேலன்ஸ் இருக்குன்னு செக் பண்ணி சொல்றீங்களா?
நீங்க மொபைல் பேங்கிங் யூஸ் பண்ணலையா மேடம்.
இல்ல சார் என்னோட ஹஸ்பண்ட் ஓட ஃபோன்ல தான் இருக்கு அவர் வெளியே போய் இருக்காரு, அதனாலதான்.
சரிங்க மேடம் நான் சொல்றேன் எனக்கு அக்கௌன்ட் டீடெயில்ஸ் சொல்லுங்க.
ஒன் மினிட் சார், என்ற சொல்லி அவளுடைய பேங்க் பாஸ் புக்கை தன் பேகில் இருந்து எடுத்தாள்.
ஓகே மேடம் என்று சொல்லி லைனில் காத்திருந்தார் பேங்க் மேனேஜர்.
பேங்க் பாஸ்புக்கில் இருக்கும் அக்கவுண்ட் நம்பர் மற்றும் அவர்கள் இருவரின் பெயரையும் கூறினாள் விருத்திகா.
ஜாயிண்ட் அக்கவுண்ட் தான மேடம்?
ஆமாம் சார்.
ஒரு நிமிஷம் மேடம் என்று சொல்லிவிட்டு,
செக் செய்து விட்டு,
மேடம்,
சொல்லுங்க சார்,
8412 ருபீஸ் இருக்கு மேடம்.
மனதிற்குள் அதிர்ச்சி அடைந்தாள் விருத்திகா.
சார், எஃப்டி ல எவ்ளோ இருக்குன்னு சொல்றீங்களா?
ஒரு நிமிஷம் மேடம்.
மேடம், எஃப்டி எல்லாமே லாஸ்ட் வீக் தீபக் சார் க்ளோஸ் பண்ணிட்டார்.
ஓ அப்படியா, ஓகே சார் தேங்க்யூ என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாள்.
அழுது கொண்டே இருந்தாள் விருத்திகா.
சிறிது நேரம் கழித்து தன் அண்ணனுக்கு கால் செய்தாள்.
தன் தங்கை கால் செய்தால் என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான் விஹான்.
அப்போது சரியாக அவளிடம் இருந்து கால் வந்தது.
ஹலோ விரு, ஆபீஸ்ல ஒரு முக்கியமான வேலை இருக்குமா, நாளைக்கு வேணும்னா தீபக் கம்பெனிக்கு போய் பார்க்கலாமா?
இல்லன்னா வேண்டாம் அதை சொல்றதுக்கு தான் கால் பண்ணேன்.
என்னம்மா சொல்ற?
தீபக் வரமாட்டான். அவன் என்னை ஏமாத்திட்டான் என்று சொல்லி தேம்பி தேம்பி அழுதாள்.
விரு, விரு, என்னாச்சு என்ற பதட்டமாக பேசினான் விஹான்.
ஒன்னும் இல்ல அண்ணா, நான் ஃபோனை வைக்கிறேன் என்று சொல்லி அவன் பதிலுக்கு காத்திராமல் ஃபோனை வைத்து விட்டாள் விருத்திகா.
உடனே ஆபீஸில் பர்மிஷன் கேட்டு வீட்டுக்கு விரைந்தான் விஹான்.
அவன் உள்ளே நுழைந்ததும் அண்ணா என்று சொல்லி ஓடி வந்து கட்டிக் கொண்டாள் விருத்திகா.
விரு, என்ன ஆச்சு? என்னாச்சு ஏன் இப்படி அழுவுற சொல்லு.
அண்ணா தீபக் என்னை ஏமாத்திட்டான்.
என்ன லூசு மாதிரி உளருற.
அண்ணா, பேங்க்ல இருந்த எல்லா நகையையும் அப்புறம் எப்ஃடி ல வச்சிருந்த 5 லேக்ஸூம் எடுத்துக்கிட்டு போயிட்டான் அண்ணா.
நகை எல்லாம் தான் இருந்துச்சே. அதைப் பார்த்து அப்பறமா தான் எனக்கு ரோஹித்துக்கும் கொஞ்சம் நிம்மதியா இருந்தது. தீபக் வந்து பிசினஸ் விஷயமா போகல அப்படின்னு நாங்க பேசிக்கிட்டோம்.
கம்பெனியில விசாரித்ததும் தீபக் 2 மாசம் முன்னாடியே வேலையை விட்டு போனதும் ஏன் அண்ணா என்கிட்ட சொல்லல?
இல்ல விரு, நான் சொல்லலாம் தான் நினைச்சேன். ரோஹித் தான் இப்ப நீ இருக்கிற நிலைமையில இன்னும் கஷ்டப்படுவ அது உனக்கும் உன் வயிற்றில் இருக்கிற குழந்தைக்கும் நல்லது இல்லை என்று சொல்லி வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.
அவர் சொன்னால் நீ என்கிட்ட இருந்து உண்மையை மறைச்சிடுவியா அண்ணா. எவ்ளோ நாளைக்கு அண்ணா உண்மையை மறைக்க முடியும்?
அப்படி இல்ல விரு, சரியான உண்மை தெரியாம எதுக்கு உன்னையும் கொழப்பனும்ன்றதுனால தான் யோசிச்சு நாங்க ரெண்டு பேரும் உண்மையை சொல்லல.
பெருமூச்சு விட்டாள் விருத்திகா.
அவன ரொம்ப நம்பினேன் அண்ணா. அவன் இப்படி பண்ணுவான்னு சத்தியமா நினைக்கல.
இப்ப கூட ஒன்னும் கெட்டுப் போகல, தயவு செஞ்சு பொறுமையா இரு. நம்ம விசாரிக்கலாம். போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்.
அண்ணா அவன் பிளான் பண்ணி என்னை ஏமாத்திட்டு போயிருக்கான் அண்ணா.
இருக்காது விரு, அவன் அப்படிப்பட்டவனா தெரியல.
இல்லன்னா ரெண்டு மாசம் முன்னாடியே அவன் என்கிட்ட நகையை விற்று விடுவதை பத்தி கேட்டான், நான்தான் ஒத்துக்கல. நான் ஒத்துக்காததுனால அதுக்கு டூப்ளிகேட் நகை செஞ்சு வச்சுட்டு இப்படி மொத்தமா எடுத்துக்கிட்டு போயிருக்கான். எஃப்டி ல இருந்த அஞ்சு லட்ச ரூபாயும் குளோஸ் பண்ணி எடுத்துட்டு போய் இருக்கான்னா கண்டிப்பா பிசினஸ் பண்றதுக்காக தான் போய் இருக்கான்.
அழுது கொண்டிருந்த தன் தங்கையின் தோளை தடவிக் கொடுத்து சமாதானம் செய்தான் விஹான்.
அப்போது எதேச்சையாக விஹானுக்கு ரோஹித் கால் செய்தான்.
மச்சி ஃப்ரீயா ஈவினிங் வெளிய போலாமா என்றான்.
நான் வீட்டுக்கு வந்துட்டேன் டா என்றான் விஹான்.
என்னாச்சுடா, ஏன் ஒரு மாதிரி பேசுற, ஏதாவது ப்ராப்ளமா?
வீட்டுக்கு வரியாடா?
கண்டிப்பா இன்னொரு ஹாஃப் அன் ஹவர்ல வேலை முடிச்சிருவேன், முடிச்சதும் நான் வந்துடறேன்.
ஓகே மச்சி, பை.
பை டா.
அண்ணா இப்ப என்ன அண்ணா பண்றது.
ரோஹித் வரட்டும் நானும் ரோஹித்தும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் கம்ப்ளைன்ட் கொடுக்கிறோம்.
என்னன்னு கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறீங்க?
தீபக் காணோம்னு. பெங்களூர் போறேன்னு சொல்லிட்டு போனாரு நாலு நாளா ஃபோன் நாட் ரீச்சபிள்னு வருதுன்னு.
நானும் வரவா அண்ணா.
போலீஸ் ஸ்டேஷனுக்கா?
ஆமாம் அண்ணா.
வேண்டாமா. நீ எங்க கூட வா, ஆனா போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ள வர வேண்டாம் காரிலேயே வெயிட் பண்ணிட்டு இரு. நாங்க ரெண்டு பேரும் மட்டும் போய் கம்பிளைன்ட் கொடுத்துட்டு வந்துடுறோம்.
ஓகே அண்ணா.
மறுபடியும் தீபக்கிற்கு கால் செய்தாள் விருத்திக்கா. அப்போதும் நாட் ரீச்சபிள் என்று வந்தது. கண்கள் கலங்கியது.
ஒரு மணி நேரத்தில் ரோஹித் வந்தான்.
அவனிடம் விளக்கமாக கூறினான் விஹான்.
விருத்திகா அழுவதை பார்த்து ரோஹித்துக்கு கஷ்டமாக இருந்தது.
கவலைப்படாத விருத்திகா, சீக்கிரமா தீபக்கை கண்டுபிடிச்சிடலாம். நான் உனக்கு ப்ராமிஸ் பண்றேன் என்றான்.
தேங்க்யூ ரோஹித் என்றாள் விருத்திகா .
பிறகு மூவரும் கிளம்பி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர்.
போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டு திரும்ப வீட்டிற்கு வரும் பொழுது,
அண்ணா ஏதாவது ஒரு கோவிலுக்கு போயிட்டு போலாமா என்றாள் விருத்திகா.
விஹான் ரோஹித்தை பார்க்க.
சரி மச்சி என்று சொல்லிவிட்டு, பக்கத்தில் இருக்கும் ஒரு கோவிலுக்கு கூகுள் மேப்பில் லொகேஷன் போட்டுக் கொண்டு காரை ஓட்டினான் ரோஹித்.
தொடரும்….
அ. வைஷ்ணவி விஜயராகவன்.

பாகம் 22
ஒரு சிறிய பிள்ளையார் கோவில் வாசலில் காரை நிறுத்தினான் ரோஹித்.
மூவரும் கீழே இறங்கி சாமி கும்பிட்டு விட்டு காரில் ஏறினார்கள்.
ரோஹித் இங்க இருந்து திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் கிட்டேயா?
உனக்கு போகணுமா சொல்லு?
பக்கமா இருந்தா போயிட்டு வரலாமா?
ஓகே போகலாம் என்று சொல்லி மேப்பை ஆன் செய்தான்.
அடுத்த அரை மணி நேரத்தில் திருவேற்காடு கோவிலின் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தினான் ரோஹித்.
விஹானும் விருத்திகாவும் அர்ச்சனை வாங்கிக் கொண்டு ரோஹித்திற்காக காத்துக் கொண்டிருந்தனர்.
ரோஹித் வந்ததும் மூவரும் உள்ளே சென்றனர்.
தீபக்கின் பெயரில் அர்ச்சனை செய்தாள் விருத்திகா.
மனமார வேண்டிக் கொண்டாள்.
கடவுளே என் தீபக்கிற்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாது. அவன் நல்லபடியாக என்கிட்ட வரணும்.
என் குழந்தை அவ அப்பாவ பாக்கணும். அவன் மனசுல பிசினஸ் பண்ணனும் அப்படி என்ற எண்ணம் இருந்துச்சுன்னா தயவு செஞ்சு அதை மாத்தி என்கிட்ட அனுப்பி வை மா தாயே. எனக்கு அவன் எடுத்துப் போன நகை பணம் எதுவும் வேண்டாம். தீபக் திரும்பி வந்தா மட்டும் போதும்
என்று மனமுருக வேண்டிக் கொண்டாள்.
ஐயர் கொடுத்த எலுமிச்சம் பழம் மற்றும் வளையலை வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
அவள் என்ன நினைக்கிறாள் என்று சொல்லாமலேயே தெரிந்தது விஹான் மற்றும் ரோஹித்திற்கு. இருவரும் அவளைப் பார்த்து மிகவும் வருந்தினார்கள். கோவிலை சுற்றி வந்த பிறகு மூவரும் அமர்ந்தனர்.
ரோஹித் பிரசாதம் வாங்கி வந்தான்.
விஹானிடம் ஒரு பார்சலும் விருத்திகாவிடம் ஒரு பார்சலையும் நீட்டினான்.
விருத்திகா வேண்டாம் என்று மறுத்தாள்.
நீ மதியானத்தில் இருந்து எதுவுமே சாப்பிடல, தயவு செஞ்சு கொஞ்சமா சாப்பிடு விரு.
இல்ல அண்ணா வேண்டாம் எனக்கு பசிக்கல.
இதோ பாரு விரு, கவலைப்படாதே. தீபக்கை சீக்கிரமா கண்டுபிடிச்சிடலாம். நீ வருத்தப்பட்டு உன் வயித்துல இருக்க குழந்தையும் தண்டிக்காதே. நீ ஒழுங்கா சாப்டா தான் உன் குழந்தைக்கு நியூட்ரியன்ட்ஸ் கிடைக்கும். அதை மறந்துடாத.
ரோஹித் இடமிருந்த அந்த பார்சலை வாங்கி சாப்பிட்டாள் விருத்திகா.
வீட்டிற்கு சென்று டாக்டர் கொடுத்த சத்து மாத்திரையை போட்டுக்கொண்டு படுத்து தூங்கினாள் விருத்திகா.
விஹான் கேட்டுக் கொண்டதால், விஹானுடன் அவன் ரூமில் தங்கினான் ரோஹித்.
மனசு சரியில்ல மச்சி. என்னடா பண்றது. நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல அந்த தீபக் இப்படி பண்ணுவான்னு, என்று சொல்லி கண்கள் கலங்கினான் விஹான்.
மச்சி நீயே இப்படி கஷ்டப்பட்டன்னா அப்புறம் யாருடா விருத்திக்காவுக்கு ஆறுதல் சொல்லுவா?
முடியலடா அவளை பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்ப மட்டும் அந்த தீபக் என் முன்னாடி வந்தான் அவன பளார் பளார் பளார் என்று ஒரு நாலு அடி அவன் கன்னத்திலேயே கொடுக்கணும். என் தங்கச்சியாடா அழ வைக்கிறன்னு அவன் சட்டை காலரை பிடிச்சு உலுக்கி கேட்கணும்.
காம் டவுன் மச்சி.
அவன் அவ்வளவு பண்ணியும் இவ இன்னும் அவன் மேல ஒரு துளிக் கூட குறையாம அதே அளவு காதலிக்கிறா.
காதலுக்கு ஏது மச்சி அளவுக் கோள்.
என்னவோ போடா, இதலெல்லாம் நினைச்சா தான் காதல் மேல ஒரு பயம் வருது.
என்னடா நீ?
இல்லடா, இவ தீபக்கை எவ்வளவு லவ் பண்ணான்னு எனக்கு தெரியும். அவன் தான் முதல்ல இவளை பிரபோஸ் பண்ணினான். இவளை துரத்தி துரத்தி லவ் பண்ணான். இப்போ இப்படி பண்ணிட்டான். அதே மாதிரி ரெபேக்காவும் என்னை தரத்தி துரத்தி லவ் பண்றா, அவளும் தீபக் என் தங்கச்சியை ஏமாத்தின மாதிரி என்னை ஏமாத்திட்டான்னா?
எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க டா.
அதுவும் இல்லாம தீபக்கிற்கு என்னாச்சுன்னே தெரியல, அதுக்குள்ள நீயா ஒரு முடிவு பண்ணிடாத டா.
இல்லடா, நல்லவேளை நான் ரெபேக்காவுக்கு ஓகே சொல்லல. இப்பவே அவளுக்கு கால் பண்ணி எனக்கு விருப்பம் இல்ல, நீ உன் வீட்டில் பார்க்குற பையனை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிடறேன் என்று சொல்லி அவன் ஃபோனை எடுத்தான் விஹான்.
மச்சி, மச்சி இருடா என்று சொல்லி வேகமாகச் சென்று அவன் கையில் இருந்து ஃபோனை வாங்கினான் ரோஹித்.
மச்சி, ரொம்ப ஸ்டரெஸ்டா இருக்கு ஒரே ஒரு கட்டிங் போட்டுவிட்டு வரலாமா? என்றான் விஹான்.
என்ன மச்சி நீ, விருத்திகா உள்ள தூங்கிக் கொண்டு இருக்கா. இப்போ போனா எப்படி.
இல்லடா, எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்கு. இப்போ மட்டும் நான் ரிலாக்ஸ் ஆகலைன்னா எனக்கு பைத்தியமே பிடிச்சிரும்.
உனக்கே இப்படி சொல்றீயே, விருத்திகாவுக்கு எப்படி இருக்கும் நினைச்சு பாருடா. அவ டென்ஷனை குறைக்க அவ இந்த மாதிரி செஞ்சா சரியா? ஆம்பளைங்க நாம தாண்டா குடிக்கிறதுக்கு ஒரு சாக்கு தேடிக்கிறோம். பாவம் டா அவ, அவளுக்கு துணையாக நாம நிக்காம டென்ஷனை குறைக்க குடிக்கனும்னு சொல்ற? என்றான் ரோஹித்.
கண்கள் கலங்கினான் விஹான்.
இரு மச்சி, உனக்கு தலைவலி போகனும் அவ்வளவு தானே இரு நான் உனக்கு சூடா டீ போட்டுக் கொண்டு வரேன் என்று சொல்லி கிட்சனுக்கு சென்று டீ போட்டுக் கொண்டு வந்தான் ரோஹித்.
அதை வாங்கி குடித்தான் விஹான்.
பின்னர் தன் நண்பனை கட்டி அணைத்துக் கொண்டு,
உண்மையிலேயே உன்னை மாதிரி ஒரு ஃபிரெண்டு கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கனும் என்று சொல்லி கண்கள் கலங்கினான்.
பிறகு இருவரும் வெகு நேரமாக பேசிக் கொண்டிருந்தார்கள் பின்னர் தூங்கி விட்டனர்.
காலை விஹான் எழுந்து வந்த போது விருத்திகா கிட்சனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். ரோஹித் கிளம்பி அவன் வீட்டிற்கு சென்று குளித்து விட்டு ஆஃபீஸூக்கு போக வேண்டும என்று விருத்திகாவிடம் சொல்லி விட்டு சென்று விட்டிருந்தான்.
அண்ணா, இந்தா காஃபி என்றாள் விருத்திகா.
நீ குடிச்சிட்டியா மா?
இப்பதான் நான் குடிச்சேன்.
நைட்டு தூங்கினியாமா?
தூங்கினேன் அண்ணா.
அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர் இருவரும்.
அப்போது விருத்திகாவின் ஃபோனில் மெசேஜ் வந்தது.
அதை எடுத்துப் பார்க்கும் மூடில் அவள் இல்லாததால் அமைதியாக இருந்தாள்.
மறுபடியும் மெசேஜ் வந்தது.
எடுத்துப் பார்த்தவள் கண்களை விரித்தாள்.
என்னாச்சு மா என்று பதட்டமாக அவள் பக்கத்தில் போய் அமர்ந்தான் விஹான்.
அண்ணா தீபக் கிட்ட இருந்து மெசேஜ் என்றாள் விருத்திகா.
தொடரும்…..
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.