பாகம்-15,16

Vaishnavi Vijayaraghavan | 27 Apr 2026 | Share

பாகம் -15


சரி வா மச்சி என்று சொல்லி தன் நண்பனுக்கு சாப்பாடு பரிமாறினான் விஹான்.


அவர்கள் இருவரும் பேசுவதை கேட்டுக் வெளியே எழுந்து வந்தாள் விருத்திகா.


என்னம்மா தூங்கி எழுந்திட்டியா?


இல்ல அண்ணா, எனக்கு மதியத்தில் தூக்கம் வராது. சும்மா படுத்துக் கொண்டு மட்டும் தான் இருப்பேன் அண்ணா.


ஓ, ஓகே மா என்றான் விஹான்.


 சாப்பிட வரலைன்னு சொன்னீங்க, இப்ப எப்படி வந்தீங்க? என்றால் விருத்திகா ரோஹனை பார்த்து.


 நீ அப்படி ஒரு மெசேஜ் அனுப்பின அப்புறம் வராம எப்படி இருக்கிறது, எனக்கு தான் உன் சமையல் பிடிக்குமே, அதை விட ஹோட்டல் சாப்பாடு எதுவும் பெருசு இல்லை என்று நினைச்சாலும் வாங்கினத வேஸ்ட் பண்ண கூடாதுன்னு நினைச்சு அந்த ஹோட்டல் சாப்பாட்ட உங்க அண்ணனுக்கு எடுத்துட்டு வந்துட்டேன், இந்தா டா மச்சி நீ இதை சாப்பிடு நான் வீட்டு சாப்பாடு சாப்பிட்டுக்குறேன் என்று சொல்லி சிரித்தான் ரோஹன்.


தோ டா, உனக்கு மட்டும் நல்ல சாப்பாடு எனக்கு மட்டும் ஹோட்டல் சாப்பாடா என்று சொல்லி இருவரும் சண்டை போட்டுக் கொள்வதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் விருத்திகா.


 சாப்பிட்டுவிட்டு மூவரும் பேசிக்கொண்டிருந்தனர். டிவியில் ரிடில்ஸ் போட்டு அதற்கு பதில் சொல்லி ஆர்கியூ செய்து விளையாடிக் கொண்டிருந்தனர். நான்கு மணி அளவில் நான் போய் ரெடி ஆகிறேன் அண்ணா என்று சொல்லி கிளம்பினாள் விருத்திகா.


 ஓகே நீ ரெடியா இரு, எங்க ரெண்டு பேருக்கும் அஞ்சு நிமிஷம் போதும் அதனால இந்த 2 ஹவர்ஸ் நாங்க தூங்கறோம் என்றான் விஹான் சிரித்துக் கொண்டே. 


 அண்ணா நான் என்ன ரெண்டு மணி நேரமா ஆக்குவேன் ரெடி ஆவதற்கு என்று பொய் கோபம் கொண்டு அவனிடம் சொன்னாள் விருத்திகா.


 சரி எவ்ளோ பெட். இப்ப மட்டும் நீ ஒன் அவர்ல ரெடி ஆகி வந்துட்டேனா? நீ எவ்வளவு கேட்டாலும் நான் கொடுத்துடறேன்.


 அப்படியா சரி, 2000 ருபீஸ் ஓகேவா.


 ஓகே,


 டைம் ஸ்டார்ட்ஸ் நவ் என்று சொன்னான் ரோஹன்.


 ரோஹன் நீங்கதான் ஜட்ஜ், டைம் கரெக்டா பாத்துக்கோங்க. 


 கண்டிப்பா என்று தம்ஸ் அப் காட்டினான் ரோஹன்.


 அவர் உங்க ஃபிரண்ட் என்றதுக்காக ஏமாத்த கூடாது சரியா என்றாள் விருத்திகா.


 இல்ல இல்ல கண்டிப்பா இல்ல. நான் நியாயமா தான் நடப்பேன்.


 ஓகே என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று ரெடியாக தொடங்கினாள். அவளுடைய டிரஸ் எடுக்கும் போது தீபக் டிரெஸ் இருந்தது. அதை பார்த்து ஒரு நிமிடம் நின்றவள், ஹாலில் இருந்து ரோஹனின் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தாள்.


 20 மினிட்ஸ் முடிந்துவிட்டது விருத்திகா என்றான் ரோஹன்.


 அல்மோஸ்ட் டன், என்று சொல்லி வேகமாக ரெடி ஆகினாள்.


 பிரக்னென்ட் ஆக இருந்ததால், பிளவுஸில் கடைசி பட்டன் கொஞ்சம் டைட்டாக இருந்தது.

 எப்படியோ அட்ஜஸ்ட் செய்து போட்டு விட்டு, நகைகள் எல்லாம் போட்டுக் கொண்டு வெளியே வர 54 நிமிடங்கள் ஆனது.


 எவ்ளோ டைம் ஆச்சு என்றாள் விருத்திகா ரோஹனை பார்த்து.


 54 மினிட்ஸ்.


 அண்ணா, டேக் தி 2000 ருபீஸ் என்று சொல்லி சிரித்தாள்.


 பெட்டு வைக்கவே ரெடியான, இல்லனா ரெண்டு மணி நேரம் தான் ஆகி இருக்கும்.


 எப்படியோ ஒன்னு ரெடி ஆயிட்டேன் இல்ல பேசினபடி காசு கொடுங்க.


 சிரித்துக் கொண்டே தன் பாக்கெட்டில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் நான்கை எடுத்து அவளிடம் நீட்டினான்.


 தேங்க்யூ என்று சொல்லி வாங்கிக் கொண்டாள்.


அதை எடுத்துக்கொண்டு சென்று தன் பர்சில் வைத்து விட்டு பர்ஃபியூம் அடித்து செருப்பு போட்டுக் கொண்டு கிளம்பினாள்.


 போகும் வழியிலேயே ஒரு கிஃப்ட் பேக் பண்ணி கொண்டு சென்றனர்.


 விருத்திகாவும் தனியாக ஒன்று கிஃப்ட் வாங்கினாள்.


 வேண்டாம் என்று சொன்னதற்கு, 


 இல்ல அண்ணா எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, அப்போ நான் தனியா தான் ஒரு கிஃப்ட் கொடுக்கணும் என்று சொல்லிவிட்டாள்.


 திருமண ரிசப்ஷன் நன்றாக நடந்தது.


 ரோஹன் மற்றும் விஹானின் பிரண்ட்ஸ் நிறைய பேர் வந்திருந்தார்கள். அனைவரும் மேடை மேல் ஏறி கிஃப்ட் கொடுத்து விட்டு, கீழே வந்து சாப்பிட வந்தனர். அப்போது விஹானின் காலேஜ் பிரண்ட்ஸ் மூன்று பெண்கள் வந்திருந்தனர். 


 அவர்களும் கிருத்திகா உடன் பேசிக் கொண்டிருந்தனர். 


 ஹாய், என் பேரு ரெபேக்கா, நீங்க விருத்திகா தான? என்று சொல்லி கையை நீட்டினாள்.


 ஹலோ என்று கையை குலுக்கி விட்டு ஆமாம் என்றாள் விருத்திகா.


 நாங்க எல்லாம் உங்க அண்ணன் கூட தான் படிச்சோம், இவ தேவி, இவ பாரு( பார்வதி) இன்று மற்ற இருவர்களையும் அறிமுகம் செய்து வைத்தாள் ரெபேக்கா. 


 அவர்களுக்கும் ஹாய் ஹாய் என்றாள் விருத்திகா.


 டின்னர் பூஃபே, அதனால் ஒரு பிளேட்டில் எடுத்து வருவதாக சொல்லிவிட்டு சென்றனர் ரோஹன் மற்றும் விஹான்.


 எத்தனை மாசம் என்றாள் தேவி.


 மூணு முடிஞ்சிடுச்சு என்றாள் விருத்திகா.


 வாமிட் எல்லாம் அதிகமா இருக்கா என்றாள் பார்வதி.


 இல்ல ரொம்ப இல்ல ஆனா சில ஸ்மெல் மட்டும் பிடிக்கல அப்ப மட்டும் இருக்கு.


 உங்க ஹஸ்பண்ட் என்ன பண்றாரு என்றாள் தேவி .


 ஏய் தீபக் தாண்டி இவங்களோட ஹஸ்பண்ட் என்றாள் ரெபேக்கா .


அவனா? என்ற உணர்ச்சிவசத்தில் சொன்ன தேவி, பார்வதி அவளைக் கிள்ள,


 ஓ சாரி சாரி, தீபக்கா அவரை தெரியும் எங்களுக்கு.


 அமைதியாக இருந்தாள் விருத்திகா. 


 அவள் முகம் மாறிவிட்டதை கவனித்த மூவரும் இரண்டு நிமிடம் அமைதியாக இருந்தனர்.


 இப்ப தீபக் எங்க வேலை பார்க்கிறார் என்றாள் பார்வதி.


 ஐ டி சொல்யூஷன்ஸ் என்றாள் விருத்திகா.


 அப்படியா அங்க தான் என் ஹஸ்பண்ட் கூட வேலை பாக்குறாரு என்றாள் தேவி.  


 உங்க ஹஸ்பண்ட் என்னவா இருக்காரு? என்றாள் விருத்திகா.


 டீம் லீடர்.


அப்படியா?


 ஆமா எதனால கேக்குறீங்க.


 இல்ல தீபக் வந்து ஆபீஸ் விஷயமா பெங்களூரு போயிருக்காரு. 2 டேஸ்ஸா அவரோட ஃபோன் நாட் ரீச்சபிள்லயே இருக்கு. அதான் நான் அங்க இருக்கிற ஆஃபீஸ் நம்பர் ஏதாவது தெரியுமா என்று கேட்கலாம் என்று நினைத்தேன்.


 ஓகே ஷியூர், நான் வீட்டுக்கு போயிட்டு அவர் கிட்ட கேட்டுட்டு உங்களுக்கு கால் பண்ணி சொல்றேன், உங்க நம்பர் தரீங்களா? 


 ஓகே தேங்க் யூ சோ மச் என்ற சொல்லி தன் நம்பரை கொடுத்துவிட்டு அவளுடைய நம்பரை வாங்கிக் கொண்டாள் விருத்திகா.

தொடரும்…..

அ. வைஷ்ணவி விஜயராகவன்.



பாகம் 16 


ரெபேக்கா மற்றும் பார்வதி கூட அவர்களுடைய நம்பரை கொடுத்துவிட்டு விருத்திகாவின் நம்பரை வாங்கிக் கொண்டார்கள்.


 விஹானும் ரோஹித்தும் அவர்களுக்கும் மற்றும் விருத்திகாவிற்கும் சாப்பாடு எடுத்து வந்து கொடுத்துவிட்டு சாரில் அமர்ந்து சாப்பிட்டனர்.


 மற்ற பெண்களும் சாப்பாடு எடுத்து வந்து சாப்பிட்டனர். கொஞ்ச நேரம் அரட்டைக்கு பிறகு அனைவரும் கிளம்பினார்கள்.


 கிளம்பும்போது ரெபேக்கா விஹானை பார்த்து,


 விஹான் ஒரு நிமிஷம், உன்கிட்ட தனியா பேசணும் என்றாள்.


 சரி என்று தலையசைத்து அவள் பின்னால் சென்றான் விஹான்.


 மற்ற இரு பெண்களும் ரோஹித்தும் சிரித்தார்கள்.


 என்ன ஆச்சு ஏன் சிரிக்கிறீங்க எல்லாரும்? என்று விருத்திகா மூவரையும் பார்த்து கேட்டாள்.


 இதுவரைக்கும் உங்க அண்ணன் உன்கிட்ட சொல்லவே இல்லையா என்றான் ரோஹன்.


 என்ன விஷயம், தயவு செஞ்சு சஸ்பென்ஸ் எல்லாம் வேணாம் என்னன்னு சொல்லிடுங்க.


 ரெபேக்காவும் அஞ்சு வருஷமா அதாவது காலேஜ் ஃபைனல் இயர் ல இருந்து இப்போ வரைக்கும் விடாம லவ்வ சொல்லிக்கிட்டே இருக்கா. ஆனா உங்க அண்ணா ஓகே சொல்ற மாதிரி தெரியல. அவளும் எத்தனையோ முறை கேட்டுவிட்டா, ஆனா உங்க அண்ணன் புடி கொடுத்து பேச மாட்டேங்கிறான். ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவள அவாய்ட் பண்றான். பாவம் அந்த பொண்ணு என்றான் ரோஹித்.


 அப்படி இருந்தா அண்ணனுக்கு விருப்பம் இல்லையோ என்னமோ?


 அதெல்லாம் ஒன்னும் இல்ல, அவனுக்கு ரெபேக்காவ புடிக்கும், ஆனா ஏன் வேணாம்னு சொல்றான்னு தான் தெரியல. நானும் அவன் கிட்ட நிறைய முறை கேட்டு விட்டேன். அத பத்தி பேசினாலே டாப்பிக்கை சேஞ்ச் பண்ணிடுவான்.


 சரி நான் பேசுறேன் எங்க அண்ணன் கிட்ட.


 அச்சச்சோ வேண்டாம், இதெல்லாம் நான் தான் சொன்னேன்னு தெரிஞ்சிட்டு அவ்வளவுதான் என்றான் ரோஹித்.


 நானே தெரிஞ்சிக்கிட்ட மாதிரி பேசுறேன் கவலைப்படாதீங்க, உங்களை போட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி சிரித்தாள் விருத்திகா.


 விஹான் பேசிவிட்டு வந்ததும், அனைவரும் கிளம்பினார்கள்.


 காரில் கிளம்பினார்கள் ரோஹித், விஹான் மற்றும் விருத்திகா.


 காரில் செல்லும்போது விருத்திக்கா பேச தொடங்கினாள்.


அண்ணா,


 சொல்லு விரு,


 ரெபேக்கா உங்கள லவ் பண்றாங்களா என்ன?


 அவள் சட்டென்று இப்படி பேசியது இருவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது.


 முதலில் வேற ஏதாவது பேச ஆரம்பித்து பிறகு இதைப் பற்றி கேட்பாள் என்று நினைத்த ரோஹித்தும் அதிர்ச்சி அடைந்தான். அவள் சற்றென்று இப்படி கேட்டதால் ரோஹித்தும் மற்றவர்களும் தான் அவளிடம் உண்மையை சொல்லிவிட்டார்கள் என்று நினைத்து விஹானும் அதிர்ச்சி அடைந்தான்.  


 விஹான் ரோஹித்தை பார்த்து முறைதான்.


அதன் அர்த்தம் நீ தான் அவ கிட்ட சொன்னீயா டா என்பது தான்.


அவன் இல்லை என்பது போல தலை அசைப்பதற்குள்.


அண்ணா, ரோஹித் எதுவும் என் கிட்ட சொல்லல, ரெபேக்கா உன்னை பார்த்த பார்வையிலேயே நான் தெரிஞ்சுகிட்டேன். எனக்காக சொல்லு அண்ணா, எதுக்கு நீ ரபேக்காவை வேணாம்னு நினைக்கிற?


 தெரியல விரு, அவளை எனக்கு பிடிக்கும். ஆனா லவ், மேரேஜ், இதெல்லாம், எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல,


 சரி இப்ப என்ன சொன்னாங்க அவங்க.


 அவங்க வீட்ல இவ்வளவு நாளா வெயிட் பண்ணதே பெரிய விஷயமாம், இவ்வளவு நாளா ஏதோ சொல்லி எப்படியோ தப்பிச்சிடாளாம், இதுக்கு மேல முடியாது. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள என்னோட முடிவு சொல்ல சொன்னா. இல்லன்னா அவங்க அப்பா அம்மா பாக்குற அப்பா என்ன கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா.


 நீ என்ன அண்ணா, சொன்ன?


 அமைதியாக இருந்தான் விஹான்.


 மச்சி என்னடா சொன்ன சொல்லுடா?


 இப்ப என் தங்கச்சிக்கு ஒரு பிரச்சனை, அதை சரி செய்வது தான் எனக்கு இப்ப முக்கியமான வேலை, இதுல இந்த பிரச்சனையே என்னால சமாளிக்க முடியாது. நீ யார வேணாலும் கல்யாணம் பண்ணிக்கோ. ஆல் தி பெஸ்ட் னு சொல்லிட்டேன்.


 மச்சி பைத்தியமா டா உனக்கு. உனக்கு அவளை பிடிக்கவில்லை என்றால் கூட நீ சொன்னது கரெக்ட். ஆனா உனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்னு எனக்கும் தெரியும். அப்புறம் ஏன்டா இப்படி பண்ற.


அண்ணா, நீ என்ன காரணம் சொல்லி இருந்தாலும் அது எனக்கு கஷ்டமா இருந்திருக்காது. அவங்கள பிடிக்கலைன்னு சொல்லி இருந்தா கூட ஓகே. ஆனா என்னை காரணம் வச்சு ஏன் அண்ணா வேண்டான்னு சொன்ன? எனக்கு ரொம்ப கில்டி ஃபீலிங்கா இருக்கு அண்ணா.


 நான் உன்ன சொல்லல விரு, 


 அண்ணா, நான் ஒன்னும் குழந்தை இல்ல, இதைக் கூட புரிஞ்சுக்காம இருக்கிறதுக்கு.


 ஐயோ நான் அப்படி மீன் பண்ணல.


 நீ என்ன நெனச்சு சொன்னியோ தெரியல அண்ணா, எனக்கே கஷ்டமா இருக்குன்னா. பாவம் அந்த ரெபேக்காவுக்கு எப்படி இருக்கும்? என்று சொன்னாள் விருத்திகா.      


ஆமாண்டா, அவகிட்ட நீ இப்படி பேசி இருக்க கூடாது.


 இப்ப என்ன பண்ணனும்னு சொல்றீங்க இரண்டு பேரும்.


 முதல்ல அவங்களுக்கு கால் பண்ணு அண்ணா.


 இப்ப வா வேண்டாம்.


ஏன்?


டிராவலிங்ல இருக்கோம் இல்ல.


 அண்ணா நீங்களா வண்டி ஓட்டுறீங்க, டிரைவிங்ல பேச கூடாதுன்னு சொல்றதுக்கு? முதல்ல கால் பண்ணுங்க.


 ஆமாண்டா பேசுடா.


 என்ன பேச சொல்றீங்க.


நீங்க கால் பண்ணுங்க. கால் பண்ணி சாரி மட்டும் சொல்லுங்க. மத்தது அவங்களே புரிஞ்சுபாங்க.


 சாரி சொன்னா நான் ஓகே சொன்னேன்னு அர்த்தமா என்ன?


ஆமாம், அவங்க மனச புரிஞ்சுகிட்டீங்கன்னு தெரிஞ்சாலே போதும் அவங்களுக்கு உங்களோட அன்புக்கு காதல் பாசம் எல்லாம் தெரிஞ்சிரும்.


 இதெல்லாம் சினிமா டயலாக். வாழ்க்கை முறைக்கு ஒத்து வராது.


 வாழ்க்கையிலிருந்து தான் சினிமா, சினிமாவில் இருந்து தான் வாழ்க்கை என்றான் Expect.


 டேய் ஒழுங்கா ரோடு பார்த்து வண்டி ஓட்டு சும்மா நடுவுல வந்து குழப்பாத.


 அண்ணா அவர் கிட்ட கத்தறத விட்டுட்டு நீங்க ஃபோனை எடுத்து கால் பண்ணுங்க.


 இதற்கு மேல் இவர்கள் இருவரும் விடமாட்டார்கள் என்று தெரிந்த விஹான் தன் ஃபோனை எடுத்து ரெபேக்காவுக்கு கால் செய்தான்.


 ஹலோ ரெபேக்கா?


 சொல்லு விஹான்.


 நான் இன்னைக்கு பேசினதுக்கு சாரி.


 ஐயோ சாரில்லாம் சொல்லாத விஹான், நான் தான் உன்கிட்ட சாரி சொல்லணும், இத்தனை வருஷமா உன்ன லவ் டார்ச்சர் பண்ணதுக்கு. ரியலி சாரி, நான் இதுக்கு மேல உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், பை என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாள் ரெபேக்கா.




தொடரும் …..

அ . வைஷ்ணவி விஜயராகவன் .




இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.