பாகம்-11,12

Vaishnavi Vijayaraghavan | 27 Apr 2026 | Share

பாகம் 11 


சனிக்கிழமை காலை.


சனிக்கிழமை என்பதனால் ரோஹித் மற்றும் விஹான் இருவருக்குமே ஆஃபீஸ் லீவ்.

அதனால் இருவரும் தீபக்கை பற்றி விசாரிக்க அவனுடைய கம்பனிக்கு சென்றனர்.


 ஐடி கம்பெனி என்பதால் தீபக்கின் கம்பெனியிலும் விடுமுறை. எக்ஸ்ட்ரா வேலை இருப்பவர்களும், ப்ராஜெக்ட் சப்மிஷன் மற்றும் இன்டர்ன்ஸ் போன்றவர்கள் மட்டுமே வந்திருந்தனர். ஒவ்வொரு ஃப்ளோரிலும் செக்யூரிட்டி மற்றும் ஆபீஸ் பாய் இருந்தனர்.


 ஏழாவது மாடியில் தான் தீபக்கின் கம்பெனி இருந்தது.


 அங்கே சென்று, தீபக்கை பற்றி விசாரித்தார்கள்.


 செக்யூரிட்டிக்கு தீபக் பற்றி தெரியவில்லை.


 அங்கிருந்த ஆபீஸ் பாயிடம் கேட்டனர். அவருக்கும் தெரியவில்லை.


 ஃபோனில் தீபக் ஃபோட்டோவை காட்டியும் கேட்டனர். அப்போது கூட இருவருக்கும் தெரியவில்லை.


 பிறகு அந்த கம்பெனியின் டீம் லீடர் மற்றும் மேனேஜர் நம்பர் கேட்டு வாங்கிக்கொண்டு, அங்கிருந்த கேஃபிடேரியாவில் போய் அமர்ந்து கால் செய்தனர்.


 முதலில் டீம் லீடருக்கு கால் செய்தான் விஹான்.


 அவர் போன மாதம் தான் பெங்களூரில் இருந்து டிரான்ஸ்பர் ஆகி வந்திருப்பதாகவும். இங்குள்ள உள்ளவர்களை பற்றி அவ்வளவாக தெரியாது என்றும் மேலும் அவர் ஜாயின் செய்தது முதல் அந்த ஃபோட்டோவில் இருந்த தீபக் என்பவரை பார்த்ததில்லை என்றும் இங்கிலீஷில் கூறினார்.


 ஓகே தேங்க் யூ என்று சொல்லி வைத்து விட்டான் விஹான்.


 பின்னர் ரோஹித் மேனேஜருக்கு கால் செய்தான்.


 முதலில் அவர் எடுக்கவில்லை. பிறகு தீபக் ஃபோட்டோவை அனுப்பி ப்ளீஸ் பேச வேண்டும் என்று மெசேஜ் செய்தனர்.


 பத்து நிமிடத்தில் அவரே கால் செய்தார்.


 ஹலோ,


 வணக்கம் சார் என்றான் விஹான்.


 வணக்கம் சார் சொல்லுங்க.


 சார், இப்போ அனுப்பி இருக்கேனே ஃபோட்டோ.


ஆமாம் தீபக், தெரியும் சொல்லுங்க.


 பெங்களூரு போயிருக்காரே, எப்ப வருவாரு?


 அதை ஏன் சார் என்கிட்ட கேக்குறீங்க?


 ஆபீஸ் விஷயமாதான சார் போயிருக்காரு?

 அப்போ உங்க கிட்ட கேக்காம வேற யார் கிட்ட சார் கேட்கனும்?


 வாட் ஆபீஸ் விஷயமா போயிருக்காரா?

 தீபக் கம்பெனியை விட்டு போயி ரெண்டு மாசம் ஆகுது.


வாட், என்று ஷாக் ஆகினான் விஹான்.


 இன்னும் எங்க கம்பெனில வேலை செய்யறதா தான் வெளியே சொல்லிக்கிட்டு இருக்காரா?

 இருந்த வரைக்கும் நல்லா வேலை பார்த்துட்டு இருந்தாரே என்ற ஒரே காரணத்துக்காக தான் தீபக் போட்டோவ பாத்துட்டு கால் பண்ணினேன்.


 என்ன காரணத்துக்காக வேலையை விட்டு போனாருன்னு தெரியுமா?


 எங்க கிட்ட சொன்ன ரீசன் ஓன் ஸ்டார்ட் பண்ண போறேன்னு. ரியல் ரீசன் அதுதானா என்ன என்றது எங்களுக்கு தெரியாது.


 பிசினஸ் பண்ண போறேன்னு சொன்னாரா?


 ஆமா சார். நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் ஃபோனை வைக்கவா?


 சாரி சார் ஒரே ஒரு சின்ன இன்ஃபர்மேஷன் மட்டும் சொல்லிடுங்க.


என்ன சார்?


 தீபக் பத்தி தெரிஞ்சுக்கணும்னா யார்கிட்ட கேட்டா கரெக்டா தெரியும்?


 என்னாச்சு சார் ஏதாவது பிரச்சனையா?


 ஆமா சார் தீபக் வேலையை விட்டது எங்களுக்கு தெரியாது. அவர் வேலை விஷயமா பெங்களூரு போகணும்னு சொன்னது, நாங்க கம்பெனி விஷயமா போறாருன்னு நினைச்சுட்டோம். 2 டேஸா அவரோட ஃபோன் நாட் ரீச்சபல்லயே இருக்கு. அதனாலதான் கொஞ்சம் டென்ஷனா இருக்கு. 


 நீங்க தீபக்கிற்கு என்ன வேணும் சார்?

 ஐ மீன் ஃபிரண்ட் ஆர் ரிலேட்டிவ்?


 ரிலேடிவ் சார், அவரோட வைஃப் ஓட அண்ணன்.


 ஓ ஓகே ஓகே, அவர் வேலை விட்டுப் போனது எனக்கும் அவருக்கும் காண்டாக்ட் கிடையாது.

 அவரோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் இருப்பாங்க. அவங்க இன்னும் இந்த கம்பெனில தான் இருக்காங்க. பேரு சதீஷ் அண்ட் ராஜான்னு நினைக்கிறேன்.


 சார் ஃபோன் நம்பர் மட்டும் இருந்தா ஷேர் பண்றீங்களா?


 ஓகே ஷியூர், என்று உடனே சதீஷ் மற்றும் ராஜா இருவரின் நம்பரையும் அனுப்பிவிட்டு, வாட்ஸ் அப்ல செண்ட் பண்ணிட்டேன் செக் பண்ணிக்கோங்க சார்.


 ஓகே சார், தேங்க்யூ சோ மச், பை.


 டோன்ட் ஒரி தீபக்கிற்கு ஒண்ணும் ஆகி இருக்காது, டேக் கேர் ஆஃப் யுவர் சிஸ்டர். பை என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார் மேனேஜர்.


 பிறகு சதீஷ் என்பவருக்கு கால் செய்தான் விஹான்.


 ஹலோ, சதீஷ்ங்களா?


 ஆமாம் நீங்க யாரு?


 சார் என் பேரு விஹான், நான் தீபக் வைஃப்போட அண்ணன்.


 சொல்லுங்க சார், என்ன விஷயம் தீபக் எப்படி இருக்கான்?


 என்ன நீங்க தீபக் கிட்ட ரெகுலரா பேசுறது இல்லையா?


 இல்ல சார் நானும் ராஜாவும் அவனோட கல்யாணத்துக்கு வந்து சாட்சி கை எழுத்து போட்டதோட சரி , அதுக்கப்புறம் அவனை பார்க்கவே இல்லை. ஃபோன்ல மட்டும் ரெண்டு இல்ல மூணு முறை பேசி இருக்கேன்.


 ரெண்டு பேரும் ஒரே கம்பெனியில தான வேலை செய்றீங்க? இரண்டு மாசம் முன்னாடி தான் வேலை விட்டுப் போனதா மேனேஜர் சொன்னாரு.


 ஆமா சார் அவன் வேலையை விட்டு போனது என்னவோ ரெண்டு மாசம் முன்னாடி தான், ஆனா நான் தான் கம்பெனி விஷயமா யூஸ் போயிட்டு இருந்தேனே. வந்த பிறகு தான் ராஜா சொன்னான் தீபக் வேலையை விட்டுட்டான்னு.


 என்ன காரணம் தெரியுமா உங்களுக்கு?


 பிசினஸ் ஸ்டார்ட் பண்ண போறேன்னு தான் அவன் சொன்னதா ராஜா சொன்னான்.


 ஓகே ராஜா கிட்ட பேசினா மத்த டீடைல்ஸ் தெரியுமா?


 ஏன் சார் என்ன ஆச்சு சார்.


 விஷயத்தை விளக்கமாக கூறினான் விஹான்.


 சார் எனக்கு தெரிஞ்ச வரைக்கும், அவனுக்கு ஏதாவது ஒரு வேலை முடியலன்னா. அது முடியுற வரைக்கும் அவனுக்கு எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்கக் கூடாதுன்னு ஃபோன் கேட்ஜெட்ஸ் எதுவும் யூஸ் பண்ண மாட்டான். யார்கிட்டயும் பேச மாட்டான். அவன் வேலை முடிஞ்சதுக்கு அப்புறம் அவனே பண்ணுவான். இது எனக்கு தெரிஞ்ச தீபக். நீங்க சொல்றத பார்த்தா அவனுக்கு போன வேலை முடியல போல, அதனால அவனே கால் பண்ணுவான்னு நினைக்கிறேன். ஆனா வேற ஏதாவது உங்களுக்கு வேணும்னா ராஜாவுக்கு கால் பண்ணி கேளுங்க என்றான் சதீஷ்.      


 ஓகே சார் தேங்க்யூ சோ மச்.


 தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு சார் சொல்றீங்க?

சிஸ்டர் எப்படி இருக்காங்க? என்றான் சதீஷ்.


 அவ தான் கொஞ்சம் பதட்டமா இருக்கா? ரெண்டு நாளா பேசலன்னு கஷ்டப்பட்டு கிட்டு இருக்கா என்றான் விஹான்.

தொடரும்…..

அ. வைஷ்ணவி விஜயராகவன். 


 


பாகம் 12 



சிஸ்டர் கிட்ட நீங்க சொல்லுங்க சார். சீக்கிரமா தீபக் வந்திடுவான்னு.


 ஓகே சதீஷ் தேங்க்யூ.


 தேங்க்யூ சார் என்று சொல்லி ஃபோனை வைத்த சதீஷ், அவனும் ஒருமுறை அவனுடைய ஃபோனில் இருந்து தீபக்கின் நம்பருக்கு ட்ரை செய்தான்.


அப்போதும் நாட் ரீச்சபிள் என்று தான் வந்தது.


 இந்த தீபக் மாறவே இல்லை என்ற சொல்லிக்கொண்டே அவன் வேலைகளை செய்ய தொடங்கினான் சதீஷ்.


 அடுத்தது ராஜாவின் நம்பருக்கு கால் செய்தான் விஹான்.


 ஹலோ நான் விஹான் பேசுறேன் தீபக் ஓட மச்சான்.


 சொல்லுங்க அண்ணா, எப்படி இருக்கீங்க?


 நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?


 நல்லா இருக்கேன் அண்ணா. தீபக்கும் அப்புறம் சிஸ்டரும் எப்படி இருக்காங்க?


 தீபக் பத்தி பேச தான் உங்களுக்கு கால் பண்ணேன்.


 ஏன் அண்ணா என்ன ஆச்சு?


 தீபக் ஏதோ வேலை விஷயமா பெங்களூர் போயிருக்கான். ரெண்டு நாளா ஃபோன் நாட் ரீச்சபிள்னு வருது. விருத்திகா ரொம்ப கவலையா இருக்கா.  


 பெங்களூர் போய்ட்டானா? நான் அவ்வளவு சொல்லியும் பெங்களூர் போயிட்டானா?


 என்ன சொல்றீங்க ராஜா எனக்கு ஒன்னும் புரியல.


அண்ணா, நீங்க எங்க இருக்கீங்க?


 தீபக் ஓட கம்பெனின்னு வந்தோம் ஆனா தீபக் இங்க வேலை செய்யலைனாங்க, அதனால பக்கத்துல ஒரு காபி ஷாப்ல இருந்துதான் சதீஷ்க்கு முதல்ல கால் பண்ணினோம், இப்போ உங்களுக்கு பண்றோம்.


 உங்க சிஸ்டர் உங்க கூட இருக்காங்களா?


 இல்லையே ஏன் கேக்குறீங்க?


 இல்ல ஃபோன் பண்ணோம்னு சொன்னீங்களா அதனால கேட்டேன்.


 இல்ல நானும் என் ஃப்ரெண்ட் ரோஹித்தும்.


 ஓ ஓகே ஓகே.


 சரி நீ எனக்கு கிளியரா சொல்லுப்பா என்ன பிரச்சனை?


 அண்ணா அத போன்ல எல்லாம் சொல்ல முடியாது. நேரா வந்து சொல்றேன். ஆனா சிஸ்டர் முன்னாடி வேண்டாம். நீங்களே ஏதாவது ஒரு பிளேஸ் சொல்லுங்க எனக்கு ஒரு ஹாஃப் அன் ஹவர் மட்டும் குடுங்க நான் ரெடி ஆகி வரத்துக்கு.


 ஒரு நிமிஷம் என்று ராஜாவிடம் சொல்லி விட்டு.


 ரோஹித் உங்க அம்மா உங்க வீட்ல இருக்காங்களா இல்ல உங்க அண்ணன் வீட்ல இருக்காங்களா?


 அண்ணன் வீட்ல தான்டா இருக்காங்க. அண்ணன் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று அங்கேயே இருக்காங்க இந்த வீக்.


 ஓ ஓகே, உங்க வீட்டுக்கு ராஜாவை வரச் சொல்லவா?


 அதனால என்ன மச்சி வர சொல்லு.


 ராஜா நான் ஒரு லொகேஷன் அனுப்புறேன் அங்க வரீங்களா என்றான் விஹான்.


 ஓகே அண்ணா வரேன்.


 விஹானும் ரோஹித்தும் ரோஹித்தின் வீட்டிற்கு சென்றனர்.


 ராஜா கூறியது போல அரை மணி நேரத்தில் அங்கு வந்தான்.


 அவனை உள்ளே அழைத்து பேசத் தொடங்கினர்.


 சொல்லுங்க ராஜா என்ன ஆச்சு தீபக்குக்கு?


 சிஸ்டர் பிரக்னண்டா இருக்காங்க இல்ல அண்ணா?


ஆமாம்.


 சிஸ்டர் பிரகனண்ட் ஆயிட்டாங்கன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமா தீபகால கம்பெனியில் ஒழுங்கா வேலை செய்ய முடியல. அவனுக்கு சம்பளம் பத்தல. குழந்தை வந்த அப்புறம் எப்படி சமாளிப்போம்னு யோசிச்சான். அவனுக்கு ஏற்கனவே பிசினஸ் பண்ணனும் என்ற எண்ணம் தான் இருந்தது. வேலைக்கு போறதே பிடிக்காது.

 அப்படி இருக்கும் போது. இரண்டு முறை ஹாஸ்பிடல் போயிட்டு வந்ததுக்கு அதிகமா செலவாச்சு, அப்புறம் டெலிவரி குழந்தை பிறந்த அப்புறமா இருக்கிற செலவு எல்லாம் யோசிச்சு என்கிட்ட புலம்பிக்கொண்டே இருந்தான். 


 நானும் அவனிடம் எவ்வளவோ எடுத்து சொன்னேன். இந்த நேரத்துல பிசினஸ் எல்லாம் ஆரம்பிச்சு ரிஸ்க் எடுக்காதடான்னு. அவன் கேக்கல, பெங்களூர் போகாதடானு சொன்னேன்.


 பெங்களூர்ல என்ன?


 அங்கதான் அவன் பிசினஸ் பண்ண போறேன்னு சொன்னான். பிசினஸ் ஸ்டார்ட் அப் நல்லபடியா முடிஞ்சுதுனா தான் திரும்ப வருவேன். இல்லன்னா வரமாட்டேன்னு சொன்னான்.


 வாட், அவன் என்ன லூசா? பொண்டாட்டி முழுகாம இருக்கா, அவ கூட இருந்து பத்திரமா பார்த்துப்போம் ன்னு இல்லாம, பைத்தியக்காரத்தனமா பிசினஸ்ன்னு இப்ப போய் அலையறான்.


 தீபக் சரியான பிடிவாதக்காரன் அண்ணா. அவன் ஏதாவது நெனச்சான்னா அதை செஞ்சே முடிப்பான். 


என்ன பிசினஸ்?


 அமைதியாக இருந்தான் ராஜா.


சொல்லுங்க ராஜா.


 என்ன பிசினஸ் என்று எனக்கு தெரியாது அண்ணா. ஆனா அந்த பிசினஸ் லீகலா இன்னும் ஆகலைன்னு மட்டும் தெரியும். அது கூட அவன் ஃபோன்ல பேசினதை வச்சு கேட்டேன்.


 நான் கேட்டதுக்கு இன்னும் ஒன் வீக்ல லீகல் ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடிஞ்சு பிசினஸ் ஆபீஸலி ரிஜிஸ்டர் ஆயிடும். அதுக்காக தான் பெங்களூர் போக போறேன்னு சொன்னான். ஃபண்ட்ஸ் குறையுதுன்னு சொன்னான்.


அப்புறம்?


 என்கிட்ட இருந்த ஒரு பத்தாயிரம் கொடுத்தேன்.

 அதுக்கப்புறம்,


 அப்புறம் என்ன சொல்லுங்க ப்ளீஸ்.


 மிச்சத அவனோட சேவிங்ஸ் அப்புறம் சிஸ்டர் ஓட ஜுவல்லரிஸ் லாக்கர்ல இருக்குன்னு சொன்னான். இப்போதைக்கு அதை எடுத்துப்பேன்னு சொன்னான். 


 நான் நல்லா திட்டி விட்டுட்டேன் அவனை.


 பிசினஸ்ல ஷைன் ஆகி இதை விட பல மடங்கு அவளுக்கு போட்டு பார்ப்பேன்டான்னு சொன்னான்.


 உனக்கு பைத்தியம் தான்டா புடித்துவிட்டது என்று நானும் திட்டினேன்.


 என்ன பிசினஸ்ன்னு தெரியல, பெங்களூர்ல எந்த இடத்துக்கு போயிருக்காருன்னு தெரியல, ஃபோனும் நாட் ரீச்சபிள், இப்ப என்னதான் பண்றது.


 அமைதியாக இருந்தான் ராஜா.


 விஹானுக்கு ஆத்திரமாக வந்தது. தன் தங்கையின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று நினைத்து வருந்தினான். 


 ரோஹித் அவனை சமாதானப்படுத்தினான்.


 இப்ப என்னடா பண்றது என்று ரோஹித்தை பார்த்து கேட்டான் விஹான்.


 எனக்கு ஒன்னும் புரியலையே டா மச்சி.


 நீங்களே ஏதாவது ஒன்னு சொல்லுங்க என்று ராஜாவை பார்த்து கேட்டான் ரோஹித்.


 எனக்கு ஒன்னும் தெரியலையே என்றான் ராஜா.


 இன்னும் கொஞ்சம் நல்லா யோசிச்சு பாருங்க பெங்களூர்ல யாரை பார்க்க போறேன் அவங்க ஃபோன் நம்பர் ஏதாவது உங்க கூட ஷேர் பண்ணினானா?


 ஒரு நிமிடம் யோசித்த ராஜா,


 இல்லையே சார். 


 சரி கம்பெனியில வேலை செஞ்சுட்டு இருந்தவருக்கு திடீர்னு பெங்களூர்ல இருக்குற பிசினஸ் பத்தி எப்படி தெரிஞ்சது?


 அதற்கும் அமைதியாக இருந்தான் ராஜா.


மிச், வா மச்சி போலாம் என்றான் விஹான் ரௌஹித்திடம்.


 ரோஹித்தும் விஹானும் வீட்டிற்கு சென்றனர்.


 முதலில் எல்லாத்தையும் இந்த விரு கிட்ட சொல்லணும் என்றான் விஹான் .


 இல்ல மச்சி வேண்டாம், தயவு செஞ்சு இப்ப சொல்லாத, என்றான் ரோஹித்.




தொடரும்…..

அ. வைஷ்ணவி விஜயராகவன்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.