பாகம் – 5
அந்த தேங்காயை அங்கேயே ஓரமாக வைத்து விட்டார்.
குங்குமம், மஞ்சள் மற்றும் பூவை மட்டும் கொடுத்தார்.
சாமி அர்ச்சனைக்கு கொடுத்தோமே என்றாள் விருத்திகா.
அது அம்பாளோட காலடியிலே இருக்கட்டும் மா. நீங்க கோவிலை சுத்தி வந்து பிரசாதம் வெளியே தராங்க அதை வாங்கிக்கோங்க என்றார்.
எப்போதுமே அப்படி சொல்லாதவர் இன்று அப்படி சொல்கிறாரே என்று நினைத்தவள்,
சரிங்க சாமி என்று சொல்லிவிட்டு, வாடா போகலாம் என்று அவனை அழைத்துக் கொண்டு கோவிலில் சுற்றி வந்தனர்.
எல்லாருக்கும் அர்ச்சனை பண்ணத திருப்பி கொடுத்தாரு நமக்கு மட்டும் கொடுக்கலையே என்றாள் விருத்திகா.
அதனால என்ன. உனக்கு அந்த தேங்காய் வாழைப் பழம் சாப்பிடனுமா?
இல்ல நம்ம கிட்ட மட்டும் திரும்ப தரவில்லையே அதனால எனக்கு என்ற சொல்லி இழுத்தாள்.
எல்லாருக்கும் கொடுத்துட்டு இருப்பாரு, அப்போதான் வீட்ல மாமி சொன்னது ஞாபகம் வந்திருக்கும், சட்னி அரைக்க தேங்காய் வாங்கிட்டு வாங்கோ மறந்துறாதீங்கோன்னு சொல்லி இருப்பாங்க. அதனால நம்ம கொடுத்த தேங்காய் நிறுத்திக்கிட்டாரு, போதுமா.
ஏய் சும்மா இருடா, ஏதாவது ஒன்னு சொல்லிக்கிட்டு. இந்த கோவிலுக்கு நான் நிறைய முறை வந்து இருக்கேன். இந்த ஐயரை எனக்கு நல்லா தெரியும், அதனால இவர் அந்த மாதிரி பண்றவர் எல்லாம் கிடையாது.
சரி சரி வா, இதையெல்லாம் எதுக்கு பெருசா எடுத்துக்குற?
அங்கிருந்து விஹானை பார்க்க அவன் வீட்டிற்கு சென்றனர்.
திருமணம் ஆன இந்த இரண்டு மாதத்தில் ஒரு முறை கூட அங்கே அவள் செல்லவில்லை.
கண்கள் எல்லாம் கலங்கியது.
என்ன ஆச்சு என்றான் தீபக்.
ஒன்னும் இல்லடா, ரொம்ப நாளாச்சு இல்ல இங்க வந்து அதான் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன் என்று சொல்லி பெல் அடித்து விட்டு வெயிட் செய்து கொண்டு இருந்தாள்.
அடியே பொண்டாட்டி, இப்போ அடிக்கடி எமோஷனல் ஆக கூடாது. அது உன் வயித்துல வளர என்னோட குழந்தைக்கு நல்லது இல்ல.
நம்மளோட குழந்தை.
சரி சரி நம்மளோட குழந்தை என்று அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டு பேசிக்கொண்டிருக்கும் பொழுது கதவை திறந்தான் விஹான்.
அண்ணா என்று சொல்லி அவனை கட்டிக் கொண்டாள் விருத்திகா.
நல்லா இருக்கியா அண்ணா? என்றாள்.
ஆம் என்ற தலை அசைத்து விட்டு, உள்ள வாங்க என்று ரெண்டு பேரையும் பொதுவாக பார்த்து சொன்னான்.
உள்ளே சென்று அமர்ந்தனர்.
அண்ணா என்ற ஸ்வீட் பாக்ஸை ஓப்பன் செய்து நீட்டினாள்.
அதிலிருந்து ஒரு சின்ன பீஸ் பிட்டு வாயில் போட்டுக் கொண்டான்.
அண்ணா ஒரு நிமிஷம் எழுந்துக்கிறியா?
எதுக்கு?
ஒரு நிமிஷம் நில்லு அண்ணா.
சரி என்று அவன் எழுந்தவுடன் அவன் காலில் விழுந்தாள். அவள் காலில் விழும் முன் தீபக்கை பார்த்ததால் அவனும் வந்து காலில் விழுந்தான்.
இதை சற்றும் எதிர்பார்க்காதவன். இருவரையும் தொட்டு தூக்கினான்.அதற்கு மேல் அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்கள் கலங்க தன் தங்கையை கட்டிப்பிடித்துக் கொண்டான்.
உன்னோட ஆசிர்வாதம் எங்களுக்கு ரொம்ப முக்கியம் அண்ணா. எங்க ரெண்டு பேருக்கும் ஆசிர்வாதம் பண்ற இடத்துல யாருமே இல்ல அண்ணா என்றாள் கண்கள் கலங்க.
அப்படி எல்லாம் சொல்லாதம்மா வா, அப்பா அம்மா படத்துக்கு முன்னாடி விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ என்று சொல்லி பூஜை ரூமுக்கு அழைத்து சென்றான் விஹான்.
இருவரும் சேவித்துக் கொண்டனர்.
பின்னர் மூவருக்கும் லஞ்ச் ஆர்டர் செய்தான்.
நன்றாக சாப்பிட்டனர். அண்ணா ஃபோட்டோ எடுத்துக்கலாமா என்று கேட்டாள் விருத்திகா.
ஓகே என்று சொல்லி சில செல்ஃபிகளும், மற்றும் சில போட்டோக்களும் மாறி மாறி எடுத்துக் கொண்டனர்.
வெகு நாட்களுக்குப் பிறகு அன்று சந்தோஷமாக இருந்ததாக உணர்ந்தான் விஹான்.
நான்கு மணியளவில் இருவரும் கிளம்பினார்கள்.
டாக்டர பாத்துட்டு சொல்லு மா. ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளு. சப்போஸ் தீப்பக்கால முடியலன்னா ஹாஸ்பிடல் போகணும்னா சொல்லு நான் வந்து கூட்டிட்டு போறேன்.
ஓகே அண்ணா.
நல்லா ஹெல்தியா சாப்பிடு, மாத்திரை மருந்து எல்லாம் கரெக்டா எடுத்துக்கோ.
ஓகே அண்ணா கண்டிப்பா. நீங்க என்கிட்ட முன்னாடி போல சாதாரணமாக பேசி பழகினதிலேயே நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதனாலயே எனக்கு பலமும் ஆனந்தமும் கூடிடுச்சு.
சிரித்தான் விஹான்.
அவர்கள் கிளம்பி சென்றதும், ரோஹித்துக்கு கால் செய்தான் விஹான்.
மச்சி என்னடா பண்ற.
சாப்பிட்டுட்டு தூங்கிட்டேன் டா.
சரி வீட்டுக்கு கிளம்பி வா.
என்ன அவங்க ரெண்டு பேரும் வந்து போயிட்டாங்களா.
இப்ப தான்டா கிளம்பினாங்க.
சரி சரி, எப்படி இருக்கா விருத்திகா?
நல்லா இருக்காடா.
நீ ஒழுங்கா பேசினியா இல்லையா அவகிட்ட?
பேசினேன்டா.
என்ன அவ கேட்டதுக்கு மட்டும் பதில் சொன்னியா?
இல்லடா நான் நார்மலா பேச ஆரம்பிச்சிட்டேன். அவ கல்யாணத்துக்கு முன்னாடி என் தங்கச்சியா இருக்கும்போது எப்படி நான் பேசினேனோ அதே மாதிரி பேச ஆரம்பிச்சுட்டேன் போதுமா?
ரொம்ப சந்தோஷம்டா. இவ்வளவு நாளா எனக்குள்ள ஒரு கில்ட்டி ஃபீலிங்.
உனக்கு ஏன்டா கில்டி ஃபீலிங்?
இல்ல என்னால தான் நீ உன் தங்கச்சி கிட்ட பேசாம இருக்கியான்னு.
அதுவும் ஒரு காரணம் தவிர அதுவே காரணம் கிடையாதுடா. என்னால அவ கல்யாணத்தை மனப்பூர்வமா ஏத்துக்க முடியல அதுதான் முக்கிய காரணம்.
அந்த தீபக்கை எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காது. ஏன்னு தெரியல. ஆனா இன்னைக்கு நான் பார்த்ததில ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுகிட்டேன். உண்மையிலேயே அவன் என் தங்கச்சியை நல்லா தான் பாத்துக்கிறான்.
அவ மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையை தேர்ந்தெடுத்து அவ சந்தோஷமா இருக்கா.
ரொம்ப சந்தோஷம் டா நீ இப்படி சொல்றது கேக்குறதுக்கு என்றான் ரோஹித்.
சரி சரி சீக்கிரமா கிளம்பி வா.
நீ சாப்டியா மச்சி?
சாப்பிட்டேன் டா நாங்க மூணு பேரும் ஒண்ணா தான் சாப்பிட்டோம். அப்புறம் விருத்திகா கேட்டான்னு நிறைய ஃபோட்டோ எல்லாம் எடுத்து இருக்கேன். வந்து பாரு.
ஓகேடா நான் வண்டி புக் பண்ணி வரேன்.
மச்சி உன்னால பைக்ல உட்கார முடியும் என்றால் நானே வந்து கூட உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன் டா.
இல்லடா காலைத் தூக்கிப் போட்டு உட்கார முடியுமானு தெரியல கொஞ்சம் பெயினா இருக்கு
அதனால ஆட்டோவே புக் பண்ணி வந்துடுறேன் டா.
சரி மச்சி சீக்கிரமா வா, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து டின்னர் சாப்பிடலாம் என்றான் விஹான்.
ஓகேடா பை என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு ஆட்டோ புக் செய்தான் ரோஹித்.
தொடரும்….
அ. வைஷ்ணவி விஜயராகவன்.

பாகம் 6
ரோஹித் வீட்டுக்கு வந்ததும் விருத்திகா வாங்கி வந்த ஸ்வீட்டை அவன் வாயில் ஊட்டி விட்டான் விஹான்.
ரொம்ப சந்தோஷம்டா, கங்கிராட்சுலேஷன்ஸ் டா மச்சி, என்றான் ரோஹித்.
பிறகு, அவனிடம் ஃபோட்டோக்களை காட்டினான் விஹான்.
வெகு நாட்களுக்குப் பிறகு விருத்திகாவை பார்த்தான் ரோஹித். அவள் சந்தோஷமாக இருக்கிறாளே அதுவே போதுமென்று நினைத்துக் கொண்டான்.
ரோஹித்துக்கு அடிபட்டது ஒரு வாரத்தில் சரியானது.
இரண்டரை மாதங்கள் சுமூகமாக சென்றது.
தீபக் ஆஃபீஸில் இருந்து வீட்டுக்கு வந்தான்.
டல்லாக அமர்ந்து இருந்தான்.
என்னாச்சு டா, என்று சொல்லிக்கொண்டே அவனருகில் அமர்ந்தாள் விருத்திகா.
சட்டென்று எழுந்தான்.
ஒன்னும் இல்ல நீ போய் தூங்கு.
என்னடா ஒரு மாதிரி இருக்க என்று அவன் தலையை கோதி விட கையை தூக்கியவளின் கையை தட்டி விட்டு விட்டு வேகமாக கெஸ்ட் ரூமிற்கு சென்று கதவை சாத்திக் கொண்டான்.
கதவை தட்டினாள் விருத்திகா. அவளுக்கு பயம் வந்தது.
என்னாச்சு தீபு, தயவு செஞ்சு கதவை திற டா என்றாள்.
விரு, பிளீஸ் என்னை கொஞ்சம் தனியா விடு, எனக்கு மனசு சரியில்லை. நானே அப்புறமா உன் கிட்ட பேசறேன் என்று சொல்லிவிட்டு ஹெட் ஃபோன்ஸ் போட்டுக் கொண்டான்.
மறுநாள் காலை வரை ரூமிற்கு வந்து விருத்திகாவுடன் படுக்கவில்லை தீபக்.
எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறான் என்று மட்டும் அவளுக்கு தெளிவாக புரிந்தது.
சிகரெட் ஸ்மெல் வந்தது. நார்மலாக இருந்திருந்தால் அவனிடம் சண்டைப் போட்டு இருப்பாள் விருத்திகா. அவனுக்கு ஏதோ பிரச்சனை அதற்கான தீர்வை யோசிப்பதற்காகாவோ அல்லது தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காகவோ தான் சிகரெட் பிடிக்கிறான் என்று தெரிந்ததால் அமைதியாக இருந்தாள் விருத்திகா.
காஃபி கொடுப்பதற்காக கதவை தட்டினாள் விருத்திகா.
கதவை திறக்கவில்லை தீபக்.
தீபு, பிளீஸ் கதவை திற டா. காஃபியாவது குடி. நைட்ல இருந்து எதுவும் சாப்பிடாம இருக்கியே டா என்று கண்கள் கலங்கினாள் விருத்திகா.
கதவை திறந்தான் தீபக்.
வேகமாக உள்ளே சென்றாள். இரவெல்லாம் தூங்காமல் இருந்திருக்கிறான் என்று அவன் கண்கள் சிவந்திருப்பதை பார்த்ததிலேயே தெரிந்தது.
என்னடா ஆச்சு, என்று சொல்லி அவன் கையை பிடித்தாள்.
கண்கள் கலங்கினான்.
அது வந்து என்று ஆரம்பித்தான் அப்போது சரியாக அவன் ஃபோன் அடிக்க ஒரு நிமிஷம் என்று சொல்லி ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியே போய் பேசினான். தூரமாக சென்று நடந்து கொண்டே பேசியதால் அவன் என்ன பேசுகிறான் என்று விருத்திகாவிற்கு கேட்கவில்லை. ஆனால் அவன் டென்ஷனாக பேசுவதும், கோபப்படுவதும், கெஞ்சுவதும் அவனடைய ஆக்ஷனில் இருந்து தெரிந்தது விருத்திகாவிற்கு.
ஃபோனில் பேசிவிட்டு உள்ளே வந்தவன்.
விரு,
சொல்லுடா.
டூ டேஸ் உங்க அண்ணன் வீட்டுக்கு போறீயா?
கண்டிப்பா பறேன் டா, ஆனா என்ன பிரச்சனைன்னு மட்டும் சொல்லுடா பிளீஸ்.
இங்க பாரு விரு, நீ என்னோட உயிர்னு உனக்கே தெரியும். இந்த பிரச்சனையை முடிச்சிட்டு ரிலாக்ஸாக ஆயிட்டு உன் கிட்ட எல்லாத்தையும் சொல்றேன். இப்போதைக்கு என் கிட்ட எதுவும் கேட்காத பிளீஸ் என்றான்.
அவன் எப்போதுமே இப்படி நடக்காததால் எப்படி ரியாக்ட் பண்ணுவது என்று தெரியாமல் விழித்தாள் விருத்திகா.
சரி டா, டூ டேஸ் கழிச்சி வரேன். அப்போ என் கிட்ட எல்லாத்தையும் சொல்லிடனும், சரியா?
சரி டி, நீ போயிட்டு வா, அப்புறமா அதை பத்தி பேசலாம் என்றான் தீபக்.
தீபக்,
சொல்லு விரு,
நாளைக்கு செக்கப்பிற்கு போகனும் டா, ஸ்கேனிங் இருக்கு என்றாள்.
கண்கள் கலங்கினான் தீபக்.
அடுத்த ஸ்கேனிங்கிற்கு கண்டிப்பா வரேன் விரு, பிராமிஸ். நாளைக்கு உங்க அண்ணனை கூட்டிக்கிட்டு போறீயா பிளீஸ் என்றான்.
எதுக்கு டா, பிராமிஸ் எல்லாம் சொல்ற? உன்னை பற்றி எனக்கு தெரியாதா. உனக்கு வாழ்கையிலேயே முக்கியமானவங்கன்னா நானும் நம்ம குழந்தையும் தான். எங்களுக்கே உனக்கு டைம் ஸ்பெண்டு பண்ண முடியலைன்னா அது எவ்வளவு முக்கியமான வேலையோ இல்ல பிராப்ளமாகவோ இருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியுது டா என்று சொல்லி கண்கள் கலங்கினாள் விருத்திகா.
அவளை இறுக்கமாக கட்டி அணைத்து அவள் கன்னங்களில் முத்தம் கொடுத்தான் தீபக்.
சரி விரு, நீ ரெடி ஆகு. உங்க அண்ணாவுக்கு கால் பண்ணி சொல்லிடு. நான் டிராப் பண்ணிட்டு பெங்களூர் போறேன்.
பெங்களூர் போகப் போறீயா டா.?
ஆமாம் விரு, நான் வந்து சொல்றேனே. சீக்கிரமா கிளம்பு.
சரி டா, என்று சொல்லிவிட்டு தன் அண்ணன் விஹானுக்கு கால் செய்து சொல்லிவிட்டு இரண்டு நாட்களுக்கு தேவையான துணிகளை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் விருத்திகா.
அடுத்த ஒரு மணி நேரத்தில் விருத்திகாவை விஹான் வீட்டில் விட்டு விட்டு கிளம்பிச் சென்றான் தீபக்.
விஹான் ஆஃபீஸ் சென்றதால் வீட்டு சாவியை பக்கத்து வீட்டில் இருந்து வாங்கிக் கொள்ளச் சொன்னான் விஹான்.
பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் தன் தங்கை விருத்திகா வருவாள் என்று சொல்லி இருந்தான் விஹான்.
சாவியை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்று தன் ரூமில் பேகை வைத்து விட்டு கிட்சனுக்கு சென்றாள். தீபக் சாப்பிடாததால் அவளும் எதுவும் சாப்பிடவில்லை. அதனால் பசி எடுத்தது. ஃபிரிட்ஜில் இருந்த ஆப்பிளை கழுவி கட் செய்து சாப்பிட்டாள். பின்னர் வீட்டை மேலோட்டமாக சுத்தம் செய்து விட்டு மதியத்திற்கு குக்கரிலயே தக்காளி சாதம் செய்து சாப்பிட்டாள். அடிக்கடி தீபக்கிற்கு மெஸேஜ் செய்து சாப்பிட்டானா? ஜூஸ் குடித்தானா? என்று கேட்டுக் கொண்டிருந்தாள் விருத்திகா.
சில நேரம் ரிப்ளை செய்தான், சில சமையம் பிஸி அப்புறமா பேசறேன் என்று மெஸேஜ் செய்து விடுவான்.
ஈவினிங் ஆறு மணி அளவில் விஹான் வீட்டிற்கு வந்தான் ரோஹித்.
விருத்திகா வந்தது அவனுக்கு தெரியாது. ஆகையால் வழக்கம் போல கதவை திறந்து கோண்டு வந்தான். விஹான் ரூமில் டிரெஸ் சேஞ்சு செய்து விட்டு, பசிக்கிறதே பிரெட் ஆம்லெட் டோஸ்ட் சாப்பிடலாம் என்று நினைத்து பிரெட்டை எடுத்து டோஸ்ட் செய்துவிட்டு, முட்டையை உடைத்து ஆம்லெட் செய்தான்.
முட்டையின் வாசம் விருத்திகாவிற்கு வாந்தி வரச செய்தது. தன் ரூமில் சத்தமாக வாந்தி எடுத்தாள் அவள்.
என்ன சப்தம் என்று நினைத்துக் கொண்டே விருத்திகாவின் ரூமிற்கு வந்தான் ரோஹித்.
அப்போது விருத்திகா அங்கே வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.
No comments yet.