மீண்டும் ஒரு காதல் -17

Sweety Novel's | 17 Apr 2026 | Share

எழில் “சத்யா…”என்று கூப்பிடவும் அவளும் நிமிர்ந்து பார்த்தாள்.

அவளிடம் அவன் கரத்தை நீட்ட எல்லாரும் அதிர்ந்தனர்..

மனிஷா “என்ன பிரியா சிங்கிளா நாம இத்தனை பேர் இருக்கோம்…சத்யா கமிட்டட்ன்னு தெரிஞ்சும் அவளை டேன்ஸ் பண்ண கூப்பிடறாரு…”என சொல்ல பிரியா முகம் வாடிவிட்டது..

“லெட்ஸ் டேன்ஸ்…”என்று எழில் சொல்லவும் சத்யா எல்லாரையும் பார்த்தாள்… எல்லாரும் அவளை ஒருமாதிரி பார்ப்பது போல் இருந்தது 

சதீஸ் அதை புரிந்துகொண்டவனாய் ‘”எழில் சிங்கிள் கேர்ள்ஸ்கூட டேன்ஸ் பண்ணுனா உன்னை ஓட்டுவோம்ன்னு கமிடட் பொண்ணுகூட டேன்ஸா… என்ன சத்யா உங்க பார்ட்னர் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டாரே…”என சொல்லி சமாளிக்க எல்லாரும் “ஓ சார் அதனாலதான் சத்யாவை சூஸ் பண்ணிருக்காரா…”என நினைத்துகொண்டனர்..

சத்யா “என் பார்ட்னர் எனக்கு புல் பிரீடம் கொடுத்து இருக்காரு…”என்றவள் மற்றவர்கள் முன் எழிலை எம்பிராசிங் ஆகவிடாமல் அவன் கரத்தின் மீது தன் கரம் வைத்தவள் எழுந்தாள் .

ஆகாஷ் தன்னுடைய போனில் பாடலை ஒலிக்க விட எழில் அதற்கு ஏற்ப சத்யாவுடன் டேன்ஸ் ஆட தொடங்கினான்..

🎶உன் கைகள் கோர்த்து

உன்னோடு போக

என் நெஞ்சம் தான் ஏங்குதே

தினம் உயிர் வாங்குதே

உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ

என் உள்ளம் அலைபாயுதே

ஐயோ தடுமாறுதே

உன் கன்னம் மேலே மழை

நீரைப் போலே

முத்தக் கோலம் போட

ஆசை அல்லாடுதே

நீ பேசும் பேச்சு நாள்

தோறும் கேட்டு

எந்தன் ஜென்மம் தீர

ஏக்கம் தள்ளாடுதே 

ஒ பெண்ணே பெண்ணே

என் கண்ணே கண்ணே

உண்மை சொன்னால் என்ன

உன்னைத் தந்தால் என்ன

ஒ பெண்ணே பெண்ணே

என் கண்ணே கண்ணே

உண்மை சொன்னால் என்ன

உன்னைத் தந்தால் என்ன…🎶

எழில் சத்யா இருவரும் அழகாக டேன்ஸ் ஆட பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது..

“வாவ் சூப்பர்… “என்று சதீஸ் ஆகாஷ் இருவரும் கைத்தட்ட 

எழில் கோபப்பட்டாலும் ஆங்கிரி பேர்டாக இருந்தாலும் அவனை சைட் அடிக்கும் அவனுடைய டீம் கேர்ள்ஸ்க்கு கடுப்பாக இருந்தாலும் அவர்கள் டேன்ஸை ரசித்தே பார்த்தனர் அதுவும் அவனுக்காக மட்டும்…

விஷ்ணுவால்தான் அதையெல்லாம் பார்க்க முடியவில்லை..

“ஐயோ இந்த கன்றாவியை எல்லாம் என்னால பார்க்க முடியலயே…இதுக்கு நான் இந்த டேரை கொடுக்காமலே இருந்து இருக்கலாம்…”என புலம்பலாக சொல்லிக்கொண்டான்..

இருவரும் டேன்ஸ் ஆடி முடிக்கும் பொழுது எழில் அவளை கைகளில் தாங்கி அப்படியே பின்னாடி சாய்த்து இருக்க இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவியது..

எல்லாரும் கைத்தட்ட சத்யா வேகமாய் தன்னிலை உணர்ந்து அவனிடமிருந்து விலகினாள்..

எழில் “அவ்வளவுதான… ஓவர்…”என்றவன் தன்னிடத்தில் உட்கார சத்யாவும் தன்னுடைய இடத்தில் அமர்ந்தாள்..

அதன்பின் கொஞ்சநேரம் எல்லாரும் பேசிகொண்டிருக்க விஷ்ணு “ஏன் சத்யா நீங்க கமிட்டட்ன்னு என்கிட்ட சொல்லுல?…”என கேட்க 

சத்யா அவன் பக்கம் திரும்பி பார்த்தவள் “உங்ககிட்ட எதுக்கு சொல்லணும் விஷ்ணு.. தட்ஸ் மை பர்ஸ்னல்….”என்றவள் போன் இசைக்கவும் எடுத்து பார்த்தாள் 

இந்தமுறை அவளுடைய அம்மா மீனாட்சி அழைத்து இருந்தார்..

“ஓகே கைஸ்… நான் கிளம்பியே ஆகணும்…சாரி டுமோரோ ஆபிஸ்ல பார்க்கலாம்.. பாய் பிரியா…”என்றவள் அங்கிருந்து செல்லும்பொழுது எழிலை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்…

சில மணி நேரங்களுக்கு பின்…

எழில் தள்ளாடிகொண்டே பிளாட்க்கு வந்தான்..

கதவை தட்ட சத்யா அவனுக்காகவே கோபத்துடன் காத்திருந்தவள் வேகமாய் சென்று கதவை திறந்தாள்.

எழில் இருந்த நிலையை பார்த்து முகம் சுழித்தவள் “நான் கிளம்பும் போது கம்மியாதான குடிச்சு இருந்தான் இப்போ என்ன பக்கத்திலயே நிக்க முடியல இந்த அளவுக்கு குடிச்சு இருக்கான்…”என சொல்லிக்கொண்டவள் அவளை முறைத்து பார்க்க 

“ஏய் தள்ளு…”என்ற எழில் உள்ளே செல்ல சத்யா கதவை லாக் செய்தவள் வேகமாய் அவன் முன்னாடி சென்று நின்றாள்..

“என்னடி?…”வாய் குளறலாக அவன் கேட்க 

“உனக்கு எவ்வளவு தைரியம்டா…என்னை டேன்ஸ் ஆட கூப்பிடற.. டேன்ஸ் ஆடும்போது என்ன அங்க இங்கன்னு தொடர… என்ன நினைச்சுட்டு இருக்க நீ…”

‘ஏய்… இங்க பாரு புல் போதையில இருக்கேன்… நொய் நொய்ன்னு பேசி என்னை கோபப்படுத்தாத… தள்ளிப்போ… “

‘போக முடியாது… பதில் சொல்லுடா…எதுக்கு என்னை டேன்ஸ் பண்ண கூப்பிட்ட எதுக்கு டச் பண்ணுன… உனக்கு யாருடா அந்த ரைஸ் கொடுத்தா… இந்த வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத அப்பறம் நான்… “என்றவள் வார்த்தைகள் அவன் செயலில் பாதியிலேயே நின்றது..( என்ன பண்ணுனான்னு தெரியலயே…)

சத்யா கைபிடித்து இழுத்த எழில் அவளை நொடி நேரத்தில் சுவரில் சாய்த்து சிறை செய்திருந்தான்..

அதில் அவள் திட்டிய வார்த்தைகள் எல்லாம் பாதியிலேயே நின்றுவிட விழிகள் விரித்து அவனை பார்த்தாள்..

அவளை அழுத்தம்மாய் பார்த்த எழில் “இப்போ என்ன உனக்கு பிரச்சனை உன்கூட டேன்ஸ் ஆடுனதா?…”என கேட்க சத்யா தலையசைத்தாள்..

“அங்க இருந்த எல்லா பொண்ணுங்களும் என்னை சைட் அடிக்கிற பொண்ணுங்க எப்போடான்னு சான்ஸ்க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க… அவங்ககூட டேன்ஸ் ஆடி இருந்தா அதையே அட்வான்டேஜ்ஜா எடுத்துப்பாங்க அதனாலதான் உன்கூட டேன்ஸ் பண்ணுனேன்… அப்பறம் டச்சிங் எல்லாம் வேணும்ன்னு பண்ணல டேன்ஸ்ல தெரியாம பட்ருச்சு… போதும்மா….”என்றவன் அவளை விட்டு விலகினான்..

“ஓவரா குடிச்சிருக்கேன் பேசுனா சண்டைதான் வரும்… நான் என் ரூமுக்கு போகட்டுமா?…”என அவன் கேட்க சத்யா தன்னையும் அறியாமல் தலையாட்டினாள்..

“குட் கேர்ள்…”என்றவன் அங்கிருந்து தள்ளாடிகொண்டே அவனுடைய அறைக்கு சென்றுவிட்டான்..

சத்யா இதழ் குவித்து காற்றை ஊதியவள் “ம்ம் ஏதோ ரீசன் சொல்றான் அதுவும் நம்பர மாதிரிதான் இருக்கு…அந்த பொண்ணுங்க அட்வான்டேஜ் எடுத்துக்ககூடாதுன்னு இவன் என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துகிட்டானா என்ன…”என சொல்லிக்கொண்டவளுக்கு குழப்பம்மாய் இருக்க தலையை சொரிந்தவள் “சத்யா ரொம்ப யோசிக்காத…”என சொல்லிக்கொண்டு தூக்கம் வரவும் தன்னுடைய அறைக்கு சென்றாள்..

மறுநாள்..

இருவரும் எப்பொழுதும் போல் சமைத்து சாப்பிட்டதும் ஆபிஸ் கிளம்பினர்..

லிப்ட்டில் ஏறும் பொழுது எதிர்வீட்டு வசுமதி வேகமாய் வந்து அவர்களுடன் ஏறிகொண்டாள்..

வசுமதி காலேஜ் படிக்கும் பெண்… லிப்டில் ஏறியதும் சத்யாவை அவள் கொஞ்சம்கூட கண்டுகொள்ளவில்லை எழிலையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தாள்..

அதை எழில் கவனிக்கவில்லை ஆனால் சத்யா பார்த்துவிட்டாள்…

“என்ன இந்த பொண்ணு இப்படி பார்க்கிறா…”என தனக்குள் சொல்லிக்கொண்டவள் இருவருக்கும் நடுவில் சென்று நின்றுகொண்டாள்..

“பச்…”வசுமதி சலித்துகொண்டவள் பின்னாடி நகர்ந்து நின்று எழிலை சைட் அடித்தாள்..

“பாருடா… நகர்ந்து நின்னு சைட் அடிக்கிறா…”

முனுமுனுத்துகொண்ட சத்யா அவளை கண்டுகொள்ளவில்லை…

எழில் ஏதேர்ச்சையாக வசுமதி பக்கம் திரும்பி பார்க்க அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள் அவன் பார்த்ததும் “ஹாய்… குட் மார்னிங்…”என்றாள்..

எழில் சத்யா பேசியதில் இருந்து கொஞ்சம் பெண்கள் விஷயத்தில் கோபத்தை காட்டக்கூடாது என்று முடிவு செய்தவன் சத்யா வேறு இருக்கவும் தான் முகத்தை திருப்பிக்கொண்டாள் அதற்கு எதாவது சொல்வாள் என்று நினைத்துகொண்டு “குட் மார்னிங்…”என்றான்.

அதில் வசுமதி முகம் மலர லிப்ட் நிற்கவும் எழில் வெளியேறினான்…

பின்னாடியே செல்லபோனவளை கைபிடித்து தடுத்த சத்யா தன்னுடைய கழுத்தில் இருந்த தாலியை காட்டினாள்..

“என் புருஷன்… சைட் அடிக்கிற வேலை எல்லாம் வச்சுக்ககூடாது… படிக்கிற வேலையை மட்டும் பார்க்கணும்… சரியா…”என சிரித்தபடி சொன்னாலும் அவள் குரலில் மிரட்டல் இருந்தது.

அவள் கன்னம் தட்டியவள் வெளியேறினாள்..

சத்யா பார்க்கிங் செல்லும் பொழுது எழில் அவன் காரில் சாய்ந்து நின்றபடி போன் பேசிக்கொண்டிருந்தான்..

அவனை பார்த்தவள் “இவன் இன்னும் கிளம்பலயா…”என முனுமுனுத்துகொண்டவள் தன்னுடைய ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.

அவள் நேரம் ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகவில்லை..

“ஐயையோ இது என்ன இந்த நேரத்தில மக்கர் பண்ணுது…”முனுமுனுத்தவள் மறுபடியும் மறுபடியும் ஸ்டார்ட் செய்து பார்த்தாள்..

எழில் போன் பேசி முடித்ததும் காரில் ஏறப்போனவன் ஏதோ தோன்றவும் அவள் பக்கம் திரும்பி பார்த்தான்.

சத்யா வண்டியுடன் போராடி கொண்டிருப்பதை பார்த்தவன் “என்னாச்சுன்னு போய் கேட்கலாமா… இல்ல வேண்டாம் திமிர்பிடிச்சவ எதாவது நோஸ்கட் பன்ற மாதிரி சொல்வாளே…”என சொல்லிக்கொண்டவனுக்கு விட்டு செல்ல மனசும் வரவில்லை..

நெற்றியை தேய்த்து யோசித்தவன் அவள் அருகில் சென்றான்.

“ஹேய்…’கூப்பிட சத்யா திரும்பி பார்த்தாள்..

“என்னாச்சு?…”

‘ம்ம் வண்டி ஸ்டார்ட் ஆகல…’

“ஓகே தள்ளு…”

‘”நீ என்ன மெக்கானிக்கா?… “

“உனக்கு போய் ஹெல்ப் பண்ண வந்தேன் பாரு…”என்றவன் அங்கிருந்து செல்லப்போக சத்யா கைபிடித்து தடுத்தாள்..

“ஓகே ஹெல்ப் பன்னு…”

“எப்பவும் திமிரா பேசக்கூடாது சரியா…”என்றவன் அவள் தலையாட்டவும் “சரி தள்ளு…”என சொல்லிவிட்டு அவன் ஸ்டார்ட் செய்து பார்க்க ம்ம்ஹும் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை..

“ஸ்டார்ட் ஆகல…”

‘வண்டியை பர்ஸ்ட் சர்வீஸ் விடணும்… “சொல்லிக்கொண்டவள் போன் எடுத்து கேப் அவைளப்பிலாக இருக்கிறதா என்று பார்த்தாள்..

“என்ன பன்ற?…”

‘கேப் இருக்கான்னு பார்க்கறேன்… “

“ஆபிஸ்தான… நானே ட்ராப் பன்றேன்…”என அவன் சொல்லவும் 

விழிகளை உருட்டியவள் “நீயா?…”என்று கேட்க 

“வர்றதுன்னா வா…”என்றவன் தன்னுடைய காரை நோக்கி செல்ல ‘”இவனை விட்டா அப்பறம் ஆபிஸ்க்கு லேட்டாகிடும்…ம்ம்ஹும் இவன்கூட போயிடலாம்…. டேய் நில்லு…”என கத்தியபடி அவன் பின்னால் ஓடினாள்..

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.