மீண்டும் ஒரு காதல் -10

Sweety Novel's | 17 Apr 2026 | Share

சத்யா தன்னுடைய அறைக்கு செல்வதை பார்த்த எழில் வேகமாய் சென்று வழியை மறைப்பது போல் கதவு பக்கத்தில் நின்றவன் “ஏய் எங்க போற இது என்னோட ரூம்…நீ உள்ள போக கூடாது..” என்றான்.

“உன்னோட ரூமா…” என கேட்டு கண்கள் சுருக்கிய சத்யா “இனி நான் இங்கதான் இருக்க போறேன்.. அப்போ நான் எங்க தங்குறது?…” என்றாள் 

எழில் அங்கிருந்த மற்றொரு அறையைக் காட்டி “நீ வேணா அந்த ரூம்ல ஸ்டே பண்ணிக்கோ…”என சொல்ல சத்யா மறுக்கவில்லை..

“ரொம்ப சந்தோஷம்…எனக்கும் உன்கூட ஒரு ரூம்ல இருக்கணும்னு ஆசையெல்லாம் இல்ல…”என்றவள் தன்னுடைய ட்ராலியை இழுத்துக் கொண்டு அந்த அறைக்கு சென்று விட்டாள்..

எழில் பெருமூச்சு இழுத்து விட்டவன் “இனி இந்த கோல்டு மெடலை நான் எப்படி சமாளிக்க போறேனோ…”என புலம்பலாக சொல்லிக்கொண்டான்..

அன்றைய நாள் வேகமாய் செல்ல அடுத்த நாளிலிருந்து எழில் சத்யாவின் டாம் அண்ட் ஜெர்ரி சண்டை ஆரம்பமானது..

மறுநாள்..

எழில் தூக்கம் கலைந்து எழுந்து வெளியில் வந்தவன் ஹாலில் மாட்டப்பட்டிருந்த போட்டோக்களை பார்த்ததும் முகம் சுருக்கினான்..

எந்தபக்கம் திரும்பினாலும் சத்யாவின் போட்டோக்கள் தான் மாட்டப்பட்டிருந்தது..

“இவ என்ன நினைச்சுட்டு இருக்கா என்னோட வீட்டுல நான் என்னோட போட்டோவையே மாட்டல…”என சொல்லிக்கொண்டவன் சத்யா அறைக்கு சென்று கதவை தட்ட கைவைக்க அதுவோ லாக் செய்யாமல் இருந்ததில் அவன் கைவைத்ததும் திறந்துகொண்டது..

“என்னடி நினைச்சுட்டு இருக்க… உன் இஷ்டத்துக்கு என்ன வேணும்ன்னாலும் பண்ணுவியா…”என கோபம்மாய் சொன்னவன் பின்தான் அறையில் அவள் இல்லாததை கவனித்தான்..

“எங்க போயிட்டா..”என சொல்லிக்கொண்டவன் “ஒருவேளை வெளில இருக்காளோ…”என அங்கிருந்து செல்லப்போக அப்பொழுது பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தவன் அதிர்ச்சியில் சிலையென உறைந்தான்..

சத்யா குளித்து விட்டு ஈரம் சொட்ட பெரிய டவல் ஒன்றை தன்னுடைய உடம்பில் சுற்றிக்கொண்டு வந்தாள்..

அந்த பெரிய துண்டு அவளின் தோள்களையும் வாழைதண்டு கால்களையும் மறைக்க முடியாமல் விட்டிருக்க எழில் தன்னையறியாமல் அவளையே பார்த்தவன் எச்சில்கூட்டி விழுங்கினான்.

முதலில் அவள் அவனை கவனிக்கவில்லை… துண்டு அவிழ்வது போல் இருக்கவும் அதை அவிழ்த்து கட்டலாம் என்று துண்டில் கைவைக்க அவளையே பார்த்து கொண்டிருந்தவன் அவள் என்ன செய்ய போகிறாள் என்பதை உணர்ந்து “ஏய் என்ன பன்ற…”என்று தன்னையறியாமல் கத்தினான்..

அதில் அதிர்ந்து அவனை பார்த்தவள் “ஆ…”என்று கத்த அவள் கத்தியதை பார்த்ததும் அவனும் கத்தினான்..

“நீ எதுக்குடா இங்க வந்த… போடா.. போடா…”பெட்டில் கிடந்த தலையனையை எடுத்து அவன் மேல் தூக்கிபோட எழில் வெளியில் சென்றான்.

வெளியில் சென்றவன் வேக வேகமாய் ஆழ்ந்த பெருமூச்சு இழுத்துவிட்டான்..

இதயம் வேகமாய் துடிக்க நெஞ்சில் கைவைத்து கொண்டவன் “இவ என்ன இப்படி இருக்கா…”என்று சொல்லிக்கொண்டவன் விழிமூட வெண்ணையில் செய்த சிலைபோல் அவள் உருவம் கண் முன் வந்து போக உடம்பை ஒருமாதிரி வளைத்து முறுக்கினான்..

சில நிமிடங்களில் சத்யா உடைமாற்றிகொண்டு வெளியில் வந்தவள் “டேய் எருமை உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா…”என்றவள் அவனை திட்ட அவனோ அவளையே பார்த்தான்..

அவன் இன்னும் அவளை அந்த நிலைமையில் பார்த்ததில் இருந்து வெளியில் வராதவனாய் இருக்க சத்யாவோ கோபத்தில் கண்டபடி திட்டினாள்..

“டேய் எருமை நான் உன்னைதான் திட்டிட்டு இருக்கேன்… பதில் சொல்லுடா…”

அவள் கோபத்தில் டேபிள் மீதிருந்த பிளவர்வாஷை எடுக்க எழில் தன்னிலை உணர்ந்தவன் “ஹேய் வைலன்ஸ் வேண்டாம்…”என்றான்.

“எதுக்கு என் ரூமுக்கு வந்த…அதுவும் நான் குளிச்சுட்டு இருக்கும்போது எனக்கே தெரியாம என்னோட ரூமுக்கு வருவியா…”

அவள் திட்ட எழிலும் இப்பொழுது கோபம்மாய் ‘”ம்ம் வந்தேன்தான்… ஏன் வந்தேன்… “என சொல்ல 

“அதைதான் நானும் கேட்கறேன்… எதுக்குடா தடியா வந்த…”

“தடியான்னு சொன்ன பிச்சுடுவேன்…”

“அப்படித்தான் சொல்வேன் என்னடா பண்ணுவ…”

“என்ன பண்ணுவனா…”என்று அவனும் அவளும் திட்டிக்கொண்டே அருகில் நெருங்கி வந்திருந்தனர்.

எழில் அப்படியே கோழி கழுத்தை பிடித்து திருகுவது போல் அப்படியே சுவர் பக்கம் திருப்பியவன் “அங்க பாருடி…”என்றான்.

தன்னுடைய போட்டோவை பார்த்ததும் சத்யா சிரிக்க எழில் கடுப்பானவன் “சிரிக்கவா செய்யற… இது என்னோட வீடு இங்க எப்படி நீ உன்னோட போட்டோவை மாட்டலாம்…”என்றான்.

அவன் கையை தட்டிவிட்டவள் “என்ன சொன்ன உன் வீடா… குட் ஜோக்… இனி என்னோட வீடும்தான்… மிஸ்டர் எழில் என்னோட வீட்டுல நான் எத்தனை போட்டோன்னாலும் மாட்டுவேன் உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ போ…”என்றவள் அவன் முறைத்து பார்த்ததை கண்டுகொள்ளாதவளாய் அங்கிருந்து சென்றாள்..

எழில் சத்யாவின் டாம் அண்ட் ஜெர்ரி சண்டை நாளின் தொடக்கத்தில் இருந்த அந்த நாள் முடியும் வரை தொடர்ந்துகொண்டே இருக்கும்.

அவள் என்ன செய்யக்கூடாது என்றுசொல்கிறாளோ அதைதான் எழில் செய்வான்.. அதுபோல்தான் அவளும் அவனை எவ்வளவு கோபப்படுத்த முடியுமோ அவ்வளவு கோபப்படுத்தினாள்..

“என் வீட்டுல உன் போட்டோவை மாட்டுவியா… நீயே மாட்டும்போது நான் மாட்ட மாட்டேனா…”என்று ஏட்டிக்கு போட்டியாக எழிலும் தன்னுடைய போட்டோக்களை எல்லாம் மாட்டினான்..

அதுமட்டும்மில்லை கிட்சன் யூஸ் செய்வதிலும் இருவரும் சண்டை வந்தது…

சத்யா “நான் ஒன்னும் உனக்கு வேலைக்காரி கிடையாது உனக்காக எல்லாம் நான் சமைக்க மாட்டேன்… வேணும்ன்னா நீயே சமைச்சுக்கோ இல்ல ஆர்டர் பண்ணி சாப்பிட்டுக்கோ…”என சொல்லிவிட்டாள்..

அவனும் ‘நீ சமைக்கிறது எல்லாம் நான் சாப்பிடணுமா அதுக்கு நான் பட்னியாவே இருப்பேன்….”என சொல்லிவிட்டான்.

சத்யா அவளுக்கு சமைக்க தேவையான பொருட்கள் எல்லாம் அவளே வாங்கிகொண்டாள்..

எழில் காலையில் வெளியில் பிரேக்பாஸ்ட் சாப்பிட்டு விடுவான் மதியம் ஆபிஸ் கேன்டில் லன்ச் நைட் வீட்டிற்கு வரும்போது தனக்கு தேவையான டின்னரை அவனே வாங்கி வந்துவிடுவான்..

சத்யா அவனுக்காக எந்த வேலையும் செய்ய மாட்டாள்.. அவனுமே அவளிடம் எதுவும் எதிர்பார்க்க மாட்டான்.. ஆனாலும் அவர்களுக்குள் எதாவது சண்டை வந்து கொண்டே இருக்கும்..

சத்யா அவன் லிப்ட்டில் சொல்லும் பொழுது மெயின் ஆப் பண்ணுவது அவன் அவள் சமைக்கும் பொழுது அவளுக்கே தெரியாமல் குழம்பில் உப்பு இல்லை காரத்தை கொட்டி வைப்பது சத்யா எண்ணெய் கொட்டி அவனை கீழே விழ வைப்பது அதற்கு அவன் செய்வது என்று தினமும் ஒரு சண்டை நடக்கும்..

எழில் சத்யா இருவருமே வேலைக்கு சென்றனர்… அவனுக்கு அவள் என்ன வேலை செய்கிறாள் என்று தெரியாது அவளுமே அவன் எந்த கம்பனியில் வேலை செய்கிறான் என்று தெரிந்துகொள்ளாமல் இருந்தாள்..

இவர்கள் ஒற்றுமையாக இருப்பது அவர்கள் பெற்றோர்கள் வீடியோ கால் செய்யும் பொழுது மட்டுமே…

அன்று..

எழில் ஆபிஸ் விட்டு வீட்டிற்கு வந்தும் வேலை அதிகமாக இருக்க லேப்டாப் எடுத்து வைத்து வேலை பார்த்து கொண்டிருந்தான்..

சத்யா திடீரென அவன் அருகில் வந்தவள் சிரித்துகொண்டே அவன் கரம் பற்ற “ஹேய் என்ன பன்ற… விடு…”என்றபடி வேகமாய் அவள் கரத்தை உதறியவன் திரும்பி பார்க்க சத்யா போனை உயர்த்தி பிடித்து இருக்க அதில் அவளுடைய பெற்றோர் வீடியோ காலில் இருந்தனர்.

“வீடியோ கால்ன்னு கோபமா பேசிட்டேனே…”மைண்ட் வாய்ஸில் திட்டிக்கொண்டவன் சத்யா முறைத்து பார்க்கவும் “இவ வேற முறைக்கிறாளே…”முகத்தை சிரித்தார் போல் வைத்துகொண்டவன் சத்யா தோளில் கைப்போட்டு கொண்டான்.

அம்மா அப்பா வீடியோ காலில் இருந்ததால் சத்யாவும் அவனை திட்டவில்லை.

இருவரும் அவர்களுடன் பேச தொடங்கினர்.. எழில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டு நலன் விசாரித்தவன் “உங்க பொண்ணு என்னை ஒர்க் பார்க்கவே விடமாட்டேங்குறா டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்கா அங்கிள்…”என்றவன் சற்று முன் தான் கோபமாய் கத்தியதை அவர்கள் தப்பாக நினைக்ககூடாது என்று சத்யாவை குறை சொன்னான்..

உடனே மீனாட்சி “ஏன் சத்யா மாப்பிள்ளைதான் வேலை பார்த்துட்டு இருக்கார்ல அவரை எதுக்கு தொந்தரவு பன்ற…”என்று கண்டித்தார்..

“அம்மா வீட்டுக்கு வந்தும் என்னம்மா வேலை…”என்றவள் சில நிமிடங்கள் அவரிடம் பேசிவிட்டு கட் செய்தவள் வேகமாய் தன் தோளில் இருந்த அவன் கரத்தை தட்டிவிட்டாள்.

அவள் தட்டி விடவில்லை என்றாலும் அவனே எடுத்து இருப்பான்..

“ஏய்…”

சத்யா அவன் கழுத்தை பிடித்தவள் “என்னடா நினைச்சுட்டு இருக்க உன் அம்மா போன் பண்ணுனா நான் ஒழுங்காதான பேசறேன் என் அப்பா அம்மா போன் பண்ணுனா மட்டும் ஓவரா பன்ற… அவங்க என்னைப்பத்தி என்ன நினைப்பாங்க…”என்றவள் அவனை திட்டிவிட்டு 

“இங்க பாரு நீ என் அம்மா அப்பாவை எப்படி ட்ரீட் பன்றியோ அப்படித்தான் நான் உன் அம்மாகிட்ட பேசுவேன் அதை நியாபகம் வச்சுக்கோ…”என்று எச்சரித்தவள் எழுந்து அங்கிருந்து செல்லபோக எழில் அவள் கரம் பற்றி தடுத்தான்.

“ஏய் விடு…”சத்யா அவன் கரத்தை உதற பார்க்க

அவனோ அவள் திட்டிய கோபத்தில் அவள் கரத்தை பிடித்து இருந்தவன் சத்யா அவன் கோபத்தை அதிகரிப்பது போல் கரத்தை உதற பார்க்கவும் வேகமாய் அவள் கரத்தை இழுக்க அதை எதிர்பாரதவள் அவன் மேல் விழுந்தவள் அவன் இதழில் முத்தத்தை பதித்து இருந்தாள்..

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.