மீண்டும் ஒரு காதல் -8

Sweety Novel's | 17 Apr 2026 | Share

எல்லாரும் கோயம்புதத்தூர் வர இரவாகி விட வள்ளி சதீஸை அன்றிரவு அங்கையே தங்க சொல்லிவிட்டார்.

வரும் வழியிலேயே இரவு உணவை முடித்து கொண்டு வந்ததால் எல்லாரும் அவரவர் அறைக்கு சென்றனர்.

சத்யா ட்ராவல் செய்தது சோர்வாக இருக்கவும் அறைக்குள் சென்றதும் பெட்டில் விழுந்து தூங்கிவிட்டாள்..

எழில் அவளை தடுக்கவில்லை… சோபா இருந்ததால் அவன் சென்று அதில் படுத்துகொண்டான்..

மறுநாள்…

சத்யா தன்னுடைய நல்ல மருமகள் நாடகத்திற்காக நேரமாகவே அலாரம் வைத்து எழுந்தவள் எல்லா வேலைகளையும் பார்க்க தொடங்கினாள்.

வள்ளி வந்தவர் “என்ன சத்யா நீ இந்த வேலை எல்லாம் நான் பார்த்துக்க மாட்டனா… சரி நீ போய் எழிலுக்கு காபி கொடு சமையல் வேலை எல்லாம் நான் பார்த்துக்கறேன்…”என்றார் 

அவளும் தலையசைத்தவள் காபி எடுத்துகொண்டு தங்களின் அறைக்கு சென்று பார்க்க அங்கு எழிலை காணவில்லை…

பாத்ரூமிலும் அவனை காணவில்லை…

“எங்க போயிட்டான்.. ஒருவேளை எக்ஸர்சைஸ் பண்ண போய்ட்டானா என்ன….”என தனக்குள் சொல்லிக்கொண்டவள் அங்கிருந்து ஒவ்வொரு அறையாக பார்த்தபடி செல்ல வீட்டிற்கு வெளியே வராண்டாவில் எழில் பால் ஒன்றை வைத்து அதை தட்டியபடி விளையாடி கொண்டிருந்தான்..

“இவனை நான் உள்ள தேடிட்டு இருந்தா இவன் என்னடான்னா இங்க வந்து விளையாடிட்டு இருக்கான்… சின்ன பையன்னு நினைப்பு இவனுக்கு எருமைமாடு வயசு ஆகுது…”என முனுமுனுத்துகொண்டவள் தலையில் பந்து பறந்து வந்து விழுந்தது..

“அவுச்…”வலியில் முகம் சுழித்தவள் திரும்பி பார்க்க எழில் சிரித்தவன் “தெரியாம பட்ருச்சு….”என்றான்

அவன் நக்கலாக சொன்னதிலேயே அவன் வேண்டும் என்றுதான் பந்தை வீசினான் என்று அவளுக்கு புரிந்தது.

எழில் அருகில் வந்தவன் கீழே விழுந்த பந்தை எடுத்துகொண்டு தன்னை முறைத்து பார்த்தவளை பார்த்து புருவம் உயர்த்தியவன் “என்ன?…”என்றான்..

“காபி…”என்றவள் கப்பை நீட்ட அவனோ வாங்காமல் “ஸ்டராங்கா இருக்கா?…”என கேட்க 

சத்யா அதை வாயில் வைத்து ஒரு மிடரு விழுங்கியவள் “ம்ம் ரொம்பவே ஸ்டராங்கா இருக்கு….”என்றவள் கப்பை நீட்ட இப்பொழுது அவன் முறைத்தான்..

“என்ன வேண்டாமா… வேண்டாம்ன்னா போ…நானே இந்த காபியை குடிச்சுக்கறேன்…”என்றவள் காபியை குடித்தபடி அங்கிருந்து செல்ல போக எழில் கால் வைத்து அவளை தட்டி விட அதில் விழப்போனவளை பாவம் பார்த்து தாங்கி பிடித்தான்.

அவன் கரம் அவள் இடையில் அழுந்தபதிய சத்யா அதிர்ந்தவள் கையில் இருந்த காபி கப்பை கீழே போட்டுவிட எழில் அவளை நேராக வைத்தான்..

“ஏய் கோல்டு மெடலு பார்த்து போக மாட்டியா…என்ன நீ…”என்றவன் அவளை பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்து “சரி சீக்கிரம் இதை கிளீன் பண்ணிடு…”என்றவன் குளிக்கலாம் என்று உள்ளே செல்ல போக இப்பொழுது சத்யா காலை நகர்த்தி வைத்து அவனை கீழே தள்ளிவிட்டாள்..

எழில் தடுமாறியவன் கீழே விழ சத்யா சிரித்தவள் பின் “ச்சு ச்சு என்னப்பா நீ பார்த்து போக வேண்டியதுதான…”என்றாள் கிண்டலாக 

எழில் கோபத்தில் முகம் சிவந்தவன் “ஹேய்… உன்னை…”என சொல்ல 

“என்னை.. என்ன…டிட் பார் டேட்… நீ என்னை தள்ளிவிட்டதுக்கு தான் நானும் உன்னை தள்ளிவிட்டேன்… யாருகிட்ட… சத்யாடா…”என்றவள் அலட்சியம்மாய் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து செல்ல எழில் பல்லை கடித்து கைகளை தரையில் குத்தியவன் “சரியான டார்ச்சர எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க..”என முனுமுனுத்தபடி எழுந்தான்..

அன்றைய நாள் முழுவதும் சத்யா எழினின் டாம் அண்ட் ஜெர்ரி சண்டை தொடர்ந்தது..

தென்றல் தழுவும் மாலை நேரம்..

சத்யா ஹெட் போன் மாட்டியபடி பாட்டு கேட்டு கொண்டு வரான்டாவில் அமர்ந்து இருந்தாள்..

அப்பொழுது “மேடம்…”யாரோ கூப்பிடும் சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தாள்..

ஒருவன் நின்றிருந்தவன் “மேடம் கொரியர் வந்திருக்கு… எழில் சார்…”என்று கேட்க 

எழில் வெளியில் சென்றிருந்ததால் அவள் சென்றவள் “அவர் வெளில போயிருக்காரு நான் அவரோட வொய்ப்தான் கொடுங்க…”என்றவள் கையெழுத்து போட்டு பாக்ஸை வாங்கிக்கொண்டாள்.

“என்ன பாக்ஸ் இது…”என சொல்லிக்கொண்டவள் “ஹாப்பி மேரிட் லைப் எழில்…”என்று எழுதி இருக்கவும் “ஓ மேரேஜ்க்கு வர முடியாததால அவன் பிரண்ட் கிப்ட் அனுப்பி இருக்காங்க போல…”என சொல்லிக்கொண்டவள் அது எடுத்துகொண்டு அறைக்கு சென்றாள்..

அதை முதலில் ஓரமாய் வைத்தவளுக்கு சில நிமிடங்களில் அதில் என்ன இருக்கும் என்று பார்க்க ஆர்வம்மாய் இருக்க பாக்ஸை திரும்பவும் கையில் எடுத்தவள் பிரிக்க தொடங்கினாள்..

அதற்கு உள்ளே ஒரு பாக்ஸ் இருக்க “பாக்ஸ்குள்ள பாக்ஸா…”என சொல்லியபடி திறந்து பார்த்தவள் அதிலிருந்ததை பார்த்ததும் அதிர்ந்தாள்..

பாக்ஸ் திறந்து பார்த்த சத்யா அதிர்ந்தவள் அதிலிருந்த டிரசை கையில் எடுத்து பார்த்தாள்..

அது ஸ்லீவ்லஸ் டிரான்ஸ்ப்ளன்ட் கவுண்… அதுவும் ரொம்பவே குட்டியாக இருந்தது.

அதை பார்த்ததும் முகம் சுழித்தவள் கோபம்மாய் தூக்கி வீச அது அப்பொழுது உள்ளே வந்த எழில் மீது சென்று விழுந்தது..

தன் முகத்தில் வந்து விழுந்த துணியை எடுத்தவன் அதை விரித்து பார்த்துவிட்டு எழில் சிரிக்க தொடங்கிவிட்டான்.

ஏற்கனவே கோபத்தில் இருந்தவள் அவன் சிரிக்கவும் பில்லோவை தூக்கி அவன் மேல் வீசினாள்..

அது அவன் மேல் பட்டு கீழே விழ அவனோ சிரித்தபடி “என்னடி டிரஸ் இது… ஐந்து வயசு ஆறு வயசுல போட வேண்டிய டிரஸ் எல்லாம் இப்போ போடறியா…”என்றான்.

“அது என்னோட டிரஸ் இல்ல..”

“என்ன சொல்ற…”

‘ம்ம் உனக்கு கிப்ட்டா வந்த டிரஸ்… உன் பிரண்ட் எவனோ அனுப்பி வச்சிருக்கான்… “என்றவள் கிப்ட் பாக்சை தூக்கி அவன் மீது வீசினாள்.

அது தன்மேல் விழாதபடி நகர்ந்து கொண்டவன் “என்னடி சொல்ற…”என்றான்.

அவளோ முறைத்து பார்த்துவிட்டு அங்கிருந்து செல்ல எழில் அந்த டிரஸை பார்த்தவன் வேகமாய் தூக்கி வீசிவிட்டு “எவன் பார்த்து வேலை இது…”என்று கிப்ட் பாக்ஸ் எடுத்து பார்த்தான்..

நிலாமகள் வானில் உலா வந்து கொண்டிருந்த இரவு நேரம்…

வள்ளி எழில் இருவரும் சாப்பிட்டு கொண்டிருக்க சத்யா அவர்களுக்கு பரிமாறி கொண்டிருந்தாள்..

“நாளைக்கு கிளம்பியே ஆகணுமா?…”என வள்ளி கேட்க 

எழில் சாப்பிட்டுகொண்டே “என்னம்மா இப்படி கேட்கிறீங்க… இதுக்கு மேல லீவு போட முடியாது கண்டிப்பா நான் போகணும்…”என சொன்னவன் “மார்னிங் கிளம்பறேன்..”என்றான்..

வள்ளி “என்னடா கிளம்பறேன்னு சொல்ற சத்யாவையும் கூட்டிட்டு போறதான…”என்றவர் சத்யாவை பார்க்க அவளோ எழிலை முறைத்து பார்த்தவள் அவரிடம் “நானும்தான் அத்தை… டிரஸ் எல்லாம்கூட பேக் பண்ணிட்டேன்..”என்றாள்..

“ம்ம் இன்னும் கொஞ்சநாள் என்கூட இருப்பீங்கன்னு ஆசைப்பட்டேன்… சரி உங்களுக்கும் வேலை எல்லாம் இருக்குல்ல…”என்றவர் அதன்பின் எழிலிடம் சத்யாவை நன்றாக பார்த்துகொள்ள வேண்டும் என்று அட்வைஸ் செய்தார்.

அவருடைய அட்வைஸில் எழில் சீக்கிரம் சாப்பிட்டு முடித்து விட்டு எழுந்தவன் “அம்மா தாயே உங்க மருமகளை நான் நல்லா பார்த்துக்கறேன் போதுமா…”என்றவன் அங்கிருந்து செல்ல வள்ளி சிரித்தவர் “சத்யா உட்காரும்மா…”என்றார் 

“இல்ல அத்தை…”

“அட உட்காரு…”

சத்யா சேரில் உட்கார வள்ளி அவளை சாப்பிட சொல்லி அவரிடம் எழில் பற்றி பேசினார்.

“அவன் நல்லபையன்தான் ஆனா கொஞ்சம் கோபக்காரன்… சட்டு சட்டுன்னு கோபம் வந்திடும் அதுக்கு அப்பறம் அதை நினைச்சு வருத்தப்படுவான்…”என்றவர் நிறுத்தி “அவன் வாழ்க்கையில நடந்தது எல்லாம் உனக்கு தெரியும்லம்மா… அந்த பொண்ணால என் பையனை கிட்டதட்ட முழுசா இழக்கற அளவுக்கு போய் காப்பாத்தி இருக்கேன்… அவன் வாழ்க்கை நல்லா இருக்கனும் அவன் சந்தோசமா இருக்கனும்…”என்றவர் சொல்லிக்கொண்டே டேபிள் மீது இருந்த அவள் கரத்தின் மீது தன்னுடைய கரத்தை வைத்தவர் 

“என் பையனை நல்லா பார்த்துப்பல்ல சத்யா?…”என்று கேட்க 

சத்யா அவர் எதிர்பார்ப்போடு தன் மீது நம்பிக்கை வைத்து கேட்கவும் தலையாட்டினாள்..

அதில் வள்ளி முகம் மலர்ந்தவர் “எனக்கு இது போதும்மா…எனக்கு உன்மேல நம்பிக்கை இருக்கு என் பையன்கூட நீ இருக்கும் போது அவன் கண்டிப்பா சந்தோசமா இருப்பான்..”என சொல்ல 

அதற்கு சத்யா மென்னகை சிந்தியவள் உள்ளுக்குள் “இவங்க வேற என்மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காங்க ஆனா நாங்க எப்பவும் புருஷன் பொண்டாட்டியா சேர்ந்து இருக்க முடியாது… கொஞ்சநாள்தான் அதுக்கு அப்பறம் கண்டிப்பா நான் அவனை விட்டு போய்டுவேன்… என்னை மன்னிச்சுடுங்க….”என சொல்லி மன்னிப்பு கேட்டுக்கொண்டாள்..

அவள் சாப்பிட்டு முடித்து கொஞ்சநேரம் வள்ளியுடன் பேசியவள் பின் தூங்கலாம் என்று அறைக்கு செல்ல எழில் தூங்காமல் போன் பார்த்தபடி பெட்டில் படுத்து இருந்தான்..

கதவை லாக் செய்தவள் திரும்பி பார்க்க கிப்ட்டாக வந்த டிரஸ் சோபாவில் கிடந்தது..

அதை பார்த்த சத்யா கோபத்தில் முகம் சிவந்தவள் “இதை எதுக்கு எடுத்து வச்சிருக்கான்…”என சொல்லிக்கொண்டவள் சோபா அருகில் சென்று அதை எடுத்தவள் திரும்ப இப்பொழுது அவளுக்கு வெகு அருகில் நின்றிருந்தான் எழில்.

அவனை இவ்வளவு நெருக்கத்தில் பார்த்து விழிவிரித்த சத்யா “ஹேய் என்ன…”என்று சொல்லி அவன் நெஞ்சில் கைவைத்தவள் பின்னாடி தள்ள அவனோ அவள் கைபிடித்து கொண்டான்.

சத்யா “விடு..”என்றவள் கையை அவனிடமிருந்து விடுவித்துகொள்ள பார்க்க அவளால் முடியவில்லை..

எழில் அவள் கரத்தில் இருந்த டிரஸை பார்த்தவன் ஒரு மாதிரி குரலில் “இந்த டிரஸை இப்போ போட்டுக்க போறியா என்ன?…”என கேட்க சத்யா அதிர்ந்தாள்..

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.