மீண்டும் ஒரு காதல் -7

Sweety Novel's | 17 Apr 2026 | Share

பாட்டி சிரித்துகொண்டே “நீ ஏன்ம்மா கவலைபடற… எவ்வளவு படி இருந்தாலும் உன்னை தூக்கிட்டு போகப்போறது என்னவோ என்னோட பேரன்தான…”என சொல்ல எழில் அதிர்ந்தான்.

“என்ன இந்த குண்டு பூசணிக்காவை நான் தூக்கிட்டு போகணுமா…”என்றவன் அடுத்தநொடியே “ஆ…”என்று கத்தியிருந்தான்..

சத்யாதான் அவன் காலை மிதித்து இருக்க பாவம் பயபுள்ள அதுக்குதான் கத்திவிட்டான்..

“என்னாச்சு கண்ணா?…”என பார்வதி கேட்க 

“அது…”

சத்யா “எறும்பு எதாவது கடிச்சு இருக்கும் பாட்டி…”என்றாள்..

எழில் “அடிப்பாவி நீ காலை வச்சு மிதிச்சுட்டு எறும்பு கடிச்சு இருக்கும்ன்னா பொய் சொல்ற…”மைண்ட் வாய்ஸில் சொல்லிக்கொண்டவன் அவளை முறைத்து பார்த்துவிட்டு தன்னுடைய பாட்டியிடம் “பாட்டி என்னால எல்லாம் இவளை தூக்கிட்டு போக முடியாது… இவளை எதுக்கு நான் தூக்கிட்டு போகணும்…”என்றான்..

“எதுக்கு தூக்கிட்டு போகணுமா… அவ உன் பொண்டாட்டிடா…”

“அதுக்கு எல்லா பக்கமும் கங்காருகுட்டி மாதிரி தூக்கிட்டு சுத்திட்டு இருக்க முடியுமா…”

அவன் சொன்னதை கேட்டு சத்யா “முதல்ல பபூசணிக்கா இப்போ கங்காருகுட்டியா.. உனக்கு இருக்குடா…”என சொல்லிக்கொண்டவள் “பாட்டி நீங்க சொல்றது பார்த்தா அதுக்கு பின்னாடி ஏதோ காரணம் இருக்குன்னு தோணுது…”என்றாள்..

“ஏய் நீ சும்மா இரு…”எழில் அதட்ட 

“இல்லங்க பெரியவங்க சொன்னா கண்டிப்பா அதுக்கு பின்னாடி எதாவது காரணம் இருக்கும்…”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல.. உன்னை நான் தூக்கிட்டு போவேன் நீ நல்லா ஜாலியா வரலாம்ன்னு பாக்கறியா…”என்றான் எழில்..

பார்வதி “சத்யாவை எதுவும் சொல்லாத கண்ணா.. இது ஒரு சடங்கு புதுசா கல்யாணம் ஆகி வரும் 

போது புருஷன் பொண்டாட்டியை மலைமேல இருக்க குலதெய்வக் கோவிலுக்கு தூக்கிட்டுதான் போகணும்…”என்றார்.

“இப்படி ஒரு சடங்கை நான் எந்த கோவில்லயும் கேள்விபட்டது இல்லையே…”

“நம்ம கோவில்ல இருக்கு கண்ணா…”

எழில் அப்பொழுதும் நம்பாமல் “தாத்தா உங்களை தூக்குனாரா?…”என சந்தேகம்மாய் கேட்க 

“அதெல்லாம்.. என் புருஷன் என் கால் தரையில படமா மேல தூக்கிட்டு போனாரு…உன் அப்பாவும் கல்யாணம் முடிஞ்சதும் வரும்போது உன் அம்மாவை தூக்கிட்டுதான் போனான்…”

பார்வதி சொல்லவும் எழில் தாடியை தேய்த்து யோசித்தவன் “அப்போ இவளை நான் தூக்கிட்டு போகணுமா?…”என கேட்க 

“அதைதான நான் சொல்லிட்டு இருக்கேன்… நீ என்ன உன் பொண்டாட்டியை தூக்கவே இம்புட்டு யோசிச்சுட்டு இருக்க… தூக்கு…”

எழில் அப்பொழுதும் “கண்டிப்பா தூக்கியே ஆகணுமா…”என்றவன் பார்வதி முறைக்கவும் “சரி சரி முறைக்காதீங்க தூக்கறேன்…”என்றவன் சத்யாவை பார்த்தான் 

விழியசைவில் “நான் தூக்கறது உனக்கு ஓகேவாடி?…”என கேட்க சத்யாவும் அதை புரிந்துகொண்டு தலையாட்டினாள்.

பார்வதி “ம்ம் தூக்கிட்டு மேல போ அங்க உன் அம்மா இருப்பா நீங்க பூஜையை முடிச்சுட்டு வாங்க…”என்றார் 

“அப்போ நீங்க?…”

“நான் இங்க கீழே இருக்க கோவில்ல சாமி கும்பிட்டு நிழல்ல உட்கார்ந்து இருக்கேன்… என்னால எல்லாம் அவ்வளவுதூரம் படியேற முடியாது…”என்றவர் எழில் “நாங்களும் இங்கையே சாமி கும்பிட்டுக்கறோமே…”என்றவன் கைகளில் அடித்தார்..

“பேசுனது போதும் தூக்கு….”

எழில் பெருமூச்சு இழுத்துவிட்டவன் சத்யாவை மெல்ல தன் கைகளில் தூக்கினான்..

எங்கு கீழே போட்டுவிடுவானோ என்று சத்யா விவரம்மாய் அவன் கழுத்தில் தன்னுடைய கரங்களை மாலையாக கோர்த்துகொண்டாள்..

எழில் ஒவ்வொரு படியாக ஏற பாட்டி அவர்களை பார்த்து மனம் நிறைந்தவர் கீழே இருந்த கோவிலில் சாமி கும்பிட சென்றார்..

எழில் அவளை பார்க்காமல் மெதுவாக ஒவ்வொரு படியாக ஏற சத்யாவுக்கு சந்தோசமாக இருந்தது.

“நேத்து என்னை கீழே படுக்க விட்டுட்டு நீ பெட்ல படுத்தல்ல அனுபவி…”என தனக்குள் சொல்லிக்கொண்டவள் 

“என்ன கஷ்டமா இருக்கா?…”என கேட்க 

எழில் முகத்தை அஷ்டகோணலாக வைத்துகொண்டவன் “இல்ல என்பது கிலோ வெயிட் இருக்க உன்னை தூக்கிட்டு போறது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு…”என்றான்…

அதில் சத்யா முறைத்தவள் “ஹலோ நான் ஒன்னும் என்பது கிலோ எல்லாம் இல்ல…”என சொல்ல 

“தூக்கற எனக்கு அப்படித்தான் இருக்கு…”

“நான் வெறும் பிப்டி கேஜிதான்…உன்னால் தூக்க முடியாதா என்ன அவ்வளவு வீக்கானவனா நீ… ச்சே வயசானவனா பார்த்தா என் அம்மா அப்பா கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்களே…”அவள் கிண்டல் செய்ய 

“ஹேய் பேசாம சைலண்டா வா இல்லன்னா இங்கிருந்து உருட்டி விட்ருவேண் அப்பறம் உன் நிலைமை என்னாகும்ன்னு யோசிச்சுக்கோ…”என்று சொல்ல சத்யா நேற்று பெட்டில் இருந்து கீழே உருட்டி விட்டதை நினைத்து பார்த்தவள் அவன் செய்தாலும் செய்வான் என்று அப்படியே அமைதியாகிவிட்டாள்.

எழில் ஒரு இடத்தில்கூட அவளை இறக்கி விட்டு இளைப்பாராமல் வேகமாய் படியேறினாலும் கீழே போட்டுவிடக்கூடாது என்று கவனமாகவே இருந்தான்.

அது சத்யாவிற்கும் புரிய ஆரமித்தில் அவனை கிண்டல் செய்தவளுக்கு இப்பொழுது அவனுடைய கஷ்டம் புரியவும் உள்ளுக்குள் அவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட தன்னையறியாமல் அவனையே பார்த்தாள்..

எழில் கோவில் வந்ததும் சத்யாவை இறக்கிவிட நேராக நின்று கொண்டவள் அவன் கரத்தை உதறுவதை பார்த்து “கை வலிக்குதா?…”என கேட்டாள்.

அவனோ பதில் சொல்லாமல் முறைத்து பார்த்தவன் அவன்பாட்டுக்கு கோவிலுக்குள் சென்றான்..

“இப்போ என்ன கேட்டுட்டன்னு முறைக்கிறான்… இவனுக்கு போய் நான் இரக்கபட்டு கேட்டேன் பாரு… இன்னும் ஒரு நூறு படி சேர்த்து இருந்து இருக்கலாம்…”என முனுமுனுத்துகொண்டு அவளும் அவன் பின்னாடியே சென்றாள்…

வள்ளி சதீஸ் இருவரும் அமர்ந்து இருந்தவர்கள் அவர்களை பார்த்ததும் எழுந்தனர்..

“வந்துட்டீங்களா?…எழில் சத்யாவை தூக்கிட்டுதான வந்த?…”என்று வள்ளி கேட்க 

“ம்ம் இந்த கிரைண்டர தூக்கிட்டுதான் வந்தேன்….”அவன் முனுமுனுப்பாக சொல்ல அது சத்யாவுக்கும் சதீஸ்க்கும் கேட்டுவிட்டது.

சத்யா அவனை முறைத்து பார்க்க வள்ளி ‘சரி வாங்க சாமி கும்பிடலாம்… சத்யா வாம்மா…”என்று கூப்பிடவும் அவருடன் சென்றாள்.

அவள் நகர்ந்ததும் சதீஸ் “என்னடா நீ சிஸ்ட்டர போய் கிரைன்ட்டர் மிக்சின்னு கிண்டல் பண்ணிட்டு இருக்க….”என்றான்..

“ம்ம் தூக்குனவனுக்குதான அந்த கஷ்டம் தெரியும்…”

“நீ சிஸ்டர ரொம்ப ஓட்டறடா… சரி வா…”என்ற சதீஸ் அவனை இழுத்துகொண்டு சாமி கும்பிட சென்றான்..

வள்ளி பூசாரியிடம் “என் பையன் மருமக சந்தோசமா சேர்ந்து வாழனும்… அவங்க வாழ்க்கையில எந்த பிரச்சனையும் வரக்கூடாது…நல்லா பூஜை பண்ணுங்க…”என சொல்ல

“பார்வதி அம்மா முன்னாடியே சொல்லிட்டாங்க… அதெல்லாம் நல்லா பண்ணிடறேன்ம்மா…”என்றவர் பூஜை செய்ய எல்லாரும் சாமி கும்பிட்டனர்.

வள்ளி சத்யாவிடம் “இதுதான் நம்ம குலதெய்வ அம்மன் நல்லா வேண்டிக்கோ சத்யா…”என சொல்ல அவளும் தலையசைத்தவள் விழிமூடி சாமி கும்பிட தொடங்கினாள்..

பூஜை நல்லபடியாக முடிய வள்ளி சதீஸ் பார்த்து “உனக்கும் சீக்கிரம் கல்யாணம்ன்னு வேண்டிக்கோடா…”என சொல்ல 

எழில் “ஏன் என் வாழ்க்கை ஸ்பாயில் பண்ணுனது பத்துலயா…”என்றவன் பூசாரி கொடுத்த திருநீறை சதீஸ் கையில் கொட்டிவிட்டு “சிங்கிளா ஜாலியா இருடா இவங்க சொல்ற மாதிரி கல்யாணம் எல்லாம் பண்ணிக்காத…”என்றவன் அவ்வளவுதான் என்பது போல் அங்கிருந்து செல்ல சதீஸ் நெஞ்சில் கைவைத்து கொண்டான்..

வள்ளி “நீ அவன் சொல்றதை எல்லாம் கேட்காத சதீஸ்… அம்மா உனக்கு நல்ல பொண்ணா பாக்கறேன்…”என்றவர் “இந்த பையன் எப்போதான் திருந்த போறானோ…”என சொல்லிக்கொண்டார்.

எல்லாரும் மன நிறைவோடு சாமி கும்பிட்டு விட்டு கீழே இறங்கும் பொழுது சதீஸ் “அம்மா கீழே போகும் போது சத்யாவை எழில் தூங்கிட்டு போக வேண்டாமா?…”என கேட்க 

அவ்வளவுதான் எழில் அப்படியே முதல் படிக்கட்டில் அமர்ந்துவிட்டான்.

“டேய் என்னடா உட்கார்ந்துட்ட?…”

“ம்ம் எழுந்தாதான அவளை தூக்கிட்டு போக சொல்விங்க…

வேணும்ன்னா இங்கிருந்து உருட்டி விடறேன்.. “என்றவனை சத்யா முறைத்து பார்த்தாள்..

வள்ளி “வரும்போதுதான் தூக்கிட்டு வரணும் போகும்போது எல்லாம் எதுவும் இல்ல… எழுந்திரி கண்ணா…”என சொல்ல அதன்பின் தான் எழில் எழுந்தான்..

எல்லாரும் கீழே செல்ல அங்கு அவர்களுக்காக வெயிட் செய்த பார்வதியை அழைத்துகொண்டு வீட்டிற்கு சென்றனர்..

வீட்டிற்கு சென்றதும் எழில் அறைக்கு சென்றவன் படுத்துவிட்டான்… அவ்வளவு டையார்ட்டாக இருந்தது சும்மாவா அத்தனை படிக்கட்டுகள் சத்யாவை தூக்கிக்கொண்டு ஏறினானே…

சத்யாவும் அறைக்குள் வந்தவள் அவன் சோர்வாக படுத்து இருப்பதை பார்த்து அவனை தொந்தரவு செய்யவில்லை பாவம் பார்த்து விட்டுவிட்டாள்..

அன்றைய நாளும் அவர்கள் அந்த கிராமத்தில் வீட்டில்தான் தங்கினார்கள்…

அடுத்தநாள் எல்லாரும் கோயம்புத்தூருக்கு கிளம்ப சதீஸ் பார்வதி பாட்டி காலில் விழுந்தான்.

“நல்லா இருடா கண்ணா…சீக்கிரம் கல்யாணத்தை முடிவு பண்ணி பத்திரிகை கொடுக்க வா… இந்த பாட்டியை கல்யாணத்துக்கு கூப்பிடுவல்ல?…”என கேட்க 

“என்ன பாட்டி நீங்க… எழிலை எப்படி பாக்கறீங்களோ அந்தமாதிரிதான் என்னையும் நீங்க பாக்கறீங்க உங்களை எல்லாம் கூப்பிடமா கல்யாணம் பண்ணிப்பனா… சீக்கிரம் பொண்ணை பாக்கறேன் கல்யாணத்தை பிக்ஸ் பண்ணுனதும் வர்றேன்..”என்றான்

பார்வதி சிரித்தவர் “ம்ம் பொண்ணு என் பேத்தி சத்யா மாதிரி பாரு…”என சொல்ல 

“ம்ம் அப்போ உன்னோட லைப் காலிடா….”என்ற எழில் சத்யா முழங்கையை மடக்கி குத்தவும் “அவுச்..’வலியில் கத்தினான்..

அதில் எல்லாரும் அவர்கள் பக்கம் பார்க்க சத்யா சிரித்தவள் “இவர் இப்படிதான் ஜோக் பண்ணுவாரு..”என்று சொல்லி சமாளித்தாள்.

வள்ளி “நீங்க ரெண்டு பேரும் பாட்டி கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க…”என சொல்ல 

இருவரும் பார்வதி காலில் விழுந்தனர்…

“நல்லா இருங்க…”என்று ஆசிர்வதித்த பார்வதி சத்யா கன்னம் வருடி “சீக்கிரம் எனக்கு ஒரு கொள்ளு பேரனையோ பேத்தியையோ பெத்துகொடு…”என சொல்ல 

எழில் இரும்பியவன் “நான் லக்கேஜ் எல்லாம் கார்ல எடுத்து வைக்கிறேன்…”என்றவன் போகும் பொழுது சதீஸையும் இழுத்துகொண்டு சென்றான்.

சத்யா அவரின் சந்தோசத்திற்காக சிரித்தபடி “இன்னும் பத்தே மாசத்துல பெத்து தர்றேன் பாட்டி..”என்று சொல்ல பார்வதி சந்தோசமானவர் “என் கண்ணு..”என்று சொல்லி அவளை அணைத்துகொண்டார்.

பின் எல்லாரும் அவரிடம் விடைபெற்று கோயம்புத்தூர் கிளம்பினர்..

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.