பாகம் -15
வேலன் சொன்னதை கேட்டு ஆத்திரம் அடைந்த ராஜகோபால் வேணுகோபாலை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தார்.
ஹாலில் சோஃபாவில் அமர்ந்தார் ராஜகோபால்.
“ஹர்ஷிதா” என்று சத்தமாகவே கூப்பிட்டார்.
அவர் கூப்பிட்ட சத்தத்தில் ஹர்ஷிதாவுடன் லக்ஷ்மி மற்றும் விஜயாவும் வந்து நின்றனர்.
தன்னிடம் ஆத்திரத்தமாக இருந்த தன் பெரியப்பாவை முதல் முறையாக பார்த்தாள் ஹர்ஷிதா.
“என்னாச்சு பெரியப்பா?” என்றாள்
ராஜகோபால் வேணுகோபாலை பார்த்தார்.
“ஹர்ஷி, நீ அவினாஷை லவ் பண்றீயா?”
“அப்பா, அது வந்து”
“சொல்லு”
“உங்களுக்கு யாரு சொன்னது?”
“யாரு சொன்னா என்ன? அது உண்மையா இல்லையா?”
“அப்பா, நானே உங்க கிட்டேயும் பெரியப்பா கிட்டேயும் சொல்லலாம் என்று இருந்தேன். எனக்கு அவினாஷ் மாமாவை பிடிச்சிருக்கு”
“ஹர்ஷிதா, எங்க கிட்டேயே தைரியமா சொல்றீயா? நீ லவ் பண்றேன்னு”
“அப்பா, எனக்கு நிச்சயம் முடிவு பண்ணீங்க. நான் சம்மதிச்சேன் இல்ல? நானாவா அர்ஜூன் மாமாவை கட்டிக்கிறேன்னு கேட்டேன். நீங்க எல்லாரும் சேர்ந்து தான முடிவு பண்ணீங்க? இப்போ என்னோட விருப்பத்துக்கு நீங்க எல்லாரும் சம்மதம் சொல்லுங்களேன்” என்றாள்.
“அன்னைக்கு உங்க மாமா மாமிக்கு சப்போர்ட் பண்ணி பேசும் போதே நான் நினைச்சேன்”
“அப்பா, பிளீஸ். அவினாஷ் மாமாவை நான் லவ் பண்றாதால நான் அன்னைக்கு அவங்களுக்கு சப்போர்ட் பண்ணல. அந்த நிலைமைல பிரச்சினையை பெரிசா ஆக்க கூடாதுன்னு தான் நான் பேசினேன்”
“என்ன ஓவரா பேசிக்கிட்டே போற?”
“அப்பா, நான் லவ் பண்றதையே விட்டுங்க. எனக்கு நீங்க பார்க்குற மாப்பிள்ளையை எனக்கு பிடிக்கலைன்னா? எனக்கு அவன் கூட கல்யாணம் பண்ணி வைப்பீங்களா? இல்லல?”
“வேணு, நீ இரு, இங்கே பாரு ஹர்ஷி. காதலுக்கு எதிரிக்கு இங்க யாரும் இல்லை. நாங்க ரெண்டு பேருமே லவ் மேரேஜ் தான். அது உனக்கும் நல்லாவே தெரியும். பெரிய பையனுக்கு முடிவு பண்ணிட்டு அதுக்கு பிறகு அவன் தம்பிக்கு கல்யாணம் பண்றது சொல்றதுக்கு வேணும்ன்னா நல்லா இருக்கும். நடைமுறைக்கு ஒத்து வராது. என்னைகா இருந்தாலும் பிரச்சினை வரும். ஒரே வீட்டில் இருக்கும் போது ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்காம இருக்க முடியாது. அர்ஜூன் கிட்ட நீ சாதாரணமா பேசினா கூட அது அவனோட ஒயிஃப்க்கு தப்பா தெரியும். ஏன் அவினாஷூக்கு கூட தப்பா தோணலாம்”
“பெரியப்பா, பிளீஸ் ஒருத்தரை பத்தி தெரியாம இப்படி எல்லாம் பேசாதீங்க”
“நாங்க பொண்ணை பெத்தவங்க. பொண்ணு புகுந்த வீட்ல நல்லா இருக்கனும்னு நினைக்கிறோம்”
“பெரியப்பா, நான் அங்கு நல்லா இருப்பேன். மாமா மாமி என்னை நல்லா பாத்துக்குவாங்க”
“ஹர்ஷி, போதும் நிறுத்து. சொந்தக்காரங்க முன்னாடி ஒருமுறை அசிங்க பட்டது பத்தாதா? இன்னொரு முறை அசிங்கபடனுமா?”
“பெரியப்பா, சொந்தக்காரங்க தான் உங்களுக்கு முக்கியமா? என்னோட சந்தோஷம் இல்லையா”
“போதும் நிறுத்து ஹர்ஷிதா” என்றார் வேணுகோபால்.
“அப்பா, பிளீஸ் புரிஞ்சிக்கோங்க”
“அவினாஷை மறந்திடு”
“அப்பா”
“நீ நாளைல இருந்து காலேஜ் போக வேண்டாம். அடுத்த வாரம் உன்னை பொண்ணு பார்க்க வருவாங்க” என்றார் ராஜகோபால்.
“பெரியப்பா, பிளீஸ். நான் சொல்றதை கேளுங்க”
அப்போது ஹர்ஷிதாவின் ஃபோனுக்கு கேத்தரின் கால் செய்தாள்.
அவளுடைய ஃபோனை வாங்கி கொண்டு உள்ளே சென்றனர் ராஜகோபால் மற்றும் வேணுகோபால்.
சோஃபாவில் அமர்ந்து அழுதாள் ஹர்ஷிதா.
விஜயாவும் லக்ஷ்மியும் அவள் பக்கத்தில் அமர்ந்து அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர்.
“ஹர்ஷி, நீ கவலைப்படாதே. நான் உன்னோட பெரியப்பா கிட்ட பேசறேன்” என்றாள் லக்ஷ்மி.
கோவமாக ரூமிற்கு சென்றாள் லக்ஷ்மி.
“வேணு தம்பி, நான் உங்க அண்ணன் கிட்ட தனியா பேசணும்” என்றாள் லக்ஷ்மி.
“எதுவாக இருந்தாலும் பரவாயில்லை பேசு. வேணு நீ இங்கேயே இரு”
“ஓ அப்படியா?” என்று சொல்லி ரூம் கதவை சாத்திவிட்டு வந்தவள்,
“வேணு தம்பி, தயவு செஞ்சு தப்பா நினைக்காதீங்க. ஏங்க கொஞ்சமாவது உங்களுக்கு அறிவு இருக்கா? நம்ம பொண்ணு ஒருத்தனை லவ் பண்றேன்னு சொல்றான்னா? அவன் நல்லவனா கெட்டவனா பார்க்குறதை விட்டுட்டு. சொந்தக்காரங்க தப்பா பேசுவாங்கன்னு நினைக்கிறீங்க”
“லக்ஷ்மி”
“என்னை மிரட்டும் வேலை எல்லாம் வேணாம். நம்ம பொண்ணு வாழ்க்கையை விட உங்களுக்கு கவுரவம் அப்படி என்ன உசத்தி?”
“அண்ணி, பிளீஸ்”
“தம்பி அதுக்கு தான் நான் தனியா பேசணும் ன்னு நினைச்சேன்”
“அண்ணி அதில்ல, அண்ணா வேண்டாம்ன்னு சொன்னதுக்கு வேற காரணம் இருக்கு”
“என்ன சொல்றீங்க தம்பி”
“ஆமாம் அண்ணி” என்று வேணுகோபால் சொல்ல சொல்ல லக்ஷ்மியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.
****************
ஹர்ஷிதாவை சமாதானம் செய்ய முடியாமல் விஜயாவும் அழுதாள்.
இது எல்லாத்துக்கும் நான் தான் காரணம்.
“என்னம்மா சொல்றீங்க?”
“ஆமாம் ஹர்ஷி, நான் தான் அர்ஜூனை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப் பட்டேன்”
“அம்மா, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”
“இல்ல, அவினாஷை வேண்டாம் ன்னு நினைக்கிறதுக்கு காரணம் அர்ஜூனை முதலில் பேசி முடிவு பண்ணினதுனால தானே?”
“அம்மா, எனக்கு என்னவோ பெரியப்பா வேற ஏதோ காரணங்களுக்காக அவினாஷை வேண்டாம் ன்னு சொல்றாரோ ன்னு தோணுது”
“என்ன காரணமோ தெரியல?”
“அம்மா, எனக்கு ஃபோன் தரீங்களா?”
“அச்சோ உங்க அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் தெரிஞ்சா கஷ்டம் டி. அப்புறம் என் கிட்டேயிருந்தும் ஃபோனை பிடுங்கிடுவாங்க”
“அம்மா, எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்றீங்களா?”
“என்னம்மா?”
“அப்பா கிட்ட கேட்டு வர ஃபிரைடே தான் லாஸ்ட் எக்ஸாம். அதை அட்டெண்ட் பண்ண வையுங்க”
“நான் சொன்னா கேட்பாறா ன்னு தெரியலையே?”
“கேட்டு பாருங்க, எப்படியும் டூருக்கு அனுப்ப மாட்டாங்க. அது எனக்கே தெரிஞ்சு போச்சு”
“ஹூம் சரி, எக்ஸாமுக்கு கேட்டு பார்க்கிறேன்”
வேணுகோபால் அவருடைய ரூமிற்கு சென்றார்.
“அம்மா போங்க, போய் கேளுங்க” என்றாள் ஹர்ஷிதா.
பின்னால் சென்ற விஜயா வேணுகோபாலிடம்,
“என்னங்க”
“ஹூம்”
“வர வெள்ளிக்கிழமை தான் நம்ம ஹர்ஷிக்கு லாஸ்ட் எக்ஸாம். அதுக்கு மட்டும் அனுப்பி வைக்கலாமா?”
“அனுப்பினா? பரிட்சை நல்லா எழுதி காலேஜ் ஃபர்ஸ்ட் வாங்கிடுவாளா?. ஏற்கனவே எக்கச்சக்க அரியர்ஸ் வச்சிருக்கா. அது கூட இதுவும் இருக்கட்டும்”
“இல்லங்க, நான் என்ன சொல்றேன் ன்னா?”
“நீ எதுவும் சொல்ல வேண்டாம்”
“என்னங்க”
“என்ன டி”
“உங்களுக்கும் அவினாஷை பிடிக்கலையா?”
பதில் சொல்லாமல் டவளை எடுத்து கொண்டு பாத்ரூமுக்கு சென்று விட்டார்.
****************
லேண்ட் லைன் ஃபோன் அடித்தது.
அதை எடுக்க சென்றாள் ஹர்ஷிதா.
அவள் அதை தொடுவதற்கு முன்பு ராஜகோபால் எடுத்தார்.
“ஹலோ அங்கிள் நான் கேத்தரின் பேசறேன். ஈவினிங்ல இருந்து ஹர்ஷி ஃபோனுக்கு கால் பண்ணேன் அவ எடுக்கல. அதான் லேண்ட் லைன்ல வந்தேன்”
“ஒரு நிமிஷம் மா, இதோ தரேன்” என்று ஹர்ஷிதாவிடம் ஃபோனை கொடுத்தார் ராஜகோபால்.
“ஹலோ” என்றாள் ஹர்ஷிதா.
“என்னடி ஆச்சு உன்னோட ஃபோனுக்கு”
“தெரியலடி, என் ஃபோன்ல ஏதோ பிராப்ளம் போல. எனக்கு ரிங் வரலை என்னோட ஸ்கூல் ஃபிரெண்ட்ஸ் கூட டிரை பண்ணிட்டு லேண்ட் லைன்ல வந்தாங்க” என்றாள் ஹர்ஷிதா.
இதை கேட்ட ராஜகோபாலுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது.
‘ஹர்ஷிதா தங்களை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறாளே? இவள் ஆசைப்படும் வாழ்க்கையை அமைத்துக் தர வழியில்லாமல் போனதே?’ என்ற வருத்தத்துடன் தன் ரூமிற்கு சென்றார்.
“ஹர்ஷி, உன்னோட அவினாஷ் மாமா லைன்ல இருக்காரு. பாத்து பேசு. நான் மியூட் பண்ணிக்கிறேன்” என்றாள் கேத்தரின்.
“கேத்தி, உனக்கு எப்படி தெரியும்?” என்று மெதுவாக கேட்டாள்.
“ஹர்ஷி, நீ பேசுற விதத்திலியே உன்னோட நிலைமை தெரிஞ்சுப்பேன் டி”
“தேங்க்ஸ் டி”
“ஓகே ஓகே யூ போத் கேரி ஆன். பை”
“ஹலோ”
“ஹர்ஷி”
“செல்லம் ன்னே சொல்லுங்க மாமா” என்று மெதுவாக முணுமுணுத்தாள்.
“ஓகே டி செல்லம்”
“அவன் யாருன்னு தெரிஞ்சுதா? உங்க ஃபோன் கிடைச்சுதா?”
“ஹூம்”
“யாரு அவன்?”
“அவன் ஒரு கேவலமானவன். அதை விடு. வீட்ல என்ன பிரச்சினை?”
“சும்மாவா விட்டுட்டீங்க அவனை?”
“அதெப்படி சும்மா விடுவேன். அவன் மூஞ்சியை பேத்துட்டேன்”
“அப்படி சொல்லுங்க மாமா. என் செல்ல மாமா. இன்னைக்கு நைட்டு நான் நிம்மதியா தூங்குவேன்” என்றாள்.
“சரி சரி, வீட்ல என்ன பிரச்சினை சொல்லு”
“நம்ம லவ் மேட்டர் தெரிஞ்சிடிச்சு. ஃபோனை வாங்கி வச்சிட்டாங்க”
“என்னடி செல்லம் சொல்ற. யாரு சொன்னது அவங்க கிட்ட?.ஏதோ 70ஸ் , 80ஸ் கிட்ஸூக்கு நடந்தது மாதிரி சொல்ற? அதுவும் இல்லாம உங்க அப்பா, பெரியப்பா ரெண்டு பேருமே லவ் மேரேஜ். அப்படி இருக்க அவங்க எப்படி லவ் மேரேஜை எதிர்க்கிறாங்க?”
“அதான் எனக்கும் தெரியல மாமா. எனக்கு ஒரு டவுட். ஒருவேளை வேலன் மாமா சொல்லி இருப்பாரோ?”
“உன்னோட வேலன் மாமாவை பத்தி எனக்கு தெரியாது. ஒரு வேளை உங்க அப்பாவும் பெரியப்பாவும் லவ் மேரேஜால பாதிக்கப் பட்டிருப்பாங்களோ?”
“வேலன் மாமா மட்டும் தான். என்னோட வேலன் மாமா இல்ல, ஏய் மாமா, உதை வாங்க போறீங்க. என்னோட அப்பா பெரியப்பாவை கிண்டல் பண்ணீங்கன்னா அவ்வளவுதான்” என்று தெரியாம சத்தமாக சொல்லிவிட்டாள்.
அந்த வழியாக வந்த வேணுகோபால் சத்தம் இல்லாமல் ஃபோனை அவளிடமிருந்து பிடிங்கி அவர் காதில் வைத்தார்.
“அப்” என்று அவள் சொன்னது அவன் காதில் விழ, வேகமாக கேத்தரினுக்கு மெஸேஜ் அனுப்பினான் அவினாஷ். செல்ஃபோனை பார்த்து கொண்டிருந்த அவள் வேகமாக சென்று தன் லேண்டு லைனின் ரீசிவரை எடுத்து சகஜமாக பேச ஆரம்பித்தாள்.
“ஏய் சொல்லுடி, அம்மா குக்கரை ஆஃப் பண்ண சொன்னாங்க. பண்ணிட்டு வந்திட்டேன். அப்புறம் அக்கவுன்ட்ஸ் ஒர்க் ஷீட் முடிச்சிட்டியா? ஹலோ, ஹலோ ஹர்ஷி” என்றாள் கேத்தரின்.
ஃபோனை வேணுகோபால் வாங்கியதால் பயத்தில் முகம் மாறியது ஹர்ஷிதாவிற்கு.
ஃபோனை கொடுத்து விட்டார் வேணுகோபால் அதை வாங்கி காதில் வைத்து
“ஹலோ” என்று மெதுவாக சொன்னாள்.
“ஒர்க் ஷீட் முடிச்சிட்டியான்னு கேட்டேன் டி”
பெருமூச்சு விட்டாள் ஹர்ஷிதா.
“சரி டி, ஓகே ஓகே. பை, பை” என்றாள் ஹர்ஷிதா.
“பை, பை” என்றனர் கேத்தரின் மற்றும் அவினாஷ்.
*************
“மச்சி, அதான் சிஸ்டரோட பேசிட்ட இல்ல? இப்போ சாப்பிடு” என்றான் அஷோக்.
“ஆமாம் டா” என்றான் விக்ரம்.
“சரி சரி சாப்பிடறேன்” என்று சொல்லி விட்டு அவர்கள் அவனுக்காக கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தான்.
“அந்த திலீப்பை இதோட விடப்போறீயா மச்சி?” என்றான் விக்ரம்.
“இல்லடா, வேற எதாவது பண்ணனும்”
“என்ன பண்ணலாம்?” என்றான் அஷோக்
“ஒரு ஐடியா?”
No comments yet.