பாகம் -12

Vaishnavi Vijayaraghavan | 17 Apr 2026 | Share

பாகம் -12


காலேஜூக்கு சென்ற வேலன் அங்கே ஹர்ஷிதா இல்லை என்பதை தெரிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.


தன் ஃபோனை எடுத்து ஹர்ஷிதாவிற்கு கால் செய்தான்.


“சொல்லுங்க மாமா” என்றாள்.


“எங்க இருக்க ஹர்ஷி?”


“தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை அவரை பார்க்க ஹாஸ்பிட்டல் வந்தேன் இப்போ இங்கிருந்து கிளம்ப போறேன்”


“நான் உன்னை உடனே பார்க்கனும்”


“எதுக்கு மாமா? என்னவா இருந்தாலும் பரவாயில்லை. ஃபோன்லையே சொல்லுங்க”


“இல்ல ஹர்ஷி பிளீஸ்”


“சரி மாமா, கேத்தரினை டிராப் பண்ணிட்டு வீட்டுக்கு வந்திடறேன். நீங்க வீட்டுக்கு வாங்க”


“இல்ல ஹர்ஷி, வீட்டுக்கு வேண்டாம்”


“சரி, அப்போ எங்க வர சொல்றீங்க?”


“கேத்தரின் வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற பார்க்குக்கு வரீயா?”


ஒரு நிமிஷம் யோசித்தவள், 


“சரி மாமா. வரேன்” என்றாள்.


“யாருடி வேலனா?” என்றாள் கேத்தரின்.


“ஆமாம், ஆமாம் அந்த லூசு மாமாவே தான்” என்றாள் ஹர்ஷிதா சிரித்துக்கொண்டே.


ஃபோனை கட் செய்யவில்லை. அதை கேட்டுவிட்டான் வேலன்.


‘என்ன? நான் லூசு மாமா வா?. இந்த லூசு மாமா என்ன பண்றேன்னு பாரு’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.


“நானும் உன் கூட பார்க்குக்கு வரவா டி?”


“இல்ல இல்ல வேண்டாம். அதுக்கும் வேற எதாவது சொல்லும் அந்த லூசு மாமா”


“சரி, வீட்டுக்கு போயிட்டு எனக்கு கால் பண்ணு” என்று சொல்லி விட்டு கேத்தரின் வீட்டில் இறங்கினாள்.


“அக்கா” என்று அவள் தங்கை வந்து அவளை கட்டிப்பிடித்து கொண்டாள்.


“என்னடி ஏஞ்சலின் உங்க அக்காவை பார்த்து பல வருஷம் ஆச்சா என்ன? முந்தாநேத்து தான பார்த்த?” என்று சொல்லி சிரித்தாள் ஹர்ஷிதா.


ஏஞ்சலின் – கேத்தரின் தங்கை ( சரண்யா மோகன்)


கேத்தரின் அம்மா – மேரி

கேத்தரின் அப்பா – ஜேம்ஸ் 


“அவ அப்படி தான் ஸீன் போடுவா, நீ கண்டுக்காத” என்றாள் கேத்தரின்.


“அக்கா” என்று பொய் கோபம் கொண்டவளாக சிரித்தாள் ஏஞ்சலின்.


“பை, ஹர்ஷி அக்கா” என்றாள்.


“பை” என்று சொல்லி விட்டு பார்க்குக்கு சென்று பெஞ்ச்சில் அமர்ந்து தன் ஃபோனை எடுத்து வேலனுக்கு கால் செய்தாள்.


“மாமா, நான் பார்க் ல இருக்கேன். நீங்க எப்போ வருவீங்க”


“அதுக்குள்ள வந்துட்டியா? நான் இன்னும் அரைமணி நேரத்தில அங்கே இருப்பேன்”


“அவ்ளோ நேரம் ஆகுமா? நான் வீட்டுக்கு போறேன்”


“ஹர்ஷி ஹர்ஷி, பிளீஸ். ஒரு இருபது நிமிஷத்துல வந்திடறேன்”


“ஓகே ஓகே, நான் வெயிட் பண்றேன்”


பிறகு ஃபோனை எடுத்து அவினாஷூக்கு மெஸேஜ் செய்தாள்.


“மாமா” என்று எழுதி சில ஹார்ட் துடிக்கும் எமோஜிகளை போட்டு அனுப்பினாள்.


அப்போது தான் அர்ஜூன் நம்பர் பக்கத்தில் ஹார்ட் சிம்பல் போட்டது நியாபகம் வந்தது. 


உடனே அதை எடிட் செய்து, அர்ஜூன் மாமா என்று மாற்றினாள்.


மெஸேஜ் டெலிவரி ஆகவில்லை. கால் செய்தாள். எங்கேஜ் சவுண்ட் வந்தது.


கேத்தரினுக்கு கால் செய்தாள்.


“என்னடி அதுக்குள்ள வீட்டுக்கு போயிட்டியா?”


“இன்னும் இல்ல டி, இந்த வேலன் மாமா இன்னும் வரலை. வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்”


“இன்னும் வரலையா? சொல்றதை கேளு, நீ கிளம்பு” என்றாள் கேத்தரின்.


“இல்லடி ரொம்ப கெஞ்சினாரு. அதான் பாவமா இருக்கு. நீ பயப்படற அளவுக்கு எல்லாம் ஒர்த் இல்ல வேலன் மாமா” என்று சொல்லி சிரித்தாள் ஹர்ஷிதா.


“சரி, எனக்கு ஏன் கால் பண்ற உன் கண்ணாளனுக்கு கால் பண்ண வேண்டியது தானே?” என்றாள்.


“ஏய் சூப்பர் டி. அவினாஷ் மாமா பேரை எப்படி சேவ் பண்றதுன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன். நல்லா இருக்கு நேம். நான் அப்புறம் பேசறேன் அவினாஷ் மாமா கால் பண்றாரு” என்றாள்.


“ஓகே ஓகே பை” என்றாள் கேத்தரின்.


“ஹலோ மாமா” என்றாள் ஹர்ஷிதா.


“சொல்லுடி செல்லம்” என்றான் அவினாஷ்.


“யாரு கிட்ட பேசிக்கிட்டு இருந்த?”


“உன் மாமியார் கிட்டதான்” என்றான் அவினாஷ்.


“ஹா ஹா” என்று சிரித்தாள்.


“எங்க இருக்க?”


“வேலன் மாமா மீட் பண்ண வரேன்னு சொன்னாரு, அதான் கேத்தி வீட்டு பக்கத்துல இருக்கிற பார்க்ல வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்”


“லூசாடி நீ, இந்த நேரத்தில தனியா அதுவும் உன் மேல கடுப்பில இருக்கிறவனுக்காக வெயிட் பண்றேன்னு சொல்ற?”


“அய்யோ மாமா, நீங்க நினைக்கிற அளவுக்கு எல்லாம் ஒர்த் இல்ல வேலன் மாமா, கேத்தரின் கிட்டேயும் இதே தான் சொன்னேன்”


“செல்லம். நான் சொல்றதை கேளு. நீ கிளம்பு முதல்ல”


“ஓகே ஓகே கிளம்பறேன். பை” என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டாள்.


பார்க்கிற்கு வந்ததும் ஹர்ஷிதாவிற்கு கால் செய்தான் வேலன்.


“சாரி மாமா, இருட்டா ஆயிடுச்சு. பிராஜெக்ட் வொர்க் இருந்துச்சு. அதான் வீட்டுக்கு வந்திட்டேன். இன்னொரு நாள் மீட் பண்ணலாம் ஓகே, பை” என்று சொல்லி விட்டு அவன் பதிலுக்கு காத்திராமல் ஃபோனை வைத்தாள் ஹர்ஷிதா.


“சே” என்று சலித்து கொண்டான் வேலன்.


*******************


சிவராமன் ஹாஸ்பிடலுக்குள் நடந்து வந்து கொண்டிருந்தார்.


அர்ஜூனும் ரஞ்சனியும் கிளம்பிக் கொண்டு இருந்தனர்.


“நான் கிளம்பறேன் அத்தை” என்றாள்.


“என்னை அம்மான்னே கூப்பிடு மா” என்றாள் நிர்மலா.


“நிஜமாகவே வா?”


“ஹூம், நீ விஜயாவை அம்மான்னு கூப்பிடவான்னு கேட்கும் போது தான் நீ எவ்வளவு ஏங்கி போயிருக்கன்னு புரிஞ்சிக்கிட்டேன்” என்றாள் நிர்மலா.


“தேங்க்ஸ் அம்மா” என்று சொல்லி நிர்மலாவை கட்டிக் கொண்டாள் ரஞ்சனி.


அப்போது சிவராமன் வர அனைவரும் அமைதியாக நின்றனர்.


“அப்பா” என்றான் அர்ஜுன்.


“எதுவும் பேச வேண்டாம் பா, உன்னோட தாத்தாவை பார்த்திட்டு போக வந்திருக்க அதை பண்ணு. உன்னை தடுக்குற உரிமை எனக்கில்லை” என்று சொல்லி விட்டு உள்ளே சென்று அவருடைய தந்தையை பார்த்தார்.


“சரிம்மா, நாங்க கிளம்பறோம். அப்பாவுக்கு கோவம் சரியாகும் வரை நாங்க வெயிட் பண்றோம். பை” என்று சொல்லி ரஞ்சனியும் அழைத்து கொண்டு கிளம்பினான் அர்ஜூன்.


உள்ளே சென்று பாண்டியராஜனை பார்த்து விட்டு வெளியே வந்தார் சிவராமன்.


“என்னங்க, என்னை மன்னிச்சிடுங்க”


“எதுக்கு?”


“உங்களுக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் அர்ஜூன் கிட்டேயும் அந்த பொண்ணு ரஞ்சனி கிட்டேயும் சகஜமா பேசிக்கிட்டு இருந்தேன்”


“நிர்மலா, இத்தனை வருஷத்துல என்னை புரிஞ்சிக்கிட்டது அவ்வளவுதானா?”


“என்ன சொல்றீங்க?”


“மத்த அப்பாங்க மாதிரி நான் காதலுக்கு எதிரி இல்லை. ஏன் இருபது வருஷத்துக்கு முன்னாடியே என் தங்கச்சியோட காதலையே நான் ஏத்துக்கிட்டவன். 


அப்படி இருக்க அர்ஜூனும் சரி என் தங்கச்சி விஜயாவும் சரி லவ் பண்ணினது தப்பு இல்ல. ஆனா அதை தைரியமா வீட்டுல சொல்லாமா ஒரு முக்கியமான நேரத்தில வீட்டில இருக்குறவங்களோட மன நிலைமையை புரிஞ்சிக்காம இப்படி ஒரு தப்பை பண்ணினது தான். 


அதுவும் இல்லாம நீ யார் கிட்ட பேசணும், யார் கிட்ட பேசக்கூடாது ன்னு சொல்றதுக்கு எனக்கு உரிமை இல்லை. அது உன்னோட சுதந்திரத்தை நான் பறிக்கிற மாதிரி. அந்த தப்பை நான் செய்ய மாட்டேன். 


அன்னைக்கு நான் கோபப் பட்டத்துக்கு காரணம் அன்னைக்கு நானும் அப்பாவும் எந்த நிலைமையில இருந்தோமோ அதே நிலைமைல விஜயா வீட்டு ஆளுங்களும் இருந்தாங்க. அவங்களோட அந்த நிலைமைக்கு காரணம் என் பசங்க அப்படின்னு நினைச்சதுனால எனக்கு ஆத்திரம் வந்து கத்திவிட்டேன். 


மத்தபடி நீ அர்ஜூன் கிட்டேயும் அவனோட மனைவி கிட்டேயும் பேசறதோ பழகறதோ எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை”


“என்னங்க” என்று கண்கள் கலங்க ஆஸ்பத்திரி என்று கூட யோசிக்காமல் சிவராமனை கட்டிக் கொண்டாள் நிர்மலா.


“நிர்மலா, என்ன இது யாராவது பார்க்க போறாங்க” என்று அவள் தோளை தடவிக் கொண்டே சொன்னார்.


“உண்மையிலேயே நான் உங்களை இது வரைக்கும் சரியா புரிஞ்சுக்கலீங்க” என்றாள்.


“சரி இதையும் கேளு, உனக்கும் நம்ம வீட்டில சம உரிமை இருக்கு. எப்படி நான் நம்ம பசங்களை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னேனோ? அதே மாதிரி அவங்களை வீட்டுக்கு அழைக்கவும் உனக்கு உரிமை இருக்கு. எனக்கு கோபம் சரியான பிறகு நான் சகஜமா பேசிக்கிறேன். அதுக்காக அதுவரைக்கும் உன்னையும் உன் பசங்களையும் பிரிச்சு வைக்கனுமென்றது என்னோட நோக்கம் இல்லை”


“ரொம்ப ரொம்ப தேங்க்ஸூங்க” என்றாள்.


“சீ, லூசு மாதிரி பேசாத. நமக்குள்ளே எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்?” என்றார் சிவராமன்.


**************


“அப்பா, காலேஜ் ஃபைனல் எக்ஸாம்ஸ் முடிஞ்சதும் டூர் போட்டிருக்காங்க. நான் போயிட்டு வரவா?” என்றாள் ஹர்ஷிதா.


“எந்த ஊருக்கு?”


“நார்த் இந்தியா. கோல்டன் டிரையாங்கிள். டெல்லி, ஆக்ரா அப்புறம் ஜெய்பூர்”


“நார்த் இந்தியா வா? வேண்டாம் வேண்டாம்”


“பிளீஸ் பா”


“நான் ஓகே சொன்னாலும், பெரியப்பா ஒத்துக்க மாட்டார்”


“பெரியப்பா கிட்ட நான் பேசிக்கிறேன்.‌ நீங்க ஓகே சொல்லுங்க. கேத்தரின் கூட வரா”


“ஹூம், அண்ணா ஓகே சொல்லிட்டாருன்னா எனக்கும் ஓகே. காலேஜ் ஃபேகல்டீஸ் வராங்க இல்ல?”


“ஆமாம் அப்பா, வராங்க. காலேஜ்ல அரேஞ்ச் பண்ற டூர் தான் இது”


“சரி”


“தேங்க்ஸ் அப்பா. நான் போய் பெரியப்பா கிட்ட பர்மிஷன் வாங்கிக்கிட்டு வரேன்”


“பெரியப்பா” என்று அழைத்துக்கொண்டே அவருடைய ரூமிற்கு சென்றாள்.


“என்னம்மா”


“பெரியப்பா காலேஜூல டூர் கூட்டிக்கிட்டு போறாங்க. நான் போயிட்டு வரவா?

அப்பா ஓகே சொல்லிட்டாரு. கேத்தரின் கூட வரா” என்றாள்.


“வேணு ஓகே சொல்லிட்டான் இல்ல. அப்புறம் என்ன? எனக்கும் ஓகே தான்”


“தேங்க்ஸ் பெரியப்பா” என்று சொல்லி கட்டிப்பிடித்து அவர் கன்னத்தில் முத்தமிட்டாள் ஹர்ஷிதா.


“உன்னை மாதிரி ஐஸ் வைக்கிறவளை நான் இதுவரை பார்த்ததில்லை”


“பொய் சொல்லாதீங்க பெரியப்பா”


“நான் என்னம்மா பொய் சொல்றேன்?”


“ஆமாம், இந்த ஐஸ் வைக்கிற வேலை எல்லாம் நான் பெரியம்மா கிட்ட தான் கத்துக்கிட்டேன்” என்று சொல்லி கண் அடித்தாள்.


“ஏய், உன்னை?…” என்று செல்லமாக அடிக்க வந்தார்.


சிரித்துக் கொண்டே ஓடிப் போனாள்.


“சரி சரி எந்த ஊருக்கு டூர்?”


“டெல்லி, ஆக்ரா, ஜெய்பூர்”என்று சொல்லி விட்டு ஓடிவிட்டாள்.


‘என்னது நார்த் இந்தியா வா? எப்படி இந்த வேணு ஓகே சொன்னான்?’ என்று யோசித்தார் ராஜகோபால்.


விஜயா மற்றும் லக்ஷ்மியிடமும் டூருக்கு பர்மிஷன் வாங்கிக்கொண்டு பின் தன் ரூமிற்கு வந்து கேத்தரினுக்கு கால் செய்தாள்.


“நீ வரேன்னு சொல்லி எல்லார் கிட்டேயும் பர்மிஷன் வாங்கிட்டேன் டி” என்றாள் ஹர்ஷிதா.


“ஏய், நானும் அதே மாதிரி தான் எங்க அப்பா அம்மா கிட்ட சொன்னேன் டி” என்றாள் கேத்தரின்.


“நமக்குள்ளே எவ்ளோ வேவ் லென்த் பாரு” என்று சொல்லி சிரித்தாள் ஹர்ஷிதா.


“ஆமாம் ஆமாம்” என்றாள் கேத்தரின்.


“சரி, சாக்ரடீஸ் வரானா?”


“வரான். அவன் இல்லாமையா?”


“அப்போ நான் வரலை டூருக்கு”


“என்னடி சொல்றே?”


“ஆமாம், நீ சாக்ரடீஸ் கூட சுத்துவ. நான் என்ன தனியா சுத்தவா?”


“ஏன் தனியா சுத்துற? அவினாஷை வரச்சொல்லு”


“மாமா எப்படி வருவாரு? அவரு என்ன நம்ம காலேஜா?”


“ஏய், எல்லா டிபார்ட்மெண்ட் பசங்களும் வராங்க. ஐடி கார்டு ரெடி பண்ணினா போதும். நம்ம டிபார்ட்மெண்ட் லெக்சுரர் கேட்டா சைன்ஸ் டிபார்ட்மெண்ட்ன்னு சொல்லிடலாம். சைன்ஸ் டிபார்ட்மெண்ட் லெக்சுரர் கேட்டா நம்ம டிபார்ட்மெண்ட்ன்னு சொல்லிடலாம். எப்படி என் ஐடியா?”


“ஐடியா எல்லாம் செமையா தான் இருக்கு, அதுக்கு அவினாஷ் மாமா ஒத்துக்கணுமே?”


“அது உன் கைல தான் இருக்கு”


“ஆனாலும் கில்லாடி டி நீ. எங்க நான் உன்னோட பிரைவசியை கெடுத்திருவனோன்னு யோசிச்சு இப்படி ஒரு ஐடியா பண்ணிருக்க”


“ஹா ஹா”


“சரி நான் ஒருவேளை லவ் பண்ணலைன்னா என்னடி பண்ணிருப்ப?”


ஒரு நிமிடம் யோசித்தவள். 


“ஐடி கார்டை ரெடி பண்ணி உன் வேலன் மாமா கழுத்துல மாட்டிவிட்டு அவரை உன் கூட கோர்த்து விட்டுட்டு நான் எஸ்கேப் ஆகி இருப்பேன்” என்று சொல்லி சிரித்தாள் கேத்தரின்.


“அடியேய், நீ மட்டும் என் முன்னாடி நின்று இதை சொல்லியிருந்த உன் கழுத்தை நெறுச்சியிருப்பேன்” என்றாள் ஹர்ஷிதா.


“ஹா ஹா ஹா” என்று சொல்லி சிரித்தாள் கேத்தரின். 


“சிரிக்காத டி, உன்னை கொன்னுடுவேன்”


“சரி சரி, ஃபோனை வை. என் ஆளு கால் பண்ற நேரம் ஆகுது”


“ஏய் மவளே, நான் ஓகே சொல்லவே தான் சாக்ரடீஸ் உன்னை லவ் பண்றான். அது நியாபகத்துல இருக்கட்டும்”


“ஓகே நாத்தனார், பை. இப்போ ஃபோனை வை” என்றாள் கேத்தரின்.


சிரித்துக் கொண்டே ஃபோனை வைத்து விட்டு அவினாஷூக்கு கால் செய்தாள் ஹர்ஷிதா.


இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.