பாகம் -8

Vaishnavi Vijayaraghavan | 17 Apr 2026 | Share

பாகம் -8


கேத்தரின் வீட்டில்,


கேத்தரின் அப்பா அம்மா மற்றும் அவனுடைய தங்கை மூவரும் மதுரைக்கு ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தார்கள். மறுநாள் வருவதாக கூறியிருந்தார்கள். கேத்தரின் அவர்களிடம் நிச்சயத்தார்த்தம் முடிஞ்சதும் ஹர்ஷிதா வீட்டிலேயே தங்கி விட்டு நாளை வருவதாக கூறியிருந்தாள். 


மாடியில் உள்ள சிட் அவுட்டில் இரண்டு சேர்கள் போடப்பட்டிருந்தது. அங்கே அவினாஷ் மற்றும் ஹர்ஷிதா அமர்ந்து இருக்க கீழே உள்ள சோஃபாவில் கேத்தரின் மற்றும் அமர் உட்கார்ந்து இருந்தனர்.


முதலில் ஹர்ஷிதாவே பேச ஆரம்பித்தாள்.


“மாமா”


“ஹர்ஷி, என் மேல உனக்கு கோபம் எதுவும் இல்லையே?”


“எதுக்கு கோபம் வரப்போகுது மாமா. எனக்கு அர்ஜூன் மாமா மேலேயே கோபம் இல்லை”


“என்ன? அண்ணா மேல உனக்கு கோபம் இல்லையா?”


“கோபம் இல்லை. வருத்தம் மட்டும் தான். என் கிட்ட முதலிலேயே சொல்லிட்டு இருந்தார்ன்னா இவ்வளவு பேருக்கு கஷ்டமோ வருத்தமோ கோபமோ வந்திருக்காது. ஆனா அவரை சொல்லியும் தப்பு இல்ல. நேத்து வீட்டுக்கு வந்தாரு இதை பற்றி சொல்லத் தான். ஆனா வேற பிரச்சினைல அவரும் சொல்லல நானும் கேட்கல. என் கிட்ட கேட்டாரு ஏன் அழுகிற ஹர்ஷிதா இந்த கல்யாணத்தில உனக்கு விருப்பம் இல்லையான்னு? உங்களுக்கு விருப்பம் இருக்கா மாமான்னு கேட்காம விட்டுட்டேன்” என்று சொல்லிவிட்டு கண்கள் ஓரம் தேங்கிய நீரைத் துடைத்தாள்.


“அப்போ நீ என்னோட அண்ணாவை லவ்…”


“நினைச்சேன். என்னடா இது இந்த கேள்வி இன்னும் உங்க வாய்ல இருந்து வரலையேன்னு”


“சாரி ஹர்ஷிதா, நீ தப்பா புரிஞ்சுக்காத. ஒருவேளை நீ அண்ணனை லவ் பண்ணி இருந்தா? அது தெரியாம நான் வேற லவ் பண்றேன்னு சொல்லி உன் மனசை இன்னும் கஷ்டப்பட விட்டேனேன்னு தான் சொல்ல வந்தேன்”


“அர்ஜூன் மாமாவை நான் லவ் எல்லாம் பண்ணல. உங்களை, அர்ஜூன் மாமாவை, வேலன் மாமாவை எல்லாம் எனக்கு பிடிக்கும். அவ்வளவுதான். அவர் கிட்ட நான் என்ன பேசிருக்கேன்? வாங்க மாமா. நல்லா இருக்கீங்களா? என்ன சாப்படறீங்க? மாமா மாமி எப்படி இருக்காங்க. அவ்வளவுதான். கல்யாணம் ஆனதும் லவ் பண்ண நினைச்சேன்”


“ஹர்ஷிதா நான் பேசினது பத்தி உன்னோட”


“மாமா, என்னால இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க முடியலை. நீங்க எல்லார் முன்னாடியும் லவ் சொன்னதும் எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு கூடத் தெரியல. உண்மையாவே எனக்கு உங்களை பிடிச்சிருக்கா இல்ல இல்லையான்னு கூடத் தெரியல. எனக்கு கொஞ்சம் டைம் வேணும்”


“ஓகே ஹர்ஷிதா, எனக்கு புரியுது. தெரிஞ்சோ தெரியாமலோ உன்னை கஷ்டப்படுத்துற மாதிரி நான் பேசிருந்தேன்னா என்னை மன்னிச்சிடு”


“அச்சச்சோ இல்லை மாமா. ஒரு வகைல நீங்க லவ் பண்றேன்னு சொன்னது எனக்கு ஆறுதலா இருந்துச்சு”


“என்ன சொல்ற?”


“ஆமாம் மாமா, உங்க அண்ணனுக்கு என்னை பிடிக்கலையேன்னு ஒரு நொடி என் மேலேயே எனக்கு வருத்தமா இருந்துச்சு. நான் நல்லா இல்லையா? என்னை யாருக்கும் பிடிக்காதோன்னு தோணுச்சு. நீங்க லவ் பண்றேன்னு சொன்னதும் அந்த எண்ணம் ஓடிப் போச்சு” என்று சொல்லி விட்டு லேசாக சிரித்தாள்.


“சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்க ஹர்ஷிதா”


“அப்போ அழும் போது?”


“நீ அழும்போது உன்னை என் தோளில் சாய்த்து உன் கண்களில் இருந்து வழியும் நீரை என் விரல்களால் துடைத்துவிட்டு. உன் காதில் அழாத டி மண்டு. அழுதா நீ அழகா இல்லைன்னு பொய் சொல்லுவேன்”


“ஹா ஹா ஹா” என்று சத்தமாகவே சிரித்தாள். 


“இப்போ, ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்க”


“மாமா, போதும் போதும். என்னால முடியல” என்று சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தாள்.


அவினாஷ் அவள் அருகில் சென்று அவள் கைகளை பிடித்து,


“ஹர்ஷிதா, இப்பவும் சொல்றேன். எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கு என் மேல காதல் வரும் வரை நான் காத்திருப்பேன்”


பிறகு அவளை கட்டிப்பிடித்து 


“பை” என்று சொல்லி விட்டு கீழே இறங்கி வந்தான்.


அவன் இறங்கி சென்ற பிறகும் அவன் அவளை கட்டிப்பிடித்த ஸ்பரிச சூட்டை உணர்ந்தாள் ஹர்ஷிதா.


கீழே அமர் கேத்தரினிடம் மொக்கை ஜோக்ஸ் சொல்லி கழுத்தறுத்துக் கொண்டிருந்தான். அவள் தலையில் கையை வைத்து ‘எப்போது அவர்கள் இருவரும் கீழே வருவார்களோ?’ என்று காத்திருந்தாள்.


ஒரு வழியாக அவினாஷ் வந்ததும்,


“வாங்க உட்காருங்க. நான் போய் காஃபி கொண்டு வரேன்” என்று சொல்லி விட்டு கிட்சனுக்கு ஓடியே சென்றுவிட்டாள்.


அமர் பக்கத்தில் அமர்ந்த அவினாஷ்.


“என்னடா இப்படி தலை தெறிக்க ஓடுறா. அவ்வளவு டார்ச்சர் பண்ணிட்டியா?”


“ஏய் இல்ல மச்சான், அவளுக்கு என்னை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். நீ வர வரைக்கும் ஒழுங்கா தான் பேசிக்கிட்டு இருந்தா. நீ வந்ததால் வெட்கப் பட்டு போயிட்டா ன்னு நினைக்கிறேன்”


“ஏய், பிடிச்சதுனால தான் தலைல கை வச்சிக்கிட்டு இருந்தாளா?”


“இல்லடா அவ வெட்கத்துல தலையை குனிஞ்சு தலைல கை வச்சிக்கிட்டு இருந்தா”


“எப்பா சாமி ஆளை விடு. நீ எல்லாத்துக்கும் ஒரு பதில் வச்சிருப்ப”


“சரி அதை விடு. உன் கதையை சொல்லு, என்ன சொன்னா உன் மாரியாத்தா?”


அப்போது ஹர்ஷிதா கீழே இறங்கி வந்தாள்.


“ஹர்ஷிதா இது என் ஃபிரெண்ட் அமர்”


“ஹாய் சிஸ்டர்”


“ஹாய் அண்ணா, யாரு மாரியாத்தா?” என்றாள்.


“டேய்” என்றான் அவினாஷ்.


“அச்சச்சோ, தெரியாம சொல்லிட்டேன் சிஸ்டர்”


“என்ன விஷயம் மறைக்காம சொல்லுங்க அண்ணா?”


“மச்சான், சொல்லிடவா?”


“வேண்டாம். நானே சொல்லிக்கிறேன்”


“ஹர்ஷிதா வா” என்று கொஞ்சம் தள்ளி இருந்த ஜன்னல் ஓரமாக அவளை அழைத்து சென்றான்.


“என்ன விஷயம் மாமா. சொல்லுங்க யாரு மாரியம்மா?”


“மாரியம்மா இல்ல மாரியாத்தா”


“சரி யாரு மாரியாத்தா?”


“கோச்சிக்காத, உன்னைதான் நான் சின்ன வயசுல மாரியாத்தான்னு சொல்லுவேன்”


“என்னது?” என்று கோபமாக கேட்டாள்.


“இல்ல, உன்னை முதல் முறையாக பார்த்த போது மஞ்சள் பூசி பெரிய பொட்டு எல்லாம் வைத்து அம்மன் மாதிரி இருந்தியா அதனால தான் அப்படி சொன்னேன்”


“மாமா” என்று சற்று சத்தமாகவே கத்தினாள். 


“ஸாரி ஸாரி ஸாரி”


“யார் கிட்ட எல்லாம் என்னை இப்படி சொல்லி வச்சிருக்கீங்க?”


“என்னோட அம்மா, அண்ணா, அப்பா அப்புறம் அமர். அவ்வளவுதான்”


“அவ்வளவுதானா? இவ்ளோ பெரிய லிஸ்டா போய்கிட்டு இருக்கு” என்றாள்.


“ஸாரி டி செல்லம். அப்போ எனக்கு உன்னை பார்க்க அப்படி தோணுச்சு” 


“டி யா?”


“ஏன் டி சொல்லக் கூடாதா?”


“எனக்கு டி சொன்னா புடிக்கும். ஆனா என் ஹஸ்பண்டு மட்டும் தான் அப்படி சொல்லனும்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்”


“அப்போ கரெக்டா தான் சொல்லியிருக்கேன். நான் தான் உன் புருஷன். என்ன டி செல்லம்?”


“மாமா” என்று பொய் கோபம் கொண்டவளாக கத்த அவனும் பயந்தவன் போல நடித்து ஓடி வந்து அமர் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.


அதற்க்குள் கேத்தரின் காஃபி கொண்டு வந்தாள்.


அமர் முகமெல்லாம் சிரிப்புடன்,


“கொடுங்க கேத்தரின் நான் எல்லாருக்கும் கொடுக்கிறேன்” என்று அந்த டிரேவை வாங்கினான்.


‘அச்சோ’ என்று முகத்தை சுளித்து கொண்டாள் கேத்தரின்.


காலிங் பெல் சப்தம் கேட்டது. ஹர்ஷிதா போய் கதவை திறந்தாள். 


“ஹாய் சகி” என்றான் சாக்ரடீஸ்.


“ஹாய் டா, வா” என்றாள் ஹர்ஷிதா.


உள்ளே வந்தவுடன் அவினாஷிடமும் அமரிடமும் அறிமுகப்படுத்தினாள்.


“மாமா, இது சாக்ரடீஸ் என்னோட பெஸ்ட் பிரெண்டு. அப்புறம் கேத்தரினோட லவ்வர்” என்றதும் அனைவரும் அமர் முகத்தை பார்க்க, அவன் தலை குனிந்தவாறு சோஃபாவில் அமர்ந்தான்.


“இவரு யாரு” என்று அமரை பார்த்து கேட்டான் சாக்ரடீஸ்.


“இவன் என்னோட ஃபிரெண்டு, அமர்”


“ஹாய் அமர்” என்றான் சாக்ரடீஸ்.


“ஹலோ” என்று கைகொடுத்தான் அமர்.


அவினாஷூக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. கஷ்டப்பட்டு கன்ட்ரோல் செய்தான்.


கேத்தரின் அமரிடம் காஃபியை கொடுத்து

“எடுத்துக்கோங்க அண்ணா” என்றாள்.


அவன் அசடு வழிந்து கொண்டே,


“தேங்க்ஸ் சிஸ்டர்” என்றான்.


அனைவரும் காஃபியை குடித்தனர். 


பிறகு அவினாஷூம் அமரும் கிளம்பினார்கள். 


“இருங்க டின்னர் ஆர்டர் பண்றேன் சாப்பிட்டு விட்டு போகலாம்” என்றாள் கேத்தரின்.


“என்னவோ நீங்களே செய்ய போற மாதிரி சொல்றீங்க. ஆர்டர் தான பண்ணப் போறீங்க. நாங்க போற வழியிலேயே சாப்பிட்டுக்குவோம்” என்றான் அமர்.


“பிரதர் ஆர்டர் பண்றேன்னு சொன்னாளேன்னு நான் சந்தோஷப் படறேன். நீங்க என்னன்னா அவளை குக் பண்ண சொல்றீங்களே. நாளைக்கு நல்லபடியா காலேஜ் போக விருப்பம் இல்லையா உங்களுக்கு?” என்றான் சாக்ரடீஸ்.


“ஹேய் உன்னை” என்று சொல்லி அவனை செல்லமாக அடித்தாள் கேத்தரின்.


அவினாஷூம் ஹர்ஷிதாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். 


அமர் சாக்ரடீஸிடம்,


“பிரதர் அப்போ உங்க லைஃப் ஃபுல்லா ஹோட்டல் சாப்பாடு தானா?” என்றான் அமர்.


“அண்ணா” என்று அமரைப் பார்த்து கத்தினாள் கேத்தரின்.


“சரி சரி, சண்டை போடாதீங்க” என்றான் அவினாஷ்.


“மச்சான், நம்ம இவங்களுக்கு நல்ல சாப்பாடு செஞ்சி தரலாமா?” என்றான் அமர்.


“என்ன, மாமா உங்களுக்கு சமைக்க தெரியுமா?”


“சமைக்க தெரியுமா வா? ஃபர்ஸ்ட் இயர்ல ஹாஸ்டல் சாப்பாடு சரியில்லை ன்னு நெக்ஸ்ட் இயர் தனியா ரூம் எடுத்து அதிலிருந்து அவனே சமைக்க ஆரம்பிச்சிட்டான். ஒருமுறை எங்க வீட்டுக்கு வந்து பிரியாணி செஞ்சான் பாருங்க. எங்க அம்மா கூட அவ்வளவு சூப்பரா சமைச்சது இல்லை” என்றான் அமர்.


“அப்படியா?” என்றனர் அனைவரும் ஆச்சரியமாக.


“அப்படின்னா சரி, இப்போ செஃப் அவினாஷ் நம்ம எல்லாருக்கும் டின்னர் பண்ணி தருவாரு” என்றாள் ஹர்ஷிதா.


“ஹர்ஷிதா இல்ல இல்ல, இப்போ முடியாது. டைம் இல்ல. நெக்ஸ்ட் டைம் கண்டிப்பாக செஞ்சி தரேன். நான் கிளம்பனும். நைட்டு பத்து மணிக்கு பஸ் ஏறினாலே காலை ஆறு இல்லை ஏழு மணி ஆயிடும்” என்றான்.


“இப்போ மணி ஏழு தான் ஆகுது மாமா. பிளீஸ் செஞ்சி தாங்க. நைன் தர்டிக்கு கிளம்பினா கூட நீங்க பத்து மணிக்கு பஸ் ஏறிடலாம்”


“ரொம்ப ஹெக்டிக்கா ஆயிடும் ஹர்ஷி” என்றான் அவினாஷ்.


“மாமா பிளீஸ்” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள். 


அதற்கு மேல் மறுக்க மனம் இல்லாமல்,


“சரி, ஆனா நீங்க எல்லாரும் ஹெல்ப் பண்ணினா தான் சீக்கிரமா பண்ண முடியும். மட்டன் பிரியாணி பண்ண டைம் இருக்காது. வேணும்னா வெஜிடபிள் பிரியாணி இல்ல எக் பிரியாணி செய்யலாம்”


“ஏய், என்னடா நான்வெஜ் பண்ணுவ ன்னு பார்த்தா?”


“இப்போ கறி வாங்கி செய்யறது கஷ்டம் டா”


“ஏய் லிஷிசியஸ் ல ஆர்டர் பண்ணா வந்திடும்” என்றாள் கேத்தரின்.


“யம்மா, அது வந்த அப்புறம் சமைக்க டைம் இருக்காது” என்றான் அமர்.


“ஓ, ஓகே ஓகே”


சரி, வெஜிடபிள் பிரியாணி பண்ணிடலாம் என்று சொல்லி கிட்சனுக்கு சென்று கேத்தரின் மற்றும் ஹர்ஷிதாவும் அவினாஷ் சொன்ன எல்லா காய்கறிகளையும் கட் செய்தனர். இஞ்சி பூண்டு விழுது, புதினா கொத்தமல்லி ஆகியவற்றை அமரும் சாக்ரடீஸூம் கிளீன் செய்தனர்.


அவினாஷ் பாஸ்மதி அரிசியை கழுவி ஊற வைத்து மசாலா பொருட்களை போட்டு காய்கறிகளை போட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பக்குவமாக செய்து கொண்டு இருந்தான்.


அவன் சமைப்பதை பார்த்துக் கொண்டு இருந்தனர் ஹர்ஷிதாவும் கேத்தரினும்.

வாசனை மூக்கை துளைத்தது. 


சூடான வெஜிடபிள் பிரியாணி மற்றும் ஆனியன் ரைத்தாவை எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்து அனைவரும் சாப்பிட்டார்கள். அனைவரும் அவினாஷை புகழ்ந்தார்கள். 


ஹர்ஷிதா அவினாஷை பார்த்து கொண்டே சாப்பிட்டாள். அவன் அவளை திரும்பி பார்க்கும் போது சட்டென்று அவள் வேறு பக்கம் திரும்பிவிட்டாள்.


இதை கவனித்த அவினாஷ் சிரித்துக்கொண்டே சாப்பிட்டு முடித்து விட்டு எழுந்தான்.


அனைவரிடமும் சொல்லி விட்டு கிளம்பினார்கள் அவினாஷ், அமர் மற்றும் சாக்ரடீஸ்.


“கதவை லாக் பண்ணிக்கோங்க, பை” பத்திரம் என்றான் அவினாஷ்.


“சரி மாமா, நீங்க பஸ் ஏறிட்டு மெஸேஜ் பண்ணுங்க”


“சரி ஹர்ஷி பை” என்றான் அவினாஷ்.


அவன் மெஸேஜூக்காக காத்திருந்தாள் ஹர்ஷிதா.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.