மறுநாள்..
சத்யா கண் விழித்து எழுந்தவள் சோபாவில் கை கால்களை குறுக்கிகொண்டு படுத்திருந்தவனை திருப்திகரமாய் பார்த்தாள்.. இரவு நடந்தது எல்லாம் நினைவில் வந்துபோனது…
எழில் தூங்கியதும் சத்யா இடையில் எழுந்தவள் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தவனை பார்த்துவிட்டு “நல்லா தூங்கிட்டு இருக்கியா உன்னை எப்படி பெட்ல இருந்து துரத்தி விடறேன் பாரு….”என சொல்லிக்கொண்டவள் விழிமூடி படுத்துகொண்டாள்..
தூக்கத்தில் அவன் பக்கம் நகர்ந்து செல்வதுபோல் சென்றவள் கையை அவன் மீது தூக்கிபோட்டாள்..
எழில் தூக்கத்திலேயே அவள் கரத்தை தட்டிவிட்டான்… அடுத்த நொடி அவன் கைகளில் நறுக்கென கடித்து வைக்க தூக்கம் கலைந்து வேகமாய் எழுந்து அமர்ந்தான்..
கையை பார்க்க பற்தடம் அப்படியே பதிந்து இருந்தது… திரும்பி பார்க்க சத்யா தூக்கத்தில் “பிங்கி மை டெடி… எங்க போன…”என்று தூக்கத்தில் உளறுவதுபோல் உளறிகொண்டிருந்தாள்..
“அடிப்பாவி எப்படி கடிச்சு வச்சிருக்கா பாரு…”திட்டிக்கொண்டவன் அவள் தன்னை நிம்மதியாக பெட்டில் தூங்க விடமாட்டாள் என்பதை உணர்ந்து வேகமாய் பெட்டில் இருந்து சோபாவுக்கு சென்றுவிட்டான்..
நடந்ததை நினைத்து பார்த்த சத்யா “அது இந்த சத்யாகிட்டயேவா…இந்த சத்யா உன் வாழ்க்கையை விட்டு போற வரைக்கும் உனக்கு இந்த சோபாதான்…”என சொல்லிக்கொண்டவள் டைம் பார்த்துவிட்டு “ஐயையோ என் ஆக்டிங்கை ஸ்டார்ட் பண்ணனுமே…”வேகமாய் ரெடியாக எழுந்து ஓடினாள்..
சில நிமிடங்களுக்கு பின்…
எழில் முகம் முழுவதும் கருப்பு மை பூசிக்கொண்டு பேய் போல் இருந்தவர்களுக்கு மத்தியில் மாட்டிகொண்டு பயந்து நாலா பக்கமும் திரும்பி பார்த்து எந்த பக்கம் தப்பித்து ஓடுவது என்று பார்க்க எல்லாரும் அவனை சூழ்ந்துகொண்டனர்.
அவன் அவர்களிடம் மாட்டிக்கொண்டு விடுபட முடியாமல் போராடி கொண்டிருந்த நேரம் ஒரு கரம் அவனை பிடித்து இழுத்தது..
மெல்ல தூக்கம் கலைந்து கண் விழித்தான் எழில்…
அவனின் இம்சை பொண்டாட்டிதான் உலுக்கி கொண்டிருந்தாள்..
“எல்லாம் கனவா நிஜத்தில நடந்த மாதிரியே இருந்துச்சு…”என தனக்குள் சொல்லிக்கொண்டவன் “என்னங்க என்னாச்சுங்க?…”என்றவள் குரலில் நிமிர்ந்து பார்த்தான்..
“ஏய் அறிவில்ல நைட்தான் தூங்கவிடாம இம்சை பண்ணுனன்னா காலையிலயே ஏண்டி எழுப்பி டார்ச்சர் பன்ற… இடியட்…”என்று திட்டினான்..
“ஐடியட்டா… நான் ஒன்னும் முட்டாள் இல்ல கோல்டு மெடலிஸ்ட் ஏற்கனவே சொல்லிருக்கேன்ல…”
“பேசாம உனக்கு சத்யாங்கறதுக்கு பதிலா கோல்டுமெடலிஸ்ட்ன்னு பேரை மாத்திடலாமா காலையிலயே வந்து கடுப்பை கிளப்பிகிட்டு….”
அவன் கோபத்தில் திட்ட சத்யாவிற்கும் கோபம் வந்தது… அதை அவனிடமும் காட்ட துடித்தாள் ஆனால் முடியவில்லை.. இப்பொழுது அவள் நேரம் கொஞ்சம் சரியில்லாமல் இருந்தது.
எழில் கைகள் உயர்த்தி சோம்பல் முறிக்க அவன் இவ்வளவு நேரம் திட்டியதற்கு எல்லாம் கோபத்தை காட்டாமல் முகத்தை நார்மலாக வைத்துகொண்டு அவன் பார்க்கும் நேரம் மென்னகை சிந்தி “சரிங்க இனி நீங்க தூங்கிட்டு இருக்கும்போது வந்து எழுப்பமாட்டேன்…”என்றாள்..
கண்கள் சுருக்கியவன் “என்ன இவ திட்டுனதுக்கு சிரிச்சிட்டே பதில் சொல்றா… சம்திங் ராங்…”யோசித்தவன் “என்ன ஆக்ட்டிங்கா?…வெளில பண்ண வேண்டிய பர்பாமன்ஸ ரூமுக்குல்ல பண்ணிட்டு இருக்க?…”என்று கேட்க
“அதுவந்து…”என அவள் ஏதோ சொல்ல வரும் நேரம் கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் சத்யா வேகமாய் எழிலை அணைத்துகொண்டாள்..
இந்த அணைப்பை அவன் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை… ஹார்ட்பீட் அதிகமாக ஒரு நொடி சுற்றி என்ன நடக்கிறது என்பதையே அவனால் உணர முடியவில்லை…
எல்லாம் ஒரு நிமிடம்தான்… தன்னிலை உணர்ந்தவன் வேகமாய் அவளை விலகிவிட பார்க்க சத்யா விடவில்லை… அவனை இறுக்கம்மாய் அணைத்துகொண்டாள்.
அவள் அணைப்பின் காரணம் புரியாமல் விழித்தவன் திரும்பி பார்க்க கதவை திறந்த அவன் அம்மா வள்ளி அவர்கள் இருந்த நிலையை பார்த்துவிட்டு கதவை மூடிவிட்டு சென்றார்.
இப்பொழுது அவனுக்கு அவள் ஆக்டிங் புரிய அவன் விலகு என சொல்வதற்குள் சத்யாவே அவனிடமிருந்து விலகினாள்..
கதவை பக்கம் அவள் திரும்பி பார்க்க சத்யா முகத்திற்கு நேராக சொடக்கிட்டவன் தன்னை திரும்பி பார்க்க வைத்தான்..
“என்ன ஆக்டிங்கா?… ஓவரா பன்ற…”என சொல்ல
சத்யா அப்பாவிபோல் முகத்தை வைத்துகொண்டவள் “என்னை என்னங்க பண்ண சொல்றிங்க நீங்க கத்திட்டு இருக்கும்போது சாரி சாரி பேசிட்டு இருக்கும் அத்தை வந்துட்டாங்க அவங்க தப்பா நினைக்ககூடாதுல்ல அதான்…”என்றாள்..
அவளின் இந்த இன்னசன்ட் பேஸும் தனக்கு மரியாதை கொடுத்து பேசும் விதமும் அவனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த தாடையை தேய்த்தபடி “உன்னோட பர்பாமன்ஸ் ஹெவியா இருக்கே என்ன விஷயம்?…”என்று கேட்க
“அது…”என அவள் சொல்லும் நேரம் இப்பொழுது வெளியில் நின்றபடியே வள்ளி “அம்மாடி சத்யா ரெண்டு பேரும் சீக்கிரம் வாங்க உன் அம்மா அப்பா வெயிட் பன்றாங்கல்ல… நல்ல நேரத்திலயே இங்கிருந்து ஊருக்கு கிளம்பணும்…”என சொல்ல எழிலிலுக்கு புரிந்துபோனது.
“சரிங்க அத்தை…”என்றவள் எழில் பக்கம் பார்க்க கையை உயர்த்தியவன் “நீ எதுவும் சொல்ல வேன்டாம் எனக்கு புரிஞ்சிருச்சு…”என்றவன் ரெடியாக சென்றான்..
எழில் சத்யா இருவரும் சரவணன் மீனாட்சியிடம் கிளம்புவதாக சொல்லிக்கொண்டு வள்ளியுடன் வெளியில் வர அவர்களுடைய பேக் எல்லாம் காரில் எடுத்து வைத்துகொண்டிருந்த சதீஸ் “போலாமாடா?…”என்றான்..
எழில் கண்கள் சுருக்கியவன் “நீ எங்க போலாமான்னு கேட்கிற?…”என கேட்க
சதீஸ் சிரித்தவன் “ஊருக்குதான்… உன்னோட பாட்டி ஊருக்கு நாம எப்பவும் சேர்ந்துதான போவோம்… ஆல்ரெடி நான் பாட்டிகிட்ட இன்பார்ம் பண்ணிட்டேன்… ஜாலியா குலதெய்வ கோவிலுக்கு ட்ரிப் போயிட்டு வரலாம்…”என்றான்..
“எனக்கு இந்த இம்சையை பிளாக்மெயில் பண்ணி கல்யாணம் பண்ணி வச்சுட்டு ஜாலியா ட்ரிப் போலாமா…”தன் நண்பனையும் கூட சேர்ந்து சிரித்த அம்மாவையும் முறைத்து பார்த்தவன் பின் எப்படியும் ஊரில் பாட்டி இரண்டு நாட்களாவது தாங்காமல் அனுப்பமாட்டார் என்பதால் தனக்கும் ஒரு கம்பனி இருக்கட்டும் என்று அவனும் எதுவும் சொல்லவில்லை..
“சரி போலாமா?…”
“ம்ம் வாங்க…”என்றவன் எல்லாரையும் காரில் ஏற சொன்னான்..
எழில் தான் டிரைவ் செய்வதாக சொல்ல சதீஸ் உடனே பேக் சீட் சென்று ஏறிகொன்டான்..
எழில் திரும்பி பார்த்தவன் “ஏய் நீ எதுக்குடா பின்னாடி போன… பிரன்ட்ல வந்து உட்காரு…”என சொல்ல
“மச்சி அங்க என் தங்கச்சி உட்காருவாடா…”
“தங்கச்சியா…உனக்கு தங்கச்சி யாரும் இல்லையே…”எழில் புரியாமல் கேட்க
கதவை திறந்துகொண்டு சத்யா அவன் பக்கத்தில் அமரவும் பின்னாடி சதீஸ் சிரித்து “இதோ இவதான் என் தங்கச்சி சத்யா…”என்றான்.
“கடவுளே…”
“என்னடா… இப்போ எதுக்கு அவரை கூப்பிடற…”
“ம்ம் அவர்கிட்ட போய் சேரலாம்ன்னுதான்….”
“கிளம்பும்போது இந்த மாதிரி அபசகுணமா பேசாதடா…”என்று திட்டிய வள்ளி காரில் பின்னாடி ஏறிக்கொண்டார்… சத்யாவின் அம்மா அப்பாவிடம் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினர்..
கார் சாலையில் சீரான வேகத்தில் சென்றது….
எழில் காரை ஓட்டியவன் சத்யா பக்கம் திரும்பி பார்க்கவில்லை… அதுபோல்தான் அவளும் முன்னாடிதான் அமர்ந்து இருந்தாள் அவனிடம் எதுவும் பேசவும்மில்லை திரும்பி பார்க்கவும் இல்லை…அவள் ஏதோ யோசனையில் ஆழ்ந்துவிட்டாள்.
பின்னாடி அமர்ந்து இருந்த சதீஸ் வள்ளி ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்…
“டேய் கண்ணா…”
அவர் மெதுவான குரலில் அழைக்க சதீஸ் “நீங்க என்ன கேட்க வர்றீங்கன்னு எனக்கு புரியுது… ஹாப்பனவர் ஆச்சு இன்னும் ரெண்டு பேரும் எதுவும் பேசிக்கல அதான?…”என்றான்.
“ம்ம் பேசிக்கவே மாட்டேங்குறாங்களே…’
அவர்கள் இருவரும் மெதுவாக அவர்களுக்குள் பேசிக்கொள்ள அது கேட்டதோ என்னவோ சத்யா யோசனையில் இருந்து வெளியில் வந்தவள் எழில் பக்கம் திரும்பி பார்த்தாள்..
அவனை பார்த்தவள் மிரர் வழியாக பின்னாடி அமர்ந்து இருப்வர்களை பார்த்தாள்… இருவரையும் அவளையே பார்த்துகொண்டிருப்பது தெரிந்தது…
“ஓ காட் ஆக்டிங்கை மறந்துட்டனே… சத்யா கான்ஸன்ட்ரேஷனோட இருடி….”என்று தன்னையே திட்டிக்கொண்டவள் டேஷ் போர்ட் திறந்து அதிலிருந்து சாக்லேட் எடுத்தாள்..
அதில் கொஞ்சம் கடித்து சாப்பிட்டவள் “என்ன சாக்லேட் சாப்பிடறீங்களா?…”என்று அவனிடம் நீட்டினாள்..
அவள் பக்கம் திரும்பிய எழில் சாக்லேட்டை கடித்து இருப்பதை கவனித்து கண்கள் சுருக்கினான்…
“என்னங்க சாக்லேட் பிடிக்காதா?…”
பின்னாடி அமர்ந்து இருந்த சதீஸ் “அப்படியெல்லாம் இல்ல சத்யா… சாக்லேட்ஸ் எழிலுக்கு ரொம்ப பிடிக்கும்…”என்றான்
சத்யா எழில் பார்க்கவும் பின்னாடி அவன் அம்மா இருப்பதை விழியசைவில் காட்டினாள்.
“இவளை…”உள்ளுக்குள் திட்டிகொண்டவன் காரை ஓட்டிகொண்டே ஒரு கையால் அவளிடமிருந்து சாக்லேட்டை பறித்தான்…
“குரங்கு…”திட்டிக்கொண்டவள் அதன்பின் பின்னாடி அமர்ந்து இருப்பவர்களுக்கு டவுட்டு வரக்கூடாது என்பதற்காக எதாவது பேசிக்கொண்டே வந்தாள்..
எழிலுக்கு அவள் தொண தொணவென பேசிக்கொண்டு வருவது சுத்தமாக பிடிக்கவில்லை…
“ஐயோ இந்த கொசு தொல்லை தாங்க முடியல… மருந்து அடிச்சி கொள்ளுங்களேன்டா…”அவன் முனுமுனுப்பாக சொன்னது சத்யாவிற்கு கேட்கவில்லை..
“என்னங்க எதாவது சொன்னிங்களா?…”
“ஒன்னும் இல்ல…டிரைவ் பண்ணிட்டு இருக்கேன்ல பேசாம அமைதியா இரு…”என்றான்.. அதன்பின் அவள் அவ்வளவாக பேசவில்லை…
பல மணி நேரம் பயணம் செய்து ஊட்டிக்கு பக்கத்தில் இருந்த அகவணம் என்ற கிராமத்திற்கு வந்தனர்…
ஊருக்குள் வந்ததும் சத்யா கார் கண்ணாடியை இறக்கிவிட்டு பார்த்தாள்… எங்கு திரும்பினாலும் பசுமையாக இருக்க பறவைகள் சத்தம் அதிகமாக இருந்தது…
அவள் எல்லாத்தையும் ரசித்து பார்க்க பக்கத்தில் இருந்தவனோ கடுப்புடன் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான்…
காரை பழைய காலத்து பெரிய வீட்டின் முன் நிறுத்தினான்..
அவர்கள் வரவை எதிர்பார்த்தது போல் எழுபது வயதில் ஒரு மூதாட்டியும் நாற்பது வயதில் ஒரு பெண்மணியும் நின்றிருந்தனர்..
No comments yet.