அத்தியாயம் – 13

Udhaya Novel's | 14 Apr 2026 | Share

K 13 

ஆதிரா சொன்னதை கேட்டு அதிர்ந்து போன பிரியா,  ” என்னடி சொல்ற.. ரூமுக்கு வர சொன்னாரா.. எதுக்கு.. ஏன் வர சொன்னாரு… ” என கேட்க,

” அதெல்லாம் எதுவும் சொல்லுல.. என்னனு போனா தான் தெரியும்.. ” என எழுந்த ஆதிரா அங்கிருந்து செல்ல பிரியாவுக்கு பதட்டமாக இருந்தது.

ஆர்யன் அறைக்கு வந்த ஆதிரா உள்ளே செல்ல தயக்கத்துடன் வெளியவே நின்றிருக்க அங்கு வந்த கவின் அவளை பார்த்தவன்,

” என்னங்க.. என்ன வேணும்..  சாரை பார்க்கணுமா.. ” என கேட்க,

” சார் தான் வர சொன்னாரு.., ” என்றாள் ஆதிரா.

” அப்படியா.. இருங்க நான் போய் சார்கிட்ட கேட்டுட்டு வரேன்.. ” என்ற கவின் உள்ளே சென்றவன் சில வினாடியில் திரும்பவும் அங்கு வந்தான்.

” சார் உங்களை உள்ள வர சொன்னாரு.. நீங்க உள்ள போங்க.. ” என்ற கவின் வெளியே செல்ல ஆதிரா கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றாள்.

உள்ளே வந்த ஆதிரா அவன் முன்னாடி நிற்க அவளை நிமிர்ந்து பார்த்த ஆர்யன், ” வாங்க ஆதிரா.. உட்காருங்க.. ” என சிரிக்க,

” இல்ல சார் பரவாயில்ல.. எதுக்கு வர சொன்னிங்கன்னு சொல்லுங்க..” என ஆதிரா சொல்ல அவளை பார்த்து சிரித்தான் ஆர்யன்.

ஆதிராவை பார்த்து சிரித்த ஆர்யன், ” என்ன ஆதிரா.. எதுக்கு சார் எல்லாம் சொல்றிங்க.. நீங்க என்னை ஆர்யன் அப்படினே கூப்பிடலாம்.. ” என சொல்ல,

” அதெப்படி சார் உங்கள பேர் சொல்லி கூப்பிட முடியும்.. நீங்க இந்த கம்பெனி எம்.டி.. உங்கள சார் அப்படினு கூப்பிடறது தான முறையா இருக்கும்.. ” என்றாள் ஆதிரா.

” கம் ஆன் ஆதிரா.. ஏன் இப்படி எல்லாம் சொல்றிங்க.. நேத்து என்கிட்ட எப்படி பிரண்ட்டா பேசுனீங்களோ அதே மாதிரி நீங்க பேசுங்க.. எனக்கு அதுதான் பிடிச்சுருக்கு.. ” 

” பிடிக்குதுன்னு சொல்லி எதுனாலும் செய்ய முடியாதுல சார்.. அதை விடுங்க.. என்னை எதுக்கு கூப்பிட்டீங்கன்னு சொல்லுங்க சார்.. எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு.. “

” என்ன ஆதிரா.. உங்க குரலே சரி இல்ல.. நீங்க ஏதோ கோபமா இருக்க மாதிரி இருக்கு.. என்னாச்சு.. யாராவது எதாவது சொன்னாங்களா.. ஏன் இப்படி கோபமா இருக்கீங்க.. “

” கோபமா.. அதெல்லாம் எதுவும் இல்ல சார்.. நான் சாதாரணமா தான் சொன்னேன்..  “

” அப்படியா.. சரி ஓகே.. ” என எழுந்து நின்ற ஆர்யன் ஆதிராவை பார்க்க அவளும் அவனை பார்த்தாள்.

“விஷ் யூ ஹாப்பி பர்த்டே ஆதிரா..” என்ற ஆர்யன் ஒரு கிப்ட் பாக்ஸை அவளிடம் நீட்ட அவளோ அதை வாங்காமல் அவனை பார்த்தவள்,

” தேங்க்யூ சார்.. நீங்க விஷ் பண்ணுனதே எனக்கு போதும்.. இதெல்லாம் எதுவும் வேண்டாம்.. எனக்கு யார்கிட்டயும் கிப்ட் வாங்கி பழக்கம் இல்ல.. ஐம் சாரி சார்…” என சொல்ல,

” இல்ல ஆதிரா.. நீங்க என்மேல இருக்க கோபத்துல  வாங்கமாட்டேன்னு சொல்றிங்க.. உங்ககிட்ட நான் உண்மைய சொல்லுலன்னு உங்களுக்கு என்மேல கோபம்.. அதனால தான இதை வாங்கமாட்டேன்னு சொல்றிங்க.. ” என்றான் ஆர்யன்.

” இல்ல சார்.. நான்தான் சொல்றேன்ல.. எனக்கு யார்மேலயும் எந்த கோபமும் இல்ல சார்.. நான் எதுக்கு கோபப்படணும்.. நீங்களா எதுவும் நினைச்சுக்காதீங்க.. ” என ஆதிரா கோபத்தை அடக்கிக்கொண்டு சொல்ல ஆர்யன் அவளை பார்த்து சிரித்தான்.

” இல்ல ஆதிரா.. உங்களுக்கு என்மேல கோபம் அதனால தான் இப்படி எல்லாம் என்கிட்ட பேசறீங்க… அதனால தான் இந்த கிப்ட்டையும் வாங்க மாட்டிங்கறீங்க.. பரவாயில்ல.. இந்த கிப்ட் என்கிட்டயே தான் இருக்கும்.. உங்களுக்கு எப்போ இதை வாங்கணும்னு தோணுதோ அப்போ இதை வாங்கிக்கோங்க.. ” 

” இல்ல சார்.. எனக்கு இது எப்பவும் வேண்டாம்.. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க.. நான் கிளம்பறேன்.. ” என்ற ஆதிரா அங்கிருந்து செல்ல போக,

” ஆதிரா.. ஒரு நிமிஷம்.. ” என ஆர்யன் கூப்பிடவும் திரும்பி அவனை பார்த்தாள் ஆதிரா.

என்ன என்பது போல் அவள் புருவம் உயர்த்தி கேட்க அவளை பார்த்த ஆர்யன், ” விக்னேஷ் உங்ககிட்ட  ப்ரொப்போஸ் பண்ணிட்டாறா.. ” என கேட்க அதை கேட்ட ஆதிரா அதிர்ச்சியுடன் அவனை பார்க்க அவன் அவளை பார்த்து சிரித்தான்.

” என்ன இப்படி பார்க்கறீங்க.. எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னு ஷாக்கா இருக்கா.. நேத்து விக்னேஷ் தான் எல்லாம் சொன்னாரு.. ரொம்ப வருஷமா உங்களை லவ் பண்றதாவும் அதை உங்ககிட்ட சொல்ல தயக்கமாவும் பயமாவும் இருக்கறதா சொன்னாரு.. இன்னிக்கு உங்க பர்த்டே அப்படிங்கறதுனால இன்னிக்கு உங்ககிட்ட ப்ரொபோஸ் பண்றதா சொன்னாரு.. எப்படியும் இன்னிக்கு ப்ரொபோஸ் பண்ணிருப்பாரு.  நீங்க ஓகே சொல்லிட்டீங்க தான.. ” எனஆர்யன் கேட்க,

” ப்ளீஸ் சார்.. நீங்க என்னோட பாஸ்.. உங்க லிமிட் தாண்டி இது மாதிரி எதுவும் என்கிட்ட பேச வேண்டாம்.. அதெல்லாம் என்னோட பர்சனல்.. சோ ப்ளீஸ் இனி இப்படி எல்லாம் என்கிட்ட எதுவும் கேக்க வேண்டாம்.. ” என ஆதிரா முகத்தில் அடித்தது போல் சொல்ல அதை கேட்டதும் ஆர்யன் முகம் உடனே வாடியது.

அவன் முகம் வாடியதை பார்த்த ஆதிராவுக்கு கஷ்டமாக இருந்தாலும் அதை தள்ளி வைத்தவள், ” நான் இங்க வேலை பார்க்கறேன்.. நீங்க என்னோட எம். டி.. அவ்ளோதான்.. எல்லார்கிட்டயும் எப்படி இருக்கீங்களோ என்கிட்டயும் அதே மாதிரி இருங்க போதும்.. நான் எதுவும் தப்பா சொல்லிருந்தா ஐம் சாரி சார்.. ” என்ற ஆதிரா திரும்ப கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் மித்ரா.

மித்ராவை பார்த்ததும் ஆதிரா அப்படியே நிற்க அவளை கடந்து சென்று ஆர்யன் அருகே நின்ற மித்ரா, ” சாரி பேபி.. வேலை நேரத்துல நான் வந்து உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா.. ஒரு சந்தோசமான விஷயம்.. அதை சொல்றதுக்கு தான் நான் மறுபடியும் வந்தேன்.. என் டேடி இன்னிக்கு நைட் சென்னை வராரு.. நாளைக்கு ஒரு நாள் தான் இங்க இருப்பாரு.. மறுபடியும் வேர்ல்ட் ட்ரிப் போயிருவாரு.. அதனால நான் இன்னிக்கே என் டேடிகிட்ட நாம லவ் பண்ற விஷியத்தை சொல்ல போறேன்.. ” என சொல்ல அதை கேட்ட ஆதிரா அதிர்ச்சியில் சிலையென நிற்க ஆர்யனோ அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.

அதை எல்லாம் கவனிக்காத மித்ரா, “எப்படியும் அவர்கிட்ட பேசி ஓகே வாங்கிருவேன்.. நீ என்ன பண்ற.. நீ நாளைக்கு வந்து என் அப்பாவை பார்த்து அவர்கிட்ட பேசுற.. கண்டிப்பா அவருக்கும் உன்னை பிடிக்கும்.. என்ன சொல்ற.. நாளைக்கு நீ வருவ தான..” என கேட்க அவனோ ஆதிராவையே பார்த்துக்கொண்டு இருக்க அதை கவனித்த மித்ரா திரும்பி ஆதிராவை பார்த்து முறைத்தாள்.

” ஹேய்.. உனக்கு அறிவில்லயா.. இப்படித்தான் நாங்க பேசுறத கேட்டுட்டு நின்னுட்டு இருப்பியா.. முதல்ல வெளியே போ.. ” என மித்ரா கத்த ஆதிரா அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு  மித்ராவை பார்த்தவள்,

” ஐம் சாரி மேடம்.. ” என அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வேகமாய் அங்கிருந்து செல்ல ஆர்யனுக்கு பயங்கரமாக கோபம் வந்தது.

கோபத்துடனே மித்ராவை பார்த்தவன், ” வாட் நான்சென்ஸ் மித்ரா.. என் ஸ்டாப்பை இப்படி எல்லாம் பேசறதுக்கு உனக்கு யார் அதிகாரம் கொடுத்தா.. ” என கோபத்தில் கத்த மித்ரா அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.

” என்ன ஆர்யன்.. எவளோ ஒருத்திக்காக என்கிட்டயே நீ இப்படி கத்திட்டு இருக்க.. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவ.. ஆனா அவளுக்காக என்கிட்ட நீ கோபப்படற.. அப்போ உனக்கு உன் ஸ்டாப் தான் முக்கியம்.. நான் முக்கியம் இல்லையில.. நீ இப்படி எல்லாம் இருப்பன்னு நான் நினைக்கவே இல்ல ஆர்யன்.. உன்னையே ஒவ்வொரு நிமிஷமும் நினைச்சுட்டு இருந்தேன்ல.. எனக்கு இது தேவைதான்.. ச்ச.. ” என கோபமாய் சொன்ன மித்ரா அங்கிருந்து செல்ல ஆர்யன் கோபத்தில் டேபிள் மேல் இருந்த பொருள் எல்லாத்தையும் கீழே போட்டு உடைத்தான்.

சத்தம் கேட்டு கவின் உள்ளே வர அவனை பார்த்த ஆர்யன் , ” வெளியே போடா.. ” என கத்தவும் பயந்து போய் வெளியே ஓடினான் கவின்.

“ ச்ச.. என்ன ஆர்யன் பண்ணி வச்சுருக்க.. இவ்ளோ நாளும் நீ கஷ்டப்பட்ட எல்லாத்தையும் ஒரு நிமிஷத்துல தொலைக்க பார்த்தியேடா.. மித்ரா உன் பக்கம் இருக்கற வரைக்கும் தான் நீ நினைச்சது நடக்கும்… மித்ரா மட்டும் உன்னை விட்டுட்டு போயிட்டான்னா நீ நினைச்சது இந்த ஜென்மத்துல நடக்காது.. எல்லாம் கைக்கூடி வரப்ப இப்படி சொதப்பிட்டியேடா.. எதாவது செஞ்சு மித்ராவை உடனே சமாதானம் செய்யணும்.. மித்ரா.. மித்ரா.. “ என ஆர்யன் கோபத்தில் கத்த அவன் கத்தியது அந்த அறை முழுவதும் எதிரொலித்தது.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.