அத்தியாயம் – 12

Udhaya Novel's | 14 Apr 2026 | Share

K 12 

கவின் கிளம்பாமல் இன்னும் அங்கேயே நின்றிருக்க அவனை பார்த்த ஆர்யன், “ என்னடா.. இன்னும் ஏன் நின்னுட்டு இருக்க.. எதாவது சொல்லனுமா.. “ என கேட்க,

“ சார் அது வந்து.. மித்ரா மேடம் உங்களை பார்க்க வந்துருக்காங்க… “ என கவின் தயங்கி தயங்கி சொல்ல கதவை திறந்து கொண்டு கோபமாய் உள்ளே வந்தாள் மித்ரா.

கவினை கோபமாய் முறைத்த மித்ரா, ” எவ்ளோ நேரம் நான் வெளியே காத்துட்டு இருக்கறது..  உனக்கு இருக்கு இரு.. இப்போ வெளியே போ.. ” என சொல்ல மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றான் கவின்.

சிரித்துக்கொண்டே சேரில் இருந்து எழுந்த ஆர்யன், ” ஹேய் கம் ஆன்.. ஏன் இப்படி டென்ஷன் ஆகற.. நீ டென்ஷன் ஆனா உன் பேஸ் பார்க்க நல்லாவே இல்ல.. என் மித்ரா எப்பவும் சிரிச்சுட்டு சந்தோசமா இருக்கனும்… எனக்கு அப்படி இருந்தா தான் பிடிக்கும்.. ” என சொல்ல கோபமாய் இருந்தவள் உடனே அவனை பார்த்து சிரித்தாள்.

” ஆர்யன் நீ இருக்க பாரு.. நான் எவ்ளோ கோபமா இருந்தாலும் நீ அதை உடனே சரி பண்ணிற.. சரி நீ எப்போ சென்னை வந்த..  ஏன் எனக்கு போன் பண்ணவே இல்ல.. நானே நீ வந்து இருக்கறது தெரிஞ்சு உன்னை தேடி வந்து பார்க்கறேன்.. ஆனா நீ சென்னை வந்ததை பத்தி ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லுல.. ” 

” அப்படி எல்லாம் இல்ல மித்ரா.. உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு எல்லாம் ஒன்னும் இல்ல.. சர்பிரைஸ்ஸா வந்து உன்னை பார்க்கலாம்னு இருந்தேன்.. அதுக்குள்ள நீயே நான் வந்ததை கண்டுபிடிச்சி என்னை தேடி வந்துட்ட.. யூ ஆர் ஆல்வேஸ் வெரி ஸ்மார்ட் மித்ரா.. ” என ஆர்யன் சிரிக்க மித்ராவும் சிரித்தாள்.

”  சரி ஓகே.. இப்போ நீ பிரீயா.. உன்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு.. இன்னிக்கு புல்லா எங்கையாவது வெளியே சுத்தணும்.. போலாமா.. ” என மித்ரா கேட்க,

” ஐம் சாரி மித்ரா.. நான் இன்னிக்கு தான் இங்க பொறுப்பு ஏத்துட்டு இருக்கேன்.. எல்லாரையும் பார்க்கணும்.. நான் இன்னிக்கு கொஞ்சம் பிசி.. நாளைக்கு நாம வெளியே எங்கையாவது போலாம்.. என்னை புரிஞ்சுக்குவன்னு நான் நம்பறேன்.. ” என ஆர்யன் சொல்ல பெருமூச்சு விட்ட மித்ரா அவனை பார்த்து சிரித்தாள்.

” சரி ஓகே ஆர்யன்.. யூ கேரி ஆன்.. நான் கிளம்பறேன்.. ” என மித்ரா சொல்ல அவளுடன் வெளியே வந்த ஆர்யன் மித்ராவை வாசல் வரைக்கும் சென்று விட்டுவிட்டு வர மொத்த கம்பெனியின் கண்களும் அவனையே பார்த்தது.

மறுபடியும் அவனது அறைக்கு போகும் வழியில் ஆதிராவின் இடத்திற்கு வந்ததும் தானாக கண்கள் அவளை திரும்பி பார்க்க அவள் இடத்தில் அவளை காணாது சற்றே கோபமானவன் வேகமாய் அவனது அறைக்கு சென்றான்.

” கவின்.. ” என ஆர்யன் உள்ளே இருந்து கத்த அவன் கத்திய சத்தம் கேட்டு வேகமாய் உள்ளே ஓடினான் கவின்.

” எல்லாரும் இன்னும் ஐஞ்சு நிமிஷத்துல கான்பிரன்ஸ் ஹால்ல அசம்பில்லாகி இருக்கனும்.. சீக்கிரம்.. ” என ஆர்யன் சொல்ல சரியென தலை ஆட்டிய கவின் வேகமாய் வெளியே ஓடினான்.

ஆர்யன் சொன்னது மாதிரியே கான்பிரன்ஸ் ஹாலில் அனைவரும் கூடி இருக்க அந்த அறைக்குள் நுழைந்தான் ஆர்யன். அவனை பார்த்ததும் கூட்டத்தில் இருந்த சலசலப்பு அடங்க எல்லாரையும் பார்த்தவனின் பார்வை ஆதிராவிடம் நிலைக்க அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. 

ஆர்யன் ஆதிராவையே பார்ப்பதை பார்த்த பிரியா அவளின் காதில் கிசுகிசுக்க நிமிர்ந்து அவனை பார்த்த ஆதிரா மறுபடியும் பார்வையை திருப்பி கொண்டாள்.

அதை பார்த்து தனக்குள் சிரித்த ஆர்யன் மைக்கின் அருகே போய் நின்றவன், ” ஹாய் கைஸ்.. ஒரு சிலருக்கு என்னோட வருகை அதிர்ச்சியா இருந்து இருக்கலாம்.. ஏன்னா நேத்து இந்த கம்பெனியில ஒர்க் பண்ற ஒரு ஸ்டாப்பா வந்துட்டு இன்னிக்கு இந்த கம்பெனி எம்.டியா உங்க முன்னாடி நான் நிக்கறது அதிர்ச்சியாவும் ஆச்சரியமாவும் இருக்கலாம்.. 

நான் எந்த கம்பெனியை வாங்குனாலும் அங்க முதல்ல ஒரு ஸ்டாப்பா தான் உள்ள வருவேன்.. கம்பெனி பத்தி இங்க இருக்கறவங்கள பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கனும் நான் நினைச்சதுனால தான் அப்படி பண்ணுனேன்.. சாரி நான் என்னை இன்ட்ரோ கொடுக்கவே இல்ல.. ஐம் ஆர்யன்.. யுவர் நியூ எம். டி ஆப் திஸ் கம்பெனி.. ” என சிரித்துக்கொண்டே சொல்ல எல்லாரும் வேகமாய் கைத்தட்டினர்.

“உங்க எம். டி சில காரணங்களுக்காக எனக்கு இதை வித்துட்டாரு.. கம்பெனி கை மாறுனதும் எங்க நம்மள இங்க இருந்து அனுப்பிருவாங்களோன்னு யாரும் பயப்பட வேண்டாம்.. நான் யாரையும் வேலையை விட்டு அனுப்ப போறது இல்ல.. அதுக்கு பதிலா எல்லாருக்கும் இன்னில இருந்து 10% இன்கிரிமெண்ட் கொடுக்கறேன்..” என ஆர்யன் சொல்ல அதை கேட்டு கைத்தட்டல் சத்தம் காதை கிழித்தது.

” என்னடா இவன்.. வந்ததும் இப்படி இன்கிரிமெண்ட் கொடுக்கறான்னு உங்களுக்கு சந்தேகம்கூட வரலாம்.. வேலை செஞ்சதுக்கு அப்புறம் இன்ரிமெண்ட் கொடுக்கறதுக்கு பதிலா அதுக்கு முன்னாடியே இன்கிரிமெண்ட் கொடுத்தா இன்னும் நீங்க சந்தோசமா சுறுசுறுப்பா வேலை செய்விங்கன்னு நான் நம்பறேன்.. எனக்கும் அதனால லாபம் கிடைக்கும்.. அதனால தான் இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கேன்.. உங்க எல்லாருக்கும் நான் சொன்னது மாதிரி அடுத்த மாசத்துல இருந்து 10% இன்கிரிமெண்ட் சேர்த்து வரும்..” என ஆர்யன் சொல்ல அனைவரின் முகத்திலும் அவ்வளவு சந்தோசம் தெரிய ஆனால் ஆதிராவோ எதையோ பறி கொடுத்தது போல் நின்றிருந்தாள். 

” உங்களுக்கு எதாவது என்கிட்ட கேக்கணும்னா இல்ல எதாவது சொல்லனும்னா யாரு வேணுனாலும் எப்போ வேணுனாலும் என் ரூமுக்கு வரலாம்.. என்னை யாரும் எம். டி யா பார்க்க வேண்டாம்.. உங்க பிரண்ட்டா என்னை நினைச்சுக்கோங்க.. கம்பெனிய இன்னும் முன்னாடி கொண்டு போக உங்க எல்லாரோட ஒத்துழைப்பும் எனக்கு வேணும்.. 

அப்புறம் ஒரு விஷயம்.. என்னடா இவன் இன்கிரிமெண்ட் அப்படினு சொல்லிட்டு இப்படி சொல்றான்னு யாரும் நினைக்க வேண்டாம்.. இந்த கம்பெனி எம். டியா இதை சொல்ல வேண்டியது என் கடமை.. எல்லாருக்கும் 6 மன்த்ஸ் டைம் கொடுக்கறேன்.. எல்லாரும் அவங்க அவங்க ஒர்க்ல இம்புரூவ்மெண்ட் காட்டி இருக்கனும்.. யாரோடது ரொம்ப கம்மியா இருக்கோ அவங்கள இந்த கம்பெனியில இருந்து டெர்மினேட் பண்ணிருவேன்.. ” என ஆர்யன் சொல்ல அதை கேட்டு எல்லாரும் அதிர்ந்து போய் அவனை பார்த்தனர்.

” என்ன சார் சொல்றிங்க.. இப்படி சொன்னா எப்படி சார்.. ” என ஒருவன் கேட்க,

” ஒரு எம். டி யா இந்த கம்பெனியோட முன்னேற்றதுக்கு இதுமாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டியது என்னோட கடமை.. அதான் 6 மாசம் டைம் கொடுத்திருக்கேன்ல… உங்கனால முடிஞ்ச அளவுக்கு ஹார்ட் ஒர்க் போடுங்க..  என்னால அவ்ளோதான் சொல்ல முடியும்.. இன்னும் சில ரூல்ஸ் போட போறேன்.. அதெல்லாம் உங்களுக்கு சர்க்குலர்ல்ல வரும்.. ” என்ற தேவ் அங்கிருந்து செல்ல எல்லாரும் தங்களுக்குள் பேசியபடி அங்கிருந்து செல்ல ஆதிராவும் பிரியாவும் வெளியே வந்தனர்.

” என்னடி இது.. இப்படி என்னேமோ சொல்லிட்டு போறாரு.. இந்த வேலைய வச்சு தான் நிறைய பிளான் போட்ருக்கேன்.. திடிர்னு வேலை இல்லைன்னு சொல்லிட்டா என்ன பண்றது.. ” என பிரியா கவலையுடன் கேட்க ஆதிரா எதுவும் பேசாமல் அவளது இடத்தில் போய் உட்கார பிரியாவும் போய் அவளது இடத்தில் அமர்ந்தாள்.

” என்னடி நீ.. நான் என் பாட்டுக்கு புலம்பிட்டு இருக்கேன்.. நீ என்ன காதுலயே வாங்காம இருக்க.. என்னடி யோசிச்சுட்டு இருக்க..  நீயும் ஆர்யன் பேசுனதை பத்தி யோசிச்சுட்டு இருக்கியா.. ” என பிரியா கேட்க ஆதிராவின் காதில் அதெல்லாம் விழவே இல்லை.

அவள் சிலையென அமர்ந்து இருக்க அவளது இன்டெர்காம் அடித்தது. அவள் அதையும் காதில் வாங்காமல் அமர்ந்து இருக்க, ” ஏய் உன் இன்டெர்காம் அடிக்குதுடி.. எடுத்து என்னனு கேளு.. ” என பிரியா அவளை உலுக்க தன்னிலை அடைந்த ஆதிரா இன்டெர்காமை எடுத்து காதில் வைத்தாள்.

” ஹலோ ஆதிரா.. என் ரூமுக்கு உடனே வாங்க… ” என்ற ஆர்யன் போனை வைக்க ஆதிரா இன்டெர்காமை கீழே வைத்தாள். அவள் ஏதோ யோசனையுடன் அமர்ந்து இருக்க அவளை பார்த்த பிரியா,

” என்னடி.. யார் போன் பண்ணுனது.. ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க.. ” என கேட்க,

” ஆர்யன் தான் கூப்பிட்டாரு.. ரூமுக்கு வர சொன்னாரு.. ” என ஆதிரா சொல்ல பிரியா அதிர்ந்து போய் அவளை பார்த்தாள்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.