அத்தியாயம் – 11

Udhaya Novel's | 14 Apr 2026 | Share

K 11 

பியூன் வந்து எல்லாரையும் வர சொல்லிவிட்டு செல்ல கம்பெனியில் வேலை செய்த அனைவரும் வெளியே செல்ல பிரியா ஆதிராவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

எல்லாரும் இரண்டு வரிசையாய் நின்றுகொண்டு இருக்க எல்லாரையும் பார்த்த ஆதிரா ஆர்யனை காணாது குழம்பியவள்,

” என்னடி இது.. எல்லாரும் இருக்காங்க.. ஆர்யனை மட்டும் காணோம்.. அவரு இன்னிக்கு லீவா என்ன.. ” என கவலையுடன் கேட்க அவளை சந்தேகமாய் திரும்பி பார்த்தாள் பிரியா.

” ஏய் என்னடி.. நான் கேட்டதுக்கு பெரிய இவ மாதிரி எதுவும் இல்லன்னு சத்தியம் பண்ணாத குறையா சொன்ன.. இப்போ என்ன அவர் இல்லன்னு தெரிஞ்சு இவ்ளோ பீல் பண்ற.. ” என பிரியா கேட்க,

” உடனே ஆரம்பிக்காதடி.. நம்ம டீம் ஆள் அவரு.. அதான் காணோமேன்னு கேட்டேன்.. இதுல என்னடி தப்பு இருக்கு.. ” என்றாள் ஆதிரா.

” அப்படியா.. நம்ம டீம் ஆள் காணோம்னு தான் நீ கேட்டியா.. அதுசரி.. ஆர்யன் நேத்திக்கு வந்தவரு.. அவரு வருலன்னு நீ இவ்ளோ பீல் பண்றீல்ல.. விக்னேஷ் ரொம்ப வருஷமா நம்ம டீம் தான.. அவனும் தான் இன்னிக்கு வருல.. அவனைப்பத்தி நீ ஏன் எதுவும் கேக்கல.. முதல்ல அவன் இல்லாததே உனக்கு தெரியலையில.. ” என பிரியா சொல்ல அப்பொழுது தான் அவன் இல்லாததை கவனித்த ஆதிரா எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்க பிரியாவுக்கு அவளை பார்க்கவே பாவமாக இருந்தது.

“ சரி சரி விடு.. எம்.டி வராருல.. அவரு முதல்ல வரட்டும்.. அதுக்கு அப்புறம் ஆர்யனை பத்தி யோசிக்கலாம்.. “ என பிரியா சொல்ல ஆதிராவும் ஆர்யனின் நினைப்பை ஒதுக்கிவிட்டு புது எம். டிக்காக காத்துகொண்டு இருக்க அந்த பெரிய படகு போல் இருந்த கார் உள்ளே வந்தது.

அனைவரும் ஆர்வமாய் காரையே பார்க்க காரில் இருந்து முதலில் இறங்கிய கவின் பின்னாடி கார் கதவை திறந்துவிட சில வினாடி கழித்து கீழே இறங்கிய ஆர்யனை பார்த்து ஆதிரா அதிர்ந்து போய் நிற்க பிரியாவின் நிலைமையும் அதேதான். மற்றவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஆர்யன் அழுத்தமான காலடிகளை எடுத்து வைத்து நடந்து வர எல்லாரும் அவனுக்கு வணக்கம் சொல்லிக்கொண்டு இருக்க அவனும் பதிலுக்கு தலை அசைத்துக்கொண்டே வந்தான்.

ஆதிரா அருகில் வரும் பொழுது அவளது கை தானாக வணக்கம் சொல்ல அவனோ அவளை கொஞ்சம்கூட சட்டை செய்யாமல் அவளை கடந்து செல்ல மேலும் அதிர்ந்து போனாள் ஆதிரா.

ஆதிரா அதிர்ச்சியில் சிலையென நின்றிருக்க பிரியா அவளின் கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றாள். அவர்களது இடத்திற்கு வந்ததும் ஆதிராவை அமர வைத்தவள் வாட்டர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டியவள்,

” இந்தா இதை குடி.. ” என சொல்ல எதுவும் பேசாமல் அதை வாங்கி குடித்தாள் ஆதிரா.

சேரில் உட்கார்ந்த பிரியா, ” உனக்கு இது எவ்ளோ பெரிய ஷாக்கா இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது.. ஏன் எனக்கும்கூட இது ஷாக்கா தான் இருக்கு..  கம்பெனியோட எம். டி எதுக்கு ஸ்டாப்பா வரணும்.. அதுவும் நேத்து ஸ்டாப்பா வந்தவரு இன்னிக்கு திடிர்னு எம். டி யா வந்துருக்காரு.. என்னவோ போ.. நீ இதை எல்லாம் யோசிக்காதடி.. பிரீயா விடு.. ” என சொல்ல,

” இல்லடி.. ஆர்யன் என்னதான் அவரு செல்வா இல்லன்னு சொன்னாலும் என் மனசுக்கு என்னமோ அவருதான் செல்வா அப்படினு தோணிட்டே இருந்துச்சு.. ஆனா இப்போ ஆர்யன் இவ்ளோ பெரிய கம்பெனியோட எம். டி அப்படினு தெரியறப்ப என்னால அதை ஏத்துக்கவே முடியலடி.. அப்போ கண்டிப்பா இவரு செல்வாவா இருக்க வாய்ப்பு இல்லதான.. ” என ஆதிரா அழுதுகொண்டே சொல்ல அவளின் மனநிலையை பிரியாவால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.

” ஆதிரா நான் இப்படி கேக்கறேன்னு நீ தப்பா நினைக்காத.. நீசெல்வாவை லவ் பண்றியா.. ” என பிரியா தயக்கத்துடன் கேட்க,

” தெரியலடி.. ஆனா இல்லன்னு என்னால சொல்ல முடியல.. என்னை வேற எதுவும் கேக்காத ப்ளீஸ்… ” என ஆதிரா அழ பிரியா அதற்குமேல் எதுவும் கேக்காமல் அமைதியானாள்.

சக்தி அங்கு வர அவனை பார்த்த பிரியா, ” டேய் என்னடா நடக்குது இங்க.. ஆர்யன் தான் எம். டியா.. உனக்கு இதைப்பத்தி எதுவும் முன்னாடியே தெரியுமாடா.. ” என கேட்க,

” ஐயயோ.. எனக்கு எல்லாம் எதுவும் தெரியாது.. நேத்து நைட் பார்ட்டியில கூட ஒன்னா தான் குடிச்சுட்டு இருந்தோம்.. அப்போகூட என்கிட்ட எதுவும் சொல்லுல.. விஷ்ணுகிட்ட கேட்டா அவரும் எனக்கு எதுவும் தெரியாது.. எனக்கும் இது ஷாக்கா தான் இருக்குனு சொல்றாரு.. ஆர்யன் ஏன் இப்படி எல்லாம் பண்ணுனாருன்னு அவரே சொன்னாத்தான் அதுக்கு ஆன்ஸர் கிடைக்கும்.. ” என்றான் சக்தி.

” என்னடா நீ.. உன் கழுகு கண்ணுல இருந்து எதுவும் தப்பாதுன்னு இவ்ளோ நாளும் நான் நினைச்சுட்டு இருந்தேன்.. நீ என்னடா இப்படி சொல்ற.. என்னை ஏமாத்திட்டியேடா..” என பிரியா சோகமாய் சொல்ல,

” அடிப்பாவி.. அதுக்கு ஏன்டி இப்படி ஏமாத்திட்டேன் அது இதுன்னு எல்லாம் சொல்ற.. யாராவது பாதி மட்டும் கேட்டு என்னை தப்பா நினைச்சற போறாங்க.. ஆளை விடு.. நான் கிளம்பறேன்..  ” என சக்தி சோகமாய் சொல்ல அவனை பார்த்து சிரித்தாள் பிரியா.

” சரிடா நான் சும்மாதான் கலாயிச்சேன்.. ஆமா விக்னேஷ் எங்க ஆளை காணோம்.. நேத்து பார்ட்டியிலயும் கூட விக்னேஷை காணோம்.. என்னாச்சு அவனுக்கு… உடம்பு எதுவும் சரி இல்லையா.. ” என பிரியா கேட்க,

” என்னனு எனக்கும் தெரியல.. நேத்து பார்ட்டியில இருந்து பாதியிலயே கிளம்பிட்டான்.. மறுபடியும் போன் பண்ணுனா போன் எடுக்கவும் இல்ல.. சரி இன்னிக்கு வந்து கேட்டுக்கலாம்னு  நினைச்சுட்டு இருந்தேன்.. இங்க வந்து பார்த்தா அவன் இன்னிக்கு லீவ் சொல்லிருக்கான்.. ” என்றான் சக்தி.

சக்தி அப்பொழுது தான் ஆதிராவை கவனித்தவன், ” என்னாச்சு ஆதிரா.. நீ ஏன் ஒரு மாதிரி இருக்க.. ஆமா விக்னேஷ் இன்னிக்கு உன்கிட்ட ப்ரொபோஸ் பண்றதா என்கிட்ட சொல்லிட்டு இருந்தான்… ப்ரொபோஸ் பண்ணிட்டான்னா.. அதான் நீ ஒரு மாதிரி இருக்கியா.. ” என சொல்ல அதை கேட்ட பிரியாவும் ஆதிராவும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தனர்.

” என்ன சக்தி சொல்ற.. விக்னேஷ் என்னை லவ் பண்றான்னா.. ” என ஆதிரா நம்ப முடியாமல் கேட்க,

” ஆமா ஆதிரா.. நாள் கணக்கா மாச கணக்கா எல்லாம் இல்ல.. வருஷக்கணக்கா அவன் உன்னை லவ் பண்ணிட்டு இருக்கான்.. அப்போ அவன் உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணுலயே.. உன் பர்த்டே அன்னிக்கு கண்டிப்பா உன்கிட்ட சொல்றதா இருந்தான்னே.. நேத்துகூட என்கிட்ட சொல்லிட்டு இருந்தான்.. ஆனாஏன் உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணுல.. இன்னிக்கு கம்பெனிக்கும் வருல.. என்னவா இருக்கும்னு ஒன்னும் புரியலயே.. சரி நான் அப்புறம் வந்து பேசறேன்.. ” என்ற சக்தி அங்கிருந்து செல்ல ஆதிரா கவலையுடன் பிரியாவை பார்த்தாள்.

” ஹேய் என்னடி இது புது பிரச்சனை.. விக்னேஷ்கு எப்படி இப்படி ஒரு தாட் வந்துச்சு.. அவனை நான் நல்ல பிரண்ட்டா நினச்சு தான் பேசுனேன்.. கடைசியில அவனும் மத்தவங்க மாதிரி லவ்னு சொல்லிட்டான்.. விக்னேஷ் மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்கும்னு நான் நினைக்கவே இல்லடி.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. ” என ஆதிரா அழ,

” ஹேய் என்னடி நீ.. இதுக்கு ஏன் அழுதுட்டு இருக்க.. அதான் அவன் இன்னும் உனக்கு ப்ரொபோஸ் பண்ணுலை யில.. அப்புறம் ஏன் நீ டென்ஷன் ஆகற.. ப்ரொபோஸ் பண்ணுனா அதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்.. சரி நீ வா நாம போய் காபி குடிச்சுட்டு வரலாம்.. ” என பிரியா சொல்ல இருவரும் எழுந்து கேன்டீன் சென்றனர்.

ஆர்யன் கேமரா வழியே ஆதிராவை கண்காணித்து கொண்டு இருந்தவன் சிவா உள்ளே வரவும் அவசரம் அவசரமாய் லேப்டாப்பை மூடி வைத்தான். உள்ளே வந்த சிவா,

“ சார் எல்லா அரேன்ஜ்மெண்ட்ஸும் முடிஞ்சுது.. இன்னும் பத்து நிமிஷத்துல எல்லாரும் கான்பிரன்ஸ் ஹாலுக்கு வந்துருவாங்க.. “ என சொல்ல,

“ ம்ம் ஓகே.. எல்லாரும் வந்ததுக்கு அப்புறம் வந்து என்னை கூப்பிடு.. இப்போ கிளம்பு.. “ என்றான் ஆர்யன்.

கவின் கிளம்பாமல் இன்னும் அங்கேயே நின்றிருக்க அவனை பார்த்த ஆர்யன், “ என்னடா.. இன்னும் ஏன் நின்னுட்டு இருக்க.. எதாவது சொல்லனுமா.. “ என கேட்க,

“ சார் அது வந்து.. மித்ரா மேடம் உங்களை பார்க்க வந்துருக்காங்க… “ என கவின் தயங்கி தயங்கி சொல்ல கதவை திறந்து கொண்டு கோபமாய் உள்ளே வந்தாள் மித்ரா.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.