மித்ரன் மதி இருவரும் விழியோடு விழிகலந்து பார்த்து கொண்டிருக்க முதலில் தன்னிலை உணர்ந்தது மதிதான்…
மணி சத்தத்தையும் பூக்கள் தங்கள் மீது பறந்து வந்து விழுந்ததை பார்த்து அதிர்ந்தவள் “என்ன நடக்குது…”என குழப்பம்மாய் தனக்குள் சொல்லிக்கொண்டாள்..
மித்ரனும் தன்னிலை உணர்ந்தவன் தங்களுக்கு மாலையை தூக்கிப்போட்டவர்களை “ஸ்டுபிட்..”என்று திட்டிக்கொண்டே மாலையை கழட்டியவன் அதை தூக்கிப்போட போக மதி தடுத்தாள்..
“மித்து கோவில்ல கிடைச்ச மாலை இது சாமியோட ஆசீர்வாதம் தூக்கிபோடக்கூடாது….”என்றவள் அவன் கையில் இருந்து மாலையை வாங்கிக்கொண்டாள்..
இருவரும் கோவிலை சுற்றி வந்து அம்மன் சந்நிதானத்திற்குள் சென்றனர்..
பூசாரி வந்தவர் மதியை பார்த்துவிட்டு புன்னகைத்தவர் அன்பாய் “வாம்மா மதி…”என்றவர் அதன் பின்தான் மித்ரனை பார்த்துவிட்டு வயதில் சின்னவன் என்று பாராமல் கையெடுத்து வணங்கியவர் “வாங்க ஐயா…”என்றார்.
அவர் கொடுத்த மரியாதை மித்ரனுக்கு பிடிக்கவில்லை… இதழ் சுழித்தவன் “இந்த ஐயா எல்லாம் வேண்டாம்.. மித்ரன்னு கூப்பிடுங்க இல்ல தம்பின்னு கூப்பிடுங்க…”என்றான்.
“சரிங்க தம்பி…”என்றவர் மதி மித்ரன் பெயருக்கு அர்ச்சனை செய்ய சொல்ல உள்ளே சென்று ராஜ அலங்காரத்தில் இருந்த அம்மனுக்கு பூஜை செய்ய தொடங்கினார்..
மதி மித்ரனை பார்க்க அவன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.
“மித்து சாமி கும்பிடு…”என சொல்ல முறைத்தவன் “நான் கோவிலுக்கு வந்ததே பெரிய விஷயம் சாமி எல்லாம் கும்பிட முடியாது…”என்றான்..
இதற்கு மேல் அவனை கட்டாயப்படுத்தி எதுவும் செய்ய வைக்க முடியாது என்பதை உணர்ந்த மதி அதன் பின் அவனிடம் எதுவும் சொல்லவில்லை..
விழிமூடி சாமி கும்பிட்டாள்..வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மித்ரன் அவள் பக்கம் திரும்பி பார்த்தான்..
விழிமூடி நின்றிருந்த அவள் இதழ்கள் எதையோ முனுமுனுக்கவும் கண்கள் சுருக்கி பார்த்தவன் பூசாரி வரவும் கண்டுகொள்ளாதவனாய் நின்றுகொண்டான்
மதி விழிதிறந்தவள் பூசாரி நீட்டிய ஆரத்தியை தொட்டு கும்பிட்டு விட்டு எப்படியும் மித்ரன் கும்பிட மாட்டான் என்று அவளே கைகள் குவித்து தொட்டு அவன் பக்கம் திருப்பியவள் மித்ரன் தலையை பின்னுக்கு இழுத்துகொண்டு “என்ன?…”என்று கேட்க அவன் பக்கம் காட்டினாள்… இதை அவன் செய்ய விட்டதே பெரிய விஷயம்.
பூசாரி அதை பார்த்து சிரித்தவர் “ஜமீன்ல எல்லாருக்கும் கடவுள் பக்தி அதிகமா இருக்கும் தம்பி அதுக்கு நேர்மாறா இருக்காரு…”என சொல்ல மித்ரன் முகம் இறுகியது..
“நேர்மாறா இருக்கன்னா என்ன என்னை பார்த்தா ஜமீன் மாதிரி தெரியலயா?…”
அவன் கோபமாய் கேட்க பூசாரி பதறியவர் “ஐயோ தம்பி நான் அந்தமாதிரி எதுவும் சொல்லுல… நீங்க தப்பா எடுத்துக்காதீங்க…”என்றார்..
அவன் பிரச்சனை செய்ய தயாராகிவிட்டதை உனர்ந்த மதி அவரிடமிருந்து அர்ச்சனை கூடையை வாங்கிக்கொண்டவள் “நாங்க வர்றோம் பூசாரி ஐயா…”என்றவள் “மித்து போலாம்…”அவன் கைபிடித்தாள்..
மித்ரன் வராமல் பூசாரியை முறைத்து பார்க்க ‘மித்து வா போலாம்… வா…”என்றவள் கிட்டதட்ட அவனை கட்டாயப்படுத்தி அங்கிருந்து இழுத்து சென்றாள்..
கார் பக்கத்தில் சென்றதும் மித்ரன் கோபமாய் அவள் கரத்தை உதறியவன் “சீக்கிரம் கார்ல ஏறு…”என சொன்னவன் முன்னாடி ஏறிக்கொள்ள மதி பெருமூச்சு இழுத்துவிட்டவள் முன்னாடி அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
அவளை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டவன் மதி காரில் இருந்து இறங்கிய அடுத்தநொடி அங்கிருந்து காரை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்
“பூசாரி சொன்னது அவனை ரொம்பவே கோபப்படுத்திருச்சு போல… இவன் ஏன் ஜமீன்ப்பத்தி பேசுனாலே கோபப்படறான்….”என தனக்குள் சொல்லிக்கொண்டவள் அவுட் ஹவுஸ் நோக்கி செல்லப்போக “மதி…”என்ற குரல் அவளை தடுத்தது.
மதி திரும்பி பார்க்க ரத்தினதேவி வீட்டிற்குள் இருந்து வெளியில் வந்து கொண்டிருந்தார்.
அவரை பார்த்து மென்னகை சிந்தியவள் அவர் அருகில் வந்ததும் ‘இந்தாங்க பாட்டி பிரசாதம் எடுத்துக்கோங்க…”என்று சொல்லி அர்ச்சனை கூடையை நீட்ட அவரும் அதிலிருந்து திருநீறு எடுத்து நெற்றியில் வைத்துகொண்டவர் “மித்ரன் எங்க மதி?…”என கேட்க
மித்ரன் கோபத்தில் சென்றுவிட்டான் என்பதை மறைத்து “பிரண்ட்ஸ் பார்க்கறேன்னு என்னை விட்டுட்டு போயிட்டான்…”என்றாள்.
“சரி…”என்றவர் அவள் கையில் இருந்த மாலையை பார்த்துவிட்டு “இதென்ன மாலை?…”என கேட்க
“இதுவா…”என்றவள் நடந்ததை அவளிடம் சொல்ல ரத்தினதேவியின் முகம் சந்தோசத்தில் மலர்ந்தது..
“கடவுளே இவங்கள ஆசீர்வாதம் பண்ணியாச்சு இனி சீக்கிரம் இவங்க கல்யாணத்தை நடத்தி முடிச்சிடணும்…”என அவர் தனக்குள் சொல்லிக்கொண்டவர் மதி “சரி நான் அவுட் ஹவுஸ் போறேன்…”என சொல்லவும் தலையசைத்தார்…
******************
செழியன் அவனுடைய அறையில் படித்து கொண்டிருந்தான்…
அந்த ஜமீன்லயே நன்றாக படிப்பவர்கள் என்றால் அது மதியும் செழியனும்தான்..
மதிகூட செழியன் அளவுக்கு படிக்க மாட்டாள்… படிப்ஸ் என்றால் அது செழியன்தான்..
புக் எடுத்துவைத்து நாளை நடைபெறவிருக்கும் டெஸ்ட்க்கு படித்து கொண்டிருந்தான்..
அப்பொழுது கதவு திறக்கபட பூனை போல் உள்ளே வந்தாள் இசை… படிப்பில் கவனமாக இருந்தவன் அவள் வந்ததை கவனிக்கவில்லை..
“எப்போப்பாரு புக்கும் கையுமாவே இருக்கறது… இவனை போய் எனக்கு எப்படிதான் பிடிச்சுதோ…”புலம்பலாக சொல்லிக்கொண்டவள் அவன் அருகில் சென்று தோளில் கைவைத்தாள்..
அதில் அவன் அதிர்ந்து திரும்பி பார்க்க அந்த கேப்பில் அவன் கையில் இருந்த புக்கை பிடுங்கி டேபிள் மீது வைத்தவள் அவன் மடியில் அமர்ந்துகொண்டாள்..
“ஹேய் என்ன பன்ற.. எழுந்திரி…’
“முடியாது…’என்றவள் அவன் கழுத்தில் தன்னுடைய கரத்தை மாலையாக கோர்த்து கொண்டவள் அவனை பார்த்து குறும்பாய் கண் சிமிட்டினாள்..
“இசை…”
‘என்னோட பேருதான்… ”
“பச்…”சலித்துகொண்டவன் “ஏண்டி உனக்கு வேற வேலையே இல்லயா.. படிச்சுட்டு இருக்கேன்ல எதுக்கு வந்து டிஸ்டர்ப் பன்ற…”என்றான்.
“உன்னை டிஸ்டர்ப் பன்றதுதான என் வேலையே…”என்றவள் “ரொமான்ஸ் பண்ணலாம் மாமா… கொஞ்சமாச்சும் என்னை கவனிடா…”என்றாள்.
“ஹேய்.. நீ இப்டி என் பின்னாடி சுத்தறது மட்டும் உன் அம்மாவுக்கு தெரிஞ்சுதுன்னு வச்சுக்கோ…”என அவன் முடிக்கவில்லை “தெரிஞ்சுதுன்னா என்ன?…”என்றாள்..
“தெரிஞ்சுதுன்னா என்னவா… ஹேய் உன் அம்மாவுக்கும் என் அம்மாவுக்கும் சுத்தமா செட் ஆகாது…”
“சோ வாட்… எனக்கு உன்னை பிடிக்குமே…”
“உன் அம்மாகிட்ட முதல்ல உன்னைப்பத்தி போட்டு கொடுக்கணும்…”
‘சொல்லு எனக்கென்ன பயமா…என்ன பண்ணுவாங்க திட்டுவாங்க அப்பறம் அடிப்பாங்க அவ்வளவுதான…. ”
“என்னடி சாதாரணம்மா அவ்வளவுதானன்னு சொல்ற…”
“ம்ம் ஆமா… அடிக்கெல்லாம் பயந்தா பிடிச்ச லைப்பை வாழ முடியுமா… இங்க பாருடா மாமா ஒரு லைப்தான் ஒரு லவ்தான் அது பிடிச்சவங்ககூடதான்…எனக்கு எப்படி என்னோட லைப் இருக்க போகுதுங்கற ஐடியா எல்லாம் இல்ல ஆனா என்னோட லைப்பை உன்கூடதான் நான் வாழப்போறேன்னு கிளாரிட்டி எனக்கு இருக்கு…”என்றாள்..
இந்த வயதில் இவ்வளவு தெளிவாக பேசுபவளை விழிகள் விரித்து ஆச்சிரியம்மாய் பார்த்தான் செழியன்.
அவன் பார்வையில் சிரித்தவள் “என்ன சைட் அடிக்கறியா…தப்பில்ல சைட் அடிச்சுக்கோ….”என்றவள் அவன் முகம் அருகில் தன் முகத்தை கொண்டு சென்றவள் மூக்கோடு மூக்கு உரச செழியன் விழி மூடிக்கொண்டான்..
இருவரும் நெருக்கத்தில் தன்னை மறந்து இருக்க “செழியா…’என்ற அர்ச்சனாவின் குரல்தான் இருவரையும் தன்னிலை உணர செய்தது..
அம்மாவின் குரல் கேட்டதும் செழியன் பதறியவன் “ஹேய் எழுந்திரி…”என சொல்ல
இசை இதழ் சுழித்து மறுத்து தலையசைத்தவள் “முடியாது…”என்றாள்..
“இசை விளையாடத அம்மா வர்றாங்க.. எழுந்திரி…”
‘முடியாது போடா… ”
“இசை…”
“ஓகே ஒரு முத்தம் கொடு எழுந்திடறேன்…”
“முத்தம்மா… முடியாது…”
“அப்போ என்னாலயும் எழுந்திரிக்க முடியாது..”
“பிடிவாதம் பிடிக்காத இசை…”
‘அதையேதான் நானும் சொல்றேன். பிடிவாதம் பிடிக்காம முத்தம் கொடு…”
அர்ச்சனா வேறு “செழியா.. கண்ணா…”என்று அவன் பெயரை ஏலம் போட்டுகொண்டே அவனது அறையை நெருங்கினார்.
முத்தம் கொடுக்காமல் எழமாட்டாள் என்று உணர்ந்த செழியன் வேறு வழியில்லாமல் அவள் கரம் பிடித்து அதில் இதழ் ஒற்றினான்..
இசை முகம் சுழித்தவள் “என்ன இது?…”என கேட்க
“நீதானடி முத்தம் கொடுன்னு கேட்ட…”
‘இதுதான் முத்தம்மா… ”
“ஆமா… கொடுத்துட்டேன்ல…”என்றவன் அவள் இடையில் கைவைத்து எழுப்பிவிடவும் அர்ச்சனா உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.. நல்லவேளையாக அவர் அதை பார்க்கவில்லை..
உள்ளே வந்தவரின் பார்வை இசை மீது அழுத்தம்மாய் பதிந்தது..
‘இந்த வாயாடி இங்க என்ன பன்றா…”என தனக்குள் சொல்லிக்கொண்டவர் இசையிடம் “நீ இங்க என்ன பன்ற?…”என்று கேட்க
“ஏன் நான் இங்க வரக்கூடாதா?…”அவரையே திருப்பி கேள்வி கேட்டார்
“இது என் பையன் ரூம்….”
“நான் மட்டும் என்ன என்னோட ரூம்ன்னா சொன்னேன்…”
“ரொம்ப வாய் பேசாத…”
“இல்லயே கம்மியாதான் பேசறேன்….”
“ஹேய்…”
அம்மா டென்ஷனாவதை பார்த்து செழியன் “இசை நீ கேட்டது கிடைச்சிருச்சுல்ல கிளம்பு… “என்றான்
இசை கண்கள் உருட்டி “போடி…”என்றான் சைகையில் கெஞ்சலாக
“சரியான அம்மா பிள்ளை…”என முனுமுனுத்தபடி இசை அங்கிருந்து சென்றாள்…அவள் சென்றபின் தான் செழியனால் நிம்மதியாக முடிந்தது..
அர்ச்சனா “அவ எதுக்கு செழியா இங்க வந்தா?…”என கேட்க
“ம்ம் ரொமான்ஸ் பண்ண…”உளறியவன் நல்லவேளை மெதுவாக சொன்னது அர்ச்சனாவுக்கு கேட்கவில்லை..
“என்ன சொன்ன?…”
“நத்திங்ம்மா… அவ பென் வேணும்ன்னு சொல்லி வந்தா கொடுத்து அனுப்புனேன்….”
“கையில அவ பேனா எடுத்துட்டு போன மாதிரி தெரியலயே…”
“அம்மா நீங்க அவளை கவனிக்காம இருந்திருப்பீங்க…”என்று சொல்லி அவளை சமாளித்தவன் “ஓகே நீங்க எதுக்கு இங்க வந்திங்க?…”என்று கேட்க
“ஏன் வரக்கூடாதா… அந்த இசை எல்லாம் வர்றா நான் வரக்கூடாதா…”என்றார்
“ஐயோ அம்மா நான் அப்படி சொல்லுல…”
“சரி சரி… உன்னை சாப்பிட கூப்பிடலாம்ன்னு வந்தேன்… வா சாப்பிடலாம்…”என்றவர் ஏதோ அவன் சின்ன பையன் போல் அவன் தாடை பற்றி செல்லம் கொஞ்சினார்
“அம்மா…”அவன் சிணுங்க
அர்ச்சனா சிரித்தவர் “சரி வா…”என சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து செல்ல செழியன் “அம்மாவுக்கும் இசைக்கும் செட்டே ஆகமாட்டேங்குது… ஒருவேளை பியூட்சர்ல இசைகூட மேரேஜ் நடந்துச்சுன்னா அவங்க ரிலேஷன்ஷிப் எப்படி இருக்கும்…”என்று யோசித்து பார்க்க அவனுக்கு அவனுடைய நிலைமை எப்படி இருக்கும் என்பதுதான் நினைவில் வந்து போனது…
தலையை உலுக்கிக்கொண்டவன் “அப்படி கல்யாணம் மட்டும் நடந்துச்சு செழியா உன் நிலைமைதான் அவ்வளவுதான்… அந்த இசையை உன் பக்கம் வராம பார்த்துக்கோடா.. அதுதான் உனக்கு நல்லது….”என புலம்பலாக சொல்லிக்கொண்டவன் பெருமூச்சு இழுத்துவிட்டான்.( நினைச்சு பார்க்கும் போதே இப்படின்னா நடக்கும்போது உனக்கு இருக்குடா செழியா….)
No comments yet.