மித்ரன் பார்வை மதி உதடுக்கு மேலே இருந்த மச்சத்தின் மீது பதிந்தது..
சில நொடிகள்தான் அவன் கையை எடுக்க மதி கீழே விழப்போனவள் மித்ரன் தோளில் வைத்திருந்த கையை இறுக பிடிக்க அதில் அவள் நகம் கீறியதில் அவன் உடம்பில் காயம் ஏற்பட்டது..
வலியில் முகம் சுழித்தவன் அவள் கரத்தை தட்டிவிட மதி கீழே விழுந்தவள் “அம்மா…”என்று அழறினாள்..
மித்ரன் அவளை கண்டுகொள்ளாதவனாய் கண்ணாடியில் தன்னுடைய உடம்பில் ஏற்பட்ட காயத்தை ஆராய்ந்தான்..
கீழே விழுந்தவள் தட்டு தடுமாறி எழுந்து நின்றவள் தன்னை தள்ளிவிட்டவனை முறைத்து பார்க்க அவள் பக்கம் திரும்பி பார்த்தவனும் முறைத்தான்.
“எதுக்குடி கீறி வச்ச?…”என அவன் கேட்க
“நீ எதுக்கு மித்து என்னை தள்ளிவிட்ட…”
“என்னடி என்னையே கேள்வி கேட்கிற…உன்னை…’
மதி ஒரு அடி பின்னாடி எடுத்து வைத்தவள் “ஏன் மித்து டெய்லியும் என்னை திட்டற அடிக்கிற உனக்கு போர் அடிக்காதா?…”என்றாள்.
“ஓ போர் அடிச்சுதுன்னா உன்னை விட்ருவேன்னு நினைச்சியா…. “என்றவன் அவளை அழுத்தம்மாய் பார்த்து “எனக்கு நீ எப்பவும் போர் அடிக்கமாட்ட…”என்றான்..
அதில்மதி அவனையே பார்த்தவள் “ஓகே மித்து உனக்கு இப்படி என்னை டார்ச்சர் பன்றதுதான் பிடிச்சிருக்கான்னா டார்ச்சர் பண்ணு… நீ எவ்வளவு டார்ச்சர் பண்ணுனாலும் நான் தாங்கிப்பேன்…”என்றாள்..
அவள் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவனை அவளை பார்க்க செய்தது..
மதியே அவனை நெருங்கி சென்றவள் “மித்து ஷேவிங் பண்ணாத உனக்கு நல்லா இருக்காது.. தாடி இருக்கிறதுதான் உனக்கு அழகா இருக்கு… எனக்கு தெரியும் நான் சொன்னா செய்யமாட்டேன்னு இருந்தாலும் சொல்லணும்ன்னு தோணுச்சு…”என்றவள் அங்கிருந்து செல்ல போய் திரும்பி பார்த்து
“உனக்கு ஜுஸ் கொண்டு வந்தேன் மறக்காம குடிச்சிடு…”என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்..
அவள் சென்றதும் “இவ சொன்னா நான் கேட்கணுமா…”என்ற மித்ரன் ஷேவிங் கிட்டை எடுத்தவன் ஷேவிங் பண்ண சென்று பின் என்ன நினைத்தானோ முகத்தை கழுவினான்..
கண்ணாடியில் தன்னை பார்க்க அவனுக்குமே தாடியில் பார்க்க தான் ஹாண்ட்ஸம்மாக இருப்பது போல் தோன்றவும்
“ம்ம் அவ சொன்னாங்கறதுக்காக எல்லாம் இல்ல எனக்கு பிடிச்சிருக்கிறதால நான் ஷேவிங் பண்ணல…”என தன்னைத்தானே சமாளித்து கொண்டான்..
***************
லேகா தன்னுடைய அறையில் டிரஸ் எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருக்க நந்தா அவருடைய அறைக்கு வந்தான்.
வந்தவன் கதவு பக்கத்திலேயே நின்றுவிட்டான்..
காலடி சத்தம் கேட்டு திரும்பி பார்த்த லேகா தன்னுடைய மகனை பார்த்ததும் கோபம்மாய் முகத்தை திருப்பி கொண்டார்
அதில் நந்தா முகம் வாடியது… அன்று அவன் ஆளவந்தானிடம் மாட்டி திட்டு வாங்கியதில் இருந்து லேகா அவனுடன் பேசுவதில்லை..
இப்பொழுதுகூட தன்னை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் அவர்பாட்டுக்கு இருக்கவும் நந்தாவுக்கு கஷ்டமாக இருந்தது.
“அம்மா…”என்றவன் அறைக்குள் வந்தான்..
லேகா திரும்பி பார்க்காமல் தன்னுடைய வேலையை தொடர அவர் பக்கத்தில் சென்றவன் “என்மேல கோபமா இருக்கீங்களா… பேச மாட்டிங்களா?…’என்றான்..
“நான் எதுக்கு உன்கிட்ட பேசணும் நான்தான் உனக்கு முக்கியம்மில்லையே…’
“அம்மா இப்படியெல்லாம் பேசாதீங்க எனக்கு கஷ்டமா இருக்கு…”என்றவன் அவர் கைபிடித்து தன்னை பார்க்க செய்து “சாரிம்மா…”என்றான்….
லேகா கண்கள் சுருக்கி அவனை பார்த்தவர் “இந்த சாரி எதுக்கு நந்தா?…”என கேட்க
அவன் கொஞ்சம்கூட யோசிக்கவில்லை “என் அம்மா எனக்கு வேணுங்கறதுக்காக…நீங்கதானம்மா சொல்லிருக்கீங்க தப்பே செய்யலன்னாலும் ஒருத்தர் நமக்கு முக்கியம்மானவங்கன்னா அவங்க உறவு நமக்கு வேனும்ன்னா சாரி கேட்கனும்ன்னு…நான் தப்பே பண்ணிருக்கேன் அப்போ கண்டிப்பா சாரி கேட்கணும்ல… சாரிம்மா…”என்றான்.
தான் சொல்லிக்கொடுத்ததை தனக்கே திருப்பி சொல்பவனை விழிகள் விரித்து பார்த்தவர் “நீ பன்றது தப்புன்னு தெரியுதுல்ல அப்பறம் எதுக்கு நந்தா அதையே பன்ற….”என்றார்.
“இனி நான் வீட்ல ட்ரிங்ஸ் பண்ண மாட்டேன்ம்மா… பிராமிஸ்…”என்றவன் தன்னுடைய தலையில் கைவைத்து சாரி சொன்னான்..
“அப்போகூட குடிக்க மாட்டேன்னு பிராமிஸ் பண்ண மாட்டா வீட்டுல வச்சு குடிக்க மாட்டேன்னுதான் சொல்வ?…”
லேகா மிரட்டலாக கேட்க “ஹிஹி…”சிரித்து சமாளிக்க பார்த்தவன் “ஒரேடியா திருந்த முடியாதும்மா…”என்றான்..
“அப்போ அந்த மித்ரன்கூட சேராம இருக்கலாம்ல… அந்த அர்ச்சனா நீதான் மித்ரனை கெடுகிறதா சொல்லிட்டு இருக்கா….”
“அம்மா மித்து என்னோட பிரண்ட் அவனை என்னால விட்டு கொடுக்க முடியாது…”என்றவன் லேகா அழுத்தம்மாய் பார்க்கவும் “சாரிம்மா மித்னை விட்டு கொடுக்க முடியாது…”என்றான்.
உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தன் மகனை நினைத்து உள்ளுக்குள் அவருக்கு சந்தோசமாகதான் இருக்க பெருமூச்சு இழுத்துவிட்டவர் “சரி என்னம்மோ பண்ணு போ…’என சொல்ல
நந்தா சிரித்தவன் “தேங்க்ஸ் அம்மா…”என்றவன் பின்னாடி இருந்து அவரை அணைத்துகொண்டு “யூ ஆர் சோ ஸ்வீட்…”என்று அவர் கன்னம் கிள்ளி செல்லம் கொஞ்ச லேகா இதழில் புன்னகை தோன்ற ‘சும்மா இருடா…”என அவன் கரத்தை தட்டிவிட்டார்..
*******************
நிலாமகள் வானில் உலா வந்து கொண்டிருந்த இரவு நேரம்..
எல்லாரும் அவரவர் அறைக்கு தூங்க சென்றிருந்தனர்…
அர்ச்சனா கண்ணாடி முன் அமர்ந்து தலைவாரி கொண்டிருந்தார்.
அசோகன் போன் பார்த்தபடி பெட்டில் அமர்ந்து இருந்தவர் அவர் பக்கம் திரும்பி பார்த்தார்
“அர்ச்சனா தூங்க போற நேரத்தில என்ன மேக்கப்?…”என்று கேட்க
அவரோ திரும்பி கூட பார்க்காமல் கண்ணாடியில் தன்னை பார்த்துகொண்டு “ம்ம் நான் தூங்கும் போதுகூட அழகா இருக்கனும்…”என சொன்னவர் டிரஸிங் டேபிள் மீது இருந்த க்ரீம்மை எடுத்து முகத்தில் அப்ளை செய்தார்..
“அர்ச்சனா…”
“ம்ம் கேட்குது சொல்லுங்க…”
“அந்த மருந்து கம்பனிக்காரங்க லோட் கொண்டு வந்து இறக்க ஆரமிச்சுட்டாங்க இனி டிஸ்ட்ருடியூப்ட் பண்ண வேண்டியதுதான்….இனி நமக்கு கமிஷனா கோடி கோடியா வரப்போகுது…”என்றார்.
பணம் என்றதும் அர்ச்சனா திரும்பி பார்த்தவர் சிரித்து “நமக்கு நல்லநேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சுங்க அதான் எல்லாம் நல்லதாவே நடக்குது… இனி பாருங்க நான் நினைச்சது ஆசைப்பட்டது எல்லாம் நடக்கும்….”என்றார் நம்பிக்கையாய்
“நடந்தா சரி….”என்றவர் நிறுத்தி “நீ நல்லநேரம்ன்னு சொன்னதும்தான் நியாபகம் வந்துச்சு அப்பா அகோராவை பார்க்க போயிருக்காரு…”என அசோகன் சொல்ல அர்ச்சனாவோ குழப்பத்துடன் “அகோராவா அது யாரு?…”என்றார்.
“அதான் நம்ம கோவில் மடத்துல ஒரு அகோரி தங்கி இருப்பார்ல அவர்தான்… சில வருஷத்துக்கு முன்னாடி அவர் மடத்துல இருந்து பக்கத்தில இருக்க ஒரு மலைகாட்டுக்கு போயிட்டாரு… என்னன்னு தெரியல இன்னிக்கு அப்பா அவரை பார்க்க போயிருக்காரு…”
அர்ச்சனா “உங்க அப்பா எதுக்கு அவரை பார்க்க போனாரு?…”என கேட்க
“தெரியல… டிரைவர்தான் அந்த காட்டுக்கு அப்பா போனதா சொன்னான் அதை வச்சுதான் நான் அகோராவை பார்க்க போனதையே கண்டுபிடிச்சேன்… அந்த அகோரா ரொம்ப சக்தி வாய்ந்தவர் அர்ச்சனா….”
அசோகன் சொன்னதை கேட்டு கண்கள் சுருக்கிய அர்ச்சனா “இந்த மாமா சும்மா எல்லாம் யாரையும் பார்க்க போறவர் கிடையாது.. எதுக்காக போயிருப்பார்…”என தனக்குள் சொல்லிக்கொண்டவர் அதைப்பற்றி யோசித்தார்..
அதேநேரம் ஆளவந்தானும் அவருடைய அறையில் அகோரா தன்னிடம் சொன்னதை பற்றிதான் யோசித்து கொண்டிருந்தார்..
ரத்தினதேவி அறைக்கு வந்தவர் ஆளவந்தான் தூங்காமல் யோசித்து கொண்டிருப்பதை பார்த்து “என்னங்க இன்னும் நீங்க மாத்திரை போடலயா தூங்காம இருக்கீங்க?…”என கேட்க
சிந்தனை கலைந்து அவர் பக்கம் பார்த்தவர் “மறந்துட்டேன்…”என்றார்…
அவர் ஏதோ டிஸ்டர்ப்பாக இருக்கிறார் என்பதை புரிந்துகொண்ட ரத்தினதேவி அவர் தூங்குவதற்கு முன் சாப்பிட வேண்டிய மாத்திரை எடுத்து கொடுத்தார்.
ஆளவந்தான் மாத்திரையை போட்டவர் ரத்தினதேவி லைட் ஆப் செய்ய போகவும் “ரத்தினா உன்கிட்ட பேசணும்…”என்றார்.
அதில் அவர் லைட் ஆப் செய்யாமல் அவர் அருகில் வந்து அமர்ந்தவர் “என்ன பேசனுங்க?…”என கேட்க
“ரத்தினா நான் அகோராவை பார்க்க போனேன்…”
“மித்ரன் ஜாதகத்தை எடுத்து வைக்க சொன்னிங்க… நாளைக்குதான் நல்ல நாளா இருந்துச்சு அதனால நாளைக்குதான் பார்க்க போவீங்கன்னு நினைச்சேன்….”என்ற ரத்தினதேவி நிறுத்தி “அகோரா என்ன சொன்னாரு?…”என்று கேட்க
“பெரிய பாராங்கல்லா தலையில இறக்கி வச்சுட்டாரு…”
“என்னங்க சொல்றிங்க?…”
“மித்ரனுக்கு மரண கண்டம் இருக்காம்…”என்று அவர் சொன்னதை கேட்டதும் ரத்தினதேவி அதிர்ந்தவர் நெஞ்சில் கைவைத்து கொண்டார்.
ஆளவந்தான் அகோரா தன்னிடம் மித்ரன் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டுமென்றால் உடனே அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சொன்னதை சொல்ல
“என்னங்க சொல்றிங்க இந்த சின்ன வயசுல மித்ரனுக்கு கல்யாணம்மா…”என்றார் அதிர்ச்சியுடன்.
“ம்ம் ஆமா…ரத்தினா மதி நட்சத்திரம் என்ன?…”என ஆளவந்தான் கேட்க
மித்ரன் உயிருக்கு ஆபத்து என்று சொல்லிவிட்டு சம்மந்தம்மே இல்லாமல் மதியின் நட்சத்திரத்தை பற்றி கேட்பவரை குழப்பத்துடன் பார்த்த ரத்தினதேவி மதி நட்சத்திரம் நியாபகம் இருக்கவும் “ஆயில்யம்…”என்றார்
“அவ பௌர்ணமிலயா பிறந்தா?…”
“ம்ம் ஆமாங்க…அதுவும் ரொம்ப அபூர்வமா ஒரு மாசத்துல வர்ற ரெண்டு பௌர்ணமில ரெண்டாவது பௌர்ணமில பிறந்தா எனக்கு நல்லா நியாபகம் இருக்கு…ஆமா நீங்க எதுக்கு மதி நட்சத்திரம் எல்லாம் கேட்கறிங்க?…”என கேட்க
ஆளவந்தான் ஒரு முடிவெடுத்தவராய் தன் மனைவியை பார்த்தவர் “நம்ம மித்ரனுக்கு மதியை கல்யாணம் பண்ணி வைக்க போறேன்…”என்றார்.
No comments yet.