காதல் -14

Sweety Novel's | 14 Apr 2026 | Share

செழியன் “பாப்பு மேல கைப்பட்டுச்சு அவ்வளவுதான்…”என்று மிரட்டலாக சொல்ல நந்தா செழியனுக்கு இடையில் சண்டை ஆரம்பம் ஆனது. 

அப்பொழுது மேலே இருந்து வந்த மித்ரன் செழியன் சொன்னதை கேட்டுவிட்டான். 

நேராக மதி அருகில் சென்றவன் சட்டென ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்துவிட்டான். 

அதில் மற்ற மூவரும் அதிர்ந்து பார்க்க மதி விழிகள் விரித்து “என்னை அடிச்சதால இப்போ உனக்கு சந்தோசமா….”என்பது போல் அவனை பார்த்தாள்.. 

அவள் பார்வையை அலட்சியப்படுத்தியவன் செழியனை “என்ன சொன்ன உன் பாப்பு மேல கைப்படக்கூடாதா…”என்பது போல் பார்த்து நக்களாய் இதழ் சுழித்தவன் “நீ வா…”என்று நந்தாவை அங்கிருந்து இழுத்து சென்றான்.. 

செழியனுக்கு மதிக்கு விழுந்த அறை தன்னால்தான் என்று புரிய மதி பக்கம் திரும்பி பார்க்க பக்கத்தில் நின்றிருந்த இசை அவனை தீப்பார்வை பார்த்தாள்.. 

“பாப்பு…”என செழியன் ஏதோ சொல்ல மதிக்கு முன் அவள் சீறிக்கொண்டு வந்தவள் “எதாவது பேசுன அவ்வளவுதான்.. என் அண்ணா விளையாட்டுக்கு அடிக்க வந்ததேக்கு திட்டுன மித்து எப்படி அடிச்சுட்டு போறான் அவனை ஒன்னும் சொல்லாம அப்படியே நிக்கற….”என்று திட்டினாள். 

“ஹேய் மித்ரன் சண்டைக்கு வருவான்…” 

“சண்டைக்கு வருவானா… எதாவது சொல்லிடப்போறேன்…”என்றவள் மதியை பார்த்து “உன்னை சொல்லணும்… வா..”என்று அவளை அங்கிருந்து இழுத்து சென்றாள்.. 

நந்தா மித்ரன் காரில் ஏறிகொண்டவன் அவன் பக்கம் திரும்பி பார்த்தான். 

ஆனால் மித்ரன் திரும்பி பார்க்கவில்லை… திரும்பி பார்க்காமலே “என்ன?…”என்று கேட்க 

“மதியை எதுக்கு மித்து அடிச்ச?…” 

“அவளை அடிக்கணும்ன்னு தோணுச்சு அடிச்சேன்…”என்று அவளை அடித்தற்கான எந்த கில்ட்டும் இல்லாதவனாய் சொன்னான்.. 

“அடிக்கணும்ன்னு தோணுச்சுன்னா அடிச்சுடுவியா… அந்தளவுக்கு உனக்கு அவமேல ரைட்ஸ் இருக்கா என்ன?…” 

நந்தா கேட்கவும் மித்ரன் கண்கள் சுருக்கியவன் இப்பொழுது அவன் பக்கம் திரும்பி முறைத்து பார்க்க நந்தா “இங்க பாரு மித்து… அவ ஒரு பொண்ணு இப்படி அடிக்கிறது எல்லாம் நல்லா இல்ல…”என்றான். 

“நீ எப்போ இருந்து அவளுக்கு சப்போர்ட் பண்ண ஆரமிச்ச?…” 

“நான் சப்போர்ட் எல்லாம் பண்ணலடா… நீ மதிகிட்ட ஓவரா ரைட்ஸ் எடுத்துகிட்டு நெருங்கறியோன்னு தோணுது.. நான் என்ன சொல்ல வர்றேன்னா…”என்றவனை மேற்கொண்டு மித்ரன் பேசவிடவில்லை.. 

“போதும் அவளை பத்தி என்கிட்ட பேசாத…” 

“இல்ல மித்து.. நான் என்ன சொல்ல வர்றேன்னா…” 

“நான் உன்னை அந்த வேலைக்காரியை பத்தி பேச வேண்டாம்ன்னு சொன்னேன்… பேசாத…”என அவன் அழுத்தம்மாய் சொல்ல இதற்கு மேல் பேசினால் கோபப்படுவான் என்று நந்தாவும் எதுவும் சொல்லவில்லை.. 

“ஓகே இப்போ நாம எங்க போறோம் மித்து?…”என்று கேட்க “சில் பண்ண…”என்றவன் காரை ஸ்டார்ட் செய்தான்.. 

             **************** 

செண்பக மலை… 

அடிவாரத்தில் கார் நிற்க அதிலிருந்து இறங்கினார் ஆளவந்தான்.. 

அவரை தொடர்ந்து டிரைவரும் இறங்கியவன் அடர்ந்த காடாக இருக்கவும் “ஐயா நானும் துணைக்கு வரட்டுங்களா?…”என கேட்க 

“ஒன்னும் தேவையில்ல…நீ இங்கையே இரு….”என்றவர் காரில் இருந்து மித்ரனின் ஜாதகத்தை எடுத்துகொண்டு காட்டுக்குள் இறங்கி நடக்க தொடங்கினார்.. 

கைத்தடியை ஊன்றி மெதுவாக நடந்து சென்றவர் மலையில் இருக்கும் குகையை கண்டுபிடித்து செல்வதற்குள் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது.. 

குகைக்கு வெளியில் அகோராவின் சிஸ்யன் இருந்தவன் அவர் யாரென்று தெரியாமல் தடுத்தான். 

“அகோராவை யாரும் பார்க்க முடியாது…” 

“நான் யாருன்னு தெரியாம என்னை தடுத்துட்டு இருக்க…”என ஆளவந்தான் குரலை உயர்த்தி அவனை மிரட்டிக்கொண்டிருக்கும் பொழுது “வாங்க ஜமீன்தார் ஐயா…”என்ற கம்பீரக்குரல் அவரை வரவேற்றது.. 

இருவரும் திரும்பி பார்க்க ஆளவந்தானுக்கும் அதிகமான வயதில் கூன் விழுந்து கைத்தடியை மெதுவாக ஊன்றியபடி நடந்து வந்த அகோரா பார்க்கவும் அகோரி மாதிரிதான் இருந்தார்… ஆனால் இந்த முதுமை வயதில் குரல் மட்டும் கம்பீரமாய் இருந்தது… 

தன்னுடைய சிஸ்யனை பார்த்து “அவர் ஊருக்கே படியளக்கிற ஜமீன்தார் ஐயா அவரை போய் தடுக்கிற…”என்றவர் ஆளவந்தானை பார்த்து “நீங்க உள்ள வாங்க ஐயா…”என்றார் 

ஆளவந்தான் தன்னை தடுத்தவனை முறைத்து பார்த்துவிட்டு மீசையை நீவியபடி உள்ளே சென்றார். 

குகைக்குள் பெரிய காளியம்மன் சிலை இருக்க அதற்கு கீழே பூஜை செய்வதற்கான பொருட்கள் இருந்தது… ஆங்காங்கே வெளிச்சம் பரவ தீப்பந்தம் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. 

“ஏன் கோரா அங்க மடத்தை விட்டு இப்படி குகையில வந்து தங்கியிருக்க?…”என ஆளவந்தான் கேட்க அகோரா சிரித்தவர் “சிவன் கட்டளை மீற முடியுமா…”என்றார்.. 

ஆளவந்தான் பெருமூச்சு இழுத்துவிட்டவர் “நான் எதுக்கு வந்திருக்கேன்னா…”என சொல்ல வர அகோரா சிரித்தவர் “எனக்குதான் தெரியுமே… பேரனோட ஜாதகம்… என்றார்.. 

மித்ரனுடைய ஜாதகத்தை கொடுக்க அகோரா வாங்கி பார்த்தவர் அப்படியே விழிமூடினார்.. 

அவர் நினைவில் மித்ரன் வாழ்வில் இனி நடக்க போவது எல்லாம் தோன்ற அதிர்ந்து விழிதிறந்து பார்த்தவர் “ஜமீன் வாரிசுக்கு மரண கண்டம் தொடங்க போகுது….”என சொல்ல ஆளவந்தான் அதிர்ந்தார். 

“என்ன சொல்ற அகோரா அப்போ என் பையன் மாதிரி என் பேரனுக்கும்…”என்றவரால் சொல்லகூட முடியவில்லை… நெஞ்சு வலிப்பது போல் இருக்கவும் நெஞ்சை பிடித்துகொண்டார் 

“இப்படி நடக்கவும் வாய்ப்பு இருக்குன்னு எச்சரிக்கைதான் பண்ண முடியும் ஜமீன்தார் ஐயா இதுதான் நடக்கும்ன்னு சொல்ல முடியாது அது எனக்கு கிடைச்சு இருக்க சக்திக்கு நான் பன்ற துரோகம் விதிக்கு செய்யற துரோகம்மா மாறிடும்….”என்றவர் அவரின் பயத்தை பார்த்து 

“பயப்படாதீங்க… பிரச்சனை கொடுக்கிற சிவன் அதற்கான தீர்வையும் கொடுப்பான்… அதோ இருக்கு

கால புத்தகத்துல உங்க பேரன் வாழ்க்கையை காப்பாத்த பரிகாரம் இருக்கான்னு பார்க்கறேன்…”என்றவர் கைத்தடியை ஊன்றியபடி ஒரு கல்லில் மீது வைக்கப்பட்டிருந்த கால புத்தகத்தின் அருகில் சென்றார்.. 

கால புத்தகத்தை கையில் எடுத்து அவர் அதை பிரித்து பார்க்க ஆளவந்தானுக்கோ தன்னுடைய ஜமீனுக்கு இனி வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்று யோசித்தார்.. அவர் முகத்தில் பயம் தெரிந்தது.. 

நேரம் கடக்க ஆளவந்தானுக்கு பொறுமை இல்லை… 

“அகோரா என் பேரனை மரண கண்டத்தில இருந்த காப்பாத்த எதாவது வழி இருக்கா?…”என்று கேட்க 

கால புத்தகத்தை பார்த்த அகோரா அவர் பக்கம் திரும்பி பார்த்து “இருக்கு…பல வருஷங்களுக்கு ஒரு தடவை ஒரு மாசத்துல ரெண்டு பௌர்ணமி வரும் அதுல ரெண்டாவதா வந்த பௌர்ணமில அதுவும் ஆயில்யம் நட்சத்திரத்தில பிறந்த பொண்ணை உங்க பேரனுக்கு அவனோட இருபதாவது வயசுக்குள்ள கல்யாணம் பண்ணி வைக்கணும்… அப்படி நீங்க பண்ணி வைக்கலன்னா அவனோட மரண கண்டம் உங்க ஜமீன்வம்சத்துக்கு வாரிசே இல்லாம பண்ணிடும்…”என்றார் 

“என்ன சொல்ற அகோரா அப்படியொரு பொண்ணை நான் எங்க போய் தேடறது?…”என ஆளவந்தான் கேட்க 

அகோரா எரிந்து கொண்டிருந்த அக்னி அருகில் சென்றவர் அதில் விபூதியை கை நிறைய அள்ளி சில மந்திரங்களை உச்சரித்து அதை அந்த நெருப்பில் போட அதில் மதி உருவம் தெரிந்தது… 

“நல்லா பாருங்க… இவதான் உங்க பேரனை காப்பாத்த போறவ…இந்த கன்னிகையை உங்க பேரனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா அவன் மரண கண்டத்தில இருந்து தப்பிப்பான்….நீங்க நினைச்சது எல்லாம் நடக்கும்…” 

ஆளவந்தான் “மதியா…”என்று யோசித்தவர் பின் அகோராவிடம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.. 

              ******************* 

மித்ரனுக்கு ஜுஸ் எடுத்துகொண்டு மதி அவனுடைய அறைக்கு சென்றாள்… 

அறைக்குள் அவனை காணவில்லை… சுற்றி முற்றியும் பார்த்தவள் “மித்து…”கூப்பிட 

“ஏய்…”என்ற அதட்டல் சத்தம் மட்டும் கேட்கவும் பாத்ரூம் அருகில் சென்று திறந்து இருந்த கதவு வழியாக அவனை பார்த்தாள்… 

மித்ரன் ஷேவிங் செய்ய தாடிக்கு க்ரீம் அப்ளை செய்திருந்தவன் அவள் பக்கம் திரும்பி பார்த்து “என்னடி?…”என்றான். 

அவன் தாடியை எடுக்க போகிறான் என்பதை பார்த்ததும் மதி முகம் அஷ்டகோணலாக மாறியது.. 

“தாடியை ஷேவ் பண்ண போறியா என்ன?…” 

“ஏன் உன்கிட்ட சொல்லி பர்மிஷன் வாங்கிட்டுதான் பண்ணனுமா…”என்றவன் குரலில் திமிரும் நக்கலும் தெரிந்தது. 

“அப்படியே என்கிட்ட பர்மிசன் கேட்டுட்டுதான் எல்லாம் பன்ற மாதிரி…”என முனுமுனுத்துகொண்டாள்.. 

அதை கவனித்தவனுக்கு அவள் என்ன சொன்னால் என்பது புரியவில்லை.. 

“ஹேய் என்ன சொன்ன?…”என கேட்க 

‘நான் எதுவும் சொல்லுலயே…” 

“நீ முனுமுனுத்ததை நான் பார்த்தேன்… என்ன என்னை திட்டுனியா?…” 

வேகமாய் மறுத்து தலையசைத்தவள் “இல்லையே…”என்றாள்.. 

“பச்…. இப்போ எதுக்கு இங்க நின்னுட்டு இருக்க உன் முகத்தை என்னால பார்க்க முடியல போ இங்கிருந்து…”துரத்தி விடுவது போல் சொல்ல மதி இதழ் சுழித்தவள் “எனக்கும் உன்னை இப்படி பார்த்துட்டு இருக்கனும்ன்னு எல்லாம் ஆசையில்ல…”என்று மைண்ட் வாய்ஸில் சொல்லிக்கொண்டவள் அங்கிருந்து செல்லதான் நினைத்தால் ஆனால் அவளுக்கு மித்ரன் அவனுக்கு அழகாக இருக்கும் தாடியை எடுப்பது பிடிக்கவில்லை. 

அங்கிருந்து செல்லப்போனவள் நின்று மறுபடியும் அவன் பக்கம் பார்க்க மித்ரன் “என்ன?…”என்றான் 

“தாடியை ஷேவ் பண்ண போறியா மித்து…” 

ஷேவிங் கிட்டை கீழே வைத்தவள் சுட்டு விரலை அசைத்து “இங்க வா….”என்று கூப்பிட மதி உள்ளே சென்றாள்.. 

காலையில் அவன் அடித்தது நியாபகம் வரவும் இரண்டு அடி கேப் விட்டு தள்ளியே நின்றுகொண்டாள்.. 

ஆனால் மித்ரனுக்கு அந்த இடைவெளி பிடிக்கவில்லை போலும் சட்டென அவள் கரத்தை பிடித்து தன் பக்கம் இழுக்க அதை எதிர்பாரதவள் அவன் நெஞ்சில் சென்று மோதினாள்… சரியாய் அவனும் அவள் பக்கம் சரிய கன்னத்தில் அவன் அப்ளை செய்திருந்த க்ரீம் அவள் கன்னதோடு உரசும் பொழுது மதி கன்னத்திலும் ஒட்டிக்கொண்டது.. 

🎶ஏய் மின்னலே ஏ மின்னலே

என் கண்ணிலே நெஞ்சிலே

சொல்லோனா கண்ணாலே 

சக்கரே என் சக்கரே

மேல்மெல்லமாய் செல்லமாய்

கொஞ்சுதே மௌனமே 

சிநேகமோ..? பிரேமாமோ..?

ஈடிலா நேயமோ

பேரிலா மாயாமூ

கேள்வியே சுகமோ..? 

யாவுமே மாறுதே

பூமிதான் இதுவோ

சக்கரே.. சக்கரே.. சக்கரே..🎶 

மதி கண்களும் மித்ரன் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவியது… 

மித்ரன் பார்வை வழக்கம் போல் அவள் உதட்டுக்கு கீழே இருக்கும் மச்சத்தில் மீது பதிந்தது…

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.