காதல் -13

Sweety Novel's | 14 Apr 2026 | Share

இசை அதிர்ச்சியுடன் “என்ன நானா?…”என கேட்க செழியன் தலையாட்டி “ம்ம் ஆமா நீதான்… போய் மித்ரனை கூட்டிட்டு வா…”என்றவன் வாயை வைத்துகொண்டு சும்மா இருக்காமல் திரும்பி தாத்தாவிடம் 

“ரொம்ப நேரமாச்சு இன்னும் மித்ரன் வரல இசை போய் பார்த்துட்டு வரட்டுமான்னு சொல்றா…”என்றான். 

இசை வாயை பிளந்தவள் “அடப்பாவி நான் எப்படா சொன்னேன்… இப்போ நான் போய் அந்த தடியன்கிட்ட திட்டு வாங்கணும் அந்த ஆசைதான உனக்கு…”மைண்ட் வாய்ஸில் சொல்லிக்கொண்டவள் ஆளவந்தான் தன்னை பார்க்கவும் மிடரு விழுங்கினாள்.. 

“தாத்தா…” 

“போய் அவனை வர சொல்லு…”என்று அவர் சொல்லவும் சரியென்று தலையசைத்தவள் மித்ரன் அறைக்கு சென்றாள்.. 

அடுத்த சில நிமிடங்களில் மித்ரனிடம் நன்றாக திட்டு வாங்கிக்கொண்டு முகத்தை தொங்க போட்டுகொண்டு வந்தவளை பார்த்து செழியன் தனக்குள் சிரித்தான். 

அவன் “நீங்க கூப்பிடற நேரத்துக்கு எல்லாம் அவனால  வர முடியாதாம்… பிஸியா இருக்கேன் வர லேட்டாக்கும்ன்னு சொன்னான்…”என்றவள் சென்றவள் சென்று செழியன் பக்கத்தில் நின்றுகொண்டாள்.. 

செழியன் அவள் பக்கம் திரும்பி பார்க்க அவளும் பார்த்தவள் “இப்போ சந்தோசமா?…”என கேட்க 

தலையசைத்தவன் “செழியன் ஹாப்பி…”என்றான். 

கண்கள் உருட்டி அவனை முறைத்தவள் ‘ஒருநாள் உன்னை நான் மாட்டிவிடுவேன் அப்போ இருக்குடா உனக்கு… பம்பரகட்டை மண்டையா…”என தனக்குள் சொல்லிக்கொண்டாள்.. 

ரத்தினதேவி இசை போய்விட்டு வந்து அரைமணி நேராமாகியும் மித்ரன் வராததில் தன்னுடைய கணவன் கோபம் அறிந்தவர் “நானே போய் பார்த்துட்டு வர்றேன்…”என்று சொல்லி அங்கிருந்து செல்ல போனவர் அர்ச்சனா “இதோ மித்துவே வந்துட்டானே…”என சொல்லவும் நிமிர்ந்து பார்த்தார்.. 

கம்பீரமாய் மிடுக்காய் வந்தவன் அப்படியே அந்த ஜமீன் இளவரசன் போல் ருந்தான்.. ( இளவரசன்தான…) 

அவன் தோரணை திமிராய் இருக்க தவறு செய்த நந்தா கைகள் கட்டி குற்றவாளிபோல் நின்றிருக்க அவனுக்கும் மேல் தவறு செய்த மித்ரனோ சென்று ஒன்றை சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான். 

அவன் அமர்ந்திருந்த தோரணையில் ஆளவந்தான் கோபம் அதிகமாக “என்ன நினைச்சுட்டு இருக்க மித்ரன் இந்த ஜமீனை நீ குடிச்சு குத்தடிக்கற பாரா மாத்தலாம்ன்னா?…”என கேட்க 

திமிராய் இதழ் சுழித்தவன் ‘இப்போதைக்கு எனக்கு அந்த ஐடியா இல்ல ஹிட்லர்.. பட் டெப்பனட்லி பியூச்சர்ல பண்ண சான்ஸ் இருக்கு..”என சொல்லி அவரை கடுப்பாக்கினான்.. 

ஆளவந்தான் “பாரு உன் பேரன் எப்படி பேசறான்னு இதுதான் நீ உன் பேரனை வளர்த்த லட்சணம்… கொஞ்சமாச்சும் ஜமீன் வாரிசுங்கற பொறுப்பு அவனுக்கு இருக்கா..”என்று அவன் செய்த தப்பிற்கு ரத்தினதேவியை திட்டினார் 

தன்னுடைய பாட்டி எல்லார் முன்னாடியும் திட்டுவாங்குவதை மித்ரனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை… எழுந்தவன் “என் பாட்டியை எதுவும் சொல்லாதீங்க…”என்றான் கோபம்மாய்.. 

ஆளவந்தாணும் எழுந்தவர் கைத்தடியை நன்றாக பிடித்தபடி நின்றவர் அவனை முறைத்து “உன் பாட்டியை நான் எதுவும் சொல்லக்கூடாதுன்னா அதுக்கேத்த மாதிரி நீ நடந்துக்கணும்…”என்றார். 

“நீங்க சொல்ற மாதிரி எல்லாம் என்னால நடந்துக்க முடியாது… எனக்கு என்ன தோணுதோ அதைதான் நான் பண்ணுவேன்…” 

“மித்ரன்…” 

“உஷ்… என்கிட்ட இந்த சத்தம் எல்லாம் போடக்கூடாது…”என்றவன் நந்தாவை பார்த்தவன் அவன் “என்னை எப்படியாவது காப்பாத்துடா…”என்பது போல் பாவமாய் பார்க்கவும் 

“இனி நீ என்கூட சேராத அதுதான் உனக்கு நல்லது…”என்றவன் அவன் அதிர்ச்சியை கண்டுகொள்ளாதவனாய் “ஓகே அவ்வளவுதான பஞ்சாயத்து முடிஞ்சிருச்சுல்ல…”என்றவன் ஆளவந்தான் சொல்ல வந்ததைகூட காதில் வாங்காதவனாய் “ஏய் வேலைக்காரி எனக்கு பிரேக் பாஸ்ட் எடுத்துவை…”என்றபடி டைனிங் டேபிள் நோக்கி சென்றான்.. 

அவன் சத்தத்தில் மதி வேகமாய் சமைத்தது எல்லாம் எடுத்து வந்து வைத்தவள் அவனுக்கு பரிமாற தொடங்கினாள்.. 

ஆளவந்தான் இன்று வணக்கம் விடப்போவதில்லை என்பது போல் கோபத்தில் அவனை நோக்கி செல்ல போனவர் ரத்தினதேவியின் “என்னங்க…”என்ற குரலில் நின்றார் 

“உங்ககிட்ட நான் பேசணும்…”என்றவர் மற்றவர்களை பார்த்து “நீங்க எல்லாம் போங்க…”என்றார் 

எல்லாரும் ஆளவந்தானை பார்க்க அவரும் “போங்க…”என்றவர் நந்தாவை பார்த்து “இனி இந்த ஜமீன்ல வச்சு யாராவது குடிக்கிறது பார்த்தேன் பேரன்னு எல்லாம் பார்க்க மாட்டேன் சுட்டு கொன்னுடுவேன்…’என்றார் மிரட்டலாக.. 

அவர் மிரட்டளில் நந்தா வேகமாய் தலையாட்டியவன் “இனி ட்ரிங்ஸ் பண்ண மாட்டேன் தாத்தா…”என்றான்.. 

“அந்த பயம் இருக்கனும்…”என்றவர் எல்லாரையும் போக சொல்லிவிட்டு ரத்தினதேவியை பார்த்தார்.. 

அவரும் “வாங்க…”என்றவர் தங்களின் அறைக்கு செல்ல ஆளவந்தான் அவருடன் சென்றார் 

அறைக்குள் சென்றதும் ரத்தினதேவி அவரின் கோபத்தை குறைக்க தண்ணீர் எடுத்து கொடுத்தார்.. 

ஆளவந்தான் வாங்கவில்லை சென்று அங்கிருந்த சேரில் அமர்ந்தார். 

‘குடிங்க கொஞ்சம் கோபம் குறையும்…”என்றவர் ஆளவந்தான் முறைக்கவும் “உங்க கோபத்தை என்கிட்ட காட்டாதீங்க…”என்றார் 

“கோபப்பாடாம மித்ரன் இப்படி இருக்க நீதான காரணம்….” 

“உங்க மனசை தொட்டு சொல்லுங்க நானா காரணம்?….”என அவர் கேட்க ஆளவந்தான் அமைதியானார்.. 

“எல்லாம் அந்த ஓடுகாலியால என் பையன் வாழ்க்கைக்குள்ள வந்தா அவனை பிரிச்சு கூட்டிட்டு போனா திரும்ப அவன் என்கிட்ட வரும்போது அந்த கடவுள் பிரிச்சுட்டான்…மகன் போனா என்ன பேரன் இருக்கான்னு நினைச்சேன் ஆனா அவனும் இப்படி இருக்கான்… அவ அம்மா அவளைபத்தி மட்டுமே யோசிக்கற ஒரு சுயநலவாதி அவளுக்கு ஒரு வாழ்க்கை வேனும்ன்னு பெத்த பையனை பத்திகூட யோசிம்மா ஓடிப்போயிட்டா இவன் அவன் அம்மா எந்த தப்பும் பண்ணலன்னு அந்த நாள்ல இருந்து என்னை எதிரி மாதிரி பார்க்கறான் நான் சொல்றது எதையும் செய்ய மாட்டேங்குறான்….”என்றார். 

இப்பொழுது ஆளவந்தான் குரலில் கோபம் இல்லை வருத்தம்தான் அதிகமாக இருந்தது.. 

ரத்தினதேவி “உங்க கவலை எனக்கு புரியுதுங்க…”என சொல்ல 

“ஆனா அவனுக்கு புரிய மாட்டேங்குதே…” 

“நேரம் சரியில்ல அதான் இப்படியெல்லாம் நடக்குது…”என ரத்தினதேவி சொல்லவும் ஆளவந்தான் கண்கள் சுருக்கியவர் “ரத்தினா மித்ரனோட ஜாதகத்தை பார்த்தியா?…”என கேட்க 

அவரோ மறுத்து தலையசைத்தவர் “மித்ரன் வாழ்க்கையில என்ன நடக்கும்ங்கறதை நான் தெரிஞ்சுக்க விரும்பலங்க அதனாலதான நான் அவனோட ஜாதகத்தை இப்போ வரைக்கும் பார்க்காம இருக்கேன்…”என்றார்.. 

ஆம்… தன்னுடைய பேரனின் வருங்கால நல்லது கெட்டதை தெரிந்து கொள்ளகூடாது என்று இப்பொழுது வரைக்கும் மித்ரனின் ஜாதகத்தை பார்க்காமல் இருக்கிறார் 

ஆளவந்தானுக்கு இப்பொழுது ஒரு யோசனை தோன்ற அவர் யோசிப்பதை பார்த்து ரத்தினதேவி “என்ன யோசிக்கறீங்க?…”என்றார்.. 

“நான் மித்ரனோட ஜாதகம் பார்க்கணும்ன்னு நினைக்கறேன்.. எனக்கு அவன் எப்போ மாறுவான் ஜமீன் பொறுப்பு எல்லாம் எடுத்துப்பான்னு தெரிஞ்சுக்கணும்…” 

“அவன்கிட்ட அன்பா நாம நடந்துகிட்டாளே அவன் பொறுப்பா மாறிடுவாங்க… நீங்க கோபப்படறதாலதான் அவனும் கோபப்படறான்…இதைபத்தி உங்ககிட்ட பேசறதுக்காகதான் நான் உங்களை கூட்டிட்டு வந்தேன்…”என்று ரத்தினதேவி மேற்கொண்டு அதைபற்றி பேச ஆளவந்தான் “இல்ல எதுக்கும் ஒருதடவை கோராவ பார்த்துட்டு வர்றது நல்லதுன்னு தோணுது… இன்னும் கொஞ்சநாள்ல மித்ரனோட இருபதாவது பிறந்தநாள் வரப்போகுது பத்து வயசுலயே அவனை ஜமீன் வாரிசாக்கி இருக்கனும் அன்னிக்கு நடந்த பிரச்சனையில அது நடக்காம போயிடுச்சு இப்பவும் ஒரு பிரச்சனை வந்து தடங்கல் ஏற்படுத்திடக்கூடாது…”என்றார் 

அவர் சொல்வது ரத்தினதேவிக்கு புரிய ‘கோரா உங்களை பார்க்க சம்மதிப்பாரா… அவர்தான் சில வருஷத்துக்கு முன்னாடியே கோவில் மடத்தை விட்டு வெளியில போய் இப்போ மலைகுகையில தங்கி இருக்கிறதா கேள்விபட்டேன்…”என்றார்.. 

“ம்ம் அங்கதான் இருக்கார்… நான் போனா கண்டிப்பா என்னை பார்க்க அனுமதிப்பாரு… ஆமா மித்ரன் ஜாதகம் எங்க இருக்கு?…”என கேட்க 

“அது உங்க கபோர்ட்லதான் இருக்குங்க… மித்ரன் ஜாதகம் எழுதுனதுல இருந்து அதை எடுக்கவே இல்ல…”என ரத்தினதேவி சொல்லவும் 

‘மித்ரன் ஜாதகத்தை எடுத்துவை நான் கோராவை பார்க்க போகனும்…”என்று ஒரு முடிவு எடுத்தவராய் சொன்னார் ஆளவந்தான்.. 

             ******************** 

இசை நெயில் பாலிஷ் போட்டு கொண்டிருக்க பக்கத்தில் மதி அமர்ந்து அவளிடம் பேசிகொண்டிருந்தாள்.. 

“இசை ரிசல்ட் வந்ததும் நீ எந்த காலேஜ்ல ஜாயின் பண்ண போற?…”என மதி கேட்க 

அவளோ நெயில் பாலிஷ் வைத்துகொண்டே “நீ எந்த காலேஜ்ல சேர போறியோ அதே காலேஜ்தான்…'”என்றாள். 

“என்ன பேசற இசை நான் சாதாரண ஒரு காலேஜ்ல சேர போறேன் அங்க வந்து நீயும் படிப்பியா?…” 

“ம்ம் நீ எங்க ஜாயின் பன்றியோ அங்க நானும் வந்து ஜாயின் பண்ணிப்பேன்…”என்ற இசை மதியிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவும் அவள் பக்கம் திரும்பி பார்த்தாள்.. 

மதி முறைத்து பார்த்து கொண்டிருக்க இசை “முறைச்சு பார்க்காதடி… காமெடியா இருக்கு…”என்றவள் சிரித்தாள்.. 

“சிரிக்காத இசை… இது உன்னோட கரியர் விஷயம்…” 

“என் கரியர்ன்னு என்ன இருக்கு… எனக்கு நல்லா ஜாலியா காலேஜ் லைப் என்ஜாய் பண்ணனும் அது நான் உன்கூட இருந்தாதான் நடக்கும்… நீ ஒரு காலேஜ் நான் ஒரு காலேஜ்ன்னு போனா அப்புறம் நான் உன்னை ரொம்பவே மிஸ் பண்ணுவேன்… நீ நான் எந்த காலேஜ்ல ஜாயின் பன்றனோ அதுலயே சேர்ந்துடு இல்லன்னா நீ எந்த காலேஜ்ல சேர போறியோ அந்த காலேஜ்ல நான் ஜாயின் பண்ணிக்கறேன்… அவ்வளவுதான் இனி இதைப்பத்தி பேச வேண்டாம்… டாட்…’என்றாள். 

“நான் சொன்னா கேட்க மாட்டியா?…” 

“நீ மட்டும் நான் சொல்றதை கேட்கறியா என்ன… அந்த மித்ரன் உன் பேரை சொல்லி கூப்பிடாம வேலைக்காரின்னு கூப்பிட்டா போகக்கூடாதுன்னு சொல்றேன் ஆனா அவன் கூப்பிட்ட அடுத்த செகண்ட் அவன்கிட்ட போயிடற…நீ எப்படி மித்ரன் விஷயத்துல என் பேச்சை கேட்க மாட்டேங்குறீயோ அதுமாதிரி காலேஜ் விஷயத்துல நீ சொல்றதை நான் கேட்க மாட்டேன்…’ 

இருவரும் பேசிகொண்டிருந்த நேரம் நந்தா வந்தவன் அவர்களை பார்த்து விட்டு “ரெண்டு குட்டிசாத்தான்களும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?…”என்று கேட்க அதில் இருவரும் அவன் பக்கம் திரும்பி பார்த்து முறைத்தனர்.. 

அதில் கண்களை உருட்டியவன் “என்ன?…”என்று கேட்க 

“நாங்க குட்டிச்சாத்தான்னா நீ யாரு கொல்லிவாய் பிசாசா…”என்று இசை கேட்க மதி “இல்ல ரத்தகாட்டேரியா?…”என்றாள்.. 

“ரெண்டுமே கிடையாது…”என மறுத்து தலையசைத்த நந்தா “நான் உங்களை இங்கிருந்து ஓட்ட போற மந்திரவாதி… ஓம்.. கிளிம்… காளி..”என்று மந்திரம் போடுவது போல் கையை உயர்த்தி என்னமோ செய்தான்.. 

அதை பார்த்து சிரித்த இசை “தெருவில போய் இப்படி வித்தை காட்டுனன்னு வச்சுக்கோ ஐயோ பாவம்ன்னு உனக்கு காசாவது போடுவாங்க…”என சொல்ல மதி சிரித்தாள்… 

நந்தா “என்ன கிண்டலா…”என்றவன் இசையை முறைத்துவிட்டு “உனக்கென்ன சிரிப்பு…”என்று மதியின் தலையில் கொட்ட போக அப்பொழுது அங்கு வந்த செழியன் “பாப்பு மேல உன் கை பட்டுச்சு அவ்வளவுதான்…”என்றான் மிரட்டலாக…( சண்டை ஆரம்பம்…)

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.