காதல் -2

Sweety Novel's | 14 Apr 2026 | Share

அர்ச்சனா மித்ரன் பைலை எடுப்பான் அதில் ஆளவந்தான் கோபப்படுவார் அவனுக்கு அடி கிடைக்கும் அவன் அழும் சத்தம் கேட்டு அவன் அம்மா வருவாள் பிரச்சனை ஆகும் அதில் ஆளவந்தான் இருவருக்கும் தண்டனை கொடுப்பார் என்று நினைக்க அதெல்லாம் கனவாக போனது… 

பைல் எடுக்க சென்றவனை குழந்தையின் அழும் குரல் திசை திருப்ப மித்ரன் குழந்தையை நோக்கி சென்றான்.. 

மித்ரன் வசுந்திரா அருகில் நெருங்கி செல்ல செல்ல அவள் கையில் இருந்த குழந்தையின் அழுகை குறைந்தது… 

பக்கத்தில் சென்றதும் மித்ரன் வசுந்திராவின் சேலை முந்தானையை பிடித்து மித்ரன் இழுக்க வசுந்திரா சிரித்தவள் அவன் தன்னுடைய குழந்தையை பார்க்க ஆசைப்படுகிறான் என்பது புரிந்து அவன் உயரத்திற்கு கீழே சரிந்து அமர்ந்தவர் கையில் இருந்த குழந்தையை அவனுக்கு காட்டினாள்.. 

மித்ரனுக்கு அப்பொழுது தெரியவில்லை ரோஜா குவியலாய் இருக்கும் இந்த குட்டி தேவதைதான் அவனின் எதிர்கால வாழ்க்கை என்று… 

மித்ரன் சிரித்தவன் தன்னுடைய பிஞ்சு கரத்தால் குழந்தையின் கன்னம் வருட தூக்கத்தில் இருந்த குழந்தை அவன் விரலை பிடித்துகொண்டவள் மெல்ல தன் மொட்டு விழிகள் திறந்து அவனை பார்த்தவள் சிரித்தாள்… 

🎶கன்னம் தீண்டியதும்

கண்ணன் என்று அந்த கன்னி

கண்கள் விழித்தாள் 

கன்னம் தீண்டியது

கண்ணன் அல்ல வெறும்

காற்று என்று திகைத்தாள் 

கண்கள் மூடிக்கொண்டு

கண்ணன் பேரை சொல்லி

கைகள் நீட்டி அழைத்தாள்… 

நெஞ்சின் ஓசை

ஒடுங்கிவிட்டால் நிழலை

கண்டு நடுங்கிவிட்டாள்

கண்ணன் தேடி வந்த மகள்

தன்னை தொலைத்து

மயங்கிவிட்டாள் 

தான் இருக்கின்ற

இடத்தினில் இருதயம்

காணவில்லை எங்கே

எங்கே சொல் சொல்….🎶 

குழந்தை சிரிப்பதை பார்த்து மித்ரனும் சிரிக்க வசுந்திரா “பாப்பா எப்படி இருக்கா?…”என கேட்க 

அதற்கு மித்ரன் “கிட்டு…”என்று மழலை மொழியில் சொல்ல அவன் என்ன சொல்ல வருகிறான் என்று அவளுக்கும் புரிய மென்னகை சிந்தினாள்.. 

மித்ரன் மீண்டும் மீண்டும் குழந்தையை தொட்டு பார்க்க இதையெல்லாம் தள்ளி நின்று பார்த்து கொண்டிருந்த அர்ச்சனா முகம் கோபத்தில் சிவந்தது.. 

“இந்த மித்ரன் என்ன நான் சொன்னதை செய்யாம அந்த வேலைக்கார குழந்தையை கொஞ்சிட்டு இருக்கான்.. குட்டி பிசாசு வந்து என் பிளானையே சொதப்பிருச்சு…”என திட்டிக்கொண்டவர் கோபம் மொத்தமும் வசுந்திராவின் மகள் மேல் திரும்பியது… 

ஆளவந்தான் தன்னுடைய பார்ட்டனர்ஸ் உடன் பேசிகொண்டிருந்தவர் போன் வரவும் எடுத்து பேசினார்.. 

பேசியவர் முகம் சந்தோசத்தில் மலர்ந்தது அதை கவனித்த அசோகன் அவர் போன் பேசி முடித்ததும் “என்னாச்சுப்பா?…”என கேட்க 

“நாம புதுசா மெடிக்கல் கம்பனியில பத்து கோடி இன்வெஸ்ட் பண்ணிருந்தோம்ல அதுல இன்னிக்கு மட்டும் ஒரு கோடி லாபம் வந்திருக்கு…”என சந்தோசமாய் சொன்னவர் “ஐயா…”என்றவள் குரலில் திரும்பி பார்த்தார் 

வசுந்திரா மட்டும் கையில் குழந்தையுடன் நின்றிருக்க மித்ரன் தன்னுடைய பாட்டியை தேடி சென்றிருந்தான் 

ஆளவந்தான் அவளை பார்த்ததும் அவள் எப்படி இருக்கிறாள் என்று எல்லாம் விசாரிக்கவில்லை… 

“ம்ம் வேலு சொன்னான் பெண் குழந்தை பிறந்து இருக்குன்னு…”என சொல்ல 

“ம்ம் ஆமாங்க ஐயா… அதான் உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கி குழந்தைக்கு பேர் வச்சுட்டு போகலாம்ன்னு வந்தேன்…”என வசுந்திரா சொல்ல ஆளவந்தான் எழுந்தார்.. 

பிஸ்னஸ் பார்ட்னர்ஸ் எல்லாம் புரியாமல் பார்த்தவர்கள் அசோகனிடம் அதுபற்றி கேட்க 

“அந்த பொண்ணு இங்க கணக்குபிள்ளையா இருக்க அதாவது பினான்ஸியல் மேனேஜ்மென்ட் பார்த்துக்கற வேலுவோட வொய்ப்…இந்த ஊர்ல எந்த குழந்தை பிறந்தாலும் ஜமீனுக்கு கொண்டு வந்து ஆசீர்வாதம் வாங்கி என்னோட அம்மாவையோ அப்பாவையே பேர் வைக்க சொல்லுவாங்க… மத்தவங்கன்னா வெளிலயே வெயிட் பண்ணுவாங்க இந்த பொண்ணு மட்டும் உள்ள அலோவ் பண்ணிருக்கோம்…”என்று அவர்களுக்கு புரியும்படி சொன்னான்.. 

ஆளவந்தான் அருகில் வந்த வசுந்திரா தன்னுடைய குழந்தையை கொடுக்க சரியாய் அப்பொழுது அங்கு மித்ரனுடன் வந்தார் ரத்தினதேவி 

“வணக்கம்மா…” 

“வா வசுந்திரா…”என்றவரை ஆளவந்தான் குழந்தையை வாங்க சொல்லவும் வசுந்திரா குழந்தையை அப்படியே அவர்கள் காலில் வைத்து வணங்கி எழுந்தவள் குழந்தையை எடுத்து ரத்தினதேவியிடம் கொடுத்தாள் 

குழந்தையை வாங்கிய ரத்தினதேவி அதன் அழகில் தன்னை தொலைத்தார்.. 

மொட்டு கண்கள் திறந்து சிரித்ததில் அவரும் சிரித்தவர் “வசுந்திரா உன் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா..ரொம்ப நல்ல நேரத்தில பொறந்து இருக்கா நான் வேலுகிட்டகூட சொன்னேன் உனக்கு மஹாலக்ஷ்மியே வந்து பொறந்து இருக்கான்னு… இவ இருக்க இடத்தில செல்வம் நிறைஞ்சு இருக்கும்…”என்றவர் தன் கணவரிடம் “இவ பொறந்த நேரம் ரொம்ப நல்லா இருக்குங்க…”என சொல்ல “அப்படியா…”என்பது போல் பார்த்தவர் சற்று முன் தனக்கு வந்த போன் காலை யோசித்து பார்த்தார் 

அவர் பார்வை குழந்தையின் மீது அழுத்தம்மாய் பதிந்தது.. 

மித்ரன் ரத்தினதேவியின் சேலை முந்தானையை இழுக்க அவன் பக்கம் திரும்பி பார்த்தவர் “என்ன கண்ணா?…”என்றார்.. 

“பாட்டி நானு..”என்று அவன் மழலையில் கேட்க சிரித்தவர் குழந்தையை அவனிடம் காட்ட மித்ரன் தான் தூக்க வேண்டும் என்று அடம்பிடிக்க தொடங்கினான்.. 

“மித்து வேண்டாம்… நீ கீழ போட்ருவ….”என ரத்தினதேவி சொல்ல அதை அவன் கேட்கவில்லை… 

“பாப்பா வேணும்… எனக்கு வேணும்…”என்று அடம் பிடித்தான்.. 

அதில் ஆளவந்தான் “மித்ரன்…”என்று சத்தம்மாய் அழைக்க திடீரென அவர் சத்தம் போட்டதில் மித்ரன் பயந்துவிட அவன் மட்டுமா ரத்தினதேவி கையில் இருந்த குழந்தயும் அழ தொடங்கியது.. 

ரத்தினதேவி “ஒன்னும் இல்ல அழக்கூடாது..”என்று சமாதானம் செய்தவர் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து மித்ரனையும் அருகில் அழைத்தவர் அவன் கையில் குழந்தையை கொடுத்து அவரும் பிடித்து கொண்டார்.. 

அர்ச்சனா அருகில் வந்தவள் “அத்தை ஒரு வேலைகாரன் பொண்ணை இவ்வளவு நேரம் கையில வச்சு இருக்கீங்க… மித்துகிட்டயும் கொடுத்து இருக்கீங்க…”என சொல்ல அதில் வசுந்திரா முகம் வாடியது. 

அவள் சொன்னதை கேட்டதும் ஆளவந்தான் “ரத்தினா சீக்கிரம் பேர் வச்சு பணத்தை கொடுத்து அனுப்பு…”என்றார். 

அவர் சொன்னதும் ரத்தினதேவி “இளவரசி மாதிரி இருக்கா என்ன பேர் வைக்கலாம்…”என யோசித்தவர் பின் குழந்தை காதில் “மதுமதி… மதுமது… மதுமதி…”என்று மூன்று முறை சொல்ல அவர் தேர்ந்தெடுத்த பெயரில் வசுந்திரா முகம் மலர்ந்தது.. 

ரத்தினதேவி  வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அர்ச்சனாவிடம் “அர்ச்சனா பணம் ஒரு லட்சம் எடுத்துட்டு வா…”என்றவர் தன்னிடமிருந்த கொத்துசாவியை கொடுக்க கொத்துசாவியை வாங்கியவள் அதன் மீது ஆசையாக பதிந்தது.. 

“என்ன நிக்கற போ…” 

“அத்தை ஒரு லட்சம் கொடுக்கணுமா?…”என கேட்க 

“நாம ஜமீன் அர்ச்சனா… வேலு இங்க நம்மகிட்ட வேலை செய்யறவன் அதுவும் முக்கியம்மான வேலையில இருக்கான்… எல்லாம் தெரிஞ்சுதான் சொல்றேன் போய் எடுத்துட்டு வா…”என்றார் ரத்தினதேவி 

அர்ச்சனா அங்கிருந்து செல்ல மித்து “பாட்டி நானு…”என்றவன் அவர் சொன்னது போலவே அவனும் குழந்தை காதில் பேர் சொல்ல நினைத்தவன் முழுபெயர் சொல்ல வராததால் “மதி… மதி… மதி.. மதி.. மதி..”என்று பெயரை சொல்லிக்கொண்டே இருக்க ரத்தினதேவி சிரித்தவர் “போதும்டா கண்ணா…”என்றார் 

பின் அவனிடமிருந்து குழந்தையை எடுத்துகொண்டு ஆளவந்தான் அருகில் சென்றவர் “குழந்தையை பாருங்க அழகா இருக்கால்ல…”என சொல்ல 

குழந்தையை பார்த்த ஆளவந்தான் முகம் கனிந்தது..தன்னையறியாமல் அவரும் குழந்தையை பார்க்க அப்பொழுது வந்தான் வேலு… 

“நீ இங்கையா இருக்க…”என வசுந்திராவை பார்த்து அவன் கேட்கவும் தலையசைத்தவள் “அம்மா நம்ம பொண்ணுக்கு மதுமதின்னு பேர் வச்சிருக்காங்க…”என்றார் 

“பேர் நல்லா இருக்கு…”என்றவன் ஆளவந்தான் அருகில் சென்று “ஐயா…”என்றழைத்தான்.. 

“என்ன வேலு…” 

“ஐயா நெல்மூட்டை எல்லாம் அனுப்பிட்டேன் அதோடு வருமானம்…”என்று சொல்லியவன் ஜமீன் நிலத்தில் இருந்து வந்த பணத்தை பையில் இருந்து எடுத்து கொடுத்தவன் “இந்தமுறை லாபம் ரெண்டு மடங்காகி இருக்கு ஐயா…”என்றான். 

அவன் கொடுத்த பணத்தை வாங்கிய ஆளவந்தான் “ம்ம்… இதுக்கெல்லாம் கணக்கு சரியா எழுதி வச்சிருக்கல்ல?…”என கேட்க 

வேலு தலையாட்டியவன் அந்த நோட்டை அவரிடம் கொடுத்தான்.. 

கண்கள் சுருக்கியவர் “இதை எதுக்கு என்கிட்ட கொடுக்கிற?…”என கேட்க “ஐயா இனி நான் இங்க வேலை பார்க்க போறது இல்ல…”என வேலு சொல்லவும் ஆளவந்தான் ரத்தினதேவி இருவரும் அதிர்ந்தனர்.. 

அர்ச்சனா பணம் கொண்டு வந்தவள் அதை ரத்தினதேவியிடம் கொடுத்து விட்டு “ஏன் வேலு இருக்க வேலையை விட்டுட்டு பிச்சை எடுக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா?…”என்றாள்.. 

அதில் ரத்தினதேவி “அர்ச்சனா..”என்று கண்டிக்க அவள் அமைதியாகிவிட்டாள்.. 

ரத்தினதேவி பணத்தை குழந்தை அருகில் வைத்து நீட்ட வசந்திரா வாங்குவதற்குள் வேலு வாங்கிக்கொண்டவன் அர்ச்சனாவை பார்த்து “என் வீட்டுக்கு மஹாலக்ஷ்மியே வந்திருக்கும் போது நான் ஏன்ம்மா பிச்சை எடுக்க போறேன்..”என்றான். 

அது அர்ச்சனாவுக்கு புரியவில்லை… வேலு ரத்தினதேவியிடம் “நீங்க சொன்னது உண்மைதான்ம்மா என் பொண்ணு மஹாலக்ஷ்மிதான்… அதானாலதான் எங்களோட பூர்வீக சொத்து எங்களுக்கு கிடைச்சு இருக்கு அதுமட்டும்மில்ல தொழில் செய்யற வாய்ப்பும் அமைஞ்சு இருக்கு….”என்றார்.. 

ரத்தினதேவி “நான் சொன்னேன்ல.. எல்லாம் உன் பொண்ணு கொண்டு வந்த அதிர்ஷ்டம்தான்…சரி உனக்கு என்ன தோணுதோ அதையே பண்ணு…”என்றவரிடம் இருவரும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு அங்கிருந்து செல்ல மித்ரன் தன் பாட்டியிடம் “பாட்டி பாப்பா…”என்றான்.. 

“பாப்பா அவங்க வீட்டுக்கு போறாங்க… திரும்ப வரும்போது பார்க்கலாம்…”என்றவர் அவனை தூக்கிகொள்ள 

அர்ச்சனா “நம்மகிட்ட இவ்வளவு வருஷம்மா வேலை பார்த்துட்டு இப்போ சொந்தம்மா தொழில் செய்ய போறேன் சொத்து எல்லாம் கிடைச்சிருக்குன்னு சொல்லிட்டு போறான்… நீங்களும் அமைதியா இருக்கீங்களே..”என சொல்ல 

ரத்தினதேவி “அசோகன் ஏற்கனவே எல்லாம் டிஜிட்டல்ல மாத்திட்டு இருக்கோம் இனி கணக்குபிள்ளை எல்லாம் தேவையே இல்லன்னா சொல்லிட்டு இருந்தான் இப்போ வேலுவே போய்ட்டான் அதனால என்ன…”என்று சாதாரணமாக சொன்னவர் மித்ரனுடன் அங்கிருந்து சென்றார். 

அவர் சாதாரணமாக சொல்லிவிட்டார் அதை அர்ச்சனாவும் கண்டுகொள்ளாமல் “ச்சே அந்த குட்டி பிசாசு வந்ததால இந்த மித்ரன் நான் சொன்னதை கேட்காம போய்ட்டான்…”என முனுமுனுத்தபடி அங்கிருந்து செல்ல ஆளவந்தான்தான் யோசனையில் ஆழ்ந்தார்.. 

அவரால் வேலு வேலை விட்டு செல்வதையும் அதற்காக அவன் சொன்ன காரணத்தையும் ஏற்க முடியவில்லை… 

“அந்த குழந்தை அவ்வளவு அதிர்ஷ்டம் நிறைஞ்சவளா… ரத்தினதேவியோட ஜோசியம் என்னிக்கும் தப்பா இருந்தது கிடையாது…”என்று நரைத்த தாடியை தடவியபடி யோசித்தவர் முகம் இறுக கடைசியில் “அப்போ அந்த மஹாலக்ஷ்மி இந்த வீட்லதான் வேலைக்காரியா இருக்கனும்…”என அழுத்தம்மாய் சொல்லிக்கொண்டார்.. 

இரண்டு நாட்களுக்கு பின்.. 

வேலுவின் வீடு தீக்கு இரையாகி எரிந்து கொண்டிருந்தது. 

வேலுவும் வசுந்திராவும் எப்படி அங்கிருந்து தப்பிப்பது என்று தெரியாமல் சுற்றி முற்றியும் ஓடிக்கொண்டிருக்க வீட்டிற்கு வெளியே குழந்தை  மதுமதி கொட்டும் பனியில் படுக்க வைக்கபட்டு கதறி அழுதுகொண்டிருந்தாள்…

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.