Kk 3
இரண்டு வருடங்களுக்கு பின்…
சென்னை…
நிலா மகள் ஊர்வலம் சென்று கொண்டிருந்த வேளை.. பல அடுக்குமாடிகளை கொண்ட அந்த கட்டிடத்தில் இருந்த மூன்றாவது தளத்தில் ஒரு ரூமில் தூங்கி கொண்டு இருந்தாள் ஆதிரா.
“ என்னை விடுங்க…. என்னை எதுவும் பண்ணிறாதீங்க.. செல்வா என்னை காப்பாத்து.. ப்ளீஸ்.. ” என ஏதேதோ உளறியவள் கத்திக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.
அப்போது தான் உணர்ந்தாள் வழக்கம் போல் கனவு கண்டு எழுந்ததை… மணியை பார்க்க அது விடியகாலை 4 மணியை காட்டியது..
” ச்ச.. என்ன இது.. எப்ப பாரு இந்த கனவு வந்து நம்மள டிஸ்டர்ப் பண்ணுது.. நடந்ததை மறக்கறதுக்கு நான் எவ்ளவோ ட்ரை பண்றேன்… ஆனாலும் இந்த ரெண்டு வருஷத்துல இந்த கனவு மட்டும் டெய்லியும் வந்துருது.. ஏன் வருது..” என தீவிரமாக யோசித்தவளுக்கு விடை தான் கிடைக்கவில்லை.
அதற்குமேல் தூக்கம் வராமல் போக எழுந்து பாத்ரூம் சென்றவள் தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வெளியே வந்தாள். கிட்சன் சென்றவள் மைக்ரோ அவணை பயன்படுத்தி அவளுக்கு பிடித்த வகையில் ஒரு காபி போட்டு அதை எடுத்துக்கொண்டு அந்த ரூமை ஒட்டி இருந்த பால்கனிக்கு சென்றாள்.
ஆதிரா 24 வயது தேவதை.. பால் போன்ற நிறம்.. முதலில் மும்பையில் வேலை செய்துகொண்டு இருந்தவள் அன்று நடந்த பிரச்சனைக்கு பிறகு சென்னைக்கு மாற்றலாகி இங்கு ஒரு பெரிய ஐடி கம்பெனியில் வேலை செய்கிறாள்.
பால்கனியில் நின்று பார்க்க அந்த சென்னை முழுவதும் ஒரு புள்ளியாய் தெரிந்தது அவளுக்கு. வழக்கம் போல் அவளது யோசனை தன் குடும்பத்திடம் சென்றது. அத்தனை உறவுகளையும் ஒரு நொடியில் இழந்து யாருமில்லாத அனாதையாக நின்றதை அவளால் இன்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பக்கத்தில் படுத்திருந்த ஆதிராவை காணாது அவளை தேடி வந்த பிரியா அவள் பால்கனியில் இருப்பதை பார்த்து அங்கு வந்தவள், “என்னடி அதே கனவா…. ஹீரோ சேவ் பண்ண வந்தானா?….” என சிரித்துக்கொண்டே கேட்க,
” உனக்கு என்னை பார்த்தா சிரிப்பா இருக்கா.. ” என அவளை முறைத்தாள் ஆதிரா.
” பின்ன என்னடி.. டேய்லியும் ஒரே கனவ கண்டு இப்படி முழுச்சுட்டு அதை யோசிச்சுட்டு இருக்கற.. உன்னை பார்த்து சிரிக்காம வேற என்ன செய்ய சொல்ற.. ” என்றாள் பிரியா.
” என்னடி கிண்டல் பண்றியா…. என்னோட நிலைமை உனக்கு எல்லாம் சிரிப்பா இருக்குல்ல.. ” என ஆதிரா வருத்தத்துடன் கேட்க,
” ஹேய் அப்படி எல்லாம் இல்லடி.. அந்த இன்சிடென்ட்டை மறந்திடுன்னு சொன்னா கேட்கறியா நீ…. இங்க பாரு அதை மறக்கணும்ன்னு தான மும்பையில இருந்து டிரான்ஸ்பர் வாங்கி இங்க சென்னைக்கு வந்த இங்க வந்தும் ஒவ்வொரு நாளும் அதையே நினைச்சுட்டு இருக்க அதான் கனவா வருது…..” என்றாள் பிரியா.
ஆதிரா தலையை அழுந்த கோதியவள் ” நானும் மறக்கணும்ன்னு தான் நினைக்கறேன் பட் முடியல… அதுவும் என்னை காப்பாத்துனவன் முகம் அந்த கண்ணு…. எனக்கு திரும்ப திரும்ப கண்ணுக்குள்ள வந்துட்டே இருக்குடி.. அதுக்கு முன்னாடி கூட அவனை பார்த்த மாதிரியே இருக்கு.. இதையெல்லாம் யோசிச்சு யோசிச்சு எனக்கு தலையே வெடிச்சுரும் போலடி.. ” என்றவள் அப்படியே விழிமூட திமிராய் ரவுடிகள் பார்க்க கம்பீரமாய் நடந்து வந்த செல்வா தான் நினைவில் வந்து போனான்.
” ஹேய் மறுபடியும் ட்ரீம்ஸ்க்கு போயிடாத…. எனக்கு என்னவோ அந்த ஹீரோவை மறக்க கூடாதுங்கறதுக்காகவே அந்த இன்சிடென்ட்டை நியாபகம் வச்சிருக்கேன்னு தோணுது….”
” தெரியலடி.. நான்தான் சொல்றேன்ல அவனை அதுக்கு முன்னாடியே நான் எங்கையோ பார்த்து இருக்கேண்டி அவன் கண்ணை பார்த்ததும் எனக்கு அப்படித்தான் தோணுச்சு ஆனா எங்கன்னு தான் இப்போவரைக்கும் நியாபகத்துல வரல…”
” ஓகே அதையெல்லாம் அவனை மறுபடியும் பார்க்கும் போது கேட்டுக்கோ இப்போ ஒர்க்குக்கு லேட்டாச்சு டிஎல் கத்துவாறு சீக்கிரம் வந்து ரெடியாகு…..”
“அகைன் நான் அவனை மீட் பண்ணுவனா…. அவன் இப்போ எங்க இருக்கான்….” தனக்கு தானே கேட்டுகொண்டவர் கொண்டவள் மறுபடியும் பெட்டில் போய் உட்கார்ந்தாள். அப்படியே காலில் முகம் புதைத்தபடி ஆதிரா அமர்ந்து விட அவளை பார்த்து பெருமூச்சுவிட்ட பிரியா,
“ம்ம்ஹும் இவளால எனக்கு தான் டுடே லேட்டாக போகுது…” முனுமுனுத்து கொண்டவள் அருகில் சென்று,
” எழுந்து ரெடியாகு ஆதிரா… என்னால எல்லாம் டெய்லயும் திட்டு வாங்க முடியாது.. எழுந்து ரெடியாகு போ.. “என்று அவளை கஷ்டப்பட்டு எழுப்பிவிட்டவள் பாத்ரூமுக்குள் அவளை அனுப்பிவிட்டு அவள் கிட்சனுக்கு சென்று பிரேக்பாஸ்ட் செய்ய ஆரம்பித்தாள்.
இருவரும் ரெடியாகி கம்பனிக்கு செல்ல ஆதிராவிற்காகவே வெயிட் செய்யும் ஒரு கும்பல் அவள் ஸ்கூட்டியில் வந்து இறங்கியதுமே,
“ஹாய் ஆதிரா..குட் மார்னிங்…”என்றபடி வந்துவிட அவர்களை பார்த்து முறைத்தாள் பிரியா.
” வந்துட்டானுங்க ஜொள்ளு விட….” என பிரியா முனுமுனுத்துகொண்டவள் “குட் மார்னிங் கைஸ்…” என சொல்ல,
” உனக்கு எல்லாம் யாரு குட் மார்னிங் சொன்னது…”என்பது போல் அவளை ஓரங்கட்டிவிட்டு அவர்கள் ஆதிராவையே பார்க்க அவளோ அவர்களை கண்டுகொள்ளாமல் பிரியாவுடன் உள்ளே சென்றாள்..
இருவரும் கம்பனிக்குள் சென்று லிப்ட்டில் ஏறி பட்டன் ஆன் செய்யும் பொழுது வேகவேகமாய் ஒருவன் ஓடிவருவதை பார்த்ததும் aஅதிரா ஷாக்காக நல்லவேளை டோர் மூடுவதற்குள் அவன் உள்ளே நுழைந்து விட்டான்..
லிப்ட்க்குள் பிரியா, ஆதிரா பின் கடைசி நேரத்தில் உள்ளே நுழைந்தவன் என்று மூன்று பேர் மட்டும் தான் இருந்தனர்..
ஆதிரா புதிதாக வந்தவனையே திரும்பி திரும்பி பார்க்க பிரியா அதை கவனித்தவள் அவள் தோளில் இடித்து “என்னடி அவனையே பார்த்துட்டு இருக்க… அவன் என்னடி நினைப்பான்.. ” என சொல்ல பார்வையை திருப்பி கொண்டாள் ஆதிரா.
“ என்ன இவன்.. இவன் அப்படியே அந்த செல்வா போல் இருக்கான்… ஆனால் மேனரிசம் ட்ரஸிங் ஸ்டைல் எல்லாம் பார்த்தா வேறு மாதிரி இருந்தது… செல்வா தான் இதுவா.. இல்ல இவரு வேற யாராவதா.. “ என யோசித்த ஆதிராவுக்கு தலையை பியித்து கொள்ளலாம் போல் இருந்தது.
“பார்க்க நீயூ ஜாயினி போல…. ஹாண்ட்ஸம்மா இருக்கான் ஒரு ஹாய் சொல்லி பார்க்கலாமா….”என்று பிரியா அவளுக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில் சொல்ல அதற்குள் ஆதிரா அவனிடம்,
“ஹாய்…”சொல்லி கை நீட்டியிருக்க பிரியா அதிர்ந்து போய் அவளை பார்த்தாள்.
அவனும் அவள் பக்கம் திரும்பி பார்த்தவன் ஹாண்ட் ஷேக் செய்யவில்லை, “ஹாய்…” மட்டும் சொல்ல ஆதிரா அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை.
அவனையே இமைக்காமல் பார்த்த ஆதிரா, “செல்வா தான நீங்க.. என்னை யாருனு உங்களுக்கு அடையாளம் தெரியலயா.. நாம இதுக்கு முன்னாடி மீட் பண்ணிருக்கோம்.. நியாபகம் இருக்கா ? “ என கேட்க அவளை புருவம் சுருக்கி பார்த்தவன்,
” செல்வாவா… இல்லங்க ஐயம் ஆர்யன்…. ” என சிரித்துக்கொண்டே சொன்னான் அவன்.
” என்னது ஆர்யனா…. பட் மும்பையில செல்வா தான நீங்க…” என ஆதிரா குழப்பதுடன் கேட்க அவனோ புரியாதது போல் ரியாக்ஷன் கொடுத்தவன்,
” இல்லங்க.. நான் மும்பை போனதே இல்ல.. ஐ திங் நீங்க வேற யாரோன்னு நினைச்சு என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க…” என்றவன் லிப்ட் நின்றதும் அவன் பாட்டிற்கு வெளியே செல்ல பிரியாவும் ஆதிராவும் வெளியே வந்தனர்.
இருவரும் வெளியில் வந்ததும் பிரியா,”என்னடி உனக்கு தெரிஞ்சவனா?…”என்று கேட்க,
“தெரிஞ்சவன்னு தான் நினைச்சேன்…” என யோசனையுடன் சொன்னாள் ஆதிரா. அவள் சொன்னதை கேட்டு அவளை குழப்பதுடன் பார்த்த பிரியா,
“புரியல…..” என கேட்க,
“எனக்கும் தான்….” என்றாள் அவள்.
” ஏய் என்னடி சொல்ற…. கொஞ்சம் புரியற மாதிரி சொல்லி தொலை.. பொதுவா நீ எந்த பசங்ககிட்டயும் அதிகமா பேசவேமாட்ட.. இன்னிக்கு என்ன நீயே அவன்கிட்ட பேசுற.. என்னடி விஷயம்.. “ என பிரியா சந்தேகமாய் கேட்க,
” போதும்.. நீயே கண்டதையும் யோசிக்காத.. லேட்டாச்சு வா போலாம்….” என்றவள் தன்னுடைய இடத்திற்கு செல்ல பிரியாவும் பெருமூச்சுவிட்டவள் அவளது இடத்திற்கு சென்றாள்.
இருவரும் ஒரே டீம் தான் என்பதால் இருவரும் எப்பொழுதும் ஒன்றாக தான் இருப்பர். இருவரும் அவரவர் இடத்தில் சென்று உட்கார்ந்து சிஸ்டம் ஆன் செய்ய அவன் டீம் மெம்பெரில் ஒருவனான விக்னேஷ் வந்து “கைஸ் டிஎல் ஏதோ மீட்டிங் வச்சிருக்கார் வாங்க போலாம்….”என சொல்ல,
” இப்பவேவா.. மீட்டிங்கா எதுக்கு?…” என்றாள் பிரியா.
“ம்ம் உயிரை வாங்க தான்….” என சலித்துக்கொண்டே பதில் சொன்னான் விக்கி.
அதை கேட்டு பிரியா சிரித்தவள் ஆதிரா பக்கம் திரும்பி பார்த்து “வாடி போலாம்….”என்று சொல்ல இருவரும் அவனுடன் எழுந்து சென்றனர்..
No comments yet.