முதல் நான் இங்கு நிற்க முடிவு உன்னை
காணும் நாள் எதுவோ ??
….என் கள்வனே
உன் நுதல் தீண்டி செல்லும் காற்றின் மீது
பொறாமை கொள்கிறேன்.…….. .
இருந்தும்
என் இதழ் தீண்டும் நொடி பொழுதில்
உன் தீண்டலுக்கு அங்கு அவசியம்
இல்லை என்று
என் மனதில் சிறு கர்வம் …
உன் நுதல் முட்டி வருடும் சிகை மீது பொறாமை கொள்கிறேன்
நான்… …….
இருந்தும்
என் விரல் தொடும் நேரம் அவன் சிலிர்க்கும் நொடி
உன் அவசியம் அங்கு இல்லை என்று
என் மனதில் சிறு கர்வம் ….
என் நுதல் தீண்ட நீ வரும் நொடி உன் அன்பின் ஆழம் கண்டு
என் கர்வம் தொலைந்தேனடா….
…… என் கள்வனே
No comments yet.