பாலைவனத்தில் பூத்த ரோஜா

BalaSneha Velmurugan | 18 Mar 2026 | Share

அத்தியாயம்
-15

யாரோ பார்த்துவிட்டு செல்வது போல் இருக்க, சட்  என்று மதுவிற்கு  முழிப்புதட்ட 
வெளியில் வந்து பார்த்த
 பொழுது
தீனாவின் அறையில்
விளக்கு எரிந்து கொண்டிருந்தது….

உண்மையில் இவர்தான் வந்து பார்த்தாரா இல்லை நம் மனப்பிரம்மையா!!! யோசிக்க , சித்துவின் சிணுங்கல் ஒலியில் யோசனையை விட்டு தட்டி கொடுக்கப் உள்ளே சென்றால்….

ஒருவேளை சித்துவை பார்க்க வந்து இருக்கலாம்தான் 
இங்கு தூங்குவதால் அமைதியாக பார்த்துவிட்டு
செல்கிறார் போல என்று நினைத்து கொண்டே மணியை பார்க்க,

 மணியை பார்த்தவளுக்கு நள்ளிரவு ஒன்று என்று
காட்டியதுபார்த்து சற்று கஷ்டமாகத்தான் இருந்தது
. இந்த மாதிரி போலீஸ் வேலையில்  நேரங்கட்ட  நேரத்தில் வரவேண்டும் என்பதை பற்றி
கேள்விப்பட்டிருக்கிறாள்
. இன்று தான் நேரில் பார்க்கிறாள்.

பாருமா
ஒருவர் சாப்பிடும் அளவு எப்போதும் மாவு எடுத்து வைக்க சொல்லி கண்ணம்மா விடம்
சொல்வதை கேட்டிருக்கிறாள்
, இவர் இப்படி வருவதால் தான் அவருக்காகவென்று செய்து இருக்கிறார்கள் ….

தோசை
மாவு பிரிட்ஜில் 
இருக்க ஞாபகம் எதையும் யோசிக்காமல் விரைவாக எழுந்து டையை சரி செய்து விட்டே கீழே இறங்கி கிச்சனுக்கு சென்று மாவை எடுத்து சுட சுட ஐந்து தோசைசுட்டு வைத்து ,  மதியம் வைத்த சாம்பார் சூடு
செய்துவிட்டு கூடவே பருப்பு பொடியும்
,  தேங்காய் சட்னியும் அரைத்து வேகமாக அனைத்தையும் டேபிள்  கொண்டுவந்து
வைத்து கொண்டிருக்க,

 கீழே யார் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்  , வரும் போது எல்லாரும் தூங்கி
கொண்டுதானே இருந்தார்கள்
, யோசித்துக் கொண்டே கீழே இறங்கி தீனாவிற்கு கண்டிப்பாக தன் தாயாக இருக்காது.

ஏனென்றால்
முன்பெல்லாம் இப்படி எழுந்து சமைத்ததால் காலையில் எழுந்திருப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார்
,
அதுபோக சித்துவும் எழுந்து கொண்டு
அவர்களை சிரமப்படுத்த
பின்பு
அவருக்கு தூக்கம் கெடுவதால் உடல்நிலையும் சரியில்லாமல் போய்
விட்டது…..

கண்ணம்மாவும்
வயதானவர் என்பதால் அவரையும் தூங்க சொல்லிவிட்டான்
…. ஹாட் பாக்ஸில் எடுத்து வைத்தாலும் சில நாள் வீட்டிற்கு
வரமுடியாத சூழ்நிலை ஆகும் எடுத்துவைத்த உணவு வீணாகும்

..நீங்கள் தூங்கி விடுங்கள் நானே
பார்த்துக்கொள்கிறேன் நீங்கள் சிரமப்பட வேண்டாம் எனக்காக எடுத்து மட்டும் வைத்து
விடுங்கள் நான் வந்து முடிந்தால்
செய்து சாப்பிட்டுக் கொள்கிறேன் இல்லை என்றால் அதை
அடுத்த நாள் பார்த்துக் கொள்ளலாம்

தீனாவிற்கும்
பெரிதாக வெளியில் சாப்பிட விருப்பம் கிடையாது
. முடிந்த அளவுக்கு வீட்டிலே சாப்பிட்டு
விடுவான் முடியாத பட்சத்தில் தான் வெளியே சாப்பிடுவேன் அதனால் மாவு எடுத்து
வைத்தால் கண்டிப்பாக இரண்டு தோச
ையாவது  சுட்டு சாப்பிட்டுவிட்டு தான் எவ்வளவு களைப்பாக
இருந்தாலும் தூங்குவா
ன்..

 ஆனால் இந்நேரத்தில் கிச்சனில்  யார்
என்று கீழே இறங்கி பார்த்த தீனாவிற்கு அந்த நள்ளிர
விலும் ஒப்பனையற்ற மதுவின் முகம் தேவதையாகதான் தெரிந்தது.

 இந்த இரவிலும் தனக்காக ஒரு உயிர் சுட சுட தோசை வார்த்துக் கொடுப்பது நடக்காத ஒரு விஷயம் தான்
இல்லையா மனம்
ஏற்க மறுக்க….

கண் இமைக்காது  மதுவை பார்த்துக்கொண்டே இறங்கி வந்த தீனாவிற்கு,”  எதுக்கு மதநீங்க இதெல்லாம் செய்றீங்க நானே செஞ்சுக்க
மாட்டேன்னா
??? நீங்க
சித்துவ மட்டும் பார்த்துக்கோங்க போதும் எதுக்கு தேவையில்லாம உங்களை
சிரமப்படுத்திக்கிறீங்க??? என்று அவனகுரலில் கனிவாகத்தான் கேட்டான்.

 ஆனால் அவளுக்கோ அவன் தன்னை திட்டுகிறாரே!அதிகமாக உரிமை எடுத்துக் கொள்கிறேன்
என்று நினைக்கிறா
ரோ? என்று தன்னைத்தானே னதுக்குள் நினைத்துக் கொண்டு வருத்தப்பட்டால்,

 ஆனால் இங்கு தீனாவோ அவளது தூக்கம் கலைகிறதே தனக்காக சிரமப்படுகிறாளே
என்று நினைத்து தான் சொன்னான்
.

 சில நேரங்களில் நாம் புரிந்து கொள்வதும் அவர்கள் சொல்வதும் எவ்வளவு
வித்தியாசங்கள் உள்ளது நாம் இந்த முறையில் தான் சொல்கிறோம் என்று ஒரு முறை
அவர்களுக்கு தெளிவாக சொல்லிவிட்டால் தேவையில்லாத குழப்பங்கள் வாழ்க்கையில் என்றுமே
நடக்காது இல்லையா
….
ஒரு முறைக்கு மறுமுறை
சொல்வதற்கு கூட சிலருக்கு சலிப்பு தட்டி விடுகிறது என்ன செய்வது?

ஆனால் இந்த விஷயத்தில் தீனா அப்படி
கிடையாது
.
ஏனென்றால் போலீஸ்காரன் அல்லவா
? ஒருவரின் முகபாவனையை வைத்து அவர்கள் என்ன மனதில் நினைக்கிறார்கள் என்று புரிந்து
கொள்வான் தான் சொன்னது மதுவிற்கு தான் திட்டுவது போல
தெரிந்து இருக்கும் போல அவர்களை வருத்தப்பட வைத்து விட்டோம் 
முகமே
கூம்பி போய்விட்டது.

 தான் பேசிய இரண்டு சொற்களுக்கு இப்படி
வருத்தப்படுகிறாளே நான் மிரட்டுவதை மட்டும் கண்டால் இவள் என்ன ஆவா
ள்!!!! சரியான அனிச்சை
மலர்தான் இவள்
.

மதுமா! மதுமா!!! நான்
உங்கள திட்டல எனக்காக இப்படி நடுராத்தி
 எந்திரிச்சு சமைச்சு கொடுக்கிறீர்களே உங்களுக்கு
கஷ்டம
இருக்கும்

ஏன்னா நான் எப்ப வருவேன் எப்ப போவேன்னு
எனக்கு தெரியாது ஒரு கேஸ் எடுத்து நாங்க பாத்துட்டு இருக்கோம் அப்படின்னும் போது
கண்டிப்பா எனக்கு நேரம் முன்ன பின்ன இருக்கலாம் நீங்க தேவையில்லாம கண் முழிச்சு
உங்க தூக்கத்தை கெடுத்துக்காதீங்க
அதுனாலதான்  சொன்னேன்.

அச்சச்சோ
!!!!இதுல எனக்கு
என்ன சிரமம்  இருக்கப் போகுது
உன்னோடு சொல்லனும்னா நான் ஒன்னும் நீங்க வரணும்ன்றதுக்காக வெயிட் பண்ணி
கண் முழிச்சு உங்களுக்காக வெயிட் பண்ணல
.

 நானும் சித்து கண்ணா கூட தூங்கிட்டேன் நீங்க
வந்து பார்த்துட்டு போனதும் எனக்கு யாரோ வந்துட்டு போன மாதிரி இருந்துச்சு அதனால
தான் கண் முழிச்சு பார்த்தப்போ நீங்க வந்துட்டீங்கன்னு தெரிஞ்சது
….

கண்டிப்பா
லேட்நைட் ஆயிடுச்சு நீங்க வெளிலயும் சாப்பிட்டு இருக்க முடியாது ஹோட்டல்ஸ்
இருந்திருக்காது
. அதனாலதான் நான் ஃப்ரிட்ஜில் எடுத்து வச்ச மாவுல உங்களுக்கு தோசை ஊத்தி
கொடுத்தேன். இதுல எனக்கு எந்த ஒரு சிரமமும் இல்லை
…..

நீங்களும்
அதை நினைச்சு கவலைபட வேணாம்
….

ஒருவேளை
நீங்க நைட் இந்த மாதிரி டைம்ல வர்றீங்கன்னா ஒருவாட்டி வந்து நீங்க கதவு மட்டும்
தட்டுங்க
,
நான் உங்களுக்காக சுட்டு தரேன்
!இதுல என்ன இருக்கு அஞ்சு
தோசை சுடுறதுல்ல நான் ஒன்னும் குறைஞ்சிட மாட்டேன்
.

 அந்த ஒரு அரை மணி நேரம் தூக்கத்துல ஒன்னும் எனக்கு கிடைக்கப்போகும்
இல்ல

அப்படி ஒன்னும் தூக்கம் தேவையும் இல்லை உங்களுக்கு சுட்டுக் கொடுப்பதில் எனக்கு
எந்த ஒரு சிரமமும் இல்லை
அது எனக்கு சந்தோஷத்தை தான் கொடுக்குது என்று சொல்ல….

 இத்தனை நாட்களில்இன்றுதான் இவ்வளவு நீளமாக தன்னிடம் பேசினால் என வைய்த கண் வாங்காமல் மதுவை பார்த்துக் கொண்டே இருந்தான்….

 பேசி முடித்து நிமிர்ந்து பார்த்த மது  தீனா தன்னையே குறுகுறு என்று பார்த்தது இன்னும்
சங்கடமாக இருந்தது தான் ஏதாவது தவறாக சொல்லிவிட்டோமோ
? என்று மறுபடியும்
தான் பேசியதே ஒருமுறை மனதில்
ஓட்டி பார்த்த அவளுக்கு தான்
சந்தோஷம் என்று சொன்னதைத்தான் அவர் தவறாக புரிந்து கொண்டாரோ என்று
நினைத்து
,

 சார் சந்தோஷம் அப்படின்னா நீங்க நினைக்கிற
மாதிரி கிடையாது இவ்வளவு லேட்டா வரீங்களே இவ்ளோ டயர்டா இருப்பீங்க உங்களுக்கு நான்
சமைச்சு கொடுக்கும்போது நீங்க கொஞ்சம் ஃப்ரீயா சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடுக்கலாம்
இல்லையா உங்களுக்கு இன்னும் சிரமம் இல்லாம இருக்கும் இல்லையா அதனால தான் அப்படி
சொன்னேன் என்று சொல்ல
,

 எதுவும் சொல்லாமல்  தீனா
மதுவையேபார்த்து
 புன்னகைத்து விட்டு தோசையை பிட்டு
சாப்பிட ஆரம்பித்தான்
.

காத்திருங்கள்
🤍🤍🤍🤍🤍 பார்க்கலாம் அடுத்த
அத்தியாயத்தில்

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.