அத்தியாயம் – 1

Udhaya Novel's | 18 Mar 2026 | Share

Kk -1 

மும்பை….

பரபரப்பான இயங்கி கொண்டிருந்தது பந்த்ரா இடம்… பொதுமக்கள் நிறைந்த அந்த பகுதியில் எந்நேரமும் ஆட்கள்….சிறு இடைவெளி கூட இல்லாமல் குட்டி குட்டி கடைக்கள் நெருக்கமாக இருந்தது…

அந்த இடத்தில் தான் அந்த பெரிய இரண்டு தளம் கொண்டு வீடும் இருந்தது… அதற்குள் தான் பாட்டு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது..

ரவுடிகள் நிறைய பேர் அந்த இடத்தில் தான் இருந்தனர்… ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டும் ட்ரிங்ஸ் செய்தபடியும் அவர்கள் இருந்தனர்… சோபாவில் ஒருவன் ஐம்பது வயது இருக்கும் அவனுக்கு பக்கத்தில் இரண்டு இளம்பெண்கள் அரையும் குறையுமாய் உடை அணிந்திருந்தனர்…அவன் தான் அந்த ரவுடிகளுக்கு எல்லாம் தலைவன் போலும்…

போதையில் இருந்தவன்,  “டேய் இன்னிக்கு பிடிச்சுட்டு வந்த அந்த பொண்ணுங்கள கூட்டிட்டு வாங்கடா….”என்று சொல்ல இரண்டு பேர் ஒரு பெண்ணை தள்ளிக் கொண்டு வந்தனர்… அவள் முகம் தெரியாதபடி கருப்பு துணி கட்டியிருந்தனர்.

ஒரு பெண்ணை மட்டும் அழைத்து வந்ததை பார்த்த தலைவன் கோபமானவன், “என்னடா ஒரு பொண்ணை மட்டும் தூக்கிட்டு வந்திருக்கீங்க….  எல்லாரும் என்னடா வேலை செய்யறீங்க.. கொஞ்ச நாளா என்கிட்ட யாரும் எதுவும் வாங்காம இருக்கறதுனால குளிர்விட்டு போயிருச்சாடா.. ” என்று வாயிக்கு வந்தபடி திட்ட எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றனர்.

அதை பார்த்த மேலும் கோபமான தலைவன், “ டேய் என்னடா.. நான் கேட்டுட்டு இருக்கேன்.. நீங்க என்ன பதில் சொல்லாம இப்படி ஒருத்தன் மூஞ்சிய ஒருத்தன் பார்த்துட்டு இருக்கீங்க.. பதில் சொல்லுங்கடா.. இப்படி ஒவ்வொரு பொண்ணா பிடிச்சுட்டு வந்தா எப்படிடா பொழப்ப நடத்தறது.. “ என கோபமாய் கேட்க,

” தலைவா.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க.. இப்போ எல்லாம் முன்னாடி மாதிரி இல்ல தலைவா.. போலீஸ் கெடுபிடி ரொம்ப அதிகமா இருக்கு.. அவனுங்க கண்ணுல மண்ணை தூவிட்டு பொண்ண கடத்திட்டு வரது பெரிய பாடா இருக்கு.. இன்னிக்கு இந்த பொண்ணு மட்டும் தான் சிக்குனா…. ஒர்த்து பீசு லட்சக்கனக்குல சேல்ஸ் பண்ணலாம்….” என்றான் அவளை அழைத்து வந்தவன்.

அவன் சொன்னதை கேட்டு சிரித்த தலைவன், “ஓ அந்த அளவுக்கு இவ அழகா இருப்பாளா…  அப்படி மட்டும் அழகா இல்லாம இருக்கட்டும்டா உனக்கு அப்புறம் இருக்கு.. சரி நான் அவளை பார்க்கணும் துணியை எடு…” என சொல்ல அவள் முகத்தை மூடியிருந்த துணியை எடுத்தான் அவன்.

அவளை பார்த்த தலைவனுக்கு அவன் சொன்னது எல்லாமே சரிதான் என தோன்றியது.. உண்மைதான் மாசு மறுவற்ற முகம்..  பார்க்க சொர்க்கத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை போல் இருந்தாள் அவள் … அங்கிருந்து ரவுடிகளின் கண்கள் அவளை பார்வையாலயே கொத்தி தின்றன..

கண்கள் கலங்க எல்லாரையும் பார்த்தவள் “என்னை விட்ருங்க… ப்ளீஸ்….”கெஞ்ச எல்லாரும் ஜோக் கேட்டது போல் சிரித்தனர்..

“விடணுமா… இந்த இடத்துக்கு வந்து யாரும் தப்பிச்சு போக முடியாது… அதுவும் நீ ரொம்ப அழகா இருக்க உன்னை வச்சி நான் லட்சக்கணக்குல சம்பாதிக்க போறேன்….” என்றான் தலைவன் சிரித்துக் கொண்டே..

அந்த ஓநாய்களின் சிரிப்பு அவளுக்கு பயத்தை கொடுக்க விழிமூடியவள் “கடவுளே என்னை எப்படியாவது இங்கிருந்து காப்பாத்து…. ப்ளீஸ்…” என வேண்ட,

தலைவன் தனக்கு வலது கரமாக இருக்கும் ஒருவனை அழைத்தவன் “இவளை நைட் ஏலத்துக்கு கூட்டிட்டு போ….” என சொல்ல அதை கேட்டவள் அதிர்ந்து போனாள்.

தலைவன் சொன்னதை கேட்டு சிரித்தவன் கிடைத்தது ஜாக்பாட் என நினைத்தவன் அவள் அருகில் சென்று கையை பிடிக்க அப்பொழுது “அவ எனக்கு வேணும்…”என்ற ஒரு கம்பீரக்குரல் கேட்க எல்லாரும் திரும்பி பார்த்தனர்.

திடீரென ஒலித்த அந்த கம்பீரக் குரலை கேட்டு எல்லாரும் திரும்பி பார்க்க நாயகி ஆதிராவும் திரும்பி அவனை பார்த்தாள்.. ஆறடியில் கம்பீரமாய் மாநிறத்தில் ஒருவன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

தலைவன் முஸ்தபா அவன் அருகில் வந்ததும் ” செல்வா என்ன சொன்ன?…” என்று நம்ப முடியாமல் கேட்க,

வந்தவன் ஆதிராவை காட்டி ” இந்த பொண்ணு எனக்கு வேணும்….”என்றான் மறுபடியும்.

ஏதோ மிட்டாய் வேண்டும் என்பது போல் கேட்டவனை aஅதிரா அதிர்ந்து பார்க்க அதே அதிர்ச்சி தான் அங்கிருந்தவர்களுக்கும்.இதுவரை 

செல்வா எந்த பெண் பின்னாடியும் சென்றதில்லை… பெண்களை தன்னை நெருங்கவிட்டதும் இல்லை…

முஸ்தபா ஆச்சிரியம்மாய் “நிஜமாவே நீதான் கேட்கிறீயா….”என்று நம்ப முடியாமல் கேட்க,

” ஆமா எனக்கு வேணும்… பணம் தரணும்ன்னா சொல்லு தர்றேன்…. ” என்றான் செல்வா.

“பணமா….” என முஸ்தபா சத்தமாய் சிரித்தவன்,

“நீ எனக்காக எவ்வளவோ வேலை பார்த்து கொடுத்து இருக்க நீ கேட்டு முடியாதுன்னு சொல்வனா…… ம்ம் எடுத்துக்கோ என்ஜாய்….”என்றான் முஸ்தபா.

செல்வா ரவுடியின் கைப்பிடியில் அதிர்ந்து நின்று கொண்டிருந்த ஆதிராவை பார்த்து அருகில் சென்றவன் ஒரு பார்வை தான் அந்த ரவுடியை பார்க்க அதில் பயந்து போனவன் உடனே ஆதிராவின் கரத்தை விடுவித்தான்.

செல்வா அவள் கரம் பிடித்தவன் “வா…” என அங்கிருந்து அழைத்து செல்ல போக முஸ்தபா அவனை தடுத்தான்.

” இன்னிக்கு நைட் இங்கயே ஸ்டே பண்ணு…நாளைக்கு கிளம்பி போ….” என முஸ்தபா சொல்ல,

” இல்ல.. நான் ஹைதராபாத் போகணும் அங்க எனக்கு வேலை இருக்கு…” செல்வா சொல்ல முஸ்தபாவிற்கு வலது கரமாய் இருந்து வேலை செய்யும் மைக்கேல் அவனை பார்த்து சிரித்தான்.

“என்ன செல்வா அழகான பொண்ணு இருக்கும் போது என்ஜாய் பண்ணுவியா அதைவிட்டுட்டு…. ஹைதராபாத்தான நாளைக்கு போய்க்கலாம்….” என அவன் சிரித்துக்கொண்டே சொல்ல,

செல்வா முஸ்தபாவை பார்த்தவன் பின் சிறுதலையசைப்புடன்,  “என்னை விடு… விடுன்னு சொல்றேன்ல…” என கதறிய ஆதிராவை அங்கிருந்த ஒரு அறைக்கு இழுத்து சென்றான்.

” மைக்கேல்…”முஸ்தபா அழைக்க அவனும் அருகில் சென்று,

“சொல்லுங்க….”என்பது போல் பார்த்தான் மைக்கேல்.

” எனக்கு என்னமோ சந்தேகமாவே இருக்குடா.. செல்வா பொண்ணுங்க விஷயத்துல வீக்கானவன் இல்ல…. ஏதோ தப்பா தெரியுது… அவங்கள வாட்ச் பண்ணு….”

“சொல்லிட்டீங்கல்ல… பார்த்துக்கறேன்…..”என்றான்..

செல்வா ஒரு அறை அருகில் சென்றவன் “என்னை விடு… ப்ளீஸ்…” என கெஞ்சிய ஆதிராவை உள்ளே தள்ளி கதவை லாக் செய்தான்.

” ப்ளீஸ் என்னை விட்ரு… என்னை எதுவும் பண்ணிடாத….”அவள் அழ அவளையே அழுத்தம்மாய் பார்த்தவன் ஒவ்வொரு அடியாய் அவளை நோக்கி முன்னாடி எடுத்து வைக்க அதை கண்டு பயந்தவள் பின்னாடி நகர்ந்தாள். 

இனி நகர இடமில்லை என்ற நிலையில் அவள் சுவரில் மோதி நிற்க அவளை நெருங்கி வந்தவன் இருபக்கமும் கையூன்றி அவளை சிறைபிடித்தான் அவன். அவனின் லேசர் விழிகள் அவளின் பயத்தை அதிகபடுத்த அவனின் நெருக்கத்தில் அவளால் பேசக்கூட முடியவில்லை…

அவளை அழுத்தமாய் பார்த்தவன், ” உனக்கு இங்கிருந்து தப்பிச்சு போகணுமா…. “ என கேட்க,

“ஆமாம்.. “ என வேகமாய் மேலும் கீழும் தலை ஆட்டினாள் ஆதிரா. 

“ ம்ம் சரி.. அப்போ நான் சொல்றதை செய்….”என்று செல்வா சொல்ல ஆதிரா அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.

அவன் என்ன செய்வானோ என ஆதிரா பயத்துடன் அவனை பார்க்க அவள் முகம் நோக்கி குனிய அதை கண்ட ஆதிரா முகம் சுழித்தாள். அவனிடம் இருந்து அவள் விலக பார்க்க இடையில் கைவைத்து நகர முடியாதபடி செய்தவன் அவள் காதருகில் இதழ் பதித்து மெல்லிய குரலில்,

” இங்க இருக்க ஒவ்வொரு சுவருக்கும் காது இருக்கு…. நீ இங்க இருந்து போகணும்னா என்மேல நம்பிக்கை வை.. உனக்கு எதுவும் ஆகாது….” என்றவன் இப்பொழுது விலகி அவள் விழிகளை பார்த்தான்.

ஆதிராவுக்கு இப்பொழுது ஏனோ அவன் விழிகளை பார்க்கும் பொழுது பயம் வரவில்லை. அவன் மேல் நம்பிக்கை வந்தும் வராமலும் இருக்க கூடவே அவனை இதற்கு முன் பார்த்தது போலவும் இருக்க குழப்பதுடன் அவனது விழிகளை பார்த்தாள்.

ஆதிராவுக்கு செல்வாவை எங்கேயோ பார்த்தது போல் இருக்கவும் எங்கே என நினைத்து அவனை பார்த்தவள் பிறகு அந்த நேரத்தில் அவள் அதை பற்றி எல்லாம் ஆராயவில்லை. எப்படியாவது அங்கிருந்து தப்பித்தால் போதுமென நினைத்தாள்..

“என்னை இங்கிருந்து அனுப்பிடு ப்ளீஸ்….” என்பது போல் ஆதிரா அவனை பார்க்க முன் நெற்றியில் வந்து விழுந்த முடியை அவள் காதோரம் ஒதுக்கிவிட்டவன் அவளை அப்படியே கர்ட்டன்ஸ் பக்கம் வேகமாய் இழுத்து செல்ல ஆதிரா மிரண்டு போய் அவனை பார்த்தாள்.

    No comments yet.