பாலைவனத்தில் பூத்த ரோஜா

BalaSneha Velmurugan | 18 Mar 2026 | Share

Me- சில காரணங்களால் யூடி போடமுடியவில்லை இனிமேல் யூடி வந்துரும்

குரு; ஆமா !! எம்மா ஆத்தரு அங்குட்டு போய் புலம்பு நான் நம்பமாட்டேன்

Me-குரு மேல சத்தியமா இனி வரும் நம்புங்க 😁😁😁😁

குரு; பாதகத்தி என்மேல்
சத்தியம் பண்றாலே கடவுளே கரெக்டா யூடி போட்டா உனக்கு உருண்டு உருண்டு கோவிலுக்கு வரேன்
.இப்போ எஸ்கேப் ஆகுறேன்
🏃🏃🏃🏃🏃

அத்தியாயம்-14

என்னது  தருண் கம்ப்ளைண்ட் கொடுத்தாரா?

என்ன சொல்ற தீனா?

நான் கூட தருணோட அப்பாதான் கேஸ் ஃபைல் பண்ணாருனு நினைச்சேன்.

ம்ம்ம்….
நான் டியூட்டிக்கு சேர்ந்த முதல் நாள்ல பழைய பைல்ஸ்
எல்லாத்தையும் எடுத்து பார்க்கும்போது அப்போதான் சாமுத்திரிகாவோட பைலும் என்
கண்ணுக்கு
ட்டுப்பட்டுச்சு.

அப்ப
எடுத்து படிக்கும்போது தான் இந்த கம்ப்ளைன்ட் கொடுத்தது தருண் ஓட அப்பா கிடையாது
.

தருண்தான் தெரிஞ்சுச்சு”, அதுக்கப்புறம் அந்த பைல குளோஸ்
பண்ணிட்டாங்க
. அதனால
என்னால அதுக்கு மேல எந்த ஒரு ஆக்ஷனும்
எடுக்க
முடியல
.

பட் அந்த
பைலை நான் முழுக்க ரீட் பண்ணிட்டேன்
. அதனால் தான் எனக்கு இப்போ தோணுது.

இந்த
விஷயத்தை கூட அதுவும் ஏதோ ஒரு சங்கிலி தொடர் மாதிரி தொடர்ந்து போயிட்டு இருக்க
மாதிரி ஒரு எண்ணம் வருது
.

நான்
உங்ககிட்ட இத பத்தி
இப்போ சொல்லி
இருக்கேன் கண்டிப்பா உங்களுக்கு ஏதாவது ஒன்னு தோணும்
.

இப்போ
நம்ம இதை எங்கிருந்து ஆரம்பிக்கிறது
? என்றதே தெரியாமல் எல்லா பக்கமுமே குழப்பமா இருக்கோம்.

ஏன் சார்! நம்ம ஏன் சாமுத்திரிகாவோட
வீட்டுக்கு போய் பாக்கலாம் அவங்களோட வீடு இங்க தானே இருக்கும் இல்லையா
? எப்படியும்
அவ
ங்க கம்ப்ளைன்ட் கொடுக்கும் போது
அவங்களோட முழு முகவரியும் கொடுத்து தானே கம்ப்ளைன்ட் கொடுத்திருப்பாங்க நம்ம போய்
அங்க போய் செக் பண்ணி பார்ப்போம்
.

குரு  நான்
அதை  முதலில் யோசிச்சுட்டேன்
. ஆனால்  அந்த பொண்ணுக்கு வேற யாரும்
கிடையாது அவங்க அப்பா மட்டும்தான் அவங்க அப்பாவும்
ஊரோடு  போயிட்டாங்கன்னு
கேள்விப்பட்டேன்
. அவங்க
ஊர் திருநெல்வேலிக்கு அந்த பக்கம்
. இப்ப
அவர் விவசாயம் பார்த்துட்டு இருக்கிறதாவும் ரொம்ப உடம்பு முடியாம இருக்கிறதாக
கேள்விப்பட்டேன் எனக்கு தெரிஞ்ச கான்ஸ்டபிள் அங்க இருக்காரு அவர் மூலமா அவங்க
கிட்ட ஏதாவது தகவல் கிடைக்குதான்னு நான் பாக்குறேன்.

நம்மளோட முதல் டார்கெட் தருண் தானே தீனா….!!!

கரெக்ட்
டா குரு
”!!!

இப்போ நம்ம  விசாரிக்க போறது சாமுத்திரிகாவையோ! இல்ல அவங்க அப்பாவையோ கிடையாது!! தருணத்த விசாரிக்கணும் .ருணையும், தருனோட அப்பாவையும் விசாரிக்கணும் .இந்த கொலைகள் சம்பந்தமான முதல் புள்ளி தருணா தான்
இருக்கணும்ன்றது என்னுடைய கணிப்பு அது மட்டும் கரெக்டா இருந்தா
நான் நினைக்கிற மாதிரி கண்டிப்பா
சாமுத்திரிகா கா
ணாமல் போயிருக்க மாட்டாங்க.

என்ன சொல்ற
தீனா
!!!! மற்ற
இருவரும் அதிர்ச்சியில் பார்க்க

எனக்கு ஒரு
சின்ன சந்தேகம் இருக்கு கண்டிப்பா உங்ககிட்ட உன்னோருநாள் சொல்றேன்
.இதுல ஏதோ ஒரு விஷயம் இருக்கு .

இப்பவே
ரொம்ப லேட் ஆயிடுச்சு நீங்க எல்லாரும் வீட்டுக்கு போங்க நாளைக்கு நம்ம நேரடியா
தருணோட 
வீட்டுக்கு போய் விசாரிச்சுக்கலாம்
.ஏன்னா நமக்கு இப்போ மேல் இடத்துல இருந்து எந்த ஒரு
பிரஷரும் கிடையாது
,வ்வளவு பெரிய இடத்துல நம்ம போய் விசாரிக்கலாம் .  எந்த ஒரு டீடைல்ஸும் கேக்க
கூடாதுன்னு
அவங்க சொல்லப் முடியாது  நம்ம
கேக்குற அளவுக்கு நமக்கான உரிமை இப்ப கொடுத்து இருக்காங்க
.

மேல்
இடத்துல இருந்து பிரஷர் வர ஆரம்பிச்சிருச்சு இந்த கேஸ எவ்வளவு சீக்கிரம் முடிக்க
முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க சொல்லி ஏன்னா தொடர்ந்து நாலு கொலை
நடந்திருக்கு அதுவும் பெரிய பெரிய நகைக்கடையோட பிள்ளைங்களா இருக்காங்க அதனால
நமக்கான எல்லா ரைட்ஸ்மே இந்த கேஸ்ல நமக்கு இருக்கு
.

நாளையிலிருந்து நம்ம அந்த இடத்துக்கே போய் யாரும்
விசாரிக்கணும்னாலும் விசாரிக்கலாம் இந்த ஒரு பிரச்சனையும் கிடையாது அதனால   நல்ல ரெஸ்ட் எடுங்க நாளைக்கு கண்டிப்பா முதல்
வேலையா த
ருண் வீட்டுக்கு தான் நம்ம போறோம்.

குரு !!!! எனக்கு பிரியாணி சாப்டனும் தோணுது சாப்பிட்டு போலாமா??

மீனா
உனக்கு
மண்டைல
எதாவது
இருக்கா நைட்டு 1மணிக்கு யார் கடை வச்சு இருக்கா

வேணும்னா வா போற வழியில் சுடுகாடு இருக்கு உன்  ப்ரெண்ட்ஸ் அங்கதா இருப்பாங்க பிரியாணி செஞ்சு சாப்பிட்டு போகலாம் என டீனாவை வம்பிழுக்க,

என்ன தைரியம் இருந்தா என்ன நேற்று சொல்லுவ
என எட்டி ஒரு மிதி விட தீனாவை தள்ளிக்கொண்டு  போய் விழ..

சின்ன
புள்ளைங்க மாறி
அடிச்சுகாம வீட்டுக்கு போங்க ….டைம் ஆகிடுச்சு நாளைக்கு சீக்கிரம் வரனும்இருவரும் விறைப்பாக சல்யூட் வைத்துவிட்டு ஒருவரை ஒருவர் தள்ளி கொண்டு அடித்து
கொண்டு,குருவும், டீனாவும் ஒரு ஜீப்பில் ஏறி வீட்டிற்கு
சென்று விட
….

சரியான வானரங்க ரெண்டும் என புலம்பிய படி  தீனா தனது வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டை
நோக்கி புறப்பட்டான் மணி பார்த்தால் நள்ளிரவு ஒரு மணியை காட்டியது
.

நல்ல
வேளையாக தீனாவிடம் எப்பொழுதும் இன்னொரு
சாவி
இருக்கும் அதை வைத்து அவன் வீட்
டை திறந்து மெதுவாக சென்று படுத்து விடுவான்.

நேரம் காலம்
பார்த்து சொன்ன நேரத்திற்கு வீட்டிற்கு வருவது எல்லாம் நாம் பார்க்கும் வேலையில் கிடைக்காது
முடிந்து அளவு இரவு உணவை வீட்டில் சாப்பிடுவதில் தான் விருப்பம் சில சமயம் வெளியே சாப்பிடும்
உணவு தன்உடலுக்கு பொருந்தாமல் போய்விடுகிறது
.
அதனாலே அதிக பசி இருந்தாலும் நேரம் கழித்து வந்தாலும் இரவிற்கு ஏதோ ஒன்று
வீட்டில் இருக்கும்
.

முன்பெல்லாம்
அவன் அம்மாவம்,
கண்ணம்மாவ
ும் தீனா வரும்
வரை ஹாலில் பாதி
தூங்கி பாதி
முழித்து கொண்டு இருக்க , குட்டிபையனும் அவர்களோடு தூங்கிக் கொண்டிருப்பான்.

இவன்
வரும்
வண்டி சத்தத்திற்கு அவர்கள் எழுந்து விட்டால் அவனும்
சேர்ந்து
எழுந்து கொள்வான். பிறகு தீனாவிற்கு வேண்டிய உணவை சுடாக
சமைத்து கொடுத்து சித்துவை உறங்க வைத்து
 அவர்களும் உறங்க சிவராத்திரிகதை தான்.

அனைத்தையும் யோசித்து கொண்டே வீட்டிற்கு முன் வந்துவிட காவலாளி வந்து கதவை மெல்லமாக திறக்க,

வீட்டுக்கு
முன் வந்து
 வண்டியை நிப்பாட்டி விட்டு உள்ளே
நுழைந்த தீனாவிற்கு வீட்டின்  நிசப்தம்
அனைவரும் தூங்கிவிட்டதை
அறிவுறுத்தியது
.பின்
மெதுவாக மாடிப் படியில் ஏறி சித்துவின் அறையை திறந்து பார்த்தவனுக்கு அவன் கண்களுக்கு
 இனிமையான காட்சி தென் பட்டது சித்துவை ஒரு கையால் அணைத்துக்கொண்டு தூங்கும் மதுவும், மதுவை இருக்க பற்றி கொண்டு
அவள் மேல் ஒற்றை காலை போட்டு  சித்துவும் தூங்கிக் கொண்டிருப்பதை பார்க்கும்
பொழுது நெஞ்சுக்குள் ஏதோ செய்தது
.

ஒரு நிமிடம் மது தன் நெஞ்சில் தூங்க உன்னோரு புறம் சித்துவை அணைத்து கொண்டு தான் உறங்கினால் என்று  அந்த காட்சியை நினைத்து பார்த்த தீனாவிற்கு தன் எண்ணத்தை நினைத்து விரக்தி புன்னகை சிந்தினாலும்  ஒருவேளை  இந்த கற்பனை உண்மையானால் …….

அவர்களின் தூக்கம் கலையாமல் அந்த காட்சியை கேமராவில் புகைப்படமாக
எடுத்துக் கொண்டு அவர்களை தொல்லை செய்யாதவாறு மெதுவாக நடந்து வெளியே வந்த தீனா

 தனது அறைக்கு சென்று பொத்தென்று மெத்தையில்  விழுந்து
தான்
எடுத்த புகைப்படத்தில்
தெரிந்த மதுவின் அமைதியான முகத்தை பார்த்துக்கொண்டே ஏதேதோ எண்ணங்கள் மனதை
ஆக்கிரமிக்க அப்படியே படுத்துவிட

நானும் இருக்கிறன் என்னை கொஞ்சம் கவனி என்று வயிறு சத்தமிட வயிற்றை தரனடவிகொண்டே எழுந்து சென்று உடைமாற்றிக் கொண்டு ஏதாவது சாப்பிட
இருக்கிறதா பார்க்க
கிச்சனிற்கு செல்வோம் என நினைத்துக் கொண்டே பாத்ரூமுக்குள் நுழைந்துகொண்டான்.

காத்திருங்கள்
🤍
🤍
🤍
🤍
பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்…..

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.