episode 11

Rani Govindh | 04 Nov 2025

Epi 11

சுபாஷை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் சுமதி கொடுத்த
வார்னிங்கை கூட பொருட்படுத்தாமல் இளமதி ரெஸ்ட் ரூம் செல்கிறேன் என்று பொய் சொல்லி
விட்டு சுபாஷின் ஆபிஸ் ரூம் நோக்கி போய் கொண்டிருந்தாள்.
போகும் வழியில் ரேணுகா வேறு யாரோடோ பேசியபடியே வந்து
கொண்டிருக்க அவளை பார்த்ததும் இளமதிக்கு பக்கென்று ஆனது
, அவள் பார்த்து விட்டால் நிச்சயம் சுமதியிடம் போட்டு
கொடுத்து விடுவாள்
, அதனால்
அவள் பார்க்க கூடாது என்று பயந்தவள் பதுங்கி பதுங்கி போய் கொண்டிருந்தாள்.
எப்படியோ ஆபிஸ் ரூம் அருகே சென்று விட்டாள்
, ஆனால் விதி யாரை விட்டது, யாரோடோ பேசி கொண்டிருந்த ரேணுகா சட்டென்று இவள் பக்கம்
திரும்புவது போல் இருக்கவும்
, எங்கு தன்னை பார்த்து விடுவாளோ என்கிற பயத்தில் அருகில் இருந்த அறைக்குள்
நுழைந்து விட்டாள்
, அது
சாம்புள் பீஸ் வைக்கும் அறை
, அந்த அறையில் நிறைய ரேக்குகளும், அந்த ரேக்கில் நிறைய துணிகளும் வைக்கபட்டிருந்தது. அவள் நேரமோ என்னவோ
ரேணுகாவும் அந்த அறைக்கு தான் எதோ ஒன்றை எடுக்க வந்திருக்கிறாள்
, அவள் பேச்சு சத்தம்
கேட்கவும் இளமதி இன்னும் உள்ளே போய் ஒரு ரேக்கிற்கு பின்னால் ஒளிந்து கொண்டாள்.

“இருக்கிற பிரச்சனைல இதெல்லாம் உனக்கு தேவையாடி, இப்போ தூரத்துல இருந்து
அவர பார்த்து நீ என்ன சாதிக்க போற
, சுமதி அக்கா சொல்லும் போதே பேசாம இருந்திருக்கணும், ஆர்வ கோளாறுல வந்து
நல்லா மாட்டிக்க போறேன்” என மனதிற்குள் புலம்பியபடி இளமதி ஒளிந்து கொண்டிருக்க
ரேணுகா துணியை எடுத்து விட்டு அங்கிருந்து போவது போல் தெரிந்தது.

அதை கவனித்தவள் “நல்லவேள கிளம்புறா” என நினைத்து
முடிப்பதற்குள் இன்னொரு ஆள் உள்ளே வரும் சத்தம் கேட்டு இளமதி நொந்து போனாள்.

அந்த ரேக்கின் சந்தில் இருந்து எட்டி பார்த்தவளுக்கு
அவனின் முதுகு பக்கம் தான் தெரிந்தது.

“நேத்து வந்த சேம்பிள் எடுத்துட்டு வாங்க” என அவன்
ரேணுகாவிடம் வேலை வாங்கி கொண்டிருந்தான்.

“ச்ச, இந்த சூப்பர்வைசருக்கு வேற வேலை இல்ல, போறவள பிடிச்சி வச்சிட்டு அத எடுத்துட்டு வா, இத எடுத்துட்டு வான்னு
இம்சை பண்ணிட்டு இருக்காரு
, இவங்க போனா
தான என்னால வெளியவே போக முடியும்
, இப்போ என்ன பண்றது” என அவள் யோசித்து கொண்டிருக்கும் போதே ரேணுகா இளமதி
இருந்த ரேக்கை நோக்கி வந்து கொண்டிருக்க
, அதை கவனித்தவள் ஒரு பெரிய துணி மூட்டைக்கு பின்னால் நன்றாக உட்கார்ந்து
கொண்டாள்.

ரேணுகாவும் எதையோ எடுத்து போய் அவனிடம் கொடுக்க அடுத்த
சில வினாடிகளுக்கு பிறகு கதவை மூடும் சத்தம் கேட்டது.

இளமதி பெருமூச்சி விட்டு கொண்டாள்.

“நல்லவேள கிளம்பிட்டாங்க, இல்லன்னா இப்படி எவ்ளோ நேரம் ஒளிஞ்சிட்டு இருக்க
முடியும்
, இந்நேரம்
சுமதி அக்கா என்ன தேடவே ஆரம்பிச்சிருப்பாங்க
, பேசாம எழுந்து போய்டலாமா, இல்ல வேண்டாம், ஒருவேள வெளிய போனவங்க திரும்ப வந்தாலும் வரலாம், எதுக்கும் அஞ்சு
நிமிஷம் கழிச்சி போவோம்” என நினைத்து கொண்டவள் அஞ்சு நிமிஷம் எப்பொழுது ஆகும் என
ஒன்றிலிருந்து ஆயிரம் வரை எண்ணியபடி உட்கார்ந்திருந்தாள். ஆயிரம் எண்ணியும் யாரும்
திரும்ப வராததால் இதற்கு மேல் பிரச்சனை இல்லை என்று எழுந்தவள் வேகமாக கதவை நோக்கி வரும்
பொழுது அவள் கண்ட காட்சி அவளை பதற வைத்தது.

வேகமாக கண்ணை மூடியபடி திரும்பி கொண்டாள்.

“சாரி, சாரி, எனக்கு,
அது வந்து” என அவளின் வார்த்தைகள் தடுமாறியது.

வெற்று மார்போடு நின்று கொண்டிருந்தவனோ இவள் எப்படி
இங்கிருந்து வந்தாள் என்று புரியாமல் குழப்பத்தோடு நின்று கொண்டிருந்தான்.

“நீங்க எப்படி இங்க, இவ்ளோ நேரம் இங்க தான் இருந்தீங்களா?

“அது, இருந்தேன், ஆனா
எதுவும் பார்க்கல”

“என்ன? இங்க இருந்தீங்களா, இந்த டைம்ல இங்க என்ன பண்றீங்க?” என்று கேட்டபடியே சட்டையை போட்டு கொண்டான்.

இப்படி அவன் கேட்டதும் என்ன சொல்லி சமாளிப்பது என்று
தடுமாறியவள் “சேம்பிள் துணி எடுக்க வந்தேன்
, மயக்கமா இருந்த மாதிரி இருந்தது, அதான் அப்படியே
உட்கார்ந்திட்டேன்” என வாய்க்கு வந்ததை அடித்து விட்டாள்.

அதை அவன் நம்பியது போல் தான் இருந்தது.

“இப்போ ஓகேவா?”

“இப்போ பரவால்ல, நீங்க ட்ரெஸ் போட்டுட்டீங்களா?

“எஸ், எஸ், நீங்க
திரும்பலாம்” என அவன் கூறிய பிறகு தான் அவள் திரும்பி அவனை பார்த்தாள். இதுவரை
அவனை இந்த கம்பெனியில் பார்த்ததாக அவளுக்கு நினைவில் இல்லை. ஒருவேளை புதிதாக
வேலையில் சேர்ந்திருப்பானோ
, ஆனால்
கம்பெனி யூனிபார்மில் தான் அவன் இருந்தான்
, ஒருவேளை ப்ரொடக்ஷனில் இருப்பானோ என அவள் ஒரு வினாடியில்
ஏதேதோ யோசித்து கொண்டிருந்தாள்.

அவள் அவனையே குறுகுறுவென்று பார்ப்பதை கவனித்தவன் “என்ன
அப்படி பார்க்கறீங்க
?” என கேட்டே
விட்டான். அதில் பதறி போனவள் “அது
, அது வந்து, உங்கள
இதுக்கு முன்னாடி இங்க பார்த்த மாதிரி நியாபகம் இல்ல
, அதான் எந்த டிப்பார்ட்மெண்ட்னு யோசிச்சிட்டு இருக்கேன்”
என மனதில் யோசித்ததை சொல்லியே விட்டாள். அதை கேட்டு சிரித்தவன் சில வினாடிகள்
எதுவும் சொல்லாமல் அவளையே உற்று பார்த்தான். பிறகு “நான் சுபாஷ் சார்கிட்ட வேலை
பார்க்கறேன்
, அவர் கூட
வந்தேன்
, அதான் என்ன
இதுக்கு முன்னாடி நீங்க பார்த்திருக்க மாட்டிங்க
, ஆமா உங்களுக்கு சுபாஷ் சார் யார்னு தெரியுமா?” என விசாரித்தான்.

“அவர தெரியாம எப்படி, அவர பத்தி தான் இந்த கம்பெனியே பேசிட்டு இருக்கே” என
ஆர்வத்தில் உளறி விட்டாள்.

“ஏன், என்ன பேசறாங்க? ஒருவேள அவர திட்றாங்களா?”

“இல்ல, அப்படி இல்ல, அவரு நிறைய
நல்லது பண்ணிருக்காருல்ல
, அதனால
கம்பெனியே அவர பாராட்டி பேசிட்டு இருக்காங்க
, அத தான் சொன்னேன், ஆமா இப்போ அவரு எங்க இருக்காரு, உங்களுக்கு தெரியுமா?” என ஆர்வ மிகுதியில் கேட்டாள்.

அவள் கண்களில் தெரிந்த ஆர்வத்தை அவன் நிச்சயம்
கண்டிருக்க வேண்டும்
, “அவரு” என
இழுத்தவன் “வேலை விசயமா ஏதாவது சொல்லனுமா
, என்கிட்ட சொல்லுங்க, நான் சொல்லிடறேன்” என வேண்டும் என்றே அவளிடம்
வம்பிழுத்தான்.

அவன் அப்படி சொன்னதும் அவள் முகம் வாடியது, “இல்ல, அதெல்லாம் ஒன்னும் இல்ல, அவர பார்க்கணும்” என
முக வாட்டத்தோடு கூறினாள்.

“ஒருவேள இந்த கம்பெனில உங்களுக்கு யாராவது டார்ச்சர்
கொடுக்கறாங்களா
, அத பத்தி
அவர்கிட்ட சொல்லனுமா
? இன்னும்
யாரையாவது வேலை விட்டு தூக்கணுமா
, சொல்லுங்க நான் அவர்கிட்ட பேசறேன்”

“அச்சோ, அதெல்லாம் ஒன்னும் இல்லங்க, அவரு இன்னைக்கு பண்ணதே இந்த கம்பெனிக்கு விடுதலை கிடைச்ச மாதிரி தான், அதுக்கு நன்றி சொல்ல
தான் அவர பார்க்க வந்தேன்
, வேற
ஒன்னும் இல்ல”

“ஓஹோ தேங்க்சா, பரவால்ல, நான்
சொல்லிக்கறேன்
, இப்போ அவர்
ரெஸ்ட்ல இருக்காரு
, இப்போ
யாராவது போனா என்ன தான் திட்டுவாரு”

அவன் கூறியதை கேட்டதும் அவள் முகம் இன்னும் வாடியது.
அவனை பார்க்க முடியாதா என்கிற வருத்தத்தில் சோகமாக நின்று கொண்டிருந்தவளை அவனோ
ஆழமாக ரசித்து கொண்டிருந்தான். சில வினாடிகளுக்கு பிறகு அவனை நிமிர்ந்து
பார்த்தவள் “சரிங்க
, எனக்கு
வேலை இருக்கு
, நான்
கிளம்பறேன்” என கூறி விட்டு கதவை திறக்க போக “உங்க பேர் சொல்லலையே” என கேட்டான்.

“இளமதி, ஆமா உங்க பேரு”

“சு.. சுந்தர்” என கூறியவன் கண்கள் மின்ன அவள் போவதையே
பார்த்து கொண்டிருந்தான். அவள் அங்கிருந்து போன சில நொடிகளில் அவனுக்கு கால்
வந்தது
, காலை
அட்டென்ட் செய்தவன் “எஸ்
, சுபாஷ்
தான் பேசறேன்” என யாரிடமோ தீவிரமாக பேசி கொண்டிருந்தான்.

எஸ், இந்த கம்பெனியின் ஓனர் சுபாஷே தான். யாரை இளமதி பார்க்க வேண்டும் என்று
ஆர்வத்தோடு வந்தாளோ அதே சுபாஷ் தான் அவளோடு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி அவளை
அனுப்பி வைத்திருக்கிறான்
, இது எங்கு
போய் முடியுமோ? இளமதியோ சுபாஷை பார்க்க முடியவில்லை என்கிற சோகத்தில் அவள்
டேபிளுக்கு வந்தாள்.

“என்ன இளமதி, இவ்ளோ நேரம் எங்க போன? நீ இந்த பக்கம் ரெஸ்ட் ரூம் போறேன்னு போன நேரத்துல
சுபாஷ் சாரே இங்க வந்து ரவுண்ட்ஸ் பார்த்துட்டு போனாரு தெரியுமா
?” என அவள் கூறியதும்
இளமதிக்கு ஏமாற்றமாகி போனது.

ஒழுங்காக அங்கேயே இருந்திருந்தால் அவனை
பார்த்திருக்கலாமோ என்று மனதிற்குள்ளே வருத்தப்பட்டாள். அவனை பார்க்க கூடாது
என்பது கடவுளின் தீர்ப்போ என்னவோ என நினைத்து கொண்டு தன் வேலையில் மூழ்கி போனாள்.
அன்று அதிக வேலை இருந்ததால் வேறு எந்த கவனமும் அவளுக்கு இருக்கவில்லை
, அந்த நேரத்தில் தான்
அவள் போனுக்கு ஒரு கால் வந்தது.

போனை எடுத்து பார்த்தவள் ப்ரைவேட் நம்பர் என ஸ்க்ரீனில்
இருக்கவும்
, அதை
அட்டென்ட் செய்து பேசுவதா வேண்டாமா என யோசித்து கொண்டிருந்தாள்.

“ஒருவேள, லாயரா கூட இருக்கலாம்” என நினைத்து கொண்டவள் ஒருவழியாக காலை அட்டென்ட்
செய்தாள்.

போனை காதில் வைத்தவள் “ஹெலோ” என கூற “டுடே நைட் நான்
சொல்ற அட்ரெஸ்க்கு வந்துடு” என எதிர்புறம் இருந்து குரல் வந்தது.

அவன் கூறுவதை புரிந்து கொள்ள முடியாதவள் “ஹெலோ, யார் பேசறீங்க, என்ன சொல்றீங்க, எனக்கு ஒன்னும் புரியல”
என கூற எதிர்புற ஆளோ கடுப்பானான்.

“அதுக்குள்ள என்ன மறந்துட்டியா? எய்ட் லேக்ஸ் வாங்கிட்டு போனதும் என்ன மறந்திட்டியா, அக்ரீமென்ட் சைன்
பண்ணிருக்க
, எப்போ நான்
கூப்ட்டாலும் எங்க வர சொன்னாலும் வருவேன்னு அக்ரிமெண்ட் சைன் பண்ணிருக்க
, நியாபகம் இருக்கா
இல்லையா
?” என
கோபத்தோடு கேட்டான்.

அதற்கு பிறகு தான் முந்தைய நாள் இரவு அவள்
அக்ரீமென்ட்டில் சைன் பண்ணிய விசயமே அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவளுக்கு என்ன
சொல்வது என்றே புரியவில்லை. அவள் அமைதியாக இருக்க
, அந்த பக்கம் இருப்பவனே மேற்கொண்டு பேசினான். மூன் டிலைட் ஹோட்டலுக்கு இன்னைக்கு நைட் எட்டு மணிக்கு நீ
வந்தாகணும்
, இல்ல உன்
வீட்டுக்கு நான் வருவேன்
, நீ
என்கிட்ட எப்படி எட்டு லட்சம் வாங்கிட்டு போனன்னு உன் வீட்ல இருக்கற எல்லாருக்கும்
சொல்வேன், பரவால்லையா
?” என
மிரட்டலாக கேட்டான்.

எங்கே அவன் வீட்டிற்கு வந்து விடுவானோ என அவளுக்கு
திக்கென்று இருந்தது
,
இத்தனைக்கும் உண்மையான வீட்டு அட்ரெஸ் வேறு முட்டாள்தனமாக கொடுத்து விட்டு
வந்திருக்கிறாள்
, இந்த
விஷயம் வீட்டிற்கு தெரிந்தால்
, அக்கம் பக்கத்தில் தெரிந்தால், அவளின் இரண்டு தங்கச்சி வாழ்க்கையும் என்னவாகும். அதெல்லாம் அவள்
மூளைக்குள் கேள்விகளாக எழ இளமதி வியர்த்து விறுவிறுத்தபடி போனை காதில் வைத்து
கொண்டிருந்தாள்.

“சொன்ன டைம்க்கு நீ வரலைன்னா நான் சொன்னத செய்ய
வேண்டியது வரும்” என கூறியவன் காலை கட் செய்து விட இளமதிக்கு தலையே சுற்றுவது போல்
ஆனது. அதே நேரம் காலை கட் செய்த விக்ரமன் அஜயை பார்த்து சக்சஸ் என்பது போல கட்டை விரலை
உயரத்தி காட்டினான்.

விக்ரமனின் ப்ளான் என்ன? எதற்காக இளமதியை ஹோட்டலுக்கு வர சொல்லிருக்கிறான்? தன் அடையாளத்தை மறைத்து
இளமதியிடம் விளையாட்டு காட்டும் சுபாஷின் மனதில் என்ன இருக்கிறது
?

இதற்கான பதிலை அடுத்தடுத்த எபிசோடில்  பார்க்கலாம்.

    No comments yet.