7. உனை சேர வருவேன்

Bharathi Gunasekaran | 21 Nov 2025 | Share

          பஸ் ஸ்டாப்பில் நின்ற ஆதினிக்கு அந்த லேடி கூறியதை நினைத்து நினைத்து அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வந்துக்கொண்டே இருக்க அதை தன் சுடிதார் ஷாலில் துடைத்துக்கொண்டு இருந்தாள்.

            

          தன் அம்மா அழுவதை பார்த்த யுகன் குட்டி கண்ணில் இருந்தும் கண்ணீர் வர தன் அம்மா கழுத்தை இறுக்கி கட்டிக்கொண்டு இருந்தவன் அவளிடம் இருந்து விலகி அவள் முகத்தை பார்த்தவன் அவள் கண்ணில் இருந்து வழியும் கண்ணீரை பார்த்து இன்னும் அந்த குட்டி மனம் வலிக்க தன் குட்டி கை கொண்டு அவள் கண்ணை துடைத்தவன் “அம்மா அழாத அந்த பாட்டி பேசுனது எல்லாம் நீ கேட்காத, நா இருக்கேன் உனக்கு அழாதமா, நீ அழுறத பாக்கும் போது எனக்கும் அழுகை வருது” என்றான்.

  

          அதை கேட்டு ஆதினி மனம் வலிக்க வேகமாக தன் கண்ணை துடைத்துக்கொண்டு தன் மகனை பார்த்தவள் “ஒன்னும் இல்ல தங்கம் அம்மா அழுகுல ம் சரியா” என்று தன் ஷால் கொண்டு தன் மகன் கண்ணை துடைத்து விட்டாள்.

        

          அதில் தன் அம்மா கையை பிடித்த யுகன் “சரி நா அழுகுல நீயும் அழ கூடாது, அந்த பாட்டி சொன்னது எல்லாம் நீ கேட்காத சரியா” என்றான்.

  

           அதை கேட்டு தன் மகனை அதிர்ச்சியாக பார்த்த ஆதினி “அவங்க சொன்னது உனக்கு புரிஞ்சிச்சா?” என்று கேட்டாள்.

 

           “ம்ஹும் இல்லமா எனக்கு புரியல, ஆனா உன்ன அழ வெக்குற மாதிரி தான் சொல்லிருக்காங்கன்னு எனக்கு தெரியும்” என்றான்.

 

            அதை கேட்டு பிறகு தான் ஆதினிக்கு உயிரே வர “அது எல்லாம் ஒன்னும் இல்ல அம்மா நல்லா தான் இருக்கேன்” என்றாள்.

 

            “சரி அப்போ எனக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடு” என்று தன் அம்மாவை சிரிக்க வைக்க அப்படி கேட்டான் யுகன்.

 

          அதை கேட்டு தன் மகனை செல்லமாக முறைத்த ஆதினி “எதுக்கு ஐஸ் கிரீம்?” என்று கேட்டாள்.

 

          “எதுக்கு கேட்பாங்க சாப்பிட தான்” என்றான் யுகன்.

 

           “ஆ சாப்பிட தான் கேட்பாங்க, ஆனா உனக்கு எதுக்கு இப்போ?” என்று தன் மகனை முறைத்தாள் ஆதினி.

   

           “இப்போ தான் சாப்பிட தான்மா” என்று அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு கூறினான் யுகன்.

 

           “ம் இப்போ தான் சாப்பிட தானே ஆ வாங்கி தரேன்” என்றாள் ஆதினி.

 

           அதை கேட்டு யுகன் கண்கள் இரண்டும் விரிந்து “அம்மா நிஜமாவா நீயா சொல்ற வாங்கி தரேன்னு!” என்று தன் குட்டி பல்லை காட்டி கேட்டான்.

 

           “ஆ ஆமா நான் தான் வாங்கி தரேன் நல்லா சாப்பிடு, அதுக்கு அப்பறம் பல்லுல நல்லா சொத்தை விழும் அப்பறம் இந்த குட்டி பல்லு எல்லாம் வலிக்கும், அப்பறம் கம்பிய பல்லுக்கு நடுவுல விட்டு ஆட்டி பல்ல பிடுங்குவாங்க ரத்தம் நிறைய போகும் ரொம்ப வலிக்கும்” என்றாள் ஆதினி.

 

           அதை கேட்டு யுகன் கண்கள் இரண்டும் விரிந்து “அம்மா அம்மா இரு இரு நீ எனக்கு ஐஸ் கிரீமே வாங்கி தர வேண்டாம், நீ அழுதுட்டு இருக்கியேன்னு தான் உன்கிட்ட அப்படி கேட்டா நீ நார்மலாகுவேன்னு தான் சொன்னேன், ஆனா நீ இருக்க பாரு பேய் படத்துல வர மாதிரி சொல்ற” என்றான்.

 

          அதை கேட்டு தன் மகனை பார்த்து சிரித்த ஆதினி “நா உண்மைய தான்பா சொல்றேன் அப்படி தான் பண்ணுவாங்க” என்றாள்.

    

         “இல்ல இல்ல எதுவும் பண்ண வேண்டாம், எனக்கு ஐஸ் கிரீமே வேண்டாம், இன்னும் நாம்ப போற பஸ் வருளையா?” என்று கேட்டு தன் அம்மாவை முறைத்தான்.

 

          “ஆ வந்துடும் வந்துடும் அது வரைக்கும் வேணா ஐஸ் கிரீம் சாப்பிடு” என்றாள் ஆதினி.

 

           அதில் தன் அம்மாவை சைடில் பார்த்து முறைத்த யுகன் தலைக்கு மேல் கையை தூக்கி கும்பிடு போட்டு “ஒன்னும் வேண்டாம்” என்றான்.

   

           அவன் செய்கையை பார்த்து ஆதினிக்கு மேலும் சிரிப்பு வர உதட்டை மடக்கி தன் சிரிப்பை அடக்கினாள், அதை பார்த்து தன் அம்மாவை முறைத்த யுகன் “சிரிப்பா வருது உனக்கு?” என்று கேட்டான்.

 

          “ம்ம்ம்” என்று தன் சிரிப்பை அடக்கியவாறு மேலும் கீழும் தலையை ஆட்டினாள் ஆதினி.

 

           அதில் இன்னும் தன் அம்மாவை முறைத்த யுகன் “சரி சிரிச்சிட்டு போ” என்றவன் அவள் கழுத்தை தன் இரண்டு கையால் அணைத்து அவள் கன்னத்தில் அழுத்தி முத்தம் கொடுத்தான்.

  

               அதில் ஆதினி மனதில் இருந்த வலி எல்லாம் காணாமல் போய் தன் மகனை பார்த்து புன்னகை புரிந்தவள் அவன் இரு கன்னத்தில் முத்தம் கொடுத்து “யுகா குட்டி நீ இல்லைனா அம்மா என்னடா பண்ணிருப்பேன்?” என்றாள்.

 

           “ம் நா இல்லைனா என்னோட தொல்லை இல்லாம நிம்மதியா இருந்திருப்ப என்ன விட்டு சாக்லேட் ஐஸ் கிரீம் ஸ்னேக்ஸ் எல்லாம் நல்லா சாப்பிட்டு இருப்ப” என்றான்.

 

             அதை கேட்டு தன் மகனை முறைத்த ஆதினி “நா சொன்னேனா நீ இல்லைனா நா நிம்மதியா இருப்பேன் இது எல்லாம் திப்பேன்னு” என்றாள்.

 

          “ஹா இல்ல தான்,  சரி சரி நா இல்லைனா நீ சோகமா இருந்துருப்பா இப்போ அழுத பாரு அந்த பாட்டி சொல்லுச்சின்னு அந்த மாதிரி அழுதுட்டு இருப்ப, ஆனா இப்போ என்னால தானே நீ சிரிச்சி ஹாப்பியா இருக்க” என்று தன் குட்டி கண்ணை சிமிட்டி சிரித்தவாறு கூறினான்.

 

           அதை கேட்டு சிரித்த ஆதினி “ஆமா என்னோட குட்டி செல்லம் தான் அவன் அம்மாவ அழாம பாத்துக்குறான், இந்த குட்டி பையன் மட்டும் என்கூட இல்ல நா அவ்ளோ தான்” என்றாள் தன் மகன் மூக்கை பிடித்து ஆட்டி.

 

        “ஆ அம்மா” என்று தன் அம்மா கையை பிடித்து சிரித்தான் யுகன் குட்டி.

 

          அப்போது அவர்கள் செல்ல வேண்டிய பஸ் வர “ம் பஸ் வந்துடுச்சி போலாம்” என்றாள் ஆதினி.

        

          “ஆ என்ன இறக்கி விடு, என்ன தூக்கிட்டே எப்படி நீ பஸ்ல ஏறுவ” என்றான் யுகன்.

          

           “ஆ ஆ இறக்கி விடுறேன்” என்று ஆதினி தன் மகனை கீழே இறக்கி விட பஸ் இவர்கள் அருகில் வந்து நின்றது, “ம் வா” என்று பஸ் அருகில் சென்று தன் மகனை முதலில் ஏற்றி விட்டு தான் அவன் பின்னால் ஏறி இருவரும் சென்று ஒரு சீட்டில் அமர்ந்தனர்.

            

         பின் சிறிது நேர பயணத்திற்கு பிறகு தேவகி ஹாஸ்பிடல் முன் பஸ் நிற்க “யுகா வா” என்று தன் மகனை அழைத்துக்கொண்டு ஆதினி கீழே இறங்கியவள் அவன் கையை பிடித்து ஹாஸ்பிடல் நோக்கி நடந்தவள் “யுகா இங்க பாரு அங்க வந்து தேவகி பாட்டி கிட்ட இல்ல மயூரன் சார் கிட்ட நீ சாக்லேட் கேட்டா அம்மா உன்கிட்ட பேச மாட்டேன்” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு.

 

        அதில் தன் அம்மாவை முறைத்த யுகன் “நீயும் வாங்கி தர மாட்ட வாங்கி தரவங்க கிட்டையும் வாங்க விட மாட்ட, சரி அம்மா சொல்லிட்ட நா கேட்குறேன் வாங்க மாட்டேன் போதுமா” என்றான்.

 

         “ம் சரிங்க சார், ஆனா எங்க இருந்துடா இப்படி பேச கத்துக்குற? நா எல்லாம் எப்படி பேசவே மாட்டேன், என்ன விட நீ பத்து மடங்கு பேசுற” என்றாள் ஆதினி.

 

          “ம் வீட்டுல ஒருத்தராவது வாய் பேசணும் இல்ல, அதுக்கு தான் நா பேசுறேன்” என்றான் யுகன்.

 

         “ம் அது சரி” என்று அவனை செல்லமாக முறைத்தாள் ஆதினி.

 

           அப்போது “ஏய் யுகா செல்லம்” என்று அவர்கள் முன் மயூரன் குரல் கேட்டது.

 

          அதில் இருவரும் நேராக பார்த்தவர்கள் “ஈ மயூ” என்று தன் குட்டி பல் அனைத்தையும் காட்டி சிரித்த யுகன் அவன் அருகில் ஓடி செல்ல.

    

         “ஏய் யுகா பாத்து” என்று ஆதினி கூற.

 

         ஓடி வரும் அவனை பார்த்து சிரித்த மயூரன் தன் அருகில் வந்தவனை ஒரே தூக்காக தூக்கி கொண்டவன் அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து “சார் இங்க என்ன பண்றிங்க? என்ன என்ன பாக்க தானே வந்த?” என்று கேட்டான்.

      

         “ம்ஹும் இல்லையே நா தேவாவ பாக்க வந்தேன்” என்றான் யுகன்.

 

        அதை கேட்டு ஆதினி உதடுக்குள் சிரிக்க அவளை பார்த்து முறைத்த மயூரன் யுகனை பார்த்து முறைத்து “அப்போ நீ என்ன பாக்க வருல?” என்று கேட்டான்.

 

          “ம்ம்” என்று அவனை சைடில் பார்த்த யுகன் “ம்ஹும்” என்று சின்ன சிரிப்புடன் இல்லை என்று தலையை ஆட்டினான்.

 

            அதை கேட்டு இன்னும் அவனை முறைத்த மயூரன் “அப்போ நீ என்ன பாக்க வருல இல்ல நீ போ போய் உங்க தேவாவையே பாரு போ” என்று அவனை கீழே இறக்கி விட சென்றான்.

 

          “ஹான் மயூ மயூ வேண்டாம்” என்று மயூரன் கழுத்தை தன் இரண்டு கையால் கட்டி தன் காலை அவன் இடுப்பை சுற்றி கட்டிக்கொண்டு குரங்கு குட்டி போல் பிடித்துக்கொண்டான் யுகன்.

 

            “யுகா” என்று ஆதினி தன் மகனை அதட்ட.

 

            மயூரன் அவனை மேலே தூக்கி அவனை நன்றாக பிடித்துக்கொண்டவன் அவனை பார்த்து முறைக்க அவனை பார்த்து ஈ என்று சிரித்த யுகன் “சும்மா சொன்னேன் நா ஃபஸ்ட் பாக்க வந்தது என்னோட மயூவ தான்” என்று கூறி அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.

 

          அவன் முத்தம் கொடுத்த இடத்தை துடைத்த மயூரன் “இப்படி முத்தம் கொடுத்து எனக்கு ஐஸ் வெக்க பாக்குறியா நீ ஒன்னும் வேண்டாம் போ” என்றான்.

 

             “அது எல்லாம் ஒன்னும் இல்ல” என்று அவனை பார்த்து பாவமாக பார்த்து கூறிய யுகன் “அம்மா நீ சொல்லு நாம்ப மயூவ பாக்க தானே வந்தோம்” என்றான்.

 

          ‘ம்கூம் நல்ல ஆள் கிட்ட போய் கேட்குற பாரு’ என்று மயூரன் சலிப்பாக அவளை பார்த்தான்.

 

           அதை உணராத ஆதினி “இல்லையே நாம்ப தேவகி மேடம தானே பாக்க வந்தோம்” என்று சின்ன சிரிப்புடன் கூறினாள்.

 

          ‘ம்ஹும் அதுதானே பாத்தேன்’ என்று மனதில் கூறிய  மயூரன் யுகனை பார்த்து முறைக்க அவனை பாவமாக பார்த்த யுகன் “நா உன்ன பாக்க தான் வந்தேன், என்ன நம்பு” என்றான்.

 

            அதை கேட்டு சிரித்த மயூரன் “ம் சரி சரி உடனே மூஞ்சிய இப்படி வெச்சிக்காத” என்று அவன் இரு கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.

 

              அப்போது “என்ன மயூரன் இது இது ஹாஸ்பிடல் இங்க எதுக்கு இவன தூக்கி வெச்சி இப்படி கொஞ்சிட்டு இருக்க? பாரு எல்லாரும் உங்கள எப்படி ஒரு மாதிரி பாக்குறாங்கன்னு, ஏய் ஆதினி அவன் தான் இப்படி பண்ணிட்டு இருக்கானா உனக்கு இது எல்லாம் தெரியாதா, எதுக்கு இங்க எல்லாம் பையன கூட்டிட்டு வர” என்று விஷ்ணுபிரியா பேச……

 

             அதை கேட்டு ஆதினி அவளை அதிர்ச்சியாக “விஷ்ணு” என்று கத்தினான் மயூரன்.

    

         அதை கேட்டு விஷ்ணுபிரியா அவனை அதிர்ச்சியாக பார்க்க அங்கு இருந்த அனைவரும் இவர்களை பார்த்தனர்.

    No comments yet.