மயூரன்! மயூரன் MBBS, MD NEURO என்று போர்டு போடப்பட்டு இருக்கும் அறை கதவை திறந்துக்கொண்டு உள்ளே சென்றவன் தன் இருக்கையில் அமர்ந்து “நர்ஸ்” என்றான்.
அப்போது உள்ளே வந்த நர்ஸ் “குட் மார்னிங் டாக்டர்” என்றார்.
“குட் மார்னிங் சிஸ்டர்” என்று புன்னகை புரிந்த மயூரன் “op இருக்கா?” என்று கேட்டான் மயூரன்.
“ஆ ஆமா டாக்டர் இருக்கு 20 op இருக்கு சார்” என்றார் சிஸ்டர்.
“ஓகே ஒவ்வொருத்ரரா அனுப்புங்க” என்றான் மயூரன்.
“ஆ ஓகே டாக்டர், அப்பறம் டாக்டர் விஷ்ணு டாக்டர் உங்கள பாக்க வந்தாங்க” என்றார்.
“விஷ்ணுவா! எதுக்கு எதாவது சொன்னாங்களா?” என்று கேட்டான் மயூரன்.
“ம்ஹும் இல்ல டாக்டர் எதுவும் சொல்லுல உங்கள வந்து கேட்டாங்க நீங்க இன்னும் வருலன்னு சொன்ன உடனே சரின்னு சொல்லிட்டு போயிட்டாங்க” என்றார் சிஸ்டர்.
“ஓகே நா என்னனு பாத்துக்குறேன், நீங்க போயிட்டு op பேஷண்ட் அனுப்புங்க” என்றான் மயூரன்.
“சரிங்க டாக்டர்” என்று விட்டு வெளியே சென்ற சிஸ்டர் ஒவ்வொரு பேசண்ட்டாக உள்ளே அனுப்பினார்.
மயூரனும் அவர்களை புன்னகையுடன் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு அதற்கு வைத்தியம் பார்த்துக்கொண்டு இருந்தான்.
அப்போது ஒரு பேஷண்ட் வெளியே சென்ற பிறகு “மே ஐ கம் இன் டாக்டர்” என்று ஒரு பெண் குரல் அழகாக கேட்டது.
அதை கேட்டு புன்னகை புரிந்த மயூரன் “எஸ் கம் இன் டாக்டர்” என்றான்.
அதில் உள்ளே வந்து அவனை பார்த்து முறைத்த விஷ்ணுபிரியா “எங்கடா இவ்ளோ நேரம் போன? ஏன் ஹாஸ்பிடல் வர லேட்?” என்று கேட்டாள்.
“ஓ உன்கிட்ட சொல்லுல இல்ல, இன்னைக்கி யுகன் குட்டிய ஸ்கூல் சேர்த்த போனேன்” என்றான் மயூரன்.
அதை கேட்டு விஷ்ணுபிரியா முகம் மாறி போக அதில் அவனை முறைத்தவாறு அவன் எதிரே இருந்த சேரில் அமர்ந்தவள் “நீ எதுக்கு போன?” என்று கேட்டாள்.
“அது அம்மாவோட பிரெண்டு தான் ஸ்கூல் பிரின்சிபால், அப்பறம் யுகன் குட்டி பத்தி தெரியும் இல்ல அதுதான் ஆதினி தயங்கிட்டு மாட்டா சோ நா பேச போனேன்” என்றான் மயூரன்.
“அத ஆண்டியே பேசிருப்பாங்க இல்ல, நீ எதுக்குடா போகணும்?” என்று கேட்டாள்.
அதை கேட்டு அவளை பார்த்த மயூரன் “ஏன் நா போனா என்ன? இப்போ எதுக்கு நீ இத்தனை கேள்வி கேட்டுட்டு இருக்க?” என்றான்.
“ஆ… அது இல்ல ஒன்னும் இல்ல, சரி ஸ்கூல் சேர்த்தியாச்சி தானே?” என்று கேட்டாள் விஷ்ணுபிரியா.
“ஆ சேத்தியாச்சி, நா ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் போறாரு” என்று புன்னகை புரிந்தான் மயூரன்.
“ஏன் மயூரா இன்னும் எவ்ளோ நாளைக்கு ஆதினி இப்படியே இருப்பா? அவளுக்கு ஒரு துணை வேண்டாமா?” என்று கேட்டாள்.
அதை கேட்டு புன்னகை புரிந்த மயூரன் “ம் ஆமா வேணும் தான்” என்றான்.
“ஆ வேணும்டா, அப்போ தான் யாருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது, நா வேணா எங்க பேமிலி சைடு, இல்ல எங்க அப்பா ஆபிஸ்ல வேலை செய்யுற யாராவது நல்ல பையனா இருந்தா பாக்குட்டா?” என்று கேட்டாள்.
“ம் எதுக்கு?” என்று புருவம் சுருங்க அவளை பார்த்தான் மயூரன்.
“அதுதான் ஆதினிக்கு கல்யாணம் பண்ணி வெக்க?” என்றாள்.
“ம் அது எல்லாம் ஒன்னும் வேண்டாம், உனக்கு எதுக்கு அந்த வேலை? ஆமா உனக்கு op இல்லையா?” என்று கேட்டான் மயூரன்.
“ஆ இருக்கு” என்றாள் விஷ்ணுபிரியா.
“அப்போ அத போய் பாரு எனக்கு வேலை இருக்கு, நாம்ப அப்பறம் பேசலாம்” என்றான் மயூரன்.
“ம் சரி” என்று விட்டு எழுந்து சென்றாள் விஷ்ணுபிரியா.
போகும் அவளை பார்த்த மயூரன் “என்னோட ஆளுக்கு இவ மாப்பிள்ளை பாக்குறாளாம், நானே எப்போடா என்னோட லவ்வ சொல்லி எங்க கல்யாணம் நடக்கும்னு பாத்துட்டு இருக்கேன், இவ வேற” என்று திட்டியவன் “சிஸ்டர் அடுத்த பேஷண்ட் அனுப்புங்க” என்றான்.
“ஓகே டாக்டர்” என்றார் அவர்.
இங்கு வெளியே வந்த விஷ்ணுபிரியா ‘அவளுக்கு மாப்பிள்ளை பாத்தா இவனுக்கு என்ன? ஏன் வேண்டாம்னு சொல்றான்? ஏற்கனவே அந்த பையன தூக்கி வெச்சிட்டு இவன் சுத்துறதுல எல்லாரும் இவனையும் அந்த ஆதினியும் சேர்த்து வெச்சி பேசிட்டு இருக்காங்க, இவனும் யுகா யுகான்னு ஓட்டிட்டு இருக்கான், இப்போ நா என்ன பண்றது, இவன் கிட்ட நம்ப லவ் சொல்லலாம்னு நினைச்சாலும் பயமா இருக்கு, ஏற்கனவே காலேஜ் படிக்கும் போதே சொல்லி அவன் லவ் எல்லாம் வேண்டாம் பிரெண்ட்ஸா வேணா இருக்கலாம்னு சொல்லிட்டான், நானும் சரின்னு சொல்லிட்டேன், இப்போ அவன் மனசுல என்ன இருக்குன்னு வேற தெரியல, இப்போ போய் திரும்ப எப்படி பேசுறது! பாக்கலாம் சீக்கிரம் திரும்ப பேசணும் அவன் சம்மதம் வாங்கணும், இந்த ஆதினிக்கு ஒரு முற்றுப்புள்ளி வெக்கனும்’ என்று மனதில் புலம்பியவாறு சென்றாள் விஷ்ணுபிரியா.
மயூரன் விஷ்ணுபிரியா இருவரும் காலேஜில் ஒற்றாக படித்தவர்கள், மயூரன் அவளை பிரெண்டாக பார்த்தான் ஆனால் விஷ்ணுபிரியா அவனை காதலனாக பார்க்கிறாள்.
மூன்றாம் வருடம் காலேஜ் படிக்கும் போதே விஷ்ணுபிரியா மயூரினிடம் தன் காதலை கூறினாள் ஆனால் அவனுக்கு அவள் மீது அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லாததால் அவள் காதலுக்கு மறுப்பு தெரிவித்து விட்டான், ஆனால் விஷ்ணுபிரியா அவனை மறக்க முடியாமல் காலேஜ் முடித்த பிறகும் அவனை விட்டு பிரிந்து செல்ல முடியாமல் அப்ராட்டில் வேலை கிடைத்தும் அங்கு செல்லாமல் மயூரனின் அம்மா ஹாஸ்பிடலிலே வேளைக்கு சேர்ந்து இங்கையே உள்ளாள்.
அன்று மாலை ஆதினி வேலை எல்லாம் முடித்து விட்டு தனபால் அறைக்கு சென்றவள் “சார்” என்றாள்.
“ஆ ஆதினி வேலை எல்லாம் முடிஞ்சிடுச்சாமா?” என்று கேட்டார்.
“ஆ சார் முடிஞ்சிடுச்சி, நாங்க கிளம்புட்டா?” என்று கேட்டாள்.
“ஆ சரிம்மா கிளம்புங்க, ஆதினிமா நா கேக்குறேன்னு தப்பா எடுத்துக்க வேண்டாம், யுகன் குட்டிய……”
“சார் ப்ளீஸ் திரும்ப திரும்ப கேட்டு சங்கடப்படுத்தாதீங்க, நா யுகன எங்கையும் அனுப்ப மாட்டேன் ப்ளீஸ் சார் சாரி” என்று சங்கடமாக கூறினாள்.
அதில் அவளை முறைத்த தனபால் “ஏன் இப்படி பண்ற, ஏன் யுகன் மேல எனக்கு எந்த உரிமையும் இல்லையா?” என்று கேட்டார்.
“சார் பாசத்துல எல்லாம் உரிமையும் இருக்கு, ஆனா ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க எங்களால யாருக்கும் எந்த கஷ்டமும் வேண்டாம்னு நா நினைக்கிறேன்” என்றாள்.
அதில் அவளை மேலும் முறைத்த தனபால் “இந்த சமுதாயத்துக்கு நீ ஏன் இப்படி பயப்படுறேன்னு எனக்கு தெரியல, அப்படி பயப்பட எதுவும் இல்லமா, பேசுறவங்க பேசிட்டு போறாங்க அவங்களுக்கு பேச மட்டும் தான் தெரியும்” என்றார்.
“ஆனா அவங்க பேசுறது வலிக்குது இல்ல சார்” என்றாள் ஆதினி.
அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்த தனபால் “சரிமா இதுக்கு மேல உன்ன சங்கடப்படுத்த விரும்புல, இரண்டு பேரும் பாத்து போயிட்டு வாங்க, பையன பஸ்ல பாத்து கூட்டிட்டு போ” என்றார்.
“ம் சரிங்க சார், சாரி சார்” என்றாள்.
“விடுமா இதுக்கு எதுக்கு சாரி சொல்ற, உன்ன பத்தி எனக்கு தெரியாத, நீ ஏன் சொல்றேன்னு எனக்கும் நல்லா புரியுது, விடு எல்லாம் உங்க கல்யாணம் வரைக்கும் தானே” என்றார்.
அதை கேட்டு அவரை அதிர்ச்சியாக பார்த்த ஆதினி “சார் என்ன சொல்றிங்க எங்க கல்யாணமா!” என்று கேட்டாள்.
‘ஐயோ உளறிட்டேனே’ என்று விழித்த தனபால் “ஆ அது மயூரன் கல்யாணம் வரைக்கும் தானே, அந்த பையன் கிட்ட அப்படியே பேசி பேசி உன்கிட்டையும் அப்படியே சொல்லிட்டேன்மா, வேற ஒன்னும் இல்ல” என்றார்.
அதை கேட்டு அமைதியான ஆதினி “ஓ சரிங்க சார், அப்போ நா கிளம்புறேன்” என்றாள்.
“ஆ சரிமா” என்ற தனபால் “யுகன் செல்லம் அம்மா கூட பாத்து போயிட்டு வாங்க, பஸ்ல பாத்து ஏறணும், அம்மா கை பிடிச்சிட்டு தான் இருக்கனும், அம்மா கை விட்டு எங்கையும் போக கூடாது” என்றார்.
“ஆ மில்க் நா எங்கையும் போக மாட்டேன், அம்மாவ பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுறேன்” என்றான் யுகன்.
அதை கேட்டு ஆதினி தனபால் இருவரும் சிரித்து “சரிங்க சார் பாத்து கூட்டிட்டு போங்க” என்றார்.
ஆ என்று சிரித்த யுகன் சேரில் இருந்து இறங்கி தனபால் பக்கம் வந்து “மில்க் கன்னத்த காட்டு” என்றான்.
“யுகா வாங்க போங்கன்னு பேசுடா, எத்தனை டைம் சொல்றது” என்றாள் ஆதினி.
அதில் தன் அம்மாவை பார்த்த யுகா “சரிமா” என்றவன் “மில்க் காட்டுங்க” என்றான் தனபாலை பார்த்து.
அவனை பார்த்து சிரித்த தனபால் கீழே கொஞ்சம் குனிந்து தன் கன்னத்தை காட்டினார்.
யுகன் குட்டி அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்தவன் “பை மில்க்” என்றான்.
அதில் சிரித்த தனபால் தானும் அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தவர் “நாளைக்கும் வருவீங்க தானே?” என்று கேட்டார்.
“ஆ மில்க் ஸ்கூல் போற வரைக்கும் வருவேன்” என்றான்.
“சரிங்க சார் வாங்க” என்று சிரித்தவர் “பாத்து போயிட்டு வாங்க” என்றார்.
சரி என்று இருவரும் கூறிவிட்டு வெளியே வந்தவர்கள் ஆதினி தேவகிக்கு ஃபோன் செய்தாள்.
இங்கு ஹாஸ்பிடலில் இருந்த தேவகி கால் அட்டன் செய்து “என்ன ஆதினி கிளம்பிட்டீங்களா?” என்று கேட்டார்.
“ஆ மேடம் நீங்க ஹாஸ்பிடல்ல தானே இருக்கீங்க? நாங்க வருட்டா?” என்று கேட்டாள்.
“ஆ ஆதினி வாங்க பாத்து வாங்க இரண்டு பேரும்” என்றார் தேவகி.
“ஆ மேடம் தேங்க் யூ” என்றவள் கால் கட் செய்து விட்டு “தேவகி பாட்டிய போய் பாத்துட்டு தேங்க்ஸ் சொல்லிட்டு நாம்ப வீட்டுக்கு போலாம்” என்று தன் மகனை பார்த்து கூறினாள் ஆதினி.
“ஆ அம்மா” என்று சிரித்தான் யுகன்.
தன் மகனை பார்த்து சிரித்த ஆதினி “வா” என்று அவன் கையை பிடித்து பஸ் ஸ்டாப்கு நடந்து சென்றாள்.
அப்போது எதிரே வந்த ஒரு 40 வயது தக்க பெண் ஆதினியை பார்த்து புருவம் சுருக்கியவர் அவள் அருகில் வந்து “ஏய் நீ கதிர்வேல் அண்ணனோட பெரிய பொண்ணு தானே?” என்று கேட்டார்.
அதை கேட்டு அவரை அதிர்ச்சியாக பார்த்த ஆதினி “ஆ இ இ இல்ல” என்றவள் தன் மகன் கையை இறுக்கி பிடித்து அவரை தாண்டி செல்ல போனாள்.
“ஏய் நில்லு” என்று அவள் கையை பிடித்து நிறுத்திய அவர் “என்ன இல்லன்னு சொல்லிட்டு போற? அதுதான் சங்கீதா அண்ணி முகம் அப்படியே இருக்கே உனக்கு, அவங்க பெரிய பொண்ணு பேரு கூட ஆ அது ஆ ஆதினி தானே நீ?” என்றார்.
அதில் இன்னும் அவரை அதிர்ச்சியாக பார்த்த ஆதினி தன் மகனை பார்க்க யுகன் குட்டி இருவரையும் பார்த்தவன் “ஆமா எங்க அம்மா பேர் ஆதினி தான், நீங்க யாரு?” என்றான்.
அதில் இன்னும் தன் மகனை அதிர்ச்சியாக பார்த்த ஆதினி “யுகா அமைதியா இரு” என்று நடுக்கத்துடன் கூறியவள் “என்னோட கைய விடுங்க நாங்க போகணும்” என்றாள்.
“இரு இரு எதுக்கு இப்படி பறக்குற? ஆ உன்ன பத்தி எல்லாம் கேள்விப்பட்டேன், ஆமா இந்த ஊருல தான் இருக்கீயா நீ? ஆமா அந்த குழந்தை தான் இதுவா, ம் நல்லா தான் இருக்கான், ஆமா இப்போவாவது இவன் அப்பன் யாருன்னு கண்டு பிடிச்சியா? அது எப்படி உனக்கு தெரியாம போகும் புள்ளைக்கு அப்பன் யாருன்னு தெரியாமையா படுத்து பிள்ளைய வாங்கி இருப்ப, என்ன உன்ன வேண்டாம்னு விட்டுட்டு போயிட்டானா, அதுதான்……”
“போதும் நிறுத்துங்க, நான் தான் நீங்க சொல்ற பொண்ணு இல்லன்னு சொல்லிட்டேன் இல்ல, அப்பறம் எதுக்கு திரும்ப பேசிட்டு இருக்கீங்க, உங்க வேலை என்னமோ அத மட்டும் பாருங்க” என்று கண்ணில் நீர் வடிய கூறிய ஆதினி அவர் கையில் இருந்து தன் கையை வேகமாக உருவிக்கொண்டு “யுகா வா” என்று தன் மகனை தூக்கிக்கொண்டு அங்கிருந்து வேக வேகமாக சென்றாள்.
அழும் தன் அம்மாவை கவலையாக பார்த்த யுகன் குட்டி திரும்பி அந்த லேடியை பார்த்து முறைத்தான் தன் அம்மாவை அழ வைத்து விட்டார் என்று.
“ம் திமிர பாரு தப்பான வழியில போய் புள்ளைய வாங்கிட்டு இப்போ என்னமோ பெரிய இவ மாதிரி பேசிட்டு போறா, ம் அப்படி ஒரு நல்ல மனுஷனுக்கு இப்படி ஒரு கேடு கெட்ட பொண்ணு ம்… எல்லாம் நேரம் புள்ளைய படிக்க தெரியாத ஊருக்கு ஊரு விட்டு ஊரு அனுப்புன அந்த மனுஷன சொல்லனும்” என்று திட்டி விட்டு அங்கிருந்து சென்றார்.
இங்கு பஸ் ஸ்டாப்பில் வந்து நின்ற ஆதினி கண்ணில் இருந்து கண்ணீர் வழிய அதை தன் கையால் துடைத்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வர அதை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி நின்றிருந்தாள்.
தன் அம்மாவை கவலையாக பார்த்த யுகன் குட்டி அவள் கழுத்தை தன் இரண்டு கையால் கட்டிக்கொண்டு அவள் தோலில் சாய்ந்துக்கொண்டவன் கண்களும் கலங்கியது.
No comments yet.