மயூரன் தன் அப்பாவிடம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்ல வந்து கதவை திறக்க அப்போது சரியாக தானும் கதவை திறந்த ஆதினி “மே ஐ கம் இன் சார்” என்றாள்.
“ஆமா நாங்க உள்ள வரலாமா?” என்று தன் குட்டி தலையை உள்ளே நீட்டி கேட்டான் யுகன் குட்டி.
அதை கேட்டு அப்பா மகன் இருவரும் சிரித்தவர்கள் “உங்கள யாராவது வர வேண்டாம்னு சொல்லுவோமா சார், உள்ள வாங்க” என்றார் தனபால்.
அதை கேட்டு ஈ என்று தன் குட்டி பல்லை காட்டி சிரித்த யுகன் குட்டி உள்ளே வந்தவன் “ஹாய் மயூ நீயும் இங்க தான் இருக்கியா?” என்று கேட்டான்.
“ஆமாங்க சார் நாங்களும் இங்க தான் இருக்கோம், நீங்க தான் எங்க கூட வர மாட்டேன்னு சொல்லிட்டீங்களே” என்று அவனை பார்த்து செல்லமாக முறைத்தான் மயூரன்.
ஆதினி உள்ளே வந்து இருவரையும் பார்க்க மயூரனை பாவமாக பார்த்த யுகன் “நா என்ன மயூ பண்ணட்டும், என்னோட பேச்ச கேட்கலைனா உனக்கு சாக்லேட் வாங்கி தர மாட்டேன்னு என்னோட ஆதி சொல்லுது, நானே குட்டி பையன் அத கேட்டு என்ன பண்ணட்டும் சொல்லு” என்றான்.
அதை கேட்டு ஆதினி தன் மகனை கண்கள் விரிய பார்க்க மயூரன் ஆதினியை முறைத்து “இது எல்லாம் சொல்லி வெச்சி இருக்கியா நீ?” என்று கேட்டான்.
“ஆ ஆஹா இல்ல சார் நா எல்லாம் அப்படி எதுவும் சொல்லுல” என்று பதறியவாறு கூறினாள்.
ம் என்று மயூரன் அவளை முறைக்க இருவரையும் பார்த்த யுகன் ஈ என்று வாயில் கையை வைத்து சிரித்தவன் “மயூ நா சும்மா சொன்னேன் ஆதி அப்படி எல்லாம் சொல்லுல, நான் அம்மா தனியா வரும் பயந்துக்கும்னு வருலன்னு சொன்னேன்” என்றான்.
அதை கேட்டு அவனை பார்த்து செல்லமாக முறைத்த மயூரன் “வாலு” என்று அவனை தூக்கி அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தவன் “ஓ…. சார் கூட வந்தா உங்க அம்மா பயந்துக்க மாட்டாங்க” என்றான்.
“ஆமா….” என்று சிரித்தான் யுகன்.
“ஆமா ஆமா இந்த சார் பெரிய மனுஷன் இல்ல பயந்துக்க மாட்டாங்க” என்று அவன் மூக்கை பிடித்து ஆட்டினான் மயூரன்
அதில் யுகன் குட்டி சிரிக்க “ஏய் வாலு பையா வந்த உடனே உன்னோட சேட்டைய ஆரமிச்சிட்டியா?” என்று கேட்டார் தனபால்.
அதில் திரும்பி அவரை பார்த்து சிரித்த யுகன் “ஈ ஆமா மில்க்” என்றான்.
“யுகன் அப்படி சொல்லாத தாத்தான்னு கூப்பிடு, எத்தனை டைம் நானும் சொல்றது அப்படி கூப்பிட கூடாதுன்னு” என்று அவனை அதட்டினாள் ஆதினி.
“விடுமா சின்ன குழந்தை தானே அவன் தாத்தாங்குற உரிமையில தான் சொல்றான், விடு சொல்லிட்டு போறான், எனக்கும் என்னோட பேரன் அப்படி சொல்றது தான் பிடிச்சி இருக்கு” என்றார் தனபால்.
“இல்ல சார்” என்று தயக்கமாக அவரை பார்த்தாள் ஆதினி.
“சரி நீங்க பாருங்க எனக்கு op க்கு டைமாகுது நா கிளம்புறேன்” என்ற மயூரன் யுகன் குட்டியை டேபிள் மேல் அமர வைத்தவன் “பை தங்கம், நாம்ப அப்பறம் பாக்கலாம்” என்றான்.
“ம் பை மயூ” என்று அழகாக சிரித்த யுகன் அவன் சட்டையை பிடித்து இழுத்தான்.
மயூரனும் அவன் அருகில் குனிய அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்த யுகன் “பை மயூ” என்றான்.
அதில் சிரித்த மயூரன் “பை செல்ல பையா” என்று அவன் இரு கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு “அப்பா கிளம்புறேன் ஆதினி பை” என்று விட்டு அவளை தன் கண்கள் நிறைய நிறைப்பிக்கொண்டு அங்கிருந்து சென்றான்.
போகும் அவனை பார்த்து விட்டு தனபாலை பார்த்த ஆதினி “சார் நா போய் வேலை பாக்குறேன்” என்றாள்.
“ஆ சரிம்மா யுகன் குட்டி இங்கையே இருக்கட்டும்” என்றார் தனபால்.
“இல்ல சார் அவன் குறும்பு பண்ணுவான், உங்கள வேலை செய்ய விட மாட்டான், அதுனால அவன் என்கூட இருக்கட்டும்” என்றாள் ஆதினி.
“அது எல்லாம் அவன் எந்த குறும்பும் பண்ண மாட்டான், நா பாத்துக்குறேன்மா நீ போ” என்றார் தனபால்.
“ம் சரிங்க சார்” என்று தயக்கமாக கூறிய ஆதினி “யுகன் குட்டி தாத்தாவ தொல்லை பண்ண கூடாது சமத்தா இருக்கனும்” என்றாள்.
“ஆ அம்மா நா எந்த சேட்டையும் பண்ண மாட்டேன்” என்றான் யுகன்.
“ம் சரிடா” என்று அவன் கன்னத்தை தொட்டு புன்னகை புரிந்த ஆதினி “சார் நா போறேன்” என்றாள்.
“ஆ ஆதினிமா உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன், நம்ப அன்னூர் பிரான்ச்ல ஸ்டாக் எல்லாம் இடிக்குதுன்னு சொல்றாங்க அது என்னனு பாரு, அப்பறம் இந்த மாசம் ஆடிட்டருக்கு கணக்கு எல்லாம் அனுப்பியாச்சா?” என்று கேட்டார்.
“ஆ… அத பாக்குறேன் சார் அப்பறம் இன்னும் ஆடிட்டருக்கு அனுப்புல சார், நாளைக்கு மறுநாள் தான் அனுப்ப வேண்டிய டேட், நா ரெடி பண்ணிட்டு இருக்கேன், நாளைக்கு ஈவினிங் அனுப்பிடுறேன் சார்” என்றாள் ஆதினி.
“ஆ சரிம்மா அது என்னனு பாத்துட்டு இந்த மாசம் கட்ட வேண்டிய tax கட்டிடு” என்றார் தனபால்.
“ம் சரிங்க சார்” என்று கூறிய ஆதினி இன்னும் ஒரு சில விசியம் கேட்டுக்கொண்டு தன் மகனிடம் மீண்டும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
ஆதினி தேவகி food சென்டரில் மேனேஜராக உள்ளாள், மேனேஜர் மட்டும் இல்லை அங்கு அந்த சென்டருடைய மொத்த கணக்கு வழக்கும் ஆதினி தான் பார்த்துக்கொண்டு உள்ளாள், தனபாலுக்கு பல்வேறு இடங்களில் 10 food சென்டர் உள்ளது, அதன் மொத்த தலைமை நிர்வாகி ஆதினி தான், தனபாலுக்கு அடுத்த இடத்தில் இருந்து எல்லா பொறுப்பும் அவள் தான் பார்த்துக் கொள்கிறாள்.
நல்ல திறமையான பெண், சுறுசுறுப்பான பெண், அவளிடம் ஒரு வேலையை கொடுத்தால் பயப்பட தேவையில்லை அதை சரியான நேரத்தில் சரியாக செய்து விடுவாள், அதே போல் நேர்மையான பெண் ஒரு ரூபாய் கூட ஏமாற்ற மாட்டாள், அதே போல் யாரையும் ஏமாற்றவும் விட மாட்டாள், அடுத்தவர் காசின் மீது ஆசைப்படாத பெண், ஒரு ரூபாய் என்றாலும் கணக்கு கணக்கு தான், அதனாலே அங்கு அவளுக்கு நிறைய பகையும் உள்ளது அவளை போல் நேர்மையாக உள்ளவர்களிடம் பாசமும் உள்ளது, பகையை அவள் என்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவது இல்லை, நேர்மையாக இருந்தாள் பகை இருக்க தான் செய்யும், தான் செய்யும் வேளைக்கு தான் நேர்மையாக உள்ளேன் அவ்ளோ தான் என்று விட்டு தன் வேலையை பார்ப்பாள்.
அதிகம் யாரிடமும் அனாவசியாக பேச மாட்டாள், தான் உண்டு தன் வேலை உண்டு அவ்ளோ தான், வேலை விசியம் தவிர ஒரு வார்த்தை கூட அதிகம் பேச மாட்டாள், ரொம்ப ரொம்ப நல்ல பெண்.
ஆனால் அவளின் நிலையை அறிந்து அவளிடம் தப்பாக அணுக நினைக்கும் ஆண்களும் அங்கு இருக்க தான் செய்கிறார்கள், ஆனால் மயூரன் தன்பாலுக்கு பயந்து ஆதினியை விட்டு ஒதுங்கி உள்ளனர், அதையும் மீறி அவளிடம் தப்பாக நடக்க முயற்சி செய்து அவளிடமும் மயூரனிடமும் அடியும் வாங்கி உள்ளனர் ஒரு சிலர், அதே போல் அவளின் நிலையை அறிந்து அவள் காது பட அவளுக்கு பின்னால் அவளிடம் தப்பாக பேசும் ஆட்களும் உள்ளனர், அதனாலே வேலையை தாண்டி யாரிடமும் பேசுவது இல்லை, யாரை பார்த்தும் சிரிப்பதும் இல்லை, இறுகிய முகத்துடனே இருப்பாள்.
அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ஒரு துணை மயூரன் குடும்பம் மட்டும் தான், ஆனால் அவர்களிடமும் தன் எல்லையை தாண்டி வைத்துக்கொள்வது இல்லை, தன்னால் அவர்களுக்கு எந்த கெட்ட பேரும் வந்து விட கூடாது, அதே சமையம் அளவுக்கு மீறி சென்றால் எந்த உறவாக இருந்தாலும் அதில் பிரச்சனை வந்து விடும் என்று அவர்களிடம் அளவாக நடந்துக்கொள்ளவாள், ஒரு ரூபாய் கூட யாரிடமும் சும்மா வாங்க மாட்டாள், யுகன் குட்டிக்கு மயூரன் குடும்பம் எதாவது செய்தால் கூட அதற்கும் காசு கொடுத்து விடுவாள், அதனால் தான் தனபால் யுகனை ஒரு நாளைக்கு தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்று இரவு இருந்து விட்டு அடுத்த நாள் கொண்டு வந்து விடுறேன் என்று தனபால் தேவகி மயூரன் யாரு கேட்டாலும் அவள் மறுத்து விடுவாள், ஒரு நாள் என்பது பின் அப்படியே அதிகமாக மாறும், யுகனுக்கும் அங்கு செல்வது விருப்பமாகி விட்டால் அதில் எதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று பிடிவாதமாக மறுத்து விடுவாள் ஆதினி.
மயூரன் குடும்பம் எப்படி ஆதினிக்கு பழக்கம் என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.
இங்கு தேவகி மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் முன் தன் காரை நிறுத்திய மயூரன் தன் வெள்ளை கோட் தன் ஸ்டெதஸ்கோப் எல்லாம் எடுத்துக்கொண்டு காரில் இருந்து இறங்கியவன் தங்கள் ஹாஸ்பிடல் உள்ளே கெத்தாக நடந்து சென்றான்.
மயூரன் MBBS, MD NEURO SPECIALIST டாக்டர், தனபால் தேவகிக்கு ஒரே செல்ல மகன், ரொம்ப பொறுப்பான பொறுமையான பையன், ஆறடியில் இருக்கும் அழகான ஆண் மகன், டாக்டருக்கே உரிய வெள்ளை தோல் கொண்ட ரொம்ப வெள்ளை எல்லாம் இல்லை அளவான வெள்ளை நிறம் கொண்ட அழகான ஆண் மகன், எப்போதும் அவன் உதட்டில் சின்ன புன்னகை இருந்தே இருக்கும், வசீகரிக்கும் கண்கள் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது, பெண்களை மதிப்பவன், அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பவன், யார் மனதையும் நோகடிக்கும் படி பேசாமல் வார்த்தையை பார்த்து பயன்படுத்தும் அன்பான பையன்( ஆனால் அவன் மனதை காயம் படுத்தும் சூழ்நிலை வருமா விதியே வழி)
ஏற்கனவே தெரிஞ்சி இருக்கும் ஆதினி மீது நம்ப மயூரனுக்கு ஒருதலை காதல் என்று, அதை அவளிடம் சொல்வானா? சொன்னால் ஆதினி ஏற்பாளா? இல்ல வீதி வேற கணக்கு போட்டு வைத்து உள்ளதா? ஆதினி வாழ்க்கையில் என்ன நடந்தது? யுகன் அப்பா யார்? ஏன் அவன் பெயரை சொல்ல ஆதினி அப்படி பயந்தாள்? இல்லை அதில் வேறு காரணம் ஏதேனும் உள்ளதா? அந்த காரணத்திற்கு யார் காரணம்? மயூரனா? இல்லை வேறா? மயூரனாக இருந்தால் அடுத்து என்ன நடக்க போகிறது? மயூரன் காதல் வெல்லுமா? இல்லை தோல்வியில் முடியுமா? அதை எல்லாம் தெரிந்துகொள்ள உனை சேர வருவேன் நாவலுடன் தொடர்ந்து வாருங்கள்.
No comments yet.