தேவகியிடம் பேசிவிட்டு ஃபோனை வைத்த ஆதினி தன் மகனை பார்த்து முறைத்தவள் “வர வர உனக்கு வாய் அதிகமா போச்சி” என்று தன் மகன் காதை பிடித்து வலிக்காதவாறு மெதுவாக திருகினாள்.
அதில் “ஆ அம்மா” என்று தன் தலையை சாய்த்து கத்தினான் யுகன்.
அதில் அவன் காதை விட்டவள் “உனக்கு சாக்லேட் கிடையாது வா போலாம்” என்றாள்.
அதில் தன் அம்மாவை முறைத்த யுகன் “எனக்கு நீ சாக்லேட் வாங்கி தர கூடாதுன்னு தான் இது எல்லாம் பண்ற போ, எனக்கு ஒன்னும் வேண்டாம் உன்கூட டூ” என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு முன்னாள் நடந்தான்.
அதை பார்த்து அதிர்ச்சியான ஆதினி “யுகா நில்லு” என்றாள்.
நின்று அவளை திரும்பி பார்த்து முறைத்த யுகன் “வாமா போலாம் உனக்கு பொறுப்பே இல்ல ஆபிஸ் போக வேண்டாமா, வா” என்றான்.
அதில் தன் மகனை பார்த்து சிரித்த ஆதினி “ம் போலாம் வா” என்று அவன் அருகில் வந்து அவன் கையை பிடித்து அழைத்துக்கொண்டு வெளியே பஸ் ஸ்டாப் வந்து அங்கிருந்த கடையில் தன் மகனுக்கு குட்டி சாக்லேட் வாங்கி கொடுத்தவள் “ஓகே வா” என்றாள்.
“இது என்ன குட்டியா இருக்கு? பெருசா ஒரு சாக்லேட் வாங்கி தரலாம் இல்ல” என்று தன் கையை நீட்டி கூறினான் யுகன்.
அதை கேட்டு ஆதினி அவனை முறைக்க “சரி சரி முறைக்காத எனக்கு இதுவே போதும் வா” என்று அவள் கையை பிடித்து அழைத்து வந்து நின்றான்.
தன் மகனை பார்த்து சிரித்த ஆதினி “வாலு” என்று அவன் மூக்கை பிடித்து ஆடியவள் “பெரிய சாக்லேட் வாங்க அம்மா கிட்ட இப்போ அவ்ளோ காசு இல்ல யுகா குட்டி, இன்னும் உனக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும் bag ஷூ டிரஸ் எல்லாம் வாங்கணும், வீட்டுக்கு வாடகை கொடுக்கணும் நிறைய செலவு இருக்கு, அதுதான் நா உனக்கு அப்பறம் வாங்கி தரேன் கோவிச்சிக்காத” என்று கூறினாள்.
அதை கேட்டு தன் அம்மாவை பார்த்து சிரித்த யுகன் “நா கோவிச்சுக்க எல்லாம் இல்ல அம்மா, எனக்கு இதுவே போதும், உன்னோட முகம் வாடி போக வேண்டாம் சரியா, அது நல்லாவே இல்ல என்னோட அம்மா சிரிச்சிட்டே இருக்கனும் ம் ஓகேவா” என்றான்.
அதை கேட்டு ஆதினி கண்கள் கலங்க அவன் முன் மண்டியிட்டு அமர்ந்து அவன் இரு கன்னத்தை கையில் ஏந்தி “சரிடா தங்கம் அம்மா சிரிச்சிட்டே இருக்கேன், லவ் யூ” என்று கூறி அவன் இரு கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.
“லவ் யூ அம்மா” என்று அவளை அணைத்து தானும் அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான் யுகன்.
அதில் சிரித்த ஆதினி காதில் பஸ் வரும் சத்தம் கேட்க அதில் திரும்பி பார்த்தவள் “சரி பஸ் வந்துடுச்சி வா போலாம்” என்று எழுந்து நின்று பஸ் வந்து நின்றதும் தன் மகனுடன் பஸ்சில் ஏறினாள்.
இங்கு தேவகி food சென்டர் என்று பெரிய போர்டு வைத்திருந்த ஆபிஸ் முன் தன் காரை நிறுத்தி விட்டு அதில் இருந்து ஸ்டைலாக ஆறடி அழகான ஹாண்ட்சமாக இறங்கிய மயூரன் அந்த ஆபிஸ் உள்ளே சென்று தனபால் md என்று போர்டு வைத்திருந்த கதவை திறந்துக்கொண்டு உள்ளே சென்றவன் “குட் மார்னிங் டாடி” என்றான்.
அதில் தலையை உயர்த்தி அவனை பார்த்து முறைத்த தனபால் “என்னடா சைட்டடிச்சிட்டு வந்துட்டியா?” என்று கோவமாக கேட்டார்.
அதில் தன் அப்பாவை பாவமாக பார்த்த மயூரன் “அத மட்டும் தானே பண்ணிட்டு இருக்கேன்” என்றவாறு அவர் முன் இருந்த சேரில் அமர்ந்தான்.
அதை கேட்டு தன் மகனை முறைத்த தனபால் “ஏன்டா என்னோட பையனா இருந்துட்டு இத சொல்ல உனக்கு வெக்கமா இல்ல?” என்றார்.
“வெக்கமா தான் இருக்கு, ஆனா என்ன பண்றது டாடி, ஆதினி கிட்ட லவ் சொல்ல தைரியமே வர மாட்டேங்குதே” என்று டேபிள் மேல் இருக்கும் வெயிட் கல்லை உருட்டியவாறு பாவமாக கூறினான்.
அதில் மேலும் தன் மகனை முறைத்த தன்பால் “ஏன்டா ஐ லவ் யூ ன்னு மூணு வார்த்தை சொல்ல உனக்கு என்னடா கஷ்டம்?” என்று கேட்டார்.
“ஆ அது மூணு வார்த்தை தான் அத சும்மா சொல்றது ஈஸி தான், ஆனா ஆதினி கிட்ட சொல்றது தான்பா கஷ்டம், அவ மனசுல அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லன்னு நல்லா தெரியும், அதே சமையம் என்மேல அவளுக்கு நல்ல மரியாதை இருக்கு, இப்போ நா போய் உன்ன லவ் பண்றேன்னு சொன்னா அதுக்கு அப்பறம் அவ என்ன பத்தி என்ன நினைப்பா, அதுக்கு அப்பறம் என்கிட்ட பேச கூட மாட்டா” என்றான் மயூரன்.
“கரெக்ட் தான், ஆனா அந்த பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை ஒரு நல்ல துணை வேணும், அவள பத்தி நல்லா தெரிஞ்ச பையனா இருந்தா அவ வாழ்க்கையில எந்த பிரச்சனையும் இல்லாம புது வாழ்க்கை நல்லா வாழ்க்கையா அவளுக்கு இருக்கும் இல்ல, பாவம்டா அந்த பொண்ணு. ரொம்ப கஷ்டப்பட்டுட்டா இன்னும் கஷ்டப்பட்டுட்டு இருக்கா, நம்ப வீட்டுக்கு மருமகளா வந்தா கண்டிப்பா நாம்ப அவள சந்தோஷமா பாத்துக்கலாம், நீயும் ஆதினி யுகா இரண்டு பேரையும் நல்லா பாத்துப்பேன்னு தான் நீ அவள லவ் பண்றேன்னு சொன்ன அப்போ நானும் சரின்னு சொன்னேன், ஆனா நீ என்னடானா இன்னும் அந்த பொண்ணு கிட்ட லவ் சொல்லாம இழுத்துட்டு இருக்க, ஏன்டா நாலு வருஷமா சொல்ற சொல்றேன்னு இன்னும் சொல்லிட்டு மட்டும் தான் இருக்க, ஆனா சொல்ற மாதிரி தெரியல, என்ன மாதிரி இருடா உங்க அம்மாவ பாத்தா அடுத்த நாளே லவ் சொல்லி அடுத்த மாசமே ஓகே வாங்கிட்டேன்” என்று அவனை முறைத்தவாறு கூறினார் தனபால்.
அதை கேட்டு தன் அப்பாவை முறைத்த மயூரன் “உங்க லவ் வேற என்னோட லவ் வர நியாபகம் இருக்கு இல்ல, சூழ்நிலையும் வேற வேற என்னோட விசியத்துல எடுத்தோம் கவுத்தோம்னு எல்லாம் பண்ண முடியாது டாடி” என்றான்.
“ஆ அதுவும் சரிதான், சரி பாத்துக்கோ, முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் சொல்லி என்னோட யுகா குட்டிய நம்ப வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுடா, பேரன என்கூடவே வெச்சிக்கணும்னு ஆசையா இருக்கு, இப்போ இந்த ஆதினி பொண்ணு ஒரு நாளைக்கு பேரன் என்கூட இருக்கட்டும்னா விடவே மாட்டேங்குறா” என்றார் தனபால்.
அதை கேட்டு சிரித்த மயூரன் “சரி சரிபா சீக்கிரம் சொல்லி என்னோட ஆதினியவும் என்னோட பையனையும் நம்ப வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்” என்றான்.
“இப்படி தான்டா நாலு வருஷமா சொல்ற” என்று அவனை முறைத்தார் தனபால்.
“சரி சரி விடுங்க, அதுதான் சொல்லிட்டேன் இல்ல” என்று அவரை முறைத்த மயூரன் “டாடி” என்றான்.
“என்னடா?” என்று கேட்டார் தனபால்.
“இன்னைக்கி ஸ்கூல்ல யுகன் குட்டிக்கு அப்பா பேர் கேட்டாங்களா……”
“ஐயோ அதுக்கு என்னடா சொன்ன? தேவகி தான் அந்த மேடம் கிட்ட பேசிட்டா இல்ல அப்பறம் எதுக்கு கேட்டாங்க?” என்று கோவமாக கேட்டார் தனபால்.
“ம் இந்த ஆதினி மேடம் போய் அவங்க கிட்ட சொல்லுல நா தேவகி அனுப்புன பொண்ணு தான்னு அதுனால அவங்க கேட்டாங்க, அப்போ அது எல்லாம் முக்கியம் இல்லபா அது எல்லாம் நா சொல்லிட்டேன்” என்றான் மயூரன்.
“ஓ சரி சரி இந்த பொண்ணு ஏன் தான் இப்படி பன்றாளோ, சரி வேற என்ன?” என்று கேட்டார் தனபால்.
“அது டாடி அப்பா பேர் இடத்துல என்னோட பேர் தான் கொடுக்கலாம்னு வாய் வரைக்கும் வந்துச்சி…….”
“ஏன் கொடுத்திருக்க வேண்டியது தானே?” என்று சிரித்தார் தனபால்.
“ம்கூம் எங்க போய் தரது, ஆதினிய நினைச்சா தான் பயமா இருக்கே, என்கூட கார்ல கூட வர மாட்டேங்குறா, எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு என்ன விட்டு ஒதுங்கி போக பாக்குறா, இதுல யுகன் குட்டிக்கு அப்பா நான் தான்னு என்னோட பேர ஸ்கூல்ல கொடுத்தேன்னு வெச்சிக்கோங்க ஜென்மத்துக்கும் என்கிட்ட பேச மாட்டா” என்றான்.
அதை கேட்டு சிரித்த தனபால் “அவ்ளோ பயம் இருக்கு இல்ல, அப்பறம் ஏன்டா உனக்கு இந்த ஆசை?” என்றார்.
“ஆசை தான் ம் சிரிங்க சிரிங்க ஆனா இப்படியே எல்லாம் இருக்காது பாருங்க ஒரு நாள் இல்லைனாலும் ஒரு நாள் யுகன் மயூரன்னு வரும்” என்றான் மயூரன்.
“ம் வரட்டும் வரட்டும் மகனே” என்று சிரித்த தனபால் “ஆமா இத சொல்ல தான் இங்க வந்தியா? உனக்கு ஹாஸ்பிடல்ல வேலை இல்ல?” என்று கேட்டார்.
“ஆ இருக்கு ஆனா ஆதினிய சமாளிக்கணும் இல்ல அதுக்காக சும்மா இங்க வந்தேன்” என்றான்.
அதை கேட்டு அவனை புரியாமல் பார்த்த தனபால் “ஆதினிய நீ எதுக்கு சமாளிக்கணும்?” என்று கேட்டார்.
“ஆ அது நா அவள கூட்டிட்டு வந்து ஆபிஸ்ல விடுறேன்னு சொன்னேனா” என்று ஸ்கூலில் நடந்ததை கூறிய மயூரன் “இப்போ நா உங்கள வந்து பாத்துட்டு போகாம நேரா ஹாஸ்பிடல் போனேனா அவளுக்கு சந்தேகம் வராது அதுதான்” மயூரன்.
அதை கேட்டு சிரித்த தனபால் “எனக்கு தெரிஞ்சி ஆதினி நீ வந்தது வராதது எல்லாம் பெருசா கண்டுக்க மாட்டா” என்றார்.
அதை கேட்டு முறைத்த மயூரன் “அதுதான் எனக்கே தெரியுமே, இதுல என்ன நீங்க சொல்லி சிரிக்கிறீங்க, சப்போஸ் கண்டுக்கிட்டா” என்றான்.
அதை கேட்டு இன்னும் சிரித்த தனபால் “ஏன்டா கொஞ்சமாவது டாக்டர் மாதிரி நடந்துக்குறியா?” என்று கேட்டார்.
“ஆ அது லவ் வந்தா எல்லாரும் இப்படி தான் அப்பா இருப்பாங்க, சரி நா கிளம்புறேன் எனக்கு வேலை இருக்கு, நா என்ன உங்கள மாதிரி வெட்டியா” என்றவாறு எழுந்தான்.
அதில் தன் மகனை பார்த்து முறைத்த தனபால் “ஆமா ஆமா நீங்க எல்லாம் வெட்டி இல்ல போங்க சார் போய் உங்க வேலைய பாருங்க, ஒரு பொண்ணு கிட்ட லவ் சொல்ல துப்பு இல்ல ஆனா வாய்க்கு மட்டும் கொஞ்சம் கூட குறைச்சலே இருக்காது” என்றார்.
அதை கேட்டு தன் தந்தையை முறைத்த மயூரன் “ம் இங்க இருந்தா இப்படி தான் பேசிட்டு இருப்பிங்க, நா கிளம்புறேன்” என்று விட்டு எழுந்தவன் “பை டாடி” என்று விட்டு சென்று கதவை திறக்க போக
சரியாக தானும் கதவை திறந்து “மே ஐ கம் இன் சார்” என்று கேட்டாள் ஆதினி.
“ஆமா நாங்க உள்ள வரலாமா?” என்று தன் குட்டி தலையை உள்ளே விட்டு கேட்டான் யுகன்.
அவனை பார்த்து அப்பா மகன் இருவரும் சிரித்தனர்.
No comments yet.