யுகன் குட்டியை ஆதினி ஸ்கூலில் சேர்க்க வந்திருக்க யுகனின் அட்மிஷன் formமை பிரின்சிபால் மீண்டும் பார்த்தவர் “ஏன் father நேம் இருக்குற இடத்துல father நேம் எழுதாம இருக்கீங்க? கவனிக்கலையா? சரி ஓகே யுகன் அப்பா பேர் என்ன?” என்று பேனாவை எடுத்தவாறு கேட்டார்.
அதை கேட்டு ஆதினி முகம் எல்லாம் இருண்டு போய் முகம் எல்லாம் வேர்க்க தொடங்க அதில் கையை பிசைந்த வண்ணம் அவரை பார்த்தாள்.
“சொல்லுங்க மேம் யுகன் அப்பா பேர் என்ன?” என்று ஆதினியை பார்த்து கேட்டார் பிரின்சிபால்.
யுகன் தலையை உயர்த்தி தன் அம்மாவை பார்க்க அவனை பார்த்த ஆதினி “ஆ அது அது” என்று பிரின்சிபாலை பார்த்து தயங்கி விழித்துக்கொண்டு இருக்க
அப்போது “மேம்” என்ற ஒரு ஆண் குரல் கேட்க அதில் திரும்பி பார்த்த ஆதினி கண்கள் இரண்டும் விரிந்தது.
“எஸ்” என்று பிரின்சிபால் வாயிலை பார்த்தவர் “எஸ் மயூரன் உள்ள வாங்க” என்றார்.
“தேங்க் யூ மேம்” என்று புன்னகை புரிந்த மயூரன் ஆதினியை பார்த்தவாறு உள்ளே வர அவனை பார்த்த ஆதினி யுகனை கீழே நிற்க வைத்தவாறு எழுந்து நின்று “சார்” என்றாள்.
“ஹாய் மயூ” என்று அவனை பார்த்து தன் குட்டி பல்லை அனைத்தையும் காட்டி சிரித்தான் யுகன்.
அவனை பார்த்த தானும் சிரித்த மயூரன் “ஏய் குட்டி ஜாம்” என்று அவனை தூக்கி அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தவன் “ஆதினி நான் தான் வரேன்னு சொல்லிருந்தேன் இல்ல” என்றான்.
“இல்ல சார் அது” என்று அவனை பார்த்து விழித்தாள் ஆதினி.
“சரி நீ தம்பிய கூட்டிட்டு போய் வெளிய வெயிட் பண்ணு நா பிரின்சிபால் மேம் கிட்ட பேசிட்டு வரேன்” என்றான்.
“ம் சரிங்க சார்” என்று தலையை ஆட்டிய ஆதினி “யுகா வா” என்றாள்.
யுகன் மயூரனை பார்க்க அவனை பார்த்து சிரித்த மயூரன் “அம்மா கூட வெளிய இருங்க உங்க பிரெண்டு மேடம் கிட்ட பேசிட்டு வரேன்” என்றான்.
“ம் சரி” என்று சிரித்த யுகன் தன் அம்மாவிடம் தாவினான்.
அவனை வாங்கிய ஆதினி மயூரனை தயக்கமாக பார்க்க “நீ டென்ஷன் இல்லாம வெளிய இரு நா பேசிட்டு வரேன்” என்றான் அவளை பார்த்து.
“ம்” என்று தலையை ஆட்டிய ஆதினி வெளியே சென்றவள் அங்கிருந்த சேரில் தன் மகனை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்தவளுக்கு கண்கள் எல்லாம் கலங்க அதை கஷ்டப்பட்டு மறைத்துக்கொண்டு அமைதியாக சோர்ந்த முகத்துடன் இருந்தாள்.
யுகன் தலையை உயர்த்தி தன் அம்மாவை பார்த்தவன் “அம்மா நீ ஃபில் பண்ணாத, அதுதான் என்னோட பிரெண்டு வந்துட்டாங்க இல்ல, என்ன இந்த ஸ்கூல்ல சேர்த்துப்பாங்க சரியா, நீ சிரி” என்று தன் அம்மா உதட்டில் கையை வைத்து அவள் இதழை விரித்தவாறு கூறினான்.
அதில் தன் மகனை பார்த்து சிரித்த ஆதினி “ம் சரி தங்கம்” என்றாள்.
இங்கு உள்ளே “மேடம் சாரி” என்றான்.
“இட்ஸ் ஓகே மயூரன் நீங்க உக்காருங்க” என்றார் பிரின்சிபால்.
“தேங்க் யூ மேடம்” என்று அவருக்கு முன் இருந்த சேரில் அமர்ந்த மயூரன் “மேடம் அம்மா உங்களுக்கு கால் பண்ணி பேசுனேன்னு சொன்னாங்க, ஒரு குழந்தையோட அட்மிஷனுக்காக” என்றான்.
“ம் ஆமா தேவகி சொன்னா மயூரன் நா கூட ஓகே சொல்லிட்டேனே, அந்த குழந்தையோட அம்மா சிங்கிள் பேரன்ட்ன்னு சொன்னாங்க” என்றார் அவர்.
“ம் எஸ் மேம், அந்த குழந்தை தான் இப்போ வெளிய போனாங்க இல்ல யுகன் அவங்க தான்” என்றான் மயூரன்.
“ஓ சாரி சாரி எனக்கு இவங்க தான் அந்த பொண்ணுன்னு தெரியாது, தேவகி சொன்னா அந்த பொண்ண பத்தி, அந்த பொண்ணு சொல்லிருக்கலாம் இல்ல தேவகி அனுப்பி வெச்ச பொண்ணுன்னு” என்றார் பிரின்சிபால்.
“இல்ல மேம் அவங்க சொல்ல தயங்குவாங்க, அதுதான் அம்மா என்ன அனுப்பி வெச்சாங்க” என்றான் மயூரன்.
“ஓ..… ஓகே மயூரன் ஒன்னும் பிரச்சனை இல்ல, யுகனுக்கு இங்க அட்மிஷன் போட்டுக்கலாம், அதுவும் தேவகி கேக்கும் போது என்னால மாட்டேன்னு சொல்ல முடியாது” என்றார்.
அதை கேட்டு புன்னகை புரிந்த மயூரன் “தேங்க் யூ மேடம், அப்பறம் யுகன் பத்தி இங்க யாருக்கும் தெரிய வேண்டாம், அப்பறம் அவனுக்கு இங்க எந்த பிரச்சனையும் வராம பாத்துக்கோங்க, நீங்க அம்மாவோட பிரெண்டு இது உங்க ஸ்கூல், இங்க யுகன் குட்டிக்கு எந்த பிரச்சனையும் இருக்காதுன்னு தான் அம்மா இங்க சேர்த்தலாம்னு சொன்னாங்க பாத்துக்கோங்க, ஆதினி யுகன் நினைச்சி தான் ரொம்ப பயப்படுவாங்க” என்றான்.
அவனை பார்த்து புன்னகை புரிந்த அவர் “இங்க எல்லா குழந்தைங்களும் எங்களுக்கு ஒரே மாதிரி தான் மயூரன், எந்த குழந்தையோட பார்சல் டிடைல்ஸ்சும் இங்க ஒர்க் பண்ற டீச்சர்க்கு கூட தெரியாது, சோ நீங்க பயப்பட வேண்டாம்,யுகனுக்கு இங்க எந்த பிரச்சனையும் வராது” என்றார்.
அதை கேட்டு மேலும் புன்னகை புரிந்த மயூரன் “ஓகே தேங்க் யூ மேடம்” என்று எழுந்தான்.
“ஓகே மயூரன் நீங்க மத்த டிடைல்ஸ் எல்லாம் வெளிய எங்க ஸ்டாப் இருப்பாங்க அவங்க கிட்ட கேட்டுக்கோங்க” என்றார்.
“ஓகே மேம் தேங்க் யூ” என்று புன்னகை புரிந்த மயூரன் வெளியே வர.
அவனை பார்த்த ஆதினி தன் மகனுடன் எழுந்து அவன் அருகில் வந்து “சார் என்னாச்சி?” என்று டென்ஷனாக கேட்டாள்.
“ஒன்னும் ஆகுல யுகன் குட்டிக்கு இங்க அட்மிஷன் போட்டாச்சி” என்று யுகனை வாங்கிய மயூரன் “யுகன் செல்லம் உங்களுக்கு இந்த ஸ்கூல் பிடிச்சி இருக்கா?” என்று கேட்டான்.
“ம் ரொம்ப பிடிச்சி இருக்கு மயூ” என்று சிரித்தான் யுகன்.
“ஓகேடா தங்கம்” என்ற மயூரன் “ஆதினி வா ஸ்கூல் பீஸ் டிடைல்ஸ் எல்லாம் கேட்டுக்கலாம்” என்றான்.
“ஆ ஓகே சார், அப்பறம் வேற எதுவும் கேட்கலையா அவங்க?” என்று தயக்கமாக கேட்டாள்.
“நா தான் சொல்றேன் இல்ல டென்ஷனாகாதான்னு, பிரின்சிபால் கிட்ட அம்மா ஃபோன்ல எல்லாம் பேசிட்டாங்க, நீ தேவகி டாக்டர் தான் அனுப்பி வெச்சாங்கன்னு சொல்லி இருந்தா அவங்க கேட்டிருக்க மாட்டாங்க, நீ ஏன் சொல்லுல?” என்றான் மயூரன்.
“இல்ல அது எனக்கு……”
“சரி சரி விடு, அதுதான் நா வந்துட்டேன் எல்லா பேசியாச்சி இனி ஒரு பிரச்சனையும் இல்ல சரியா” என்றான்.
“ம் தேங்க் யூ சார்” என்றாள் ஆதினி.
அதில் அவளை முறைத்த மயூரன் “உன்னோட தேங்க்ஸ் நீயே வெச்சிக்கோ இப்போ வா” என்றவன் சென்று மத்த டிடைல்ஸ் எல்லாம் கேட்டுக்கொண்டு இருவரும் வெளியே வந்தவர்கள் மயூரன் காருக்கு அருகில் சென்றனர்.
“ஆதினி இப்போ ஆபிஸ் தானே போறீங்க?’ என்று கேட்டான் மயூரன்.
“ம் ஆமா சார்” என்றாள் ஆதினி.
“சரி நா உங்க இரண்டு பேரையும் ஆபிஸ்ல விட்டுட்டு நா அப்படியே ஹாஸ்பிடல் போறேன்” என்றான் மயூரன்.
“ஆஹா இல்ல சார் வேண்டாம் நாங்க பாஸ்ல போயிக்கிறோம்” என்றாள் ஆதினி.
“நா உங்க இரண்டு பேருக்காக எல்லாம் ஆபிஸ் வருல, அப்பாவ பாக்கணும், சோ நீங்களும் வாங்க அப்படியே உங்கள விட்டுட்டு அப்பாவ பாத்துட்டு நா ஹாஸ்பிடல் போறேன்” என்றான் மயூரன்.
அதில் அவனை தயக்கமாக பார்த்த ஆதினி “இல்ல சார் நாங்க பஸ்லையே வரோம் ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க” என்றாள்.
அதில் அவளை முறைத்த மயூரன் “சரி நீ பஸ்ல வா நா யுகன கார்ல கூட்டிட்டு போறேன்” என்றான்.
“ஆஹா இல்ல சார் வேண்டாம்” என்றாள் ஆதினி.
அதில் இன்னும் அவளை முறைத்த மயூரன் “யுகன் குட்டி என்கூட கார்ல வரிங்களா?” என்று அவனை பார்த்து கேட்டான்.
அதில் அவனை பார்த்து விட்டு தன் அம்மாவை பார்த்த யுகன் “ம் இல்ல நா அம்மா கூட பஸ்ல வரேன் மயூ” என்றான் யுகன்.
அதை கேட்டு ஆதினியை முறைத்த மயூரன் “என்ன என்கூட போக கூடாதுன்னு தம்பி கிட்ட சொன்னியா?” என்று கேட்டான்.
“ஐயோ ம்ஹும் இல்ல சார் நா அப்படி எல்லாம் எதுவும் சொல்லுல, யுகன் குட்டியே தான் வருலன்னு சொல்றான்” என்றாள்.
“ம்…. ஏன் இப்படி பண்ற? என்னமோ நாங்க எல்லாம் அந்நியம் மாதிரியே பண்ணிட்டு இருக்க நீ” என்றான் கோவமாக.
அதை கேட்டு அவனை சங்கடமாக பார்த்த “அப்படி எல்லாம் இல்ல சார்” ஆதினி.
“சரி உன்கிட்ட இதுக்கு மேல என்னால பேச முடியாது, நீங்க இரண்டு பேரும் பஸ்ல வாங்க நா கிளம்புறேன்” என்றான் மயூரன்.
“ம்” என்று மெதுவாக தலையை ஆட்டிய ஆதினி “சார் சாரி” என்றாள்.
அதில் இன்னும் அவளை முறைத்த மயூரன் யுகனை பார்த்து முறைத்து “என்கூட வர மாட்ட இல்ல நீ?” என்றான்.
அதில் எல்லா பக்கமும் கண்ணை உருட்டி அவனை பார்த்த யுகன் “சாரி மயூ அம்மா தனியா வரும் இல்ல” என்றான் தன் குட்டி கண்ணை சிமிட்டி சிமிட்டி.
அதில் அந்த அழகை பார்த்து சிரித்த மயூரன் “நீ இருக்க பாரு இப்படியே என்ன மயக்கிடு” என்று அவன் கன்னத்தை பிடித்து கடித்தான்.
“ஆ மயூ ஆ” என்று சிரித்தான் யுகன்.
அதில் சிரித்தவாறு அவன் கன்னத்தை விட்ட மயூரன் “சரி நாம்ப இந்த வாரம் சண்டே ஸ்கூல் bag இந்த குட்டி காலுக்கு ஷூ எல்லாம் வாங்க கடைக்கு போலாம் சரியா” என்று அவன் குட்டி காலை பிடித்து கூறினான்.
“ஆஹா வேண்டாம் சார்” என்று ஆதினி கூற.
அதில் இன்னும் அவளை முறைத்த மயூரன் “இங்க பாரு இதுக்கு மேல ஏதாவது பேசுன நா செம டென்ஷன் ஆகிடுவேன், சண்டே வரேன் யுகன கூட்டிட்டு நா போறேன் அவ்ளோ தான், இவனுக்கு நா வாங்கி தர எனக்கு எல்லா உரிமையும் இருக்கு சரியா, யுகன் குட்டி நாம்ப போறோம் ஓகேவா” என்றான்.
அதை கேட்டு யுகன் விழித்தவாறு தன் அம்மாவை பார்த்தான், ஆனால் மயூரனுடன் வெளியே செல்வது யுகனுக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் தன் அம்மா என்ன சொல்வார்கள் என்று அவளையே ஏக்கமாக பார்த்தான்.
தன் மகனின் மனதை படித்த ஆதினி “சரி போயிட்டு வா” என்றவள் “சார் காசு நா கொடுத்துடுறேன்” என்றாள்.
அதை கேட்டு மயூரனுக்கு கோவம் வந்தாலும் அதை கட்டுப்படுத்திக்கொண்டு “ம் சரி தெய்வமே கூட்டிட்டு போகவாவது சம்மதம் சொன்னிங்களே எனக்கு அது போதும் ரொம்ப நன்றி” என்று முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு கூறினான்.
அதை பார்த்து ஆதினிக்கு சிரிப்பு வர “ம் சரிங்க சார்” என்று சின்ன சிரிப்புடன் கூறினாள்.
அந்த சிரிப்பை பார்த்த மயூரன் கோவம் எல்லாம் காற்றில் பறந்து போக ‘ம் சிரிச்சே மயக்குடி, இந்த சிரிப்பு எப்பவும் உன்னோட முகத்துல நிலைச்சி இருக்கனும், அந்த சிரிப்புக்கு முழு சொந்தக்காரன் நானா இருக்கனும் நினைக்கிறேன் ஆனா அது எப்போ நடக்குமோ, என்னோட காதல எப்போ நா உன்கூட சொல்ல போறேனோ தெரியலையே’ என்று நினைத்து பெருமூச்சு விட்டான்.
No comments yet.