1. ஹீரோயின் அறிமுகம்

Bharathi Gunasekaran | 15 Nov 2025 | Share

             வானில் உள்ள நிலவு மகள் இரவு முழுக்க இந்த உலகை கண்காணித்து தற்போது உறங்க செல்லும் வேளையில் அவள் காதலனான கதிரவனை எழுப்பி விட்டு செல்ல அதில் கண் விழித்த கதிரவன் தன்னவளை பார்த்து செல்லமாக முறைக்க அந்த  முறைப்பில் அவர் சிவந்த கண்ணில் இருந்து வரும்  ஒளி இந்த வான் உலகம் முழுக்க பரவிய அந்த அதிகாலை வேலையில் கோவையில் இருக்கும் தன் வீட்டின் சமையலறையில் அரக்க பறக்க வேலை செய்துக்கொண்டு இருந்தாள் ஆதினி.

         

          “அச்சோ நேரம் வேற ஆகிடுச்சி, இன்னைக்கி எவ்வளவு முக்கியமான நாள், இன்னைக்கி போய் இப்படி தூங்கி இப்போ பாரு அவசர அவசரமா வேலை பாக்க வேண்டி இருக்கு” என்று தன் நெற்றியில் வழியும் வியர்வையை தன் நையிட்டியில் துடைத்து விட்டு வேலை எல்லாம் செய்து முடித்த ஆதினி வேகமாக பெட் ரூம் வந்து பார்த்தவள் இதழ்கள் புன்னகை பூக்க “பாரு இன்னும் தூக்கத்த” என்று தன் வலது காலை வான் நோக்கி நேராக மடக்கி வைத்து அதன் முட்டி மேல்  தன் இடது காலை குறுக்காக மடக்கி வைத்து கால் மேல் கால் போட்டு தூங்கிக் கொண்டு இருக்கும் தன் ஐந்து  வயது மகன் யுகனை பார்த்து செல்லமாக முறைத்து விட்டு அவன் அருகில் சென்று படுத்தவள் “யுகா குட்டி” என்று அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

       

        அதில் நெளிந்த யுகன் திரும்பி படுத்து தன் அம்மா கழுத்தை கட்டிக்கொண்டு மீண்டும் தன் தூக்கத்தை தொடர்ந்தான்.

    

      அதில் தன் மகனை பார்த்து மேலும் செல்லமாக முறைத்த ஆதினி “யுகா எழுந்திரிங்க, நாம்ப இன்னைக்கி புது ஸ்கூல் பாக்க போறோம் இல்ல எழுந்திரிடா” என்று அவன் கன்னத்தை பிடித்து மெதுவாக ஆட்டி கூறினாள்.

       

      அதில் வேகமாக எழுந்து அமர்ந்து தன் அம்மாவை பார்த்த யுகன் “நாம்ப புது ஸ்கூல் போறோமா?” என்று கேட்டான்.

      

        “ஆமாடா என்னோட செல்ல குட்டி, அதுனால பட்டு குட்டி என்ன பண்ணனும்?” என்று தானும் எழுந்து அமர்ந்து கேட்டாள் ஆதினி.

     

       “பிரெஷ் பண்ணி குளிக்க போகணும்” என்று சிரித்தவாறு கூறினான் யுகன்.

     

     “அச்சோ என்னோட சமத்து குட்டி தங்கம் ஆமா வாங்க நேரமாகுது” என்று பெட்டில் இருந்து எழுந்து நின்று தன் மகனை தூக்கிய ஆதினி “இந்த குட்டி பல்ல தேய்க்க போலாமா?” என்று தன் மகன் உதட்டின் மீது விரலை வைத்து தேய்ப்பது போல் காட்டி கேட்டாள்.

       

         அதில் ஈ என்று தன் குட்டி பல் அனைத்தையும் காட்டி சிரித்த யுகன் “ஆ அம்மா” என்றான்.

    

         அதில் தன் மகன் சிரிப்பை பார்த்து தானும் மேலும் சிரித்த ஆதினி “ம் வாங்க போலாம்” என்று அவன் மூக்கோடு தன் மூக்கை வைத்து உரசியவள் அவனை பாத்ரூம் உள்ளே தூக்கி சென்று அவனுக்கு பல் துலக்கி குளிக்க வைக்க அவன் முதுகில் சோப்பு போட போனவள் அவன் முதுகில் ஸ்டார் 💫 வடிவில் ரொம்ப பெரிதாகவும் இல்லாமல் ரொம்ப குட்டியாகவும் இல்லாமல் இருக்கும் மச்சத்தை தொட்டு பார்த்தவள் பின் அவனை முழுதாக குளிக்க வைத்து அவன் இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு வெளியே தூக்கி வந்து  சேர் மீது அவனை நிற்க வைத்தவள் “யுகா செல்லம் உனக்கு புது ஸ்கூல் போறதுக்கு சம்மதம் தானே?” என்று கேட்டாள்.

          

       “ஆ அம்மா ஆனா என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் வருவாங்க தானே?” என்று கேட்டான் யுகன்.

     

        “ஆஹா இல்ல தங்கம் அங்க உன்னோட பழைய ஸ்கூல் பிரெண்ட்ஸ் எல்லாம் யாரும் வர மாட்டாங்க, அவங்க எல்லாம் வேற ஸ்கூல் போயிட்டாங்க, ஆனா உனக்கு இங்க புது பிரெண்ட்ஸ் எல்லாம் நிறைய கிடைப்பாங்க ஜாலியா இருக்கும், இந்த ஸ்கூல்ல உனக்கு விளையாட நிறைய கேம் எல்லாம் இருக்கு, உனக்கு ரொம்ப ஜாலியா இருக்கும்” என்றாள்.

     

      “ஆ அப்போ சரி நா புது ஸ்கூலுக்கு போறேன்” என்று அழகாக தலையை ஆட்டி கூறினான் யுகன்.

    

        “ம் சரிடா தங்கம்” என்று அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்த ஆதினி “அம்மா உனக்கு புது டிரஸ் எடுத்துட்டு வந்திருக்கேன் அத போட்டுட்டு ஜம்முன்னு  ஸ்கூலுக்கு போலாம் சரியா” என்றாள்.

      

        அதில் இன்னும் யுகன் கண்கள் விரிய “ஈ ம்ம் சரிமா” என்று சிரித்தான்.

       

      தன் மகனின் அழகாக சிரிப்பை பார்த்து தானும் சிரித்த ஆதினி “இரு வரேன்” என்று சென்று பீரோவை திறந்து அதில் தன் மகனுக்கு வாங்கி வைத்த புது டிரஸ் எடுத்து வந்து அதை ஓபன் செய்து அவன் முன் காட்டியவள் “உனக்கு இந்த டிரஸ் பிடிச்சி இருக்கா?” என்று கேட்டாள்.

   

     “அம்மா சூப்பரா இருக்கு” என்று கண்கள் விரிய கூறினான் யுகன்.

   

         அதை கேட்டு தானும் சிரித்த ஆதினி “சரி தம்பிக்கு டிரஸ் போடலாம்” என்று அவனுக்கு போட்டு விட்டு தலை வாரி பவர் எல்லாம் அடித்து அழகான சந்தன கீற்று வைத்து விட்டவள் “அச்சோ என்னோட பையன் அழகு” என்று அவன் இரு கன்னத்தை பிடித்து ஆட்டி அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

     

       அதில் தன் அம்மாவை பார்த்து சிரித்த யுகன் “என்னோட அம்மாவும் அழகு” என்று தன் அம்மா கன்னத்தை தானும் தன் குட்டி கையால் பிடித்து ஆட்டி கூறினான்.

   

      “ம் தேங்க்ஸ் யுகன் குட்டி, சரி தம்பி இங்க சமத்தா உக்காந்திருக்க அம்மா இரண்டு நிமிஷத்துல குளிச்சிட்டு ஓடி வந்துடுறேன்” என்றாள்.

   

       “ஆ சரி அம்மா நா இங்க சமத்தா இருக்கேன்” என்று பெட் மீது நல்ல புள்ளையாக அமர்ந்துக்கொண்டான் யுகன்.

 

       “ம் குட் பாய்” என்று சிரித்த ஆதினி வேகமாக டவல் டிரஸ்  எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்றவள் வேக வேகமாக குளித்தவள் அப்போ அப்போ தன் மகனிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே இருந்தாள்.

       முன்பு எல்லாம் குளிக்க சென்றால் அரைமணி நேரம் ஒரு மணி  ஆக்கும் நம் ஆதினி யுகன் பிறந்த நாளில் இருந்து ஐந்து நிமிடம் குளிப்பதே பெரிது, வேக வேகமாக குளித்து விட்டு ஓடி வந்து விடுவாள், இல்லை என்றால் தன் மகனையும் உள்ளே அழைத்து சென்று அவனை ஒரு பெரிய அகலமான டப்பாக்குள் அமர வைத்து பொம்மையை அவன் கையில் கொடுத்து விட்டு அவனிடம் பேசியவாறே குளித்து விட்டு வருவாள்.

   

       இப்போதும் வேக வேகமாக குளித்து விட்டு வந்த ஆதினி “யுகன் குட்டி சமத்து” என்று தன் மகனை பார்த்து சிரித்தாள்.

 

       அதை கேட்டு தன் அம்மாவை பார்த்து கண்ணை சிமிட்டி சிரித்தான் யுகன்.

  

       பின் தான் ரெடியாகி தன் மகனை  தூக்கிக்கொண்டு ஹாலுக்கு வந்தவள் “யுகா இங்கையே இரு அம்மா சாப்பாடு போட்டு எடுத்துட்டு வரேன்” என்று அவனை கீழே அமர வைத்து விட்டு கிச்சன் சென்றவள் தான் சமைத்த உணவை தட்டில் போட்டு எடுத்துக்கொண்டு வந்து தன் மகன் அருகில் அமர்ந்து அவனுக்கு ஊட்டியவாறு தானும் இரண்டு வாய் சாப்பிட்டவள் அவனுக்கு வாய் எல்லாம் துடைத்து விட்டு எழுந்து சென்று தட்டை கழுவி வைத்து விட்டு வந்த ஆதினி “போலாமா தங்கம்?” என்றாள்.

         

       “ஆ அம்மா” என்று சிரித்தான் யுகன்.

   

     “ம் சரி” என்று தன் ஃபோன் பர்ஸ் ஹாண்ட் bag தண்ணீர் பாட்டில் எல்லாம் எடுத்துக்கொண்டு தன் மகன் கையை பிடித்து அழைத்துக்கொண்டு வெளியே வந்தவள் வீட்டை பூட்டி விட்டு பஸ் ஸ்டாப் வந்து பஸ்ஸுக்காக காத்துக்கொண்டு நின்றாள்.

    

       யுகன் சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தவன் “அம்மா நீ இன்னைக்கி ஆபிஸ் போகலையா?” என்று தன் குட்டி குரலில் அழகாக கேட்டான்.

   

        “ஆ தங்கம் போகணும், நாம்ப இரண்டு பேரும் ஸ்கூலுக்கு போயிட்டு உன்ன ஸ்கூல்ல சேர்த்துட்டு நாம்ப அப்படியே ஆபிஸ் போயிடலாம்” என்றாள்.

   

        ஓ என்று யோசனையாக கூறினான் யுகன்.

  

        அதில் தன் மகனை பார்த்த ஆதினி “என்ன சார் ஓன்னு பெருசா யோசிக்கிறீங்க?” என்று கேட்டாள்.

  

       “ஆ அது நா இன்னைக்கி ஸ்கூல்ல ஈவினிங் வரைக்கும் இருக்க மாட்டேனாமா?” என்று கேட்டான்.

    

       “ம்ஹும் இல்ல, இன்னைக்கி உங்கள ஸ்கூல்ல சேர்த்த மட்டும் தான் போறோம், ஸ்கூல் ஓபன் பண்ண இன்னும் பத்து நாள் இருக்கு” என்று சிரித்தவாறு கூறினாள் ஆதினி.

  

       “ஓ அப்போ ஜாலி” என்று சிரித்தான் யுகன்.

    

      அதில் தன் மகனை பார்த்து சிரித்த ஆதினி “இன்னும் பத்து நாள் கழிச்சி ஸ்கூல் போகணும் தம்பி” என்றாள்.

    

       “ம் இன்னும் பத்து நாள் இருக்கு இல்ல, அது வரைக்கும் லீவு தானே” என்று தலையை ஆட்டி ஆட்டி சிரித்தான் யுகன்.

    

‌‌     தன் மகனை போல தானும் தலையை ஆட்டி சிரித்த ஆதினி “ம் அது சரி அது வரைக்கும் என்ஜோய் பண்ணுங்க தம்பி” என்றாள்.

  

      ம்ம் என்று தலையை ஆட்டி சிரித்தான் யுகன்.

 

       அப்போது தாங்கள் செல்ல வேண்டிய பஸ் வர “நீங்க தலைய ஆட்டுனது போதும், பஸ் வருது போலாம் தம்பி வாங்க” என்றாள் ஆதினி.

  

      அதில் திரும்பி பஸ்ஸை பார்த்து சிரித்த யுகன் “ம் போலாம்மா” என்றான்.

    

      பின் இருவரும் பஸ்சில் ஏறி ஒரு சீட்டில் அமர்ந்தவர் தாங்க இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப் பெயரை கூறி டிக்கெட் எடுத்து விட்டு வெளியே பார்க்க யுகன் வேடிக்கை பார்த்தவாறு தன் அம்மாவிடம் ஒவ்வொன்றையும் காட்டி கூறிக்கொண்டு வந்தான்.

    

        ஆதினியும் சிரித்தவாறு கேட்டுக்கொண்டு அவனுக்கு  பதில் அளித்தவாறு வர சிறிது நேரத்தில் அவர்கள் இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப் வந்தது.

    

      அதை பார்த்த ஆதினி “யுகா வா நாம்ப இறங்கலாம்” என்று எழுந்து தன் மகன் கையை பிடித்து அழைத்து வந்து பஸ் நின்றதும் இருவரும் கீழே இறங்கி அங்கிருந்த ஸ்கூலுக்கு சென்றனர்.

  

      யுகன் அந்த ஸ்கூலை சுற்றி கண்கள் விரிய பார்த்தவன் “அம்மா இந்த ஸ்கூல் பெருசா இருக்கு” என்றான்.

    

     “ம் ஆமா தங்கம்” என்ற ஆதினிக்கு இவ்ளோ நேரம் இருந்த சிரிப்பு எல்லாம் போய் முகத்தில் டென்ஷன் ஒட்டிக்கொள்ள அதே டென்ஷனுடன் உள்ளே சென்று “மேம் தம்பிக்கு இங்க அட்மிஷன் போடணும்” என்று கூறினாள்.

     

      “ஆ… மேம் அட்மிஷன் அங்க நடக்குது, நீங்க அங்க போங்க” என்று ஒரு அறையை காட்டி கூறினார் அவர்.

   

       “தேங்க் யூ  மேம்” என்று புன்னகையுடன் கூறிய ஆதினி அவர் சொன்ன அறைக்கு சென்று “மேம் தம்பிக்கு அட்மிஷன் போடணும்” என்று அங்கிருந்த மேம்மை பார்த்து கேட்டாள்.

 

     “ம் ஓகே மேம் என்ன ஸ்டாண்டர்ட்கு அட்மிஷன் போடுறீங்க? தம்பிக்கு இப்போ என்ன வயசு?” என்று கேட்டார்.

  

        “5 வயசு 1st ஸ்டாண்டர்ட்க்கு  மேம்” என்றாள் ஆதினி.

   

       “ஓகே நீங்க இந்த admission form fill பண்ணி கொண்டு வாங்க” என்று form ஒன்றை நீட்டினார்.

  

         “ஆ சரிங்க மேம்” என்று அதை வாங்கிய ஆதினி “யுகா வாங்க” என்று அவன் கையை பிடித்து அழைத்து வந்து ஒரு சேரில் அமர்ந்து form fill செய்தவள் மீண்டும் வந்து அவர்களிடம் கொடுத்தாள்.

  

        “ஓகே மேம் நீங்க வெயிட் பண்ணுங்க, பிரின்சிபால் மேம் உங்கள கூப்பிடுவாங்க” என்றார்.

    

       “ம் சரிங்க தேங்க் யூ” என்று விட்டு மீண்டும் சென்று தன் மகனுடன் அமர்ந்த ஆதினி சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தாள்.

  

     யுகன் சேரில் அமர்ந்து காலை ஆட்டிக்கொண்டு சுற்றி பார்த்தவன் “அம்மா இந்த ஸ்கூல் நல்லா இருக்கு நா இங்கையே படிக்கிறேன்” என்றான்.

 

      அதில் தன் மகனை பார்த்து சிரித்த ஆதினி “ம் சரி தங்கம்” என்றவள் அவன் நெற்றியில் முன் பக்கம் விழுந்த முடியை சரி செய்து விட்டாள்.

        அப்போது “யுகன் அவங்க parents  மிஸ்ஸஸ். ஆதினி” என்று அழைத்தார் ஒருவர்.

    

     அந்த மிஸ்ஸஸ். ஆதினி என்ற வார்த்தையை கேட்டு ஆதினி உடல் நடுங்க அதில் தயக்கமாக எழுந்தவள் மேம் என்றாள்.

        “உங்கள பிரின்சிபால் மேம் கூப்பிடுறாங்க வாங்க” என்றார் அவர் 

     

       “ம்….. சரிங்க மேம்” என்ற ஆதினி “யுகன் வா” என்று அவன் கையை பிடித்து பிரின்சிபால் அறைக்கு முன் வந்து நின்று அனுமதி கேட்டுக்கொண்டு உள்ளே சென்றவள் “குட் மார்னிங் மேம்” என்றாள் அவரை பார்த்து.

        “குட் மார்னிங் மிஸ்ஸஸ். ஆதினி உக்காருங்க” என்று புன்னகையுடன் கூறினார் பிரின்சிபால்.

   

      “தேங்க் யூ மேம்” என்ற ஆதினி சேரில் அமர்ந்தவள் “யுகன் வா” என்று அவனை தன் மடியில் அமர வைத்தாள்.

  

      அவனும் தன் அம்மா மடியில் அமர்ந்து “குட் மார்னிங் மிஸ்” என்றான் பிரின்சிபாலை பார்த்து.

  

        அதில் சிரித்த பிரின்சிபால் “வெரி குட் மார்னிங் யுகன்” என்றார்.

  

      அதில் யுகன் அழகாக சிரிக்க ஆதினியும் மெலிதாக புன்னகை புரிந்தாள்.

    

     இருவரையும் பார்த்து புன்னகை புரிந்த பிரின்சிபால் யுகன் admission form பார்த்து விட்டு “யுகன் lkg ukg இரண்டும் ஒரே ஸ்கூல்ல பண்ணிருக்காங்க” என்றார்.

     

       “ஆ ஆமா மேம்” என்றாள் ஆதினி.

     

      “ஓகே” என்று பிரின்சிபால் மீண்டும் அந்த form பார்த்து விட்டு ஏன் father நேம் இருக்குற இடத்துல father நேம் எழுதாம இருக்கீங்க? கவனிக்கலையா? சரி ஓகே யுகன் அப்பா பேர் என்ன?” என்று பேனாவை எடுத்தவாறு கேட்டார்.

    

       அதை கேட்டு ஆதினி முகம் எல்லாம் இருண்டு போய் முகம் எல்லாம் வேர்க்க தொடங்க அதில் கையை பிசை

ந்த வண்ணம் அவரை  பார்த்தாள்.

 

     அப்போது மேம் என்ற ஒரு ஆண் குரல் கேட்க அதில் திரும்பி பார்த்த ஆதினி கண்கள் இரண்டும் விரிந்தது.

 

 

 

    No comments yet.