வசம் 32,33

Vaishnavi Vijayaraghavan | 12 May 2026 | Share

என் வசம் நானில்லை என் உயிரே……

வசம் -32

நீயே சொல்லுமா….. என்றார் சாந்தி.

மனதிற்குள் யாரையாவது லவ் பண்றேன் ன்னு சொல்லுவாளா? இல்லை அப்படி சொல்ல மாட்டா அவ தான் அக்கா மாதிரி நான் லவ் மேரேஜ் பண்ணி ஒரு துளி அளவு கூட உங்களுக்கு கஷ்டத்தையும் சங்கடத்தையும் தர மாட்டேன்….. நீங்க சொல்ற பையனுக்கு தான் நான் கழுத்தை நீட்டுவேன் என்று சத்தியம் செய்து இருக்கிறாளே… என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு…… என்று நினைத்து கொண்டார் சாந்தி.

அம்மா….. அப்பா வேலை செய்யுற கம்பனில என்னை வேலைக்கு வரச் சொல்லி இருக்காங்க….. இன்டர்வியூவுக்கு போயிட்டு வரவா?

ஓ….. இவ்வளவு தானா….. நான் கூட என்னவோ ஏதோ ன்னு நினைச்சேன்…..

என்னம்மா நினைச்சீங்க?

அதெல்லாம் ஒண்ணும் இல்லை….. அதை விடு மா…..

சரி….. நீங்க என்ன சொல்ல வந்தீங்க….. அதை சொல்லுங்க……

என்னங்க…. உஷா , மேத்யூ எல்லாருமே கேளுங்க…..

என்ன விஷயம் சாந்தி…..

இதான் பையன் ஃபோட்டோ….. பிடி டீச்சரா வேலை செய்கிறாராம்…… 20 ஆயிரம் சம்பளம்…..பேரு விக்னேஷ்….. ஜாதகம் நல்லா பொருந்தி இருக்கு….. இப்போ எல்லாரும் பார்த்து முடிவு பண்ணுங்க…. முக்கியமா நிஷா பார்த்து சொல்லு….. என்றார் சாந்தி.

அம்மா….. எதுக்கு மா அதுக்குள்ள மாப்பிள்ளை பார்க்கறீங்க?….. நீங்க தான 24 வயசுக்கு மேலே பார்க்கிறேன் ன்னு சொன்னீங்க….. இப்போ எனக்கு 23 தான ஆகுது……

பார்த்த உடனே முடிஞ்சிடுமா மா….. அதுக்கு ஒரு வருஷம் அவ்வளவு ஏன் ரெண்டு வருஷம் கூட ஆகலாம்….. அதனால தான் பார்க்க ஆரம்பிக்க சொல்லி சந்திரா பெரியம்மா கிட்ட சொல்லி வச்சிருந்தேன். போன வாரம் தான் சொன்னேன்….. அவ அதுக்குள்ளேயே ஒரு வரன் பார்த்து சொல்லிட்டா….. நீ பாரும்மா….. ஃபோட்டோவை பாரு…..

என்றார் சாந்தி.

நீங்க பார்த்தீங்கன்னா போதும் மா….. என்றாள் நிஷா.

ஏய்…. ஓவரா பண்ணாத டி….. இந்தா பாரு…. என்று சொல்லி ஃபோட்டோவை காண்பித்தாள் உஷா.

பி.டி. டீச்சர் என்பதால் உடம்பை கட்டக்கோப்பாக வைத்திருக்கிறாரு…… என்றான் மேத்யூ.

நிஷா ஃபோட்டோவை பார்த்தாள்.

நன்றாகவே இருந்தான் விக்னேஷ். ஏனோ நிஷாவால் அவனை பார்த்ததும் பிடிச்சிருக்கு என்று சொல்ல முடியவில்லை……

என்னடி பதில் சொல்லல…..

ஹாங்…. என்ன கேட்டீங்க அக்கா?….. நான் கவனிக்கவில்லை…..

என்னடி ஆச்சு உனக்கு….. பையனை பிடிச்சிருக்கா ன்னு கேட்டேன்…..

அம்மாவுக்கு ஓகே ன்னா எனக்கும் ஓகே……

இவ ஒருத்தி….

அம்மா நீ சொல்லு….. என்றாள் உஷா.

நிஷா உஷாவை முறைத்தாள்.

ஓகே ஓகே….

அம்மா நீங்க சொல்லுங்க….. உங்களுக்கு பிடிச்சிருக்கா?

எனக்கு சம்மதம்….. என்றார் சாந்தி.

இப்போ சொல்லு…..

எனக்கும் சம்மதம்….. என்றாள் நிஷா வராத சிரிப்பை வரவழைத்துக்கொண்டு ஸ்மைல் செய்தாள்.

உனக்கு இந்த வாரத்தில் எப்போ லீவு கிடைக்கும்?….. என்றார் சாந்தி.

ஞாயிற்றுக்கிழமை தவிர எப்போ சொன்னாலும் லீவு கிடைக்கும் சூப்பர் மார்க்கெட்டில்.

ஞாயிற்றுக்கிழமை தான் டி வரேன் ன்னு சொல்லுவாங்க….. என்றாள் உஷா.

இல்லம்மா….. நீ சொல்லு புதன், வியாழன், வெள்ளி எதாவது ஒரு நாள் சொல்லு…. என்றார் சாந்தி.

சரிம்மா…..

அம்மா….. நான் கம்பனி வேலைக்கு கேட்டேனே?

மேத்யூ தம்பி….. கம்பனி பத்தி எங்களுக்கு தெரிஞ்சதை விட உங்களுக்கு தான் தெரியும்…. நீங்க சொல்லுங்க….. என்றார் சாந்தி.

இவன் என்னவோ டெய்லி கம்பனிக்கு போய் கை எழுத்து போட்டுவிட்டு வேலைக்கு போயிட்டு வர மாதிரி இவன் கிட்ட கேட்கறீங்க மா…… என்றாள் உஷா.

உஷா….. மாப்பிள்ளை கிட்ட மரியாதையா பேசு….. நீங்க தனியா இருக்கும் போது எப்படி வேண்டுமானாலும் பேசிக்கோ…… ஆனா எங்க முன்னாடி இப்படி எல்லாம் பேசாதே…..

ஓகே ஓகே மா…..

நீங்க சொல்லுங்க தம்பி……

எனக்கு தெரிஞ்ச வரைக்கும் கம்பனில வேலைக்கு போறது நல்லது தான்….. அதுவும் நம்ம நிஷாவுக்கு கம்பியூட்டர்ல வேலை செய்யும் திறமை நல்லாவே இருக்கு…….. அதுக்கு மேல கம்பனி பத்தி தெரிய மாமா கிட்ட கேட்டுக்கோங்க அத்தை….. என்றான் மேத்யூ.

சரிங்க தம்பி….. நீங்க என்ன சொல்றீங்க…..

எனக்கு ஓகே ன்னு வீட்டுக்கு வரும் போதே பேசி முடிவு பண்ணி விட்டேன்…..

அது இல்லீங்க..‌….. கம்பனில ஆளுங்க எப்படி இருப்பாங்க…..

ஏன்….. நல்லா தான் இருப்பாங்க…..

உங்க கருத்தை கேட்கறேங்க…..

எனக்கு சம்மதம் தான் மா……

அம்மா….. என்றாள் நிஷா.

என்னம்மா….. உங்களுக்கு கம்பனிக்கு வேலைக்கு அனுப்ப விருப்பம் இல்லை ன்னா வேண்டாம் மா……

சே சே அப்படி எல்லாம் இல்லை மா…… அதை பத்தி எனக்கு தெரியாததால எல்லார் கிட்டேயும் கேட்டேன்… எனக்கும் சம்மதம் தான்….. நீ கம்பனிக்கு வேலைக்கு போயிட்டு வா.

ஓ…. ஓகே மா….. தேங்க்ஸ்…..

அப்புறம் நிஷா…..

சொல்லுங்க மா…..

இந்த சம்பந்தம் முடியுதோ இல்லையோ….. உனக்கு வரப் போகும் மாப்பிள்ளை வீட்ல உன்னை வேலைக்கு போக சொன்னா போகனும்…. இல்லைன்னா வேலையை விட்டிடனும்….. என்றார் சாந்தி.

அம்மா….. இது என்ன மா கதையா இருக்கு….. இவளுக்கு பிடிச்சிருந்தாலும் செய்யக் கூடாதா?….. என்றாள் உஷா.

ஆமாம் டி….. அவ அவங்களுக்கு மதிப்பு கொடுக்கனும்….. அவங்க பேச்சை இவ கேட்கலைன்னா….. எப்படி வளர்த்து வச்சிருக்காங்க பாரு ன்னு…….. என்னைத்தான் சொல்லுவாங்க….

என்றார் சாந்தி.

அம்மா…. உங்களுக்கு கெட்ட பேர் கிடைக்கக் கூடாதுன்னு நினைப்பீங்களா?….. உங்க பொண்ணு சந்தோஷமா இருக்கனும் ன்னு நினைப்பீங்களா?…. என்றாள் உஷா.

அக்கா….. என்றாள் நிஷா.

என்னடி…..இதுக்கும் அம்மா சொல்றது தான் சரி ன்னு….. சொன்ன அவ்வளவு தான்….. என்றாள் உஷா.

சிரித்தாள் நிஷா.

சாந்தியை கட்டிப்பிடித்து கொண்டு…..

அம்மா….. நீங்க சொன்னது போலவே செய்யறேன்….. ஓகே வா….. என்றாள்.

என் செல்லம்…. என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தமிட்டார் சாந்தி.

அவளும் திரும்ப அவளுடைய அம்மாவின் இரு கன்னத்திலும் முத்தம் கொடுத்தாள்.

ஓகே….. இந்த ரெண்டு டாப்பிக் பத்தி பேசினது போதும்….. நான் போய் இன்டர்வியூவுக்கு ரெடி ஆகப் போறேன்….. இந்த வாரத்தில் என்னைக்கு லீவு கிடைக்கும் ன்னு கேட்டு சொல்றேன்…… அன்னைக்கு பொண்ணு பார்க்க வரச் சொல்லுங்க….. என்று சொல்லி விட்டு தன் ரூமிற்கு சென்றாள் நிஷா.

நிஷா….. என்றாள் உஷா அவளுடைய ரூமிற்கு சென்று.

என்ன அக்கா…..வா….. ஷாலினி தூங்கிட்டா இல்ல?

ஹூம்…..

உனக்கு இந்த சம்பந்தத்தில் சம்மதமா டி…..

ஹூம்…. சம்மதம்……

நீ யாரையாவது லவ் பண்றீயா?

சே சே அதெல்லாம் ஒண்ணும் இல்லை அக்கா…..

உண்மையிலேயே வா?

ஆமாம் அக்கா…..

ஓகே டி….. இந்தா….. என்று சொல்லி விக்னேஷ் ஃபோட்டோவை அவளிடம் தந்தாள் உஷா.

அதை வாங்கி அங்கிருந்த டேபிளில் வைத்தாள் நிஷா.

அவளுக்கு முழு சம்மதம் இல்லை என்று புரிந்து கொண்டாள் உஷா.

சரி நிஷா….. குட் நைட்டு….. என்று சொல்லி விட்டு உஷா வெளியே வந்தாள் உஷா.

குட் நைட்டு அக்கா….. என்றாள் நிஷா 

வெகுநேரமாக தூக்கம் வராமல் பிரண்டு படுத்துக் கொண்டு இருந்தவள் பின்னர் தூங்கிவிட்டாள்.

############

ஈவினிங் 5 மணி அளவில்

யோகேஷூம் ராமநாதனும் அப்பல்லோ ஹாஸ்பிடலுக்கு வந்தனர்.

வாங்க சார்….. குட் ஈவினிங்….. என்றாள் தன்ஷிகா.

நீ ரிலாக்ஸாக இரு மா….. நா பிரின்ஸ்பாலா வரல…..

என்றார் ராமநாதன்.

வாங்க சார்….. என்றான் தினேஷ்.

அப்பா எங்க பா?

மதியமா போலீஸ் ஸ்டேஷனில் போயிட்டு ஈவினிங் வரேன் ன்னு சொன்னார். இப்போ வர நேரம் தான் சார்.

ஓ…. ஓகே பா….. உங்க அப்பா வந்த பிறகு ஒரு முக்கியமான விஷயம் பேசனும்….. என்றார் ராமநாதன்.

யோகேஷ் தன்ஷியை லவ் பண்றதை பத்தி சொல்லிட்டான் போல….. அதைப் பற்றி பேசத்தான் நினைக்கிறார் போல….. என்று நினைத்து கொண்டான் தினேஷ்.

அப்போது தன்ஷிகாவுக்கு கால் வந்தது.

ஹலோ புவி….. வீட்டுக்கு போயிட்டியா?

புவி…. என்ற பெயரை கேட்டதுமே கடுப்பாகினான் யோகேஷ்.

தேங்க்ஸ் டி….. 

********

வெயிட் பண்ணி என்னை பார்த்து விட்டு போனீயே

அதுக்கு….

*********

ஓகே டி….. அப்புறமா பேசறேன்…..பை….

*********

கண்களாலேயே சாரி சொன்னாள் தன்ஷிகா யோகேஷிடம்…..

சிரித்தான் யோகேஷ்.

யாரும் பார்க்காத போது கண்ணடித்தாள் தன்ஷிகா.

சுவாமிநாதன் வந்தார்.

வாங்க சார்….. என்றார் சுவாமிநாதன்.

கையை குலுக்கி விட்டு அமர்ந்தனர்.

சார்….. நான் சுத்தி வலைச்சு பேச விரும்பல….. ஸ்டெரியிட்டா விஷயத்துக்கு வரேன்….. இந்த நேரத்தில பேசறேன் தப்பா நினைக்க வேண்டாம்…..

அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார்….. சொல்லுங்க…..

சார் ன்னு சொல்ல வேண்டாம்…..

சம்மந்தி ன்னு சொல்லுங்க….. எனக்கு சந்தோஷமாக இருக்கும்.

அதுக்குள்ள சொல்லிட்டியா…. என்று ஜாடையில் கேட்டாள் தன்ஷிகா.

ஒண்ணும் புரியாமல் விழித்தார்கள் திலகவதி மற்றும் சுவாமிநாதன். யோகேஷ் – தன்ஷி பற்றி பேசுகிறார் என்று நினைத்து கொண்டான் தினேஷ்.

என் பொண்ணு யாழினியை உங்க மருமகளாக ஆக்க நினைக்கிறேன்…. உங்க எல்லாரோட சம்மதமும் வேண்டும்…..

அனைவரும் அதிர்ச்சி ஆனார்கள்.

#########

தொடரும்…..

அ. வைஷ்ணவி விஜயராகவன்.

 

என் வசம் நானில்லை என் உயிரே……

வசம் -33

ராமநாதன் திடீரென அப்படி கேட்டதால் தன்ஷிகா உட்பட அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தனர்.

என்ன எல்லாரும் ஷாக் ஆகிட்டீங்க….. உங்க பையனை எனக்கு பார்த்ததுமே பிடிச்சிருந்துச்சு….. யோகேஷ் தான் எதுக்கும் நான் அவர் கிட்ட பேசி லவ் எதாவது இருக்கா ன்னு கேட்டு சொல்றேன் ன்னு சொன்னான். எனக்கும் அது சரி ன்னு தோணுச்சு…. தினேஷ் இதுவரை யாரையும் லவ் பண்ணல ன்னு சொல்லிட்டாரு ன்னு யோகி சொன்னான். அதான் உடனே பேசலாம் ன்னு தோணுச்சு….. 

தன்ஷிகா தினேஷை பார்த்தாள். இதுவரை அவன் நிஷாவை லவ் பண்ணுகிறான் என்று நினைத்து கொண்டு இருந்தாள். ஏன் இப்படி பண்றான்….. யோகேஷ் கிட்ட இதுவரை யாரையும் லவ் பண்ணல ன்னு சொல்லி இருக்கானே….. என்று நினைத்து கொண்டாள் தன்ஷிகா.

சார்…. நீங்க இப்படி திடீர்னு கேட்டதால எங்களுக்கு எதுவுமே புரியல….. நாங்க பேசி டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்லட்டுமா?

ஓ…. ஷியூர்….. டேக் யுவர் டைம்….. இந்த வீக் என்ட் உள்ள சொன்னீக்கன்னா எனக்கு பிரொசீடு பண்ண கொஞ்சம் யூஸ்ஃபுல்லா இருக்கும்.

நாளைக்கு ஈவினிங் உள்ள சொல்லிடறேன் சார்…..

ஓகே சார்…… என்று சொல்லி விட்டு.

தன்ஷிகாவிடம் உடம்பை பார்த்துக்கோ மா….. காலேஜ் நோட்ஸ் எல்லாமே உனக்கு மெயில் பண்ண சொல்லி கன்சர்ன் சப்ஜெக்ட் லெக்சரர் கிட்ட சொல்றேன்.

ஓகே சார்….. தேங்க்ஸ்….. என்றாள் தன்ஷிகா.

பை….. என்று சொல்லி விட்டு கிளம்பினார் ராமநாதன்.

நானும் கிளம்பறேன்….. நாளைக்கு ஈவினிங் வரேன்….. என்றான் யோகேஷ்.

பை தன்ஷி….

 பை தினேஷ் சார்….. என்று சொல்லி விட்டு அவன் அருகில் சென்று….. சீக்கிரமாவே எல்லார் முன்னாடியும் உங்களை மாமா ன்னு கூப்பிட ஆசைப் பட்டேன்…… அது இப்போது நடக்கும் ன்னு நம்பறேன்….. என்று சொல்லி விட்டு சென்றான்.

அவர்கள் இருவரும் சென்றதும்….

என்னப்பா இது…. நீ என்ன நினைக்குற….. என்றார் சுவாமிநாதன்.

எனக்கு ஒண்ணுமே புரியல பா…..

நல்ல குடும்பம்….. நல்லா படிச்சு நல்ல வேலைல இருக்கா….. வேற என்னடா எதிர் பார்க்குற?….. என்றார் திலகவதி.

அம்மா….. நான் எதுவும் எதிர்பார்க்கல…… நான் இப்போ கல்யாணம் பண்ணிக்க நினைக்கல…..

யாரையாவது லவ் பண்றீயா பா….. என்றார் சுவாமிநாதன்.

அதெல்லாம் ஒண்ணும் இல்லை அப்பா.

அப்பா…. நான் அண்ணன் கிட்ட பேசனும்….. நீங்க ரெண்டு பேரும் கீழே போய் காஃபி குடிச்சிட்டு எனக்கும் அண்ணாவுக்கும் வாங்கிட்டு வாங்க…. என்றாள் தன்ஷிகா.

ஒரு நிமிஷம் யோசித்து விட்டு…..

சரி…. வா திலகா….. என்றார் சுவாமிநாதன்.

நாங்க இல்லாம என்ன பேசப் போற நீ…… என்றார் திலகவதி.

அண்ணன் தங்கச்சிக்குள்ள ஆயிரம் இருக்கும்…. எல்லாமே உங்க கிட்ட சொல்ல முடியாது மா….. என்றாள் தன்ஷிகா.

பாருங்க எப்படி பேசுறா ன்னு…..

தன்ஷி…. என்றார் சுவாமிநாதன்.

சாரி அப்பா….. என்றாள் தன்ஷிகா.

ஏய்…. எதிர்த்து பேசினது என் கிட்ட அவர் கிட்ட சாரி சொல்ற….

சரிம்மா சாரி…. போங்க கீழ….. என்றாள் தன்ஷிகா.

உனக்கு ரொம்ப தான்…. வீட்டுக்கு வா வச்சிக்கிறேன்…. என்று சொல்லி விட்டு சுவாமிநாதனுடன் கேண்டீனுக்கு சென்றார் திலகவதி.

அவர்கள் சென்றதும்….

அண்ணா….. உண்மையிலேயே நீங்க நிஷாவை லவ் பண்ணலையா…..

இல்ல தன்ஷி…. உன் கிட்ட எத்தனை முறை சொல்றது….. எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்ல நிஷாவை பார்க்கும் போது….. என்றான் தினேஷ்.

அப்போ யோகேஷோட அக்காவை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?

அதுவும் தெரியல…..

என்ன அண்ணா நீங்க….. லவ் இல்ல…. அப்போ அரேன்ஜ்டு மேரேஜ்க்கு ஏன் யோசிக்கறீங்க….

அப்போ உங்களுக்கு நிஷா மேல ஒரு ஈர்ப்பு இருக்கு இல்ல…..

இல்ல தன்ஷி…. அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை…. எனக்கு யோகேஷோட சிஸ்டரை பார்க்க சம்மதம்…

 என்று சொல்லி விட்டு வெளியே வந்தான் தினேஷ்.

அண்ணா…. அண்ணா….‌என்று கூப்பிட்டு கொண்டு இருந்தாள் தன்ஷிகா.

அப்போது நர்ஸ் உள்ளே வந்தார்.

அவங்கள பார்த்துக்கோங்க சிஸ்டர்…. நான் போய் என்னோட அம்மாவை அனுப்பறேன்….. என்றான் தினேஷ்.

ஓகே சார்…. என்று சொல்லி விட்டு டெஸ்ட் எடுக்க உள்ளே சென்றாள் நர்ஸ்.

ஏங்க…. எதுக்கு தெரியுமா உங்க பொண்ணு நம்மல கேண்டீனுக்கு போக சொன்னா…. என்றார் திலகவதி.

எதுக்கு?

அவ யோகேஷை லவ் பண்றா….‌அது ஓகே ஆகனும் ன்னா நீ அவனோட அக்காவை கல்யாணம் பண்ணிக்கோ அண்ணா ன்னு தினேஷ் கிட்ட கெஞ்சறதுக்கு……

ஆனாலும் உன் கற்பனைக்கு ஒரு அளவே இல்லை…..

என்றார் சுவாமிநாதன்.

அந்த யோகேஷ் இங்கு இருந்த போது உங்க பொண்ணு கண்ணுல காதலை பார்த்தேன்…..

அம்மாடி…. நீ பெரிய டைரெக்டர் ஆயிடுவ போல…. என்று சொல்லி சிரித்தார் சுவாமிநாதன்.

கிண்டல் பண்ணாதீங்க….. நான் சொல்றது உண்மைதான்…..

எனக்கும் தெரியும் திலகா…. அவ பேசும்போதே அது தெரியுது…. அந்த பையன் யோகேஷூம் டெய்லி வந்து பார்த்துக்கிறதும்…. பேசறதையும் பார்த்து நான் கூட இவங்க கல்யாணத்துக்கு தான் ராமநாதன் பேசப் போறாரு ன்னு நினைச்சேன்……

ஹூம்….. 

அங்க பாருங்க…. தினேஷ் வரான்….. 

என்னடா….. அவளை தனியா விட்டுட்டு வந்திட்ட….

இல்லம்மா…. நர்ஸ் பிபி டெஸ்ட் எடுக்க வந்தாங்க…. சொல்லிட்டு வந்தேன்…. நீங்க போங்க….. எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு……

தினேஷ்…..

சொல்லுங்க அப்பா…..

ராமநாதன் கேட்டாரே…..அதை பத்தி நீ என்ன நினைக்குற?

எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை பா…. உங்க எல்லாருக்கும் ஓகே ன்னா….. பிரொசீடு பண்ணலாம்….. என்றான் தினேஷ்.

சரிப்பா….. என்றார் சுவாமிநாதன்.

சிரித்துக்கொண்டே….

ஏங்க….. அவருக்கு ஃபோன் பண்ணி ஓகே ன்னு சொல்லிடுங்க….. என்றார் திலகவதி.

ஓகே….. என்று சொன்னாலும் ஏன் அவனுடைய முகத்தில் சந்தோஷம் இல்லை ….. என்று நினைத்து கொண்டார் சுவாமிநாதன்.

நாளைக்கு ஃபோன் பண்ணி சொல்றேன் மா….. என்றார் சுவாமிநாதன் தன் மனைவியிடம்.

காருக்குள் சென்று ஏசி போட்டுக் கொண்டு சீட்டை பின்னால் தள்ளி அதிலே படுத்துக் கொண்டு ரேடியோ ஆன் செய்தான் தினேஷ்.

ஓ நிஷா…. ஓ நிஷா….நிஷா நீ ஓடி வா….. ஓ ஓ நிஷா ….. என்ற பாடல் வந்தது.

ஒருநிமிடம் அப்படியே ஸ்தம்பித்து அமர்ந்தான்.

தன் ஃபோனை எடுத்து நிஷாவிற்கு மெஸேஜ் செய்தான்.

ஆர் யூ அவேக்…. என்று.

ரிப்ளை வரவில்லை……

தூங்கிவிட்டாள் போல என்று நினைத்து கொண்டான்.

அவன் லேப்டாப் எடுத்து வேலை செய்து கொண்டு இருந்தான்.

இரண்டு மணிக்கு கிளையண்ட் கால் அலாரம் வைத்து விட்டு காரிலேயே தூங்கினான்.

பாத்ரூம் செல்ல எழுந்த நிஷா ஃபோனை பார்த்தாள்.

உடனே மெஸேஜூக்கு ரிப்ளை செய்தாள்.

சொல்லுங்க தினேஷ்…..

மெஸேஜ் சப்தம் கேட்டு எழுந்தான் தினேஷ்.

ஹாய் நிஷா….. கால் பண்ணவா?

சாரி தினேஷ்…. ஷாலினி பாப்பா என் கூடவே படுத்து தூங்கிட்டா…. இப்போ பேசினா முழிச்சிக்குவா……

ஓ…. ஓகே….

எனிதிங் இம்ப்பார்டன்ட்?

நான் ஸ்டெரியிட்டா விஷயத்துக்கு வரேன்…..

ஆர் யூ இன்ட்ரெஸ்ட்டு இன் மீ……( உனக்கு என் மேல விருப்பமா).

இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத நிஷா…..

வெகு நேரமாக டைப் செய்து…. டைப் செய்து டெலீட் செய்தாள்…..

இல்ல….

அப்படி எதுவும் இல்லை….

ஏன் திடீர்னு இப்படி கேட்கறீங்க….

அது வந்து….

அப்படி சொல்ல முடியாது…

உங்களை பிடிக்கும்…. ஆனா….

இவை அனைத்தையும் டைப் செய்து டெலீட் செய்தாள் நிஷா.

பின்னர் தன் மேல் கால் போட்டு தூங்கிக் கொண்டிருந்த ஷாலினி பாப்பாவை மெதுவாக எடுத்து விட்டு ஃபோனை எடுத்து கொண்டு பாத்ரூமுக்கு சென்றாள்.

தண்ணீர் திறந்து விட்டு விட்டு….. 

தினேஷூக்கு கால் செய்தாள் நிஷா.

ஹலோ….. தினேஷ்…..

சொல்லுங்க நிஷா…..

எதுக்கு இப்போ தீடீரென கேட்கறீங்க தினேஷ்……

எனக்கு வீட்டில பொண்ணு பார்க்க டிசைடு பண்ணி இருக்காங்க….. அதனால தான் கேட்கிறேன்….. நீங்க மனசுல எந்த ஆசையும் விருப்பமும் வச்சு இல்லல?

 அவன் யோகேஷிடம் கேண்டினில் பேசியதையும்…. இப்போது அவன் கேட்ட இல்லல?…. என்றதையும் யோசித்து விட்டு…..

சிரித்தாள் நிஷா.

என்ன நிஷா சிரிக்கிறீங்க?….. பதில் சொல்லுங்க…..

எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்க….. இந்த வீக்ல ஒரு நாள் பொண்ணு பார்க்க வராங்க….. என்றாள் நிஷா.

தேங்க் காட்….. நான் கூட உங்களுக்கும் எனக்கும் இருப்பது நட்பை தாண்டி ஏதோ ன்னு தோணும்….. இது ஒருவேளை காதலோ ன்னு நினைச்சேன்….. உங்களுக்கும் அப்படி ஒரு எண்ணம் இல்ல…. எனக்கும் அப்படி ஒரு எண்ணம் இல்ல….. வீ ஆர் ஜஸ்ட் ஃபிரெண்ட்ஸ்…. ரைட்?

யெஸ்…..

ஓகே…. தேங்க்ஸ்…. தேங்க் யூ ஸோ மச் ஃபார் கிளயரிங் மை டவுட்.( என்னோட சந்தேகத்தை தெளிவு படுத்தியதற்கு நன்றி)…. என்றான் தினேஷ்.

ஓகே பை நிஷா….. சீக்கிரமா இன்டர்வியூ அட்டெண்ட் பண்ண வாங்க…..

ஓகே தினேஷ்…… பை….

இப்போது நிம்மதியாக உணர்ந்தான் தினேஷ்.

அவன் எதிர்ப்பார்த்தால் அப்படி ஒரு பதில் அளித்தாள் நிஷா. அமைதியாக சென்று படுத்தாள்.

############

தொடரும்……

அ. வைஷ்ணவி விஜயராகவன்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.