என் வசம் நானில்லை என் உயிரே…….
வசம் -28
நிஷா பத்து மணி அளவில் வீட்டிற்கு வந்தாள். அப்போது தான் தினேஷின் மெஸேஜை பார்த்தாள்.
உடனே ரிப்ளை செய்தாள்.
சாரி தினேஷ்….. இப்போது தான் உங்க மெஸேஜ் பார்த்தேன்……
உடனே கால் செய்தான் தினேஷ்.
கட் செய்தாள் நிஷா.
என்னாச்சு?….. என்று மெஸேஜ் செய்தான்.
இல்ல…. என்னோட அக்கா பொண்ணு ஷாலினி என் மடியிலேயே படுத்து தூங்கிட்டா….. அதான் பேசற சப்தம் கேட்டு முழிச்சிக்க போறா ன்னு கட் பண்ணிட்டேன் சாரி……
இதுக்கு எதுக்கு சாரி எல்லாம் சொல்றீங்க நிஷா…..
தன்ஷி எப்படி இருக்கா?
ஓகே….. நாளைக்கு மார்னிங் 10 மணிக்கு ஆப்பிரேஷன். நீங்க நாளைக்கு வரீங்களா?
ஹாங்….. கண்டிப்பா….. நாளைக்கு தான் ஷாலினி பாப்பாவுக்கு பர்த் டே…… ஸோ பர்ச்சேஸ் பண்ணனும்…. காலையில அங்கே வந்திட்டு அப்புறமா பர்சேஸ் முடிந்ததும் வீட்டுக்கு போயிடுவேன்…..ஈவினிங் வீட்ல கேக் கட்டிங்….. என்றாள் நிஷா.
ஓ….. ஓகே…… அட்வான்ஸ் விஷ்ஷஸ் டூ ஹர்…..
தேங்க்ஸ்…. வில் கன்வே ஹர்…..
ஸ்மைல் எமோஜிகளை போட்டான்.
அதை லைக் செய்யும் எமோஜியை போட்டாள் நிஷா.
நாளை மீட் பண்ணலாம்….. என்றான் தினேஷ்.
ஓகே….. பை….. குட் நைட்டு….. என்று ரிப்ளை செய்தாள் நிஷா.
யோகேஷ் காலை ஆப்பிரேஷனுக்கு முன்னாடி வந்திடுவேன் என்று தன்ஷிகாவுக்கு மெஸேஜ் செய்தான்.
ஓகே டியர்….. என்று ரிப்ளை செய்தாள் தன்ஷிகா.
ஹார்ட் சிம்பல் போட்டு ரிப்ளை செய்தான்.
பை….. வெயிட்டிங் டூ ஸீ யூ டுமாரோ மார்னிங்….. என்றாள் தன்ஷிகா.
மீ டூ….. என்றான் யோகேஷ்.
******************
மறுநாள் காலை எட்டு மணி அளவில்.
எங்கப்பா போற….. என்றார் ராமநாதன் யோகேஷிடம்.
அப்பா….. இன்னைக்கு தன்ஷிகாவுக்கு ஆப்பிரேஷன்….. அதான்.
கொஞ்சம் இரு….. நானும் வரேன்…..
அப்பா நீங்க காலேஜ் போகனுமே….. மன்டே மார்னிங் நிறைய வேலை இருக்குமே…..
இருக்கும் தான்….. ஆனா இந்த வேலையும் இம்ப்பார்டன்ட்.
என்னப்பா சொல்றீங்க?
ஆமாம் யோகி….. உன்னோட அக்காவுக்கு தன்ஷிகாவோட அண்ணன் தினேஷை கேட்கப் போறேன்……
வாட்….. என்னப்பா நீங்க….. அதுவும் இப்போதா….. அவங்க ஹாஸ்பிட்டலில் இருக்காங்க……
ஜஸ்ட் ஜாதகம் மட்டும் தான் கேட்கப் போறேன்….. செட் ஆச்சுன்னா அப்புறம் மத்ததை பேசிக்கலாம்…..
ஆனா அப்பா…..
நீ கவலைப்படாதே யோகி….. தன்ஷியோட ஜாதகத்தை உனக்கு கேட்க மாட்டேன்….. ஜாதகமே பார்க்காம உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க நான் ரெடி……
அப்பா உங்களுக்கு எப்படி?…….
ஏய்….. நான் உன் அப்பன் டா….. எனக்கு தெரியாதா?
பர்த் டே பார்ட்டியை விட்டுட்டு ஹாஸ்பிட்டல்லையே உட்கார்ந்து இருக்கே ன்னா அது ஜஸ்ட் ஃபிரெண்ட்ஸ்ஷிப்பா இருக்காது ன்னு எனக்கு அப்பவே தெரியும். அதனால தான் நான் அன்னைக்கு வந்தேன்…… அந்த பொண்ணோட அண்ணன் பொறுப்பா அந்த குடும்பத்தை பார்த்துக்கிறதும் இந்த சின்ன வயசுலேயே சிஈஓ வா இருக்கிறதும் சாதாரண விஷயம் இல்ல….. அதான் முடிவு பண்ணிட்டேன் அந்த குடும்பத்துல உங்க ரெண்டு பேருக்குமே சம்பந்தம் பேசலாம் ன்னு…… உன்னோட அபிப்பிராயம் என்ன?
எனக்கு சந்தோஷம் தான் பா….. ஆனா அவர் யாரையாவது லவ் பண்றாரா ன்னு தெரியலையே?
அதுக்குள்ள நீங்க பேசனீங்க ன்னா?
ஓ…. அது ஒண்ணு இருக்கோ….. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் லவ் பண்ற மாதிரி தெரியல…. ஏன்னா லவ்ல விழுந்திருந்தான்னா இந்த அளவுக்கு கேரியர்ல முன்னேறி இருப்பான் ன்னு தோணல….. என்றார் ராமநாதன்.
எதுக்கும் நான் அவர் கிட்ட பேசிட்டு சொல்றேன் பா…..
ஓகே பா……. அப்போ இன்னைக்கு வரவேண்டாம் ன்னு சொல்றீயா?
ஆமாம் பா….. அவ டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போகட்டும்…. சன்டே மாதிரி எதாவது ஒரு நாள் போய் பார்த்து விட்டு அப்படியே சம்மதமும் ஜாதகமும் கேட்டு வாங்கி வரலாம்….. என்றான் யோகேஷ்.
ஓகே பா…… நீ போயிட்டு வா….. நான் காலேஜூக்கு போறேன் என்றார் ராமநாதன்.
ஓகே அப்பா….. பை….. என்று சொல்லி விட்டு ஹாஸ்பிடலுக்கு சென்றான் யோகேஷ்.
ரிசெப்ஷனில் நிஷா தன்ஷிகா பெயரை சொல்லி எந்த ரூம் என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
அப்போது உள்ளே நுழைத்தான் யோகேஷ்.
ரூம் நம்பர் 405 என்றான் யோகேஷ்.
நிஷா திரும்பி யோகேஷை பார்த்தாள்.
ஆமாம் மேடம் 405 தான்….. என்றாள் ரிசெப்ஷனிஸ்ட்.
வாங்க நானும் அங்கே தான் போறேன்….. என்றான் யோகேஷ்.
நிஷாவும் அவனும் நடந்து சென்றாள்.
நீங்க தன்ஷியோட ஃபிரெண்டா….. என்றாள் நிஷா யோகேஷிடம்.
இல்லீங்க….. லவ்வர்….. என்றான் யோகேஷ்.
ஓ….. ஓகே……
நீங்க……
நான் அவங்க ஃபிரெண்டு……
எனக்கு தெரியாம எப்படி ஃபிரெண்டு…….
அவங்க வீட்டுக்கு வெளியே சூப்பர் மார்க்கெட் இருக்கு இல்ல?
ஆமாம்……
அங்கே தான் பில்லிங் கவுண்டரில் ஒர்க் பண்றேன்….. தன்ஷி டெய்லி வருவா….. அப்படியே பேசி பேசி ஃபிரெண்டா ஆயிட்டோம்….. இன்ஃபேக்ட் அவங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே என்னை நல்லா தெரியும்.
ஓ…. ஓகே ஓகே……
சாரி…..
எதுக்கு?
பேச்சு வாக்குல தன்ஷியை அவ இவ ன்னு சொல்லிட்டேன்……..
இதுல என்ன இருக்கு….. ஃபிரெண்ட்ஸ் ன்னா அப்படி தான பேசிக்குவீங்க……
ஸ்மைல் செய்தாள் நிஷா.
லிஃப்ட்டில் இருவரும் நான்காவது மாடிக்கு சென்றனர்.
அங்கே புளூ டிரெஸ் போட்டு ஆப்பிரேஷனுக்கு ரெடியாக இருந்தாள் தன்ஷிகா.
நிஷா….. வாங்க….. என்றாள் தன்ஷிகா.
எப்படி இருக்க தன்ஷி….. என்றாள் நிஷா.
இப்போதைக்கு பெயின் இல்ல…… ஆனா ஆப்பிரேஷன் முடிஞ்ச பிறகு எப்படி இருக்குமோ ன்னு நினைச்சாலே பயமா இருக்கு……
பயப்படாத தன்ஷி….. என்று சொல்லி தான் கொண்டு வந்த விபூதியை அவள் நெற்றியில் பூசி விட்டாள்.
தேங்க்ஸ்….. என்றாள் தன்ஷிகா.
திலகவதி நிஷா தோளில் கை வைத்து…..
தேங்க்ஸ் மா…… என்றார்.
என்னம்மா நீங்க…… தேங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க….. தன்ஷி என்னோட தங்கச்சி மாதிரி….. என்றாள் நிஷா.
சுவாமிநாதன் யோகேஷிடம் பேசிக்கொண்டிருந்தார்.
தினேஷ் சார் எங்கே?….. என்றான் யோகேஷ் சுவாமிநாதனிடம்.
மாத்திரை மருந்து வாங்கி வரச் சொல்லி இருக்காங்க அதுக்கு போயிருக்கான்.
ஓ…. ஓகே அங்கிள்……
அப்படி கூப்பிடலாமா?
என்னை அங்கிள் ன்னா என் ஒயிஃபை ஆன்டி ன்னு கூப்பிடுவியா?
இல்ல….. அவங்க எனக்கு மேத்ஸ் டீச்சரா இருந்திருக்காங்க….. அவங்கள ஆன்டின்னு கூப்பிட வராது….. என்றான் யோகேஷ்.
ஸ்மைல் செய்தார் சுவாமிநாதன்.
உன் இஷ்டம் பா….. சும்மா தான் சொன்னேன்….. உனக்கு எப்படி கூப்பிடனுமோ அப்படி கூப்பிடு……
அப்போது ஆப்பிரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்ல வார்டு பாய்கள் வந்தனர்.
ஒரு நிமிஷம்….. எங்க அண்ணா வரட்டும்….. என்றாள் தன்ஷிகா.
அப்பா….. அண்ணனுக்கு கால் பண்ணுங்க….. என்றாள் தன்ஷிகா.
லைன் கிடைக்கல மா……
இருங்க நான் போய் கூட்டிக்கிட்டு வரேன்….. என்றான் யோகேஷ்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் யோகேஷ் மற்றும் தினேஷ் இருவரும் தன்ஷிகாவின் முன்னால் நின்றனர்.
தினேஷ் தன்ஷிகாவின் அருகில் சென்று அவள் தலையை கோதி…..
மை பிரேவ் சிஸ்டர்….. டோண்ட் ஒரி….. வீ ஆர் ஆல் வித் யூ….. என்றான் தினேஷ்.
கண்கள் கலங்க….. பை அண்ணா…. என்று சொல்லி அவனுடைய கைகளை பிடித்து கொண்டாள் தன்ஷிகா.
அனைவரும் கலக்கத்துடன் அவளை பார்த்து கொண்டு இருந்தார்கள்.
அப்போது தன்ஷி….. என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தனர் அனைவரும்.
அங்கே புவனேஷ்வரி நின்று கொண்டு இருந்தாள்.
புவி….. வா டி….. என்றாள் தன்ஷிகா சந்தோஷமாக.
புவனேஷ்வரி அவளருகில் சென்று……
சீக்கிரமா என் கூட காலேஜூக்கு நடந்து வரணும்….. அதுக்காக எங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வாங்கி வந்தேன்….. என்று சொல்லி குங்குமம் இட்டு விட்டாள்.
தேங்க்ஸ் டி….. என்றாள் தன்ஷிகா.
நீ வர வரைக்கும் நான் வெயிட் பண்றேன் டி….. என்றாள் புவனேஷ்வரி.
ஓகே புவி….. பை….. என்று சொல்லி விட்டு ஆப்பிரேஷன் தியேட்டருக்கு சென்றாள் தன்ஷிகா.
யோகேஷ் புவனேஷ்வரியை பார்த்ததும் கோபப்பட்டு கேண்டீனுக்கு சென்றான். தினேஷ் அவனுடன் சென்றான்.
திலகவதியின் பக்கத்தில் போய் அமர்ந்தாள் புவனேஷ்வரி.
தினேஷ் யோகேஷ் பிரஷாந்த் தவிர வேறு யாருக்கும் புவனேஷ்வரியை பற்றி தெரியாததால் அவர்கள் சாதாரணமாக பேசினார்கள்.
நிஷாவும் புவனேஷ்வரியும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
அம்மா….. தன்ஷியோட ஃபோன்ல என் நம்பர் இருக்கு நான் கொஞ்சம் கடைக்கு போக வேண்டி இருக்கு….. ஆப்பிரேஷன் முடிஞ்ச பிறகு அவங்க நம்பர்ல இருந்து கால் பண்றீங்களா….. நான் வந்து பார்க்கிறேன்…… என்றாள் நிஷா.
சரிம்மா….. நீ போயிட்டு வா……
வரும் போது எதாவது வேணுமா மா? வாங்கி கொண்டு வரவா?
இல்லம்மா….. எதுவும் வேண்டாம்…..
ஓகே அம்மா…. பை….. என்றாள் நிஷா.
பை நிஷா….. என்றார் திலகவதி.
பை புவி…..
பை நிஷா….. என்றாள் புவனேஷ்வரி.
#############
தொடரும்……
அ. வைஷ்ணவி விஜயராகவன்.

என் வசம் நானில்லை என் உயிரே…….
வசம் -29
திலகவதியிடமும் புவனேஷ்வரியிடமும் சொல்லிவிட்டு நிஷா கிளம்பினாள். கேண்டீனுக்கு சென்று தினேஷை பார்த்துவிட்டு செல்லலாம் என்று நினைத்து சென்றாள்.
கேண்டீனில்……
யோகேஷூம் தினேஷூம் பேசிக் கொண்டு இருந்தனர்.
அந்த புவனேஷ்வரியை பார்த்தால் எனக்கு ஆத்திரம் தலைக்கு ஏறுது….. என்றான் யோகேஷ்.
எனக்கும் அவ மேல கடுப்பு தான்….. ஆனா தன்ஷிக்காக அவளை மன்னிச்சிட்டேன்…..
எப்படி மாமா…. உங்களால எப்படி இந்த மாதிரி திங்க் பண்ண முடியுது…..
மச்சான்….. நீங்க அவ ஃபீலிங்ஸ் சேர்த்து லவ் பண்ணுங்க…. அப்போ நீங்களும் அந்த புவனேஷ்வரியை மன்னிச்சிடுவீங்க…..
அவ திருந்தினா தான மன்னிக்க முடியும்…..
அவ திருந்திட்டா ன்னு தான் நினைக்கிறேன்……
எப்படி சொல்றீங்க மாமா……
அவ வந்ததில் இருந்து உன்னை திரும்பி கூட பார்க்கல….. அவ உன்னை ரொம்ப லவ் பண்ணியிருக்கா….. ஸோ கண்டிப்பா ஒரு முறையாவது பார்ப்பா ன்னு நினைச்சேன்….. ஆனா பார்க்கல…..
அதை வச்சு எப்படி மாமா அவ திருந்திட்டா ன்னு சொல்றீங்க…..
ஏதோ தோணுச்சு யோகி…..
சரி அதை விடுங்க மச்சான்….. என்ன சாப்பிடறீங்க சொல்லுங்க…..
அத்திபழ ஜூஸ்……
ஓகே…… என்று சொல்லி விட்டு அவனுக்கு அத்தி பழ ஜூஸூம் தனக்கும் வாட்டர் மெலான் ஜூஸூம் ஆர்டர் செய்துவிட்டு வந்தமர்ந்தான்.
மாமா…. உங்களுக்கும் நிஷாவை தெரியுமா?
தெரியும்….. மச்சான் உங்களுக்கும் நிஷாவை தெரியுமா?
இல்ல இல்ல…. இன்னைக்கு தான் பார்த்தேன்….. தன்ஷி பேரை சொல்லி எந்த ரூம் ன்னு கேட்டுக்கிட்டு இருந்தாங்க….. அப்போது நான் தான் அவங்களை கூட்டிக்கிட்டு வந்தேன்……
ஓ…. ஓகே…..
அப்போது தான் சொன்னாங்க….. உங்க வீட்ல இருக்கும் எல்லாருக்குமே அவங்களை தெரியும் ன்னு…..
ஆமாம்….. என்று சொல்லி ஸ்மைல் செய்தான்.
மாமா….. உங்க கிட்ட ஒண்ணு கேட்கனும்…
என்ன மச்சான்?
நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா?
இந்த கேள்வியை கேட்கும் போது தான் சரியாக நிஷா கேண்டினுக்குள் நுழைந்தாள். அவன் என்ன பதில் சொல்கிறான் என்று கேட்க இரண்டு அடி பின்னாலேயே நின்றிருந்தாள்.
அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல மச்சான்….. எந்த பொண்ணை பார்த்தும் அப்படி ஒரு எண்ணம் எனக்கு வந்ததில்லை……இதுவரை நான் அப்படி ஒரு பெண்ணை பார்க்கவும் இல்லை……
ஓ…. ஓகே மாமா….. என்றான் யோகேஷ்.
இதை கேட்ட நிஷாவுக்கு லேசாக கண்கள் கலங்கியது.
தன்ஷி கேட்ட கேள்விக்கு விடை கிடைத்தது போல உணர்ந்தாள். ஏற்கனவே அந்தஸ்தில் ஒத்து வராது என்று நினைத்து கொண்டிருந்த நிஷாவுக்கு தினேஷின் பதில் உறுதி படுத்தியது. அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் அங்கிருந்து கிளம்பினாள் நிஷா.
அவர்கள் ஜூஸ் குடித்துவிட்டு. மற்றவர்களுக்கு சாத்துக்குடி சாறு வாங்கிக் கொண்டு சென்றனர்.
அப்போது ஜூஸை தன் அம்மா அப்பாவிற்கு கொடுத்தான்.
முதலில் மறுத்த இருவரும் தினேஷ் வற்புறுத்தியதால் குடித்தனர்.
புவனேஷ்வரியிடம் ஒரு ஜூஸ் டம்ப்ளரை கொடுத்தான் தினேஷ்.
வேண்டாம் அண்ணா….. என்றாள் புவனேஷ்வரி.
பரவாயில்லை….. குடி….. என்றான் தினேஷ் சற்றே அதிகார தோரணையில்.
ஓகே அண்ணா….. என்று சொல்லி வாங்கி குடித்தாள் புவனேஷ்வரி.
அம்மா….. அந்த பொண்ணு நிஷா எங்கே ?….. என்றான் தினேஷ்.
அவ கிளம்பி போயிட்டா பா….. தன்ஷியோட ஃபோன்ல இருந்து கால் பண்ண சொன்னா ஆப்பிரேஷன் முடிஞ்ச பிறகு. அப்புறம் வந்து பார்க்கிறாளாம்….. ஏதோ கடைக்கு போகனுமாம்…..
ஓ….. ஓகே அம்மா……
அவளோட அக்கா பொண்ணு பர்த் டே ன்னு சொன்னாளே…… அதுக்காக பர்சேஸ் போயிருக்கா போல….. இருந்தாலும் என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம் இல்ல அட்லீஸ்ட் மெஸேஜாவது பண்ணி இருக்கலாம்……அவளை நல்ல ஒரு ஃபிரெண்டா நினைச்சேனே……என்று நினைத்து கொண்டான் தினேஷ்.
ஆட்டோவில் கடைக்கு சென்றாள் நிஷா.
சில பொருட்களை வாங்கினாள். சுமதியிடம் இருந்து கால் வந்தது.
என்னடி…. உன் ஆளை பார்த்திட்டியா….. என்றாள் சுமதி.
சுமதி….. நான் தான் ஃபிரெண்டு ன்னு சொல்லிட்டேன் இல்ல…… என்று கோபமாக கத்தினாள் நிஷா.
சாரி டி….. இனிமேல் அப்படிச் சொல்ல மாட்டேன்…… என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாள் சுமதி.
சுமதி…. சுமதி….. கோச்சிக்காதே….. என்று அவள் சொல்வதற்குள் ஃபோனை வைத்து விட்டாள் சுமதி.
சாரி டி…… இன்னைக்கு தான் தினேஷ் அவரோட ரிலேடிவ் கிட்ட சொல்லும் போது கேட்டேன்…..இது வரைக்கும் எந்த பொண்ணையும் அவருக்கு பார்த்ததுமே லவ் பண்ண தோணலையாம்…. அப்படின்னு சொல்லி கொண்டு இருந்தார். அதான் நீ உன் ஆளு ன்னு சொன்னதும் கொஞ்சம் டென்ஷனா ஆயிட்டேன்…… சாரி டி….. என்று ரிப்ளை செய்தாள் நிஷா.
நான் தான் டி சாரி சொல்லனும்…… நாளைக்கு நேரா பேசிக்கலாம்…..பை….. என்று ரிப்ளை செய்தாள் சுமதி.
ஓகே டி….. தேங்க்ஸ் ஃபார் அன்டர்ஸ்டாண்டிங்….. என்று ரிப்ளை செய்தாள் நிஷா.
ஹக் செய்வது போல எமோஜியை போட்டாள் சுமதி.
ஹாய் நிஷா….. என்று தினேஷிடம் இருந்து மெஸேஜ் வந்தது.
ஹாய்….. என்று ரிப்ளை செய்தாள் நிஷா.
உடனே கால் செய்தான் தினேஷ்.
ஃபோனை எடுத்து ஹலோ என்றாள் நிஷா.
என்ன நிஷா….. என்னை பார்க்காமலேயே கிளம்பிட்டீங்க….. என்றான் தினேஷ்.
நீங்க தான் பிஸியா இருந்தீங்க….. அதுவும் இல்லாம
நான் என் ஃபிரெண்டு தன்ஷியை தான் பார்க்க வந்தேன்…… அதான் கிளம்பிட்டேன்….. என்றாள் நிஷா.
அப்போ நான் உங்க ஃபிரெண்டு இல்லையா?
ஃபிரெண்டையும் தாண்டி ஏதோ ஒரு உறவா உங்களை நினைச்சிக்கிட்டு இருந்தேன்….. என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள் நிஷா.
என்ன பதிலே சொல்ல வில்லை?
நான் உங்கள் தோழன் இல்லையா?
ஆமாம்……
தன்ஷிக்கு ஆப்பிரேஷன் முடிஞ்ச பிறகு சொல்லுங்க…. அப்போ வந்து உங்களையும் பார்த்துவிட்டு போறேன்….. என்றாள் நிஷா.
நான் உங்களுக்கும் ஜூஸ் வாங்கிக் கொண்டு வந்தேன்….. ஆனா அதுக்குள்ள நீங்க கிளம்பிட்டு இருக்கீங்க…..என்றான் தினேஷ்.
இல்ல….. நான் தான் சொன்னேனே எங்க அக்கா பொண்ணு ஷாலினி பாப்பாவுக்கு பர்த் டே ன்னு….. அதான் கொஞ்சம் பர்சேஸ்……
இட்ஸ் ஓகே யூ கேரி ஆன்…… என்றான் தினேஷ்.
அப்போது தன் ஆஃபீஸ் நம்பரில் இருந்து கால் வந்தது.
ஹலோ சார்……
சொல்லுங்க……
சார்….. நான் ஆஃபீஸ் செக்கியூரிட்டி சங்கர் பேசறேன்.
சொல்லுங்க சார்……
இன்னைக்கு ஈவினிங் சீக்கிரமா வீட்டுக்கு போக பர்மிஷன் கொடுக்கறீங்களா?
இதெல்லாம் ஏன் என் கிட்ட கேட்கறீங்க…… உங்க ஏஜென்சில சொல்லிக்க வேண்டியது தானே….. இல்ல அட்மின்ல கேட்டுக்கோங்க…..
இல்ல சார் ஏஜென்சியில் இருந்து ரிலீவ் பண்ணி லாஸ்ட் வீக் தான் டைரெக்ட் அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கீங்க……
ஓ…. நீங்க தான் போன வாரம் நடக்க இருந்த தெஃப்ட்டை தடுத்து கம்பனிக்கு நல்லது செஞ்சவரா?
ஆமாம் சார்…..
நானே உங்களை நேரா பார்த்து தேங்க்ஸ் சொல்லணும் ன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்…..
இந்த மன்த் சேலரியோட உங்களுக்கு ஒன் டைம் இன்சென்டிவ் தரேன்.
தேங்க்ஸ் சார்…
அட்மின்ல சொல்லிட்டு ஹாஃப் டே லீவு கூட எடுத்துக்கோங்க…..
இல்ல சார் வேண்டாம்….. எனக்கு 4 மணிக்கு வீட்டுக்கு போனா போதும்…. என் பேத்தி ஷாலினி பாப்பாவுக்கு பர்த் டே.
ஓ….. ஓகே….. எடுத்துக்கோங்க….
என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தான் தினேஷ்.
ஃபோனை வைத்த பிறகு தான் ஷாலினி பாப்பாவுக்கு பர்த் டே என்று நிஷா கூறியதை போலவே சொன்னார் செக்யூரிட்டி என்று தோன்றியது.
மறுபடியும் கால் செய்தான் தினேஷ்.
ஆஃபீஸ் செக்கியூரிட்டி ரூமில் இருந்த லேண்ட் லைனில் இருந்து கால் செய்திருந்தார் சங்கர்.
ஹலோ….. இப்போ இந்த நம்பரில் இருந்து கால் வந்துச்சு…. செக்கியூரிட்டில யாரு பேசினது…..
சார்….. மேன் அக்தர் போல்ரஹா ஹூன்…..( சார் நான் அக்தர் பேசறேன்)
ஓ…. ஓகே….. அக்தர்…..
அபி….இஸ் நம்பர் ஸே கால் ஆயா….. செக்யூரிட்டி ஸே கிஸ்னே பாத் கீ?
முஜே பத்தா நஹி ஸாப் (எனக்கு தெரியாது சார்)….மேன் அபி ஆயா ஹூங் ( நான் இப்போது தான் வந்தேன்) என்றார் ஒரு ஹிந்தி செக்யூரிட்டி.
ஓ….. ஓகே…. அக்தர்….. ஆஸ்க் தமிழ் செக்கியூரிட்டி டூ கால் மீ….. என்றான் தினேஷ்.
டீகே ஸாப்….. என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான் அந்த ஹிந்தி செக்யூரிட்டி.
அதுக்குள்ள எங்க போயிட்டாரு அந்த செக்கியூரிட்டி….. நிஷாவோட அப்பாவா சித்தப்பா வா? பேத்தி ன்னு சொன்னாரே….. என்று நினைத்து கொண்டான் தினேஷ்.
#############
தொடரும்……
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.