என் வசம் நானில்லை என் உயிரே …..
வசம் -24
ஹாஸ்பிடலில்…..
அண்ணா….. என்றாள் தன்ஷிகா.
சொல்லுமா…..
அப்பாவும் அம்மாவும் எங்கே?
நான் தான் அவங்களை வீட்டுக்கு போக சொன்னேன்….. இன்னைக்கு ஈவினிங் உன்னை சென்னை அப்பல்லோ ஹாஸ்பிடலுக்கு ஷிஃப்ட் பண்ணிடலாம் ன்னு டாக்டர் சொன்னார்….. அதனால அது வரைக்கும் எதுக்கு இங்கே அவங்களும் இருக்கனும் ன்னு போக சொல்லிட்டேன்…..
ஓ…. ஓகே அண்ணா……
அப்புறம் யோகேஷ்……
யாரு யோகேஷ்?
நேத்து இங்கே இருந்தாரே……
யாருன்னு நியாபகம் இல்லையே……
அண்ணா….. நேத்து எனக்கு கான்ஷியஸ் வரும் போது பெயின்ல கத்தினேனே….. அப்போது அவனும் இருந்தானே……
எனக்கு தெரியல….. நான் கவனிக்கல…..
அண்ணா….. உன் பக்கத்தில் தான் இருந்தாரு……
ஹோ….. ஹோ……
அண்ணா பிரின்ஸ்பால் சாரோட பையன்….. நேத்து ராத்திரி பிரின்ஸ்பால் சார் கூட இருந்தானே……
ஓ…. அவனா….. அவங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லை ன்னு சொல்லிட்டு அப்பவே கிளம்பிட்டான்……
கிளம்பிட்டானா?
ஆமாம்…… தன்ஷி…..
உடனே முகத்தில் சோகம் படர்ந்தது.
இரு இரு…..அழுதிடாதே…… இங்கே தான் இருக்கான்……வரச் சொல்றேன்……
அண்ணா….. அவனை தான் நான்…..
தெரியும் தெரியும்….. நேத்து உன் விரல்ல மோதிரத்தை பார்த்த உடனே தெரிஞ்சிக்கிட்டேன்…..
அது…… நான் எக்ஸ்பெக்ட் பண்ணல நேத்து அவன் பிரபோஸ் பண்ணுவான் ன்னு….. என்று சொல்லி வெட்கப் பட்டாள்.
சரி சரி….. போதும்….. வெட்கம் எல்லாம் படாத…… என்னால பார்க்க முடியல….. என்று சொல்லி கிண்டல் செய்தான் தினேஷ்.
போங்க அண்ணா….. என்றாள் தன்ஷிகா சிரித்துக் கொண்டே.
நர்ஸ் மருந்து வாங்கி வரச் சொன்னாங்க….. நான் போய் வாங்கிட்டு வரேன்….. யோகேஷை வரச் சொல்றேன்…..
ஓகே அண்ணா….. என்றாள் தன்ஷிகா.
எனிவேஸ்….. ஐ ஆம் ஹேப்பி வித் யுவர் சாய்ஸ்….. என்றான் தினேஷ் சிரித்துக் கொண்டே.
தேங்க்ஸ் அண்ணா….. என்றாள் தன்ஷிகா.
தினேஷ் வெளியே சென்றான்.
யோகேஷ் தன்ஷிகாவின் அருகில் வந்து அமர்ந்தான்.
அவள் கையை பிடித்து…..
தன்ஷி….. என்றான்.
சாரி யோகேஷ்….. என்னால உன் பர்த்டே அதுவும் ஹாஸ்பிட்டலில் ஃபுல் டே கஷ்டப்பட்ட…..
அதெல்லாம் ஒண்ணும் இல்ல தன்ஷி…..
நேத்து நீ வலியில கத்தும் போது எங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்துச்சு…… மத்தபடி பர்த்டே செலபிரேட் பண்ண முடியலையே என்று வருத்தம் எனக்கு துளி கூட இல்லை.
உண்மையிலேயே ரொம்ப வலிச்சுது யோகேஷ்….. அதனால தான் அப்படி கத்திட்டேன்….. சாரி உங்க எல்லாரையும் டென்ஷன் பண்ணினதுக்கு……
சே சே….. அதெல்லாம் ஒண்ணும் இல்லை தன்ஷி….. நீ சீக்கிரமா சரி ஆகி வந்தாளே போதும்……
உன் கையை கிஸ் பண்ணவா யோகேஷ்?
கண்களால் சம்மதம் சொல்லி கண்களை சிமிட்டினான் யோகேஷ்.
அவன் கைகளை பிடித்து கையை விரித்து உள்ளங்கையில் முத்தம் கொடுத்தாள் தன்ஷி…..
என்ன உள்ளங்கையில் முத்தம் தர?
ஏன்? கொடுத்தா என்ன?
இல்ல….. யாரும் உள்ளங்கையில் முத்தம் கொடுத்து நான் பார்த்ததில்லை……
அப்படின்னா நான் ஸ்பெஷல்….. கரெக்டா?
நீ எப்பவுமே எனக்கு ஸ்பெஷல் தான்…..
சரி…. என் கிட்ட உண்மையை சொல்லு….. எப்படி அடி பட்டுச்சு?
அதான் சொன்னேனே ஆட்டோவில் இருந்து கீழே விழுந்திட்டேன்னு…..
அவள் கையில் தன் கையை கோர்த்து கொண்டான்…..
தயவு செய்து உண்மையை சொல்லு……
அது வந்து….. என்று இழுத்தாள்.
எனக்கு தெரியும் தன்ஷி…..
என்ன சொல்ற யோகேஷ்?
நேத்து ஈவினிங் உனக்கு என்ன நடந்துச்சு ன்னு……
நான் அவளை சும்மா விடமாட்டேன்…….
பிளீஸ் யோகேஷ்….. யார் கிட்டேயும் சொல்லாதே….. அவ ஏதோ தெரியாம செஞ்சிட்டா….. அவளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்….. அதான் லூசு தனமா இப்படி பண்ணிட்டா……
ஏய்….. அவ லூசு இல்ல நீ தான் லூசு……
அவ தள்ளிவிட்டதுல உனக்கு எதாவது ஆகியிருந்தா…..
நல்லவேளை எனக்கு ஒண்ணும் ஆகல….. இல்லன்னா வாழ் நாள் பூராவும் கில்டி ஃபீலிங்ல இருப்பா…… ஏதோ கோபத்தில அப்படி பண்ணிட்டா….. அவ ரொம்ப நல்லவ டா…… அவளுக்கு என்ன கோபம் ன்னா…… நானும் உன் மேல ஆசைப்படறேன் ன்னு அவ கிட்ட சொல்லல…. உனக்கும் என் மேல இன்ட்ரெஸ்ட் இருக்கு ன்னு எனக்கு தெரிஞ்சதும் அவ கிட்ட சொல்லல…..
சத்தியமா சொல்றேன்….. உனக்கு கன்ஃபார்மா பயித்தியம் தான் பிடிச்சிருக்கு…… யாருமே இப்படி பேச மாட்டாங்க….. நேத்து உயிர் போற மாதிரி வலிக்குது ன்னு அழுதியே அப்போ கூட உனக்கு அவ மேல கோபம் வரலீயா?
வந்துச்சு….. ஆனா இப்போ போயிடிச்சு….. இதே மாதிரி தான் அவளுக்கும்….. நேத்து அவ எதிர்பார்க்காத போது நீ என்னை பிரபோஸ் பண்ணதும் அவ டென்ஷனா ஆயிட்டா….. என்னை தள்ளி விட்டுட்டா…. அதுக்கு அப்புறம் ரொம்ப ஃபீல் பண்ணி இருப்பா…..
இது ரொம்ப டூ மச்….. என்னதான் கிளோஸ் ஃபிரெண்டா இருந்தாலும் இப்படி சப்போர்ட் பண்ணக் கூடாது.
இல்ல யோகேஷ்….. அவளுக்கு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் அதிகம். ரொம்ப ஒல்லியா இருக்கா ன்னு….. யாரும் அவளுக்கு பிரபோஸ் பண்ணல ன்னு….. நீ மட்டும் என்னை லவ் பண்ணாம இருந்திருந்தீன்னா….. உன்னை எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி அவளை லவ் பண்ண சொல்லி இருப்பேன்…..
ஸ்டாப் இட் தன்ஷி….. இதுக்கு மேல அவள பத்தி பேசின….. அவ்வளவுதான். நான் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுத்திடலாம் ன்னு நினைச்சேன்….. சரி நீ மயக்கம் தெளிந்து எழுந்த பிறகு உன் கிட்ட எல்லாத்தையும் சரியா கேட்டு விட்டு கொடுக்கலாம் ன்னு வெயிட் பண்ணினது தப்பா போச்சு….. இப்பவே அவ மேல கம்ப்ளெயின்ட் கொடுக்கப் போறேன்.
கொடு யோகேஷ்……
உண்மையாகவா சொல்ற…..
ஆமாம்….. கொடு….. ஆனா நான் வந்து அவ தான் என்னை தள்ளிவிட்டா ன்னு சொல்ல மாட்டேன்…. நானே தெரியாம விழுந்திட்டேன் ன்னு சொல்லிடுவேன்…..
உண்மையை சொல்லவா தன்ஷி….. இப்போ அவ மேல விட உன் மேல கோபம் வருது….. என்று சொல்லி விட்டு…. நான் கிளம்பறேன்….. என்றான்.
சாரி யோகேஷ்….. உன்னை ஹர்ட் பண்ணி இருந்தா…..
ஹர்ட் தான் பண்ணிட்ட….. என்று சொல்லி விட்டு சேரில் இருந்து எழுந்தான்.
சாரி யோகேஷ்….. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டா….. ஆனா புவி என் கிளோஸ் ஃபிரெண்டு டா….. அவளை நானே புரிஞ்சிக்கலை ன்னா எப்படி?
என்று சொன்னாள்.
இவை அனைத்தையும் கதவின் அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த புவனேஷ்வரி உள்ளே ஓடி வந்து தன்ஷிகாவை கட்டி அணைத்து கொண்டாள்.
வெளியே செல்ல எழுந்த யோகேஷ் புவனேஷ்வரியை பார்த்ததும்…. மறுபடியும் தன்ஷிக்காவை அவள் எதாவது செய்து விடுவாளோ என்று பயந்து அங்கேயே நின்றான்.
சாரி டி….. என்னை மன்னிச்சிடு….. ஏதோ கோபத்தில அப்படி செஞ்சிட்டேன்….. சத்தியமா சொல்றேன்….. நேத்து ராத்திரி எல்லாம் தூக்கமே வரல….. நீ நம்புவியா ன்னு தெரியல….. நான் உன்னை தள்ளிவிட்ட இடத்துக்கு வந்து பார்த்தேன்….. உங்க அப்பா அம்மா கிட்டயோ இல்ல உங்க அண்ணா கிட்டயோ கேட்க பயமா இருந்தது…. நீ எல்லார்கிட்டேயும் நான் தான் தள்ளி விட்டேன்னு சொல்லி இருந்தா….. எல்லாரும் என் மேல கடுங் கோபத்தில் இருப்பாங்களே ன்னு பயந்து திரும்ப வீட்டுக்கு போயிட்டேன்….. ராத்திரி முழுக்க நீ கீழே விழுந்த பிறகு கையை நீட்டி புவி….. ன்னு என்னை தான் கூப்பிட்ட…..என்னை தான் நீ நம்பின….. அந்த ஆட்டோ டிரைவரிடம் கூட காப்பாத்துங்க ன்னு சொல்லல….. அதை நினைச்சு ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டேன்….. என்று சொல்லி அழுதாள் புவனேஷ்வரி.
புவி…. பிளீஸ் அழாத டி…..
தன்ஷி உண்மையிலேயே என் மேல் உனக்கு கோபம் இல்லையா….
இல்ல…..
நான் என்ன சொன்னாலும் செய்வியா?
என்ன சொல்லு…..
உன் லவ்வை சேக்ரிஃபைஸ் பண்ண சொன்னா…. பண்ணுவியா?
ஒருநிமிடம் யோசித்து விட்டு…..
ஓகே புவி….. என்றாள்.
ஏய்…. தன்ஷி…. நீ என்ன பேசுற ன்னு தெரிஞ்சு தான் பேசறீயா?….. என்றான் யோகேஷ்.
கண்களை துடைத்துக் கொண்டு ஸ்மைல் செய்தாள் புவனேஷ்வரி.
தினேஷூம் மருந்து வாங்கி வந்து கதவருகே நின்றிருந்தான். அவனும் இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தான்.
############
தொடரும்……
அ. வைஷ்ணவி விஜயராகவன்.

என் வசம் நானில்லை என் உயிரே……
வசம் -25
உனக்கு என் மேல கோபமே வரலீயா டி?
நான் உன் இடத்தில் இருந்திருந்தாலும் அப்படி தான் கோபப் பட்டிருப்பேன்…..
இல்லடி…. நீ கோபப் பட்டு இருக்க மாட்ட…..
பின்ன என்ன பண்ணிருப்பேன் ?
எனக்காக உன் லவ்வை விட்டு கொடுத்திருப்ப….. என்றாள் புவனேஷ்வரி.
அமைதியாக இருந்தாள் தன்ஷிகா.
இப்போ நான் உன்னை மாதிரி யோசிச்சு நடக்கப் போறேன்…..
என்ன புவி சொல்ற?
ஆமாம் டி….. உன்னை தான் யோகேஷ் லவ் பண்றாரு
…. உனக்காக நான் என் லவ்வை விட்டுக் கொடுக்கறேன்….. என்னோடது ஒன் சைடு லவ்….. ஆனா உனக்கு அப்படி இல்ல…. எனக்காக உன் லவ்வையே விட்டுக் கொடுக்க துணிஞ்சிட்ட…. உன் ஃபிரெண்ட்ஸ்ஷிப் முன்னாடி என் ஒன் சைடு லவ் ஒண்ணுமே இல்ல….. நான் இனிமே உங்க ரெண்டு பேரோட விஷயத்தில தலை இட மாட்டேன். ரெண்டு பேர் கிட்டேயும் சாரி சொல்லிக்கிறேன்….. பை….
டேக் கேர்….. என்று சொல்லி விட்டு வெளியே வந்தாள் புவனேஸ்வரி.
தினேஷூம் இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு கதவருகே நின்றிருந்தான்.
சாரி அண்ணா…. என்று அவன் முகத்தை ஏறெடுத்து பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொண்டு சொல்லிவிட்டு சென்றாள் புவனேஷ்வரி.
புவி…. புவி….. நில்லுடி….. என்றாள் தன்ஷிகா.
அவள் சென்றதும் யோகேஷ் தன்ஷிகாவிடம்…..
இங்கே பாரு தன்ஷி…. இப்பவும் நான் அவளை நம்ம தயாராக இல்லை….. நாம பேசறதை கேட்டுட்டு வந்திருக்கா…. எங்கே நீ போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுத்திடுவியோ ன்னு பயந்து இப்படி எல்லாம் சீன் போட்டிட்டு போறா……
இல்ல யோகேஷ்….. அவ கண்ணை பார்த்தியா….. அதுல உண்மையை நான் பார்த்தேன்.
என்னவோ போ…. நான் சொன்னா நீ கேட்கும் மனநிலையில இல்லை…. எதுக்கு நான் வீணா பேசிக்கிட்டு…. கிளம்பறேன்….. என்று சொல்லி விட்டு கிளம்பி சென்றான் யோகேஷ்.
எதிரில் தினேஷை பார்த்துவிட்டு.
மாமா….. நான் வரேன்….. ஈவினிங் அப்பல்லோ ஹாஸ்பிடலுக்கு வரேன்…..என்றான்.
ஓகே மச்சான்….. பை…. நியாபகம் இல்லாம யாராவது இருக்கும் போது இந்த மாதிரி கூப்பிட்டிட போறீங்க….. என்றான் தினேஷ்.
இல்ல மாமா…. கண்டிப்பா மாட்டேன்….. பை….
நீங்களாவது உங்க தங்கச்சிக்கு சொல்லி புரிய வைங்க…. என்று சொல்லி விட்டு சென்றான் யோகேஷ்.
தன்ஷி…..
அண்ணா….. சொல்லுங்க…..
மாத்திரை போட்டுக்கிட்டியா?
ஹாங் போட்டிட்டேன் அண்ணா……
எனக்கென்னவோ யோகேஷ் சொல்வது போல நீ அந்த புவனேஷ்வரி கிட்ட ஜாக்கிரதையா இருக்கனும் ன்னு தோணுது…..
அண்ணா…. நீங்களாவது புரிஞ்சிக்கோங்க…….
அவளைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். எப்பவுமே முதல்ல கோபப் பட்டிடுவா….. அதுக்கு அப்புறம் அதையே யோசிச்சு ரொம்ப ரொம்ப வருத்தப்படுவா.
சரி…. இதுக்கு மேல அவ கிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸிலேயே இரு…..
ஓகே அண்ணா….
இப்போ பெயின் குறைஞ்சிருக்கா?
பில்ஸ் எஃபெக்ட்ஸ் முடியும் போது பெயின் ஸ்டார்ட் ஆகுது….. அப்புறம் அந்த ஸ்பிரே பண்ணா குறையுது.
சீக்கிரமா சரி ஆகிடும் மா….. என்று சொல்லி அவள் தலையை கோதி விட்டான் தினேஷ்.
பார்ரா எங்க அண்ணன் பாசத்தை வெளிக் காட்டறான்…. என்று சொல்லி சிரித்தாள் தன்ஷிகா.
சரி நான் போய் டிஸ்சார்ஜ் சம்மரி ரெடி ஆயிடிச்சு ன்னு பார்த்திட்டு வரேன்…..
ஓகே அண்ணா…..
அண்ணா…..
என்ன தன்ஷி?
ஆப்பிரேஷன் நினைச்சா ரொம்ப பயமா இருக்கு….
பயப்படாத தன்ஷி….. நாங்க எல்லாம் உன் கூடவே இருப்போம்……
இதை விட வலி அதிகமா இருக்குமா?
இல்ல….. அப்பவும் பெயின் கில்லர்ஸ் கொடுப்பாங்க….. ஸோ பயப்படாத….. வலி இருக்காது…. நீ சீக்கிரமா எழுந்து நடக்கலாம்….
அண்ணா….. கொஞ்சம் பர்ஸை வரச்சொல்றீங்களா?
பாத்ரூம் போகனும்…..
இரும்மா… என்று சொல்லி விட்டு நர்ஸை அழைத்து வந்தான். பின்னர் டிஸ்சார்ஜ் சம்மரி மற்றும் ஆம்புலன்ஸ் புக் செய்தான் தினேஷ்.
நிஷா கால் செய்தாள்.
நிஷா…. ஒரு டென் மினிட்ஸ் கழிச்சு கால் பண்றேன் பில்லிங் கவுண்டரில் இருக்கேன்.
ஹாங்…. ஓகே ஓகே தினேஷ்.
தன்ஷிகாவுக்கு மெஸேஜ் செய்தாள் நிஷா.
தன்ஷி….. எப்படி மா இருக்க?
நல்லா இருக்கேன் நிஷா….. என்று ரிப்ளை பார்த்தும்…. உடனே கால் செய்தாள்.
ஹலோ தன்ஷி…..
நிஷா…. சொல்லுங்க…..
என்னாச்சு தன்ஷி…. நேத்து பேசும் போது உனக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடிச்சு ன்னு உங்க அண்ணன் சொன்னாரு…..
ஆமாம் நிஷா…. கால்ல ஆப்பிரேஷன் பண்ணனும் ன்னு சொல்லி இருக்காங்க…. ஈவினிங் சென்னை அப்பல்லோ ஹாஸ்பிடலுக்கு ஷிஃப்ட் ஆகிடுவேன்.
உனக்கு சீக்கிரமா சரியாக நான் பிரே பண்ணிக்கிறேன் மா….
தேங்க்ஸ் நிஷா…..
அண்ணா கிட்ட பேசனீங்களா?
இப்போ உங்க அண்ணனுக்கு தான் கால் பண்ணேன்…. நீ தூக்கிக்கிட்டு இருந்தா உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் ன்னு….. அவர் பில் பே பண்ணிக்கிட்டு இருக்கேன் ன்னு சொன்னாரு….. அதான் உனக்கு மெஸேஜ் பண்ணி பார்க்கலாம் ன்னு நினைச்சேன்.
ஓ…. ஓகே நிஷா……
நிஷா…..
சொல்லுமா…..
ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே….
இல்ல தன்ஷி…. சொல்லு…..
உங்களுக்கும் எங்க அண்ணனை பிடிக்கும்….. எங்க அண்ணனுக்கும் உங்களை பிடிக்கும்….. அப்புறம் ஏன் உங்க ரெண்டு பேருகாகுள்ளேவும் இது லவ்வா ன்னு தெரியல ன்னு ஒரு திரையை வச்சிக்கிறீங்க…..
அப்படி எல்லாம் இல்லை தன்ஷி....
உங்களை அண்ணி ன்னு கூப்பிட ஆசைப் படுகிறேன்…..
தன்ஷி….. என்றாள் சற்றே பதட்டமாக.
ஏன் நிஷா கூப்பிடக் கூடாதா…..
இதை நான் மட்டுமே முடிவு பண்ற விஷயம் இல்லையே மா……
எங்க அண்ணனுக்கும் தான் உங்களை பிடிக்குமே……
நீ உங்க அண்ணனிடமே கேளு….. என்னை நீ அண்ணி ன்னு கூப்பிடலாம் ன்னு....
அவர் கிட்ட நான் கேட்டுக்கிறேன்….. உங்களோட விருப்பத்தை சொல்லுங்க நிஷா.
அமைதியாக இருந்தாள் நிஷா.
சொல்லுங்க அண்ணி…..
தன்ஷி….. இல்ல …. அப்படி கூப்பிடாத…… உங்க அண்ணன் கிட்ட இருந்து ஓகே ன்னு வந்த பிறகு அப்படி கூப்பிடு.. அது வரைக்கும் நிஷா ன்னே கூப்பிடு.
ஓகே நிஷா….. ஆனா அப்படி கூப்பிடறதுக்கு உங்களுக்கு சம்மதம் ன்னு நான் எடுத்துக்கிறேன்…… என்றாள் தன்ஷிகா.
இல்ல தன்ஷி…. உங்க அண்ணனுக்கு விருப்பம் என்றாள் மட்டும் தான்… என்று அவள் சொல்லும் போதே…..
நிஷா டாக்டர் வராங்க….. நான் அப்புறம் பேசறேன் பை….. என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாள் தன்ஷிகா.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூப்பர் மார்க்கெட்டில் நிறைய கஸ்டமர்ஸ்….. லஞ்ச் டைம் கூட கால் மணி நேரம் மட்டுமே கிடைத்தது.
இரண்டு முறை நிஷாவிற்கு கால் செய்தான் தினேஷ்.
அவள் சைலென்டில் போட்டுவிட்டு தன் வேலையை பார்த்து கொண்டு இருந்தாள்.
ஆம்புலன்ஸில் தன் தங்கையை கூட்டிச் சென்றான் தினேஷ்.
அண்ணா…..
சொல்லு தன்ஷி…..
நிஷா கால் பண்ணாங்க…..
எப்போ…
நீ பில் பே பண்ண போயிருந்தியே அப்போ…..
எனக்கும் அப்போ கால் பண்ணினாங்க…… நான் அப்புறமா பேசறேன் ன்னு சொன்னேன்…. திரும்ப கால் பண்ணினா அவங்க எடுக்கல……
அண்ணா இன்னைக்கு சன்டே இல்ல….. ரொம்ப வேலை இருக்கும்…..
ஓ…. ஓகே….. நான் கூட எதாவது முக்கியமான விஷயம் சொல்ல கால் பண்ணாங்களோ….. நான் அவங்க என்ன பதில் சொல்றாங்க ன்னு கூட கேட்காம அப்புறமா பேசறேன் ன்னு சொல்லி வச்சிட்டேனே ன்னு நினைச்சேன்.
அண்ணா….. நான் அவங்க கிட்ட ஒரு கேள்வி கேட்டேன்….. அதுக்கு பதில் உங்களை கேட்க சொல்லிட்டாங்க…..
அவங்க கிட்ட கேட்க கேள்விக்கு நான் பதில் சொல்லனுமா?
ஆமாம்……
அப்படி என்ன கேள்வி கேட்ட நீ?
அது….. என்று ஆரம்பித்த போது…. தினேஷின் ஃபோன் அடித்தது.
ஒரு நிமிஷம்…. என்று தன்ஷிகாவிடம் சொல்லிவிட்டு காலை அட்டென்டு செய்தான்.
அப்பா….. நாங்க ஆம்புலன்ஸ்ல வந்திக்கிட்டு இருக்கோம்…… அதை சொல்லத்தான் கால் பண்ணேன் நீங்க எடுக்கல…..
குளிச்சிக்கிட்டு இருந்தேன் பா…..
ஓ…. ஓகே பா….. நீங்க அப்பல்லோ ஹாஸ்பிடலுக்கு போய் வெயிட் பண்ணுங்க….. நாங்க வந்திடறோம்…..
அம்மா கிட்ட சொல்லிடுங்க…..
ஓகே பா…..தன்ஷி எப்படி இருக்கா?
இப்போ ஓகே பா…..
எப்படி ஆக்ஸிடென்ட் நடந்துச்சுன்னு கேட்டியா?
கேட்டேன் பா……
சொன்னாளா?
ஹூம்…. சொன்னா…..
எப்படி பா?……
#############
தொடரும்…….
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.