என் வசம் நானில்லை என் உயிரே……
வசம் -22
எல்லாரும் வீட்டுக்கு போயிட்டு மெஸேஜ் பண்ணுங்க…. என்றான் யோகேஷ்.
அவர்கள் சென்றதும் யோகேஷின் அப்பா வந்தார்.
அப்பா…. வாங்க அப்பா…..
என்னாச்சு யோகி?
அம்மா அக்கா எல்லாம் எங்கே?
டிரைவர் கூட வீட்டுக்கு அனுப்பிட்டேன்….. நான் இங்கு இறங்கிட்டேன்…..
ஏன் பா….. நீங்களும் வீட்டுக்கு போயிட வேண்டியது தானே…..
அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை…. யாருக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சு?
என் ஃபிரெண்டு தன்ஷிகாவுக்கு…..
தன்ஷிகாவா எந்த டிபார்ட்மெண்ட்?
கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட்…..அதோ அவளோட ஃபேமிலி….. என்றான் யோகேஷ்.
ஓ….. அவரு போலீஸ் தானே?
ஆமாம் அப்பா…..
அவங்க ஸ்கூல் டீச்சர் இல்ல….. நீ படிச்ச ஸ்கூல்ல?
ஆமாம் அப்பா…..
ஹாங்…. ஞாபகம் இருக்கு….. வா….. என்று சொல்லி அவனையும் அழைத்து கொண்டு அவர்களிடம் சென்றார் பிரிஸ்பால் ராமநாதன்.
சாரி சார்….. என்றார் ராமநாதன் சுவாமிநாதனிடம்.
எத்தனையோ ஆக்ஸிடென்ட் கேஸூகளை விசாரிச்சிருக்கேன்…. ஆனா என் பொண்ணுக்கே ன்னும் போது….. முடியல சார்….. என்றார் சாமிநாதன் கண்கள் கலங்கியவாறே.
கவலைப்படாதீங்க சார்……. சரியாகிடும். எனக்கு உங்க பொண்ணை நல்லா தெரியும். ரொம்ப தைரியசாலி….. அதனால அவ சீக்கிரமா எழுந்து வந்திடுவா….. என்றார் ராமநாதன்.
இவரு வேற ஏதோ பொண்ணுன்னு நினைச்சு நம்ம பொண்ண சொல்றாரா இல்ல தன்ஷி வெளியே தைரியசாலி மாதிரி நடிக்கிறாளா?….. என்று நினைத்து கொண்டார் திலகவதி.
ரொம்ப தேங்க்ஸ் சார் வந்ததிற்கு….. என்றார் சாமிநாதன்.
இதுல என்ன சார் இருக்கு….. உங்க பொண்ணு நல்லபடியா குணமாகி சீக்கிரமா காலேஜ் வரனும் ன்னு நான் பிரே பண்ணிக்கிறேன்.
தேங்க்ஸ் சார்….. என்றார் சாமிநாதன்.
ஒரே ஒரு வருத்தம்….. என்னோட பையன் பர்த்டேவுக்கு வரும்போது இப்படி நடந்திடிச்சே ன்னு தான்……
இருவரும் அமைதியாக இருந்தனர்.
உங்களுக்கு ஒரு பையன் இருக்காரு இல்ல?
ஆமாம் சார்…. அதோ…..
என்ன பண்றாரு?
ஐடி கம்பெனில சிஈஓ…..
ஓ….. குட்….. என்று சொல்லி விட்டு அவன் பக்கத்தில் போய் அமர்ந்தார் ராமநாதன்.
ஹலோ…. நான் யோகேஷ் அப்பா …. உங்க தங்கச்சி காலேஜ் பிரின்ஸ்பால்.
ஓ…. ஓகே சார்….. என்று சொல்லி கையை கொடுத்தான்.
தம்பி பேரு என்ன?
தினேஷ்…..
உங்க கம்பனி பேரு?
இன்டெல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்……
ஓ….. ஓகே….. பா….. கவலைப்படாதே பா….. சீக்கிரமா தங்கச்சி சரி ஆயிடுவா…..
ஓகே சார்…. தேங்க்ஸ்…..
சார்….. அவங்களுக்கு கான்ஷியஸ் வந்திருக்கு…. யாராவது ரெண்டு பேர் மட்டும் வந்து பாருங்க…. என்றார் நர்ஸ்.
திலகவதி மற்றும் தினேஷ் உள்ளே சென்றனர்……
அண்ணா….. அம்மா….. உங்க ரெண்டு பேரையும் பார்ப்பேனே நினைக்கல….. நான் செத்துப்போயிட்டேன்னு நினைச்சேன்….. என்றாள் தன்ஷிகா அழுதுக்கொண்டே.
ஏன்டி இப்படி எல்லாம் பேசுற….. என்று சொல்லி கண்கள் கலங்கினார் திலகவதி.
தினேஷ் அவள் பக்கத்தில் அமர்ந்து…..
இன்னும் நூறு வருஷம் நம்ம ரெண்டு பேரும் சண்டைப் போடனும்….. அதுக்குள்ள எல்லாம் உன்னை கூட்டிக்கிட்டு போக கடவுளை நான் விடமாட்டேன்….. என்றான் தினேஷ்.
ஹாஹாஹா…. என்று சிரித்தவள்.
தன் காலில் வலி அதிகமாக இருந்ததால்….. அழ ஆரம்பித்தாள்.
அண்ணா….. ரொம்ப வலிக்குது …. அம்மா பெயின் ரொம்ப ரொம்ப அதிகமா இருக்கு….. என்று சொல்லி அழுதாள்.
நர்ஸ்…. கொஞ்சம் பாருங்களேன்….. என்றான் தினேஷ்.
சார்….. பெயின் கில்லரோட எஃபெக்ட் குறைஞ்சிட்டு இருக்கும்….. அதான் அவங்களுக்கு பெயின் தெரியுது…. மறுபடியும் டாக்டர் சொல்லாம நாங்க இன்னொரு டோஸ் கொடுக்க கூடாது…..
அப்போ டாக்டர் கிட்ட கேளுங்க…..
டாக்டர் ரவுண்ட்ஸ்ல இருக்கார்….. கொஞ்ச நேரத்தில இங்கே வந்திடுவார்….. அப்போ கேட்டுக்கலாம்……
ஆனா என் தங்கச்சி பெயின்ல துடிக்கிறாளே…
சாரி சார்….. ஒண்ணும் பண்ண முடியாது…….
அட்லீஸ்ட் கால் பண்ணியாவது கேளுங்களேன்…..
இல்ல சார்….. ரவுண்ட்ஸ்ல இருக்கும் போது கால் பண்ணினா எங்களை திட்டுவாங்க…..
எமர்ஜென்சி ன்னா கூட நீங்க கால் பண்ணக் கூடாதா?
இது எமர்ஜென்சி இல்ல சார்….. அவங்க பெயினை சமாளிக்க மாட்றாங்க….. அதிகமா பெயின் கில்லர் கொடுக்கிறது நல்லதுக்கு இல்ல…..
இரு தன்ஷி…. நான் டாக்டரை கூட்டிக்கிட்டு வரேன்….. என்று சொல்லி விட்டு அவன் வெளியே வந்ததும்….. சாமிநாதன் உள்ளே சென்றார்.
அம்மாடி….. என்று அவள் கையை பிடித்து கண்கள் கலங்கினார்.
அப்பா….. வலிக்குது பா….. எதாவது பண்ண சொல்லுங்க பா….. என்று கூறினாள்.
இரும்மா…. அண்ணா டாக்டரை கூட்டிக்கிட்டு வருவான்….. என்றார் சுவாமிநாதன்.
அப்பா….. ரொம்ப வலிக்குது….. ஏம்மா என்னன்னு பாருங்களேன்….
என்றார் சாமிநாதன் நர்ஸிடம்.
இப்போ தான் உங்க பையன் கிட்ட சொன்னேன்….. இப்போ உங்க கிட்ட வேறு மறுபடியும் சொல்லனுமா….. புரிஞ்சிக்கோங்க சார்…..
இருங்க நான் போய் டாக்டர் கிட்ட பேசிப் பார்க்கிறேன்..என்னால என் பொண்ணு துடிக்கிறதை பார்க்க முடியல… என்று சொல்லி விட்டு திலகவதி வெளியே வந்தாள்.
சாமிநாதன் திலகா….. என்று கூப்பிட்டுக் கொண்டே அவர் பின்னால் சென்றார்.
யோகேஷ் உள்ளே சென்றான்.
தன்ஷிகா அழுதுக்கொண்டே இருந்தாள்.
அவளருகில் போய் நின்றான்.
தன்ஷி…..
யோகேஷ்….. ரொம்ப வலிக்குது யோகேஷ்…. உயிரே போற மாதிரி வலிக்குது…..
அவள் கைகளை பிடித்தான் யோகேஷ்…..
என்னம்மா இது இப்படி கத்தறீங்களே…. நிறைய ஃபேஷன்ட்ஸ் இருக்காங்க மா…. என்றார் நர்ஸ்.
அப்போது உள்ளே வந்தார் டியூட்டி டாக்டர்.
நர்ஸ்….. என்னது இது…. ஒரு பேஷன்ட் கிட்ட இப்படியா பேசுவீங்க…… என்று திட்டினார்.
சாரி சார்….. என்று சொல்லி விட்டு அமைதியாக நின்றாள் நர்ஸ்.
அனைவரும் டாக்டரின் பின்னால் நின்று பார்த்துக் கொண்டு இருந்தனர்.
பிளீஸ் நீங்க எல்லாரும் வெளியே வெயிட் பண்ணுங்க….. என்றார் டாக்டர்.
ஓகே டாக்டர்….. என்று சொல்லி விட்டு அனைவரும் வெளியே வந்தனர். இருப்பினும் அந்த கண்ணாடி கதவின் வழியாக உள்ளே நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
திலகவதி அழுதுக்கொண்டே இருந்தார். தினேஷ் தன் அம்மாவின் தோளை பிடித்து கொண்டு சமாதானம் செய்து கொண்டே தன் தங்கையை பார்த்து கொண்டு இருந்தான்.
டாக்டர்…. பெயின் தாங்க முடியல டாக்டர்….. என்றாள் தன்ஷிகா.
ஒண்ணும் இல்ல மா..… பயப்படாதீங்க….. இப்போ சரி ஆயிடும்….. என்றார் டாக்டர்.
நர்ஸ்….. பெயின் கில்லிங் ஸ்பிரே கொடுங்க…… என்று சொன்னார்.
ஓகே டாக்டர்…. என்று சொல்லி அவரிடம் கொடுத்தாள் நர்ஸ்.
தன்ஷிகாவின் காலில் அதை ஸ்பிரே செய்தார்.
மூன்று நிமிடங்களுக்கு பிறகு….. வலி மெதுவாக குறைந்தது.
கண்களில் இருந்து வழிந்த நீரை துடைத்துக் கொண்டே……
தேங்க்ஸ் டாக்டர்….. தேங்க் யூ ஸோ மச்….. என்றாள் தன்ஷிகா.
டோண்ட் ஒரி மிஸ். தன்ஷிகா….. சீக்கிரமா சரி ஆகிடும்.
ஓகே டாக்டர்…..
இப்போ உன்னோட ரிலேடிவ்ஸை வரச் சொல்றேன்….. கொஞ்ச நேரம் பேசிட்டு அப்புறம் எதாவது சாப்பிட்டு விட்டு தூங்கனும்….. சரியா?
ஓகே டாக்டர்.
அவர் வெளியே வந்ததும் அனைவரும் உள்ளே சென்றனர்.
ரெண்டு ரெண்டு பேரா தான வரச்சொன்னேன்…. என்றார் நர்ஸ்.
சிஸ்டர்….. விடுங்க….. லேட் நைட்டு ஆயிடிச்சு இல்ல…. அவங்க எல்லாரும் பார்த்திட்டு கிளம்பனும் இல்ல…..
என்றார் டாக்டர்.
ஓகே சார்….. என்று சொல்லி விட்டு அமைதியாக இருந்தாள் நர்ஸ்.
சார்….. என்று சொல்லி எழ நினைத்தாள் தன்ஷிகா ராமநாதனை பார்த்து.
அம்மாடி…. படு மா….. ரெஸ்ட் எடு மா…… டேக் கேர்….. இப்போ பெயின் குறைஞ்சிருக்கா மா…. என்றார் ராமநாதன்.
தேங்க்ஸ் சார்….. நல்லாவே குறைஞ்சிருக்கு சார்…..என்றாள் தன்ஷிகா.
குட்…. டேக் கேர் மா….. என்றவர் தன் மகனை பார்த்து
யோகி….. என்று சொல்லி கூப்பிட்டார்.
சொல்லுங்க பா…..
எனக்கு ஷூகர் டவுன் ஆகுது பா….. என் கூட கொஞ்சம் கூட கேன்டீனுக்கு வரீயா?…. என்று சொல்லி அவனுடைய தோளை பிடித்து கொண்டார்.
அப்பா…. வாங்க பா….. என்று சொல்லி கூட்டிச் சென்றான் யோகேஷ்.
தினேஷ்….. அவங்க கூட போயிட்டு வாப்பா….. என்றார் சாமிநாதன்.
அவர்கள் சென்றதும்…..
என்னம்மா இப்போ எப்படி இருக்கு….. என்றார் திலகவதி தன் மகள் தன்ஷிகாவின் தலையை கோதி கொண்டே.
பரவாயில்லை மா…. என்று சொல்லி ஸ்மைல் செய்தாள்.
எப்படி மா ஆக்ஸிடென்ட் ஆச்சு?…. என்றார் சாமிநாதன்.
அது வந்து அப்பா…. அது வந்து………. என்று திக்கி திணறினாள் தன்ஷிகா.
#########
தொடரும்…..
அ. வைஷ்ணவி விஜயராகவன்.

என் வசம் நானில்லை என் உயிரே……
வசம் -23
கேன்டீனில் டிபன் காலி ஆகிவிட்டது. மேலும் பதினோரு மணி என்பதால் டீ காஃபி கூட இல்லை என்றார்.
அண்ணா பிரெட் சுடு தண்ணீர் கொடுங்க….. என்றான் தினேஷ்.
அதை வாங்கி வந்து ராமநாதனிடம் கொடுத்தான்.
சாரி சார்…. வேறு எதுவும் கிடைக்கல….. பேஷண்ட்ஸூக்கும் எல்லாம் கொடுத்து அனுப்பியாச்சாம்… ஜோ எதுவும் இல்லை…. இது வீட் பிரெட் தான்….. சுடு தண்ணீரில் தொட்டு சாப்பிடுங்க….. என்றான்.
தேங்க்ஸ் பா….. என்றார் ராமநாதன்.
தேங்க்ஸ் சார்….. எவ்வளவு பே பண்ணனும்….. என்று கேட்டு தன் பர்ஸை எடுத்தான் யோகேஷ்.
என்ன யோகேஷ்….. இதுக்கு எல்லாம் பே பண்ணுவீங்களா?….. நோ இஷ்யூஸ்…..
தேங்க்ஸ் சார்…..
சார் எல்லாம் வேண்டாம்….. ஜஸ்ட் கால் மீ தினேஷ்…..
ஓகே தினேஷ்…. என்று சொல்லி கைக் குளிக்கினான் யோகேஷ்.
அப்பா….. நான் உங்களுக்கு வண்டி புக் பண்ணி இருக்கேன்….. இன்னும் திரீ மினிட்ஸ்ல வந்திடும்…..நீங்க கிளம்புங்க….. வீட்டிற்கு போய் ரெஸ்ட் எடுங்க…..
நீ வரலையா யோகி…..
இல்லப்பா…. நான் காலைல வரேன்….. இங்கு தினேஷ் தனியா தான் இருக்கனும். அவர் கூட இருந்திட்டு வரேன். நாளைக்கு சன்டே தான….. ஸோ நோ இஷ்யூஸ்…..
ஓகே பா…. பை….. என்று சொல்லி விட்டு தினேஷை பார்த்து….
தினேஷ்….. நான் கிளம்பறேன்….. அப்பா அம்மா கிட்ட சொல்லிடு பா…..
ஓகே சார்…… டேக் கேர்…..
ஷியூர்….. தேங்க்ஸ் தினேஷ்….. என்று சொல்லி விட்டு கிளம்பினார் ராமநாதன்.
நீங்களும் கிளம்பறதுன்னா கிளம்புங்க யோகேஷ்…. நான் பார்த்துக்கொள்கிறேன்.
இல்ல தினேஷ் நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.
ஓ…. ஓகே யோகேஷ்……. என்றான் தினேஷ்.
ராமநாதன் கிளம்பி சென்றதும்……..
டைம் பார்த்தான் தினேஷ்.
மணி 11.20.
நிஷாவிற்கு மெஸேஜ் செய்தான்.
ஹாய் நிஷா….. இன்னைக்கு ஈவினிங் நீங்க ரெண்டு முறை கால் பண்ணியிருக்கீங்க….. நான் எடுக்கல….. என் தங்கச்சி தன்ஷிக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடிச்சு…. நாங்க எல்லாரும் ஹாஸ்பிட்டலில் இருக்கோம்…..
அடுத்த நொடி கால் வந்தது.
என்ன நீங்க இன்னும் தூங்கலீயா நிஷா?
அதை விடுங்க…. தன்ஷிகா எப்படி இருக்காங்க?
இப்போ பரவாயில்லை…. கால்ல ஃபிரேக்ச்சர்….. ஆப்பிரேஷன் செஞ்சு பிளேட் வைக்கனும் ன்னு சொல்லி இருக்காங்க…..
அச்சச்சோ….. எந்த ஹாஸ்பிட்டல்?…..
ஏவி ஹாஸ்பிட்டல்…. இது ஹைவேஸ்ல இருக்கு…..
ஓ….. நாளைக்கு காலைல சூப்பர் மார்க்கெட் போகிறதுக்கு முன்னாடி வந்து பார்த்திட்டு போகலாம் ன்னு நினைச்சேன்.
நாளைக்கு ஈவினிங் சென்னை அப்பல்லோ ஹாஸ்பிடலுக்கு ஷிஃப்ட் பண்ணிடுவோம்….. ஆப்பிரேஷன் அங்கே தான்……
ஓ….. ஓகே….. நாளை மறுநாள் நான் எங்க அக்கா பொண்ணு பர்த்டேவுக்கு லீவு போட்டு இருக்கேன்….. அப்போ வந்து பார்க்கிறேன்.
இட்ஸ் ஓகே….. நோ ஃபார்மாலிட்டீஸ்…..
தினேஷ்….. ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்க இல்ல?
இல்ல சொல்லுங்க…..
ஃபார்மாலிடிக்காக ஒருத்தரை போய் பார்க்கிறது உங்களை போன்ற பணக்காரங்களோட எண்ணம்….. நாங்க எல்லாம் அப்படி இல்ல…… சாரி….. தோணுச்சு சொன்னேன்…..
இட்ஸ் ஓகே….. நோ பிராப்ளம்…..
உங்களுக்கு அடிப்பட்டது சரி ஆயிடிச்சா…..
ஹாங்….. சரி ஆயிடிச்சு…. தேங்க்ஸ் தினேஷ்…..
தங்கச்சியை பார்த்துக்கோங்க….. அவங்க என்னோட பெஸ்ட் ஃபிரெண்டு.
ஓகே நிஷா…. பை…. டேக் கேர்…. என்று ஸ்மைல் செய்து கொண்டே ஃபோனை வைத்தான் தினேஷ்.
தினேஷ் ஃபோன் பேசிக் கொண்டு இருந்ததால் யோகேஷ் வேறு சேரில் அமர்ந்து தன் மொபைலை பார்த்துக் கொண்டு இருந்தான்.
அப்போது அன்று ஈவினிங் எடுத்த செல்ஃபியை பார்த்தான். ஜூம் செய்து அவளை பார்த்து கண்கள் கலங்கினான் யோகேஷ்.
இது உங்களுக்கு மறக்க முடியாத பர்த்டே இல்ல யோகேஷ்….. என்றான் தினேஷ்.
தன் ஃபோனை வைத்து விட்டு….
நீங்க ஃபோன் பேசிக் கொண்டு இருந்ததை பார்த்து விட்டு இங்கேயே உட்கார்ந்து இருந்தேன்.
ஆமாம் தினேஷ்….. இன்னைக்கு எல்லாருக்கும் மன வருத்தம்….. அதான் ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு.
நான் அதை சொல்லல…..
வேறு என்ன தினேஷ்…..
என் தங்கச்சிக்கு இன்னைக்கு தான பிரபோஸ் பண்ணீங்க…..
ஆமாம் தினேஷ்….. உங்களுக்கு எப்படி தெரியும்?
அவ கையில மோதிரத்தை பார்த்தேன்…..
ஓ….. ஓகே…..
ஆனா இன்னைக்கே இப்படி ஆகும் ன்னு நான் நினைச்சு பார்க்கல……
உண்மையிலேயே இது ஆக்ஸிடென்ட் தானா?
ஆமாம் தினேஷ்….
அப்படியா?
ஆமாம்….. ஏன் கேட்கறீங்க…..
புவனேஷ்வரியை உங்களுக்கு எவ்வளவு நாளா தெரியும்?
டூ இயர்ஸ்ஸா…..
அவ உங்களை லவ் பண்றாளா?
அது வந்து…. அது……
தயவு செஞ்சு உண்மையை சொல்லுங்க யோகேஷ்.
நம்ம தன்ஷியோட இந்த நிலைமைக்கு காரணம் புவனேஷ்வரி தான்….. என்று ஆரம்பித்து ஆட்டோக்காரன் சொன்ன அனைத்தையும் சொல்லி முடித்தான்.
அவளை….. என்று பற்களை கடித்தான் யோகேஷ்.
நான் கெஸ் பண்ணினது சரிதான்….. நான் அவளை சும்மா விடமாட்டேன்….. என்று ஆத்திரப்பட்டான் தினேஷ்.
இப்போ எதுவும் வேண்டாம் தினேஷ்……
தன்ஷி சரி ஆகி வரட்டும்….. அப்புறமா நடந்ததை முழுசா அவ கிட்ட கேட்டு விட்டு அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்.
ஓகே…. அதுவும் சரிதான்.
ஆனா அவ வலியில் துடிச்சதை பார்க்க முடியல…. என்றான் தினேஷ்.
ஆமாம் தினேஷ்….. என்னாலேயும் முடியல…… என்றான் யோகேஷ்.
ஹேப்பி பர்த்டே மச்சான்….. என்றான் தினேஷ்.
இதை சற்றும் எதிர்பார்க்காத யோகேஷ் ஸ்மைல் செய்து கொண்டே தினேஷை ஹக் செய்து கொண்டு
தேங்க்ஸ்…. தேங்க்ஸ்….. மாமா….. என்றான் மிக மெதுவாக.
என் தங்கச்சியோட செலக்ஷன் எப்பவுமே சரியாக இருக்கும் ன்னு எனக்கு தெரியும்…. அதனால நான் உங்களை மச்சானா ஏத்துக்கிட்டேன்….. ஆனா எங்க அம்மா அப்பா…. அப்புறம் உங்க அப்பா அம்மா என்ன நினைப்பாங்க ன்னு தெரியல….. அதுவரைக்கும் நாம் ரெண்டு பேரும் பேர் சொல்லியே கூப்பிட்டுக்கலாம்….. என்றான் தினேஷ்.
ஓகே தினேஷ்.
ஓகே யோகேஷ்….
வாங்க அங்கே ஏசி வெயிட்டிங் ஹாலில் சிலீப்பர் சேர்ஸ் இருக்கு…. அங்கே போய் படுக்கலாம்….
ஆன்டி அங்கிள்….. என்றான் யோகேஷ்.
அவங்களுக்கு அட்டெண்டர் ரூம் கொடுத்திருக்காங்க….. அங்கே படுத்திட்டோம் ன்னு அப்பா மெஸேஜ் பண்ணி இருக்கார்.
ஓ ஓகே…..
இருவரும் அந்த வெயிட்டிங் ஹாலில் சிலீப்பர் சேர்ஸில் போய் படுத்துக் கொண்டனர்.
##############
மோனிகா…… என்று கூப்பிட்டு வீடு முழுக்க தேடிப் பார்த்தான் பிரமோத்.
அவள் ஃபோனிற்கு கால் செய்தான்.
ஸ்விச்சிடு ஆஃப்…..
எங்கே போனா….. என்று நினைத்து தன் மாமியாருக்கு கால் செய்தான்.
ஹலோ அத்தை…..
கங்கிராட்ஸ் மாப்பிள…..
மோனிகா…..
நைட்டு உங்க கிட்ட விஷயத்தை சொல்லி இருப்பா ……எப்போ உங்க கிட்ட இருந்து கால் வரும் ன்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.
மோனிகா இப்போ எங்கே……
நீங்க எழுந்துக்க லேட் ஆயிடுச்சா?
ஆமாம்…..
அவளால அதுவரைக்கும் பொறுக்க முடியல போல…. கோவிலுக்கு போயிட்டு இருப்பா….. நாங்களும் வந்திடறோம்…. நீங்களும் ரெடி ஆயிடுங்க….. டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போகலாம்….. கல்யாணம் முடிஞ்சு இத்தனை வருஷம் கழிச்சு இப்போ தான் கடவுள் நமக்கு நல்லது பண்ணிருக்காரு……
அப்புறம் மாப்பிள….. மூணு மாசம் கழிச்சு….. உங்க ஃபிரெண்ட்ஸ் ரிலேடிவ்ஸ் எல்லாருக்கும் சொல்லுங்க….. அது வரைக்கும் யாருக்கும் சொல்ல வேண்டாம்…. திரிஷ்டி ஆயிடும்….. ஸ்டிக்ல தான் பார்த்து இருக்கா….. அதுல பாசிடிவ் வந்துச்சு ன்னு சொன்னா….. என்று பேசிக் கொண்டே இருந்தார் மோனிகா வின் அம்மா.
இதைத் தான் நேத்திலிருந்து சொல்ல வந்தாளா…. சே…. பாவம் ரொம்ப ஹர்ட் ஆகி இருப்பா….. வந்ததும் அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கனும்….. என்று நினைத்து போய் குளித்துவிட்டு வந்து அவளுக்கு பிடித்த டி சர்ட் போட்டுக் கொண்டு….. அவளுக்கு மிகவும் பிடித்த பிரெட் ஆம்லெட் மற்றும் மாதுளை பழம் ஜூஸ் போட்டு வைத்து காத்திருந்தான்.
பதினோரு மணி அளவில் வீட்டிற்கு வந்தாள் மோனிகா.
உள்ளே நுழைந்ததும் தன் கையில் இருந்த சாமி தட்டை டைனிங் டேபிளின் மேலே வைத்து விட்டு. அங்கிருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த நீரை எடுத்து குடித்தாள்.
பிரமோத் பின் பக்கமாக இருந்து அவளை அணைத்து அவள் கழுத்தில் முத்தம் கொடுத்தான்.
இதை சற்றும் எதிர்பார்க்காத மோனிகா கத்திவிட்டாள்.
ஏய் கூல் கூல்….. என்றான் பிரமோத்.
சாரிம்மா….. நேத்து நீ எவ்வளவு நல்ல விஷயத்தை சொல்ல நினைச்சிருக்க….. நான் அதை கவனிக்காம தூங்கிட்டேன்…..
ஸ்மைல் செய்தாள் மோனிகா.
ஏன் இன்னும் டல்லா இருக்க?
இல்ல கொஞ்சம் டயர்டா இருக்கு…..
எங்க கோவிலுக்கு தான போயிட்டு வந்த?
கடைசியாக கோவிலுக்கு போனேன்……
அதுக்கு முன்னாடி?
போலீஸ் ஸ்டேஷன்……
எதுக்கு?….. என்று பயந்தவாறே கேட்டான் பிரமோத்.
நீங்க ஏன் டென்ஷனா இருக்கீங்க?
அதெல்லாம் ஒண்ணும் இல்லையே….. எதுக்கு போலீஸ் ஸ்டேஷன் போன….. என் கிட்ட கூட சொல்லாம?
உங்க கிட்ட சொல்லிட்டு எப்படி போக முடியும்?
ஏன்?
நான் கம்ப்ளெயின்ட் கொடுத்ததே உங்க மேல தான?
என்ன டி சொல்ற?….. என்றான் பிரமோத் கோபமாக.
###########
தொடரும்…..
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.