வசம் -12,13

Vaishnavi Vijayaraghavan | 07 May 2026 | Share

என் வசம் நானில்லை என் உயிரே…….


வசம் -12

நிஷா தினேஷை கவனிக்கவில்லை. அவர்களுக்கு பின்னால் தினேஷ் காரில் அமர்ந்து இருந்தான் . மேலும் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு ஆட்டோ நின்றிருந்தது.


தன் ஃபோனை எடுத்து…..


சாரி நிஷா….. மெஸேஜ் டைப் செய்து….. பின்னர் அழித்து விட்டான்.


பைக்கில் அவளுடன் இருப்பது யாராக இருக்கும்….. அண்ணனா?….. சொந்தக்காரனா?

…… இல்ல ஃபிரெண்டா?…… இல்ல லவ்வரா?….. இல்ல ஹஸ்பண்ட்டா?…… என்று என்னவெல்லாமோ யோசித்து கொண்டே இருந்தான். அவளை காப்பாற்றிய போது அவனிடம் அவள் வந்து பேசும் போது அவள் கண்களில் சந்தோஷத்துடன் காதலையும் கவனித்தான்….. ஆகையால் கண்டிப்பாக அவளுடைய கணவனாகவோ இல்லை காதலனாகவோ இருக்க வாய்ப்பில்லை என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான் தினேஷ்.

சிறிது நேரத்தில் சிக்னல் மாறியதும் வலது பக்கத்தில் திரும்பி சென்றான்.


திரும்பும் போது அவளை பார்த்து கொண்டே சென்றான். தலையில் அடி பட்டது எப்படி உள்ளது என்று சற்று எட்டி பார்த்தான்…..கார் திரும்பி சென்ற போது தான் நிஷா காரை பார்த்தாள். அதன் பிறகு பின்னால் திரும்பி பார்த்து கை அசைத்தாள். ஆனால் தினேஷ் கவனிக்கவில்லை…..கார் சென்றுவிட்டது.


யாரும்மா அது….. என்றான் மேத்யூ.


தெரிஞ்சவர் அத்தான்.


ஓ….. ஓகே மா….. என்று சொல்லி விட்டு அவர்கள் இருவரும் போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்றனர்.


நாளைக்கு காலைல சீக்கிரமா போய் எப்படியாவது தினேஷை பார்த்திடனும்….. என்று நினைத்து கொண்டாள் நிஷா.


போலீஸ் ஸ்டேஷனில்…..


வாங்க மேத்யூ….. என்னம்மா எப்படி இருக்க?


ஓகே சார்…..


ஹூம் சொல்லுங்க…..


சார்….. நேத்து இவ பக்கத்தில் இருந்து ஓடியவன் யாருன்னு தெரிஞ்சிடிச்சு…..


அப்படியா….. யாரும்மா?…… உனக்கு ஞாபகம் வந்துச்சா?


இல்ல சார்….. என் ஃபோனில் ரெக்கார்டு ஆகி இருக்கு….. என்று சொல்லி போட்டுக் காட்டினாள்.


வெரிகுட்….. அந்த ரெக்கார்டிங்கை இந்த ஸ்டேஷன் நம்பருக்கு அனுப்பிட்டு ஒரு ரிட்டன் கம்ப்ளெயின்ட் எழுதி கொடுங்க….. அவனை உண்டு இல்லை ன்னு பண்ணிடலாம்.


அதெல்லாம் வேண்டாம் சார்….. ஜஸ்ட் வார்னிங் மட்டும் பண்ணுங்க போதும்….. இனிமே என் கிட்டேயும் என் ஃபிரெண்டு யாமினி கிட்டேயும் அவர வரவேண்டாம்ன்னு….. என்றாள் நிஷா.


உண்மையிலேயே நீ ரொம்ப நல்ல பொண்ணு தான் மா….. அவன் தான் உன் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணான் என்பதை தெரிஞ்சும் அவனை விட்டிட சொல்ற…. இப்பவும் மரியாதையா பேசுற…..


மரியாதையா பேசுறதுக்கு காரணம் எங்க அம்மா சார்….. யாராக இருந்தாலும் பெரியவங்களை மரியாதையோட பேசனும் ன்னு….. இன்னொன்று அவரை அரெஸ்ட் பண்ண வேண்டாம் ன்னு சொன்னதுக்கு சுயநலமும் ஒரு காரணம் ன்னு கூட சொல்லலாம். ஏன்னா நான் அவரை திட்டி போலீஸ்ல புடிச்சு கொடுத்திடுவேன் ன்னு சொன்னதுக்கே அவருக்கு அவ்வளவு கோபம் வருதுன்னா இன்னும் பிடிச்சு கொடுத்திட்டா….. அது அவரோட ஃபேமிலிக்கு

தெரிஞ்சா அவருக்கு அவமானம் ஆகிடும்….. அப்பறம் இன்னும் தான் என் மேலே கோபமும் வெறுப்பும் ஏற்படும்…… அதான் சொல்றேன் சார்.


இன்னொன்று சொல்லிடு மா….. அந்த அவரை மிரட்டனுமா இல்ல கெஞ்சி கெஞ்சி கேட்கனுமா உன்னையும் உன் ஃபிரெண்டையும் தொல்லை பண்ணக் கூடாதுன்னு?…… என்றார் எஸ்.ஐ.


சாரி சார்….. எனக்கு தோன்றதை சொன்னேன்….. தப்பா இருந்தா மன்னிச்சிக்கோங்க…..


தப்பு இல்லம்மா தவறு…..

உன்னை மாதிரி பொண்ணுங்க இருக்கிறதால தான் அவனை மாதிரி பொறுக்கிங்க தைரியமா தப்பு பண்ணிக்கிட்டு திரியறாங்க….. 


சார்….. அவ சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பேசறா….. நீங்க லீகலா என்ன ஆக்க்ஷன் எடுக்கனுமோ நீங்க பண்ணுங்க….. என்றான் மேத்யூ.


உண்மையிலேயே நீங்க கேஸை அப்படியே விடாம….. கம்ப்ளெயின்ட் கொடுக்க வந்தீங்களா ன்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன்….. ஆனா திட்டாதீங்க, மிரட்டாதீங்க, அரெஸ்ட் பண்ணாதீங்க ன்னு எனக்கே சொல்லுது இந்த பொண்ணு….. என்றார் எஸ்.ஐ. சற்றே கோபமாக.


மறுபடியும் சாரி சார்….. என்றாள் நிஷா.


இட்ஸ் ஓகே….. நீ நேத்து ராத்திரி நடந்த விஷயத்தால பயந்து போயிருக்க….. விடும்மா…… இனிமே அவன் உன் விஷயத்தில தலை இட மாட்டான்….. போதுமா?


தேங்க்ஸ் சார்…. தேங்க் யூ ஸோ மச்.

அப்படியே யாமினியையும் தொல்லை பண்ணக் கூடாதுன்னு சொல்லி விடுங்க சார்.


ஹூம்….. ஓகே….. நாங்க பார்த்துக்கிறோம் மா….. கவலைப்படாதே…..


சரிங்க சார்….. நாங்க கிளம்பளாமா?….. என்றான் மேத்யூ.


ஓகே கிளம்புங்க….. ரெண்டு பேரோட ஃபோன் நம்பரையும் கொடுத்திட்டு போங்க….. ஏதாவது தகவல் வேணுன்மா கால் பண்றேன்….. 


ஓகே சார்…. என்று சொல்லி ரைட்டரிடம் நம்பர் கொடுத்துவிட்டு இருவரும் கிளம்பினார்கள்.


திரும்ப பைக்கில் செல்லும் போது……


என்னம்மா நீ….. வீட்ல பேசுற மாதிரி போலீஸ் கிட்ட பேசுற….. ஏதோ நல்ல மூடுல இருந்தாரு போல அந்த எஸ்.ஐ. அதோட விட்டுட்டாரு….. இல்லன்னா பெரிய பிரச்சனை ஆகி இருக்கும்.


சாரி அத்தான்…..


என் கிட்ட எதுக்கு சாரி சொல்ற?


அமைதியாக இருந்தாள் நிஷா.


லீவு சொல்லிட்டியா?


சொல்லிட்டேன் அத்தான்.


எத்தனை நாளைக்கு? 


இன்னைக்கு மட்டும் தான் அத்தான். டே ஆஃப் எடுத்தேன். நம்ம ஷாலினி பர்த் டேவுக்கு லீவு கேட்க போறேன்….. அதான் அப்புறம் லாஸ் ஆஃப் பே ஆகும்.


அதனால என்ன….. உடம்பு சரியில்லைன்னா லீவு போடு…..


இல்ல அத்தான் இப்போ பரவாயில்லை….. வீட்டிலேயே இருந்தா ரொம்ப கஷ்டமா இருக்கும்….. நாளைக்கு வேலைக்கு போறேன்.


சரி…. இன்னைக்காவது நல்லா தூங்கி ரெஸ்ட் எடு……

என்று சொல்லி வீட்டு வாசலில் இறக்கி விட்டு விட்டு அவன் கம்பியூட்டர் சென்டருக்கு கிளம்பினான். 

அத்தை கிட்ட சொல்லிடு….. மாமாவும் தூங்கி எழுந்த பிறகு சொல்லிடு….. இப்போ நான் உள்ளே வந்தா ஷாலினி ரொம்ப அழுவா என் கூட வரணும் ன்னு….. என்றான் மேத்யூ.


ஓகே அத்தான்….. பை…. என்று சொல்லி விட்டு உள்ளே வந்தாள்.


அம்மாவிடம் விஷயத்தை சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் குழந்தை ஷாலினியோடு விளையாடினாள்.

பிறகு….


அம்மா…. மாத்திரை போட்டது தூக்கம் வருது….. நான் போய் கொஞ்ச நேரம் தூங்கவா…..


போய் தூங்கு டி செல்லம்….. என்றார் சாந்தி அவளுடைய தலையை கோதி விட்டு.


அவளை ஹக் செய்து கன்னத்தில் முத்தமிட்டாள் நிஷா.


எங்க பாட்டி…. என்று சொல்லி சாந்தியை கட்டிப்பிடித்து கொண்டாள் ஷாலினி.


வழக்கமாக அவளும் நிஷாவும் விளையாடும் விளையாட்டு.


இது எங்க அம்மா….. என்பாள் நிஷா.


இது எங்க பாட்டி….. என்பாள் ஷாலினி.


ஒருவர் கட்டிப்பிடித்து கொள்ள மற்றவர் அவர்களை தள்ளி விடுவதும் போல விளையாட்டு. அதைத்தான் இப்போது தன் சித்தி விளையாடுகிறாள் என்று நினைத்து குழந்தை ஷாலினி சொன்னாள்.


குழந்தையை தூக்கி அவளுக்கு முத்தம் கொடுத்தாள் நிஷா.


அவங்க உன் பாட்டி தான்…. ஆனா நீ என் பொண்ணு…. என்றாள்.


இல்ல நான் என் பொண்ணு…. என்றாள் ஷாலினி.


நிஷாவும் சாந்தியும் அவள் பேசியதை கேட்டு சிரித்தனர்.


கிண்டல் செய்கிறார்கள் என்று நினைத்து குழந்தை அழத் தொடங்கினாள்.


என் செல்லம்…. வாடி வாடி…. என் கண்ணு…. என்று சொல்லி தூக்கிக் கொண்டு….


இரு சித்தியை…..அடி போடலாமா?…. என்றார் சாந்தி.


வேணாம்….. சித்திக்கு வலிக்கும்…. என்றாள் குழந்தை ஷாலினி.


என் செல்லம்…. என்று சொல்லி அவளுக்கு முத்தம் கொடுத்துவிட்டு உள்ளே வந்து படுத்தாள்.


தன் ஃபோனை எடுத்து பார்த்தாள்.

மெஸேஜ் வரவில்லை. சுமதியிடம் இருந்து மெஸேஜ் வந்திருந்தது.


ஹாய் டி…. இன்னைக்கு நான் டே ஆஃப்…. என்று

நிஷா அனுப்பிய மெஸேஜூக்கு ரிப்ளை செய்து இருந்தாள் சுமதி.

லஞ்ச் டைம்ல பேசறேன் டி….. என்று.

அவளுக்கு எந்த விஷயமும் தெரியாததால் சாதரணமாக ரிப்ளை செய்து இருந்தாள்.


கடவுளே….. நான் அவர் கிட்ட பேசியது தப்பு தான்…..

எப்படியாவது அவர் கிட்ட பேச வை….. ஒரு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்….. என்று வேண்டிக் கொண்டாள்.


ஒருமணி நேரம் நன்றாகவே தூங்கிவிட்டாள் நிஷா.


பின்னர் எழுந்து ஃபோனை பார்த்தாள்.


ஒரு மெஸேஜ் இருந்தது.


வேகமாக ஓப்பன் செய்து பார்த்தாள்.


ஆன்லைனில் வேலை வாய்ப்பு என்று ஒரு மெஸேஜ் இருந்தது.


சே…. என்று சொல்லி விட்டு அதை டெலீட் செய்தாள்.


பின்னர் கண்ணாடி முன் நின்று தன் நெற்றியில் இருந்த பேண்ட்டேஜை மெதுவாக பிரித்தாள். டாக்டர் கொடுத்த ஆயின்மெண்டை தடவினாள்.


அப்போது வாட்ஸ் அப் மெஸேஜ் சவுண்ட் கேட்டது.


ஹாய் நிஷா….. சாரி….. தினேஷ்….. என்று மெஸேஜ் வந்தது.


உடனே கண்கள் கலங்க தன் ஃபோனை எடுத்து நம்பரை ஸேவ் செய்து விட்டு ரிப்ளை செய்தாள்.


தினேஷ்….. பிஸியா இருக்கீங்களா?…..இப்போ கால் பண்ணவா?…. என்று.


அடுத்த நொடி தினேஷிடம் இருந்து நிஷாவிற்கு கால் வந்தது.


#############


தொடரும்…..

அ. வைஷ்ணவி விஜயராகவன்.


என் வசம் நானில்லை என் உயிரே……


வசம் -13


உடனே கால் செய்தான் தினேஷ்.


ஹலோ நிஷா….. என்றான் தினேஷ்.


சாரி தினேஷ்….. என்று சொல்லி அழுதாள் நிஷா.


அச்சோ…. நான் தான் சாரி சொல்லனும்….. உங்க கிட்ட ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு பேசிட்டேன்.


இல்ல தினேஷ்…… நான் ரொம்ப கஷ்டத்தில இருந்தேன்….. அதான் அந்த கோபத்தை உங்க மேல காட்டிட்டேன்….. ரியலி சாரி…..


அப்போ நீங்க என்னை தப்பா நினைக்கல இல்ல…..


சத்தியமா இல்ல……


தேங்க்ஸ் நிஷா….. எனக்கு நேத்திலிருந்து மனசே சரியில்லை….. அதான் நீங்க மறுபடியும் திட்டினாலும் பரவாயில்லை ன்னு மெஸேஜ் அனுப்பினேன்.


உங்க கிட்ட இருந்து எப்போ மெஸேஜ் வரும்னு நான் காத்து கொண்டு இருந்தேன் தினேஷ்.


இப்போ உங்க பெயின் குறைஞ்சிருக்கா?


ஆல் மோஸ்ட்…..


குட்….. டேக் கேர்…..


தேங்க்ஸ் தினேஷ்….. அப்புறம் அம்மா எப்படி இருக்காங்க. 


அவங்க ஃபைன்….. டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்திட்டோம்…..


ஓ….. ஓகே….. அப்புறம்……


வேற எதுவும் இல்லை……


ஹூம்……


நாளைக்கு மீட் பண்ணலாமா….. என்று இருவரும் ஒரே நேரத்தில் கேட்டனர்.


இருவரும் சிரித்தனர்.


நாளைக்கு காலைல 9.30 க்கு காஃபி ஷாப்ல மீட் பண்ணலாமா?….. என்றாள் நிஷா.


இல்ல 10 ஓ கிளாக் மேல தான் ஓப்பன் பண்ணுவாங்க…… என்றான் தினேஷ்.


ஓ….. ஓகே…..


நீங்க நாளைக்கு வேலைக்கு வரீங்களா?


ஆமாம்….. கண்டிப்பா வருவேன்……


உங்க சூப்பர் மார்க்கெட் பின்பக்கம் எங்க அப்பார்ட்மெண்ட் பார்க் இருக்கு….. ஆக்சுவலா நீங்க சைக்கிள் விடறீங்களே அதோட சைடுல….. அங்கே மீட் பண்ணலாமா?


இரண்டு விஷயம்…..


என்ன?


ஒண்ணு அது என்னோட சூப்பர் மார்க்கெட் இல்ல….. ஓனர் காதுல விழுந்ததுன்னா அவ்வளவு தான்……


ஹாஹாஹா….. என்று சிரித்தான் தினேஷ்…..

இன்னொன்று என்ன?


இல்ல உங்களுக்கு தெரிஞ்சவங்க நிறைய பேர் இருப்பாங்க உங்க அப்பார்ட்மெண்ட்ல….. அவங்க யாராவது பார்த்தா உங்களுக்கு பிரச்சனை இல்லையா?


நிஷா….. நீங்க என் ஃபிரெண்டு….. அதுக்கு ஏன் நான் மறைக்கனும்…. பயப்படனும்….. 


ஃபிரெண்டா இருந்தாலும் நீங்க மேல் நான் ஃபிமேல்….. எங்க ஏரியாவுல திட்டுவாங்க….. அப்பா அம்மா கிட்ட சொல்லி…… அது பெரிய பிரச்சனையாக மாறி அடுத்த வாரத்திலேயே அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி விடும்.


அச்சச்சோ….. அப்போ உங்க ஏரியா ஆளுங்க யாராவது பார்த்தா அடுத்த வாரமே உங்களுக்கு கல்யாணம் ஆயிடுமா?


தினேஷ்….. பிளீஸ் கிண்டல் பண்ணாதீங்க…..


ஓகே ஓகே….. நாளைக்கு காலைல மீட் பண்ணலாமா?

எனக்கு பிரச்சனை இல்லை….. உங்களுக்கு?


எனக்கு பிரச்சனை இல்லை….. வந்தா பார்த்துக்கலாம்….. நான் வரேன்…… என்றாள் நிஷா.


ஓகே….. பை பை…. என்றான் தினேஷ்.


பை…..‌என்றாள் நிஷா.

இப்போது தான் நிம்மதியாக இருந்தது அவளுக்கு.


ஃபிரெண்டு என்ற வார்த்தையை இருவரும் உபயோகித்தாலும் இருவருக்கும் இடையே அதையும் தாண்டி ஒரு ஈர்ப்பு இருந்தது.


இருவரும் மற்றவரின் நினைப்பிலேயே தூங்கச் சென்றனர்.


###########


மறுநாள் காலை……


என்ன அப்பா நீங்க நேத்து ராத்திரி டியூட்டிக்கு போகலையா?


இல்லம்மா….. இந்த மாசம் நான் பகல் டியூட்டி கேட்டிருக்கேன்……. ராத்திரி வரும்போது உன்னை கூட்டிக்கிட்டு வந்திடறேன்……


சாரி அப்பா…..‌என்னால உங்களுக்கு சங்கடம்……


இதுல என்னடா அம்மு இருக்கு….. ராத்திரிக்கு பதிலா காலைல வேலைக்கு போகப் போறேன்……


இல்லப்பா நீங்க கஷ்டப் பட்டு ராத்திரி டியூட்டிக்கு போறதுக்கு எதுக்கு?…… சம்பளம் அதிகமா வரும்னு தானே…..ஆனா இப்போ நீங்க பகல் டியூட்டிக்கு

மாத்திக்கிட்டு இருக்கீங்களே….. என்றாள் சற்று சோகமாக.


அதனால தான் டா அம்மு இந்த பிரச்சனைக்கு பிறகும் உன்னை வேலைக்கு போகப் வேண்டாம் ன்னு சொல்லல மா….


புரியுது அப்பா……


எத்தனை மணிக்கு கிளம்பனும்னு சொல்லு….. உன்னை இறக்கிவிட்டு விட்டு நான் போறேன்.


இல்லப்பா….. வேண்டாம்….. போகும் போது நானே போய்க்கிறேன்…… அதுவும் இல்லாம நம்ம எக்ஸ்.எல். சூப்பர் வண்டி உங்க ஒரு ஆளை இழுக்கறதே கஷ்டம் இதுல நானும் வேற வந்தா…… என்று சொல்லி சிரித்தாள்.


உங்க அம்மாவையே உட்கார வச்சு இழுக்குது நம்ம வண்டி….. உன்னை இழுக்காதா?


அப்பா…. பிளீஸ்….. அம்மா பத்தி பேசாதீங்க……


சரி சரி.. உங்க அம்மவை பத்தி எதுவும் பேசல…. போதுமா?


ஓகே….. நீங்களும் என் செல்ல அப்பா…. என்று சொல்லி அவர் தோளில் சாய்ந்து கொண்டாள் நிஷா.


அவள் தலையை கோதி கொண்ட…..

சீக்கிரமா உனக்கு செகண்ட் ஹாண்டுல ஒரு ஸ்கூட்டர் வாங்கி தரேன் அம்மு…. என்றார் சங்கர்.


அப்பா….. நான் கேட்டேனா?…… அதெல்லாம் ஒண்ணும் வேணாம்….. என் சைக்கிள்லையே போயிப்பேன்….. என்றவள் உடனே அமைதியாக இருந்தாள்.

ஏனென்றால் முந்தைய நாள் அந்த இடத்திற்கு போய் பார்த்தால் அங்கே அவளுடைய சைக்கிள் இல்லை….. யாரோ அங்கிருந்து திருடிவிட்டிருந்தனர்.


விடுமா….. சைக்கிள் தான?


இல்லப்பா….. அதை நான் நைன்த் படிக்கும் போது நீங்க வாங்கி கொடுத்தீங்க….. 


அப்பவும் அது செகண்ட் ஹாண்டு தான மா…..


புதுசோ இல்ல செகண்ட் ஹாண்டோ….. எனக்காக நீங்க வாங்கி கொடுத்தது….. அது தொலைஞ்சு போச்சே ன்னு கவலையா இருக்கு…… போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுக்கலாமா அப்பா…


பைக் தொலைஞ்சாலே கிடைக்கிறது கஷ்டம்….. சைக்கிள் எல்லாம் நினைச்சு கூட பார்க்க முடியாது அம்மு…..


அமைதியாக இருந்தாள் நிஷா.


சரி சரி கிளம்பு…… 


அப்பா…


சொல்லுமா…..


என்னை சுமதி வீட்ல இறக்கிவிட்டிடுங்க….. அங்கிருந்து போய்க்கிறேன்….. வரும்போது அந்த அப்பார்ட்மெண்ட் பின் பக்கமா வந்திடறேன்…..

நீங்க நைட் ஷிஃப்ட்லையே போயிட்டு வாங்க…… 

அதுவும் இல்லாம நானும் 9 டூ 9 ஷிஃப்ட் கேட்கப் போறேன்.


சரிம்மா வா….. என்றார் சங்கர்.


பரவாயில்லையா நிஷா என்று சொல்லி அவள் தலையில் அடிப்பட்ட இடத்தை பார்த்தார் சாந்தி.


பரவாயில்ல அம்மா…… என்ன லஞ்சு?


புளிசாதம்…..


இதை சாப்பிட்டா….. எனக்கு வலியே தெரியாது….. எங்கே இன்னொரு டப்பா?


இந்தா…..


கொடுங்க கொடுங்க….. இல்லன்னா இந்த சுமதி வேலு எல்லாம் என்னோட லஞ்சை வாங்கிக்குவாங்க….. அப்புறம் எனக்கு சாப்பாடு இருக்காது….. என்றாள்.


நிஷா….. இட்லி சட்னி….. இந்தா…… சாப்பிட்டு விட்டு அப்புறமா கிளம்பு……


அம்மா……


என்ன?


புளிசாதமே தரீங்களா?


ஏய்….. காலங்காத்தால புளிசாதமா?


பரவாயில்லை….. ஒரு கின்னத்தில வச்சு ஸ்பூன் போட்டு கொடுங்க மா…..


உன்னை திருத்தவே முடியாது….. என்று சொல்லி விட்டு சாப்பாட்டை எடுத்து வந்து கொடுத்தார் சாந்தி.


சீக்கிரமா சாப்பிடு….. அப்பாவுக்கு லேட் ஆயிடும் இல்ல…..


ஹூம்….. தோ….. என்று வேகமாக சாப்பிட்டாள்.


அம்மு….. நீ மெதுவாகவே சாப்பிடு….. நான் பார்த்துக்கொள்கிறேன்….. ஒரு பிரச்சனையும் இல்லை…… நீ கம்முனு இரு டி….. என்றார் தன் மனைவியை.


அப்பா….. அம்மாவை திட்டாதீங்க……


சரி சரி….. நீ வேணும்னா இன்னும் கொஞ்சம் வச்சு சாப்பிடு…..


இல்லப்பா போதும்….. என்று சொல்லி கின்னத்தை தன் அம்மாவிடம் கொடுத்து விட்டு தன் அப்பாவின் வண்டியில் ஏறிச் சென்றாள் நிஷா.


சுமதியின் வீட்டில் இறக்கிவிட்டு விட்டு கிளம்பினார் சங்கர்.


பத்திரமா போயிட்டு வாம்மா…..


சரிங்க அப்பா….. பை….


பை….. என்று சொல்லி விட்டு அவர் சென்றதும் வீட்டிற்குள் சென்றாள் நிஷா.


ஹாய் சுமதி…..


ஏய் வாடி வாடி…..


எப்படி ஆன்டி இருக்கீங்க….. என்றாள் நிஷா சுமதியின் அம்மாவை பார்த்து.


நல்லா இருக்கேன் மா….. நீ எப்படி இருக்க?….. தலைல என்ன அடி பட்டிருக்கு?


அது ஒண்ணும் இல்லை ஆன்டி சைக்கிளில் இருந்து விழுந்திட்டேன்….. இப்போ பரவாயில்லை….. சரி ஆயிடிச்சு…..


ஏன்மா லீவு போட வேண்டியது தானே…..


இல்ல ஆன்டி….. நேத்து ஒரு நாளே வீட்ல செம போரிங்……


என்னடி ஆச்சு….. எப்படி எங்கே விழுந்த?


அதெல்லாம் நம்ம நடந்து போகும் போது சொல்றேன்…. நீ சீக்கிரமா சாப்பிட்டு விட்டு வா……


நான் தான் காலைல சாப்பிட மாட்டேனே….. வா போகலாம்……


காலைல மட்டும் சாப்பிடமா இருக்கக்கூடாது டி…..


நல்லா சொல்லுமா….. நான் எத்தனையோ முறை சொல்லிட்டேன்….. என்றார் சுமதியின் அம்மா.


ஏய்….. ஏன்டி….. இதுக்கு தான் வந்தியா….. எங்க அம்மா கிட்ட என்னை திட்டுவாங்க வைக்க…..


ஏய்…. உண்மையிலேயே தான் சொல்றேன்.


எனக்கு தெரியும்….. வா வாயை மூடிக்கொண்டு….. என்று சொல்லி அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள் சுமதி.


அம்மா பை….. என்று சொல்லி கொண்டே.


வரேன் ஆன்டி…. என்றாள் நிஷா.


பார்த்து பத்திரமாக போயிட்டு வாங்க….. என்றார் சுமதியின் அம்மா.




இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.