எழில் “நீ இந்த டிரஸ் போட்டுக்க போறியா?…”என ஒருமாதிரி குரலில் கேட்க சத்யா அதிர்ந்தாள்.
மெல்ல அவளை நெருங்கியவன் “போட்டுக்கோ உனக்கு ரொம்ப அழகா இருக்கும்…”என சொல்ல சத்யா “என்ன இவன் இப்படியெல்லாம் பேசறான்..”என அதிர்ந்தாள்..
அவன் நெருங்கி வர அவன் பார்வையில் சத்யாவிற்கு வியர்க்க தொடங்கியது..
எழில் மெல்ல அவள் கரம் பற்றி அந்த டிரஸ் வாங்கியவன் “நைஸ் டிரஸ் இந்த டிரஸ்ல உன்னை பார்க்கனும்ன்னு ஆசையா இருக்கு… போடறியா…”என்றவன் மெல்ல கையை அவள் இடையில் வைக்க சத்யா வேகமாய் அவன் கரத்தை தட்டிவிட்டாள்..
“என்ன பேசிட்டு இருக்க..முதல்ல இப்படி என்னை பார்க்கிறதை நிறுத்து..”என்றவள் அவன் கரத்தில் இருந்த டிரசை வாங்க பார்க்க அவனோ கொடுக்காமல் இழுத்தான்..
இருவரும் மாறி மாறி இழுத்ததில் சல்லடை போல் லேசாக இருந்த டிரஸ் கிழிந்தது..
அதில் தடுமாறி விழப்போனவளை பிடித்துகொண்டான் எழில்..
மிடரு விழுங்கியவள் அவனிடமிருந்து விலக பார்க்க இப்பொழுது அவள் முகத்தில் பயம் நன்றாகவே தெரிந்தது..
எழில் அவள் முகம் நோக்கி சரிய முத்தமிடதான் வருகிறானோ என்று சத்யா பயத்தில் விழிகள் மூடிகொண்டாள்..
சில நிமிடங்கள் ஆகியும் எதுவும் ஆகவில்லை என்றதும் சத்யா கண் திறந்து பார்த்தவள் எழில் சிரிக்கவும் தன் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி அவனை தள்ளிவிட்டாள்.
எழில் விழுவது போல் சென்று சுதாரித்து நின்றுகொண்டவன் சிரிப்பதை மட்டும் நிறுத்தவில்லை..
அவன் சிரிக்கவும் கடுப்பானவள் “இப்போ எதுக்கு சிரிக்கிற?…”என கேட்க
அவனோ சிரித்துகொண்டே “பயந்துட்டதான….”என்றான்.
“நான் ஒன்னும் பயப்படலயே…”
“அதான் முகத்திலயே தெரியதே…”
“பொறுக்கி…”
“போடி…”
“உன் பிரண்ட்ஸ் இந்த மாதிரிதான் கிப்ட் அனுப்புவாங்களா…”என அவனையும் திட்டி அவனுடைய பிரண்ட்ஸையும் திட்டினாள்…
“நீயூலி வெடிங் கப்பில்க்கு அவங்க யூஸ் பன்ற மாதிரிதான் கிப்ட் பன்னுவாங்க…”என்றவன் அவள் முறைத்து பார்த்ததை கண்டுகொள்ளாமல் பெட் நோக்கி செல்ல சத்யா அவன் கைபிடித்து தடுத்தாள்..
எழில் திரும்பியவன் “என்ன?…”என்று கேட்க பிடித்திருந்த அவன் கரத்தை இழுத்தாள்.
அதை எதிர்பாராதவன் அவள் மேலேயே விழ சத்யா அவன் ஷர்டை பிடித்து கொண்டவள் ஒருமாதிரி அவனை பார்த்து சிரித்தாள்…
இப்பொழுது எழில் அவள் நெருக்கத்தில் தடுமாறியவன் “என்னங்க…”என்றபடி அவள் கழுத்தில் கரங்களை மாலையாக கோர்த்து கொள்ளவும் அதிர்ந்தான்..
“ஏய் விடு…”
“எதுக்கு விடணும்… “என்றவள் மெல்ல விரல் உயர்த்தி அவள் கன்னம் வருடினாள்..
“ஏய் என்னாச்சுடி உனக்கு…”என்றவன் குரல் உள்ளே போக சத்யா சிரித்தவள் “உன் முகத்தில ஏதோ தெரியுதே..ஹான்…பயம்… பயபடறியா?…”என கேட்டவள் கிண்டல் செய்தாள்..
எழிலுக்கு புரிந்தது தான் கிண்டல் செய்தற்கு அவள் திருப்பி கிண்டல் செய்கிறாள் என்று..
அவள் கரத்தை தட்டிவிட்டவன் “என்ன கிண்டல் பன்றியா?…”என கேட்க
“ம்ம் நீ பண்ணுனதைதான் நானும் பண்ணுனேன்…இங்க பாரு இந்த மாதிரி எல்லாம் என்கிட்ட குளோஸா வந்தா வெட்டிருவேன்….”என வார்னிங்காக சொன்னவள் அவன் முறைத்து பார்க்க கண்டுகொள்ளாதவளாய் “பெட்ல நான்தான் தூங்குவேன்…”என்றவள் சென்று பெட்டில் படுத்துகொண்டாள்..
எழில் முறைத்து பார்த்தவன் பின் பெருமூச்சு இழுத்துவிட்டு “கொஞ்ச நேரத்துல நமக்கே தண்ணி காட்டிட்டாளே…” என சொல்லிக் கொண்டவன் பெட்டில் படுத்திருந்தவளை பார்த்து “இன்னைக்கு ஒரு நாள்தான் நாளைக்கு சென்னை போயிட்டு உன்னை பார்த்துக்கொள்கிறேன்டி…” என சொல்லிக்கொண்டவன்
“என்னோட ரூம்லயே என்னை சோபாவுல படுக்க வச்சிட்டா…”என புலம்பியபடி சென்று சோபாவில் படுத்துகொண்டான்..
சில நிமிடங்களுக்கு பின் சத்யா மெல்ல போர்வை நகர்த்தி தலையை மட்டும் தூக்கி அவனைப் பார்த்தவள் தூங்கிட்டானா என செக் செய்தவள் அவன் விழிமூடி படுத்திருப்பதை பார்த்து “என்னையா நெருங்கி வர்ற… இங்க அத்தை இருக்கிறதால நீ தப்பிச்சிட்ட நாளைக்கு சென்னைக்கு போனதுக்கு அப்புறம் உனக்கு இருக்குடா… இந்த சத்யா யாரு எப்படிப்பட்டவன்னு அங்க போனதுக்கு அப்புறம் நீ தெரிஞ்சுக்குவ…”என சொல்லிக்கொண்டவளுக்கு எப்பொழுது சென்னை போவோம் என்றிருந்தது.
( இந்த டாம் அண்ட் ஜெர்ரி கப்பில் இங்கையே இப்படி இருக்காங்களே அங்க தனியா போய் என்ன பண்ண போறாங்களோ…ஓ மை… காட்…)
மறுநாள்…
எழில் சத்யா இருவரும் வள்ளியிடமிருந்து விடைபெற்று சென்னை கிளம்பினர்.
அவர்களை ஸ்டேஷன் வந்து வழியனுப்ப சத்யாவின் பெற்றோரும் சதீஸ் ஆகாஷ் வந்தனர்…
“மாப்பிள்ளை என் பொண்ணை நல்லா பார்த்துக்கோங்க…”என சரவணன் மீனாட்சி இருவரும் சொல்ல அவர்களுக்கு தலையாட்டி வைத்தான்..
சத்யா “நான் என்ன சின்ன குழந்தையா…”என்றவளுக்கு அவர்கள் கிளம்பும் நேரத்தில் கண்கள் கலங்க “எங்களுக்கு நீ குழந்தைதான்டா…”என்று சொன்னதில் ஒருமாதிரி ஆகிவிட்டது..
எமோஷனலானவள் அதை முகத்தில் காட்டாமல் உடனே அதை மறைத்து சிரித்தவள் “போதும் உங்க ட்ராமா…”என்றாள்.
எழில் “நீங்க எப்போடா சென்னை வர்றிங்க?…”என கேட்க இருவரும் டூ டேஸ் கழித்து வருவதாகவும் சத்யாவை நன்றாக பார்த்து கொள்ளுமாறு அட்வைஸ் செய்தனர்..
எழில் அவர்களை முறைத்து பார்க்க “என்னடா பார்க்கிற சிஸ்டர நல்லா பார்த்துக்கோ…”என்றவர்கள் சத்யா சாப்பிட ஸ்னாக்ஸ் ட்ராவலில் போர் அடிக்காமல் இருக்க படிக்க புக்ஸ் எல்லாம் வாங்கி கொண்டு வந்து தந்தனர்..
“இது ரொம்ப ஓவரா இருக்கே…”என எழில் முனுமுனுப்பாக சொல்ல அவனை முறைத்து பார்த்த சத்யா பின் மென்னகை சிந்தி அவர்கள் கொடுத்ததை வாங்கிக்கொண்டவள் “தேங்க்ஸ் அண்ணா…”என்றாள்..
ட்ரெயின் கிளம்பவும் படியில் நின்று இருந்தவர்களை பார்த்து சரவணன் “சரி உள்ள போங்க… சத்யா சென்னை ரீச் ஆனதும் எனக்கு கால் பண்ணி சொல்லு…”என்றார்..
சத்யா தன்னுடைய அம்மா அப்பாவுக்கு பாய் சொன்னவள் உள்ளே செல்ல எழில் தன்னுடைய பிரண்ட்ஸ்களை பார்த்து “சீக்கிரம் வந்துடுங்கடா…”என்றவன் ட்ரெயின் வேகம் எடுக்கவும் உள்ளே சென்றான்..
இருவரும் தங்களுக்கான இருக்கை எது என்று கண்டுபிடித்து அதில் அமர்ந்தனர்.. அவர்களுக்கு எதிரில் நாற்பது வயதில் ஒரு பெண் கையில் மூன்று வயது குழந்தையுடன் அமர்ந்திருந்தாள்..
குழந்தை பார்க்க க்யூட்டாக இருக்க எழில் குழந்தை பார்த்து சிரிக்க குழந்தையும் அவனைப் பார்த்து அழகாக சிரித்தது..
சத்யா அதை கவனித்தவள் குழந்தையிடம் “பாப்பு பூச்சாண்டி பார்த்து எல்லாம் சிரிக்ககூடாது…”என சொல்ல எழில் அவளை முறைத்து பார்த்தவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் “அதை ஒரு ராட்சசி சொல்றா பாரு…”என்றான்
“ஹேய் நான் உனக்கு ராட்சசியா…”
“ம்ம் என்னை பூச்சாண்டின்னு சொன்ன…”
இருவரும் கத்தியே இல்லாமல் ஒருவரை ஒருவர் முறைத்து பார்த்துகொள்ள அந்த பெண் “நீங்க ஹஸ்பண்ட் அண்ட் வொய்ப்பா?…”என கேட்டாள்..
உடனே எழில் “ச்சே ச்சே இவ என் பொண்டாட்டி எல்லாம் இல்ல…”என சொல்ல சத்யா நறுக்கென அவன் கரத்தில் கிள்ளி வைத்தாள்.. அதில் “ஆ…”என்று கத்த சத்யா “என்னோட ஹஸ்பண்ட்தான் கொஞ்சம் ஹமர்சென்ஸ் அதிகம் இப்படிதான் ஜோக் பண்ணுவாரு…”என்றாள்.
எழில் “நான் சொன்னதுக்கு பேர் ஜோக்காடி…”என்பது போல் பார்க்க சத்யா “ஏதாவது பேசுன அவ்வளவுதான்…”என்று கண்ணாலயே மிரட்டினாள்..
அதன்பின் எழில் அவளை வம்பு இழுக்கவில்லை.. அவன் போன் பார்க்க தொடங்கிவிட மலரும் சதீஸ் வாங்கி கொடுத்த புக்கை படிக்க தொடங்கினாள்..
சென்னை..
ஸ்டேஷன் விட்டு வெளியில் வந்ததும் எழில் கேப் புக் செய்ய சத்யாவும் கேப் புக் செய்தாள்.
அதை கவனித்தவன் “என்ன பன்ற?…”என்று கேட்க
“கேப் புக் பன்றேன்…”
“அதான் நான் பன்றேன்ல…”
“நீ உன் பிளாட்க்கு போக கேப் புக் பன்ற நான் என்னோட பிளாட்க்கு போக கேப் புக் பன்றேன்…”
எழில் அவளை புரியாமல் பார்க்க சத்யா “நீ உன் வீட்டுக்கு போ நான் இதுக்கு முன்னாடி எங்க ஸ்டே பன்னிருந்தனோ அங்கையே போறேன்…”என்றாள்..
“ஹேய் லூசு என்ன பேசறன்னு தெரிஞ்சுதான் பேசறியா…”
“என்னை லூசுன்னு சொல்ற நீதான்டா லூசு…அப்பறம் நான் என்ன பேசறேன்னு தெரிஞ்சுதான் பேசறேன் என்னால எல்லாம் உன்கூட ஸ்டே பண்ண முடியாது…”என்றவள் புக் பண்ணிய கேப் வரவும்
“என்னோட கேப் வந்திடுச்சு நான் போறேன்… பாய்…”என்றவள் அவள்பாட்டுக்கு எங்கு தங்கியிருக்கிறேன் என்று எல்லாம் ஒரு வார்த்தைகூட அவனிடம் அவளை பற்றிய டீடெயில்ஸ் சொல்லாமல் கேப்பில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டாள்..
எழில் “ஒரு வழியா தொல்லை விட்டுச்சு…”என சொல்லி பெருமூச்சு விட்டவன் அவள் கார் சென்ற திசையில் பார்த்து “நீ இல்லன்னா நான் சந்தோசமா இருப்பேன்..சரிதான் போடி…”என சொல்லிக்கொண்டவன் புக் செய்த கேப் வரவும் தன்னுடைய பிளார்டிற்கு சென்றான்..
வானவில் அபார்ட்மெண்ட்
எழில் தன்னுடைய பிளாட்டில் அவனுடைய அறையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க அதை கலைப்பது போல் காலிங் பெல் விடாமல் அடித்தது..
நேற்று டிரெயினில் வந்தது அவனுக்காக சலுப்பாக இருக்க அவனால் எழவே முடியவில்லை தூக்கத்தில் அப்படியே புரண்டு படுத்தவன் தலையணையை கட்டிக் கொண்டான்
காலிங் பெல்லோ விடாமல் அடித்துக் கொண்டே இருக்கவும் மெல்ல தூக்கம் கலைந்து எழுந்தவன் கைகள் உயர்த்தி சோம்பல் முறித்தான்..
” இது வேற… “என்று சலித்து கொண்டவனுக்கு எழுந்து செல்லவே மனம் வரவில்லை…
மறுபடியும் படுப்பதும் பின் எழுவதுமாக இருந்தவன் பத்து நிமிடத்திற்கு பின் தான் ஒரு வழியாக மனம் வந்து எழுந்து சென்று கதவை திறக்க வெளியில் கோபத்துடன் நின்று இருந்தாள் அவனின் மனைவி..
தூக்க கலக்கத்தில் இருந்தவன் சத்யாவை பார்த்ததும் அதிர்ந்தவன் “ஒருவேளை கனவுல பார்த்துட்டு இருக்கோமா….”என்று வேகமாய் கண்களை தேய்த்துவிட்டு கொண்டு திறந்து பார்க்க சத்யா மறையவில்லை இன்னுமே அவனை முறைத்தபடிதான் பார்த்துக் கொண்டிருந்தாள்..
“அவளேதான்…இவ எப்படி என்னோட பிளாட் கண்டுபிடிச்சி வந்தா…”என தனக்குள் சொல்லிக் கொண்டவன் “ஏய் லூசு நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க?… ஏதோ நேத்து நான் என் பிளாட்லதான் ஸ்டே பண்ணுவேன்னு சொல்லிட்டு போன..இப்ப எதுக்கு இங்க வந்திருக்க?…” என கேட்க
அவளோ அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் கையில் இருந்த பேக்கால் அவனை தள்ளிவிட்டு தன்னுடைய ட்ராலியை இழுத்தபடி உள்ளே சென்றாள்..
எழில் கதவை லாக் செய்தவன் சத்யா “ஒரு டோர் ஓபன் பண்ண உனக்கு இவ்வளவு நேரமா… ஹாப்பனவரா வெளிய நின்னுட்டு இருந்தேன்…”என சொல்ல
“உன்னை யாரு வெளில நிக்க சொன்னா நான் தூங்கிட்டேன்… ஆமா நீ இங்க எதுக்கு வந்த?…”அவன் கேள்வி கேட்கவும் சத்யா தன்னுடைய கழுத்தில் இருந்த அவன் கட்டிய தாலியை எடுத்து காட்டினாள்..
“இப்போ எதுக்கு ஐடிகார்ட் மாதிரி இதை காட்டற?…”
“ம்ம் என்னோட ஐடிகார்ட்தான இது…” என்று சொன்னவள் முகத்தில் அவ்வளவு கோபம்
எழில் கண்கள் சுருக்கி பார்த்தவன் “நீ இன்னும் நான் கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்லை…”என்றான்..
“இங்க பாரு எனக்கு ஒன்னும் உன் கூட இருக்கணும்னு ஆசையெல்லாம் இல்ல வேற வழி இல்லாம தான் நான் இங்க வந்து இருக்கேன்…”
“என்ன சொல்ற?…”என கேட்டவனக்கு பதில் சொல்லாமல் சத்யா தன்னுடைய போனை எடுத்தவள் வள்ளிக்கு போன் செய்தாள்..
எதிர்முனையில் அவர் அட்டென்ட் செய்ததும் அப்படியே வீடியோ காலாக மாற்றியவள் திரையில் தோன்றியவரிடம் பேச தொடங்கினாள்..
வள்ளி “சத்யா உனக்கு வீடு எல்லாம் பிடிச்சிருக்காம்மா…எழில் வீட்டை சுத்தமா வச்சிருக்கானா?…”என்று கேட்க இப்பொழுது எழிலுக்கு அவள் ஏன் இங்கு வந்தால் என்பது புரிந்தது..
” ஓ அம்மா நாங்க ஒரே வீட்லதான் இருக்கோமான்னு வீடியோ கால் பண்ணி செக் பண்றாங்களா… “என தனக்கு சொல்லிக்கொண்டவன் தலையை சொரிந்தபடி இனி இந்த பிரச்சினையை எப்படி சமாளிக்கிறது என யோசித்தான்…
சத்யா போனில் “அதெல்லாம் வீட்டை கிளினாதான் வச்சிருக்காரு அத்தை…”என்றவள் அவர் வீட்டை சுற்றி காண்பிக்க சொல்லவும் அப்படியே போனில் வீட்டை சுத்தி காட்டினாள்..
வள்ளி “சரிம்மா எழில்கிட்ட போனை கொடு…”என சொல்ல சத்யா எழிலிடம் தன்னுடைய போனை கொடுக்க வாங்கியவன் அவரிடம் பேசினான்…
“ஹலோ அம்மா…”
அவர் சத்யாவிற்கு தேவையான வசதிகளை எல்லாம் செய்து கொடுக்குமாறு அவனுக்கு ஆர்டர் போட்டவர் பின் “இனி அடிக்கடி வீடியோகால் பண்ணி உங்களை பார்த்துக்கறேன்…”என சொல்லிவிட்டு கட் செய்ய
“என்ன அடிக்கடி வீடியோ கால் பண்ணுவாங்களா…”அதிர்ந்த எழில் நெஞ்சில் கைவைத்துகொண்டான்..
சத்யா “நீ என் போனை கொடுத்துட்டு ஷாக் ஆகு…”என்றவள் அவனிடமிருந்து போனை வாங்கி அடுத்து தன்னுடைய அம்மா அப்பாக்கு போன் செய்து அவர்களுக்கும் தான் தற்பொழுது எழில் பிளாட்டில்தான் இருக்கிறேன் என்பதை உறுதிபடுத்தினாள்..
போன் பேசி முடித்துவிட்டு சோர்வாக சோபாவில் சாய்ந்தவள் அப்படியே விழிமூடிகொண்டாள்..
எழில் அவளையே பார்த்தவன் “என்ன அப்படியே உட்கார்ந்துட்ட கிளம்பு….”என சொல்ல
விழிகள் திறந்து பார்த்தவள் “எங்க?…”என்றாள்..
“உன்னோட பிளாட்க்குதான்…”
“எதுக்கு?…”
“என்ன எதுக்குன்னு கேட்கிற… நீ அங்கதான ஸ்டே பண்ணிருக்க…”
இதழ் சுழித்தவள் “இனி நான் இங்கதான் இருக்க போறேன்….”என சொல்ல எழில் “இங்க இருக்க போறியா… இது என்னோட பிளாட்.. இங்க தங்க நான் உனக்கு பர்மிசன் கொடுக்க மாட்டேன்…”என சொல்ல
“உன்கிட்ட நான் பர்மிசன் கேட்கலயே… ஆமா ரெண்டு ரூம் இருக்கு நீ எந்த ரூம் யூஸ் பன்ற…”என்றவள் எழில் அறையை நோக்கி சென்றாள்..
No comments yet.