மீண்டும் ஒரு காதல் -6

Sweety Novel's | 15 Apr 2026 | Share

எழில் சதீஸ் இருவரும் அந்த கிராமத்தை சுற்றி பார்க்க கிளம்பி விட சத்யா பாட்டி வள்ளியுடன் மறுநாள் கோவிலுக்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்களை எல்லாம் அவர்களுடன் சந்தோசமாக சிரித்து பேசிக்கொண்டே எடுத்து வைத்தாள்.. 

நைட் எழில் சதீஸ் வராமலே இவர்கள் டின்னர் சாப்பிட்டனர்.. 

அப்பொழுதும் “இல்ல அத்தை அவர் வந்ததுக்கு அப்பறம் நான் சாப்பிட்டுக்கறேன்…”என சத்யா சொல்ல வள்ளிதான் ‘”அவனுங்க எல்லாம் எப்போ வீட்டுக்கு வருவாங்கன்னு சொல்ல முடியாது நீ சாப்பிடும்மா…”என்று சொல்லி சாப்பிட வைத்திருந்தார்.. 

உண்மையில் சத்யாவுக்கு எழில்க்காக வெயிட் செய்ய வேண்டும் என்று எல்லாம் தோன்றவில்லை… கண்ணகி விதவிதமாய் சமைப்பதை பார்க்கும்பொழுதே அவளுக்கு பசிக்க தொடங்கிவிட்டது… 

அவர் சொன்னதும் “அந்த கிங் காங்காக எல்லாம் நான் சாப்பிடாம இருக்கணுமா…”என தனக்குள் சொல்லிக்கொண்டவள் வெளியில் “சரிங்க அத்தை நீங்க சொல்றதால நான் சாப்பிடறேன்….”என வள்ளியிடம் சொன்னவள் சாப்பிட்டாள்.. 

சாப்பிட்டு முடித்ததும் கொஞ்சநேரம் எல்லாரும் பேசிகொண்டிருக்க பின் தூக்கம் வரவும் பெரியவர்கள் இருவரும் எழுந்து சென்றனர். 

கண்ணகி “தம்பி இங்க வந்தா நைட் எந்நேரம் வரும்ன்னு சொல்ல முடியாது பாப்பா… தம்பி வரும்போது வரட்டும் நீ போய் தூங்கு…”என சொல்ல 

“இல்ல பரவால்ல அவர் வர்ற வரைக்கும் நான் வெயிட் பன்றேன்… நீங்க போய் தூங்குங்க…”என்று சொல்லி அவளை அனுப்பியவள் ஹாலில் அமர்ந்துவிட்டாள்… 

சில நிமிடங்களிலேயே அவள் அப்படியே தூங்கிவிட பத்து மணிக்கு மேல்தான் எழிலும் சதீஸும் வீட்டிற்கு வந்தனர்.. 

சதீஸ் சத்யாவை பார்த்து விட்டு “சத்யா இங்க தூங்கிட்டு இருக்கா… உனக்காக வெயிட் பண்ணி தூங்கிட்டா போல எழுப்பி ரூமுக்கு கூட்டிட்டு போ…”என்றவன் வேகமாய் தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டான். 

எழில் நின்று அவளை ஒரு பார்வை பார்த்தவன் பின் இதழ் சுழித்து “இந்த கோல்டு மெடலிஸ்ட் இங்கையே தூங்கட்டும் நான் நிம்மதியா பெட்ல தூங்குவேன்…”என சொல்லிக்கொண்டவன் அங்கிருந்து செல்ல போகும் பொழுது ஓரத்தில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பிளவர்வாஷை தட்டிவிட்டான். 

அது கீழே விழுந்து சத்தத்தை எழுப்ப அதில் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்த சத்யா கண்னை கசக்கிகொண்டு திரும்பி பார்க்க எழில் படியேறி செல்வது தெரிந்தது.. 

“இந்த கிங்காங் வந்துட்டானா…”என சொல்லிக்கொண்டவளுக்கு பின்தான் பெட் நியாபகம் வர வேகமாய் எழுந்து அறைக்கு ஓடினாள்..

எழில் அறைக்குள் செல்ல போக வேகமாய் ஓடுவந்த சத்யா அவனை இடித்து தள்ளிவிட்டு அவள் உள்ளே செல்ல எழில் அதில் விழப்போய் சுதாரித்து கொண்டவன் “பைத்தியம் பார்த்து வர மாட்டியா…”என்று திட்டினான்.

அவளோ சென்று பெட்டில் படுத்து போர்வையை போர்த்தி கொண்டவள் “நான் பைத்தியம்மா…அதை சொல்ற நீ ஒரு முழு பைத்தியம்…”என்றாள்.

“ஹேய்…”சீறியவன் பின்தான் அவள் பெட்க்காகதான் வேகமாய் ஓடிவந்திருகிறாள் என்று புரிந்துகொண்டவன் “ஹேய் பெட் விட்டு இறங்குடி.. நான்தான் பெட்ல படுப்பேன்…”என்றான்

சத்யா இதழ் சுழித்தவள் “என்னால எல்லாம் உனக்கு பெட் விட்டு தர முடியாது…”என்றாள்..

“இங்க பாரு இந்த ரூம்ல சோபா கூட இல்ல என்னால எல்லாம் தரையில படுக்க முடியாது…”

“அப்போ நான் தரையில படுக்கணுமா… ஹலோ சார் நான் வீட்டில பிரின்ஸஸ் மாதிரி வளர்ந்தவ…”

‘அப்போ உன்னோட வீட்லயே இருந்திருக்க வேண்டியது தான… “

“ஹேய் ஓவரா பேசாத…”

“நீ ஓவரா பன்றதாலதான் நான் ஓவரா பேசறேன்… ஒழுங்கா பெட் விட்டு எழுந்திரி…”

“முடியாது என்ன பண்ணுவ…”

“என்ன பண்ணுவனா இப்போ பாருடி…”என்றவன் அவள் அருகில் சென்று கொஞ்சம்மும் யோசிக்கவில்லை அப்படியே அடியில் போட்டிருந்த போர்வையை உருவ அவன் இழுத்த வேகத்தில் சத்யா உருண்டு கீழே விழுந்தாள்..

“ஆ அம்மா…”

அவள் கத்துவதை காதில் வாங்கதவனாய் பெட்டில் தாவி படுத்தவன் “ஏய் கோல்டு மெடலிஸ்ட் அந்த லைட் ஆப் பண்ணிடு… குட் நைட்…”என்றவன் கையை தலைக்கு மேல் வைத்து விழிமூடிகொண்டான்.

சத்யா எழுந்தவள் அவனை முறைத்து பார்க்க எழில் விழிதிறந்து பார்க்காமலே “என்னை பார்த்தது போதும் போய் தூங்கு போ…”என்றான்

“நீ இப்படி குரங்கு மாதிரி பெட்ல படுத்துட்டா நான் எப்படி தூங்கறது..

“ம்ம் கீழ தூங்கு…”என்றவன் குப்புற படுத்துகொண்டான்.

“இவனை…”எதாவது பொருள் எடுத்து அடித்துவிடலாமா என்று யோசித்தவள் பின் “இதுக்காக கண்டிப்பா நீ வருத்தப்படுவ…நாளைக்கு இருக்கு உனக்கு…”என சொல்லிக்கொண்டவள் தூக்கம் வரவும் தரையில் போர்வையை விரித்து படுத்துவிட்டாள்.

நாளைய விடியல் எழிலுக்கு எப்படி இருக்க போகிறதோ🤔….

மறுநாள்…

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த எழில் தூக்கத்தில் புரண்டவன் அப்படியே கட்டில் விளிம்பிற்கு வந்துவிட்டான்..

மறுபடியும் அவனையும் அறியாமல் தூக்கத்தில் திரும்பி படுக்க ஓரத்தில் இருந்தவன் அப்படியே கீழே சரிந்து சத்யா மீது விழுந்தான்..

திடீரென தன் மேல் பாரம் வந்து விழவும் சத்யா தன்னையறியாமல் “ஐயோ அம்மா…”என்று கத்த 

அதில் தூக்கம் கலைந்தவன் வேகமாய் அவள் வாயில் கைபொத்தி மேற்கொண்டு கத்தவிடாமல் தடுத்தான்.

சத்யா கீழே படுத்திருக்க அவள் மேல் எழில்…இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவியது..

எழில் இவ்வளவு குளோஸப்பில் அவளை பார்த்த தன்னையும் அறியாமல் விழியிமைக்காமல் அவளை பார்த்தான்… அவன் பார்வை அவள் கண்ணுக்கு கீழே இருக்க குட்டி மச்சத்தில் பதிந்தது..

கண்கள் சுருக்கியவன் “கோல்டு மேடலிஸ்ட்க்கு இந்த மச்சம் அழகா இருக்குல்ல…”என தனக்குள் சொல்லிக்கொள்ள அதற்க்குள் தூக்கம் கலைந்து தன்னிலை உணர்ந்திருந்த சத்யா வாய் பொத்தி இருந்த அவன் கரத்தை நறுக்கென கடித்து வைத்தாள்..

அதில் கைகளை எடுத்தவன் “ராட்சசி….”திட்ட 

“முதல்ல என்மேல இருந்து எழுந்திரிடா தடியா…”

“ஹேய்…”அவளை முறைத்து பார்த்தவள் அவள் மேலிருந்து எழுந்தான்..

சத்யா எழுந்தவள் “உனக்கு அறிவில்ல… மேல வந்து விழற மாடு மாதிரி… மாடு மாதிரி இல்ல நீ மாடுதான்… உனக்கு உங்க அம்மா எழில்ன்னு பேர் வச்சதுக்கு எருமை மாடுன்னு பேர் வச்சிருக்கலாம் பொருத்தமா இருந்து இருக்கும்.. ராஸ்கல்… பொறுக்கி…”என்று அவள் வாயை மூடாமல் திட்டிக்கொண்டே போக எழில் பொறுமை இழந்தவன் அவள் கழுத்தை பிடித்துவிட்டான்..

“ஹேய் என்ன விட்டா பேசிட்டே போற… உன்மேல என்ன வேணும்ன்னா வந்து விழுந்தாங்க தூக்கத்துல வந்து விழுந்துட்டேன்.. உன்னை யாரு இங்க வந்து படுக்க சொன்னா…”என்று அவனும் தன் பங்குக்கு திட்டியவன் அவள் விழிகள் இரண்டும் படபடவென அடித்துகொள்வதை பார்த்து 

“கையை எடுப்பேன் எதாவது பேசுன யோசிக்க மாட்டேன் கோழி கழுத்து பிடிச்சி திருகற மாதிரி திருகி விட்ருவேன்…”என மிரட்டலாக சொன்னவன் கையை எடுக்க சத்யா எதுவும் சொல்லவில்லை..

“அது அந்த பயம் இருக்கனும்…”என்றவன் எழுந்து கையை உயர்த்தி சோம்பல் முறிக்க சத்யா அவனை முறைத்து பார்த்தவள் “என் கழுத்தையா பிடிக்கிற இப்போ பாருடா…”என தனக்குள் சொல்லிக்கொண்டவள் அவன் அங்கிருந்து நகரும் பொழுது காலால் ஒரு உதை அதை எதிர்பாரதவன் தடுக்கி கீழே விழுந்தான்.

“அம்மா…”அவன் கத்த 

சத்யா சிரித்துகொண்டே எழுந்தவள் “ச்சு ச்சு… இப்படி கீழ விழுவ பார்த்து நடந்து போக மாட்டியா…”என்றாள் கிண்டலாக..

எழில் அவளை முறைத்தவன் “உன்னை…”எழ “சரிதான் போடா உனக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்…”என்றவள் பேக் திறந்து தன்னுடைய டிரஸ் எடுத்துகொண்டு குளிக்க சென்றாள்..

“இவளை…எதாவது பண்ணனுமே…”என யோசித்த எழிலுக்கு மூளை ஏடாகூடமாக ஐடியா கொடுக்க எண்ணெய் கொட்டி அதில் சத்யாவை விழ வைத்து விடலாமா என்று யோசித்தான்..

ஆனால் அடுத்தநொடியே கோவிலுக்கு போக வேண்டியது நியாபகம் வரவும் “ம்ம்ஹும் வேண்டாம்…கீழே விழுந்து அவ கால் உடைஞ்சிருச்சுன்னா அப்பறம் தெய்வக்குத்தம் ஆகிடுச்சுன்னு ஒரு கதை கட்டிவிட்டு நம்பள பரிகாரம் பண்ண சொல்வாங்க ரெண்டு மூணு நாள் இங்கையே தங்கற மாதிரி ஆகிடும் அப்பறம் நான் சென்னைக்கு எப்படி போறது…”என சொல்லிக்கொண்டவன் அந்த யோசனையை கைவிட்டு எதுவா இருந்தாலும் இனி ஊருக்கு சென்று பார்த்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்..

சில மணி நேரங்களுக்கு பின்…

பார்வதி பாட்டி ரெடியாகி இருந்தவர் “எழில் கண்ணா சத்யா சீக்கிரம் வாங்க…”என்று கூப்பிட அவர்களும் “இதோ வந்துட்டோம் பாட்டி…”என்றபடி வந்தனர்.

ஜோடியாக வந்தவர்களை கண் குளிர பார்த்து ரசித்தவர் “என்னோட பேரனும் பேத்தியும் எம்புட்டு அழகா இருக்கீங்க…”என்று சொல்லி நெட்டி முறித்தார்..

அதில் சத்யா மென்னகை சிந்த எழில் சுற்றி முற்றியும் பார்த்துவிட்டு “எங்க பாட்டி அம்மா சதீஸ் எல்லாம் காணோம்?…”என்று கேட்க 

“அவங்க எல்லாம். கோவிலுக்கு முன்னாடி போயிட்டாங்க கண்ணா சரி நாமளும் கிளம்பலாம்…”என சொல்ல மூவரும் கோவிலுக்கு கிளம்பினர்..

கோவில்…

காரை நிறுத்தியதும் மூவரும் இறங்கினர்…

ஏதோ மலைகோவிலுக்கு கூட்டி வந்திருக்க அடிவாரத்தை பார்த்ததும் சத்யா அதிர்ந்தவள் “மேல போய் சாமி கும்பிடணுமா?…”என கேட்க 

எழில் “சாமி மேல இருக்கும்போது மேல போய்தான் சாமி கும்பிடனும்….”

பாம்பு போல் நீண்டுகொண்டு சென்ற படிக்கட்டை பார்த்தவள் அதிர்ச்சியுடன் “பாட்டி இவ்வளவு படியேறணுமா…”என்றாள்..

“ம்ம் ஆமாம்மா… நீ ஏன் கவலைபடற அதான் என் பேரன் இருக்கான்ல…”என சிரித்துகொண்டே பார்வதி சொல்ல இருவரும் புரியாமல் பார்த்தனர்..(ஆஹா பாட்டி ஏதோ ட்விஸ்ட் வச்சிருக்காங்க போலயே….)

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.