மீண்டும் ஒரு காதல் -2

Sweety Novel's | 15 Apr 2026 | Share

மறுநாள்… 

தூக்கம் கலைந்து மெல்ல கண் விழித்தாள் சத்யா.. 

முதலில் தான் எங்கு இருக்கிறோம் என்பதை மறந்தவளாக தூக்க கலக்கத்தில் “அம்மா காபி…”என்றபடி எழுந்து அமர்ந்தவள் கைகள் உயர்த்தி சோம்பல் முறித்துவிட்டு கண்னை திறந்து பார்க்க அவள் பார்வையில் விழுந்தான் அவளுடைய கணவன். 

அவனை பார்த்ததும்தான் சத்யாவிற்கு கல்யாணம் ஆனதே நியாபகம் வர “என் புருஷன்…”என்றவள் கழுத்தில் கைவைத்து “தாலி…”என சொல்லிக்கொண்டவளுக்கு பிளாஸ்பேக் காட்சிபோல் எழில் தாலி கட்டியது எல்லாம் நியாபகத்தில் வந்தது.. 

கொட்டாவி விட்டவள் “நைட் என்னவோ இது என்னோட பெட்டு என்னோட ரூம்ன்னு டைலாக் எல்லாம் பேசுனான் கடைசியில சோபால போய் படுத்துட்டான்.. அது.. சத்யான்னா அந்த பயம் இருக்கனும்…”என தனக்குள் சொல்லிக்கொண்டவள் பெட்டில் இருந்து எழுந்து கபோர்ட் அருகில் சென்றாள்… 

அதில் அவளுடைய சூட்கேஸ் இருக்க அதிலிருந்து ஒரு புடவையை எடுத்துகொண்டவள் சென்று தலைக்கு குளித்துவிட்டு வந்தாள்.. 

கண்ணாடி முன்னாடி நின்றவள் “அப்படியே பிரஷா இருக்கனே இப்படியே வெளில போனா எதுவும் நடக்கலன்னு கண்டுபிடிச்சிடுவாங்க… என்ன பண்ணலாம்…”யோசித்தவள் தன்னுடைய கைகளை பார்த்தாள்.. அழகுக்காக நகத்தை கூரிய வாளாய் வளர்த்து இருந்தாள்.. 

“எதாவது பண்ணனுமே…” 

மைண்ட் வாய்ஸில் சொல்லிக்கொண்டு யோசித்தவள் முதலில் தன்னுடைய உடலில்தான் காயத்தை ஏற்படுத்த நினைத்தாள்.. 

“ம்ம்ஹும்… எனக்கு வேண்டாம்…”அப்படியே டர்ன் செய்தவள் பார்வையில் விழுந்தான் தூங்கிக்கொண்டிருந்த எழில்.. 

“கரெக்ட் சாய்ஸ்…” 

அவன் அருகில் சென்றவள் கைகள் உயர்த்தி தன்னுடைய விரல்களை பார்த்துகொண்டவள் மேஜிக் செய்வதுபோல் இப்படி அப்படியுமாய் அசைத்தபடி அவன் கழுத்து அருகில் கொண்டு சென்று நகத்தால் கீறிவிட “அம்மா..”என்று கத்தியபடி எழுந்தான் எழில்.. 

அவன் கத்தவும் வேகமாய் செயல்பட்ட சத்யா அவன் வாயில் தன்னுடைய கரம் வைத்து மூடியவள் “கத்தாத…”என்றாள்.. 

எழில் அவளையே பார்க்க மிரட்டுவதுபோல் விழிகளை உருட்டியவள் “கத்துன அவ்வளவுதான் சொல்லிட்டேன்…”என்றாள். 

இருவரின் விழிகளும் கத்தியே இல்லாமல் சண்டை போட எல்லாம் ஒரு நொடிதான் எழில் அவள் கரத்தை தட்டிவிட்டவன் “ஆர் யூ மேட்.. நைட் என்னடான்னா உதைச்சு தள்ளிவிடற காலையில எழுந்ததும் கீறி வைக்கிற..”என்றவன் வேகமாய் எழுந்து சென்று கண்ணாடியில் அவள் கீறிய காயத்தை பார்த்தவன் அதிர்ந்து அவள் பக்கம் திரும்பி பார்த்து “ஹேய் நீ மனுஷிதான?…”என கேட்க 

சத்யா பயமுறுத்துவது போல் சிரித்தவள்  அடுத்தநொடியே அவள் சிரிப்பு உறைந்துபோய் முகம் இறுக “ம்ம்ஹும் நான் மனுஷி இல்ல ரத்தம் குடிக்கிற காட்டேறி….”என்றாள்.. 

எழில் நெற்றியை தேய்த்தவன் “சரியான கிறுக்கியை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க…”என முனுமுனுக்க 

அது சத்யாவிற்கு நன்றாக கேட்டுவிட அவன் அருகில் வந்தவள் “யாரை பார்த்து கிறுக்கின்னு சொல்ற நான் கோல்ட் மெடலிஸ்ட் தெரியுமா..”என்றாள்.. 

“அதான் படிச்சி படிச்சி லூசாகிட்டியா….” 

“ஏய்..” 

“எதுக்குடி என்னை கடிச்சு வச்ச?…” 

“இப்போ வெளில போனா எல்லாரும் நம்பள ஒருமாதிரி ஸ்கேனிங் பன்ற மாதிரி பார்ப்பாங்க…” 

“அதுக்கு?…” 

“நமக்குள்ள நைட் எதுவும் நடக்கலன்னு தெரியக்கூடாதுல்ல… இங்க பாரு எனக்கு உன்னை பிடிக்கல உனக்கு என்னை பிடிக்கலங்கறது எல்லாம் இந்த ரூமுக்குள்ளதான் வெளில நீயும் நானும் ஹஸ்பண்ட் அண்ட் வொய்ப்… உன் அம்மா என்னோட பேரன்ட்ஸ்காக நீ என்கூட சந்தோசமா வாழற மாதிரி நடிக்கணும்…”என்றவள் நிறுத்தி “நடிச்சுதான் ஆகணும்…”என அழுத்தம்மாய் சொன்னவள் “சீக்கிரம் போய் குளி உன் அம்மா நைட்டே கோவிலுக்கு போகணும்ன்னு சொல்லிருந்தாங்க…”என்றவள் கண்ணாடி பக்கம் திரும்பி தலையை துவட்ட தொடங்கினாள்.. 

“இவ என்ன மாதிரியான மெண்டல் கேஸ்ன்னே தெரியலயே… நான் பேச வேண்டிய டைலாக் எல்லாம் இவ சொல்லிட்டு இருக்கா…”என தனக்குள் சொல்லிக்கொண்ட எழில் தலையை உலுக்கிகொண்டு பெருமூச்சு இழுத்துவிட்டவன் அங்கிருந்து நகர்ந்தான்..

எழில் ரெடியாகி வர சத்யா புது மருமகளாய் அமைதியாய் தன் மாமியார் சொன்ன வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருந்தாள்.. 

“அத்தை இதை எடுத்துக்கட்டுமா… இதை இங்க வைக்கட்டுமா…”என்று அவள் ஒவ்வொன்றையும் கேட்டு கேட்டு செய்தாள்.. முக்கியம்மாய் பேசவே தெரியாதவள் போல் மெதுவாக பேசினாள்… 

எழில் இவளின் இந்த அவதாரத்தில் அதிர்ந்து பார்த்தான்.. அப்படியே கண்கள் சுருக்கி நைட் காலையில் என்று அவள் பேசியதை நினைத்து பார்த்தவன் 

“இவ என்ன இப்படி நடிக்கிறா… நம்மகிட்ட அந்நியன் வெளில அம்பியா… இவ கோல்டுமேடலிஸ்ட்ன்னு சொன்னால்ல ஒருவேளை ஆக்டிங்ல வாங்கியிருப்பாளா…”என அவன் மைண்ட் வாய்ஸில் தனக்குத்தானே பேசிகொண்டிருந்த நேரத்தில் அவனுடைய பிரண்ட்ஸ் சதீஸ், ஆகாஷ் இருவரும் வந்துவிட்டனர். 

“குட் மார்னிங் மச்சான்…” 

“குட் மார்னிங்டா…” 

ஆகாஷ் ஆழ்ந்து மூச்சு எடுத்துவிட்டவன் “ம்ம் இன்னிக்கு விருந்து சாப்பாடு போல… அம்மா ரெடியா சாப்பிடலாமா….”என்றவன் நேராக டைனிங் டேபிள் நோக்கி சென்றான்.. 

வள்ளி திரும்பி பார்த்து “எல்லாம் ரெடி… உட்காரு சாப்பிடலாம்…”என்றவர் திரும்பி பார்த்து “நீங்க ஏன்டா நிக்கறீங்க வாங்க சாப்பிடலாம்…”என்று அவர்களையும் கூப்பிட இருவரும் சென்று ஆகாஷ் பக்கத்தில் அமர்ந்தனர்.. 

“ஆஹா எல்லாம் சூப்பரா இருக்கும் போலவே…”என ஆகாஷ் சொல்ல எழில் “சாப்பிடறதுகாகதான் வந்தியாடா?…”என்று கேட்க 

“அப்கோர்ஸ்…”என்றவன் எழில் முதல் இரண்டு ஷர்ட் பட்டன்கள் கழட்டி விட்டிருக்க அதில் அவன் கழுத்தில் இருந்த காயம் நன்றாக தெரிந்தது.. 

“டேய் என்னடா கழுத்துல காயம்?….”என அவன் கேட்டுவிட எழில் உடனே சத்யாவை பார்த்தான்.. 

சதீஸ் இரும்பியவன் “டேய்… சாப்பிடற வேலையை மட்டும் பாரு…..”என்றான்… 

சத்யா வெட்கப்படுவதுபோல் தலையை குனிந்துகொள்ள வள்ளி தன்னுடைய மருமகளை பார்த்தவர் அவள் வெட்கத்தை உண்மையென்று நம்பி சந்தோசப்பட்டார்.. 

“ஓவரா பர்பாமன்ஸ் பன்றாளே…”எழில் கோபத்தில் முனுமுனுக்க சத்யா உடனே “எதாவது சொன்னிங்களாங்க?…”என்றாள். 

“பசிக்குது சர்வ் பண்ணு…” 

சத்யா மூவருக்கும் பரிமாறினாள்..அவர்கள் சாப்பிட வள்ளி “நீயும் உட்கார்ந்து சாப்பிடும்மா…”என்றார் 

“இல்ல அத்தை அவங்க சாப்பிடட்டும் அதுக்கு அப்பறம் நான் சாப்பிடறேன்… அம்மா சொல்லிதான் அனுப்பிருக்காங்க அவர் சாப்பிட்டதுக்கு அப்பறம்தான் நான் சாப்பிடணுமாம்…”என சத்யா சொல்ல எழில்க்கு புரை ஏறியது.. 

சத்யா பதறியவள் “என்னங்க பார்த்து… இந்தாங்க தண்ணி குடிங்க…”என்றவள் தண்ணீர் கிளாஸ் எடுத்துகொடுத்து தலையில் தட்டிவிட்டாள்.. 

எழில் தண்ணீர் குடித்துவிட்டு அவளை பார்க்க சத்யா இன்னும் பதட்டம் குறையாதவளாய் “பார்த்து சாப்பிடுங்க…”என்றாள்.. 

“ஹேய் போதும்டி ஆஸ்கர் லெவலுக்கு நடிக்கிற….”என தனக்குள் சொல்லிக்கொண்டவன் கைகழுவி விட்டு எழ ஆகாஷ் “என்னடா அதுக்குள்ள எழுந்துட்ட?…”என்றான். 

“ம்ம் எனக்கும் சேர்த்து நீயே கொட்டிக்கோ…”என்றவன் எழுந்து சென்றான்.. 

விளையாட்டு மைதானம்…. 

காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் அவர்களுடன் சேர்த்து சில இளைஞர்கள் கிரவுன்டில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர்… 

அதை பார்த்தபடி எழில் பைகில் சாய்ந்து நின்றிருந்தான்… அவன் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க சதீஸ் வந்தான். 

பைக் நிறுத்திவிட்டு இறங்கியவன் “டேய் அம்மா உன்னை மறுவீட்டுக்கு போகணும் ஆளை காணோம்ன்னு தேடிட்டு இருக்காங்க நீ என்னடான்னா இங்க வந்து நின்னுட்டு இருக்க… அங்க சத்யா ரெடியாகி உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கா பாவம்டா அந்த பொண்ணு…”என சொல்ல 

“என்னது அவ பாவம்மா…”பைக் விட்டு இறங்கிய எழில் “அவளோட நடிப்பை பார்க்க முடியாமதான் நான் இங்க வந்து நிக்கறேன்…”என்றான். 

சதீஸ் புரியாமல் பார்த்தவன் “என்னடா உளர்ற?…”என்று கேட்க 

“உளர்றன்னா உண்மையை சொல்லிட்டு இருக்கேன்டா… அவ அப்பாவி எல்லாம் இல்ல அடப்பாவி ரகம் என்னம்மா நடிக்கிறா தெரியுமா…” 

சதீஸ் அவன் சொன்னதை நம்பவில்லை “இங்க பாரு எழில் உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல அதுக்காக அந்த பொண்ணை நடிக்கிறா அப்படின்னு எல்லாம் சொல்லாத… அந்த பொண்ணு சத்தம்மா பேசிக்கூட நாங்க பார்க்கல… இத்தனைக்கும் உன்னை பத்தி நாங்க எல்லாம் சொல்லிட்டோம் எல்லாம் தெரிஞ்சு உன்னை மேரேஜ் பண்ணிருக்கா… சத்யாவை பத்தியும் யோசிடா…” 

“டேய் போடா… அவ சும்மா எல்லாம் என்னை கல்யாணம் பண்ணல ஏதோ பிளானோடதான்டா கல்யாணம் பண்ணிருக்கா… அதை நான் சொன்னா நீ   நம்பமாட்ட…” 

எழில் கோபம்மாய் சொல்ல பதிலும் தானும் எதாவது சொன்னால் கடுப்பாகிவிடுவான் அதன்பின் அவனை சமாதானம் செய்வது கஷ்டம் என்று உணர்ந்த சதீஸ் “சரி நீ சொன்னது எல்லாம் நம்பறேன்…நீ கிளம்பு…”என்றான். 

“கிளம்பணுமா எங்க?…” 

“உன்னோட மாமனார் வீட்டுக்கு… மறுவீடுக்கு போகணும்ல… போகலன்னா நல்லா இருக்காதுடா சொன்னா கேளு எதுவா இருந்தாலும் நீ மறுவீடுக்கு போயிட்டு வந்து பேசிக்கலாம்….”என்று அவனை சமாதானம் செய்து ஒருவழியாக அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து சென்றான்.. 

                      ************ 

கார் சத்யா வீட்டின் முன் நிற்க கதவை திறந்து போனவனை கைபிடித்து தடுத்தாள் சத்யா.. 

எழில் வேகமாய் அவள் கரத்தை உதறியவன் “டோன்ட் டச் மீ….”என்று கேட்க 

இதழ் சுழித்தவள் “ஐயோடா இவர் பெரிய மன்மதன்…தொட்டா என்ன கரைஞ்சா போய்டுவ…”என்றாள். 

“இந்த திமிர் எல்லாம் என்கிட்ட வேண்டாம் அப்பறம் நான் பாட்டுக்கு கிளம்பி போயிட்டே இருப்பேன்….” 

அவன் குரலில் நான் சொன்னதை செய்வேன் என்ற மிரட்டல் இருக்க சத்யா மிடரு விழுங்கியவள் “ம்ம்ஹும் இவன் பாட்டுக்கு கடுப்பாகி கிளம்பி போயிட்டான்னா அப்பறம் நம்ம வீட்ல எப்படி சமாளிக்கிறது…”என தனக்குள் சொல்லிக்கொள்ள 

எழில் அவளையே குறுகுறுவென பார்த்தவன் “ஏதோ மைண்ட்குள்ள பிளான் போடறா….என்னவா இருக்கும்…”என தனக்குள் சொல்லிக்கொண்டவன் சத்யா சிரிக்கவும் கண்கள் சுருக்கினான். 

“இப்போ ஏன் பல்லை காட்டற?…” 

“நான் ஒன்னும் எதுவும் சொல்ல மாட்டேன்.. உள்ள என் அப்பா அம்மா முன்னாடி….”என்றவள் இழுக்க 

“உன் அப்பா அம்மா முன்னாடி…”அவனும் அவளை போலவே இழுத்தான்.. 

“ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கமாதிரி காமிக்கனும்…அவங்களுக்கு எந்த சந்தேகம்மும் வரக்கூடாது….” 

“எப்படி என் வீட்ல நீ பண்ணுணியே ஆக்ட்டிங் அந்த மாதிரியா… எனக்கு உன்னோட அளவுக்கு எல்லாம் ஆக்டிங்க பண்ண வர்றாது…” 

அவன் கிண்டல் செய்ய சத்யா முகத்தில் கோபம் எட்டி பார்த்தது… ஆனால் நொடி நேரத்தில் தன்னை சமாளித்து கொண்டாள்.. 

“நோ சத்யா கோபப்படாத அப்பறம் இந்த பைத்தியம் சொதப்பி வச்சிடும்…” 

அவள் அமைதியாய் தனக்குள் பேசிக்கொள்ள எழில் அவள் முகத்திற்கு நேராக சொடக்கிட்டவன் “என்ன மறுபடியும் மைண்ட் வாய்ஸா…”என்றான்.. 

“இங்க பாரு….” 

“உனக்கு ரெஸ்பெக்ட் எல்லாம் கொடுத்து பேச வராதா?…” 

“உனக்கு எல்லாம் நான் ரெஸ்பெக்ட் கொடுக்கனுமா… எல்லாம் என் நேரம்…”உள்ளுக்குள் அவனை திட்டிக்கொண்டவள் வெளியில் சிரித்து “ரெஸ்பெக்ட்தான கொடுத்துட்டா போச்சு இங்க பாருங்க என் அம்மா அப்பாவுக்கு எந்த சந்தேகம் வரக்கூடாது… அவங்க முன்னாடி நாம சந்தோசமா இருக்க மாதிரி என்னை உங்களுக்கு பிடிச்ச மாதிரி காட்டிக்கோங்க….”என்றாள்.. 

“ம்ம் நீ இப்படி ரெஸ்பெக்ட் கொடுத்து பேசறது நல்லா இருக்கு… ஓகே நான் நீ கேட்ட மாதிரி பன்றேன்…”என சொல்ல முகம் சுழித்து “ரொம்ப தேங்க்ஸ்ங்க…”என இழுத்து சொன்னவள் அவனோடு காரில் இருந்து இறங்கினாள்..

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.