மீண்டும் ஒரு காதல் -11

Sweety Novel's | 17 Apr 2026 | Share

சத்யா எழில் இழுத்த வேகத்தில் அவன் மேல் விழுந்தவள் அவன் இதழில் முத்தமிட்டிருந்தாள்..

இதை இருவரும் எதிர்பார்க்கவில்லை… எழில் அதிர்ச்சியில் விழிகள் விரித்து பார்க்க சத்யா வேகமாய் அவனை விட்டு விலகி எழுந்தவள் “ஓ காட் போயும் போயும் இவனை கிஸ் பண்ணிட்டனே…”என்றவள் கைகளால் இதழை அழுந்த துடைத்து கொண்டாள்..

எழில் கோபத்தில் பல்லை கடித்துகொண்டு எழுந்தவன் “ஏய் நீயே எனக்கு முத்தம் கொடுத்துட்டு இப்போ என்னை இன்சல்ட் பன்றியா…என்ன இந்தமாதிரி பண்ணி என்னை மயக்கலாம்ன்னு பார்க்கறியா…”என்று திட்ட 

சத்யா இதழ் சுழித்தவள் “இதோடா… நீ பெரிய மிஸ்டர் இந்தியா உன் அழகுல மயங்கி மயக்க பார்க்கறாங்க… போடா டேய்…”என்றவள் அவன் சொல்ல வந்ததை கேட்காமல் அங்கிருந்து தன்னுடைய அறைக்கு சென்றாள்..

போகும் அவளை முறைத்து பார்த்தவன் “இந்த கோல்ட் மெடலு கேஷ்வலா அசிங்கபடுத்திட்டு போயிட்டா…போயும் போயும் தேடி கண்டுபிடிச்சி இவளை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்களே…”என்று எப்பொழுதும் போல் தன்னுடைய அம்மா பிரண்ட்ஸை திட்டிக்கொண்டான்..

அதன் பின் ஒவ்வொரு நாளும் அவர்களின் சண்டை தொடர்ந்தது…

சதீஸ் ஆகாஷ் வந்து விட எழில் வாழ்க்கை சத்யாவின் தொல்லை இருந்தாலும் மற்றொரு பக்கம் சந்தோசமாகவே சென்று கொண்டிருந்தது..

அன்று…

எழில் எப்பொழுதும் வரும் நேரத்திற்கு வீட்டிற்கு வரவில்லை… சத்யா அதை கவனித்தவள் “இந்த டைம்ல வீட்டுக்கு வந்திடுவானே இன்னிக்கு என்ன இன்னும் வரல…”என சொல்லிக்கொண்டவள் அவனிடம் பேச போன் எடுத்தாள்..

சேவ் செய்திருந்த அவன் நம்பருக்கு போன் செய்யலாம் என்றபொழுது அவளுடைய மனசாட்சி “இப்போ நீ எதுக்கு சத்யா அவனுக்கு போன் பன்ற… அவன் வீட்டுக்கு வந்தா என்ன வரலன்னா என்ன?…”என்று கேள்வி கேட்டது.

சத்யா யோசித்தவள் “அதான அவன் வந்தா என்ன வரலன்னா என்ன நான் எதுக்கு அவனுக்காக யோசிக்கணும்…”என்று தன்னையே கேட்டுகொண்டவள் எழிலுக்கு போன் செய்யாமல் தன்னுடைய அறைக்கு தூங்க சென்றுவிட்டாள்..

சில மணி நேரங்களுக்கு பின்..

எழில் குடித்து விட்டு கால் பின்ன தள்ளாடிகொண்டே வந்தான்..

இத்தனை நாட்களில் நிதானத்தை இழந்து இவ்வளவு குடித்துவிட்டு வந்தது இன்றுதான்..

“வேர் இஸ் த பார்ட்டி… என்னோட பார்ட்டி…”என பாட்டி பாடிகொண்டு கையில் இருந்த சிகரெட்டை நெருப்பே இல்லாமல் ஊதிவிட்டு கொண்டு தள்ளாடியபடி தன்னுடைய பிளாட் அருகில் சென்றவனுக்கு அது தன்னுடைய வீடுதானா என்பது குழப்பம்மாய் இருந்தது.

தலையை சொரிந்தபடி இப்படியும் அப்படியுமாய் திரும்பி பார்த்தவன் “இந்த பக்கமா இல்ல இந்த பக்கமா…”யோசித்தவன் பின் காலிங். பெல்லை அழுத்தினான்..

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சத்யாவிற்கு காலிங் பெல் சத்தம் கிணற்றுக்குள் இருந்தா கேட்பது போல் இருந்தது..

மெல்ல தூக்கம் கலைந்து எழுந்தவள் “யாருடா இது இந்த நேரத்தில…”திட்டிக்கொண்டவள் கண்களை தேய்த்துகொண்டு வாட்சில் மணி பார்க்க அது 11.20 என்று காட்டியது.

எழுந்து அறையில் இருந்து வெளியில் சென்றவள் காலிங் பெல் விடாமல் ஒலிக்கவும் கதவை திறந்தாள்..

கதவு திறந்தது கூட தெரியாமல் காற்றில் தட்டி கொண்டிருந்தான் எழில்..

அவனை பார்க்கும் பொழுதே சத்யாவிற்கு அவன் குடித்து இருக்கிறான் என்பது புரிந்துவிட அவனிடமிருந்து வந்த நாற்றம் அதை கன்பார்ம் செய்தது.

முகம் சுழித்தவள் “குடிச்சு இருக்கியா?…”என கேட்க 

கண்கள் சுருக்கியவன் “ஏய் கோல்ட் மெடலிஸ்ட் அதான் குடிச்சு இருக்கேன்னு தெரியுதுல்ல அப்பறம் எதுக்கு குடிச்சு இருக்கியான்னு கேட்கிற… தள்ளிப்போ…”என்றவன் உள்ளே செல்ல சத்யா கதவை லாக் செய்தவள் அவன் பக்கம் திரும்பினாள்..

அவன் நேராக அவளுடைய அறைக்கு செல்லபோக அதில் அதிர்ந்தவள் “டேய் குடிகாரா அது என்னோட ரூம்டா…”என்று சொல்ல 

எழில் நின்றவன் “உன்னோட ரூம்மா…’விரலை இப்படியும் அப்படியுமாய் காட்டியவன் “என் ரூம் இந்த பக்கம்தான இருந்துச்சு எப்படி அந்த பக்கம் போச்சு… ஏய் நீதான எனக்கு தெரியாம மாத்தி வச்ச…”என்று போதையில் உளறினான்..

சத்யா நெற்றியில் அடித்துக்கொண்டவள் “டேய் முட்டாள் போதையில உளறாம போய் தூங்குடா போ…”என சொல்ல 

“என்ன சொன்ன நான் முட்டாளா…நான் முட்டாளா….”என கோபம்மாய் கத்திக்கொண்டே அவள் அருகில் சென்றவன் அப்படியே குரல் கமர “கரெக்ட் நான் முட்டாள்தான்… அதான் அவ என்னை விட்டுட்டு போயிட்டா… போயிட்டா… அவ போனா என் வாழ்க்கை மொத்தமா முடிஞ்சு போச்சு….”என்றான்..

அதை சொல்லும் பொழுது அவன் விழியோரத்தில் கண்ணீர் கசிய சத்யா அவனையே பார்த்தவள் “அவன்னா யாரு?…”என கேட்க 

சத்யா கண்கள் சுருக்கி “அவன்னா யாரு… நீ யாரை சொல்ற?…”என கேட்க 

“அவன்னா…”என்று விரல் நீட்டியபடி அவள் அருகில் வந்தவன் “அவ ஒரு ராட்சசி… ஏழு ஜென்மத்துக்கும் நான்தான் அவளுக்குன்னு சொன்னா கடைசி வரைக்கும் என்கூடதான் அவ வாழ்க்கைன்னு சொன்னா… எல்லாம் பொய் விட்டுட்டு போயிட்டா…”என்றவன் போதையில் அப்படியே அவள் மேல் சாய்ந்துவிட்டான்…

சத்யா தன் மேல் சாய்ந்தவனை தாங்கியவள் மதுவின் வாடை குமட்டவும் “அடேய் டார்ச்சர் பண்றடா..”என்று திட்டியவள் அவனை தள்ளிவிட்டு செல்லதான் நினைத்தால் ஆனால் முடியவில்லை..

பாவமாய் இருக்க தன்னிடமிருந்து அவனை விலகியவள் போதையில் மயங்கி இருந்தவனை கைதாங்களாக அவனுடைய அறைக்கு அழைத்து சென்று படுக்கவைத்தாள்..

ஹாலில் இருந்து அவனுடைய அறைக்குள் செல்வதற்குள் அவள் ஒருவழியாகிவிட்டாள்..

படுக்க வைத்துவிட்டு நிமிர்ந்தவளுக்கு இடுப்பு பிடித்துகொள்ள “ஓ காட்…”இடுப்பை பிடித்துகொண்டவள் இதழ் குவித்து காற்றை ஊதி தன்னை சமாளித்து கொண்டவள் அவன் பக்கம் திரும்பி பார்த்தாள்..

எழில் குழந்தை போல் தூங்கி கொண்டிருக்க “டேய் தடியா நல்லா தூங்கு காலையில உனக்கு இருக்கு…’என கோபமாய் அங்கிருந்து செல்ல போனவள் ஒருநொடி நின்று அந்த அறையை பார்த்தாள்..

முதல் முறையாக அவனுடைய அறையை நன்றாக பார்க்கிறாள்…

ஆங்காங்கே அவனுடைய போட்டோக்கள் மாட்டப்பட்டிருக்க கடைசியில் அவளுடைய பார்வை லேம்ப் லைட் பக்கத்தில் இருந்த ஒரு குட்டி போட்டோ பிரேம் மேல் பட்டது..

சத்யா அதன் அருகில் சென்றவள் கையில் எடுத்து பார்க்க அதில் வெற்றி ஒரு அழகான பெண்ணோடு நெருக்கம்மாய் சிரித்தபடி போஸ் கொடுத்து இருந்தான் 

போட்டோவில் அவனுடன் இருக்கும் பெண் யாரென்று அவள் ரொம்ப எல்லாம் யோசிக்கவில்லை…இருவர் கண்களிலும் தெரியும் காதலிலேயே அதுதான் அவன் லவ் பண்ண பெண் என்று புரிந்துகொண்டாள்..

“பொண்ணு ரொம்ப அழகா இருக்கா எப்படி இந்த குரங்கை லவ் பண்ணுனா அதான் செட் ஆகாம விட்டுட்டு போயிட்டா போல…. பிரேக்கப் ஆகிடுச்சு ராட்சசி அது இதுன்னு கண்டபடி திட்டறான் அப்பறம் எதுக்கு அவளோட போட்டோவை வச்சிருக்கான்…’என யோசித்தவள் 

பின் “அவன் யாரோட போட்டோவை வச்சிருந்தா என்ன..”என சொல்லிக்கொண்டவள் எடுத்த போட்டோவை அங்கையே வைத்துவிட்டு எழிலை ஒரு பார்வை பார்த்தவள் பின் அங்கிருந்து தன்னுடைய அறைக்கு சென்றாள்.

மறுநாள்…

எழில் போன் விடாமல் இசைத்துகொண்டு இருக்கவும் போதையும் தூக்கம் கலைந்து புரண்டு படுத்தவன் அப்பொழுதும் கண் விழிக்க மனமில்லாமல் போனை துழாவி எடுத்தவன் அட்டன் செய்து “ஹலோ…”என்றான் இழுவையாக 

எதிர்முனையில் சதீஸ் “எழில் இன்னும் கம்பனிக்கு வராம என்ன பண்ணிட்டு இருக்க?…”என கேட்க 

‘”நைன் ஓ கிளாக்தான ஆபிஸுக்கு வரணும் ஏண்டா செவன் ஓ கிளாக்கே போன் பண்ணி டார்ச்சர் பன்ற…”

எதிர்முனையில் சதீஸ் “என்ன செவன் ஓ கிளாக்கா… டேய் எழிலு டைம் இப்போ லெவன் ஆகுது…”என்றான்.

“என்னது லெவன் ஆகிடுச்சா…”அரைகுறை தூக்கமும் பறந்துபோக எழுந்து அமர்ந்தவன் திரும்பி டைம் பார்க்க பதினொன்று ஆகியிருந்தது..

“அட கடவுளே இவ்வளவு நேரமா தூங்கி இருந்தேன்…”என முனுமுனுத்துகொண்டவன் சதீஸ் வேறு “எழில் லைன்ல இருக்கியா?…”என்று கத்தவும் 

போனை காதில் இருந்து எடுத்துகொண்டு காதை குடைந்துகொண்டவன் “கத்தாதடா லைன்லதான் இருக்கேன்…”என்றவன் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவதாகவும் அதுவரைக்கும் மேனேஜரை சமாளிக்கும்படி சொல்லிவிட்டு கட் செய்தவன் எழுந்து சென்று ரெடியாக தொடங்கினான்..

சத்யா வெளியில் ஹாலில் அமர்ந்துதான் லேப்டாப்பில் வேலை பார்த்து கொண்டிருந்தாள்..

இன்று ஒர்க் பர்ம் ஹோம் கேட்டு வீட்டில் இருந்தே வேலை பார்த்து கொண்டிருந்தவள் எழில் அறையில் சத்தம் கேட்கவும் அவன் போதை தெளிந்துவிட்டான் என்று புரிந்துகொண்டாள்.

“எழுதுட்டியாடி மாப்பிள்ளை இதோ வர்றேன்…”என்றவள் எழுந்து அவனுடைய அறைக்கு சென்றாள்..

கதவை திறந்து உள்ளே சென்றவள் கண்ணாடி முன் நின்று துண்டால் தலையை துவட்டி கொண்டிருந்தவனை பார்த்தாள்..

எழில் முகத்தை மறைத்தார் போல் துண்டை தலைக்கு மேல் போட்டு துவட்டி கொண்டிருந்தான்.

சத்யா சத்தம் போடாமல் அவன் அருகில் சென்றவள் அப்படியே துண்டை இறுக்கி பிடிக்க எழில் திணறியவன் “ஏய் யாரது.. “திணறினான்.

“ம்ம் யாரா… உன் பொண்டாட்டிடா…”என்றவள் துண்டை விடுவிக்காமல் அவனை அடிக்க தொடங்கினாள்..

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.